சேவையின் மெய்க்கருத்து

5 ஏப்ரல் 2014

புனே, மகாராஷ்டிரா

மக்கள், ''குருதேவ், இது தேர்தல் நேரமாக இருக்கின்றது ஏன் மகாராஷ்டிரா செல்லுகின்றீர்கள்? என்று கூறுகின்றார்கள். நான் தேர்தலானாலும், இல்லையானாலும் எனக்கு ஒன்று தான். எல்லா காலங்களும் எனக்கு ஒன்றானதே. தேர்தல் நேரத்தில் இங்கு வந்து மக்களுக்கு, மற்றும் நாட்டுக்கு ஏதேனும் செய்ய விழிப்புணர்வூட்டுவது என்பது எனக்கு முக்கியமானது.

நீங்கள் இன்று கண்டது போல, நான் இந்தியாவின் மேம்பாட்டுக்கு விருப்பார்வ தொண்டர்கள் குழுவை சார்ந்த ஆர்வலர்களை சந்தித்தேன். 


அவர்கள் ஆற்றியிருக்கும் சிறப்பான பணியை கண்டு மகிழ்ந்தேன். 



புனேயில் ஐம்பத்து நான்காயிரம் மக்களைவாக்காளர் பட்டியலில் இணைத்திருக்கின்றார்கள். நமது இளைஞர்கள் நாட்டுப்பணிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள முன் வருகின்றார்கள். இது மிகுந்த மகிழ்ச்சிக்குறிய செயலாகும். இயற்கை பேரழிவுகள், சுற்றுச் சூழலுக்கு சரியில்லாத ஒன்றை செய்கிறோம் என்பதை எச்சரிக்கின்றன. நாம் சுற்றுச்சூழலுக்கு கவனம் செலுத்துவதில்லை.

கடந்த மாதம், விவசாயிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இங்கு மகாராஷ்ட்ராவில் ஒரு இயற்கை பேரழிவு ஏற்பட்டது. இதுவரை இப்படி ஒரு அழிவை யாரும் கேள்விப்பட்டதில்லை. பெரும் புயற்காற்றோடு கூடிய ஆலங்கட்டி மழை ஏற்பட்டு, பயிர்கள் நாசமாகிவிட்டன. படங்களை கண்டபோது, மகாராஷ்டிரா காஷ்மீரை போன்று காட்சியளித்தது. இந்த இயற்கைப்பேரழிவு சரியற்ற ஒன்றை நமது சுற்றுச்சூழலுக்குச் செய்கின்றோம் என்று நமக்கு ஒரு எச்சரிக்கை விடுத்திருக்கின்றது.

பல இடங்களில் ப்ளாஸ்டிக்கை எரிக்கின்றோம். ஒரு பிளாஸ்டிக் பை எரியும் போது வெளியாகும் நச்சுப் பொருள் 1000 பேருக்கு புற்றுநோய் ஏற்படக் காரணம் ஆகும். நாம் மிகவும் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். வயல்களில் நச்சு நிறைந்த பூச்சிக் கொல்லிகளை போடுவதால், நிலம் பாழாகின்றது. நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்படுகின்றது. இன்று நமது இந்திய மண் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருக்கின்றது. ரத்த சோகை என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? ரத்தத்தில் இரும்புசத்துக் குறைபாட்டால் மனித உடலில் ஏற்படுவது ரத்த சோகை. அது போன்று, ஹைட்ரோகார்பன் குறைவினால் மண்ணிற்கு ஏற்படும் சோகை நோய். சராசரியாக இந்திய மண்ணில் 0.3 சதவீதம் முதல் 0.4 சதவீதம் வரை ஹைட்ரோ கார்பன்கள்  இருக்கின்றன. 

வெளிநாடுகளில் உள்ள மண்ணில் 5 முதல் 6 சதவீதம் வரை ஹைட்ரோ கார்பன்கள் இருக்கின்றன. நமது நாட்டு நிலம் சோகையால் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையை மாற்ற நாம் அனைவரும் முயற்சிகள் எடுக்க வேண்டும். நமது  சுற்றுச் சூழலைப் பாதுகாத்து, இந்நிலையை மாற்றி அமைக்க வேண்டும். மிகவும் முக்கியமானது. இரண்டாவதாக நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சினை ஊழல் ஆகும். நாட்டிலிருந்து ஊழலை அகற்ற வேண்டும். நல்லோர்களின் குரல்கள் கேட்கப்பட வேண்டும். சில சட்டங்களை இயற்றுவதன் மூலம் ஊழலை நீக்கிவிட முடியாது. ஊழலுக்கேதிரான சட்டங்கள் மிக முக்கியமானவை தாம், பெரும் திரளான மக்கள் ஆன்மீக வழியை மேற்கொண்டு, லஞ்சம் கொடுக்கவோ வாங்கவோ மாட்டோம் என்று மிக உறுதியாகத் தீர்மானித்தால் தான் நமது நாட்டின் அந்நிலை மாறும். எங்கு சார்புடைமை இல்லையோ அங்கு ஊழல் துவங்குகின்றது. எனவே, ஊழலை ஒழிக்க, நாம் ஆன்மீக அலையை நம் நாட்டில் ஏற்படுத்த வேண்டும். இது மிகத் தேவையான ஒன்று.

