சாதரணமாக இருக்க முயற்சி செய்யுங்கள்

திங்கள் கிழமை, 1 ஜூன் 2015,



பெங்களூரு, இந்தியா

குருதேவ், என்னைப் போன்ற சாதாரண மனிதர்கள் முக்தியடைய எதிர்பார்ப்பது சரியா?

சாதரணமானவர்கள் மட்டுமே முக்தியடையும் வாய்ப்புடையவர்கள் தன்னை சிறப்புடயவராக எண்ணி கொள்ளுபவர்களுக்கு வாய்ப்பே இல்லை, முக்கியமாக மிக முக்கியஸ்தராக எண்ணிக் கொள்பவருக்கு வாய்ப்பு முற்றிலும் இல்லை.

இந்தப் பிரபஞ்சத்தில் அன்னியர் உள்ளனரா?

நான் அவர்களில் ஒருவர். (சிரிப்பு) குறைந்தபட்சம் சிலர் அவ்வாறு எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.

குருதேவ் அறிவு மற்றும் மெய்யறிவு இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன?

சொற்களுக்கு பொருளையும்,விளக்கத்தையும் நாம் தான் அளிக்கிறோம். அறிவு என்பது செய்தி மெய்யறிவு என்பது அதை வாழ்க்கையுடன் ஒருங்கிணைப்பது என்று நீங்கள் எண்ணினால் அது உங்களை பொறுத்த விஷயம். சிலர் அறிவுக்கும், மெய்யறிவுக்கும் இடையே வேறுபாடு எதுவும் காண்பதில்லை.

அஸ்வத்தாமன் உண்மையில் உயிருடன் இருக்கிறாரா அல்லது அது கட்டுக்கதையா?

ஒருவர் இறக்கும் போது, நாம் "இன்னார் நீடூழி வாழ்க!" என்கிறோம். உதாரணமாக இந்திராகாந்தி நீடூழி  வாழ்க என்று கூறுகிறோம். சிரஞ்சீவி என்றால் ஒருவர் மக்களின் இதயத்தில் நினைவில் நீங்காது வாழ்ந்திருப்பவர் என்று பொருள். அந்த அர்த்தத்தில் நீங்கள் மகாபாரதத்தைப் படித்தால், அஸ்வத்தாமனை மறக்க முடியாது. ராமாயணத்தில் அனுமானை மறக்க முடியாது. எனவே ஆத்மா என்றுமே நிலைத்திருப்பது- அதாவது சிரஞ்சீவி.

நமது கர்மாக்களை கழுவும் கங்கை நதி நீரின் சிறப்புத் தன்மை என்ன?

ஆம்,கங்கை நதி நீர் சிறப்புத் தன்மையுடையது. அவ்வளவு தான் என்னால் கூற முடியும். ஐந்து கணங்களை பற்றி அறிவீர்களா? கங்கா, கணேசா, குரு,கீதை  ஐந்தாவதை நீங்களே கண்டறியுங்கள். சிலர் கான் (பாடல்) என்றும் சிலர் ஞானம் என்றும் கூறுகின்றனர். நான் நான்கினை கூறிவிட்டேன், ஐந்தாவதை நீங்களே கண்டு பிடித்துக் கொள்ளுங்கள் என்று குருதேவ் கூறுகிறார்.

குருதேவ் சில விரைவு கேள்விகள் உள்ளன.

குருதேவ்: சரி கேளுங்கள்

அன்பு : உங்கள் இயல்பு

அரசியல் : உலக இயல்பு

குரு : இன்றியமையாதது

கல்வி : தேவையானது

சேவை : அறிவாளிகள் செய்வது

பணம் : அறிவாளிகள் கவலைப் படாதது

ஞானம் : அதை அடைய வேண்டியது அவசியம்

தொழில் நுட்பம் : வசதியைத் தருவது, வசதிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டியது

உடல்நலம் : அநேகம் பேர் அலட்சியப் படுத்துவது

உறவுகள் : மக்கள் மாட்டிக் கொள்வது

இதயம் : தொப்பியின் (புத்தியின்) கீழ் உள்ளது

கர்மா :  இந்தக் கேள்விகளுக்கு  விடையளிப்பது எனது கர்மா, அவற்றைக் செவிமடுப்பது உங்கள் 
கர்மா

அதிகாரம் : தவறாகப் பயன்படுத்தக் கூடாதது

நெருப்பு : பஞ்சபூதங்களில் ஒன்று

தேவதைகள் : கிரகங்களை ஆள்பவர்கள்

கோபம் : வாழ்க்கையைப் பாழாக்கும்

எதிர்காலம் : அதற்கு உழைக்க வேண்டும்

திருமணம் : விருப்பத் தேர்வு

ஆசிரியர் : மரியாதைக் குரியவர்

வெற்றி : நீங்கள் அறிவைத் தொடர்ந்தால் வெற்றி உங்களைத் தொடரும்

நாடு : வெறும் பூகோள வரம்பல்ல, அதற்கும் மேற்பட்டது

கிருஷ்ணர் : உங்கள் ஆத்மா

அறிவுத்திறன் : நமக்கு அது குறைவில்லை

ஊழல் : ஒழிக்கப் பட வேண்டும்

பித்து  : உலகை மேலும் வேடிக்கையாக்குகின்றது.

குருதேவ், திறமையுடன் மிகப் பெரிய அகம்பாவம் கூடவே வருவது ஏன்? தான் என்னும் அகந்தைக்கும் திறமைக்கும் இடையே உள்ள உறவு என்ன? உதாரணமாக பல திறமையான இசைக் கலைஞர்கள் புதிய பாடகர்களை முன்னுக்கு வர விடுவதில்லை அது ஏன்?

திறமை இருந்தால் அத்தகைய பிரச்சினைகளும் கூடவே இருக்கும். எல்லாமே நல்லதாக காண்பது கடினம். இயற்கை எப்படியும் எங்கேயாவது சில எதிர்மறைகளையும்  கொண்டு வந்துவிடும். திறமை மிகுந்தவர்கள் சாதரணமாக உணர்ச்சி வசப்படுபவர்களாக இருக்கின்றார்கள். விரைவில் கோபம் கொள்ளுபவர்களாகவும் சமநிலையை இழப்பவர்களாகவும் இருக்கின்றனர். இவை நிகழக் கூடியவை தாம், நாம் அவற்றை மேலாண்மை செய்து கொள்ள வேண்டும்.