அழிவில்லாதது ஒன்றுமில்லை

13 ஏப்ரல், 2014

ரிஷிகேஷ் - உத்தர்கண்ட்


கேள்விகளும் - பதில்களும்

ஒரு நிலைமையை எதிர்கொள்ளும் மன உறுதியை எவ்வாறு அடைவது? என்னுடைய பாதையை மாற்றிக் கொள்ள வேண்டுமா? என்னுடைய தர்மம் (கடமை) என்னவென்று நான் எப்படி அறிய முடியும்?

குருதேவ்: நாம் பல முறை இத்தகைய கேள்விகளை கேட்கின்றோம். நாம் அறிந்து கொள்ள விரும்பும் எதை பற்றியுமே விஷய ஞானத்திற்கு பஞ்சம் இல்லை. இக்காலத்தில் செய்திகள் ஒரு பட்டனை அழுத்தினாலே வந்து குவிகின்றன. கூகிள் வலைத்தளத்திற்கு சென்று உங்கள் கேள்வியை டைப் செய்தால், அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும். ஆனால் அது மட்டுமே போதாது. அதைத் தவிர வேறொன்று உள்ளது. அது என்ன? நீங்கள் விழித்தெழுந்து அனைத்தும் ஒரு நாள் முடிந்துவிடும் என்பதை உணர்ந்தறிய வேண்டும்.

நாம் வாழ்வில் முன்நோக்கிச் செல்லும் போது அனைத்தும் ஒரு நாள் முடிந்துவிடும் என்பதை அறிகின்றோம். ஆயினும், கடந்து போனதை எண்ணிகொண்டேயும், இது அது என்று எதையானும் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டேயும்இருக்கின்றோம். உதறித் தள்ளுங்கள். விழித்தெழுந்து, ஒன்றுமே இல்லை என்பதை அறியுங்கள். ஒவ்வொன்றும் ஒன்றுமே இல்லாதது. உங்களுக்குள் ஞானம் எழுவதற்கு இந்த புரிதல் போதுமானது ஆகும். ஒன்றுமில்லாத நிலை தான் உண்மையில் ஒவ்வொன்றும் ஆகும். இதை நீங்கள் மீண்டும் மீண்டும் உங்களுக்கு நினைவுறுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் அது உங்கள் மனதில் பதியும்.

பகவத்கீதை முழுமையையும் கேட்டறிந்த பின்னர் அர்ஜுனன் நான் இப்போது நினைவில் வைத்துக் கொள்கின்றேன்" என்று கூறுகின்றான். எதை நினைவில் வைத்துக் கொள்கின்றான்?இவையெல்லாம் ஒன்றுமே இல்லை.நான் என்பது இதுவன்று. நான் என்பது இதுவானால் அப்போது நான் அழிந்திருப்பேன்இவற்றையெல்லாம் கடந்து நகர்ந்து கொண்டிருக்கின்றேன். இவை என்னை தொடக்கூட இல்லை.

இதை தான் நாம் திரும்ப நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் பள்ளிக்கோ கல்லூரிக்கோ செல்லும் காலத்தில் உங்களை யாராவது பழித்திருந்தால்,உங்களை பாதித்திருக்கின்றதல்லவா? கல்லூரியில் நண்பரோ எதிரியோ யாரோ ஒருவரிடம் பழிப்புரைக்கு ஆளாகதவர் யாருமே இல்லையெனலாம். அந்தக் க்ஷணத்தில் நீங்கள் மனப்பாரத்திற்கு ஆளாகியிருந்திருக்கலாம்.ஆனால் இப்போது இருக்கின்றதா என்னஇல்லை. கடந்து போய்விட்டது. எவ்வாறு அவற்றையெல்லாம் கடந்து முன் நகர்ந்திருக்கின்றீர்கள் என்று பாருங்கள். எனவே, ஒவ்வொன்றும் ஒன்றும் இல்லாதது. ஹ்ருதய சூத்ரா (இதயத்தின் நீதிமொழி)என்று அழைக்கப் படுகின்றது. இது புத்தர் கூறியுள்ளது ஆகும். ஆதி சங்கராச்சார்யாவும் இதை அத்வைதா தத்துவம் என்று அழைத்திருக்கின்றார். ஐந்து மூலத்தத்துவங்களும் (பஞ்ச பூதங்கள்) ஒன்றுமில்லாதவை.  

