வாஸ்து சாஸ்திர அறிவியல்

புதன் கிழமை, 3 ஜூன் ,

பெங்களூரு, இந்தியா


(அன்பு என்றால் கொடுப்பது என்னும் இடுகையின்  தொடர்ச்சி)

வாஸ்து சாஸ்திரத்திற்கு  எவ்வளவு  முக்கியத்துவம்  அளிக்க  வேண்டும்?

வாஸ்து சாஸ்திரம் நிச்சயமாக அறிவியல்இந்த அறிவியல் பண்டையகாலத்தில், சிந்திக்கப் பெற்று வளர்க்கப்பட்டதுஇது வேதங்களின் ஒரு பகுதியாகும்இன்று அவை  நமக்கு முழுமையாக கிடைக்கப் பெறவில்லைஅவை பனை ஓலைகளில் எழுதப்பட்டு பண்டைய கால, பல்கலைக் கழகங்களில் மற்றும் நூலகங்களில் வைக்கப்பட்டிருந்தன. அவை (பனை ஓலைகள்) கரையான் மற்றும் எலிகளால் அழிக்கப்பட்டு விட்டன. இந்த சாஸ்திரத்தின் பெரும்பகுதி இப்போது முழுமையாக கிடைக்கக் கூடிய நிலையில் இல்லை. ஆதனால் தான் இக்காலத்தில், பலர் தன்னுடைய சொந்த வியாபாரக் குறியுடன் வாஸ்து  சாஸ்திரத்தினை  சந்தையில் விற்றுக் கொண்டிருக்கின்றனர்.

ஒன்றை  நினைவில் கொள்ளுங்கள்: வாஸ்து சரியில்லாத எந்தக் கட்டிடத்திலும்  எதிர் கொள்ளும் எந்த தோஷத்திற்கும் ஒரு மேலான அருள் உள்ளது, ஓம் நமசிவாயா என்னும் மந்திரத்தின் மூலம் தீர்வு காண்பதாகும்இந்த மந்திரத்தின் மூலம் அனைத்துப் பிரச்சினைகளும்  மற்றும் எதிர்மறைகளும் வீழ்ந்து விடும்சில வாஸ்து அடிப்படைகள் சுய விளக்கமுள்ளவை. உதாரணமாக சூரியன் கிழக்கில் உதிப்பதால்சூரிய ஒளி வீட்டிற்குள் வரும் விதமாக,  வீட்டின் முன்வாயில் கிழக்கு நோக்கி இருந்தால் நல்லது. கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி  முன்வாயில் இருக்கவேண்டும்முன்வாயில் தெற்கு நோக்கி இருக்கக் கூடாதுஏனெனில் பண்டைய காலத்தில் தெற்கில் சுடுகாடு இருக்கும்ஒவ்வொரு நகரின் தென்புறத்திலும் இறந்தவர் உடல்களை எரிக்கும் பெரிய சுடுகாடு இருந்திருக்கின்றதுஅந்தத் திசையிலிருந்து வரும் காற்று வீட்டினுள் புகாமல் இருப்பதன் பொருட்டு,  முன்வாயில் தெற்கு திசை நோக்கி வைக்கப்பட மாட்டாது.

இக்காலத்தில் அவ்வாறு இல்லை. சில நகரங்களில் கிழக்கு அல்லது வடக்கு திசையில் சுடுகாடு உள்ளது. அந்நிலையில் அவற்றை நோக்கி முன்வாயில் வைக்கக்கூடாதுரஷ்யாவின் உதாரணத்தை எடுத்துக் கொண்டால்,  அங்கு சூரியன் தெற்கில் உள்ளதால், அங்குள்ள வீடுகளின் முன்வாயில் தெற்கு திசை நோக்கியே இருக்கும், அப்போது தான் சூரிய ஒளி வீட்டிற்குள் வர முடியும். எனவே ரஷ்ய வீடுகளுக்கு வாஸ்து வேறு விதமானது. இந்தியாவின் வடகிழக்கில் கைலாய மலை உள்ளது. இது தூய்மையானதாகவும், புனிதமானதாகவும் கருதப்படுவதுடன், ஈசான எனும் தெய்வமும் அத்திசையில் இருப்பதாகக் கருதப்படுகின்றதுமுகம்மதியர்களுக்கு மெக்கா உள்ள திசை போன்றதாகும்.   

