இக்கட்டான நிலைமையில்தான், நம்பிக்கை கைகூடி வருகிறது….


07
2012...............................
மான்ட்ரீயல், கனடா
May




முழு படைப்புமே ஒரே சக்தியால ஆனது. அனைத்தும் ஒன்றினால் ஆனது. ஏதாவதுதொன்று உன்னை சங்கடப்படுத்தும்போது, இந்த ஒரு தத்துவத்திற்கு நீ திரும்பினால் – அது பெரிய நிம்மதியைத் தருகிறது. நான் சொல்வது புரிகிறதா?

மூன்று விதமான அறிவாற்றல்கள் உள்ளன.

ஒன்று வேலை செய்யாமல் செயலற்று இருப்பது; தூக்கத்தில், ஆழ்ந்த உறக்கத்தில் எதிர் மறையானது. இது தமஸ அறிவாற்றல்.இன்னொன்று ரஜஸ அறிவாற்றல். அநேக மக்களுக்கு ரஜஸ அறிவாற்றல் இருக்கிறது. ஒவ்வொருவரும் ரஜஸ அறிவாற்றலிலேயே செயல்படுகிறார்கள். ரஜஸ அறிவாற்றலென்றால் ஒவ்வொன்றையும் வேறு விதமாகப் பார்ப்பதாகும் – இவன் மாறுபட்டவன், அவன் மாறு பட்டவன், இவன் அம்மாதிரி நடக்கிறான், அவள் இம்மாதிரி நடக்கிறாள்; இது போன்ற மாறுபாடுகளில் இலயித்திருப்பது. பல தரப்பட்ட மக்கள் இருக்கிறார்கள், பல தரப்பட்ட குணாதீசயங்கள் கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்று நினைத்து அவைகளை உண்மையென கருதுவது. இம்மாதிரி நீ இருந்து சில சமயங்களில் நீ மிக உயர்ந்த நிலைக்குச் செல்லுகிறாய், சில சமயங்களில், தாழ்ந்தும் போகிறாய். இது, ரஜஸ அறிவாற்றல்.

இது தவிர, சாத்வீக அறிவாற்றலும் உண்டு,அது உயிர் மலர்ச்சியின் இலக்ஷியம். அனைத்து மாறுபடுகளின் அடிப்படையில் ஒன்றே ஒன்றுதான் உள்ளது என்பது சாத்வீக அறிவாற்றலின் கண்ணோட்டம்.அடிப்படை உண்மை ஒன்றுதான். அந்த ஒன்றே பல வடிவங்களில் வந்துள்ளது.

சாத்வீக அறிவாற்றல், ஒருவனே அனைத்து பொம்மைகளையும் ஆட்டுவிக்கிறான் என்கிறது. உண்மையில் அது ஒருவனே பல வேடங்களைத் தாங்குவது.திரைக்குப் பின்னால் உள்ள ஒருவன், அவனுடைய பத்து விரல்களையும் உபயோகித்து, திரையில் பல கதைகளையும் நிகழச்செய்து, பொம்மைகளை ஆட்டுவிக்கிறான்.அவர்கள் ஒவ்வொரு கைக்கும் ஒரு கயிறு கட்டி இந்த பொம்மைகள் அனைத்தையும் அங்குமிங்கும் ஆடச்செய்கிறார்கள்.

ஆகவே, சாத்வீக அறிவாற்றல், ஒன்றையே, ஒரே உண்மையையே, ஒரே நிஜத்தையே, அனைத்து படைப்புகளுக்கும் ஆதாரமான ஒரே உணர்வையே பார்க்கிறது. இந்த உண்மை மனதில் நன்கு பதிந்துவிட்டபோது, மாறுபாடுகளை நீங்கள் பார்த்தாலும், அவைகளில் நீங்கள் இலயித்தாலும், நீங்கள் அசைக்க முடியாமல் இருப்பீர்கள்.

நல்ல அடித்தளம் உடைய ஒரு வீடு பூகம்பத்தில் இடிவதில்லை. அதற்கு அதிர்ச்சி தாங்கி உள்ளது. ஒரு உண்மையான அதிர்ச்சி தாங்கி, இவையனைத்தும் ஒரே உணர்வினாலானது என்ற அறிவுடன் மிக ஆழத்தில் உள்ளது. ஒரு பொருளின் அனைத்தும் ஓரே உணர்வு கொண்டது. நான் அந்த ஒரே உணர்வு, அனைத்தும் அந்த ஒரே உணர்வு. இதை அறிந்தவன் சுதந்திரமானவன். அது சுதந்திரம் எனப்படுகிறது. ‘நான் அவ்வளவு சுதந்திரமானவன்.எதுவும் என்னை தொந்திரவு செய்வதில்லை..