ஐந்து புலன்களும் ஒன்றுமில்லாதவை. நான், நீ ஒன்றுமில்லாதது. அறிவார்ந்த பெருமக்களால் இது (இவை அனைத்தும் ஒன்றுமில்லாதவையே என்று) விளக்கப் பட்டிருக்கின்றது. பக்தர்களும் இதையே வேறு விதமாகக் கூறுகின்றனர். தன்னை அகிஞ்சன் (ஒன்றுமில்லாதவன்) என்று கூறிக் கொள்ளுகின்றார்கள். இதைப் புரிந்து கொண்டால் ஒரு பெரும் விழிப்புணர்வு உங்களில் எழும். எனவே ஏதேனும் கவலை ஏற்படும்போதெல்லாம் உங்களை எழுப்பிக் கொள்ளுங்கள். என்றாவது ஒரு நாள் நாம் இறந்துதான் ஆக வேண்டும். எவ்வளவு தான் உங்கள் உடலை அலங்கரித்து அழகூட்டிக் கொண்டாலும்ஒரு நாள் இவ்வுடல் சிதையில் எரிந்து போகும்.

ஒவ்வொரு பிரச்சினையும் ஒரு சவால் தான். அதை சவாலாக எடுத்துக் கொண்டு அணுகுங்கள்.  அப்போது இவ்வுலகில் எந்த சக்தியாலும் உங்கள் புன்னகையை அழிக்க முடியாது. இதை அறிந்து கொள்ள எத்தனை நூல்கள் நீங்கள் படிக்க வேண்டும்என்னவெல்லாம் செய்ய வேண்டும்? எங்கெல்லாம் செல்ல வேண்டும்நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். ஒன்றும் செய்யாமல் இருக்கும் கலையை தான் நீங்கள் கற்றுக் கொண்டிருக்கின்றீர்கள். 

மக்கள் மீண்டும் மீண்டும் நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுக் களைத்துவிட்டார்கள். குருமார்களும் இதைச் செய்,அதைச் செய் என்று கூறிக் களைத்து விட்டார்கள்.எனவே நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். இவையெல்லாம் ஒன்றுமே இல்லை என்று உணர்ந்தறிந்தால் போதும்.
இதையே நீங்கள் ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது இதன் பொருள் அல்ல. அவ்வாறு செய்தால் அதுவே ஒரு வகை நோய் ஆகும்.

வெளிநாடுகளில் பற்றுறுதிமொழி என்றொரு புதிய புது நோயினால் பீடிக்கப்பட்டிருக்கின்றார்கள்..  அது ஒரு விஷயத்தை உங்களுக்குள்ளேயே திரும்பத் திரும்ப நினைவு கூறுதல் ஆகும்.
சுவிட்செர்லாந்தில் ஒரு சமயம் நாங்கள் ஒரு கருத்தரங்கினை நடத்தினோம். அது முடிந்தவுடன் அருகாமையிலுள்ள உணவு விடுதிக்குச் சிற்றுண்டி மற்றும் தேநீர் எடுத்துக் கொள்வதற்காக சென்றோம். அங்கே அமர்ந்திருந்த ஒரு தம்பதி என்னிடம் நீங்கள் என்ன செய்கின்றீர்கள்என்று கேட்டார்கள். நான் தியானம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருப்பதாக கூறினேன். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் பற்றுருதியைப் பயிற்சி செய்து, அதைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருப்பதாகக் கூறினார்கள். அந்தக் கணவன் காலை மூன்று மணிக்கு எழுந்து, படுக்கையில் அமர்ந்து, "என்னை நான் விரும்புகின்றேன் என்னை நான் விரும்புகின்றேன் என்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பாராம். இந்த எளிய விஷயத்தை ஒருவர் இவ்வளவு செய்து புரிந்து கொள்ள வேண்டுமா என்ன?

