மெய்யறிவை மீண்டும் பார்வையிடுதல். . .

மே 24, 2014

பெங்களுரு, இந்தியா


சிலருக்கு மௌனத்தில் இருப்பது சிரமமாக இருக்கும். ஆனால் மௌனத்தின் மதிப்பையும் பேசுவதனால்   நம்முடைய சக்தி   எப்படி செலவாகின்றது என்பதையும் தெளிவாக உணர முடியும். பேசும் வழி மூடப்படும்போது, அவ்வளவு சக்தி நமக்குள்ளே குவிக்கப்படுகிறது என்பதை நீங்கள் கண்டு கொள்ளலாம்.  மௌனத்தில் நீங்கள் எவ்வளவு அழகாகவும் அற்புதமாகவும் இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணரலாம். இந்த உணர்ந்து அறிவது நடைபெற தொடங்குகிறது. 

கேள்வி பதில்கள்:

குருதேவ்! ஞானத்தை கவனமாக கேட்கும்போது, மனதில் ஒரு மாற்றத்தை உணருகின்றேன். ஆனால் அந்த மாற்றம் மனதில் உறுதியாக பதியப்படுவதில்லை. நான் என்ன செய்வது?

நீங்கள் ஞானத்தை மீண்டும் மீண்டும் கவனித்து கேட்க வேண்டும். பிறகு அது உங்கள் மனதில் உறுதியாக பதிந்துவிடும். ஆனால் அதற்கு சிறிது நேரம் ஆகும். ஒரு துண்டு துணிக்கு சாயம்  போடும் போது நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நீங்கள் துணியை சாயத்தில் அமிழ்த்துகிறீர்கள். பிறகு உலர வைக்கிறீர்கள். இந்த செயல்முறையை நீங்கள் மீண்டும் மீண்டும் செய்கிறீர்கள். உங்கள் வீட்டிற்கு வர்ணம் தீட்டும்போது நீங்கள் 3,4 முறை பூசுகிறீர்கள், காய வைக்கிறீர்கள், இல்லையா? அதை போலவே நீங்கள் ஞானத்தை மீண்டும் மீண்டும் கவனித்து கேட்கும் போது உங்களுடைய மனம் தூய்மை மற்றும் வலிமை உள்ளதாக மாறுகின்றது.   

நாம் அன்பு செலுத்தும் ஒருவர் நம்மிடம் அதிக சொந்தம் கொள்வதை  எப்படி கையாள்வது?

மெய்யறிவின் மூலமாக மட்டுமே. நீங்கள் மற்றவர்கள் அவர்களுடைய வாழ்க்கையை ஒரு பெரிய கண்ணோட்டத்தில் பார்க்கச் செய்ய வேண்டும். அவர்கள் அவரவருடைய வாழ்க்கையை ஒரு அகன்ற தோற்றமளிக்கக் கூடிய கண்ணாடி வழியாகப் பார்க்கும் போது, அவர்களுடைய முழு எண்ணங்களும் கருத்துக்களும் மாறும். இல்லையென்றால் இந்த உலகம் மிக சிறியதாக தெரியும், நாம் 20 அல்லது 30 பேர் கொண்ட ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருப்போம். சிறிய வட்டத்திற்குள் நீங்கள் ஏக்கம், வெறுப்பு, கோபம், பொறாமை மற்றும் பேராசை உள்ளவராவீர்கள். எதிர்மறையான எண்ணங்கள் அனைத்தும் உங்களை ஆரவாரப் படுத்திக் கொண்டிருக்கும்.ன் ஏற்படுகிறது என்றால் நீங்கள் வாழ்க்கையை பற்றிய உங்கள் கண்ணோட்டத்தை விரிவடையச் செய்யவில்லை. 
  
குருதேவ்! தயவு செய்து யோக வசிஷ்டாவின் சாரத்தை கூறவும். இதை பற்றி தமிழில் வந்துள்ள புத்தகங்கள் மிக குறைவே.

ராம பகவான் குரு வசிஷ்டரிடம் ஆன்மாவை பற்றி தெளிவு படுத்துமாறு கேட்டுக்கொண்ட போது, வசிஷ்டர் அவரிடம் " அது இந்த விண்வெளியைப் போல வெற்றிடமும் காலியும் ஆகும் என்றும் ஒரு கடலைப் போல முழுதும் நிறைந்தது" என்று கூறினார்.இது போன்ற சிக்கலான விஷயங்களை ஓரிரண்டு வரிகளில் விவரித்துக் கூறுவது சாத்தியமல்ல. ஏற்கனவே இந்தியிலும் ஆங்கிலத்திலும் விரிவான விளக்கங்கள் செய்யப்பட்டு விட்டன. தமிழில் மொழிபெயர்ப்பு செய்து ஒரு குறுந்தகடு வெளியிட ஏற்பாடுகள் செய்கின்றேன். அதை நீங்கள் கவனித்து கேட்கலாம். உங்கள் மனம் தெளிவடைவதை காணலாம்.

குருதேவ்! ஒருவர் எப்படி இன்றைய நாளில் பகவத் கீதையை உபயோகப்படுத்திக் கொள்ள முடியும்?