உலகெங்கும் முகம்மதியர்கள் மெக்கா இருக்கும் திசை நோக்கியே தங்களுடைய  பிரார்த்தனைகளை   செய்கின்றனர்இந்திய முகம்மதியர்கள் மேற்கு திசை நோக்கி நமாஸ் (புனித குரானைப் படித்தல்)  படிக்கின்றனர்லெபனான் மற்றும் ஜோர்டானில் உள்ள முகம்மதியர்கள் மெக்கா கிழக்கில் இருப்பதால் அத்திசை நோக்கிப் பிரார்த்தனை செய்கின்றனர்.

வாஸ்து சாஸ்திரத்தில் சூரியன் மற்றும் அதன் திசைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புரிதலுடன், ஆஸ்திரேலியா அல்லது தென்அமெரிக்க வில் பின்பற்றப்படும் வாஸ்து அங்கு சூரியனின் திசை காரணமாக முற்றிலும் மாறுபடும்எனவே இவற்றையெல்லாம் மனதில் கொண்டே வாஸ்து சாஸ்திர விதிகள் மற்றும் கோட்பாடுகள்  முறைப் படுத்தப்பட்டுள்ளனமற்றொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், பொது இடங்களுக்கான வாஸ்து,  ஒரு கோவில், கடை, அல்லது ஆஸ்ரமம் இவற்றுக்கான வாஸ்துவிலிருந்து  வேறுபட்டதுஇவ்வாறு தான் வாஸ்து சாஸ்திரம் கருத்தாக்கம் செய்யப்பட்டுள்ளது.  ஆனால் இந்த அறிவியல் பற்றிய உரை மூலம் மிகக் குறைவாகவே  நமக்கு  கிடைக்கப்  பெற்றிருக்கின்றதுஔரங்கசீப் காலத்தில், பல ஆவணங்கள் மற்றும் உரைகள் நலந்தா பல்கலைக்கழகத்தில் அழிந்தோ, தீக்கிரையாகியோ உள்ளன. ஔரங்கசீப் காலத்தில், ஆயிரக்கணக்கான ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள் வெட்ட வெளியில் தீக்கிரையாக்கப் பட்டு, அந்த தீ, ஆறுமாதங்கள் வரையில் எரிந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகின்றதுமீதமுள்ள புத்தகங்கள் கரையான் அரித்தோ, எலிகள் கடித்தோ அழிந்து விட்டனபழங்காலத்தில், அறிஞர்கள் மற்றும் பண்டிதர்கள்  தாராள மனப்பான்மை அற்றவர்களாக இருந்தனர். அறிவுச் செய்திகளை தங்களுடைய பரம்பரையைச் சேர்ந்த குழந்தைகளுக்கோ, சீடர்களுக்கோ மட்டுமே கற்பித்தனர். இத்தகைய குறுகிய மனப்பான்மையினால் எல்லோராலும் இச்செய்திகளை அறிந்து கொள்ளவோ அல்லது பகிர்ந்து கொள்ளவோ முடியவில்லை.

வாஸ்து, பல அறிவியல்களில் ஒன்று ஆகும். இதே போன்று தான் யோகாவும் என்பதைக் காணுங்கள். சுமார் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், யோகா அனைவருக்கும் கற்றுத் தரப்படவில்லை. யோகா பயில வேண்டுமெனில், ஓர் சிறப்பு மிக்க ஆசிரியரிடம் அல்லது யோகா வல்லுனரிடம் செல்ல வேண்டும். அக்காலத்தில் வீடுகளில் யோகப்பயிற்சி செய்யும் வழக்கம் இல்லை. ப்ராணாயாமம் கூட அக்காலத்தில் கற்றுத்தரப்படவில்லைஇங்கு ஐம்பது வயதிற்கு மேற்பட்ட பலர் அமர்ந்திருக்கின்றனர். அக்காலத்தில் இந்த அளவு சாதரணமாக யோகா கற்றுத்தரப் பட்டதா?  ஒரு குறிப்பிட்ட ஜாதி அல்லது பின்புலம் உள்ளவர்கள் மட்டுமே யோகா கற்றனர்யோகா ஆசிரியர்கள் அனைவருக்கும் வரவேற்பு அளித்ததில்லை. இந்தியாவின் இத்தகைய கடினமான வழக்கங்களால் நாம் விலைமதிப்பற்ற அறிவுச் செய்திகளை இழந்து விட்டோம். உபநயனம் (பூணூல் அணியும் சடங்கு) செய்யும்போது அதைச் செய்யும் பண்டிதர்களால் ஒரிரண்டு ப்ராணா யாம பயிற்சிகள் கற்றுத் தரப்படும். அவ்வளவு தான். அதற்குப் பின்னர் யாருக்கும் எதுவும் கற்றுத்தரப் படவில்லை.

