முன்வினைப்பயன் கோட்பாடு

வெள்ளிக்கிழமை, 23 மே 2014,

பெங்களூரு, இந்தியா


எல்லாம் சரியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அனைவரும் புன்முறுவலுடன் இருப்பர். சரியாக நடை பெறாத போதும், நீங்கள் புன்முறுவலுடன் திகழ முடிந்தால், அப்போது நீங்கள் வாழும் கலைப் பயிற்சியில் வாழுபவர் ஆவீர். நிகழ்வுகள் சரியாக அமையாத போதும், தவறுகள் நிகழும் போதும் நீங்கள் புன்முறுவலுடன் இருந்தால், எல்லாமே சரியாகி விடும் என்பது தெரிந்திருப்பது தான். உங்களில் எத்தனை பேருக்கு உங்களுக்கு எது வேண்டுமோ அது நடந்திருக்கின்றது? கை உயர்த்துங்கள்? (பலர் கை உயர்த்துகின்றார்கள்) அதுதான் இவ்வழியின் மகத்துவம். தேவை ஏற்படும் முன்பே அவை நிகழத் துவங்குகின்றன. இயற்கை அன்பு மிகுந்ததாகும். மனிதர்கள் நீங்கள் நினைப்பதை விட நல்லவர்கள். சமுதாயம் நீங்கள் எண்ணுவதை விட மிகக் கருணை மிகுந்தது. உங்களில் எத்தனை பேர் ஆஸ்ரமத்திற்குள் நுழைந்ததும், இதமாகவும், சக்தி மிகுந்தும் உணர்ந்தீர்கள்?

உங்கள் களைப்பு அனைத்தும் நீங்கிவிட்டன அல்லவா? இப்பிரபஞ்சம் அனைத்துமே அதிர்வலைகள் தாம். அந்த அதிர்வலை நேர்மறையாக இருப்பின் நீங்கள் மகிழ்கின்றீர்கள். இயல்பாகவே மேலான உணர்வினை அடைகின்றீர்கள். உங்கள் சக்தி அதிகரிக்கின்றது. நாம் என்னவோ அதை நாம் உருவாக்கலாம். இவ்வுலகில் நாம் செய்ய வேண்டியது நேர்மறையான சூழல், சக்தி, மகிழ்வு அலைகள் இவற்றை உருவாக்குவது தான்.

வினாக்களும் - விடைகளும்

பகவான் கிருஷ்ணர் "தர்மத்தின் வெற்றிக்கு நான் உறுதி கூறுகின்றேன். அதற்கு அதர்மத்தின் உதவியை எடுத்துக் கொள்ளலாம்"  என்று கூறுகின்றார்ஒரு சாதாரண மனிதன் இந்த வழியை மேற்கொள்ளலாமா?

குருதேவ்: உங்கள் மனதில் எதையோ வைத்துக் கொண்டு மறைமுகமாக கேள்வி கேட்டு என்னிடம் நேர்முகமான விடையை எதிர்பார்க்கின்றீர்கள். நான் நேரிடையான பதிலை அளித்தால், அதை மறைமுகமாக பயன் படுத்துவீர்கள். நான் அதில் பிடிபடப் போவதில்லை. ஏன் நீங்கள் தவறு செய்யக் கூடாது? இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். தவறு செய்யும் போது அது உங்கள் தூக்கத்தைக் கெடுத்து விடுகின்றது. உங்கள் மன அமைதி குலைந்து விடும். உடல் நலம் பாதிக்கப்படும். மனதை ஏதோ உறுத்திக் கொண்டிருக்கும். உங்கள் மனதை ஏதோ உறுத்திக் கொண்டிருக்கும் போது உங்களால் எதையும் உருவாக்க முடியாது,மகிழ்ச்சியின்றி இருக்கின்றீர்கள். நீங்கள் ஏன் பிறரை ஏமாற்றக் கூடாது? ஏனெனில் உங்களை யாரும் ஏமாற்றுவதை நீங்கள் விரும்புவதில்லை. அல்லவா? நீங்கள் எதை செய்கின்றீர்களோ அதுவே உங்களுக்குத் திரும்பும். இதுதான் முன்வினைப் பயன் கோட்பாடு. மிக எளிமையானது.

பகவான் விஷ்ணுவின் அவதாரம் ஸ்ரீ ராமன், எனில், ஏன் அவர் பத்து கலைகளுடன் பிறந்தார்? பதினாறு கலைகளுடன் பிறந்திருக்கலாமே ?

குருதேவ்: ஸ்ரீ ராமர் எதனுடன் பிறந்தார் எதனுடன் பிறக்கவில்லை என்னும் கவலையை விடுங்கள். இத்தகைய மகான்கள் சில அற்புதமான விஷயங்களைக் கூறியுள்ளார்கள். அதன் சாரம் என்னவென்றால், இயற்கையை கௌரவியுங்கள். உங்களையே கெளரவித்து கொள்ளுங்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்களை கௌரவியுங்கள். உலகில் அனைவரும் கற்பித்ததின் சாரம் அன்பு தான். அன்பு மட்டுமே.