காலம் ஒரு தடையே அல்ல. பகவத்கீதை ஒரு அறிவியல். எல்லா நேரங்களிலும் உபயோகப்படும். அனைத்திலுமே மூன்று வகைகள் உள்ளன என்று கீதை சொல்லுகிறது. அறிவாற்றல் மூன்று வகை, ஆனந்தம் மூன்று வகை அன்பு மூன்று வகை (சாத்வீகம்,ரஜோ, தமோ) வாழ்க்கையின் அர்த்தம், துன்பத்தில் இருந்து எப்படி வெளி வருவது போன்றவை கீதையில் சொல்லப்படுகிறது. இந்த உண்மைகள் எல்லா காலங்களுக்கும் எல்லோருக்கும் பொருத்தமானவை. அது நித்திய ஆனந்தத்தை அளிக்கக் கூடியது.

குருதேவ்! தியானம் ஆனந்தத்திற்கு கொண்டு செல்கிறது. ஆனந்தம் என்பது என்ன? அதன் எல்லை எது?

ஆனந்தத்திற்கு எல்லையே கிடையாது.எல்லை என்று இருந்தால் அது ஆனந்தமே இல்லை. ஒரு வேர்க்கடலை மிட்டாய் கொடுத்தால் குழந்தை ஆனந்தம் பெறுகிறது. நீங்கள் அதையே ஒரு பெரிய பையனிடம் கொடுத்தால் அதை அவன் எறிந்து விடுவான். அவன் விளையாடுவதற்கு ஒரு  விளையாட்டு பொருளோ அல்லது வேறு ஏதோ கொடுத்தால் ஆனந்தம் அடைவான். இளைஞன் விளையாட்டு பொருளை விரும்பமாட்டான், நண்பர்களையோ அல்லது நல்ல துணையையோ விரும்புவான். ஆகவே நாம் வளரும்போது நம்முடைய வயதிற்கு ஏற்றவாறு வெவ்வேறு விஷயங்களிலும் பொருள்களிலும் இன்பம் கொள்ளுகிறோம்.

புத்திசாலிகள் ஆனந்தம் என்பது அவர்களுக்குள்ளேயே இருப்பதையும் அது அவர்களுடைய இயல்பு என்பதையும் காண்பார்கள். சிலர் சாப்பிடுவதில் இன்பம் கொள்வர், சிலர் சாப்பிடாமல் இருப்பதில் இன்பம் கொள்வர்! அந்நிய நாடுகளில் அவர்கள் பழங்கள், காய்கறிகள் மற்றும் பழரசங்களில் எடுத்துக் கொள்ளுகின்றனர். அது மிகவும் பாராட்டப்படுகின்றது. அவர்கள் ஒரு வருடத்திற்கு முழு உணவு எடுத்துகொள்ளாதது பற்றி பெருமை கொளுகின்றனர். மனித இனம் எவ்வாறு இன்பம் கொள்ளுகிறது என்பது பற்றி உபநிஷதங்களிலும் சொல்லப்பட்டுள்ளது.திருமூலர், திருஞானசம்பந்தர் போன்ற ஞானிகளும் அது பற்றி கூறியுள்ளனர். ஆனந்தம் என்ன என்று அவர்கள் தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளனர். அந்த செய்யுள்களை படிக்கவும். நன்றாக உள்ளன.

குருதேவ்! குழந்தைகள் கணினி மற்றும் கைப்பேசியில் சிக்கிக் கொள்கின்றார்கள். அவர்களை எப்படி நல்வழியில் கொண்டு  செல்வது? உண்மையில் அவர்களை கையாள்வது மிகவும் கடினமாக உள்ளது.

பதினாறு வயதிற்குப் பின் உங்கள் குழந்தைகளை நண்பர்களாக நடத்த வேண்டும்.இப்போதெல்லாம் குழந்தைகள் 12 - 13 வயது ஆகும் போதே அவர்களை நண்பர்களாக நடத்த வேண்டியுள்ளது.  அவர்களிடம் அன்பை வெளிப்படுத்தி நட்புடன் இருக்கவும். நிச்சயமாக அது ஒரு கடினமான செயலே ஆயினும் பொறுமையுடனும் சாதுரியமாகவும் கையாளவும்.

குருதேவ்!  "துரிய அவஸ்தா"  என்றால் என்ன?

தூங்காமலும், கனவும் காணாமலும் விழித்திருக்கும் நிலையிலும்,இல்லாமலும் இருக்கும் நிலை. அந்த நான்காவது உணர்வு நிலையே "துரிய அவஸ்தா" என்பது. தியானம் செய்யும் பொது நீங்கள் தூங்குவதில்லை, கனவும் காண்பதில்லை, விழித்திருப்பதும் இல்லை. அந்த நிலையே " துரிய அவஸ்தா" என்பது.
 
குருதேவ்! குருவுடன் இருக்கும் போது ஏற்படும் வெறுமை (எந்த எண்ணமும் இல்லாத நிலை). அது தான்  நாம் ஏக்கம் கொள்ள இறுதியான ஒன்றா?

ஏக்கம் கொள்ள என எதுவும் இல்லை. அது இயல்பான நிகழ்வு. உங்களுக்கு மிக சிறந்த ஒன்று வேண்டும் இல்லையா? சிறந்த ஒன்றை விரும்புவது மனித இயல்பு அல்லவா? உங்களுக்கு சிறந்ததே கிடைக்கும் என்று நம்பிக்கை கொள்வது முக்கியமானது. அவ்வளவு தான்.