"பாலி" யில் பகவத் கீதையின் சுருக்கம் - இரண்டாம் நாள்

ஏப்ரல் 3, 2015



("பாலி" யில் பகவத் கீதையின் சுருக்கம் - முதல் நாளின் தொடர்ச்சி)

நான் இப்போது உங்களுக்கு தரப்போகும் ஞானத்தை தெரிந்து கொண்ட பின்பு உங்களுக்கு வேறு எந்த ஞானமும் தெரிய வேண்டியதில்லை அதாவது உங்களுடைய தேடித்திரியும் பயணம் முடிவைகிறது. ஏக்கம் எப்போதுமே முடிவுறக்கூடாது. ஏக்கம் முடிவுற்றால் அன்பும் முடிந்து விடும். அதனால் தான் ஏக்கமும் அன்பும் எல்லையற்றவை. ஆனால் நீங்கள் நன்கு தெரிந்திருப்பவரிடம்  நிலைப்பட்டிருக்கும் போது நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியது முடிவுறுகிறது.  தெரிந்து  கொள்ள வேண்டிய இலக்கும் நன்கு தெரிந்தவரும் ஒன்று சேரும்போது, அங்கு மேலே தெரிந்து கொள்ள வேண்டியது எதுவும் இல்லை. தெரிந்து கொள்ள வேண்டியது முடிவுறுகிறது. 

தெரிந்து கொள்வது என்பது பொருளுக்கும், இலக்குக்கும் இடையே உள்ள தூரமே. அடிக்கடி மக்கள் கடவுளை ஒரு தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு இலக்காகக் கொள்கிறார்கள். கடவுளைத் தெரிந்து கொள்ளவும் முயற்சிக்கிறார்கள். கடவுள் தெரிந்துகொள்ளப்பட வேண்டிய இலக்கே அல்ல!! ஏனென்றால் அவரே நன்கு தெரிந்தவரவார். அதுவே அறிவியலும், ஆன்மீகம். தெரிந்து கொள்ளப்பட வேண்டிய இலக்கு மற்றும் தெரிந்தவர் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு குவாண்டம் இயற்பியலில் அகற்றப்பட்டுள்ளது.கிருஷ்ண பகவான் சரியாக இதைத்தான் கூறியுள்ளார். இலக்கும் இலக்கின் தரமும் பிரிக்க இயலாதவை என்று பார்த்தோம். எனவே பகவான் கிருஷ்ணர் "நான் திரவத்திற்குள் திரவத்தன்மை கொண்டவன்" என்றும், இந்த நிலத்தில் நறுமணம் மிக்கவன் என்றும், வலிமையின் பலம் என்றும் கூறினார்.

7.11
பலம் பலவதாம் சாஹம் காமராகவிவர்ஜிதம்
தர்மாவிருத்தோ பூதேஷு காமோ  'ஸ்மி பரதர்ஷப

விளையாட்டுத் துறையில் உங்களுடைய இயல்பான பலமே கௌரவிக்கப்படும் என்பது உங்களுக்கு தெரியும். நீங்கள் ஊக்கமருந்தின் மூலமாக உங்களுடைய செயல்திறனை அதிகரிக்க முயன்றீர்கள் என்றால், உங்களுக்கு பரிசு கிடைக்காது, விளையாட்டில் இருந்தும் துரத்தப்படுவீர்கள்.ஏன் அவ்வாறு செய்கிறார்கள்? ஊக்கமருந்துகள் எடுப்பது இயல்பான விதிமுறைகளுக்கு முரணானது. இது மிகவும் நுண்மையானது என்பதனால் கிருஷ்ண பகவான் இங்கே மிகவும் ஜாக்கிரதையாக இருக்கின்றார். உங்களுடைய பலம் இயல்பான பலம் என்றால், அப்போது அது நான். ஆனால் உங்களுடைய பலம் ஊக்க மருந்தினால் ஏற்பட்டதென்றால், அது நானல்ல. வெறுப்பு பயம் கோபம் போன்றவற்றால் உங்களுக்கு பலம் ஏற்படும் என்றால் அது நானல்ல, ஏனென்றால் அது இயல்பான அல்லது தெய்வீகமான பலமல்ல. மோசடியாக உருவாக்கப்பட்ட பலம். நானல்ல.  ஆனால் எந்த ஒரு பலம் இயல்பாகவே வெளிப்படுகிறதோ, அவ்வாறு இயல்பாக வெளிப்படும்போது அழகு பெறுகின்றதோ அதுவே நான் என்று சொல்லுவதன் மூலமாக அந்த பாரபட்சத்தை அறிய வைக்கிறார். 