இப்போது நமது நாட்டில் அதிக வன்முறை உள்ளது. ஏன் மக்களுக்கு இத்தகைய வன்முறை உணர்வு ஏற்படுகின்றது?சேவையின் மெய்க்கருத்து மறையும்போது வன்முறை மேலோங்குகின்றது. ஒருவன் பிறருக்கு உதவுவதிலோ, அல்லது சமூக சேவையிலோ ஈடுபட்டால் மகிழ்ச்சி அலைகளும் பேரானந்தமும் அவர்கள் வாழ்வில் ஏற்படும். இளைஞர்களுக்கு இது மிகத் தேவையான ஒன்றாகும். ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் நம் நாட்டுப் பணிக்காக செலவிடுங்கள்.ஒரு வாரத்திற்கு ஏழுமணி நேரம் தந்தால் சமுதாயத்திற்கு மிகச் சிறந்த பணியினை செய்யலாம். ஆகவே ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் நாட்டுக்காக தாருங்கள். இந்த விழிப்புணர்வை நம்மைச் சுற்றி இருக்கும் மக்களிடையே நாம் ஏற்படுத்த வேண்டும். இதை செய்யத் தயாராக இருக்கின்றோமா? தயாராக இருக்கின்றீர்கள்? (பலர் கை உயர்த்துகின்றனர்)

நமது நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டும். ஊழல் சில சட்டங்களை இயற்றுவதன் மூலம் அகலாது. மக்கள் ஆன்மீக வழியை மேற்கொண்டு, லஞ்சம் கொடுக்கவோ வாங்கவோ மாட்டோம் என்று மிக உறுதியாகத் தீர்மானித்தால் தான் நமது நாட்டின் நிலை மாறும். ஒவ்வொரு நாளும் நீங்கள் கூற, இன்று நான் உங்களுக்கு ஒரு மந்திரம் கற்பிக்கின்றேன்.  அம்மந்திரம் "அன்னதாதா சுகி பவா" என்பதாகும். இதன் பொருள் "இவ்வுணவை எனக்கு அளித்தவன் மகிழ்வுடனும் திருப்தியுடனும் இருக்கட்டும்" உணவை உண்ணுவதற்கு முன்னர், ‘அன்னதாதா சுகி பவா என்று கூறுங்கள். இம்மந்திரத்தின் மூலம், உழவர்களின்  நலனுக்காக நாம் பிரார்த்திக்கின்றோம். ஒரு விவசாயி மகிழ்வின்றி இருந்தால்,அவன் பயிர் செய்யும் தானியங்கள் சத்துள்ளவையாக இருக்காது. அதை உண்பவரும் நலமின்றி இருப்பார். எனவே, அன்னதாதா சுகி பவா எனப் பிரார்த்திப்போம்.நம் 

நாட்டு உழவர்கள் மகிழ்வுடனும் செல்வச் செழிப்புடனும்  வாழட்டும்! அடுத்ததாக நான் நம் நாட்டு தொழில் மற்றும் நிதி நிலை பற்றிப் பேச விரும்புகின்றேன். தொழில்துறையினர் மகிழ்வற்று இருக்கும் நிலையில் தான் ஊழல் போன்ற தவறான செயல்களில் புகலிடம் பெறுகின்றார்கள். ஏன் வணிகர்கள் கலப்படம் செய்கின்றார்கள்?அதிலும் தற்காலத்தில் கலப்படம் மிகுதியாக உள்ளது. இறைமையிடம் நமது வணிக துறையினருக்கு  சத்புத்தி (நல்லறிவு)) ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள்.  கலப்படத்தினால் ஏற்படும் தீங்குகளை அவர்கள் புரிந்து கொண்டு அத்தகைய தவறான நடைமுறைகளை பின்பற்றக் கூடாது.

மகாராஷ்ட்ராவில் நிலைமை பரவாயில்லை.டெல்லியில் கலப்படப் பிரச்சினை மிகவும் பரவி பெருகியுள்ளது. உணவில் கலப்படம் மிகுதியாகி, இனிப்பு வகைகளை உண்பதற்கே பயமாக உள்ளது. பால் பற்றாக்குறையினால் இனிப்பு வகைகளில் யூரியாவையும், செயற்கை ரசாயனப் பொருட்களையும் கலந்து விடுகின்றார்கள்.

