யோகாவின் மூலம் அதிகார சக்தி

செவ்வாய்கிழமை,

21 ஏப்ரல் 2015, பிரஸ்ஸல்ஸ் பெல்ஜியம்



(யோகாபாதை என்னும் இடுகையின் தொடர்ச்சி)

என் வாழ்க்கையில் நான் இது வரையில் யோகா செய்ததே இல்லை. யோகா என்பது என்ன? அது தியானமா? பலவிதமான உடல் தோற்றங்களா? உள்ளே நடைபெறுபவை மோதல் தீர்மானம் என்ற வடிவத்தின், மனஅமைதி கொடுக்கும் விளைவுக ஏற்படுத்துவதற்கு அறிவியல் ரீதியான தொடர்புகள் யாவை?

முதலாவதாக நீங்கள் வாழ்க்கையில் யோகாவே செய்ததில்லை என்னும் கூற்றினை நான் மறுக்கின்றேன். நீங்கள் குழந்தையாக இருந்தபோது செய்திருக்கின்றீர்கள். உங்களுக்குத் தெரிந்திருக்காது. இந்தப் பூமியில் யோகா செய்யாமல் ஒரு குழந்தை கூட வளர்ந்ததில்லை.
குழந்தைகள் தூங்கும் போது அவை சின்முத்திரையுடனேயே உறங்குகின்றன. உலகின் எந்தப் பகுதியிலும், குழந்தைகள் படுத்துக் கொண்டிருக்கும் போது, முதலில் கால்களையே தூக்குகின்றன. பின்னர் வயிற்றைத் தூக்குகின்றன, பின்னர் தோள்களை உயர்த்த முயற்சிக்கின்றன. இந்த பூமியில் ஓரளவுக்கு ஒவ்வொரு குழந்தையும் ஆசனங்களை செய்கின்றன. அடுத்தது, மூச்சுவிடும் முறை. 

நாம் மூச்சு விடும் முறையிலிருந்து குழந்தைகள் மூச்சு விடும் முறை வேறுபட்டது. ஒரு குழந்தையின் மனம் அழுத்தமற்றது, சந்தோஷமானது, அனைத்து யோகா அறிவியலும் குழந்தைகளிடம் உள்ளன, நாம் அனைவருமே யோகிகளாக இருந்திருக்கின்றோம். நாம் நமது வேர்களையே பின்னோக்கிக் காண்கின்றோம். யோகாவிற்கு எட்டுக் கால்கள் உள்ளன. எட்டுப் படிகள் உள்ளன. அவற்றில் ஒன்று உடல் தோற்றங்கள். மைய போதனை என்பது சாந்தமான மன நிலை. “ மத்வம் யோகா உச்சயதே”-யோகா மனதில் சமநிலையை ஏற்படுத்துகிறது. நீங்கள் நடவடிக்கை ஈடுபடும்போதும்,என்ன கூறுகின்றீர்கள், என்ன செய்கின்றீர்கள் என்னும் நெறிகளுடன் இருப்பது உங்களை ஒரு யோகியாக்குகின்றது.

முறையான தர்க்கப் புரிதலே அறிவியல் ஆகும். அந்த கருத்தில், யோகா ஒரு அறிவியல். முறையான புரிதல் இது என்ன என்பதை அறிந்து கொள்ளுதல் அறிவியல். நான் யார் என்று அறிந்து கொள்வது ஆன்மீகம்.

நான் யோகா பயிற்சி செய்ததில்லை, ஆனால் குருக்கள் மற்றும் யோகிகளின் இளைப்பாறிய நிலையினைக் கண்டு ஈர்க்கப்பட்டிருக்கின்றேன். ஒரு கத்தோலிக்கர் என்னும் முறையில்,மூத்த மத குருமார்கள், தலைவர்கள், யோகா இந்துமதம் மற்றும் (இயற்கை யாவையும் இறையுருவே கடவுள் அனைத்திலும் உளதாய் இருக்கிறார்)என்னும் கோட்பாடு ஆகியவற்றின்  மூலப்பொருளை கொண்டது) , அது உடல் அம்சத்தில் முற்றிலும் ஒருமுகப்படுத்தப்பட்ட ஒன்றாகையால் அது கிறிஸ்தவப் பிரார்த்தனையை சிதைத்துவிட கூடும். ஆகவே கிறிஸ்தவர்களின் ஆன்மீகத்திற்கு அது சரியான வழியல்ல என்று கூறுகின்றார்கள். இதற்கு உங்கள்  கருத்து என்ன?  ஆழ்ந்த கிறிஸ்தவ மார்க்கத்தில் இருப்பவருக்கு யோகா ஏற்றதாக இருக்குமா?