இந்த முழு படைப்பும் ஆசையின் மூலமாக உருவாக்கப்படுகிறது, உந்துதல் பெறுகிறது அல்லது நிலைத்து நிறுத்தப்படுகிறது ஆசை தான் இந்த படைப்பினை நிலைக்கச் செய்கின்றது. இல்லையா? இதுவே இயல்பான மறு உற்பத்தி செய்யும் ஆசை, உயிர் பிழைக்கும் ஆசை, மற்றும் வளரும் ஆசை. உங்களுக்கு பசியோ அல்லது சாப்பிட வேண்டும் என்னும் ஆசையோ இல்லையென்றால் அங்கே உயிர் வாழ்தல் இருக்காது. பறவைகளுக்கு பறக்க வேண்டும் என்னும் விருப்பம் இல்லையென்றால், வண்ணத்து பூச்சிகளுக்கு மகரந்த சேர்க்கையை ஏற்படுத்தும் விருப்பம் இல்லையென்றால், பின் இந்த படைப்பே இறந்துவிடும். இந்த படைப்பின் ஒவ்வொரு சிறு செயலிலும் ஆசை உள்ளது மற்றும் இந்த படைப்பு செயல்கள் நிறைந்தது மேலும் இந்த படைப்பின் பல நிலைகளிலும் செயல்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆசை இந்த படைப்பின் மற்றும் வாழ்வாதாரத்தின் மூலம். மேலும் அது தர்மத்துக்கோ இயற்கையின் நியதிக்கோ எதிரானதல்ல.    

7.12
யே சைவ சாத்விகா பாவா ராஜசாஸ் தாமஸாச ச யே
மத்த ஏவேதி தான்வித்தி ந த்வஹம் தேஷு தே மயி

இந்த உலகம் சாத்விகம், ரஜோ மற்றும் தமோ குணங்களால் ஆகியது. மேலும் அவை அனைத்தும் எனது சக்தியால் உண்டாக்கப்பட்டவை. அவை அனைத்தும் எனக்குள் ஒரு பகுதியே. நான் அவைகளுக்குள் இல்லை. அவை என்னை கட்டுப்படுத்த முடியாது, இருப்பினும் என்னுள்ளிருந்து வந்தவை. போதை மருந்துகளுக்கு அடிமையான ஒருவர் மருந்துகளின் ஆதிக்கத்தில் உள்ளதால், தான் உதவியற்ற நிலையில் இருப்பதாகவே நினைப்பார். அவருக்கு தான் என்னும் உணர்வோ அல்லது ஞானமோ கிடையாது. அவர்களுடனே தொடர்பு கொண்டிருக்க மாட்டார்கள். அந்த மாதிரியானவர்களுக்கு பொதுவாக, என்ன சொல்லுவீர்கள் என்றால்" அவர் சுயநினைவிலேயே இல்லை, அவர் அவருடனேயே தொடர்பு கொண்டிருக்க வில்லை" என்று கூறுவீர்கள். ஆகவே கிருஷ்ணர் " நான் மூன்று வகையான உணர்வுகளை விட அதிக சக்தி வாய்ந்தவன்" என்று சொல்லுகிறார்.
  
