எல்லோருமே தலைவர்கள் தான்......


13
2012............................... மாண்ட்ரியல்  கனடா,
May

இன்றைய செய்தி என்னவென்றால்,எல்லோருமே தலைவர்கள் தான். நீங்கள் யாருக்காவது வழிகாட்டி இருப்பீர்கள். ஒன்று சரியான பாதையில் அல்லது தவறான பாதையில். நிச்சயம் அனைவரும் ஒரு வழிகாட்டி தான். 
நீங்கள் அனைவரையும் சரியான பாதையில் வழிகாட்ட வேண்டும் என்றால் உங்கள் வாழ்க்கை மாசற்றதாக, தூய்மையாக இருக்க வேண்டும். இங்கே அது தான் இருக்கிறது. இங்கு நாம் மாசற்று, தூய்மையாக இருக்கிறோம். இது நாமாக அடைய வில்லை. இது நமக்கு கிடைத்த பரிசு.தெரியுமா? இந்த ஐம்பத்தி ஆறு வருடத்தில் நான் ஒரு முறை கூட ஒரு தவறான வார்த்தை கூறியது கிடையாது. கடைசியாக, 'முட்டாள்' என்று வேண்டுமானால் என் வாயிலிருந்து வந்திருக்கும் அவ்வளவே. ஆனால் அதற்காக நான் அதை உயர்வாக கூறமுடியாது. வேறு வார்த்தைகள் எனக்கு வருவதில்லை. விரும்பத்தகாத வார்த்தைகள் வருவதி ல்லை. நான் கூறுவது என்னவென்றால் இந்த தூய்மையும் வாழ்க்கையில் உங்களுக்கு வந்த பரிசு என்று உணரும் போது அடக்கம் பிறக்கும்.
அடக்கம் இருந்தால் நீங்கள் முன்னேறுகிறீர்கள் என்று அர்த்தம். அடக்கம் மறைந்தால் தான் வீழ்ச்சி ஏற்படும்.

எனவே
அனைவரும் வழிகாட்டும் தலைவர்கள். சரியான பாதையை, சரியான அறிவை, வழிநடத்த நாம் உள்ளேயும் வெளியும் தூய்மையாக இருக்க வேண்டும்.எப்படி தூய்மையாக இருப்பது? தூய்மையான அறிவோடும், ஞானத்தோடும், பிரணாயாமத்தோடும் வரும் ஞானம் என்ன செய்யும்? ஞானம் நம்மை தூய்மையாக்கும். அது ஒரு சோப்புக்கட்டி போன்றது. 'நஹி ஜ்னநென சட்ருஷம் பவித்ரம் இஹா வித்யதே ஞானத்தை விட சிறந்த தூய்மைபடுத்தும் பொருள் வேறு இல்லை.

ஒவ்வொரு
மனிதரும் இந்த நிமிடத்தில் தூய்மையானவர்கள் தான். உங்கள் இறந்த காலம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. அதை எல்லாம் மறந்து விட்டு சரணடையுங்கள். சரணடைதல் அல்லது வழங்குதல் என்றால் அது இறந்த காலத்தை பற்றியதே. உங்கள் இறந்தகாலம் எப்படி இருந்தாலும் அதை சரணடையுங்கள். நிகழ் காலத்தில் நீங்கள் பரிசுத்தமான அப்பாவிகள். இதை நம்புங்கள். உங்கள் தூய எண்ணங்களை நம்புங்கள், அவ்வளவு தான். சித்தி அல்லது தூய்மை இங்கு உள்ளது. ஞானம் உங்களை தூய்மை யாக்குகிறது. ஆனால் நீங்கள்.' , நான் தூய்மையானவன் என் எண்ணங்கள் பரிசுத்தமானது' என்று நினைக்க ஆரம்பித்தால் அஹங்காரம் வந்து விடும். ஜாக்கிரதை. அது உங்களை அசுத்தமாக்கி விடும்.  