பெண்கள் விஷயத்தில் இன்னமும் மோசம்.  அவர்களுக்கு ப்ராணா யாமம் அல்லது யோகா முற்றிலும் கற்றுத்தரப்படவே இல்லைஅக்காலத்தில் பெண்கள் யோகா செய்து யாரேனும் பார்த்திருக்கின்றீர்களா?   நாம் வாழும் கலை நிறுவனத்தைத் துவங்கிய போது, யோகா, மற்றும் ஞானச் செய்திகளுக்கான வாயிலை அனைவருக்கும் திறந்து விட்டோம். இதன் மூலம் பழங்கால கடினமான வழக்கொழிந்து போன நெறிகளை உடைத்தெறிந்தோம். பல ஆண்டுகளுக்குப் பின்னர் பெண்களும் யோகா மற்றும் ப்ராணாயாமம் பயிலும் திறனில், சரிசமமானவர்களே என்னும் ஆதரவினை உயர்த்தினோம்

பெண்களும் யோகா, ப்ராணாயாமம் ஆகியவற்றைப் பயிலும் இத்தனித்துவம் வாய்ந்த வாய்ப்பினை வாழும் கலை அளித்ததுஅக்காலத்தில், மிகக் குறைந்த அளவில் ஆசிரியர்கள் இப்பயிற்சியினை அளித்தனர். அதனால் தான் அது குறைந்த அளவு மக்களையே சென்றடைந்தது. ஆனால் அதைப் பற்றி அதிகமாகக் கவலைப்பட வேண்டாம். ஏனெனில், நாம் தியானத்தில் ஆழ்ந்து செல்லும் போது, அத்தியான நிலையில் நமக்கு என்னவெல்லாம் வருகின்றனவோ அவையே நமது முன்னேற்றத்திற்குத் தேவையான அனைத்தையும் கொண்டுள்ளது.

கடந்த வாரம், விஞ்ஞான பைரவா ( தியானம் மற்றும் சமாதி பற்றி, சிவபெருமானுக்கும் இறைவி பார்வதிக்கும் இடையே நடைபெற்ற ஒரு உரையாடல் என விளக்கும் பழமையான புனித திருமறை நூல்). நானும் இதற்கு முன்னர் படித்ததில்லை. அதைப் படித்த போது, அந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள  பல பயிற்சிகளை  நாம் ஏற்கனவே முது நிலை தியானப் பயிற்சியில் செய்து வருகிறோம் என்று அறிந்தேன். நமது முது நிலைத் தியானப் பயிற்சி  சரியானதே என்று ஒப்புதல் முத்திரை அளிப்பது போன்றிருக்கின்றது   என்று   கூறினேன்.

அதன் சாரம்- நாம் அந்தர்முகியாக - நமது மனம் உள்முகமாக அதன் ஆதாரத்தை நோக்கித் திரும்பும் போது அந்த ஆழ்ந்த நிலையில் என்ன உணர்தல் மலருகின்றதோ அதை முற்றிலும் ஏற்றுக் கொள்ளும் விதமாக அந்த திருமறை நூலில் கூறப் பட்டுள்ளது.  சற்றும் வேறுபாடு இல்லைஒரு உணர்ந்தறிந்த குருவின் வாய்மொழியும், திருமறை நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளவையும் ஒன்றேயாகும் என்று இந்தியாவில் ஒரு கூற்று உண்டு.  எந்த வித்தியாசமும் கிடையாது.  இந்த உண்மையான விஷயத்தை நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

