தியானம் உங்கள் விதியை மாற்றியமைக்க கூடியது

மார்ச் – 15 – 2013 - டெல்லி இந்தியா


நாம் ஓரிடத்தில் அமர்ந்து சிறிது நேரம் நம்முடனேயே செலவழிப்போமேயானால், தினமும் சிறிது நேரம் நமக்குள்ளேயே இளைப்பாருவோமேயானால் அதுவே தியானம் எனப்படுகின்றது. செய்வதற்கு எவ்வளவோ வேலைகள் இருக்கின்றன. நாம் என் அமர்ந்து தியானம் செய்ய வேண்டும்

தியானம் நம் உடலின் சக்தியை அதிகரிக்க உதவுகின்றது.நம் உயிராற்றல் பெருகுகின்றதுபுத்தி கூர்மையாகின்றது. மற்றவர்களுடனான நம்முடைய தொடர்பு இனிமையாகின்றது. நாம் பேசும் பேச்சின்மீது நம் கட்டுப்பாடு அதிகரிக்கின்றது. நம் மனதின் சங்கல்ப சக்தி வலுவடைகின்றது. இவ்வளவு பயன்களைத் தருகின்ற ஒன்றினை ஏன் ஒருவர் செய்ய கூடாது


சிலர் மிகக் கடினமாக உழைத்தாலும் வெற்றி காண்பதில்லை.இப்படி நடப்பதை நீங்கள் பார்த்திருக்கின்றீர்கள் இல்லையா? ஏதோ ஒன்று குறைவதுதான் இதற்குக் காரணம்.  நம்முள்ளே இருக்கும் ஒரு பலவீனமான அதிர்வு அல்லது ஒரு எதிர்மறை அதிர்வே இதற்குக் காரணம். இந்த எதிர்மறை அதிர்வை நீக்க தியானம் மிக அவசியம்.

தியானம் என்பது உங்களது விதியையே மாற்றியமைக்கக் கூடிய ஒன்று என்பது மிக  முக்கியமானதுசிலர் மிகக் கடினமாக உழைத்தாலும் வெற்றி காண்பதில்லைஇப்படி நடப்பதை நீங்கள் பார்த்திருக்கின்றீர்கள் இல்லையாஏதோ ஒன்று குறைவதுதான் இதற்குக் காரணம்.  
நம்முள்ளே இருக்கும் ஒரு பலவீனமான அதிர்வு அல்லது ஒரு எதிர்மறை அதிர்வே இதற்குக் காரணம். இந்த எதிர்மறை அதிர்வை நீக்க தியானம் மிக அவசியம்


நாம் தினமும் சிறிது நேரம் தியானம் செய்தால் இறை அன்பு நம் மீது பொழிவதை நாம் உணர முடியும்ஞானம், அன்பு மற்றும் மெய்யுணர்தல் ஆகிய மூன்றும் வாழ்வில் மிக இன்றியமையாதவை. சலிப்பும் மந்தமுமான ஒரு வாழ்வை யாரும் விரும்பமாட்டார்கள். ஒவ்வொருவரும் வாழ்வில் ஏதோ ஒரு சாரம் நிறைந்திருக்க வேண்டுமென்றே விரும்புவார்கள். அதுவே அன்பெனும் சாரம். ஆனால் நம்முள்ளே நேர்மறை அதிர்வுகள் உண்டாகும் வரையிலும், அல்லது எதிர்மறை அதிர்வுகள் நம்முள்ளே நிறைந்திருக்கும் வரையிலும் நம்மால் அன்பின் உண்மையான தன்மையினை உணர முடியாது. அதுவரையிலும் அன்பு தன்  சிதறிய நிலையிலேயே வெளிப்படும். நாம் அன்பை, சிதைந்த  நிலைகளாகிய கோபம், வெறுப்பு, அமைதியின்மை போன்றவைகளாகவே உணர முடியும்

இத்தகைய சிதறல்களிலிருந்து நம் மனதை தூய்மைப்படுத்தும் வழியை நாம் கற்க வேண்டும்நம் மனம் இவற்றிலிருந்து விடுதலை அடைந்தால் தான் அனைத்தும் சரியாக மாறும். ஒரு தனி மனிதனின் கண்ணோட்டத்திலிருந்து இதுவே மிக அவசியமானது. தனி மனிதன் இவ்வாறு மாறும்பொழுது தான் சமுதாயம் மாற முடியும். தனி மனிதர்களால் ஆக்கப்பட்டதே சமுதாயம் இல்லையா? ஆகவே, தினமும் சில நிமிடங்கள் நாம் நம்முள்ளே ஆழமாகச் செல்ல வேண்டும். காலையில் எழுந்து மற்ற வேலைகளைத் துவங்குவதற்கு முன் பத்து நிமிடம் அமர்ந்து தியானம் செய்யுங்கள். அதே போல் மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்து உணவு உண்பதற்கு முன் சிறிது நேரம் தியானத்தில் அமர்ந்து உங்களுக்குள்ளே ஆழமாகச் சென்று இளைப்பாறினால் நல்ல மாற்றங்கள்  நிகழத் துவங்கும். உடல் ரீதியாகவும் பல நன்மைகள் உண்டாகும்