நாரதர், "சத்வ அஸ்மின் பரம ப்ரேம ரூப" நிபந்தனையற்ற அன்பு. என்று கூறினார். ஸ்ரீ ராமர் மக்களிடம், தர்மத்திடம், சகோதரர்களிடம், அன்பு செலுத்தி, அனைவரையும் தன்னில் ஒரு பகுதியாக்கிடும் திறமை பெற்றிருந்தார், அதுவே மிகுந்த எழுச்சியூட்டக் கூடியதாகும். விஷ்ணு என்றால் என்ன பொருள் என்று உங்களுக்குத் தெரியுமா? படைப்பின் ஒவ்வொரு அணுவிலும் உள்ளது எதுவோ அது என்று பொருள். பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவிலும், ஒவ்வொரு துளியிலும் நிறைந்திருப்பது ஆகும். விஷ்ணுவிடம் சங்கு, சக்கரம், புஷ்பம் மற்றும் பொன் தண்டாயுதம் உள்ளது. இவை நான்கு மூலப்பொருட்களை குறிப்பிடுகின்றன. சுதர்சன சக்கரம் நெருப்பையும், சங்கு நீரையும், புஷ்பம் காற்றையும், தண்டாயுதம் நிலத்தையும் குறிப்பிடுகின்றன. விஷ்ணுவின் நீலநிறம் விண்வெளியைக் குறிக்கின்றது.

விஷ்ணு என்னும் போது அது பஞ்ச பூதங்களிலுள்ள சக்தியைக் குறிப்பிடுகின்றது. இவ்வுலகம் பிரபஞ்சம் என்று அழைக்கப்படுகின்றது. பிரபஞ்சம் என்றால், இந்த ஐந்தின் வரிசை மாற்றங்களும் கூட்டமைப்பும் ஆகும். அவை யாவை? நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் விண்வெளி. இங்கு அனைத்தும் அவதாரமே, இந்த ஐந்து  மூலப் பொருட்களிலிருந்து தோன்றியவையே.எதிர்பார்ப்புக்கள் வருத்தத்தை அளிக்கின்றன. ஆயினும் இலக்குகள் எதிர்பார்ப்புக்களே ஆகும். குழப்பமாக இருக்கின்றது.

குருதேவ்: இலக்குகள் தேவையானவை. இலக்குகளை நிர்ணயித்து அவற்றை நோக்கி செல்லுங்கள். இலக்கில்லாத வாழ்க்கை மன அழுத்தத்திற்கு இட்டுச்செல்லும். ஆனால் உங்கள் இலக்குகள், " இதைச் செய்ய வேண்டும், இதைக் கற்க வேண்டும், இந்த தொண்டினை ஆற்ற வேண்டும் என்றெல்லாம் இருந்தால் அவை உங்கள் வாழ்கையை நேரான வழியில் நகர்த்திச் செல்லும். எதிர்பார்ப்புக்கள் மகிழ்வினை குறைக்கும். 

எதுவுமே எதிர்பார்க்கக் கூடாது என்று நான் கூற வில்லை.எதிர்பார்ப்பு வாழ்வின் ஒரு அங்கமாகும்.  நாம் அறிய வேண்டியது என்னவென்றால் எதிர்பாராத நிகழ்வுகள் அதிக மகிழ்ச்சியை அளிக்கக் கூடும். சீதை மண்ணில் புதைந்து விடுகின்றாள். இது தற்கொலை செய்து கொண்டதாகப் பொருள் ஆகுமா?

குருதேவ்: அல்ல. இது தற்கொலை அல்ல. ராமாயணம் மகாபாரதம் ஆகியவை கவிதைகளாக எழுதப்பட்டவை. மேலும், ஒரே ஒரு மருத்துவக்கூறு கவிதை வடிவில் எழுதப்பட்டது அது ஆயுர்வேதம் ஆகும். ஆயுர்வேதத்தில் அனைத்து சூத்திரங்களும் கவிதைகளாக எழுதப்பட்டவை. அது போன்று ராமாயணம் மகாபாரதம் ஆகியவை கவிதைகளாக எழுதப்பட்டவை. கவிதை வடிவில், ஒருவர் மண்ணில் சேர்ந்தார் என்று குறிப்பிடப்படும் போது, அதன் பொருள், இவ்வுலக வாழ்க்கை பயணத்தை முடித்துக் கொண்டு விட்டார் என்பதே ஆகும். லிங்கத்துடன் இணைந்து விடுகின்றனர். இங்கு கர்நாடகாவில் ஒருவர் இறக்கும் போது அவர் லிங்கத்துடன் இணைந்து விட்டார் என்றே கூறுகின்றனர். எனவே கவிதை நடை என்பது வேறுபட்டது ஆகும்.