எனவே தூய்மையை மதித்து, அதே சமயம் அஹங்காரம் இல்லாமல் இருப்பது நல்லது. அடக்கமாக அதே சமயம் இந்த உலகத்திலேயே நான் தான் அடக்கமானவன் என்ற ஆணவம் இல்லாமல் இருப்பது நல்லது. நான் தான் இந்த உலகில் மிகவும் அடக்கமான நபர் என்று கூறுவது கேலிக்கு இடமானது. எனவே நாம் தூய்மை யாக இருந்தால் எல்லோரையும், மற்றும் இவ்வுலகத்தையும் நல்ல வழியில் கொண்டு செல்லலாம்.

சிந்தனை,வார்த்தை மற்றும் செயல்.நீங்கள்
கூறலாம், 'ஓ என் செயல்கள் மிகவும் சரியாக உள்ளன, ஆனால் என் எண்ணங்கள், அவற்றை நான் என்ன செய்வது? நான் எதுவும் செய்யாமலே எண்ணங்கள் என் மனதில் வருகிறதே.என்ன செய்வது?' இது ஒரு கேள்வி? சொல்லுங்கள் எத்தனை பேர் மனதில் இங்கு இந்த கேள்வி இருக்கிறது? பின்னால் அமர்ந்திருக்கும் சிலருக்கும் இந்த கேள்வி இருக்கிறது? கூச்சப்படாமல் கையை உயர்த்துங்கள். பாருங்கள், எவ்வளவு பேர். 'குருஜி, செயல்களால் எதுவும் செய்யவில்லை, வார்த்தைகளை  கூட கட்டுபடுத்தி விடலாம், ஆனால் எண்ணங்களை என்ன செய்வது? அது தானாகவே நடக்கும். நாம் எதுவும் செய்ய வேண்டாம். அதனால் தான் உடல் சுத்தமாகும் போது, மனமும் சுத்தமாகிறது, அதற்கு நல்ல மக்களின் சகவாசம்வேண்டும்.

நீங்கள்
சாத்வீகமான மக்கள் மத்தியில் இருந்து, நல்ல சூழ்நிலையில் இருந்தால், இது போன்ற எண்ணங்கள் வருவதில்லை. எப்போது வருகிறது? நீங்கள் மிகவும் இறுக்கமான, கோபமான, குழப்பமான மக்கள் மத்தியில் இருந்தால் வரும். அவர்கள் எண்ணங்கள் உங்களுக்கும் வந்து விடுகிறது. இப்போது எதிர்மறை எண்ணங்கள் வரும் போதெல்லாம் மற்றவரை குற்றம் சொல்லாதீர்கள்.' அந்த நபர் இந்த எண்ணத்தை என்னில் புகுத்தி விட்டார்' என்று அடுத்தவரை கூறாதீர்கள். இந்த மனம் மிகவும் தந்திரமானது எந்த சூழலிலும் நம்மை மாட்டி விடும். அதனால் தான் சமஸ்க்ரிதத்தில் ஒரு பழமொழி உண்டு,' வாச்ய ரம்பே விகாரோ நம தேயச்ய' அதாவது  நீங்கள் ஏதாவது வார்த்தைகளைப் பேசும் நேரம் விஷயங்கள் சிதைந்து விடும். எனவே பிரணாயமம், தியானம் இவை எண்ணங்களை தூய்மையாக்கும்.