7.13
த்ரிபிர் குணமயைர்பாவைரேபி: சர்வமிதம் ஜகத்
மோஹிதம் நாபிஜானாதி மாமேப்ய: பரமவ்யயம்

கோடிக்கானவர்கள் இந்த கிரகத்தில் இருந்தாலும், அவர்களில் ஒரு சிலரே சரியான பாதையில் நடக்கிறார்கள். அவ்வாறு சரியாக நடப்பவர்களிலும் ஒரு சிலருக்கே இது தெரிய வருகிறது. சில விஞ்ஞானிகளும் சில கலைஞர்களும் மட்டுமே மிகவும் மேம்பட்டவர்கள் ஆகிறார்கள். அதைப் போலவே இந்த கிரகத்தில் புத்திசாலிகள் ஆகின்றனர். ஒரு சிலராலேயே இதை விளங்கிக் கொள்கிறார்கள். இதில் சிக்கிக் கொண்ட (மூன்று குணங்கள்) பெரும்பாலான மக்களுக்கு என்னை தெரியாது ஏனென்றால் இந்த நான் நிரந்தரமானவன்.  

7.14
தைவி ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா
மாமேவ யே பிரபத்யன்தே மாயாமேதாம் தரந்தி தே

இந்த உலகம் ஒரு வகையான மாயை, ஆனால் அதை நிந்திக்க வேண்டாம். நிறைய மக்கள் " இது ஒரு குப்பை! இது நல்லதல்ல!" என்று கூறி இந்த உலகை நிந்திக்கிறார்கள். "இது அனைத்துமே ஒரு மாயை, இது சரி அல்ல! நான் இதை வீட்டு ஓடிவிட வேண்டும். எனக்குள் ஆழ்ந்து செல்ல வேண்டும்." என்று கூறுவது மனதின் இயல்பு. " ஒரு நிமிஷம் பொறுங்கள், நீங்கள் எதை ஒரு மாயை அல்லது அறியாமை என்று கருதுகிறீர்களோ, அதுவும் என்னுடையதே." என்று கிருஷ்ணர்   கூறுகிறார். பின்பு நீங்கள்  ஒ சரி!  என்று ஒரு பெருமூச்சுடன் நிவாரணம் பெறலாம். இப்போது பார்த்தால் உங்கள் மனம் சண்டையில் இருந்து நிவாரணம் பெறுகிறது. மனம் எப்போதுமே எதையாவது செய்ய விரும்புகிறது. அவ்வாறு செய்யும்போது அது நடைமுறையில்  இருந்து விலகுகிறது. ஆகவே குரு உங்களை தந்திரமாக, செய்வதில் இருந்து எளிதாக்குகிறார், வெறுமனே தெரிந்துகொள்ள திரும்ப செய்கிறார். செய்ய வேண்டும் என்னும் போக்கு ஒய்வு பெரும் நிலையில், இரட்டை அல்லாத ஒரு தத்துவம்  நடைபெறும்.

7.15
நமாம் துஷ்க்ருதினோ மூடா: ப்ரபத்யந்தே நராதமா:
மாயயாபஹ்ருதக்ஞானா  ஆசூரம் பாவமாஸ்ரிதா:

தீய செயல்களிலும், தவறான செயல்களிலும், கொடிய செயல்களிலும் ஈடுபட்டுள்ள ஒருவன் என்னை பார்க்கவோ என்னிடம் வரவோ முடியாது. மேலும் கொடிய செயல்களில் ஈடுபட்டுள்ள யாரேனும் ஒருவருக்கு என்னை தெரிந்திருக்கவே முடியாது. இது அவ்வளவு எளிமையானது. 
நடக்கின்ற அனைத்திற்கும் இறுதியான காரணங்களை பார்க்காமல் நாம் நிகழ்வுகளில் பிடிபட்டு விடுகிறோம். காரணங்களை அறிந்து வியப்புராமல், விளைவுகள மட்டுமே ஆராய்ந்து கொண்டிருந்தால் நீங்கள் அறியாமையிலேயே இருப்பீர்கள். ஆகவே காரணங்கள் அனைத்திற்குமான காரணம் உங்களுக்குள்ளே தான் உள்ளது. அதுவே நான் ஆவேன். தீங்கு எதுவும் என்னை அடையாளம் கண்டு கொள்ளுவதில்லை. அவைகள் எமாற்றப்பட்டு விடும்.