ஆர்ட் ஆஃப் லிவிங்கின் 30 வருடங்களில் எங்களுக்கு எந்த சர்ச்சைகளும் இல்லையென்று தெரியுமா உங்களுக்கு? உலகம் முழுவதுமுள்ள அமைதியான நிறுவனம். சமீபத்தில் ஒரு சர்ச்சை எழுந்தது. செய்தி நிறுவனங்களும், உயர்மட்ட அரசியல் வாதிகளும், அனைவரும் என்னுடைய  கூற்றை விமரிசித்தார்கள். ஆகையால், எங்களுடைய ஆசிரியர்களும், சேவை செய்பவர்களும் கூட ‘ஏன் இப்படி நேர்ந்ததுகடவுளே!!! இது எதிர்மறையான விளம்பரம்’ என்றெல்லாம். ‘அப்படியே இருக்கட்டும்’ என்று நான் சொல்லி விட்டேன்…..

அரசாங்கம் பள்ளிகளை நடத்தக் கூடாது என்று செய்தி வெளியிட்டேன்.அரசாங்க சார்பற்ற நிறுவனங்களால் நடத்தப்படும் அல்லது கிருஸ்துவர்களால் நடத்தப்படும் பள்ளிகளிருந்தும். அல்லது ஆன்மீக நிறுவனங்களிலிருந்தும் தீவிரவாத மாணவர்கள் வெளி வருவதில்லை. அரசாங்க பள்ளிகளில்தான் வன்முறை கற்கப்படுகிறது..

ஒரு மந்திரியும் தன் பிள்ளைகளை அரசாங்க பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை.அவர்கள் அனைவரும் அவர்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள். நான் இதை சொன்ன போது,அது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஒரு நிறுவனத்தின் 25 வது ஆண்டு விழாவிற்கு நான் சென்ற போது ஒரு கூட்டத்தில் நான் இதைச் சொன்னேன்.

ஆகவே, எங்கள் ஆர்ட் ஆஃப் லிவிங்க் அறிவிப்பு மையம் இரவு 10 மணிக்கு என்னை கூப்பிட்டு சொன்னார்கள்,” குருஜி, இந்த சானல் இதைப்பற்றி எங்களைக் கேட்கிறது, நாங்கள் என்ன சொல்ல வேண்டும்?” என்று. “ஒரு சர்ச்சையும் வேண்டாம், கவலைப்பட வேண்டாம்.ஒன்றும் சொல்ல வேண்டாம்’ என்றேன் நான். பாருங்கள், இந்த சர்சையினால் என்ன ஆயிற்று? தேசீய தொலைக் காட்சியில்,பல சானல்களில் விவாதங்கள் நடைபெற்றன – ஸ்ரீ ஸ்ரீ அரசாங்க பள்ளிகளைப் பற்றி நியாயமாக இருந்தாரா? அவர் இந்த விமரிசனத்தை செய்திருக்கக் கூடாது, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று…

பலர் கவனித்து கொண்டிருக்கிறார்கள், சிலர் ஒப்புக்கொண்டும், சிலர் எதிர்வாதத்துடனும்.

அவர்கள் எங்கள் ஆசிரியர்களைக் கூட வரவேற்றார்கள். எங்கள் ஆசிரியர்கள் சென்று, நாங்கள் செய்துள்ள அனைத்து செயல்களைப் பற்றி பேசினார்கள். தேசம், நாங்கள் செய்துள்ள நல்ல செயல்களைப் பற்றி தெரிந்து கொண்டுள்ளது இப்போது, இல்லையென்றால் அதற்கு வாய்ப்பே இல்லை.அதாவது நாங்கள் 185 இலவச பள்ளிகள் நடத்துகிறோம் என்று, இவையெல்லாம் தொலைக் காட்சியில் வெளியிடப்பட்டது. ஆக,எது வேண்டாதது என்று ஓரிரு நாட்களுக்கு இருந்தது, எங்களுக்குச் சாதகமாக ஆனது.

