குற்ற உணர்ச்சியும் - நீயும்.

வியாழன், ஏப்ரல் 17 - 2014                  

பெங்களுரு, இந்தியா



கேள்வி — பதில்

குருதேவ், சில நேரங்களில் குற்ற உணர்ச்சி இல்லாமல் இருக்கிறேனே என்று எண்ணி குற்றமுள்ளவனாக உணர்கிறேன். நான் குற்றம் உள்ளவனாக உணர்வதில்லையென்றால், “கர்மா” என்ற சட்டத்தில் ஏதேனும் விளைவுகள் உண்டா?

அதை பற்றி கவலைப்பட தேவையில்லை. குற்ற உணர்வை உன்னுள் திணிக்க வேண்டியதில்லை. உண்மையிலேயே உனது ஆழ்மனதில் குற்றம்முள்ளவனாக உணர்கிறாய். ஆனால் அதை துடைத்து விட முயற்சி செய்கிறாய். அது தான் பிரச்சனைக்கு காரணம். உன்னுள் சிறிதளவேனும் குற்றம்முள்ளவனாக உணருவதாலும் மற்றும் நீ அதை வெளித்தள்ள முயற்சி செய்வதாலும், எதிர் மறை விளைவுகளை ஏற்படுத்துகிறாய்.ஆகவே நீ செய்யவேண்டியது எல்லாம் அதை ஏற்று கொள். தவறை ஒத்துக்கொண்டு அதற்கு உண்டான சரி செய்யக்கூடிய செயல்களை நீ செய்ய வேண்டும்.
நீங்கள் தவறை ஒத்துக்கொண்டு அதற்கு உண்டான பரிகாரம் அளிக்க கூடிய செயலை செய்ய விரும்பும் பொழுது உன்னுள் ஒரு அமைதியான சூழ்நிலை உருவாகிறது. ஆனால் குற்றத்தை துடைத்து விட்டு, ஒரு தவறும் நடவாதது போல் இருந்தாலும், அத்தகைய காரியங்களை செய்யவே இல்லை என்று இருந்தாலும்,உன்னுள் அது உறுத்த ஆரம்பித்து விடும். ஆகையால் முதல் நடவடிக்கையாக ஏற்றுக்கொள்ளுதல்,அதன் பின் தவறை சரி செய்யக்கூடிய காரியங்களை செய்தல். அவ்வளவு தானே! பின் வேண்டியதை செய்தாகி விட்டீர்கள்.

குருதேவ், எனது குறிக்கோளை அடைய நான் என்னை தயார் செய்ய வேண்டுமா அல்லது போகும் போக்கிலே நான் செல்ல வேண்டுமா? உங்களது பரிந்துரை என்ன?

இரண்டுமே தான். போகும் போக்கிலே என்று சொல்ல முடியாது. அதே நேரம், நீங்கள் போட்ட திட்டத்தில் மாட்டிக்கொள்ளவும் கூடாது. வளர்ச்சிக்கு இரண்டுமே அவசியம் தான். ஒரு காரியத்தை செய்வதற்கு திட்டமிட்டு, அதில் உனது முழு முயற்சியையும் காண்பித்து பிறகு சூழ்நிலைகளை ஏற்று கொண்டும் நடப்பது. 

குருதேவ், “எதையுமே எதிர்பார்க்காதீர்கள்” என சொல்லி உள்ளீர்கள்” ஆனால், ஏதோ ஒன்றை அடைய குறிக்கோள் வைத்திருப்பதும் “எதிர்பார்ப்பது” போல் தானே? இரண்டிற்கும் என்ன வேறுபாடு?

எப்பொழுதும் எந்த எதிர்பார்ப்புடனும் இருக்கக்கூடாது என்று நான் சொல்லவில்லை. நாங்கள் சொல்வது, “எதிர்பார்ப்பு மகிழ்ச்சியை குறைக்கும்” என்பது தான். இது விளக்கமாக சொல்லிய வாக்கியங்கள்.சில நேரங்களில் குறைந்த உற்சாகத்துடன் இருக்கலாம் தவறில்லை.  நேரங்களில் அதுவும் அவசியம் தான்.