7.16
சதுர்விதா பஜந்தேமாம் ஜனா: சூக்ருதினோ 'ர்ஜூன
ஆர்த்தோ ஜிக்ஞாசூரர்தார்த்தீ ஞானி ச பரதர்ஷப

ஆன்மீக பாதையை பின்பற்றுபவர்களும், யோகா மற்றும் தியான பயிற்சிகளை துவங்குபவர்களும்,  உயர்வானதை  பற்றி நம்பிக்கை கொள்ள துவங்குபவர்களும்  நான்கு விதமானவர்.  

1. பரிதாபகரமானவர்கள்
2.தெரிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளவர்கள்.- அவர்களுடைய இருப்பின் இறுதியான காரணத்தை அறியும் வரை நிறுத்தாதவர்கள்.
3.அர்த்தார்த்தி: அவர்களுடைய விருப்பங்கள் பூர்த்தி அடைய இறைவனை நாடுபவர்கள்.
4. புத்திசாலிகள்.அவர்களுக்கு என்னை தெரியும். இவர்கள் அனைவருமே, பரிதாபமானவர்கள் கூட,  நல்ல தகுதிகள் உள்ளவர்கள் .ஆன்னல் புத்திசாலியானவர் எனக்கு மிகவும் நெருங்கியவர், ஏனென்றால் நான் அவருள் இருக்கிறேன் அவர் என்னுள் இருக்கிறார். நாங்கள் ஒன்றே.  

7.17
தேஷாம் ஞானி நித்யயுக்த ஏகபக்திர் விசிஷ்யதே
ப்ரியோஹி ஞானினோ த்யர்த்தம் அஹம் ச மம ப்ரிய
உதாரா: சர்வ ஏவைதே ஞானி த்வாத்மைவ மே மதம்

பிரக்ஞையும் பிரபஞ்சமும் ஞானமுள்ளவர்களை நேசிக்கின்றன மற்றும் ஞானமுள்ளவர்களும் இந்த பிரபஞ்சத்தை நேசிக்கின்றனர். இந்த பிரபஞ்சம் ஒரு விஷயத்தால் உருவாக்கப்பட்டது என்னும் விதத்தில் பார்ப்பது தான் சரியாக வேதாந்தம் என்பது. இதுவே அத்வைத சித்தி என்றும் அழைக்கப்படும், அத்வைதத்தை பற்றிய பூரண ஞானம். அதாவது இயற்கையின் நோக்கமும் உங்கள் நோக்கமும் ஒன்றாக இருப்பது. நீங்கள் இயற்கையுடன் ஒன்றி விடுகிறீர்கள்.அதுவே குரு என்பது. குரு ஒரு கண்ணாடியை போன்றவர், அவர் உங்களை பிரதிபலிக்கின்றார். காலத்தையும் இந்த பிரபஞ்சத்தையும் பிரதிபலிக்கின்றார்.

7.19
பாஹூனாம் ஜன்மனாமந்தே ஞானவான் மாம் ப்ரபத்யதே
வாசூதேவ சர்வமிதி ச மகாத்மா சூதுர்ல்ப

இதை அடைவது மிகவும் கடினம். பல பிறவிகளுக்குப் பிறகு, யாரோ ஒருவர் இந்த நிலையை அடைகிறார். அப்போது  அவருக்கு, அனைத்தும் வசுதேவரே, இந்த பிரபஞ்சம் முழுவதும் என்னில் ஒரு பகுதியே, அனைத்துமே தெய்வீகமானது மற்றும் உயிருடன் இருப்பது போன்ற கருத்துக்கள் புலன்படுகின்றன. இந்த அனுபவம் பல பிரவிகளுக்குப்பின்னரே கிடைக்கும். அந்த மாதிரியான ஒரு துறவியை காண்பது அபூர்வம்.