குருதேவ் நாம் வாழும், இந்தப் பொருள் சார்ந்த உலகத்தில் ஒவ்வொருவரும் எதோ ஒன்றின் பின் ஓடிக்கொண்டிருக்கின்றோம். ஞானம் பெறவும் தியானம் செய்யவும் நேரம் எங்கே இருக்கின்றது?" என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் நான் சொல்கின்றேன் இன்றைய சூழ்நிலையிலும் இன்றைய வாழ்க்கை முறையிலும் மிகவும் பயனளிக்க கூடிய ஒன்று என்றிருந்தால் அது தியானமேஇன்றைய சூழ்நிலையிலும் நமக்குத் திருப்தியை அளித்து நம்  வேலைகளில் நமக்கு உதவக்கூடிய ஒன்று உண்டென்றால் அது தியானமும் நம்பிக்கையுமே ஆகும்

கடவுள் எங்கும் நிறைந்திருப்பவர் என்று நீங்கள் கேட்டிருக்கின்றீர்கள் இல்லையா? சில இடங்களில் மட்டும் இருந்து மற்ற இடங்களில் இல்லாத ஒன்று கடவுளாக இருக்க முடியாதுஇறைத்தன்மை என்பது என்ன? இறைவனின் குணங்கள் யாவை? இறைவனின் முதல் குணாதிசயம் என்ன? எங்கும் நிறைந்திருத்தல். அப்படியென்றால் இறைவன் சில இடங்களில் மட்டும் இருந்தும் சில இடங்களில் இல்லாமலும் இருக்க முடியுமா? முடியாது. இறைவன் உங்களுக்குள்ளேயும் இருக்கின்றான். ஒன்று தீர்மானமாகி விட்டது. இறைவன் உங்களுக்குள்ளே இருக்கின்றான்

இறைவனின் இரண்டாவது தன்மை அவன் நிரந்தரமானவன். இறைவன் இருந்தான் இருக்கின்றான், அவன் எப்போதும் இருப்பான். இறைவன் இருக்கின்றான் என்றால் இப்போது இருக்கின்றானா? ஆம்அவன் உங்களுக்குள்ளே இப்போது இருக்கின்றான்அடுத்ததாக அவன் அனைவருக்கும் சொந்தமானவன். அப்படியானால் உங்களுக்கும் சொந்தமானவனா? ஆம். இறைவன் உங்களுக்குச் சொந்தமானவன்இந்துக்களுக்கு சொந்தமென்றும்இஸ்லாமியர்கள்,சீக்கியர்கள்ஜைன மதத்தவர்களுக்கெல்லாம் சொந்தமானவன் இல்லையென்றும் சொன்னால் அவன் இறைவன் இல்லை. அனைவருக்கும் சொந்தமாக இருக்கக் கூடியவனே இறைவன்.

இந்த நான்கு சூத்திரங்களிலும் உங்கள் கவனத்தை செலுத்துவதன் மூலம் நீங்கள் மிக எளிதாக ஆழ்நிலை தியானத்திற்கு, சமாதி நிலைக்கு செல்லலாம். அந்த நான்கு சூத்திரங்கள் என்னஇறைவன் எங்கும் நிறைந்தவன், நிரந்தரமானவன் அனைவருக்கும் சொந்தமானவன், எதையும் சாதிக்கக்கூடிய வல்லமை நிறைந்தவன். எல்லாம் வல்லவன். இறைவன் எனக்கானவன்இந்த உணர்வோடு தினமும் மனதைத் தளர்த்தி காலை,மாலை இரு வேலைகளும் சில நிமிடங்கள் தியானம் செய்யும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டால், நம் வாழ்வில் அதிசயங்கள் நிகழ்வதைக் காணலாம். அதிசயங்கள் தொடர்ந்து நிகழும். நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவது இதுவே. நம்பிக்கை என்று நான் சொல்வது இதைத்தான். எங்கும் இருந்தும் காண முடியாத ஒன்றே நம்பிக்கை

இன்று ஒருவர் என்னிடம்,' குருதேவ்! கடவுளை நாம் காணமுடியாது. அப்போது கடவுள் இருக்கிறார் என்று எப்படி கூற முடியும்?' என்றார். நான், ' உங்கள் மனதைப் பார்த்திருக்கிறீர்களா?  அது பச்சை, மஞ்சள், சிவப்பு இவற்றில் எந்த நிறத்தில் உள்ளது?  எப்போது நீங்கள் மனதைப் பார்த்தீர்கள்?' என்று கேட்டேன். நாம் ஒருபோதும்  மனதைப் பார்த்ததில்லை, ஆனாலும் நமக்கு மனம் என்று ஒன்று உண்டு என்று தெரியும் .

