பாலி 'யில் பகவத் கீதை - மூன்றாம் நாள்

சனிக்கிழமை, 4 ஏப்ரல் 2015,

பாலி, இந்தோனேசியா

(பாலியில் இரண்டாம் நாள் பகவத் கீதை இடுகையின் தொடர்ச்சி)

நேற்று நாம் இந்தப் பாதைக்கு வரும் நான்கு விதமான மக்களைப் பற்றி விவாதித்தோம்.

1. துன்பத்திலிருக்கும் மக்கள்,அதிலிருந்து விடுபடுவதற்கு ஆன்மீகப் பாதைக்கு வருகின்றனர்.
2. ஆசைகள் அதிகமிருக்கும் மக்கள் அந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக குருவைத்     தேடி வருகின்றனர்.
3. உயர்ந்த உண்மையினை அறிய விரும்புவர்கள் ஆவலின் காரணமாக குருவிடம் வருகின்றனர்.
4. விவேகமும் அறிவும் உள்ளவர்கள் அவற்றின் காரணமாகவே குருவிடம் வருகின்றனர்.   அறிவாளிகள் மட்டுமே ஆன்மீகப் பாதைக்கு வருவதாக நான் கருதுகின்றேன்.

7.21
யோ யோ யம் யம் தானும் பக்தஹ் ஸ்ரத்தயர்சிதம் இச்சதி ;
தஸ்ய தஸ்யகலம் ஸ்ரத்தம் தம் ஏவ விததாம்யஹம்

எங்கெல்லாம் ஒருவனுக்கு நம்பிக்கை ஏற்படுகின்றதோ, யாரை நம்புகின்றாரோ அந்த நம்பிக்கை என்னாலேயே வழங்கப்படுகின்றது. சுயமே நம்பிக்கையாக மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. நம்பிக்கை சுயத்திலிருந்தே வருகிறது. எனவே அவர் 'உங்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் ஒருவன் நானே ' எனக் கூறுகிறார்.

அன்பு ஒரு பரிசு என்று நான் கூறுவதைப் போலவே இது உள்ளது. நீங்கள் யார் மீதாவது அன்பு செலுத்தினால் அது உங்களுடைய சாதனை அல்ல. ஒருவர் மீது நீங்கள் செலுத்தும் அன்பு ஒரு பரிசே ஆகும். மகிழ்ச்சி ஒரு பரிசு, காலம் ஒரு பரிசு, கிட்டத்தட்ட வாழ்க்கையில் அனைத்துமே ஓர் பரிசு அல்லது ஒரு ஆசீர்வாதம்.

7.22
'ஸ தய ஷ்ராத்தய யுக்தாஸ் தச்யராதனம், இஹதே
லபதே ச ததாஹ் காமன் மாயைவ விஹிதன் ஹி தன்'

“நான் நம்பிக்கையை அளித்திருக்கின்றேன். நான் அளித்துள்ள அந்த நம்பிக்கையுடன்  ஒருவன் வழிபாட்டில் ஈடுபடவும், மற்றும் வழிபாட்டின் மூலம் தன்னுடைய விருப்பங்களை அடையவும் வழி வகுத்துள்ளேன். இவையனைத்தும் என்னால் அளிக்கப்பட்டவையாகும். இதை நான் இயற்கையின் நியதியாகவே நியமித்திருக்கின்றேன்."

மருத்துவர்கள் உங்களுக்கு மருந்துகள் தருகின்றனர். அந்த மருத்துவரிடம் உங்களுக்கு நம்பிக்கை இல்லையெனில்,மருந்தை எடுத்துக் கொள்வீர்களா? மாட்டீர்கள் அல்லவா? அப்படி நம்பிக்கையின்றி எடுத்துக்கொண்டாலும் அந்த மருந்து வேலை செய்யுமா? செய்யாதல்லவா? நம்பிக்கையே ஒவ்வொரு செயலின் ஆதாரம் ஆகும்.எந்த செயலானாலும் எதை செய்தாலும் நம்பிக்கையே முக்கியமான காரணியாகும். எனவே, குறிப்பிட்ட முடிவுகளிலிருந்து ஏற்படும் அனைத்து விளைவுகளும் படைப்பின் குறிப்பிட்ட தூண்டுதல்களிலிருந்தே ஏற்படுகின்றன. (தேவ என்பது படைப்பின் குறிப்பிட்ட தூண்டுதல்கள், மெய்யுணர்வின் கதிர்கள்) அவை ஏற்கனவே நியமிக்கப் பட்டவை. நியதியின் ஒரு பகுதியாகும்.

