சரணடைதல் - மிகவும் சக்தி வாய்ந்தது…

26 ஏப்ரல், 2014

பெங்களூரு, இந்தியா


கேள்விகளும் - பதில்களும்

குருதேவ், சரணடைதல் பற்றிக் கூறுங்கள். மக்கள்பெரும்பாலும் சரணடைதலை பலவீனத்துடன் இணைக்கின்றார்கள்.

குருதேவ்: சரண் என்னும் சொல்லுக்கு இரண்டு கோணங்கள் உள்ளன. ஒன்று கீழை நாடுகளில் சரணடைதலைக் காணும் கோணம்மற்றொன்று மேலை நாடுகளில் அதன் பார்வை. நீங்கள் தோற்கடிக்கப்படும் போது சரணடைந்து விடுகின்றீர்கள் அல்லவா? ஒருவித அடிமைப்படுதல்.   அடிமைகள் தங்களை ஒப்புவித்து விடுகின்றார்கள். இது உள்ளார்ந்து எழுவதல்ல, உடல், மன உணர்ச்சிகளின் பலவீனம் ஆகும். பலவீனத்தின் காரணமாக கீழ்படிந்து விடுகின்றீர்கள். இது ஒருவிதமான சரணடைதல் ஆகும்.

ஆன்மீகத்தில்  இது முற்றிலும் மாறுபட்டதாகும். எதிர்மறை உணர்ச்சிகளாலும்,குணங்களினாலும் அல்லல்படுகின்றீர்கள், அவற்றுக்கு ஈடுகொடுப்பது உங்களுக்கு மிகுந்த சிரமமாக உள்ளது. ஏற்றுக் கொள்ள விருப்பமில்லாத, கையாள முடியாத அனைத்து எதிர்மறைகளையும், கீழே விட்டு விடுதல், ஆன்மீகத்தில் சரணாகதி ஆகும். மேலை நாடுகளில் தோல்வியை குறுப்பிடும் சரணடைதல் என்பதிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டதாகும்.இங்கு சரணடைதல் என்பது வெற்றி கொள்வதாகும். எதிர்மறைகள் அனைத்தையும் துறந்து, உங்கள் மனதையும் உங்களையும் வெற்றிக் கொள்வது ஆகும். 

ஆன்மீகப் பொருளில், சரணடைதல் என்பது பலத்தைக் குறிக்கும், அடிமைத்தனத்தை அல்ல. வைஷ்ணவக் கோவில்களில் சரணாகதி என்பது இறைவனை சரணடைவது. நீங்கள் சரணடையும் போது உங்களுக்குக் கிரீடம் வைக்கின்றார்கள். பணிந்து சரணடையும், உங்கள் தலையில் இறைவனின் பாதங்களான வெள்ளிக்கிரீடத்தை வைக்கின்றார்கள். இதன் பொருள் என்னவென்றால், உங்கள் எதிர்மறைகளை, துறந்து சரணடையும் போது நீங்கள் பலமடைந்து அரசன் போன்று ஆகின்றீர்கள்.கன்னடத்தில்,சரண சரணார்த்தி "அதாவது சரண் அடைந்தவரிடம் சரண் அடைகின்றேன் என்பதாகும். இங்கு சரணடைந்தவர் என்பது துறவிகளை குறிக்கும். துறவிகள் பலம் உள்ளவர்கள்.  மிகவும் போற்றப்படுபவர்கள். ஏனெனில் அவர்கள் தங்கள் எதிர்மறைகள் அனைத்தையும் விடுத்து இறைமையிடம் சரண் புகுந்தவர்கள். எதிர்மறைகள் மறைந்து முற்றிலும் நேர்மறையில் நிற்கும் நிலையே துறவுநிலை ஆகும். சரணடையாமல் துறவு நிலை ஏற்படாது. துறவு நிலை அடிமைத் தனம் அல்ல. துறவு நிலை என்பது மிகுந்த பலமுடன் இருப்பதை குறிக்கும். துறவு நிலை, அடிமை நிலை இரண்டிலும் சரணடைதல் என்னும் சொல் பயன் படுத்தப்படுகின்றது. ஒன்று எதிர்மறையை விடுதல், மற்றொன்று பலவீனத்தை ஏற்றுக் கொள்ளுதல். இதுதான் சரணடைதலின் இரண்டு பக்கங்கள்.

