யார் மகாத்மா?

ஜூன் 4, 2013

(அறியாமையே உண்மையான திருடன்" என்பதன் தொடர்ச்சி)

அடுத்த செய்யுளில் "உயர்ந்த ஆத்மாக்கள்  பந்தத்தில் சிக்கியுள்ளவைகள் அல்ல. (ஒரு பேயின் போக்கை போல).மகாத்மா என்பது தெய்வீக குணங்களை கொண்டது மற்றும் தெய்வீகத்தை நம்பியிருப்பது.

பகவான் கிருஷ்ணர் "உயர்ந்த ஆத்மாக்கள் நான் நித்தியமானவன்,இறவாதவன், நிரந்தரமானவன் என்பதை எப்போதுமே அறிந்திருப்பவர்கள், மேலும் இந்த விழிப்புணர்வு அவர்களை தொடர்ந்து பக்தியின் ஆனந்தத்தில் மூழ்க வைத்திருக்கும்.அவர்கள் பந்தத்தில் சிக்கிக் கொள்ளுவது இல்லை. மோகத்தை எப்படி விவரிப்பது? பந்தம் அல்லது மோகம் நீடித்து இருக்கும் சந்தோஷத்தை தருவது இல்லை ஆனால் சந்தோஷத்தை தருவேன் என்னும் ஒரு பொய்யான வாக்குறுதியையே தரும்.எது உங்களை ஆசைகாட்டி ஈர்க்கின்றதோ! எது உங்களுக்கு சந்தோஷத்தை தராமல் அதற்கு மாறாக மேலும் மேலும் துன்பத்தையே தருகின்றதோ! அதுவே மோகம்.

நான் உங்களுக்கு சிகரெட் பற்றி கூறியது போல புகைபிடிப்பது ஒரு நீடித்த ஆனந்தத்தை தருவது கிடையாது. ஆனால் நீங்கள் சிகரெட்  புகைப்பதை நிறுத்தினால் அது உங்களுக்கு அதிக வலியை தரும். மது பானங்கள் அருந்துவது உங்களுக்கு உண்மையான ஆனந்தத்தை தருவது இல்லை, ஆனால் அதை நிறுத்த முயற்சி செய்வது உங்களுக்கு மிகுந்த வலியை தரும். அது மோக கர்மா என்பது. அந்த மாதிரியான கர்மவினையில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆனந்தத்தை காணவே இயலாது, ஏனென்றால் அவர்கள் தெய்வீக போக்குகளை கைவிட்டு விடுகிறார்கள் பேயின் போக்குகளுக்குள் அடைக்கலம் ஆகிவிடுகிறார்கள்.

பகவான் கிருஷ்ணர் " மகாத்மாக்கள் அல்லது உயர்ந்த ஆத்மாக்கள் தொடர்ந்து என்னுடைய புகழை பாடுகின்றனர், ஒருமுகமாய் இருந்து என் மீது பக்தி கொண்டுள்ளனர்" என்று கூறுகிறார். யார் மகாத்மா?

இந்தியாவில் மகாத்மா, அனைவரும் மகாத்மா காந்தியை தான் நினைக்கின்றோம்  அல்லது நாம் முனிவர்களையோ புனிதமானவர்களையோ நினைவில் கொண்டு வருகின்றோம். ஆனால் யார் மகாத்மா?

மனம் மிகவும் நுட்பமானது. அறிவாற்றல் மனதை விட நுட்பமானது. தன்முனைப்பு அல்லது நான் என்னும் அகங்காரம் அறிவாற்றலை விட மிக நுட்பமானது மேலும் நுட்பமானதிலும் நுட்பமான இந்த நான் எனும் அகங்காரம் ஒருவரை தன்னுடைய விருப்பத்திற்கு நடனமாட வைக்கின்றது.   
ஒவ்வொருவரிடம் தன் முனைப்பு எனும் அகங்காரம் உள்ளது. அது சாத்வீகமான முனைப்பாகவும் இருக்கலாம் அல்லது தவறான முனைப்பாகவும் இருக்கலாம். தன் முனைப்பானது அழகானதாக இருக்கும் போது  அது, தன் முனைப்பை விட நுட்பமான  மஹத்தத்வா என்னும் கொள்கையை அடைகிறது. மஹத்தத்வா என்பது மிக நுட்பமான தன் முனைப்பை விட 100 மடங்கு நுட்பமானது என்று சொல்லப்படுகிறது.

மஹத்தத்வாவை அடைந்த ஒருவரே மகாத்மா என்று அழைக்கப்படுகிறார். ஆகவே மகாத்மா என்பவர் எவரையும் பாகுபடுத்திப் பார்க்காமல் அனைவரையும் அவரை சேர்ந்தவராக ஏற்றுக் கொண்டு செல்பவர் ஆவார். இந்த மஹத் தத்வாவை நாம் வெளியில் எங்கிருந்தும் கொண்டு வர வேண்டியது இல்லை.அது நமக்குள்ளேயே ஆழ்ந்து உள்ளது.  தன்   முனைப்பு என்பது முழுவதுமாக இல்லை என்னும்  நிலையில் ஒருவர் இந்த மஹத் தத்வாவை பார்க்கவும் உணரவும்  இயலும்.
ஒவ்வொருவருக்குள்ளும் உயர்நிலை இருக்கின்றது. ஆனால் அந்த உயர்நிலையை மற்றவர்களுக்கு தெரியும்படியாக வெளியே கொண்டுவர ஒருவர் தன் முனைப்பில் இருந்து முழுவதுமாக  விடுபட வேண்டும். தன் முனைப்பு ஒரு சுவரைப் போல கெட்டியாக ஆகி விட்டால், ஒருவர் மகாத்மா என்னும் பெயரை பெற்றிருந்தாலும் மகாத்மா என்பதினுடைய மேன்மையை அவரால் பிரதிபலிக்க முடியாது.

