நம்பிக்கையுடன் செயல்படுங்கள்

சனிக்கிழமை, 04/08/2015,

கேரளா, இந்தியா

(வாழும் கலை, UNICEF மற்றும் கேரளா அரசு இணைந்து நடத்திய மாநாடு.” நம்பிக்கையுடன் செயல்படுங்கள் – மது, போதை பொருள், பெண்கள்,குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமையை எதிர்த்து மதநல்லிணக்க மாநாடு. பல சமய தலைவர்கள், ஆன்மீக தலைவர்கள் இந்த மாநாட்டில்  இணைந்து தவறான சமூகத்திற்கு எதிராக நின்றார்கள். கீழே ஸ்ரீ ஸ்ரீ பேசியதின் தமிழாக்கம்)

நான் கேட்ட இந்த கதையை, உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒருவர் ,மற்றவரை பார்த்து “நீ என்ன செய்கிறாய்?“  என்று கேட்டார். நான் கொசுவை விரட்டி கொண்டிருக்கிறேன், வேண்டுமென்றால் உங்களுக்கு எத்தனை விரட்டினேன் என்று சொல்கிறேன். மூன்று ஆண் கொசு இரண்டு பெண் கொசு. வியப்படைந்த அவர் “ எப்படி ஆண் கொசு, பெண் கொசு என்று உனக்கு தெரியும்? என்று கேட்டார். மூன்று கொசு மது பாட்டில் உட்கார்ந்ததால், ஆண் கொசு என்றும், இரண்டு கொசு அழகு சாதன பெட்டியின் மேல் உட்கார்ந்ததால், அது பெண் கொசு என்றும் பதில் கூறினார். நாம் ஒன்றும் செய்வதற்கு இல்லை என்ற பொழுது, நமது மனம் தீயபழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறது. “காலியான மனம் பேயின் இருப்பிடம்” என்ற ஆங்கிலத்தில் பழமொழி உள்ளது. பகவான் புத்தர் சொன்ன “காலி மற்றும் வெற்றிட மனம்”, இதிலிருந்து வேறுபட்டது

சோம்பேறியான மனது, எல்லா தீயபழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறது. சமூகத்தில் வன்முறை நடக்க, தீய பழக்கத்திற்கு அடிமையாகி விடுவது தான் காரணம். வஞ்சிக்கப்பட்டு சிறையில் இருப்பவருடன் நாம் ஒரு நாள் இருக்கலாம் என்று நான் சொல்வேன். குற்றவாளி என்பதை விட அவர்களை வஞ்சிக்கப்பட்டவர்கள் என்று தான் நான் சொல்வேன். ஏனென்றால், ஒவ்வொரு குற்றவாளிகுள்ளும் ஒரு வஞ்சிக்கப்பட்ட மனம் உதவிக்காக அழுது கொண்டுள்ளது. அவர்கள் தீய பழக்கத்திற்கு அடிமையாகி, பிறரால் வஞ்சிக்கப்பட்டவர்கள். மக்கள் மது, போதை பொருள், இதர வஸ்துக்களை உபயோகிப்பதால் சாதாரணமாக இருப்பதில்லை, வன்முறையில் ஈடுபடுகிறார்கள். இரண்டவதாக எல்லா வன்முறைக்கும் மூலகாரணம் மன அழுத்தம்.

மன அழுத்தம் என்றால் என்ன? மிக குறைந்த கால அளவில், நிறைய காரியங்கள் செய்ய வேண்டியது இருக்கும் போது மற்றும் சக்தியற்று இருக்கும் போது மன அழுத்தம் ஏற்படுகிறது. இதுதான் மன அழுத்தத்தின் விளக்கம். நீங்கள் ஒப்பு கொள்கிறீர்களா? சக்தியும்,நேரமும் இல்லாது, நிறைய காரியங்களை நாம் செய்ய வேண்டயுள்ள போது, நமக்கு என்ன நேர்கிறது? ஏமாற்றம் அடைகிறோம். பதில் சொல்லமுடியாத கேள்வி எழுகிறது. நமது மனதில் பதில் சொல்லமுடியாத கேள்வி பன்மடங்கு அதிகமாகி வன்முறையாக - உள்நாட்டு கலவரம் பெண் மற்றும் குழந்தைகள் மேல் வன்முறையாக மாறிவிடுகிறது.

