நாம் அறிந்துள்ள பரமானந்தத்தை உலகெங்கும் பரப்பவேண்டும்


03
2012............................... கீவ், யூக்ரேன்
May


நாம் அறிந்துள்ள பரமானந்தத்தை உலகெங்கும் பரப்பவேண்டும். வாழ்க்கையில் எவ்வளவு உள்ளது என்பதை மேலும் மேலும் அதிகமான மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நமக்கு வாழ்க்கையைப் பற்றி தெரிந்துள்ளது சிறிதளவே. இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறையவே உள்ளது. இந்த அறிவு விலை மதிப்பற்றது, இல்லையா?

பாருங்க, நாம், மனது உடலினுள் இருக்கிறதென்று நினைக்கிறோம். இல்லை, உடல் மனதினுள் இருக்கிறது. உடல், ஒரு மெழுகுவத்தியின் திரியைப் போன்றது. சுற்றிப் பரவும் வெளிச்சம் போன்றது மனம். நீ எவ்வளவு அதிகமாக அமைதியாக இருக்கிறாயோ அந்த அளவிற்கு மனம் விசாலமடைந்து பெரிதாகிறது. எவ்வளவு அதிகமாக மனம் நிறைந்து, திருப்தியடைகிறதோ, அந்த அளவிற்கு பெரிதாகவும், பிரகாசமாகவும் நீ இருப்பாய்.

கே: குருஜி, கீவில், புனிதமானவர்களின் உடல்கள் நூற்றிற்கும் மேற்பட்டு உள்ளது. அது பற்றி நீங்கள் ஏதாவது சொல்ல முடியுமா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: சன்நியாசி என்பவர் வெறும் உடலல்ல.சன்யாசி என்பவர் ஆத்மா. காய்கறிகள், தானியங்கள்,அனைத்து உணவிலிருந்தும் உண்டானது உடல். நெடுங்காலமாக இருந்திருக்கிறது, உடலின் ஒவ்வொரு அணுவும் பூமிக்கு சொந்தமானது. அதிலிருந்து வந்து, அதனிடமே திரும்பிச் செல்கிறது. ஆனால் ஆத்மா முக்கியமானது. ஆத்மா எங்கும் நிறைந்துள்ள ஒன்று.

கே: இந்த உடல்கள் அழிவதில்லை. அவைகள் அப்படியே இருக்கின்றன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆமாம்,அதிக பக்தியும், அன்பும் அங்கிருக்கும்போது, அது உடலின் ஒவ்வொரு அணுவையும் மாற்றி, பிரகாசத்தை உண்டு பண்ணுகிறது.நம்பிக்கை இருக்குமிடமெல்லாம் அற்புதங்கள் நிகழ்கின்றன.ஆத்மா உடலோடு மட்டுமே ஒட்டியிருக்கிறது என்று நினைக்காதே. ஆத்மா அனைத்தையும் ஊடுருவுகிறது.ஆகவே, நீ எங்கிருந்தாலும்,நீ நினைத்த மாத்திரத்தில், ஆத்மாவுடன் பிணைக்கப் படுகிறாய்.

நமது உடல்கள் தொலைக்காட்சிப் பெட்டிகளைப் போன்றது. உண்மையான சக்தி ஒரு அலை வரிசை.ஆகவே, நீ தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கும்போது, நீ அலைவரிசையை பார்க்கிறாய், ஆனால் அலைவரிசை, தொலைக்காட்சிப் பெட்டியில் இல்லை.அது அறை முழுவதும் உள்ளது.

கே: மனதின் எதிர்மறை குணங்களை எவ்வாறு போக்குவது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நல்ல நண்பர்களின் சகவாசம். உண்மையான நண்பன் என்பவன்: நீ சிறிது நேரம் எதிர்மறையாகப் பேசி, பின்பு நேராக மாறுகிறாயோ அவன் தான். கெட்ட நண்பன் என்பவன்: சிறிது நேர்மறையாகப் பேசி, உன் எதிர்மறை குணங்கள் பெரிதாகின்றனவோ அவன் தான். ஆகவே, முதலாவது, நல்ல சேர்க்கை, அடுத்தது பிராணாயாமா, சுதர்ஷன் க்ரியா மற்றும் தியானம். மூன்றாவது உடலை சுத்தப்படுத்துவது.