ஒருவரிடம் இருக்கும் தன் முனைப்பு தெளிவாகத் தெரிகின்ற ஒரு கண்ணாடி சன்னலை போல இருந்தால் அவருடைய  மஹத் தத்வாவும் தெளிவாகத் தெரியும். (தெளிவாகத் தெரிவது என்பதன் அர்த்தம் உள்ளும் புறமும் எளிமையாகவும் இயல்பாகவும் இருப்பது என்பதாகும்) உதாரணத்திற்கு வானம் சுவருக்கு பின்புறமாகவும் சன்னலுக்கு பின்புறமாகவும் உள்ளது. கண்ணாடி சன்னல் வழியாக உங்களால் வானத்தை பார்க்க முடியும் இல்லையா? உங்களால் முழுவதுமாக பார்க்க முடியாது ஆனால் ஒரு கன நேரம் பார்க்க முடியும். ஆனால் சுவற்றுக்கு பின்னே உள்ள அந்த வானத்தை, கெட்டியான சுவற்றின் வழியாக உங்களால்  பார்க்க முடியாது. இந்த மாதிரியாக  மஹத் தத்வா நம் அனைவருக்குள்ளும் உள்ளது. தன முனைப்பு என்பது மஹத் தத்வாவை மறைக்கின்ற   ஒரு திரை போல இருந்து அது பார்ப்பதையும் வெளிப்படுத்துவதையும் தடுக்கிறது.

மஹத் தத்வா ஒரு கொள்ளைக்காரனிடம் கூட இருக்கின்றது.ஒரு ரிஷியாக மாறுவதற்கு முன்பாக வால்மீகி ரிஷி ஒரு கொள்ளைக்காரனாக இருந்தவர். ஒரு கொள்ளைக்காரனுக்கு உள்ளேயும் வால்மீகி ரிஷி இருந்துள்ளார். (மஹத் தத்வா அனைவருக்குள்ளும் இருக்கின்றது,நல்ல செயல்கள்  செய்பவர்களுக்குள்ளும் இருக்கின்றது, கெட்ட செயல்கள் செய்பவர்களுக்குள்ளும் இருக்கின்றது. என்பதே இதன் பொருள்) வால்மீகி ரிஷி ஒரு காலத்தில் கொள்ளைக்காரனாக இருந்தாலும்,மஹத் தத்வா அவருக்குள் இருந்து மலர்ந்து தெளிவாகத் தெரிந்தது. எக்காலத்திலும் அவர் ஒரு மிகப் பெரிய ரிஷியாக  கருதப்படுகிறார்.

அங்குலிமால் என்பருக்கும் இதே தான் நடந்தது.(அங்குலிமால் ஒரு துஷ்டன். புத்தர் காலத்தில் அவன் பயணம் செய்பவர்களிடம் பொருள்களை கொள்ளை அடித்து அவர்களின் விரல்களை வெட்டிவிடுவான். அந்த விரல்களை ஒரு மாலையாக்கி அணிந்து கொள்ளுவதால் தான் அவனுக்கு அங்குலிமால் என்னும் பெயரும் ஏற்பட்டது. புத்தரை சந்தித்த போது தான் அவனுக்கு மாற்றம் ஏற்பட்டது) முனைப்பு எனும் சுவர் தகர்ந்த தருணத்தில் அவனுக்குள் மஹத்தத்வா பகிரங்கமாக வெளிப்பட்டு அவர் உயரிய போதி சத்வாக்களுள் ஒருவராக உயர்ந்தார். 

ஒரு மகாத்மா என்ன செய்கிறார்? அனைத்து தெய்வீக குணங்களையும் பின்பற்றுகிறார். அவர்கள் தெயவீகத்தினுள் அடைக்கலம் கொள்ளுகின்றனர். எப்போதுமே தெய்வீகத்தை ஒரு நங்கூரம் போல பற்றிக்கொண்டு அதனுடைய ஆதரவிலேயே எதையும் செய்கின்றனர். ஒரு கொடுமையானவனோ அல்லது தவறு செய்பவனோ அவனுடைய ஆசைகளை அடைய பேயின் போக்குகளையே  ஆதரவாக கொள்ளுகிறான்.ஆனால் ஒரு மகாத்மா தெய்வீகப் போக்குகளையே நாடுகிறார். மேலும்  பகவான் கிருஷ்ணர் எவை தெய்வீக குணங்கள் எவை பேயின் குணங்கள் என்று விவரிகின்றார்.  நமக்குள் உண்மையான ஒரு மலர்ச்சி ஏற்பட நாம் தெய்வீக குணங்ககளின் ஆதரவையே நாட வேண்டும் என்பது உறுதி.

தெய்வீக குணங்கள் எவை? எவையெல்லாம் உங்களுக்கு உள்ளே இருக்கின்ற உணர்வுகளை மலரச் செய்கின்றனவோ! எவையெல்லாம் உங்களுடைய விழிப்புணர்வை அதிகரிக்கின்றனவோ! எவை உங்களுக்கு மகிழ்ச்சியையும் ஆரவத்தையும் கொண்டு வருகின்றனவோ! அவை எல்லாம் உண்மையிலேயே தெய்வீக குணங்கள் ஆகும்.