நீங்கள் பொறுப்புடன் செயல்படுகிறீர்களா?

வெள்ளிக்கிழமை, 04 -2015 ,

பெங்களுர்இந்தியா


இன்று நம் நாட்டிற்க்குஇளைஞர் தலைமத்துவப் பயிற்சி (YLTP)  மிக அவசியம்.YLTP பயிற்சி எடுத்த நம் இளைய தலைவர்கள் செய்யும் உயரிய சாதனைகளை பார்த்து உலகமே வியப்படைகிறது. YLTP பயிற்சி முடித்த ஒரு “யுவச்சாரி” ஒரிசாவிலுள்ள தனது சொந்த கிராமத்திற்கு சென்று, மக்கள் வெளியில் மலம் கழிக்கும் பழக்கத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை கட்ட தேவையான ஏற்பாடுகளை செய்தார். ஒன்றரை மாதத்திற்குள் யுவச்சாரியாரால் அனைத்தும் செய்ய முடிந்தது. உலக வங்கி அதிகாரிகள் அந்த கிராமத்தை பார்வையிட்டு, நமது யுவச்சாரியாரை டெல்லிக்கு அழைத்து “ எப்படி குறுகிய காலத்தில் இதை சாதிக்க முடிந்தது“என்று கேட்டார்கள். கிராமத்திலுள்ள ஒவ்வொருவரிடமும் இதனுடைய முக்கியத்தை பேசி, அவர்களை ஊக்கப்படுத்தி இதை சாதிக்க முடித்தது” என நம் யுவச்சாரி கூறினார்.

நமக்கு “உத்வேகம்” மூலதனமாக இருக்கும் போது, பின் நம்மால் பல உயரிய செயல்களை செய்ய முடியும் மற்றும் சமுதாயத்திலும், உலகத்திலும் நிறைய நல்ல மாற்றங்களை கொண்டு வரலாம். நாம் அனைவரும் உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும் முன்னேறி செல்ல வேண்டும்.

இந்தியாவில் (மகாராஷ்டிரா,குஜராத் அல்லது வட-இந்திய மாநிலங்கள்) சேவைகள் நடந்துள்ளதோ, நம் யுவச்சாரியர்கள் நடத்தியுள்ளார்கள். பல வருண்டு போன நதிகள், கால்வாய் படுகையை புதுப்பித்தல் மற்றும் சுத்தம், சுகாதாரம் போன்ற விழிப்புணர்வுகளை மக்களிடையே கொண்டு வர வேலை செய்கிறார்கள். கிராமத்து மக்களும் இந்த யுவச்சாரியரை, கிராமத்து தலைவராக தேர்வு செய்ய ஒப்புக்கொண்டனர். இந்தியாவில் சுமார் 196 கிராமத்தில் நம் யுவச்சாரியர்கள், அவர்கள் செய்த நல்ல பணியால் கிராம பஞ்சாயத்து தலைவர்களாக உள்ளனர்.பல கிராம பஞ்சாயத்துகளில் யுவச்சாரியர்கள் தேர்வு செய்யபட்டுள்ளனர். ஏன்? அவர்கள் மக்கள் மனதை வென்றுள்ளனர். இங்குள்ள அனைவரும் இதுபோல் செய்ய முடியும். ஆனால், எப்பொழுது செய்ய முடியும்.? உங்களடைய சொந்த மனதை வென்றால் தான், மக்கள் மனதை நீங்கள் வெல்ல முடியும். அதற்கு, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் ஆன்மீக பயிற்சியை தவறாது தினமும் செய்வது அவசியம்.

உங்களடைய சொந்த மனதை வென்றால் தான், மக்கள் மனதை நீங்கள் வெல்ல முடியும் என்று ஹிந்தியில் ஒரு பழமொழி உண்டு. இது உண்மை. நாம் அனைவரும் கர்ம யோகிகளாக வேண்டும்.
இங்கு அரசாங்க அதிகாரிகளுடன் சற்று நேரத்திற்கு முன் ஒரு கூட்டம் நடந்தது. அதில் மத்திய அமைச்சர் வந்து என்னிடம் கேட்டார். நான் அந்த அமைச்சரை, அதிகாரிகளுடம் இவ்வாறு கேட்க சொன்னேன் – “ என்ன மாதிரியான ஓட்டுனரை வைத்துகொள்ள விரும்புகிறீர்கள்? அவர்கள் “ கர்ம யோகிகளாக” இருக்க விரும்புகிறீர்களா? இல்லையா? ஆம், குருதேவ் அவர்கள் கர்ம யோகிகளாக இருக்க வேண்டும் என்று அனைவரும் ஒரே குரலில் கூறினர். நாங்கள் பொறுப்புள்ள ஓட்டுனரை விரும்புகிறோம்.பொறுப்பில்லாத ஓட்டுனர்கள் வேண்டாம்.

"உங்கள் குழந்தைகளுக்கு எந்த மாதிரியான ஆசிரியர்கள் வேண்டும் என விரும்புகிறீர்கள் “என கேட்டேன். பொறுப்பில்லாதவர்களா அல்லது பொறுப்புள்ளவர்களா? “ ஆம், குழந்தைகளுக்கு பொறுப்புள்ள ஆசிரியர்கள் தான் வேண்டும்” என விரும்புகிறோம்.“ உங்களுக்கு எந்த மாதிரியான மருத்துவர் வேண்டும் “பொறுப்புள்ள,, உண்மையான மருத்துவரையா அல்லது கவனக்குறைவான, பொறுப்பில்லாத,சரியான சிகிச்சை செய்யாமல் பணத்தை மட்டும் குறியாக உள்ள மருத்துவரையா? என கேட்டேன். குருதேவ், நாங்கள் பொறுப்புள்ள மருத்துவரை தான் விரும்புகிறோம். இப்பொழுது, நான் மேற்கொண்டு கேட்பதற்கு ஒன்றுமில்லை என்று சொன்னேன்.  உங்களை சுற்றியுள்ள எல்லா மக்களும் மிக்க பொறுப்புள்ளவர்களாகவும்,கர்மயோகிகள் போல் திறமையுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என விரும்பும் பொழுது, பின் நாம் இதுபோல் நடந்து கொள்கிறோமா? என ஆழமாக சிந்தித்து பிரதிபலிக்க வேண்டும்.

இதை கேட்டதும், கவனமில்லாமல் இருந்தவர்களும், தூங்கிக்கொண்டு இருந்தவர்களும் மின்சார அதிர்ச்சி எற்பட்டது போல்,உணர்ந்து உட்கார்ந்து கவனத்துடன் கேட்டனர். ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டதை உணர்ந்தார்கள். முக்கியமான ஆவணங்களை செயலாக்க தாமதபடுத்துவதால், நமது நாட்டின் வளர்ச்சி பாதிக்கபடுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டேன். அவர்கள் இதை ஒப்புக்கொண்டார்கள். இப்பொழுது, எல்லோரும் இதற்கு பொறுப்பு எடுத்து கொள்வீர்களா? என்று கேட்டேன்.

உங்களை சுற்றியுள்ள மக்களும் மிக்க பொறுப்புள்ளவர்களாகவும், நேர்மையானவர்களாக இருக்க வேண்டும் என விரும்பும் பொழுது, பின் நாமும் இந்த வழியில் தானே நடந்து கொள்ள வேண்டும். நம் வாழ்க்கையில் பல பணிகளை செய்கிறோம், ஆனால், அதை நாம் புத்திசாலித்தனமாகவும், பொறுப்பு உணர்ச்சியுடனும் செயல்படுகிறோமா? உண்மையில், இதை தான் நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.