காற்றைப் பார்த்திருக்கிறோமா? ஆயினும் காற்றை உணர்ந்திருக்கிறோம் அல்லவா? காற்று நம்மைச் சூழ்ந்திருக்கின்றது. அதை அனுபவிக்க வேண்டும் என்றால் ஒரு சுழல் விசிறியின் கீழே அமர்ந்தால் அதை மிக நன்றாக உணர முடியும். அதுபோல கடவுள் எங்கும் இருக்கின்றார். ஆனால் புலப்படுவதில்லை.கடவுளை விரும்புகிறோம்,  ஆனால் நம் நாட்டை விரும்புவதில்லை என்பது முடியாது. தெய்வத்தை நேசிப்பவர்கள் நாட்டுப் பற்றுடன் இருப்பார்கள். நாம் என்ன பணி, தொண்டு செய்கிறோமோ அதைத் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும். நாள் முழுவதும் கவலைப்பட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தால், நமது உடலும் மனமும் பாதிக்கப்படும். அவ்வாறு செய்யக்கூடாது. நாம் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் இருக்க வேண்டும். தொல்லைகளும் துன்பங்களும் அற்ற மனதை அடைவதைக் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்.

வாழ்வில் பல விஷயங்கள் நடந்துகொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம், பல விஷயங்கள் நடக்கவே கூடாது என்று விரும்புகிறோம்.ஆயினும் மகிழ்ச்சியான தருணங்களும் மகிழ்ச்சியற்ற தருணங்களும் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. யாருக்காவது இவ்வாறு நிகழாமல் இருக்கின்றதா? கூறுங்கள்?  உங்கள் வாழ்விலேயே, எத்தனை இடையூறுகள் வந்து போயிருக்கின்றன என்று பாருங்கள். அவற்றிலிருந்து நீங்கள் வெளியே வந்து விட்டீர்கள். அத்தகைய தருணங்கள் முடிந்து விட்டன.  அந்த சூழ்நிலைகளும்,  நிகழ்வுகளும் கடந்து விட்டன, ஆனால் உங்கள் மனதிலேயே அந்த நிகழ்வுகளை இழுத்துக் கொண்டிருக்கிறீர்கள். அவற்றை உங்கள் மனதிலிருந்து அகற்றி விடுங்கள். எவ்வளவு அமைதியாகவும்,  தளர்வாகவும் உணருகிறீர்கள் என்று பாருங்கள்.

உங்களை யாராவது மோசமாக ஏதேனும் கூறிவிட்டால், 'இவன் என்னை இவ்வாறு கூறிவிட்டான், அவன் என்னை ஏமாற்றி விட்டான்' என்று திரும்பத் திரும்ப அதையே நினைத்து  அமைதியற்று இருக்கின்றீர்கள். பாருங்கள்! ஏமாற்றுவது அவன் இயல்பு. ஏமாற்றுவது ஒருவனது இயல்பு என்றால் அவன் வேறு என்ன செய்வான்? அவன் ஏன் இதைச் செய்தான், ஏன் அதை எனக்குச் செய்தான் என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருப்பதன் மூலம் நீங்கள் உங்கள் மனதைத்தான் கெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். அது புத்திசாலித் தனமல்ல. எது விவேகம் மற்றும் புத்திசாலித் தனத்தின் குறியீடு தெரியமா?நல்ல நிகழ்வுகளும், கெட்ட நிகழ்வுகளும் வந்து போகும், அவற்றைத் தாண்டி முன்னேறிச் செல்வது என்பதே அழகானது என்று உணர்வது தான் விவேகம். அந்நிகழ்வுகளால் நாம் மேலும் மலர் கின்றோம்.