இந்நாளில், பெண்கள் மட்டும் கலவரத்தால் வஞ்சிக்கபடுகிறார்கள் என்று சொல்வதிற்கில்லை. ஆண்களும் கலவரத்தால் வஞ்சிக்கபடுகிறார்கள். குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக நாம் இந்த பிரசாரத்தை ஆரம்பித்தபொழுது பல ஆண்களிடமிருந்து கடிதங்கள் எனக்கு வந்தன. அதில் “உருக்குலைந்த ஆண்கள் சங்கம்” இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டு இருந்தார்கள் (சிரிப்பு.)
இந்தியாவிலும் இதுபோன்ற சங்கங்கள் இருப்பதாக அறிய வந்தேன். ஆண்,பெண் என்று ஏன் வேறுபடுத்தி பார்க்கிறீர்கள்? நாங்களும் உள்நாட்டு கலவரம், வன்முறையால் பாதிக்கபடுகிறோம்.
நாம் குழந்தைகளுக்கு அவர்களது எதிர்மறை உணர்வுகளை எவ்வாறு கையாள்வது என்பதை சொல்லி கொடுக்காததால் உள்நாட்டு கலவரம், சமூக கலவரம் மற்றும் தற்கொலை போக்கு நிகழ்கிறது.

இதை பள்ளி கல்வியில் அறிமுகபடுத்துவதாக மாண்புமிகு அமைச்சர் பாபு அறிவித்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இது மிகவும் முக்கியம். மதுவிலக்கை முதலாவதாக கேரளாவில் பல வருடங்களுக்கு பின் அமுல்படுத்தியிருப்பது நம் நாட்டிற்க்கு முன் உதாரணம். உங்களுக்கு தெரியுமா? கேரளா தான் 100% படித்தவர்கள் உள்ள ஒரே மாநிலம். ஆகவே,வன்முறை இல்லாத முன் உதாரண மாநிலமாக்குவது எளிது. நம் நாடு அஹிம்சை கொள்கையை கடைபிடித்து அஹிம்சையிடன் இருப்பதை எண்ணி பெருமை அடைகிறோம். நாம் ஒன்றுபட்டு இருக்கும் அடையாளத்தை இழந்து விடகூடாது. உலகமனைத்தும் ஒரே குடும்பம் அது தான் ”வாசுதேவ குடும்பகம்”

எல்லா மதத்தினரும் இங்கு ஒன்று கூடி இருப்பது, எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.ஏனென்றால் மதத்தலைவர்கள் சமூகத்தின் ஊக்கமளிக்கும் சக்தியாக உள்ளார்கள். மத மாண்புமிக்க மற்றும் கல்வியல் மனநிலையாளர்கள் எப்போதும் மக்களை ஊக்குவிக்க முடியும்.இவ்வாறாக, நம் நாட்டில் மூலை,முடுக்குகளில் உள்ள மக்களை ஊக்குவிப்பதில் பொறுப்பு எடுத்து அவர்களை நல்ல மனிதர்களாக்க முடியும். “Subodham”(மதுபான துஷ்பிரயோகம் முடிவுக்கு ஒரு திட்டம்) கேரளாவில் துவக்கியிருப்பது புத்துணர்ச்சி அளிக்கிறது. இது இன்றைய முக்கிய தேவை. போனமுறை நான் இங்கு வந்தபொழுது “கடந்த சில வருடங்களில் மதுபான உபயோகம் மாநிலத்தில் மும்மடங்கு அதிகரித்துள்ளதை குறித்து கவலை தெரிவித்தேன்”. இப்போழுது பாருங்கள், இதற்கான உயிர்ப்பான முயற்சிகள் இன்று எடுத்து வருகிறோம்.