உங்களுக்கு வேண்டாத எதிர்மறைகளை துறந்து சரணடையும் போது, மிகவும் பலம் வாய்ந்தவராக ஆகின்றீர்கள். ஆன்மீக சரண் உங்களை பலப்படுத்துவதுமேலை நாடுகளின் சரண் உங்களைப் பலவீனப்படுத்துவது. உங்களை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்ல விரும்புகின்றேன்.துறப்பதற்கு என்ன இருக்கின்றது? எதுவுமே இல்லை.! உங்களைத் தளர்த்திக் கொள்ளுங்கள். எல்லாமே எப்போதும் இப்பிரபஞ்சத்தை சேர்ந்தவையாகும். அனைத்தும் இறைவனை சேர்ந்தவை ஆகும். ! என்னால் நூறு சதவீதம் துறக்க இயலவில்லையே!“ அல்லது நான் அனைத்தையும் துறந்து விட்டேன்!என்றெல்லாம் எண்ணித் துன்புறாதீர்கள். இவையெல்லாம், மனதின் விளையாட்டுப் பயிற்சிகள் தாம். அனைத்தையும் விட்டுவிடுங்கள், தளர்த்திக் கொள்ளுங்கள்எண்ணங்களில் தூய்மை, மனதில் தெளிவு, செயலில் நேர்மை இவற்றுடன் எளிமையாக இருங்கள்.

குருதேவ், தியாகம் என்பது என்னநான் எதை தியாகம் செய்யவேண்டும்? எப்படி செய்ய வேண்டும்?

குருதேவ்: முதலில் தியாகம் என்றால் என்ன என்று நாம் புரிந்து கொள்ளுவோம். உங்களுக்கு விருப்பமான ஒன்றை நீங்கள் உங்களுக்கென்று அடைய என்னும் போது, அது மற்றவர்களுக்கு அதிகம் பயன் தரக்கூடியது என்று நீங்கள் அதை விட்டுக்கொடுப்பது தியாகம் ஆகும். நீங்கள் ஒரு உல்லாசப் பயணம் அல்லது திரைப்படம் செல்ல விரும்பி, அச்சமயம் பலருக்குப் பயன் தரக்கூடிய பணியின் பொருட்டு வேறெங்காவது செல்லவேண்டிய தேவை ஏற்பட்டால் உங்கள் விருப்பத்தைக் கைவிட்டு பணிபுரியச் செல்கிறீர்கள். அது தான் தியாகம்.

அன்பு இருக்குமிடத்தில் தியாகம் தேவையே இல்லை. குழந்தை உடல் நலமின்றி இருக்கும் போது அதன் தாய் உல்லாசப் பயணத்தைத் தியாகம் செய்தாள் என்று கூறுவதற்கில்லை. குழந்தையின் உடல்நலம் தான் தாய்க்கு மிக முக்கியமானது, எனவே அவள் தியாகம் எதுவும் செய்யவில்லை. நான் கூறுவது உங்களுக்குப் புரிகின்றதாநீங்கள் ஆழமாக எதன் மீதாவது விருப்பம் கொண்டு பிறருக்கு நன்மை அளிக்கும் என்னும் காரணத்தால் அதை துறப்பது தான் தியாகம் ஆகும்.

அன்புள்ள குருதேவ், எதைச் செய்தாலும் அதில் நான் பாராட்டை எதிர்பார்க்கின்றேன். இதிலிருந்து எவ்வாறு விடுபடுவது?

குருதேவ்: நீங்கள் அதைப் புரிந்து கொண்டிருப்பதே முன்னேற்றத்தின் முதல்படி. இப்போது பிறர் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலைப்படாதீர்கள். நான் செய்ய வேண்டியதை நான் செய்ய வேண்டும்பிறர் என்ன கூறுகின்றார்கள் என்பது எனக்கு முக்கியமல்ல என்னும் உறுதியைக கைக்கொள்ளுங்கள். அப்போது தேவையான பலம் உங்களை வந்தடையும்.

குருதேவ், பகவத் கீதையின் ஒன்பதாவது அத்தியாயத்தில் ஞானத்திற்கும், செய்திகளுக்கும் வேறுபாடு உண்டு என்று கூறியிருக்கின்றீர்கள். இதை விளக்கிக் கூற முடியுமா?