குருதேவ், தங்களுடைய  பிறந்த தினத்தன்று நாங்கள் என்ன பரிசு தங்களுக்கு அளிக்கக் கூடும்? உங்களுக்கு ஏற்கனவே எல்லாமே இருக்கின்றது

எனக்கு பல ஞானத் தூண்கள் தேவைஉண்மையிலேயே ஞானம் அடைந்து அதிலேயே வாழ்ந்து, மேலும் மேலும் அதிகமான மக்களை இந்த ஞான மார்க்கத்திற்கு அழைத்து வர வேண்டும்ஸ்ரீ ஸ்ரீ பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக இருப்பது முதல் பல பணிகளை நீங்கள் செய்யலாம்.மனிதப் பண்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து, மிகச் சிறந்த பலகலைக்கழகத்தினை வளர்த்து வருகின்றோம். அந்த பல்கலைக்கழகம் இன்னும் வளர வேண்டும்பல் நூறு மக்களின் தேவைகளை  பூர்த்தி செய்ய வேண்டும். யோகா மற்றும் ஆயுர்வேத முறைகளை நாடெங்கிலும் பரப்ப நீங்கள் ஓர் பங்கு வகிக்கலாம். இது போன்ற பல சேவைத் திட்டங்கள் உள்ளன, அவற்றில் பங்கேற்கலாம் அல்லது ஆஸ்ரமத்தில் எதையேனும் மேம்படுத்த பங்கு வகிக்கலாம்உங்களுடைய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைக் குறிப்பிடலாம்.

குருதேவ் மேலும் மேலும் மக்கள் வாழும்கலைக் குடும்பத்திற்குள் வருவதால் நீங்கள் மிக அதிகமாக ஓய்வற்ற பணியில் ஈடுபட்டுள்ளீர்கள்முன்பெல்லாம்,  தாங்கள் தனிப்பட்ட பக்தர்களுடன் அதிக நேரம் செலவழிப்பதுண்டுஆனால் அது இப்போது அபூர்வமாகி  விட்டது.   தயவு செய்து எங்களுடன் சற்று நேரம் செலவிடுங்கள்

நான் உங்களுடன் செலவிடும் நேரத்தின் தரம் சற்றும் குறைய வில்லை. (சிரிப்பு) ஆம், செலவிடும் நேரத்தின் அளவு குறைந்துவிட்டது என்பது உண்மை.  நான் ஒருவரை ஒரே ஓர் நிமிடம் பார்த்தாலும் 100 சதவீதம் முழுமையாகவே அவருடன் இருக்கின்றேன். குழுவில் உங்களைப்  பார்த்தாலும் உங்களை 100 சதவீதம் காண்கின்றேன். ஆகவே அந்த நேரத்தின் தரத்தில்  நீங்கள் குறை காண முடியாதுஆனால் கால அளவு குறைந்து விட்டது என்று வேண்டுமானால் கூறலாம்அது எனது செயலார்களுக்குக் கூட குறைந்துவிட்டது. அவர்கள், "குருதேவ், பல பணிகள் உள்ளன.  நீங்கள் எங்களுக்கு அவற்றுக்கெல்லாம் நேரமே அளிப்பதில்லை" என்று கூறுகின்றனர். செயலகப் பணியாளர்கள் மிக அதிகமாக இக்குறையைக் கூறுபவர்கள்.

குருதேவ், கர்மா, நோய், வலி, முதுமை மற்றும்  மரணம் இவற்றின் காரணமாக நான் தெய்வத்தின் கைப்பொம்மை போன்று உணருகின்றேன். எனது சுதந்திரம் எங்கே?

 இந்த நோய், வலி, முதுமை, அல்லது மரணம் இவை எதுவுமே நீங்கள் அல்ல என்னும் ஆழ்ந்த புரிதல் ஏற்படும் நிலை தான் விடுதலைஇன்று நண்பகல் நாம் தியானம் செய்தோம். பலர் தங்களுடைய உடல் வலிகளிலிருந்து நிவாரணம் கண்டார்கள் அல்லவா?