சமூகத்தில் நான்கு தூண்கள்,அதாவது NGO, மதம் சார்ந்த நிறுவனங்கள், அரசாங்கம் மற்றும் பத்திரிகையாளர்கள் கைகோர்த்து சேர்ந்து செயல்பட்டால் வியப்படையும் மாற்றத்தை காணலாம்.
UNISEF  நிர்வாக உறுப்பினர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அவர்கள் உலகம் முழுதும் இந்த மாதிரியான விசயங்களை ஊக்குவித்து வருகிறார்கள், நாமும் அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்பதை உறுதியளிக்கவேண்டும். இங்கு கூடியுள்ள அனைவரும், முக்கிய மதத் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் ஒன்றுகூடி இந்த சமூகத்தை நல்ல இடமாக மாற்ற வேண்டும்.

“வன்முறையற்ற சமுதாயம்,நோய்யற்ற உடல், மனஅழுத்தம் இல்லாத மனம், தடங்கல் இல்லா அறிவாற்றல், அதிர்ச்சியில்லா நினைவாற்றல், துன்பம் இல்லா ஆன்மா – ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் பிறப்புரிமை ஆகும்” இவைகளுடன் செயலாற்றல், நிறைய சாதிக்க முடியும் என உறுதி கூறுகிறேன். நான் இன்னும் ஒரு நிகழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒருமுறை, பெரியமனிதர்” எனக்கு மிகுந்த தலைவலி. காலையிலிருந்து மாலை வரை மாநாட்டில் உட்கார்ந்துள்ளேன், பலரும் பேசுகிறார்கள். அவர்கள் என்ன பேசினார்களோ, அவைகள் அனைத்தும் என் தலைக்கு மேல் சென்று விட்டது” என்றார்.  “ஒன்றும் கவலைபடாதீர்கள். சற்று வெளியில் சென்று மது அருந்துக்கள், தலைவலி போய்விடும்” என்று பக்கத்தில் அமர்த்திருத்தவர் சொன்னார். “மது அருந்தினால் தலைவலி எப்படி போகும்?” என்று அந்த பெரிய மனிதர் கேட்டார்.

“மது அருந்தினால் என்ன தான் போகாது? மதுவினால் என் வேலை, என் மனைவி, என் வீடு, என் பணம் – எல்லாம் போய்விட்டது. தலைவலி ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை. அனைத்தையும் அகற்றக்கூடிய மற்றும் புவியிலிருந்து வாழ்க்கையையே எடுத்து விடக்கூடிய பெரிய வஸ்து அது” என்று பக்கத்தில் அமர்த்திருத்தவர் சொன்னார். ஆகவே, நாம் நம் வாழ்க்கையில் நல்லவர்களாக இருந்து, இளைஞர்களிடம் உற்சாகத்தை புகுத்த வேண்டுமேயன்றி, வாழ்க்கையை எடுத்து விடக் கூடிய சில பொருட்களால் அல்ல. நாம் வாழ்க்கையை இப்புவியில் கொண்டாட்டமாக ஆக்க வேண்டுமேயன்றி, முரண்பாடு மற்றும் சர்ச்சைகளை குறிக்கோளாக வைக்ககூடாது. 

பாருங்கள், நமக்கு வரும் கெட்ட எண்ணங்களை எவ்வாறு விரட்டி அடிக்க வேண்டும் என்று வீட்டிலேயோ அல்லது பள்ளியிலோ யாருமே சொல்லி தருவதில்லை.கெட்ட எண்ணங்கள் வருவது சகஜம். விரக்தி,கோபம்,பொறாமை,பேராசை மற்றும் அனைத்தையும் மக்கள் உணர்கிறார்கள்.அதை எப்படி விரட்டுவது என்று யாரும் சொல்லி தருவதில்லை. வாழும் கலையின் தன்னார்வ தொண்டர்கள் கேரளாவிலும், மற்ற பகுதியிலும் உலகத்திலும் மகத்தான சேவை செய்து வருவதை நான் பாராட்டுகிறேன். ஒருவரிடம் உள்ள கெட்ட எண்ணங்களை எவ்வாறு விரட்டிவது,கையாள்வது என்பதை இவர்கள் சொல்லி கொடுத்து அதை நல்ல எண்ணங்களாக அதாவது அன்பு, கருணை மற்றும் சார்ந்துள்ள உணர்வாக மாறுவதை காணலாம்.