சீன உணவுகளை உண்பதால் நாம் சீனர்கள் ஆவதில்லை. பீத்தோவான் இசையைக் கேட்பதால் ஜெர்மானியர் ஆவதில்லை.உலகின் எப்பகுதியிலும் உள்ள உணவை, இசையை, தொழில்நுட்பத்தை ஏற்கும் போது உங்கள் சமய நம்பிக்கையில் குறிக்கிடாமல் மன அமைதியினை ஏற்படுத்தும் ஞானத்தை ஏன் தனிப்படுத்தி பார்க்க வேண்டும்? இதுவே ஏன் கேள்வி. யோகா சந்தேகமில்லாமல் ஹிந்து வேர்களை உடையது. உண்மையில் ஹிந்து சமயம் என்பதே ஒரு வாழ்வு முறையாகும். பதஞ்சலி பல கடவுள்களை பற்றியோ பன்தீயிசம் (pantheism) என்பதைப்  பற்றியோ எதுவுமே கூறவில்லை.உடல், மனம், மூச்சு மற்றும் உயிர் இவற்றைக் கவனியுங்கள் என்றும் மட்டுமே கூறுகிறார். நமது பாரம்பரியத்துடன் முரண் படாத வரையில் மூலம் எதுவாயினும் ஞானத்தை நாம் வரவேற்க வேண்டும்.

வணிகமயமாக்கலின் காரணமாக யோகா அதன் மூல நோக்கமான ஆன்மீகம் என்பதை இழந்து விட்டதே?

வணிகமயமாக்குதல் என்பது மக்களைப் பொறுத்த விஷயம், யோகாவினைப் பொறுத்தது அல்ல. எங்கெல்லாம் மக்கள் இருக்கின்றார்களோ அங்கெல்லாம் ஏற்பாடுகள் செய்வதன் பொருட்டு வணிகம் ஒரு பகுதியாகின்றது. ஆனால் பணம் இல்லாததால் மக்களுக்கு யோகா மறுக்கப் படுமானால் அது தவறு என்றே கூறுவேன்.

என்னுடைய யோகா ஆசிரியர், " உனக்கு என்ன நடக்கிறதோ அது உனது உள் மன நிலையைப் பிரதிபலிக்கின்றது" என்று கூறினார். என்னுடைய கேள்வி என்னவென்றால், ஒரு குழு நிலைக்கும் இதே தத்துவம் பொருந்துமா? சில நாடுகளில் நடைபெறும் நிகழ்வுகள் அந்நாடுகளுக்குள் இருப்பதை பிரதிபலிக்கின்றனவா?

ஆம். சமுதாயத்தை நாம் பிரதிபலிக்கின்றோம், சமுதாயம் நம்மைப் பிரதிபலிக்கின்றது. ஒரு பரந்த கண்ணோட்டத்தில், ஆம் அது உண்மை தான். ஆனால் பதட்டம் கூடும்போது குழு நிலை பயம் தோன்றுகிறது. கும்பல் உளவியலை மக்கள் என்ன உணர்கிறார்கள் என்பதை ஒரு தனிநபரின்  பிரதிபலிப்பு  மூலம் மிகவும் ஒப்பிடக்கூடும். இது  சரியான  கல்வி மூலம் தீர்க்கப்பட முடியும் என்று நான் நம்புகிறேன்.

மூன்று மாதங்கள் முதல் மூன்று வயது வரையில், ஒரு குழந்தை சமுதாய அமைப்புக்களில் நிபந்தனைப் படுவதில்லை ஏனெனில் அது  இயற்கையாகவே இருக்கின்றது. எவ்வாறு நாம் நிபந்தனைகளிளிருந்து விடுபடுவது?

மோதல்களின் மூல காரணத்திற்கு சென்றால், அழுத்தம், நம்பிக்கையின்மை பிறரைப் பற்றிய பயம் ஆகியவற்றையே அறிவீர்கள். யோகா இவையனைத்தையும் தவிர்க்க உதவுகின்றது. பிறரைப் பற்றிய பயம் மறைகின்றது, ஏனெனில் பரந்த விழிப்புணர்வு பரந்த மெய்யுணர்வு இவற்றினை அடைகின்றீர்கள். ஒவ்வொருவரும் உங்களில் ஒரு பகுதி நீங்களும் ஒவ்வொருவரின் ஒரு பகுதி என்று உணர்கின்றீர்கள். ஒருவரது அடையாளத்தினை மற்றும் இருப்பினைத் தொலைத்து விடும் பயம் அகன்று விடுகிறது. மக்களின் மனங்களிலுள்ள இத்தகைய பயன்களை அகற்றுவதற்கு யோகாவே சிறந்த வழி என்று நான் கருதுகிறேன்.

தனக்கும் பிறருக்கும் பொறுப்பானவனாக ஆக எந்தெந்த குணங்களை யோகா வளர்க்கும்?

இப்போது தான் அதை விவரித்தேன். யோகா நிச்சயம் உங்களை அதிக பொறுப்புள்ளவராக, ஆகும். ஏனெனில் அது அதிக ஆற்றலையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும். நீங்கள் களைப்பாகவும் அழுத்தத்துடனும் இருக்கும்போது பொறுப்பேற்றுக் கொள்ள விரும்புவதில்லை. ஆனால் இந்த இரண்டு பிரச்சினைகளும் அகன்று விடும் போது அதிக உற்சாகமும் ஆற்றலும் ஏற்படும் போது நிச்சயமாக நீங்கள் லேசான உணர்வுடன் அதிக பொறுப்பேற்றுக் கொள்வீர்கள்.