அப்போது அங்கிருந்த நம்முடைய பற்றுறுதியாளர்களும்,பேரார்வலர்களும் 'நாங்கள் இப்படி செய்யத் தேவையில்லை, நாங்கள் சுதர்சன்க்ரியா செய்கின்றோம், தானாகவே, என்னை விரும்புகின்றேன் என்று உணர்ந்தறிகின்றோம்நாங்கள் இப்படித் திரும்பத் திரும்ப அதை கூற வேண்டியதில்லைஎன்றனர். இப்போது நீங்கள் ரிஷிகேஷில் இருக்கின்றீர்கள் அதை நீங்கள் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டுமா என்ன? இங்கு இருப்பதை நீங்கள் அறிவீர்கள். அதை நீங்கள் திரும்பத் திரும்பக்  கூறிக் கொண்டிருந்தால், உண்மையிலேயே நான் இங்கு இருக்கின்றேனா என்ற சந்தேகம் கூட எழலாம். 

ஒரு நாத்திகன் ஞானம் அடைய  முடியுமா?

குருதேவ்: நிச்சயமாக! ஆனால் அதன்பின் அவன் நாத்திகனாக இருக்க மாட்டான். ஒரு நாத்திகன் ஞானம் அடைய முடியும், ஆனால் அதை அடைந்த பின்னர் ஒரு போதும் அவன் நாத்திகனாக இருக்க இயலாது. அதனால் தான் கம்யுனிஸ்ட்டுகள் பயமடைந்து நம்மிடமிருந்து விலகி ஓடி விடுகின்றார்கள்.

நீங்கள் கொள்கைப் பிடிப்புள்ளவராக இருந்தால் மற்றவரை சந்திக்க என்ன பிரச்சினைநம்முடைய கொள்கைகளின் மீது நமக்கே நம்பிக்கை இல்லாத போதுநம்மை நாமே நம்பாத போது தான், பிறருடன் கைகுலுக்கி அதன் மூலம் நம்முடைய கொள்கைகளை இழந்து விடுவோமோ என்னும் கவலை ஏற்படும். பிற நாடுகளில் மக்கள் ஒருவரை ஒருவர் வரவேற்று வணக்கம் தெரிவிக்கும் போது, ஒரு கையினால் சலாம் என்று வரவேற்கின்றனர், அல்லது வலது அல்லது இடது கையை பயன்படுத்திக் கை குலுக்குகின்றார்கள். ஆனால் இந்தியாவில் இரு கரம் கூப்பி, நமஸ்தே என்று கூறி வரவேற்று வணக்கம் தெரிவிக்கின்றார்கள். இருகரங்களும் இணையும் போதே அது வரவேற்பு ஆகின்றது. வலது கரம் வலமாகவும் இடது கரம் இடமாகவும் இல்லாத போது அது வரவேற்பு ஆகின்றது.முற்றிலும் எதிரான இரண்டு ஒருங்கிணையும்போது என்று பொருள்). பிற நாடுகளில் வலமும் இடமும் ஒரு போதும்  இணைவதில்லை. ஒருவரைப் பற்றி ஒருவர் தூரத்தில் தூற்றிக் கொள்வர். இங்கும், வலது சாரியினர் (அரசியலில்) மற்றும் இடது சாரியினர் (கம்யுனிஸ்ட்டுகள்) ஒரு போதும் இணைவதில்லை. ஏன்? ஏனெனில் அவ்வாறு செய்வதன் மூலம் இதுவரை தாங்கள் நிலைநாட்டி இருப்பது அழிந்து விடுமோ என்னும் பயமே காரணம் ஆகும்.

குருதேவ்! தாங்கள் கடவுளா? அல்லது தலை சிறந்த மனிதரா?