குருதேவ்: செய்தி என்பதை ஒரு கணினி கூடத் தரமுடியும். மனதை செய்திகளால் நிரப்பிக் கொள்வது ஞானம் அல்ல. ஒருவன் ஏராளமான புத்தகங்களை படித்து அப்புத்தகங்களிலுள்ள அனைத்து தகவல்களையும் அறிந்து கொண்டால் அவனை ஞானி என்று நாம் கருதுவதில்லை.
ஒருவன் வேதங்களையும், குரானையும், பைபிளையும் மனப்பாடம் செய்து அத்தியாயங்கள், பக்க எண்கள், செய்யுள்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டுக் காட்டிகொண்டிருந்தால் அவன் நிறையத் தகவல்களைத் திரட்டியிருக்கின்றான், நன்றாக மனப்பாடம் செய்திருக்கின்றான்..அது ஞானம் அல்ல.

எது வாழ்கையின்  அனுபவம் ஆகின்றதோ அதுவே ஞானம்...எது உங்களை விடுதலை பெறச் செய்கின்றதோ, எது உங்களுக்குள் அமைதிக்கடலின் கணநேரக் காட்சியை உங்களுக்குத் தருகின்றதோஅதுவே ஞானம். எது உங்களுக்குள் அன்பு அலையை எழுப்பி உங்களது பண்பியல் தொகுப்பில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றதோ அதுவே ஞானம். தகவல்களை திரட்டுவது என்பதை அறிஞர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் செய்து வருகின்றார்கள். அவர்கள் தகவல்களைத் திரட்டி அவற்றைத் மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் ஒரு மெய்யறிவுச் சொல்லைக் கூடக் கூறிக் கேட்க முடியாது. இது ஏனெனில் ஞான அறிவு அவர்கள் வாழ்க்கையில் ஊடுருவவில்லை. அவர்கள் ராகா (வேட்கை) த்வேஷா (கசப்புணர்வு) ஈர்ஷா (பகை) அஹங்கார்
(அகந்தை) இவற்றில் கட்டுண்டு இருக்கின்றார்கள். எவ்வாறு அவர்களை நாம் ஞானி என்று கருத முடியும்?

குருதேவ், தற்காலத்தில், நல்லவனாக இருந்து குரலெழுப்புவது மிகவும் கடினமாக உள்ளது. தீயவர்கள் எங்கிருந்து இவ்வளவு அதிகமான பலம் பெறுகின்றார்கள்?

குருதேவ்: பலம் எங்கே இருக்கின்றது? வெறும் இரைச்சல் தான் உள்ளது. தவறானவர்களால் கூச்சலிடத் தான் முடியும். சரியானவர்கள் ஏதாவது சந்தர்ப்பங்களில் மிகக் குறைவாகவே இங்கும் அங்கும் பேசலாம், ஆயின், அவர்களிடம் பலம் மிகுந்திருக்கின்றது. அவர்களது பணியும் நிறைவடைகின்றது.

குருதேவ், பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளபடிதாங்கள் எங்களுடைய அத்தனை எதிர்மறை குணங்களையும் தங்களிடம் ஒப்புக் கொடுக்குமாறு கூறினீர்கள். ஆனால், என்னுடைய எதிர்மறை குணங்களால் நான் பாதிக்கப்படாத போது எவ்வாறு அவற்றை ஒப்புக் கொடுப்பது?

குருதேவ்: உங்களது எதிர்மறைக் குணங்களால் நீங்கள் பாதிக்கப்படும் போதுதான் அவற்றைச் சரணடையச் செய்ய விரும்புவீர்கள். ஒரு காயம் ஏற்பட்டு அதனால் வலியை உணர்ந்தால் தான் நீங்கள் ஒப்புக் கொடுக்க வேண்டும் என்று உணருவீர்கள். அப்போது, இதை விட்டு விடுத்து, என்னுள்ளேயே காலியாகவும், வெற்றிடமாகவும் உணர வேண்டும் என்னும் எண்ணம் தோன்றும். எத்தனை நாட்கள் தாம் வலியினால் துன்புற முடியும்? எவ்வளவு முடியுமோ அத்தனை காலம் வருந்துங்கள், இனி முடியாது என்னும் நிலை ஏற்படும்போதுசரணடைந்து விடுங்கள். வலியையும் வேதனையையும் அனுபவிக்கும் போது அதை அனுபவித்து விடுங்கள். இனிமேல் தாங்கவே  முடியாது என்னும் நிலை வரும் போது, தானாகவே உள்ளிருந்து சரணடைந்து விடு என்னும் குரல் எழும்பும்.