இந்திய விவசாயிகளுக்கு,

வியாழக்கிழமை, 11/13/2014

பெங்களுரு, இந்தியா



நாடு முழுவதுமிலிருந்து, பல விவசாயிகள் பெங்களுரு ஆஷ்ரமத்தில் குழுமியுள்ளார்கள்,  அனைவரையும் வரவேற்கிறோம். இந்த நாட்டிலுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருந்தால் நிச்சயமாக இந்த நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். விவசாயிகள் மகிழ்ச்சி இல்லாமல் இருந்தால், அந்த நாடே மகிழ்ச்சியாகவும், ஆரோக்யமாகவும் இருக்க முடியாது. ஆகையால், விவசாயிகள் மகிழ்ச்சியாகவும், திருப்தி அடைந்தவர்களாகவும் இருக்க வேண்டியது மிக அவசியம்.

இதை அடைவதற்கு இரண்டு வழிகள் உள்ளன.
1.        நமது உள்ளத்தை வலிமையாக்குவது மற்றும் தன்னம்பிக்கையை விழித்தெழ செய்வது. இதை செய்வதால், நமக்கு வரும் அனைத்து பிரச்சனைகளையும் தாங்கிக்கொள்ளும் வலிமையை நமக்கு தருகிறது.
2.        நாம் எந்த காரியங்களை செய்வதற்கு முன்பும் கவனமாக புத்திசாலித்தனமான திட்டங்களை தீட்டுவது. இதனால் நமக்கு எந்த கஷ்டமும் நேராது.

இதில் பல விஷயங்கள் நம் கையில் உள்ளது, மற்றும் சில விஷயங்கள் நம்முடைய
கட்டுப்பாட்டில் இல்லை. எந்த ஒரு விஷயம் நம் கட்டுபாட்டிற்கு மேலோங்கி உள்ளதோ, 
அதை நாம் கடவுளிடம் சரணாகதி செய்துவிட்டு, எல்லாம் நல்லபடியாக நடக்க பிரார்த்தனை
செய்து, தன்னம்பிக்கையுடன் முன்னேறுவோம். அதன்பின் நமது எல்லா வேலைகளும்
நிறைவடைய ஆரம்பித்து விடுவதை பார்க்கலாம். யார் ஒருவர், சுகாதாரம் இல்லாமலும்,
சந்தோஷமில்லாமலும் இருகிறார்களோ அவர்கள் எந்த சட்ட திடங்களையும் பின்பற்றாமல்
தவறான காரியங்களில் ஈடுபடுவார்கள். திருப்தி அடைந்தவர்களாக இருக்கிறார்களோ, அவர்கள்
ஒருபோதும் மற்றவர்களுக்கு எந்த ஒரு தீங்கும் விளைவிக்க எண்ணுவதில்லை.

(ஸ்ரீ ஸ்ரீ விவசாயிகளுக்கு: இந்த மூன்று நாள் பயிற்சி வகுப்பில் நாம் நிறைய விஷயங்களை பற்றி கலந்துரையாட உள்ளோம். நீங்கள் அனைவரும் மிகுந்த பலன்களை அடைவீர்கள் என நம்புகிறேன். எப்பொழுது நீங்கள் பலன் அடைந்து மற்றும் செழுமையுடன் இருக்கிறீர்களோ, அப்பொழுது தான் நாட்டில் உள்ள ஆயிரகணக்கான மக்களும் அதே பலனை அடைகிறார்கள். ஆகையால், உங்களது கடின உழைப்பால் நம் நாட்டில் உள்ள மக்கள் சுமூகமாக வாழ்க்கையை நடத்த முடிகிறது.)

நான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களுக்கு சொல்வது என்னவென்றால், நாம் சாப்பிடும் முன் “அன்ன தாதா சுகி பவ”(உணவு கிடைக்க பங்களித்தவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும், செழுமையுடன் இருக்கட்டும்) என்ற சிறிய மந்திரத்தை சொல்ல சொல்கிறேன். நான் சிறு வயதாக இருக்கும் பொழுது எனது தந்தையார் இந்த மந்திரத்தை உணவு சாப்பிட தொடங்கும் முன் சொல்ல சொல்வார்கள். மேற்கொண்டு எனது தந்தையார் இந்த மந்திரத்தை உணவருந்திய பின்பும் சொல்ல சொல்வார்கள். இந்த வார்த்தைகளை தவிர வேறு ஏதும் அவரிடமிருந்து கேட்டது இல்லை. அவர் இந்த மந்திரத்துக்கு எப்பொழுதும் முக்கியத்துவும் கொடுப்பார். நாம் இந்த மந்திரத்தை உச்சரிக்கும்பொழுது, நமக்கு உணவு கிடைக்க காரணமாயிருந்த மூவருக்காக பிரார்த்தனை செய்து கொள்கிறோம். முதலாவதாக தானியங்கள் விளைவித்த விவசாயிகளுக்கு, இரண்டாவதாக உணவு தானியங்களை வாங்கி கொண்டு வந்து நமது வீடுகளுக்கு கொண்டு சேர்க்கும் வியாபாரிகளுக்கு.