7.23
" அந்டவத் து பலம் தேஷம் தத் பவதி அல்ப மேதசம்
தேவன் தேவா -யாஜோ  யந்தி மத் பக்த யந்தி மாம் அபி "

நீங்கள் உடல் கட்டுமானத்தில் விருப்பமுள்ளவர் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் நேரம் முழுமையையும் அதிலேயே செலவழித்து, அறிவை, உணர்ச்சிகளை மற்றும் வாழ்க்கையில் அனைத்தையும் அலட்சியப்படுத்தியிருந்தால், நீங்கள் முழுமையை அடைய முடியாது. அது போன்றே, ஒருவர் வயலின் வித்வான் என்று வைத்துக் கொள்வோம்.உண்டு,உறங்கி வாழ்க்கையின் மற்ற அம்சங்களை ஒதுக்கி விட்டு காலை முதல் மாலை வரையில் வயலினே வாசித்துக் கொண்டிருந்தால் அவர்கள் முழுமையானவர்கள் ஆவார்களா? இல்லை. ஆகவே ஒரே ஒரு பரப்பிலேயே முற்றிலும் நீங்கள் சிக்கிக் கொண்டால், முழுமையாக மலர்வது இயலாத விஷயம். “அனைத்திலும் ஈடுபடுங்கள், மற்றும் என்னையும் காணுங்கள், நானே முழுமை, என்னிடம் வாருங்கள்.”

7.24
அவ்யக்தம் வ்யக்திம் அபன்னாம் மந்யதே மாம் அபுத்தயாஹ் 
பரம் பவம் அஜநந்தோ மாம் அவ்யயம் அனுத்தமம்

இது அழகானது. ஸ்ரீகி ருஷ்ணர் கூறுகின்றார் "இணையற்ற மாற்றமுடியாத என் குணத்தினை அறியாத முட்டாள்கள், புலப்படாத நான் என்னை வெளிப்படுத்திக் கொள்வதாக கருதுகின்றனர். "நான் புலப்படாதவன்.ஆனால் மக்கள் என்னுடைய வெளித்தோற்ற அம்சத்தினையே காண்கின்றனர். "நீங்கள் ஒருவருடன் சம்பந்தப்படுத்திக் கொள்ளும்போது அவரது வெளித் தோற்றத்தினையே சம்பந்தப்படுத்தி கொள்கின்றீர்கள். உண்மையில் அது சுயம் அல்லது மனம் அல்லது உள்ளிருக்கும் ஆத்மா; அதனுடன் தான் சம்பந்தப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு நீங்கள் கவனமே செலுத்துவதில்லை. நான் கூறுவது புரிகிறதா? நீங்கள் ஒருவருடன் உங்களை தொடர்புபடுத்திக் கொள்ளும் போது, நீங்கள் எதை அணுகுகின்றீர்கள்? உடல் அல்லது ஆத்மா? இதைப் பற்றி நீங்கள் எண்ணியதே இல்லையல்லவா?