இன்று காலை, கேரளாவில் உள்ள சிறிய நகரத்திற்கு சென்றேன். அங்கு “குருதேவ், நாங்கள் முற்றிலும் மாறிவிட்டோம்” என்று கூடியிருந்த இளைஞர்கள் சொன்னார்கள். நாங்கள் குடி பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தோம், வாழும் கலை ஆசிரியர் வந்து எங்களுக்கு சொல்லி கொடுத்தார். நாங்கள் இப்பொழுது மகிழ்ச்சியாக உள்ளோம். எங்களது வாழ்க்கை முற்றிலும் மாறி விட்டது.குடி பழக்கத்திலிருந்து எவ்வாறு வெளியில் வருவது என்று தெரியாமல் இருந்தோம், ஆனால் இப்பொழுது நானும், என் குடும்பமும் பாதுகாக்கபட்டது என்று சொல்லி அவர் கண்களில் கண்ணீருடன், அவரது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

வாழும் கலை உட்பட இந்த மாதிரியான சேவைகளை துவக்க நான் ஊக்குவிப்பேன். ஏனென்றால், நீங்கள் முன் மாதிரியாக இருந்து, யாராலும் செய்ய முடியாத செயலை செய்யமுடியும். இது மாதிரியான குடி மற்றும் போதை பழக்கத்திற்கு செல்லவிடாமல்,இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பத்திரிக்கையாளர்கள் கூட செயல்படவேன்டும். இந்த ஒரு சில வார்த்தைகளுடன் முடித்துக்கொண்டு, அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். பிரகடனத்தை இப்பொழுது வாசிக்கிறேன். மிக அனுபவம் உள்ளோர் பலர், அவர்களது நேரத்தை செலவிட்டு இந்த பிரகடனத்தை தயார் செய்து உள்ளார்கள். 7 பிரகடனம் உள்ளது.

1.வகையான வன்முறைகளின் தாக்கம் பற்றியும்,பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை பற்றியும் தன்னார்வ தொண்டர்களின் பிணைப்பின் மூலம் நம் சமூகத்தில் அதிக விழிப்புணர்வை எற்படுத்த வேண்டும். நாம் வன்முறைக்கு கண்டனம் தெரிவித்து குரல் எழுப்ப வேண்டும் மற்றும் வன்முறை மறுப்பு, நீங்குதல் சட்டத்தை ஆதரிக்கமாட்டோம்.

எந்த விதமான வன்முறையையும் நியாயப்படுத்த மாட்டோம். சில நேரங்களில் மற்றவர்களுக்கு வன்முறை செய்து பாடம் கற்பிக்க எண்ணூகிறோம். நீ யார் மற்றவர்களுக்கு பாடம் கற்பிக்க ? தண்டனை தருவதலோ,வன்முறையாலோ பாடம் கற்பிக்க முடியாது.அன்பாலும், கருணையாலும் தான் பாடம் கற்பிக்க முடியும். 3.மதத்தின் கருத்துக்களின் உதவி கொண்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளை மரியாதையாகவும் அவர்களது உரிமைகளையும் நிலைபடுத்த வேண்டும்.

எனக்கு தெரிந்தமட்டில்,எல்லா மதத்திலும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைக்கு ஆதரவாக தான் உள்ளார்கள். சமூகத்தில் உள்ள நலிந்தவர்களுக்கு பின் நின்று உதவுகிறார்கள். அவர்களை நலிந்தவர்கள் என்று கூட சொல்லக்கூடாது. பெண்கள் முன் காலத்தில் நலிந்தவர்கள் என்று சொன்னார்கள். இல்லை, பெண்களையும், குழந்தைகளையும் ஆதரித்து மதத்தின் கருத்துக்களின் உதவி கொண்டு அவர்களது உரிமைகளாகிய கல்வி மற்றும் உடல் ஆரோக்கியம் நிலைகளை உயர்த்த வேண்டும்.