சில சமயங்களில், உன்னுடைய மலக் குடல் இயக்கங்கள் நன்றாக இல்லையென்றால், குடல் இருக்கமாக இருந்தால், அது சிரசையும் பாதிக்கிறது. சில சமயங்களில் நீ உடலையும் சுத்த ப்படுத்த வேண்டும்.உடலில் உண்டாகும் விஷங்களை சுத்தப்படுத்த வேண்டும் அல்லது உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். பஞ்சகர்மா – ஆயுர்வேதா இதற்கு உதவும்.

கே: நம் வாழ்வில் வியாதிகள் ஏன் வருகின்றன? அதன் காரணமென்ன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இயற்கையின் விதிமுறைகளை மீறுவதால்,சாப்பிடக் கூடாததை சாப்பிடுகிறோம் அல்லது அளவுக்கதிகமாக சாப்பிடுகிறோம். சுற்றுப் புறத்தை நாம் பாது காப்பதில்லை. எங்கு பார்த்தாலும் தொலைதொடர்பு கோபுரங்கள் உள்ளன. கதிர் அலைகள் உள்ளன, இவைகளெல்லாம் நம்மை பாதிக்கின்றன. இது தவிர, மனம் அழுத்தத்தில், பாதுகாப்பு அமைப்பு நிலை குலைகிறது.

கே: நாம் எதற்காக வாழ்கிறோம்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: முதலில், நீ எதற்காக வாழவில்லையோ அதன் பட்டியலைத் தயார் செய். வாழ்வின் குறிக்கோள், தானும் அமைதி இழந்து, மற்றவர்களின் வாழ்வையும் துயரத்தில் ஆழ்த்துவதற்காக அல்ல. இல்லையா?

பிறகு, என்ன காரணம்?நாம் எவ்வாறு மற்றவர்களின் வாழ்கையை சந்தோஷமாக்க முடியும்? நாம் எவ்வாறு நம்முள் உறையும் ஆத்மாவுடன் தொடர்பு கொள்ள முடியும்?நீ யார் என்பதை கண்டுபிடி. அது ஆன்மீகம், நீ இருக்க வேண்டிய இடம்.

கே: தெய்வீகக் குழந்தையைப் பெறுவதற்கு, எவ்வாறு மனதையும், இருதயத்தையும் தயார் செய்து கொள்ள வேன்டும்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: குழந்தையைப் போல இரு, எந்த சங்கோஜமும், வேற்றுமையற்று. எளிமையாக, இயற்கையாக இரு, அவ்வளவுதான்!

கே: என்னுடைய விதி, சங்கீதம், பாட்டு மூலம் மற்றவர்களுக்கு,ஆனந்தம் கொடுப்ப தற்காக என்று நினைத்திருந்தேன்….

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: சங்கீதம் இல்லாமல் வாழ்க்கை முழுமையாவதில்லை. ஆனால் வாழ்வில் சங்கீதமே எல்லாமுமல்ல, ஆகவே சங்கீதம் ஒரு பகுதி. வாழ்வில் நீ செய்ய மற்றவைகள் உள்ளன. அவைகளைச் செய். ஆனால், அவைகளனைத்திலும் முதலாவது அறிவு முதிர்ச்சி. அறிவு முதிர்ச்சி மிகவும் முக்கியமானது. ஆன்மீக அறிவு மிக முக்கியமானது.

கே: சூதாட்டத்திற்கு அடிமையாகியுள்ள என் மகனைப் பற்றி நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன்…

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: உனக்கு ஒரு மகன் இருக்கிறான், எனக்கு அது போன்று, இலக்ஷக்கணக்கான மகன்கள் இருக்கிறார்கள். நீ எவ்வாறு, உன் மகனைப் போல இருக்கும் மற்றவர்களுக்கு உதவ முடியும் என்று பார். உனக்கு இந்த வேதனை இருப்பதால் நீ அது பற்றி சமூகத்திற்கும், மற்ற குழந்தைகளுக்கும் ஏதாவது செய்ய முடியும்.