ஸ்ரீ கிருஷ்ணர் ,"மக்கள் என்னை வெளிப்புறமாக ஒரு மனிதனாகவே காண்கின்றனர். அவர்கள் வெற்றிடப்பரப்பினை,மெய்யுணர்வினை உண்மையில் எது பேசி, செயலாற்றி கொண்டிருக்கின்றதோ அதனை காண்பதேயில்லை. எட்டு அம்சங்கள் கொண்ட பிரக்ருதியினையே காண்கின்றனர், அதற்கப்பால் உள்ள ஒன்றினை காண்பதேயில்லை. அப்படிப்பட்டவர்கள் புத்திசாலிகள் அல்லர்" என்று கூறுகிறார். மேலும் அவர்," இது அவர்களது தவறு அல்ல, ஏனெனில் நான் என்னை அனைவருக்கும் வெளிப்படுத்திக் கொள்வதில்லை" என்றும் கூறுகின்றார்.

7.25
ந அஹம் ப்ரகாசஹ சர்வஸ்ய யோகா மய சமவ்ர்தஹ
முதோ யாம் நபிஜனாதி லோகோ மாம் அஜம் அவ்யய

அனைவருக்கும் நான் தெரிவதில்லை. என்னை அனைவருக்கும் வெளிப்படுத்திக் கொள்வதில்லை, ஏனெனில் ஒவ்வொருவரும் யோக மாயையினால் திரையிடப்பட்டுள்ளனர். மாயை என்றால் மருட்சி. மாயை என்பது தாற்காலிகம். உண்மையானது அல்ல. வெளித்தோற்றமே மாயை. சூரியன் அஸ்தமனம் மாயை, அஸ்தமிப்பது போன்ற தோற்றமே, உண்மையில் அஸ்தமிப்பதில்லை. ஒரு குவளைத் தண்ணீரில் ஒரு பென்சிலைப் போடுங்கள்.அது வளைந்திருப்பது போன்று தோன்றும்,அது மாயை. மாயை என்பது நிலையில்லாதது, மாறக் கூடியது. ஸ்ரீ கிருஷ்ணர்," ஏமாறுபவர்கள் என்னை அறிய முடியாது. அனைவராலும் என்னை அறிந்து கொள்ள முடியாது. பிறப்பில்லாத மற்றும் அழிவில்லாதவன் நான். நான் பிறந்ததுமில்லை இறக்கப் போவதுமில்லை" ஆத்மா அல்லது ஆற்றலுக்கு பிறப்பும் - இறப்பும் கிடையாது. உங்களின் ஆழத்திலிருக்கும் ஒன்று பிறந்ததுமில்லை, இறக்கப் போவதுமில்லை.

7.26
வேதஹம் சமத்திதனி வர்த்தமானனி ச அர்ஜுன
பவிஷ்யாநி  ச பூதானி மாம் து வேத ந கஷ்சன

‘பிறரைத் தர மதிப்பீடு செய்ய முயற்சிக்காதீர்கள்’ என்றொரு முது மொழி உண்டு. ஞானிகளின் செயல்களையும் அல்லது சொற்களையும் கொண்டு அவர்களைத் தர மதிப்பீடு செய்யாதீர்கள் உங்களுக்கு அவர்களைப் பற்றித் தெரியாது. ஏன்? ஏனெனில், மெய்யுணர்வு மிகவும் விசாலமானது, மிக ஆழமானது, பல்வேறு கோணங்கள் உடையது, நமக்கு சில கோணங்களை மட்டுமே புரிந்து கொள்ளும் திறமை உள்ளது. மெய்யுணர்வு பல்வேறு கோணங்களுடையதாகையால், மெய்யுணர்வால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். எவன் புரிந்து கொள்கின்றானோ அவன் அதுவாகவே  ஆகின்றான். 

“நான் கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் வருங்காலத்தினை மற்றும் அனைத்தையும் அறிவேன். என்னை யாராலும் அறிந்து கொள்ள முடியாது.”