குருதேவ்: யாராக இருந்தாலும், நீங்கள் யார் என்று முதலில் கண்டுபிடியுங்கள். உங்களிடமிருந்து நான் தொலைவில் இருக்கின்றேன், நீங்கள் உங்களுக்கு மிக அருகாமையில் உள்ளீர்கள். எனவே முதலில் அருகில் உள்ளதைத் தெரிந்து கொள்ளுங்கள், பின்னர் தொலைவில் உள்ளதைத் தெரிந்து கொள்ளலாம். முதலில் "நான் யார்?" என்று கூர்ந்து ஆராயுங்கள். பின்னர் என்னைப் பற்றி எண்ணத் துவங்குங்கள். நீங்கள் யார் என்பதை  உண்மையில் உணர்ந்தறிந்து கொண்டால், வேறெதுவும் நீங்கள் புரிந்து கொள்ளத் தேவையில்லை. தானாகவே உங்களுக்கு நான் யார் என்பது புரியும்.

இது போன்ற கேள்வி அர்ஜுனனின் மனத்திலும் எழுந்திருக்கக் கூடும். அவன் அதை கேட்பதற்கு முன்னரே ஸ்ரீ கிருஷ்ணர் "ஒருவன் எந்த முறையில் என்னை மனதில் உணர்ந்து வழிபடுகின்றானோ அந்த உருவிலேயே நான் அவனுக்கு என்னை வெளிப்படுத்துகின்றேன்" என்று பதிலளித்தார். ஏன் ஸ்ரீ கிருஷ்ணர் அவ்வாறு கூறினார்? ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகின்றார்" நான் காலியான வெற்றிடம். நான் ஒன்றுமே இல்லாதவன். ஒன்றுமே இல்லாதவனாக இருப்பதால், யார் யார் எந்தெந்த உருவை நேசிக்கின்றார்களோஅந்த உருவில் நான் அவர்களுக்குத் தோன்றுகின்றேன்." நமது முனிவர்களும் இதையே கூறியுள்ளனர். ஒருவன் நீர் போன்று இருத்தல் வேண்டும். நீரானது எந்தப் பாத்திரத்தில் ஊற்றப்படுகின்றதோ அதன் உருவில் தோன்றுவது போல நமது விழிப்புணர்வும் அந்நிலையிலேயே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.

சமுதாய நிறுவனங்கள் அரசியலில் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமா? அந்நிலையால் அதன் சுய பலம் குன்றி விடாதா?

குருதேவ்: ஒரு மேஜைக்கு நான்கு கால்கள் இருக்கின்றன. ஒரு கால் உடைந்துவிட்டாலும், மற்ற மூன்று கால்களின் உதவியுடன் அம்மேஜை நிமிர்ந்து நிற்கின்றதல்லவாஅது போன்று, சமுதாயத்தில், அரசியல் (அல்லது சமுதாயத்தின் வேறு ஏதாவது ஒரு பண்புக்கூறு ) இழிநிலை அடைந்து திறனிழந்து போனாலும், ஒழுக்க நெறியுடன் உயர்ந்திருக்கும் பிற பண்புக்கூறுகள் சமுதாயத்தைத் தாங்கி நிற்கும். எனவே, சமுதாய அமைப்புக்கள் அமைதியாக இருந்தாலோ, அல்லது சோர்வுற்று உதவியற்ற நிலையில் இருந்தாலோ அது சமுதாயத்திற்கு நல்லது அல்ல.
நிர்பயா(டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி) டெல்லியில் கற்பழித்துக் கொள்ளப்பட்டாள். ஏன் அனைத்து சமுதாய அமைப்புக்களும் அவளை ஆதரித்து ஒன்று திரண்டு நீதி கோரின? இது குற்றவியல் வழக்கு, காவல்துறையின் பொறுப்பு என்று கூறியிருக்கலாம், நாம் இதில் செய்யக் கூடியது என்ன? என்று எண்ணி, அமைதியாக இருந்திருந்தால், சமுதாயத்திற்கு நன்மை தருமா? இல்லவே இல்லை. சில சமயங்களில் பொங்கி எழுந்து நிலையை சீர்ப்படுத்துவதற்காகத் தலையிட வேண்டும்.

