ஸ்ரீ ஸ்ரீ - புத்த பூர்ணிமா தினத்தன்று…


06
2012...................................... மொண்ட்ரியல்,கனடா
May



இன்று புத்த பௌர்ணமி. புத்தர்  பிறந்த தினம்.அவர் ஞானம் பெற்று,அனைத்தையும் துறந்து மறைந்த நாளும் இந்நாள் தான்.  

இன்று சந்திரன் முழுநிலவு நாட்களை விட  இருபது சதவிஹிதம்  அதிகமாக  இருக்கும். பெரியதாக  இருக்கும்.

எனவே நீங்கள் சந்திரன் தோன்றுவதைப் பார்க்க வேண்டும்.எல்லோரிடமும் ஒரு சிறிய புத்தர் உள்ளார்.அந்த புத்தர், சித்தார்த்தர் வடிவில் உள்ளார்.சித்தார்த்தர் யார் என்று தெரியுமா? புத்தர், புத்தராக ஆகும் முன்பு,சித்தார்த்தராக  இருந்தார்.எல்லா இடமும் சுற்றி அலைந்து,பல முயற்சிகள் செய்து,இயலாமல் இருந்தார்.ஆனால் அவரிடம் ஆன்மாவின் தேடல் இருந்தது. அவர், இவ் வுலகில் துன்பமே உள்ளது. நான் இந்த துன்பத்தை போக்க வழி காணவேண்டும். என்றார்.

சித்தார்த்தர், உலகில் எல்லாமே துயரம் தான் என்று புரிந்துகொண்டார்.ஆனால் அதை போக்கும்  வழி புலப்படவில்லை.எனவே எல்லோரிடமும் ஒரு சிறிய புத்தர் உள்ளார்,அவரே விழித்துக் கொள்ள வேண்டும்.

புத்தர்  இது அது, அது இது என்று பலவற்றையும் முயற்சி செய்தார். இந்த கோடி முதல் அந்த கோடி வரை சென்று, பல நுட்பங்களை கையாண்டு பார்த்தார்.ஆனால் ஒன்றும்  பயன் தர வில்லை.ஏனெனில் இவற்றையெல்லாம் செய்யும்போது அவர் மனம் வெளியே இருந்தது.அவர் உடல் ஓய்ந்து, சோர்ந்து எல்லாவற்றையும் கை விட்டதும் அவருக்கு ஞானம் பிறந்தது.இப்படி தான் அவரை பற்றிய கதை  செல்கிறது.

எனவே அவர் மிகவும் முயன்று,முயன்று சோர்ந்த நிலையில்,அனைத்தையும் கைவிட்டு, சரி 'நான் சிறிது ஓய்வெடுத்து ஆசுவாசப்படுத்தி கொள்கிறேன்' என்று அமர்ந்தார்.

அவர் அப்படி அனைத்து முயற்சிகளையும் கைவிட்டு அமர்ந்ததும்,அவர் மனம் உள்நோக்கி சென்றது. அவர் புத்தரானார்,எனவே மனம் உள்நோக்கி சென்றது. துரதிஷ்டவசமாக  புத்தருக்கு குரு என்று ஒருவரும்  இல்லை. அந்த சமயத்தில் அவருக்கு குரு யாரும் இல்லை. ஆனால் ஆதிசங்கரருக்கு குரு இருந்தார். அவர் குருவை கண்டபின் அவர் பாதை எளிதாக,சுலபமாக அமைந்தது. அமைதியாக அமர்ந்து சமாதியில் இருக்க முடிந்தது.
  
ஆனால் புத்தருக்கு சமாதியில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட முடியவில்லை.கடினமாக இருந்தது.அதனால் அவர்  உண்ணாமல் விரதம் இருந்தார்.யாரோ ஒருவர் விரதம் இருக்க படி  கூறினார்,அவர் இருந்தார்.அவர் ராஜ குலத்தில் பிறந்தவர். சரணாகதி,பக்தி மற்றும் எதையும் சுலபமாக விட்டு விடும் தன்மை பற்றியும் அவர் அறிந்திருக்க வில்லை. அவர் அறிந்த தெல்லாம் செயலில் ஈடுபடுவது,முயற்சி செய்து கொண்டிருப்பது. 


அவர் கேட்டதும்,அறிந்ததும் அதுவே இந்த பெரிய  செயலும், இந்த பெரிய கர்வமும் அவரை பல  ஆண்டுகள் அலைக் கழித்தன. இறுதியில் அவர்  அனைத்தையும் கை விட்ட பின் ஞானமடைந்தார். இப்படிதான் அவர் கதை செல்கிறது. 

உங்களின் உள்ளே இருக்கும் அந்த சிறுபுத்தி உங்களை எதையும் சுலபமாக எடுத்துக்கொள்ள விடாமல்,நானே செய்யவேண்டும்,நானே அனைத்தையும் செய்யவேண்டும்,இதை நான் அடைய வேண்டும்,அதை அடையவேண்டும் என்று அலைய விடுகிறது.

நீங்கள் கொஞ்சம், அடைய என்ன  இருக்கிறது? என்று  சிறிது யோசித்தால் போதும், அனைத்துமே புரிந்து, சரணடைந்து,தியானத்தில் சென்று விடுவீர்கள். இது ஆயுர்வேத மசாஜ் மேஜையில் இருப்பது போல் தான்.நீங்கள் மேஜையில் மேல் இருந்தால் போதும்,நீங்கள்  எதுவுமே செய்ய வேண்டாம்.  எல்லாமே தானாகவே   நடக்கும். தியானமும் நடக்கும்.நீங்கள் அமர்ந்தால் போதும்,தியானமும் தானாகவே நடக்கும்.