ஆகவே, நமது தொழில் வல்லுனர்கள்  மற்றும் வணிகர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.  அவ்வாறு மகிழ்வுடன் இருந்தால் தவறு எதுவும் செய்ய மாட்டார்கள். சந்தோஷமாக இருக்கும் ஒருவன் பிறருடன் சண்டயிட மாட்டான். மகிழ்வற்றும், திருப்தியற்றும் இருக்கும் ஒருவன், தனக்கும், தன்னை சுற்றி இருப்பவர்க்கும் தீங்கிழைக்கின்றான். மூன்றாவதாக நான் நம் நாட்டு மகளிரை பற்றிப் பேச விரும்புகின்றேன். நமது நாட்டு மகளிர் மகிழ்வற்று இருக்கும் போது நாடே மகிழ்வற்றுப் போய்விடும். ஒரு குடும்பத் தலைவி .மகிழ்வற்று இருக்கும் போது, அக்குடும்பமே அமைதியற்று இருக்கும். எனவே நாம் அனைவரும், நமக்கு சமைத்து உணவளிக்கும் பெண் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.அன்ன தாதா சுகி பவா என்று பிரார்த்தித்துப் பெண்களை ஆசீர்வதிக்க வேண்டும். நமது நாட்டைப் பலப்படுத்த நாம் அனைவரும் மனதில் திடமான உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். நூறு சதவீதம் வாக்களிப்பு நிகழ வேண்டும். நல்லவர்களை தேர்ந்தெடுத்து பதவியில் அமர்த்துவது நமது பொறுப்பு. நேர்மையானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். நல்லவர்கள் இன்றும் இருக்கின்றார்கள், அவர்களை தேர்ந்தெடுங்கள். குற்றவாளிகள், ஊழல் மிகுந்தோர் ஆகியோரை தேர்ந்தெடுக்காதீர்கள்.இதை நீங்கள் நன்கு கவனித்துக் கொண்டால், இன்று நமது நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளிருந்து விடுபடலாம்.

நமது நாட்டின் பொருளாதாரம் மிக ஆபத்தான நிலையில் உள்ளது. அதிலிருந்து மீண்டு வருவதற்கு ஒரு வலுவான அரசு அதிகாரத்திற்கு வர வேண்டும்.பண வீக்கத்தைக் குறைக்க அதுவே உதவும். எனவே நாம் அனைவரும் இதற்காக உழைக்க வேண்டும்.

ஆன்மீகவாதிகள் எந்த குறிப்பிட்ட கட்சியையும் சார்ந்தவர் அல்லர். அவர்கள் அனைவரையும் சார்ந்தவர்கள். உச்சநீதி மன்றத்தின் நீதிபதி ஏதேனும் கட்சியைச் சார்ந்தவரா என்ன? ஒரு டாக்டர் குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்தவர்களுக்கே வைத்தியம் செய்கின்றாரா என்ன? டாக்டர் ஒரு கட்சியைச் சார்ந்தவாரக இருந்தால் எவ்வாறு பிறகட்சியினர் அவரிடம் சிகிச்சைக்கு செல்வார்கள்? அதுபோன்று, ஆன்மீகவாதிகளும் அனைவருக்கும் பொதுவானவர்கள். பலமுறைகள்பலர் என்னை "குருதேவ்! தாங்கள் ஆன்மீகத்தைக் கற்பிக்க வேண்டியவர்ஏன் ஊழல் மற்றும் சமுதாயப் பிரச்சினைகளை விவாதிக்கின்றீர்கள்?" என்று கேட்கின்றனர். நாட்டை நேசிப்பதும், தெய்வீகத்தை நேசிப்பதும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது என்று கூறுகின்றேன். அவ்வாறு இல்லையெனில் ஏன் சாம்ராட் ராமதாஸ் அவர்கள், மன்னர் சிவாஜியை நியாயத்திற்காகப் போரிடத் தூண்டினார்? மன்னர் சிவாஜியை ராமதாஸ் தூண்டவில்லையா என்ன? தொன்று தொட்டு இது நமது மரபு ஆகும்.

எப்போதெல்லாம்,நன்னடத்தை வீழ்ச்சியுற்று ,சமுதாயத்தில் பிரச்சினைகள் ஏற்படுகின்றனவோ, அப்போதெல்லாம், ஆன்மீகவாதிகள் முன்வந்து பொறுப்பெடுத்துக் கொண்டிருந்திருக்கின்றார்கள்.

இது எனது  கடமை, இதை நான் செய்வேன். தர்மம் எப்போது வீழ்கின்றதோ, அப்போது ஆன்மீகத் தலைவர்கள் அதற்கெதிராக குரலெழுப்புவர். கடந்த காலத்தில் அவ்வாறு நிகழ்ந்திருக்கின்றது, வருங்காலத்திலும் நிகழும். சமுதாயப் பிரச்சினைகள் எழும்போது ஆன்மீகத் தலைவர்கள் எழுந்து குரல் கொடுப்பார்கள். 

தொடரும்....