ஏன் வியாபாரிகளுக்கு என்று நீங்கள் கேட்கலாம்?

பாருங்கள், விவசாயிகள் பயிர்களை வளர்த்து அறுவடை செய்கிறார். ஆனால், உணவு தானியங்களை சந்தைக்கு கொண்டு வரவில்லை என்றால் விவசாயிகளும் ,மக்களும் பெருமளவில் பாதிக்கபடுவார்கள். உணவு தானியங்களை பதுக்கி வைப்பவர்கள் மற்றும் நியாயமான விலைக்கு வாங்காதவர்கள் அல்லது மக்களுக்கு அதிக விலைக்கு விற்பவர்கள் உணவு தானியங்களை வீண் செய்கிறார்கள். அதிகளவு, தேவைக்கு மேற்பட்ட உணவு தானியங்களை நம்நாடு பெற்றிருக்கிறது என்பதை அறிவீர்களா! ஆனால், உணவு தானியங்களை சரியான முறையில் பகிர்ந்து அளிக்காததால் பல மக்கள் பசியாலும் அதே நேரத்தில் உணவு தானியங்கள் வீணாக்கப்படுகிறது (சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்படுவதால்).

ஆகையால் தவறான செயல்களால் இனி வரும் மாதங்களில் தக்காளியின் விலை திடீரென உயர்வது மீண்டும் விலை வீழ்ச்சியும் ஏற்படுகிறது. இதை அனுபவித்துள்ளீர்களா? இந்த அனுபவம் உள்ள அனைவரும் தங்கள் கைகளை உயர்த்தி காட்டுங்கள் (கூடியிருந்த பலரும் கையை உயர்த்தி காட்டினர்) வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகள் தங்களது பணிகளை சரிவர செய்யாவிட்டாலும் அல்லது அவர்கள் மகிழ்ச்சி இல்லாமல் இருந்தாலும் இந்த நஷ்டத்தை நாம் அனைவரும் சுமக்க வேண்டியுள்ளது. வியாபாரிகள் மகிழ்ச்சி இல்லாமல் இருந்தால் விவசாயிகளும் மற்றும் பெரும்பாலான மக்களும் சேர்ந்து மகிழ்ச்சி இல்லாமல் பாதிக்க படுகிறார்கள்.

வியாபாரிகள் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கும் பொழுது உணவு தானியங்களில் கலப்படம் செய்து மிகுந்த லாபத்தை ஈட்டுகிறார்கள். யார் மகிழ்ச்சியில்லாமலும் ஆரோக்கியமில்லாமலும் அல்லது அதிருப்தியுடன் இருகிறார்களோ அவர்கள் ஏதோ ஒரு கெடுதல் செய்கிறார்கள். யார் ஒருவர் சுகாதாரம் இல்லாமல் சந்தோஷம் இல்லாமலும் இருகிறார்களோ அவர்கள் எந்த சட்டதிட்டங்களையும் பின்பற்றாமல் நேர்மையற்ற காரியங்களை செய்கிறார்கள். ஒருவர் தன்னுள் திருப்தியுடன் இருக்கும் பொழுது அவர்கள் மற்றவர்களுக்கு ஒருபொழுதும் தொந்தரவு செய்ய நினைப்பதில்லை.

ஆகையால் வியாபாரிகள் மகிழ்ச்சியுடனும் சட்டதிட்டங்களை செரியான முறையில் கடைபிடிப்பார்களானால் விவசாயிகளை ஏமாற்றமாட்டார்கள், அல்லது மற்றவர்களிடம் இருந்து சுரண்ட மாட்டார்கள். இன்றைய காலகட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து சுரண்டுகிறார்கள். எத்தனை பேர் இந்தனை ஒத்து கொள்கிறீர்கள்? (பலர் இந்த கூடத்தில் கையை உயர்த்தினர்)
உங்களுக்கு தெரியுமா! இந்தியாவில் விளையும் சர்க்கரையின் விலை கிலோவிற்கு ரூபாய் 12 ஆனால், நம் நாட்டிற்கு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சர்க்கரையின் விலை ரூபாய் 30. இருக்குமதி செய்யும் சர்க்கரையை விட நம் நாட்டில் விளையும் சர்க்கரை இனிப்பு குறைவாக இருக்கிறதா என்ன! ஏன் இதுபோல் நடக்கிறது?