அது போன்று, சமுதாய அமைப்புக்கள் தவறு செய்தால், அப்போது அரசாங்கம் தலையிட வேண்டுமல்லவா? சமய எல்லைப் பரப்பில் தவறுகள் நிகழ்ந்தால், அரசு தலையிட  வேண்டும். அவ்வாறு தான் செய்து வருகின்றது. சமுதாயம் என்பது பல தனிப்பட்ட உருப்பொருட்களைக் கொண்ட ஒரு கலவையான அமைப்பு. சமுதாயத்தின் பல்வேறு பகுதிகளுக்கிடையே சுவர் எழுப்ப முடியாது. தொன்று தொட்டு இவ்வாறு தான் இருந்து வருகின்றது.

மகரிஷி விஸ்வாமித்திரர் தனது ஆஸ்ரமத்தில் தங்கி இருந்தார். சமுதாயத்தில் தீச்செயல்கள் நிகழ்ந்த போது, அரசர் தசரதனிடம் சென்று முறையிட்டு உதவி கேட்டார். ஸ்ரீ ராமர் மகரிஷியுடன்  சென்று, அமைதியும் ஒழுங்கும் நிலவ உதவி செய்தார். மகரிஷிக்குத் தொல்லை தந்து கொண்டிருந்த தீய சக்திகளை ஒடுக்கி மகரிஷியைக் காக்க வேண்டியது அரசர்களின் கடமையாக இருந்தது.

சமுதாயத்தின் ஒவ்வொரு அங்கத்திற்கும் பிறவற்றின் கடமைகளையும் பொறுப்புக்களையும் நினைவு கூற வைப்பது முக்கியப் பணியாகும். குறிப்பாக நல்லவர்கள் அரசியலுக்குள் நுழைய முன் வரவேண்டும். நல்லவர்கள் எதுவும் செய்யாமல் இருந்தால், தீய சக்திகள்மற்றும்  குற்றவாளிகள் சமுதாயத்தில் கேடுகளை விளைவிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். இந்த நாள் வரை, இந்தக் கணம் வரை நிகழ்ந்ததெல்லாம் இனி இல்லை. இனிமையானது, இனிமையற்றது, நல்லது, கேட்டது எதுவானாலும் இதுவரை நிகழ்ந்தவை அனைத்தும் இனி இல்லை. எல்லாம் முடிந்து விட்டது.

வாழ்வில் நாம் முன்னோக்கிச் செல்லும் போது, எல்லாமே ஒரு நாள் முடிந்து விடும் என்பதை உணருவோம். எதுவும் நிலைத்திருக்காது. ஆயினும், நாம் நிகழ்ந்து முடிந்தவற்றை பற்றியே எண்ணிக் கொண்டும், அவைகளைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டும் இருக்கின்றோம். உதறித் தள்ளுங்கள், ஒன்றுமே இல்லை என்பதை விழித்தெழுந்து காணுங்கள், ஒவ்வொன்றுமே ஒன்றுமில்லாதது, அதுதான் உண்மை. இதை நீங்கள் உணர்ந்தறிந்து கொள்வதே உங்களில் ஞானம் மலரப் போதுமானதாக ஆகும்.

எதுவும் எஞ்சியிருக்காது என்பதுதான் உண்மையில் ஒவ்வொன்றும் ஆகும். இதை நீங்கள் மீண்டும் மீண்டும் உங்களுக்கு நினைவுறுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் அது உங்கள் நினைவில் நன்றாகப் படியும் பகவத் கீதை முழுமையையும் செவிமடுத்த பின்னர், அர்ஜுனன், நான் "இதை நினைவில் கொள்கின்றேன்" என்று கூறினான். எதை அவன்நினைவில் கொள்கின்றான்? இவையனைத்தும் ஒன்றுமே இல்லைஅவ்வாறாயின் நான் இதற்குள் முடிந்திருப்பேன்" இவையனைத்தையும் நான் கடந்து விட்டேன், முன் நகர்ந்து கொண்டிருக்கின்றேன், இது எதுவும் என்னை தொடக் கூட இல்லை என்பதேயாகும். இதை நாம் மீண்டும் மீண்டும் நினைவுறுத்திக் கொள்ள வேண்டும்..