மிகப் பழமையான இலக்கியம்.

18 ஏப்ரல் 2014

பாலி, இந்தோனேசியா

(உலகெங்கிலும் உள்ள ஹிந்து சமய வல்லுனர்கள், இரண்டாம் ஹிந்து ஞான சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு பாலியிலுள்ள டென்பசார்ரில் கூடியிருந்தனர். அதில் ஹிந்து சமயம் சார்ந்த கல்வி முறை மற்றும் உலகெங்கிலும் ஹிந்துக்கள் முக்கியமாகக் கல்வியில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஆகியவை விவாதிக்கப்பட்டன. அக்கூட்டத்தின் இறுதியில் குருதேவ் ஆற்றிய முடிவுரையின் எழுத்துப் படிவம் கீழே தரப்பட்டுள்ளது)


வேத ஞானம் மற்றும் அறிவு இந்த மகாநாட்டின் கருப்பொருள் ஆகும். கடந்த மூன்று தினங்களாக பல்வேறு உலக நாடுகளிலிருந்தும் மக்கள் இதில் கலந்து கொண்டு, பழமையான ஞான அறிவினைத் தற்காலத்தில் செயல்படுத்தும் வழிகள் குறித்து விவாதித்திருப்பதை அறிகின்றேன். இம்மாநாட்டின் தலைவரையும், மேயர் மற்றும் அவரது பாண்டுங் பிரதிநிதி, ஆகியோரையும் நான் பாராட்டி வாழ்த்துகின்றேன்.

இம்மாநாட்டுத் தலைவர் இப்போது கூறியது போல,கையில் ஒளிப்பந்தம் இருந்தால் மட்டும் போதாது அதை எவ்வாறு ஒளிவீசச் செய்வது என்பதை அறிய வேண்டும். இந்து சமய ஞானம் தற்போது எதிர்கொண்டிருக்கும் பிரச்சினை இதுவே. ஹிந்து சமயத்தில் ஏராளமான ஞானச் செறிவு உள்ளது. ஹிந்து சமயம் ஒரு நூலை அடிப்படையாக கொண்டதல்ல, நூற்றுக்கணக்கான நூல்களை அடிப்படையாக கொண்டது. வெவ்வேறு ஞான செய்திகள் அடங்கிய அரும்பொக்கிஷம். துரதிர்ஷ்டவசமாக அவை அறிவியலை போன்று  அல்லாமல் கல்வி சமூக, மற்றும் பொருளாதாரத் துறைகளில், ஒழுங்கமைக்கப்பட்டு இணைக்கப்படவில்லை.

ஹிந்துயிசமானது நேபால், பிஜி, இந்தியா, மொரிஷியஸ், கர்ரிபியன் மற்றும் இங்கு பாலியிலும் நிலவி வருகின்றது. இவை ஒன்றோடொன்று வேறுபட்டிருந்தாலும், ஒரு உள்ளார்ந்த இணைநூல், பழமையான ஞானச் செறிவை போற்றி வருகின்றது.மார்கண்டேய ரிஷி இங்கு பாலிக்கு வந்திருந்தார் என்பதை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். எவ்வாறு பழங்கால முனிவர்கள் இங்கு வந்து அந்த ஞானத்தை உயிர்ப்பித்திருந்தார்கள் என்பதை உங்களிடமுள்ள ரிஷிக்களின் வரலாறு உண்மை என்று ஏற்றுக்கொள்கின்றது.

துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் ரிஷிக்கள் வாழ்ந்திருந்ததை கல்வி முறை உண்மை என்று ஏற்றுக் கொள்ள வில்லை. அவர்கள் அவற்றை புராணக் கட்டுக்கதை என்றே எண்ணுகின்றார்கள். இத்தகைய வரலாற்றுச் சிதைவு நிகழ்ந்ததால், இக்கால இளைஞர்கள் அது உண்மை அற்ற கற்பனைப் புனைவு என்றே கருதுகின்றார்கள். இந்தியாவிலுள்ள வரலாற்றுப் புத்தகங்கள் ஒரு ரிஷியைப் பற்றிக் கூடக் குறிப்பிடவில்லை. மத்திய கால வரலாற்றிலிருந்தே குழந்தைகள் படித்து வளருகின்றார்கள். இதன் விளைவாக குழந்தைகள் மனதில் எதிர்த்தாக்கம் ஏற்பட்டு, தங்களுடைய பாரம்பரியத்தைப் பற்றிப் பெருமையற்று இருக்கின்றார்கள்.