சில நேர்மையற்ற அரசியல்வாதிகள் ஒரு சில விவசாயிகளுடன் சேர்ந்து கொண்டு இந்த மாதிரியான சட்ட விரோதமான செயல்களை மேற்கொள்கிறார்கள். ஆகையால் வியாபாரிகள் மகிழ்ச்சியற்று இருந்தால் அப்பொழுது விவசாயிகளும் பெரும்பாலான மக்களும் கூட மகிழ்ச்சியில்லாமலும்,பாதிக்ப்பட்டவர்களாகவும் உள்ளார்கள். வியாபாரிகள் சந்தோஷமில்லாமல் இருக்கும் பொழுது சர்க்கரை மற்றும் உணவு தானியங்களில் கலப்படம் செய்து அதை அதிக லாபத்திற்கு மக்களுக்கு விற்கிறார்கள்.நீங்கள் ஒரு கிலோ அரிசி வாங்கினால் அதில் 100-200 கிராம் சுத்தம் இல்லாத தேவையற்ற பொருட்கள் கலந்திருப்பதை பார்க்கலாம். இது போன்று பால், கோதுமை மாவு, மற்றும் நெய்யில் கூட கலப்படம் உள்ளது.

எந்த வியாபாரி கலப்படம் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்களோ அவர்கள் மனதளவில் மகிழ்ச்சியற்றவர்களாகவும்,அதிருப்தி உடனும் இருப்பார்கள். ஆதலால் நாம் வியாபாரிகளின் மகிழ்ச்சிக்காகவும் அவர்களது நல்வாழ்விற்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும்,ஆகையால், அவர்கள் அவர்கள் உணவு தானியங்களில் கலப்படம் செய்யாமலும் மற்றும் விவசாயிகளுக்கு உரிய லாபத்தை பகிர்ந்தும் அளிப்பார்கள். வியாபாரிகள் பேராசை இல்லாதவராகவும், உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்காமலும் இருப்பார்கள். வியாபாரிகள், விவசாயிகளிடமிருந்து வாங்கிய உணவு தானியங்களை அதே விலைக்கு உறுதி செய்வார்கள்.

நமது தர்ம சாஸ்திரத்தில் எழுதயுள்ளபடி, வியாபாரிகள் அதிகபட்சம் 20  சதவீதம் லாபத்தை சம்பாதிக்கலாம். ஆனால் இன்றைய நிலையில் வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகள் சுய நலத்துடன் 50  சதவீத லாபத்தை எடுத்து கொண்டு, மீதயுள்ள சிறிய பகுதியை விவசாயிகளுக்கு வழங்குகிறார்கள். இது செரியான செயலல்ல. சில உணவு பொருட்கள் அதிகமாக உற்பத்தியாகி விற்பனைக்கு வரும் பொழுது சமமான லாபத்தை விவசாயிகளிடம் பங்கிட்டு கொள்வதை வியாபாரிகள் உறுதி செய்ய வேண்டும்.வியாபாரிகள் பேராசை உள்ளவர்களாகவும், நியாயமற்ற விலைக்கு விற்று பணம் சம்பாதிப்பவர்களாக இருக்க கூடாது.தர்ம சாஸ்திரத்தில் எழுதியுள்ளபடி வியாபாரிகள் இருபது சதவீத லாபத்தை அடையலாம். அதைவிட அதிகமாக அல்ல.

இதில் மூன்றாவது நபர், ஓய்வில்லாமல் நமக்காக உணவு வகைகளை தயார் செய்யும் நமது குடும்ப பெண்களுக்கும், மந்திரத்தின் மூலம் அவர்களுடைய நல்வாழ்விற்காக பிரார்த்தனை செய்கிறோம். வீட்டில் பெண்கள் சந்தோஷமில்லாமலும், திருப்தியில்லாமலும் இருந்தால், பின் யாருமே அந்த வீட்டில் சந்தோஷமாகவோ அல்லது அவள் சமைத்த உணவை ஜீரணிக்கவோ முடியாது.பெண்கள் சமைக்கும் பொழுது துயரத்தில் கண்ணீர் விட்டால், அந்த சாப்பாட்டை சாப்பிடுபவனும் கண்ணீர் சிந்த நேரிடுகிறது.ஆகவே, வீட்டிலுள்ள பெண்கள் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இருக்க வேண்டியது மிக அவசியம். இதனால் தான், இந்த மந்திரத்தை சொல்லி நாம் பிரார்த்தனை செய்கிறோம்.நிஜமாக பார்த்தால், அன்னதாதா என்பவர் கடவுள் அன்றி வேருயாரும்மில்லை. 