7.27
இச்சா -த்வேஷ -ஸமுத்தேன த்வந்த்வ -மோஹேனபரத
ஸர்வ  பூதானி ஸம்மோஹம்சர்கேயன் தி பரந்தப

உங்கள் அமைப்பிலேயே அடங்கா ஆசைகள் மற்றும் வெறுப்பு உள்ளன. அவை கட்டமைப்பிலேயே அடங்கியிருப்பது போன்று தோன்றுகின்றன. அடங்கா ஆசைகளும் வெறுப்பும் நமது மனதில் ஒரு மேகத்தினை உருவாக்கி, அதற்கப்பால் உள்ள அப்பழுக்கற்ற ஆழ்ந்த நீல வானத்தை காணவிடாமல் செய்கின்றன. இருண்ட மேகங்கள் சூழ்ந்த நாளில் நீலவானத்தைக் காணமுடியாது. அது போன்றதே மெய்யுணர்வும். நமது மனதில் ஆசைகள் மற்றும் ஏக்கங்கள் மூடுபனி போன்று சூழ்ந்து தெளிவான மெய்யுணர்வினைக் காண விடாமல் செய்கின்றன.

7.28
யெஸ ம்த்வ- அந்த - கடம்பப் அம்ஜனனாம் புண்ய -கர்மணாம்
தி த்வந்த்வ -மோஹா -நிர்முக்த பஜந்தே மாம் த்ரத வ்ரதஹ்

புலப்படாத ஒன்றினை - பிரம்மனை அடைய விரும்புபவர்கள் என் மூலமாகவே செல்ல வேண்டும்.
பைபிளிலும் இது போன்ற ஒரு வாசகம் உள்ளது. "என் தந்தையை அடைய விரும்புபவர்கள் என் மூலமாகவே செல்ல வேண்டும்" என்பதே அது.அது போன்றே ஸ்ரீ கிருஷ்ணர், "நான் உன் நண்பனாக இங்கிருக்கின்றேன், உன்னை வழி நடத்திச் செல்வேன், ஆகவே நேராக புலப்படாத ஒன்றினை நீ சென்றடைய விரும்பினால் அது முடியாத ஒன்றாகும். நீ நியமப்படியே செல்ல வேண்டும்." என்று கூறுகின்றார்.

7.29
சர மரானா -மோக்ஷய மமஸ்ரிதயந்தி யே. தே பிரம்ம
தத் விதுஹ்க்ரட் ஸ்னமத்யத்மம் கர்ம சகிலம்

ஆன்மீக பாதையிலுள்ள மக்கள், எப்போதும் இளமையாகவும் உயிர்ப்புடனும் உணருவர். முதுமையை கடந்தவர் ஆவர். இது உறுதி. வாழ்க்கையில் ஒரு இலக்குடன், தமக்காக மட்டுமின்றி, பிறருக்காகவும் வாழ்ந்து தியானம் செய்து தொண்டில் ஈடுபடும் மக்கள், தம் வாழ்க்கையிலும் முகத்திலும் ஒளியுடன் திகழ்வர். மகாத்மா காந்தி அல்லது நெல்சன் மண்டேலா ஆகியோர் ஓர் ஒளியுடன் திகழ்ந்ததைக் கண்டிருப்பீர்கள். அது ஏனெனில் அவர்களது வாழ்க்கை ஓர் பெரிய விஷயத்திற்காக அர்ப்பணிக்கப் பட்டது. ஸ்ரீ கிருஷ்ணர் " என்னிடம் வருபவர்களுக்கு முதுமையே கிடையாது, இறப்பும் கிடையாது, அவர்கள் விடுவிக்கப்பட்ட உணர்வுடன் திகழ்வர்.” என்று கூறுகின்றார்.

தலைவனிடம்  வருபவர்கள் கட்டுப்படுவதில்லை, விடுதலையை உணருகின்றனர். அது அடிமைத்தனம் அல்ல, தன் மீதே மேலாண்மையினை அடைகின்றனர். நமது மனதிலிருந்தே விடுபடுகின்றோம். ஆசைகள் மற்றும் வெறுப்பு இவற்றிலிருந்து விடுபடுகின்றோம். என்னால் இதைச் செய்ய முடியும், என்னால் இதைச் செய்ய முடியாது என்னும் உணர்விலிருந்து விடுபடுகின்றோம். எனவே என்னைச் சரணடையுங்கள், விடுபடுவதற்கு உழையுங்கள்.