நான் ஏன் இதை சொல்கிறேன் என்றால், வெளிப்படையாக சில விஷயங்கள் வேறாகத் தெரிகின்றன, ஆனால் அடிப்படையாக அவை முற்றும் மாறுபட்டதே. ஆகையால் இது பற்றி குழம்பாதீர்கள். நடுக்கமுறாதீர்கள். அமைதி, பரபரப்பின்மையோடு எல்லாமே ஒன்றால் ஆனது என்றும், அந்த ஒன்று நான் இருப்பதைப் போன்றது என்றும், அதுவே அனைத்தும் இருப்பது போல என்றும் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த அறிவு, பெறுவதற்கு மிகவும் கடினமாக இருந்தால், அது முடியாதது அல்ல என்று நான் சொல்கிறேன்…. சந்தேகமில்லாமல், நீங்கள் சத்சங்கத்தில் இருக்கும்போது, உங்களுக்குப் பிடித்திருக்கிறது, உங்களுக்கு உகந்ததாக இருக்கிறது. ஆனால் நீங்கள் வெளியே சமயலறைக்குச் சென்றவுடன் அவையெல்லாம் மாறிவிடுகிறது. வீட்டுக்குத் திரும்பியவுடன், இன்னும் மோசமாகி விடுகிறது. “அனைத்தும் ஒன்று என்பதென்ன? நான் இப்போது கஷ்டத்தில் இருக்கிறேன். அந்த மனிதர் நான் சொல்வதைக் கேட்கவில்லை. இன்னொருவன் என்னைப் பற்றி புகார் செய்து கொண்டிருக்கிறான்.’ இப்படி அப்படியென்று. ஆனால் அது முடியாததல்ல.

சாத்வீகம் புத்திசாலித்தனம்,சாத்வீக அறிவாற்றல் பிறக்கிறபோது அது சாத்வீக சுத்தி எனப்படுகிறது. தூய புத்திசாலித்தனம் உன்னுள் உதிக்கையில்,அது உள்ளிருந்து அபரிமிதமான சுதந்திரத்தை வெளிக்கொண்டு வருகிறது;பௌதீக குப்பையிலிருந்து சுதந்திரம், உணர்ச்சிகளின் குப்பையிலிருந்து சுதந்திரம், சிந்தனைக் குப்பையிலிருந்து சுதந்திரம். 

நாம் நம் தலையில் அவ்வளவு குப்பைகளை உண்டாக்குகிறோம். உண்மைக்கு நேர் மாறாக நாம் மக்களின் குணம் இது போன்றது அல்லது அது போன்றது என்று யூகிக்கிறோம். நாம் மக்கள் ஒரு குறிப்பிட்டவகையில் செயல்படுகிறார்கள் அல்லது எதிர்ச் செயல்புரிகிறார்கள் என்று யூகிக்கிறோம். ஏன் அது அவ்வாறாக இருக்க வேண்டும்? வாழ்க்கை உனக்கு பல வியப்புகளைக் கொண்டது. சில சமயங்களில் ஒருவன் உனக்கு மிக நல்ல நண்பன் என்று எண்ணுகிறாய்; திடீரென நீ திரும்பிப் பார்க்கையில் அவன் உனக்கு நிறைய தொந்திரவுகளை உண்டாக்குவதைப் பார்க்கிறாய். உங்களில் எத்தனை பேருக்கு இந்த அனுபவம் உண்டு? (பலர் கை தூக்குகிறார்கள்). (ஸ்ரீ ஸ்ரீ சிரித்துக் கொண்டே பதிலளிக்கிறார்) இதைப் பாருங்கள்.

ஏனெனில் ஒரே உணர்வே முழு சக்கரதைச் சுற்றுகிறது, முழு பிரபஞ்சத்தைச் சுற்றுகிறது..
இதை இருதய பூர்வமாக அனுபவித்து உணரும் ஒருவன் கூறுகிறான், “ ஆஹா! சுதந்திரம்! இப்போது! இப்போது நான் உட்கார்ந்து இவனைப் பற்றியும், அவனைப் பற்றியும், அவளைப் பற்றியும், அவனைப் பற்றியும் நினைக்க வேண்டாம்.’ இவையெல்லாம் உன் மனதை ஆக்கிரமிக்கின்றன. அது அப்படி நடக்க வேண்டாம். அனைத்தும் ஒரு உணர்வே. ஒவ்வொருவரும், சிறு பொம்மையின் விரலின் ஒரு பகுதி, மேலும் கீழும் குத்தித்துக் கொண்டு, இப்படியும் அப்படியும் நடந்து கொண்டு, அவர்களின் கர்மா அவர்களையெல்லாம் செயல்பட வைக்கிறது.