பிறகு
வார்த்தைகள், உங்கள் உறுதி, உங்கள் திடம்,மனதிற்கு ஒவ்வாத வார்த்தைகளை, என் வாயிலிருந்து வரக்கூடாத வார்த்தைகளை நான் ஒரு போதும் சொல்ல மாட்டேன் என்ற உறுதி கொண்டு நீங்கள் அதை பின்பற்ற வேண்டும். நான் கூறுவது உங்களுக்கு புரிகிறதா?. நீங்கள் ஒரு சங்கல்பம் எடுங்கள், 'நான் விரும்பத்தகாத வார்த்தைகளை சொல்ல மாட்டேன்' என்று.பிறகு 'அட கடவுளே' என்றால் பரவாயில்லை, ஆனால் அதோடு வேறு வார்த்தைகள் எதுவும் வரக்கூடாது. மக்கள் ' ஏசுவே', ராமா' என்பார்கள். அது பரவாயில்லை. நாம் பேசும் வார்த்தைகளில் ஒரு கலாச்சாரம் வேண்டும். நீங்கள் விரும்ப தகாத வார்த்தை களை பேசினால் குழந்தைகளும் அதை பிடித்து கொள்வார்கள்.எனவே செயலும், வார்த்தைகளும் பின்பற்ற ப்படும். செயல் சிறியது தான். ஆனால் எண்ணம் மிக முக்கியம். எனவே அனைவரும் தலைவர்கள் தான். நீங்கள் பிறரை வெளிச்சத்திற்க்கோ அல்லது இருளிற்கோ வழிநடத்தி செல்கிறீர்கள். 

நீங்கள் சில சமயம் கூறும் விஷயங்கள் பிறரை குழப்பி, அவர்கள் ஏற்கனவே மனதில் மக்களை பற்றியும், சமூகத்தைப்பற்றியும் கொண்டிருந்த நல்ல எண்ணங்கள் மாறி தடம்புரள்வார்கள் அல்லது நீங்கள் அவர்களை ஞானத்தை நோக்கியும், மகிழ்ச்சியை நோக்கியும் வழிநடத்தி செல்வீர்கள். ஒவ்வொரு தனி மனிதனும் நம்பிக்கையை வலுப்படுத்தவும் முடியும், அழிக்கவும் முடியும். ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த திறன் உண்டு. எப்போதும் இல்லை. மற்றவர்கள் நம்பிக்கையை எப்போதும் அழிக்க முடியாது தற்காலிகமாக முடியும். எட்டு முதல் பத்து வருடங்கள் வரை அவர்கள் மனம் சுற்றி சுற்றி வரும். அவர்கள் இந்த கிரகத்தில் நல்ல மக்கள் இருக்கிறார்கள் என்று நம்பாமல், அனைவருமே மோசம், வீணானவர்கள் என்று நினைப்பார்கள்.

மூன்று
விஷயங்கள் உள்ளன:  

1.தர்கத்திற்கு அப்பாலும், விளக்கத்திற்கு அப்பாலும் நம்பிக்கை ஒன்று உள்ளது. இந்த பிரபஞ்சத்தை ஆக்கரமித்த சக்தி. இந்த கடவுளும் எங்கோ இருந்து உங்களை தண்டிக்கவில்லை.அதை மறந்து விடுங்கள். தெய்வீக சக்தி உள்ளது. நீங்கள் அதை தெய்வீகம்  அல்லது படைப்பாற்றல் சக்தி கொண்ட ஒரு அடிப்படை ஆற்றல் எனலாம்.  இதுவே சரியான விளக்கம். கடவுள் ஒரு கருணை மிக்க, அன்புமிக்க  மிகச்சரியான சக்தி.  நம்பிக்கையே பிரபஞ்சம் நேசிக்கும் அன்பான சக்தி. 

2. மக்கள் நன்மை மீதான நம்பிக்கை. இந்த உலகில் நல்ல மனம் கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள். அப்பாவி மக்களும் உள்ளார்கள். 

3. உங்கள் மீது கொண்ட நம்பிக்கை. கெட்ட சகவாசம் தான் இந்த மூன்று நம்பிக்கைகளையும் தகர்க்கிறது.     'நீ என்ன செய்யமுடியும்? இந்த உலகில் நீ ஒன்றும் செய்ய முடியாது.வா,இங்கு உட்கார், உன்னால் எதுவும்  செய்ய முடியாது. நீ ஒரு மாயையில் உள்ளாய்' என்று கூறி மக்கள் நம்பிக்கையை சிதைப்பது, மக்கள்   மனதைக்கெடுப்பது, அவர்களுக்கு உலகம் ஒரு பயங்கரமான இடம் என்ற படத்தை அவர்கள் மனதில் உருவாக்குவது இதெல்லாம் கெட்ட சகவாசம்.

