பசு வதையை ஒரு முடிவிற்குக் கொண்டு வாருங்கள்

திங்கள் கிழமை , 3 நவம்பர் 2014,



டெல்லி, இந்தியா

திரு கோபால் அவர்கள் இங்கு உண்மையாகவே தனது பெயருக்குத் தகுந்தபடி வாழ்கின்றார். ( ஸ்ரீ கிருஷ்ணரின் மற்றொரு பெயர் கோபால்,அதாவது பசுக்களை காப்பவன்). பசுக்களின் பாதுகாப்பிற்கு அர்ப்பணிப்புடன் பணிபுரிகின்றார். நான் வெகுகாலமாகவே இங்கு வர வேண்டும் என்று விரும்பிக் கொண்டிருந்தேன். அது நடைபெறவில்லை. இன்று நான் டெல்லியிலிருந்து  ஹைதராபாதிற்கு 1.45 மணி விமானத்தில் செல்ல வேண்டும். அங்கு இன்று மாலை சத்சங்கம் மற்றும் கோசாலாவில் கோபாஷ்டமி விழா நடைபெற இருக்கின்றது. ஆனால் இன்று ஜெய்பூர் வழியாக  ஹைதராபாத் செல்லும் பாதையில் இந்த கோசாலாவிற்கு வருகை தரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கெள என்பதற்கு நான்கு அர்த்தங்கள் உள்ளன. ஞானா (ஞானம்) கமன் (முன்னேற்றம்) ப்ராப்தி (அடைதல்) மற்றும் மோக்ஷா (விடுதலை). ஒரு பசுவானது இந்த நான்கினையும் அளிக்கின்றது.

நான் காரில் பயணம் செய்யும்போதெல்லாம் பசுக்கள் பிளாஸ்டிக், போன்றவற்றை உண்பதைக் கண்டிருக்கின்றேன். அதனால் மனக்கஷ்டம் அடைந்திருக்கின்றேன்.டெல்லி நகரில் ரிங் சாலையில் பயணம் செய்தால் பல பசுக்கள்  சாலையின் நடுவில் நின்று கொண்டு ப்ளாஸ்டிக்கை மென்று கொண்டிருப்பதை காண்பீர்கள். இன்று அத்தகைய பசுக்களை நீங்கள் கோசாலாவிற்குக் கொண்டு வந்து பாதுகாக்க முயற்சிகள் எடுத்துக் கொண்டிருப்பதை கேட்க மிக மகிழ்ச்சி அடைகின்றேன். பசுக்களை காக்கும் இச்செயல் உங்களது தெய்வீகக் கடமைகளில் ஒன்றாகும். உன்னதமான பெருமைக்குரிய அனைத்தும் 'க' என்னும் ஒலியுடனேயே துவங்குகின்றன. குரு,ஞான கீதா,கங்கா, கதி (முன்னேற்றம்) கமன் (இலக்கை நோக்கி நகர்தல்) போன்றவை. அவற்றை போற்ற வேண்டியது உங்கள் கடமை ஆகும்.

வாழும்கலை ஆஸ்ரமத்திற்கு வருகை தருவோர் அதைச் சுற்றிப் பார்க்கும்போது கோசாலா ஒரு முக்கியமான இடமாகும். தற்போது ஆஸ்ரமத்தில் 300 பசுக்கள் உள்ளன. எங்கெல்லாம் பெரிய ஆஸ்ரமங்கள் உள்ளனவோ அங்கெல்லாம் பசுக்களை நல்ல சூழலில் வளர்த்து வருவார்கள். பசுக்களின் பாதுகாப்பு நமது வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகும். அனைவரும் கோசாலாவிற்கு அடிக்கடி வந்து இந்தப் பசுக்களுக்கு உணவு தாருங்கள். கெள என்பதற்கு நான்கு அர்த்தங்கள் உள்ளன. ஞானா, கமன் (முன்னேற்றம்) ப்ராப்தி (அடைதல்), மொக்ஷா (விடுதலை). ஒரு பசுவானது இந்த நான்கினையும் அளிக்கின்றது. பசுவின் பால் மனதையும் அறிவையும் கூர்மையாக வைக்க உதவுகின்றது. இந்தியப் பசுக்களின் பாலில் ஒரு தனித்துவம் வாய்ந்த ப்ரோடீன் சத்து உள்ளது, புத்திசாலித்தனத்தை மேம்படுத்த உதவுகின்றது. அடுத்தது கமன் அதாவது முன்னேற்றம். பசு தரும் பிற பொருட்கள் நமது அன்றாட வாழ்க்கைக்கு உதவுகின்றன. இதை நாம் கவனத்தில் கொண்டு பசுவுக்கு மரியாதை தர வேண்டும். நமது இந்திய அரசிடம் பசுவதையைத் தடுக்குமாறு வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

ஒரு பசுவை வணங்கி வழிபாடு செய்வது மட்டும் போதாது. உண்மையிலேயே பசுவிற்கு சேவை செய்ய வேண்டும். சாதரணமாக , நாம் ஒரு பசுவிற்கு மாலை அணிவித்து, கற்பூர ஆரத்தி காட்டி பூஜை செய்கின்றோம். இது சரியல்ல, ஏனெனில் இது பசுவைப் பயமுறுத்துகின்றது. எனவே,நீங்கள் பசுவிற்குச் சேவை செய்ய வேண்டும். உங்களது வாழ்வு கீழ்கண்ட நான்கினால் மலர வேண்டும்.
தயா (இரக்கம்) கருணா (கருணை), சஹன்ஷில்தா (சகிப்புத் தன்மை), சாந்தி (அமைதி) பிறரது வலிகளை உணர முடியாத மனம் எப்படிப்பட்டது? அப்படிப்பட்ட மனம் வேதனையையும் வன்முறையையுமே பிறருக்குத் தர முடியும்.

இன்று அனைத்துப் பாராளுமன்ற அமைச்சர்களும் இங்கே இருக்கின்றனர். நாடு முழுவதிலுமுள்ள மக்கள் பசு வதையினை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகின்றார்கள்.இந்தியா சுதந்திரம் அடைந்த போது விலங்குகளின் மொத்த எண்ணிக்கை 120 மில்லியன்களாக இருந்தது, மக்கள் தொகை 30 மில்லியன் என்று கூறப்படுகின்றது. இன்று அந்த எண்ணிக்கை தலைகீழாகி விட்டது. இன்று மக்கள் தொகை 120 மில்லியனாக உள்ளது, ஆனால் விலங்குகளின் எண்ணிக்கை 30 மில்லியன் என்று தேய்ந்து விட்டது. இந்த விகிதாசாரம் நல்லதல்ல. சரியா? எனவே, நாம் அனைவரும் பசுக்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதற்கும்,அவற்றின் பாதுகாப்பிற்கும் கடுமையாக உழைக்க வேண்டும். இந்திய அரசிடம் பசுவதையைத் தடுக்க தொடர்ந்து வேண்டுகோள் விடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.