4.எல்லா விதமான வன்முறைகளுக்கு எதிராக எப்படி நடந்து கொள்வது பற்றி குழந்தைகளுக்கு , பெற்றோர்களுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு முக்கிய பயற்சி தரும் கட்டாயத்தில் உள்ளோம். 
குழந்தைகள் நம் ஜாதியோ, பிற ஜாதியோ அனைவரும் ஒன்று தான் மற்றும் அவர்களை நம்முள் ஒருவராக வைத்திருக்கவேண்டும். அவர்களை வன்முறையிலிருந்து தடுப்பதாலும், படிப்பாலும், சரியாக வழி நடத்துவதாலும் எல்லோரையும் நம்முள் ஒருவராக நடக்க வைக்க முடியும்.

இன்றைய நிலையில், குழந்தைகள் வன்முறை விளையாட்டுகளை நிறைய பார்க்கிறார்கள். இந்த மாதிரியான வன்முறைகளை திரை உலகில் பார்த்து, நிஜ உலகித்திற்கு வரும்போது அவர்களுக்கு வித்தியாசம் தெரிவதில்லை. அமெரிக்காவில் மளிகை கடைகளை விட துப்பாக்கி கடைகளை தான் அதிகம் சொல்கிறார்கள் என்று கேள்விபட்டுள்ளேன். மக்களுக்கு அங்கு பயற்சி எடுக்கும் போது அவர்கள் ஒவ்வொரு வன்முறை செயலுக்கும் 1 பில்லியன் அகிம்சை செயல் செய்வதாக உறுதி மொழி எடுத்தனர். அங்கு ஒரு வருடத்தில் 1 மில்லியன் வன்முறை செயல் நடக்கிறது. அவர்கள் 1000 மடங்கு அகிம்சை செயல் செய்வதாக உறுதிமொழி எடுத்தனர். வன்முறையை, வன்முறை அற்ற செயல்களால் எதிர் கொள்ளலாம். நாம் இந்தியாவில் 100 மில்லியன் வன்முறை அற்ற செயல்கள் செய்ய வேண்டியுள்ளது. 

5.நாம் மதங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு உறுதி, மற்றும் நாம் வன்முறையை தடுப்பதை பற்றி பேச வேண்டும் மற்றும் மனிதர்களுக்கு குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை தடுத்து நிறுத்துவதில், மத சமூகங்கள் மத்தியில் ஒற்றுமைகளை பயன்படுத்தி  செயல்முறைகள், அனுபவங்கள் மற்றும் நடைமுறையில்  ஊக்குவித்து வளர்ச்சி அடைய செய்ய வேண்டும்.

6. வன்முறையால் பாதிக்கபட்டவர்களுக்கு சேவைகள் அளிப்பதற்கும், அவர்களுக்கு தேவையான சட்டங்களை நிலைநாட்டி ஆதரவு செய்ய அரசாங்கத்தை நாம் கேட்டு கொள்கிறோம்.

7. வன்முறையால் பாதிக்கபட்டவர்களுக்கு விரைவில் நீதி வழங்க அரசாங்கத்தை நாம் கேட்டு கொள்கிறோம். இன்றிலிருந்து ஒரு வருடத்தில், எல்லா மதத்தலைவர்களும் ஒன்று கூடி நாம் சாதித்ததை பகிர்ந்து கொள்ள வேண்டும். அனைவரும் இந்த ஒரு வருடத்தில் என்ன செய்ய முடியும், ஏனென்றால், நம்பிக்கை பற்றியது மட்டும் அல்ல – சமுதாயத்தில் செய்ய வேண்டியது மற்றும் நம்பிக்கையும்,செயல்பாடும் ஒருக்கிணைத்து இருக்கும்போது ஆச்சரியம் நிகழ்வதை காணலாம். இந்த முக்கியமான காரியத்தை முன்னுரிமை கொடுத்து சமுதாயத்திற்க்கும், கடவுளுக்கும் தொண்டு செய்ய எல்லா மதத் தலைவர்களையும் நான் அழைக்கிறேன்.கடவுள் நம் எல்லோரையும் ஆசீர்வதிக்கட்டும். ஓம், சாந்தி,சாந்தி,சாந்தி.