பற்றற்று இருந்தால் , குடும்ப உறுப்பினர்கள் நாம் அறியாமை மற்றும் புறக்கணிப்பு இவற்றுடன் இருப்பதாகக் கருதுகின்றனர். இவ்விரண்டையும் வேறுபடுத்தும் வரையறை என்ன? எவ்வாறு இத்தகைய நிலையில் குடும்பத்தினருக்கு விடையளிப்பது?

நீங்கள் ஒவ்வொருவரின் கேள்விகளுக்கும் விடையளித்துக் கொண்டோ, அவர்களது கருத்துக்களுக்கு பதிலளித்துக் கொண்டோ இருக்க முடியாதுஉங்களுக்கு நீங்கள் உண்மையாகவும்அவர்கள் மீது ஆழ்ந்த அக்கறையுடனும் இருந்தால் போதுமானதுஎல்லா நேரங்களிலும் அனைவரையும் சந்தோஷப் படுத்த முடியாது. ஒரு சமயம், ஒருவர் செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார். அவரை  நோக்கி, வேறொருவர்,"ஏன் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார். உடனே அவர், " சரி ! நான் உட்கார்ந்து படிப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லையாநான் நின்று கொண்டே படிக்கிறேன்" என்று கூறினார்சற்று நேரம் பொறுத்து, வேறொருவர் அவரிடம், "ஏன் நின்று கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார். உடனே அவர்," ! நான் நிற்பது உங்களுக்குப் பிடிக்கவில்லையா ?  நடக்கத் துவங்குகிறேன்" என்று பதில் கூறினார். மூன்றாவதாக ஒருவர் "ஏன் நடந்து கொண்டே படிக்கிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு," நான் நடந்து கொண்டே படிப்பது உங்களுக்குப் பிடிக்க வில்லையா? இந்த நடைபாதை நடப்பதற்காக கட்டப்பட்டதல்லவா? சரி! நான் ஓடத் துவங்குகிறேன்" என்றார். அவர் ஓடிக் கொண்டிருக்கும் போது, நான்காமவர் " ஏன் ஓடுகிறீர்கள்?" என்று கேட்டார்.  உடனே, அடக்கடவுளே !   இந்த மக்கள் என்னை ஓடக்கூட விடமாட்டேன் என்கிறார்களே என்று அவர் அழத் துவங்கினார்.  அப்போது வேறொருவர் அங்கு வந்து, ஏன் அழுகிறீர்கள்?"  என்று கேட்டார். அதற்கு," மக்கள் என்னை உட்கார, நடக்க ஓட ஏன் அழக் கூட விடமாட்டேன் என்கிறார்களே , நான் என்ன செய்வேன்? என்று கூறினார். பிறருடைய ஆணைகளை ஏற்கத் துவங்கினால் வாழ்க்கை துன்பகரமாக ஆகி விடும். புரிகிறதா?

குருதேவ், நாங்கள் அடிக்கடி தவறு செய்கிறோம், அவ்வாறு செய்யும்போது நீங்கள் எங்களைத் தண்டிக்கிறீர்கள். ஆனால் அது தவறு என்றே நாங்கள் உணராத போது நாங்கள் என்ன செய்வது?

கவனியுங்கள்நான் யாரையும் தண்டிப்பதில்லை. அந்த விதமாக நான் எதுவுமே செய்வதில்லை. நீங்கள் செய்வதற்குப் பலனை நீங்கள் அனுபவிக்கின்றீர்கள்.. காரணமும் விளைவும்நீங்கள் அதிக உணவு உண்டால் நான் உங்களை தண்டிக்க மாட்டேன், வயிற்று வலி, அல்லது வயிற்றுப் போக்கு அல்லது மலச்சிக்கல் ஆகியவைதான் உங்களுக்கு ஏற்படும். அது   நீங்கள் உண்டதன் விளைவு. புரிகிறதா? உங்கள் தவறுகளிலிருந்து கற்றறிந்து முன்னேறுங்கள் என்று தான் நான் கூறுவேன்நடந்து முடிந்தவற்றை அடைகாக்காதீர்கள். கடந்து சென்றவற்றை எண்ணி அழுது கொண்டிருக்க யாருக்கு நேரம் இருக்கிறது? வருவதை எதிர்நோக்கி முன்னேறிச் செல்லுங்கள்.