சுமார் 1500-1800 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு புதிய பைபிளை அண்மையில் கண்டு பிடித்திருக்கின்றனர். இது தாமிரப்பட்டயத்தில் பொன் எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளது.துருக்கிக்கு அருகில் இதைக் கண்டு பிடித்திருக்கின்றனர். உலகையே அதிர்ச்சி அடைய வைக்க கூடிய வகையில், வித்தியாசமாக அமைந்துள்ளது. அதில் எழுதப் பட்டுள்ளவை தற்போது மக்கள் நம்பி வருபவற்றிலிருந்து வேறுபட்டது ஆகும். அறிஞர்கள் இதை ஆய்ந்து கொண்டிருக்கின்றனர். இதே போன்று முதன் முதலில் மகாபாரதம் எழுதப் பட்டபோது அதில் 25000 செய்யுள்கள் இருந்தன. ஜெயா என்று அழைக்கப்பட்டது. மகாபாரதத்தின் பெயர் அப்போது ஜெயா ஆகும். இன்று மகாபாரதத்தில் 1,25,000 செய்யுட்கள் உள்ளன. எவ்வாறு ஒரு லட்சம் செய்யுள்கள் சேர்க்கப்பட்டன என்பது தெரியவில்லை. மத்திய காலத்தில் இந்த இடைசெருகல் நிகழ்ந்திருக்கலாம்.

நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், பழமையில் பெருமை கொண்டு, வருங்காலத்தை நோக்கி முன்னேறி செல்லுவது தான். இதயம் பழமைக்கு ஏங்கும் போது மனம் எப்போதும் புதுமையை தேடுகின்றது. மனம் புதியது, நவீனமானது இவற்றையே விரும்புகின்றது. சமீபத்திய வடிவமைப்பு என்ன? சமீபத்திய செயல்திட்டம் என்ன? சமீபத்திய உணவு வகைகள் யாவை? சமீபத்திய நாகரீகம் என்ன? சமீபத்திய தொழில் நுட்பம்  என்ன? என்பதே மனதின் வேட்கை. ஆனால் இதயம் பழமையையே விரும்புகின்றது. இது என் சமீபகால நண்பன் என்று கூற விரும்ப மாட்டீர்கள். என் நெடுங்கால நண்பன் என்று கூறிக் கொள்வதிலேயே பெருமை அடைகின்றீர்கள். காதலர்கள் கூட, "எத்தனையோ பிறவிகளாக நாம் காதலித்துக்  கொண்டிருக்கின்றோம்" என்று கூறுகின்றார்கள். இதயம் பழமையையும் மனம் புதுமையையும் விரும்புகின்றன. இவ்விரண்டும் இணைந்ததே வாழ்க்கை ஆகும்.

ஒவ்வொரு அவதாரத்திலும், ராமர் அல்லது கிருஷ்ணர் யாரைப் பற்றியதாகிலும், ஒரு கதை கூட அவர்கள் எவ்வாறு சுவர்க்கத்திற்குத் திரும்பிச் சென்றார்கள், அல்லது அவர்களது உடல்கள் என்னவாகின என்று கூறுவதில்லை.  உண்மையில், என்னவாயிற்று?   எப்போது நிகழ்ந்தது?


குருதேவ்: நல்லது! அது எனக்குத் தெரியாது! அவர்கள் மிக அழகிய ஞானச் செய்திகளை விட்டுச் சென்றிருக்கின்றார்கள். அதை ஏற்றுக் கொண்டு முன்னேறிச் செல்லுங்கள். உங்களுக்கு ஆய்வு செய்யும் விருப்பம் இருந்தால் தொல்பொருள் ஆய்வுத் துறைக்குச் செல்லுங்கள். ஹேமா மற்றும் D.K ஹரி இங்கு இருக்கின்றார்கள்.அவர்கள் மிகுந்த ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களிடம் நீங்கள் பேசலாம். அவர்கள் வரலாற்று ராமர் என்றொரு நூலை எழுதியிருக்கின்றனர். சேது அணை கட்டப்பட்டதையும், அதைக் கட்டிய பொறியாளர்களைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கின்றனர். அதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். ஒன்றை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 

வாழ்க்கை மிக அழகானது. உங்கள் இதயம் திறந்து, தெளிவுடனும் உள்த்தூய்மையுடனும் இருந்தால் வாழ்க்கையின் அழகைக் காண்பீர்கள். மனம் தெளிவாக இருந்தால் வாழ்க்கையில் எத்துணை வாய்ப்புக்கள் உள்ளன என்பதைக் காண்பீர்கள். செயல்களில் நேர்மை இருந்தால் வெற்றி தானே, நீங்கள் கேட்காமலே உங்களை தேடி வரும். செயல் நேர்மை ஆழ்ந்த திருப்தியைத்  தரும். எனவே, உள்ளத் தூய்மை, மனத்தெளிவு, செயல் நேர்மை. இதுவே சூத்திரம்.