குருதேவ், நீங்கள் கடவுளை பார்த்துள்ளீர்களா? பார்ப்பதற்கு எப்படி இருப்பார்?

அப்படியே உன்னை போன்றே. கடவுளின் உருவத்தில் நீ ஆக்கப்பட்டிருக்கிறாய்.

குருதேவ், ஏன் ஷண்முகாவிற்கு (கார்த்திகேயா) ஆறு தலைகள்?

ஒரே நேரத்தில் “ஷட் தர்ஷன்” (ஆறு இந்து வேதங்கள்) சொல்வதற்க்காக தான். ஆறு முகங்கள் – இதற்கு விசேஷ அர்த்தம் உள்ளது. வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு என்று நான்கு திசைகளை சொல்கிறோம்.பிரம்மாவிற்கு நான்கு முகங்கள் உண்டு. அவர் நான்கு திசைகளில் இருந்தும் ஞானங்களை பெறுகிறார் என்று அர்த்தம். ஆனால் கார்த்திகேயன் சிறப்புமிக்கவர். ஆகவே அவருக்கு ஆறு முகங்கள் உண்டு. ஆறாவது முகம், ஆறாவது அறிவை குறிக்கிறது. அவர் நான்கு திசைகளில் இருந்தும், மேலிருந்தும் மற்றும் கீழிருந்தும் ஞானத்தை பெறுகிறார் எனவும் கூறப்படுகிறது..இது போல் பலவாறு அர்த்தம் செய்து கொள்ளலாம்.

மனிதர்களின் புத்திக்கு இடையூறு விளைவிக்கக்கூடிய ஆறு வகையான குறை பாடுகள்(வாசனா). இந்த ஆறு வகையான குறைபாடுகளை நீக்ககூடியவராக கார்த்திகேயன் விளங்குகிறார். அதாவது:- காம (சிற்றின்ப ஆசை), க்ரோதம் (கோபம்), லோபம் (பேராசை), மோஹம்(பந்த,பாசங்கள்), அஹங்காரம் (தற்பெருமை) மற்றும் மாத்சர்ய (பொறாமை). ஆறு குறைபாடுகள் கார்த்திகேயனின் ஆறு முகங்களால் நீக்க படுகிறது. இந்த ஆறு எதிரிகளையும் கார்த்திகேயன் ஆறு முகங்களால் நீக்கப்படுகிறது.

இந்த ஆறு வகையான் தர்ஷன் ( ஆறு வகையான வேதாந்தங்கள் )
1. சாங்க்ய (உள்ளுணர்வு மற்றும் பொருள் பற்றிய தத்துவ விளக்கம்)
2. நியாய (ஞானத்தின் பிறப்பிடத்தை நன்றாக ஆராய்தல்
3. யோகா (தியானம், ஆழ்ந்த சிந்தனை மற்றும் விடுதலை)
4. விசேஷிக (பரமாணு பற்றிய ஆய்வு)
5. மீமாம்ச (நடத்தைகளை பற்றி சொல்வது)
6. வேதாந்த (வேதங்களின் அறிவு)

பிறகு அதில் ஆறு வேதாங்காஸ் (வேதங்களின் அங்கங்கள்)
1.ஜோதிடம்( ஜோதிட சாஸ்திரம்)
2.சந்தஸ் (அளவு)
3.நிருக்த (சொல் இலக்கணம்)
4.வியாகரணம்  (இலக்கணம்)
5.சிக்க்ஷா  (உச்சரிப்பு கலை)
6.கல்ப (சடங்குகளை பற்றியது)
ஆறு “வேதாங்காஸ்” மற்றும் ஆறு “உபாங்காஸ்” களும் ஞானத்தின் அடையாளமாக கார்த்திகேயனை நமக்கு தெரிவிக்கிறது.