மற்றொரு நாள் ஒரு தம்பதியர் என்னிடம் வந்து தங்கள், பதினைந்து வயதுள்ள மகன் தற்கொலை செய்து கொண்டு ஒரு கடிதம் வைத்து விட்டு அதில்' இந்த உலகம் ஒரு பயங்கரமான இடம். இங்கு எந்த நம்பிக்கை யும் இல்லை. மக்கள் மதம் பற்றி அனைவரும் சண்டையிடுகிறார்கள்.எங்கும் குற்றம் தான் உள்ளது' என்று எழுதி வைத்துள்ளான். ஒரு துடிப்புள்ள பையன்,இந்த உலகம் இருளானது, வாழ விருப்பமில்லை என்று எழுதியுள்ளான். 

உங்களுக்கு தெரியுமா, ஜப்பானில் முப்பதாயிரம் இளைஞர்கள் ஒவ்வொரு வருடமும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஏன்? வறுமையால் அல்ல, மக்கள் மீதான நம்பிக்கை மற்றும் சமூகத்தின் மீதான நம்பிக்கை குறைந்ததால் தான். நான் கூறுவது உங்களுக்கு புரிகிறதா? இப்போது சமூகத்தில் அனைவரையும் ஏமாற்று க்காரர்களாக, சுயநலவாதிகளாக, எல்லோரையும் நல்லவர்கள் அல்லாத வர்களாக பார்க்கும், பாதுகாப்பற்ற தன்மை உருவாகி வருகிறது. அதனால் தான் திருமணம் ஆன பின்பும் மக்கள் அனைத்தையும் தனித்தனியே வைத்துக் கொள்கிறார்கள். ஏனெனில் அவர்களிடத்தில் ஒரே வீட்டில் இருந்தாலும் எந்த நேரத்தில் என்னவாகு மோ என்ற பயம் இருக்கிறது. 'நானே என் பொருட்களை வைத்துக் கொள்வது நல்லது. யார் மனம் எப்போது மாறும் என்று தெரியாது' அப்படி யென்றால், நீ உன் துணையை கூட நம்பவில்லை. உன் குழந்தைகளை நம்ப வில்லை. அண்டை வீட்டாரை விட்டு விடு. இது மக்கள் மீதும்,சமூகத்தின் மீதும் உள்ள நம்பிக்கையை அழித்து, நம் சுய நம்பிக்கையை உடைத்து விடுகிறது. 

'உன்னால் எதுவும் செய்ய முடியாது. உன்னால் எப்படி இந்த உலகில் மாற்றத்தை கொண்டு வர முடியும்?
அது முடியாத காரியம். நடைமுறை வாழ்க்கையோடு ஒத்துப்போ.' இது ஒரு விதமான தலைமை பண்பு. அண்மை காலமாக மக்களை இந்த வழியில் வழி நடத்து கிறார்கள். நல்ல தலைவர்கள் என்பவர்கள் உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும், ஆற்றலோடும் மற்றவர்களை உற்சாகப்படுத்தி முன்னேற வைப்பார்கள்.

நீங்கள் பத்து முறை தோற்றாலும் கவலைப் படவேண்டாம்,பதினோராவது முறை உங்களால் எழுந்து ஓட முடியும். உங்களால் முடியுமென்று.'ஒரு நல்ல தலைவர் நம்பிக்கையை மக்கள் மனதில் வளர்த்து விடுவார். 'கவலைப்படாதீர்கள்,தவறுகள் நடப்பது இயல்பு, தொடர்ந்து முன்னேற்றுங்கள்.' என்பார். குற்றவாளி களிடம் கூட நல்ல எண்ணம் உள்ளது. குற்றவாளிகள் மனதிலும் ஒரு நல்லவன் அமர்ந்திருக்கிறான். 
 