நமது உள்ளுணர்வுடன் தொடர்பில் இருந்து கொண்டு நம்முள் அது எப்போதும் உயிர் பெற்றிருக்குமாறு வாழ வேண்டும். எதற்காகவும் உங்கள் புன்முறுவலை இழக்காதீர்கள்,   உங்கள் உற்சாகத்தை இழக்காதீர்கள், முன்னேறிச் செல்லுங்கள். வாழ்க்கையில் ஒரு சங்கல்பம் அல்லது குறிக்கோளுடன் முன்னேறுங்கள். சமூகத்தில் ஒவ்வொருவரும் ஆசீர்வதிக்கபடட்டும். எல்லோரும் வசதியாகவும்,மகிழ்ச்சியாகவும் இருக்கட்டும். இந்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஆசீர்வதிக்கப் படட்டும். இந்நாட்டில் நடைபெற்று கொண்டிருக்கும் குற்றங்கள் எல்லாம் நீங்கட்டும்.

இந்தியா தற்போது எதிர்கொண்டிருக்கும் அநீதி,ஊழல், வன்முறை ஆகியற்றுக்கு எதிராக நாம் அனைவரும் போராடுவோம். நமது சமுதாயத்திலுள்ள வன்முறை மனப்போக்கு அடியோடு அழிக்கப்பட வேண்டும். நாம் இதற்குப் பொறுப்பேற்று உழைக்க வேண்டும். அனைவரும் சேர்ந்து உழைத்தால் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பிப்பதைக் காணலாம். என்ன கூறுகிறீர்கள்? சரி! உங்களில் எத்தனை பேர் உங்களது சிறிய விருப்பங்கள் நிறைவேறி இருப்பதைக் காண்கிறீர்கள்? (பலர் கை தூக்குகிறார்கள்). நாம் இப்போது ஒரு பெரிய சங்கல்பம், ஒரு பெரிய அளவிலான விருப்பம் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும். உங்களுடைய சிறிய விருப்பங்கள் நிச்சயமாக நிறைவேறும்,  இப்போது நாட்டை பற்றி நினையுங்கள்.

நமது நாட்டில் இந்த அறிவும் ஞானமும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கின்றன. ஆன்மீகத்தில் இந்தியா உச்சமாக இருந்த காலத்தில் செல்வச் செழிப்பும் மிகுந்திருந்தது என்று உங்களுக்குத் தெரியுமா?  இப்போது, நாம் ஆன்மீகத்திலும், செல்வத்திலும் நல்ல நிலையில் இல்லை. 

முற்காலத்தில் இருந்தது போன்ற "தங்கப் பறவை " போன்ற நிலையை நாம் மீண்டும் அடைய வேண்டும். இதுவே என் கனவு.இந்தியாவின் ஞானமும் அறிவும், உலகின் மூலைகளிலுள்ள மக்களை எல்லாம் சென்றடைந்து அவர்கள் தங்கள் துயரிலிருந்து வெளி வரவேண்டும். இது ஏற்கனவே நடைபெற ஆரம்பித்து விட்டது. இதில்நான் எவ்வாறு பங்களிக்கலாம்என்று நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.

ஒரு நாளில், ஒரு மணி நேரம் அல்லது வாரத்தில் ஏழு நாட்கள் நாட்டுப்பணிக்காக என்று ஒதுக்கி வைத்தால், நிறைய மாற்றங்களைக் கொண்டு வரமுடியும். நம் நாட்டு மக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்த முடியும்.

கே: குருதேவ்! என் பெயர் ஆக்ரம். நான் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்து வெளியே வந்திருக்கின்றேன். என் வாழ்வை முழ இருட்டான நரகமாக கண்டேன். என்னையே நான் மீண்டும் விரும்பக்கூடிய அளவுக்கு அதிர்ஷ்டமான ஒரு காலம் வரும் என்று எதிர்நோக்கிக் கொண்டிருந்தேன். சிறையில் இருந்தபோது மன அழுத்தத்தால் குடிகாரனாகி விட்டேன். ஒரு நாள் வகுப்பு எடுத்துகொண்டிருக்கும் சர்மாஜியை நான் சந்தித்தேன். அவர் என்னைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு போய் பயிற்சி வகுப்பில் சேருமாறு கூறினார். பயிற்சியை முடித்த போது தான் வாழ்வின் உண்மையான சாரம் என்ன என்பது தெரிய வந்தது. வாழும் கலை என்பதை அப்போதுதான் மெய்யாகக் கற்றுக்கொண்டேன். அதன் பின்னர் தொடர்ந்துபல பயிற்சிப் படிப்புப் பிரிவுகளை கற்றேன். இன்று நேரிடையாக உண்மையான குருவை சந்திக்கும் பேரு பெற்றதற்காக மகிழ்ச்சியடைகிறேன். கடவுள் தங்களை ஆசீர்வதிக்கட்டும்.

குருதேவ்: மிக்க நல்லது! இப்போது நீங்கள் ஆசிரியராக வேண்டும். ஆசிரியராகி, பலருக்கு ஆசி கொண்டு வாருங்கள்.