எந்தக் கலாச்சாரத்தின் பாரம்பரியம் மற்றும் பெருமை அழிக்கப்படுகின்றதோ அந்தக் கலாச்சாரமே அழிவுருகின்றது. அதை தான் நாம் மீட்டுக் கொண்டு வரவேண்டும்.
அதிர்ஷ்டவசமாக இங்கு பாலியில் பழமையான ஞானச் செறிவை நீங்கள் பாதுகாத்திருக்கின்றீர்கள், நீங்கள் வாழ்த்தப்பட வேண்டும். இத்தகைய மாநாடு நடைபெற இது மிகவும் உகந்த இடமே ஆகும்.

இன்றைய உலகம்சமய வெறி, தீவிரவாதம், வன்முறைகள், ஆகியவற்றை எதிர் கொண்டிருக்கின்றது. இதற்கான தீர்வை "ஆனோ பாத்ரா க்ருத்வோ யந்து விஸ்வதஹ" இதன் பொருள்: எல்லாத் திசைகளிலிருந்தும் நல்ல எண்ணங்கள் என்னை வந்தடையட்டும்என்று கூறும்  பண்டைய அறிவிலேயே நான் காண்கின்றேன். ஹிந்து அல்லது வேத கல்விமுறையால், வாழ்வியல் மற்றும்  சமயம் இவற்றை குறித்து   சகிப்புத் தன்மை மற்றும் பரந்த கண்ணோட்டத்தை கொண்டு வர முடியும். எல்லாப் பக்கங்களிலிருந்தும் ஞானம் என்னை வந்தடையட்டும் என்று கூறுவதால், ஹிந்து சமயநெறியால் தீவிரவாதத்தை முளையிலேயே கிள்ளி எறிய முடியும்.

ஞானம் எங்கிருந்து வந்தாலும் அதை நாம் போற்றிப் பாராட்ட வேண்டும். அதை நாம் போற்றினால் தீவிரவாதம், சமயவெறிவன்முறை ஆகியவை  இருக்க முடியாது. ஒரு உண்மைக்கு பல வழிகள் உள்ளன என்று வேத ஞானம் கூறுகின்றது. இது ஒன்று மட்டுமே வழி, இதைப் பின்பற்றாவிட்டால் நீ நரகத்திற்குச் செல்வாய் என்று அது கூறவில்லை. ஒரே ஒரு உண்மைஒரு ஒளி, பல பெயர்கள் பல உருவங்கள்,பல வழிபாட்டு முறைகள் கொண்ட ஒரே ஒரு தெய்வம் என்று கூறுகின்றது. உலகனைத்தையும் ஒரே குடும்பமாக காணும் அத்தகைய பரந்த கண்ணோட்டம்வேத கல்வி முறையின் மூலம் வரும்.

கல்வி நம்மைத் தளர்த்த வேண்டும், இறுக்கமாக்கக் கூடாது, புத்துயிரளிக்க வேண்டும், அலைக்கழிக்கக் கூடாது, வெறியனாக்கக் கூடாது, நம்பிக்கயுள்ளவராக்க வேண்டும். மேலும் அனைத்தும் இணைந்திருக்க வேண்டும். நமது பார்வையை விரிவாக்கிக் கொண்டு நமது வேர்களை ஆழப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் அடிக்கடிக் கூறுவதுண்டு.  அனைத்தும் அடங்கிய ஆயின் பழம்பெரும் மரபினைக் காத்துக் கொள்ள வேண்டும் ஏனெனில் இது நமது பரம்பரைச் சொத்து ஆகும். இது மிகத் தேவையானது. இந்த வார்த்தைகளுடன் நான் மீண்டும் உங்களை வாழ்த்தி விடை பெறுகின்றேன். மரபினை காக்கும் உங்கள் முயற்சிகளை இடைவிடாமல் தொடர்ந்து, அனைவரின் முகங்களிலும் ஒரு புன்முறுவலை ஏற்படுத்துங்கள்.