நம் வாழும் கலை ஆசிரியர்கள், பலர் சிறைச்சாலை திட்டத்தில் சிறை கைதிகளுக்கு பயிற்சி கொடுத்து இருக்கிறார்கள். அவர்களை கேளுங்கள் அவர்கள் கைதிகளிடம் பேசும் போது எப்படி இருந்தது என்று? உலகில் மற்றவர்களால் கண்டனம் செய்யப்பட்டவர்கள் மனதிலும் ஒரு நல்ல நபர் உள்ளாரல்லவா? (பார்வையாளர்களில் பலர்,'ஆம் குருஜி' என்றனர்)

இதுதான் ஒரு நல்ல தலைவரின் இயல்பு.குற்றம் செய்பவரிடம்  உள்ள நல்ல குணத்தை வெளி கொணர்வது. அவர்களுக்கு நல்ல எண்ணம் உள்ளது. ஒரு தவறான தலைவர் என்பவர் ஒரு நல்ல மனிதரிடம் கூட அல்லது ஒரு குழந்தையிடம் கூட ஏதாவது ஒரு குற்றம் கண்டுபிடித்து அவர்களை தவறானவர்கள் என்பார். சட்டம் கூட அவர்களை குழந்தைகள் என்று தண்டிப்பது இல்லை. 
 

ஒரு தவறான தலைவர் அங்கும் குற்றம் கண்டு பிடிப்பவர். ஒரு நல்ல தலைவர் அல்லது வழிகாட்டி உங்களை மகிழ்ச்சியை நோக்கி, நம்பிக்கையை நோக்கி, ஞானத்தை நோக்கி மக்களை அழைத்து செல்பவர். இன்று உங்களுக்கே தெரியும்,என்னிடம் வந்து,எப்படி நான் ஒரு நல்ல தலைவர் ஆவது' என்று கேட்காதீர்கள்.  

இன்று நீங்கள் இங்கு இருக்கிறீர்கள் என்றாலே நீங்கள் நல்ல தலைவர்கள் தான், ஏனெனில் 'இனம் இனத்தை சேரும்' என்பது போல் நாம் அனைவரும் இங்கு ஒன்று சேர்ந்துள்ளோம். நீங்கள் நல்ல தலைவர் என்பதை உணருங்கள், அவ்வளவு தான், எந்த சந்தேகமும், கேள்வியும் வேண்டாம். நாம் இந்த ஒப்பந்தத்தை மூட வேண்டும். ஒப்பந்தம் 'நான் ஒரு நல்ல தலைவர்' என்று முடிந்தது. இனி கேள்விகளும், குறுக்கு விசாரணைக ளும் இல்லை, ஒப்பந்தம் முடிந்தது சரியா.'ஓ நான் முன்பு நல்ல தலைவராக இல்லை' என்று எண்ண வேண்டாம். அது இறந்த காலம் இப்போது நீங்கள் ஒரு நல்ல தலைவர். ஒப்பந்தம் முடிந்தது. அவ்வளவு தான். 

ஆமாம்.பிறகு நீங்கள் தலைவர் என்பதை மறந்து விடவேண்டும், நீங்கள் சாதாரண மானவர்கள், நீங்கள் ஒன்றுமேயில்லை. இது தான் நல்ல வழியாகும். நீங்கள் மிகவும் சோம்பலாகவும், சக்தி குறைந்தும் இருக்கும் போது நீங்கள் ஒரு நல்ல தலைவர் என்பதை மனதில் கொள்ளவேண்டும். நீங்கள் வேலையில் மூழ்கிபதட்ட த்துடன், வேலையின் பழுவை உணரும்போது, நீங்கள் சாதாரணமானவர்கள், யாருமில்லை என்று உணர வேண்டும். நீங்கள் ஒரு தலைவர் என்பதை அப்போது மறந்து விடுங்கள்.

நீங்கள் செய்யும் பணி உங்களுக்கு சுமையாக இருந்தால் நீங்கள் தலைவர் என்ற எண்ணத்தை மறந்து நீங்கள் செய்யும் வேலையை தொடர்ந்து செய்யுங்கள். எனவே செய்யும் வேலையை விட்டுவிடாதீர்கள்,அந்த பணியை தொடர்ந்து செய்யுங்கள். நல்லது. சரியா?