கடவுள் எப்பொழுதும் மகிழ்ச்சயுடனும், திருப்தியுடனும் தான் இருக்கிறார். எப்பொழுதாவது சந்தோஷமில்லாமல் இருக்கிறாரா? இல்லவே இல்லை! இருந்தாலும், இப்பொழுது நாம் இருக்கும் பொருட்களை சார்ந்த உலகத்தில் நமது உணவுக்காக பங்களிக்கும் மூவருக்கும் அவர்களது சந்தோஷதிற்க்காகவும், நல்வாழ்விற்க்காகவும் உலகத்தையே பராமரிக்கும் கடவுளிடம் நாம் பிரார்த்தனை செய்வோம்.நாம் அனைவரும் சாப்பாட்டிற்கு முன்னும் பின்னும் இந்த மந்திரத்தை உச்சாரணம் செய்ய வேண்டும்.சாப்பாட்டிற்கு முன்பும் பிறகும் ஆசீர்வாதம் செய்யலாம்.

உலகத்திலேயே, இந்தியாவும் நிறைய மழைகளை பெறக்கூடிய ஒரு நாடு. இங்கு அதிகமான மழை கிடைக்கிறது. இத்தகைய மழை ஆதாரத்தை நாம் சரிவர பயன்படுத்துவதில்லை. நாம் இன்றும் பல வகையான ரசாயன பொருட்களை நீர் ஆதாரங்களில் கலந்து விடுகிறோம். ரசாயனம் மற்றும் செயற்கை உரங்களை உலகத்தில் பல நாடுகள் தடை செய்துள்ளார்கள். ஆனால் நாம் இன்றும் இத்தகையவைகளை விவசாய நிலங்களில் பயன்படுத்தி வருகிறோம். இதனால் ரசாயன பொருட்களை வாங்க மிகுந்த செலவு செய்கிறோம் மற்றும் நிலத்தின் ஆரோக்யத்தையும் இயற்கையான வளத்தையும் அழித்துவிடுகிறோம். இதனால் பணத்தை பெருமளவில் இழப்பதாலும் இயற்கையான மண்வளத்தை இழப்பதாலும் துன்பப்படுகிறோம். நாம் இந்த கருத்தை மிக விரிவாக விவாதிக்க வேண்டும்.

(ஸ்ரீ ஸ்ரீ விவசாயிகளிடம் பேசியது: “ ஆஷ்ரமத்தில் இந்த கூட்டத்தில் பல விஞ்ஞானிகளும், விவசாயத்துறை வல்லுனர்களும் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் உங்களுடன் பேசுவார்கள். நீங்களும் முன் வந்து உங்களுடைய பிரச்சனைகளை அவர்களிடம் கலந்து ஆலோசனை செய்யுங்கள்.நீங்கள் உங்கள் சொந்த வீட்டிற்கு வந்திருப்பதாக உணருங்கள். நீங்கள் இப்பொழுது உங்களுடைய ஆன்மிக இருப்பிடத்தில் இருகிறீர்கள்.இது உங்களுடைய சொந்த இடம், ஆகையால், நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும்,சந்தோஷமாகவும் இங்கு தங்கியிருங்கள்.
காலை வேளைகளில் ஒரு சில மணி நேரங்கள் யோகா, பிராணாயாமம் மற்றும் தியானம் பயிற்சி செய்யுங்கள். நம்மிடையே நிறைய பயிற்சி ஆசிரியர்கள் இருக்கிறார்கள். நீங்கள் அவர்களிடம் பயிற்சி எடுத்து ஆரோக்யமாக இருக்கவும்.நீங்கள் அனைவரும் ஆரோக்யமாக இருந்தால் இந்த நாடே ஆரோக்யமாக இருக்கும்.

நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்யமாகவும் இருந்தால் நீங்கள் விளைவித்த உணவு தானியங்களை சாப்பிட்டு இந்த நாட்டு மக்களும் ஆரோக்யத்துடனும், மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள்.