இந்த அறிவு சுதந்திரத்தைக் கொண்டு வரவில்லையா? அபரிமிதமான சுதந்திரம்!ஆக, எவ்வகை சுதந்திரத்தை அது கொண்டு வருகிறது? அது தீவிர விருப்பங்களிலிருந்து சுதந்திரத்தைக் கொண்டு வருகிறது, வெறுப்புகளிலிருந்து சுதந்திரத்தைக் கொண்டு வருகிறது.

இதை நீங்கள் தெரிந்துகொள்ளும்போது, பௌதீக அளவில், மது, போதை வஸ்துக்கள், மற்றும்
நம் மனதில் உண்டாக்கியுள்ள பல வகையான நலமற்ற பிடிப்புகள் தானாகவே மறைந்துவிடும். பின்னர், ஊணர்ச்சி வகையான குப்பை – அவன் என்னைப் பார்த்தான், அவன் என்னைப் பார்க்க வில்லை. நான் அவளை விருபுகிறேன், அவள் பதிலுறைக்க வில்லை. முன்னர், அவர்களுக்கு என்னிடம் ஆசை இருந்தது ஆனால் இப்போது அவர்களுக்கு என்னவாயிற்று – இவைகள் நிகழாது. நாம் நம் மனதில் வரவேற்கும் இந்த உணர்ச்சி குப்பையெல்லாம் – நம் அன்பை நிரூபிப்பது, இன்னொருவரின் அன்பிற்கு நிரூபணம் கேட்பது, இவையெல்லாம் தானாகவே மறைந்துவிடும்.

அதன் பின்னர், சிந்தனைக் குப்பை. நிறைய பக்கங்கள் எழுதப்பட்டுவிட்டன; பல புத்தகங்கள் எழுதப்பட்டு விட்டன, எல்லாமே சிந்தனைகள். யானையையே பார்க்காத ஒருவன் யானையைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதுவதைப் போன்றது அது. கொஞ்சம் நினைத்துப் பாருங்கள், அங்கு டெலிவிஷன் கூட இல்லை, ஒருவன் அதன் படத்தைதான் பார்த்திருக்கிறான், கையால் வரைந்தது, பார்த்துவிட்டு யானைகளைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்கள், அதன் நடத்தையைப் பற்றி, அதை எவ்வாறு கையாள வேண்டும் என்று. இதுவே இப்போதைய நிலைமை.

உணர்வுகளைப் பற்றி மிகக் குறைந்தளவில் புரிந்துகொண்டுள்ளவர்கள் புத்தகங்கள் புத்தகங்களாக, பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள், அந்த புத்தகங்களும் நங்கு விற்பனையாகின்றன! இது அவற்றின் வேடிக்கையான அம்சம்.ஆக, உனக்கு சிந்தக் குப்பையிலிருந்து அந்த சுதந்திரம் கிடைக்கிறது – இவனைக் கேட்டா, அவனை கேட்டா, இல்லை! அனைத்தும் ஒன்றாலானது.

இது அழக்காக இல்லையா? மிக அழகாக உள்ளது!

கே: கடந்த காலமும், எதிர்காலமும் நிகழ் காலத்தில் நடக்கின்றன என்று கூறியுள்ளீர்கள். காலம்,நாம் நினைப்பது போல நீளமான ஒன்றல்ல. நான் இதை பற்றி சிந்தித்து சிறிது குழம்பியுள்ளேன். இதை விவரிக்க முடியுமா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: சிறிதளவு தான் குழப்பமா? நீங்கள் முற்றிலும் குழம்பியிருக்க வேண்டும் (சிரிப்பு) உங்களை முற்றிலும் குழப்புவது என் வேலைஎதிர்கால திட்டம் நிகழ் காலத்தில், சரியா? அவை இந்த தருணத்தில்தான் உள்ளன. கடந்த கால கவலைகள் இத்தருணத்தில்தான் உள்ளன. இருப்பது இத்தருணம். முழு கடந்த காலமும், முழு எதிர்காலமும் இத்தருணத்தில்தான் உள்ளன.

கே: அஷ்டவக்ரா கீதா - மனம் உருவாக 84 ஜன்மங்கள் ஆகின்றன!! – நீங்கள் என்ன சொல்ல நினைத்தீர்கள்?

அது சரியானது, 84 பலதரப்பட்ட ஜன்மங்கள். ஆம், பல உடல்கள் உள்ளன, அவற்றில் பலவற்றை நீங்கள் கடந்து இங்கு வந்துள்ளீர்கள், இப்போது. இது 84 வதாகக் கூட இருக்கலாம்.

கே: ஏன் சிலர் கடவுளை அறிதலை நாடுகிறார்கள், மற்றவர்கள் அது பற்றி கவலைப் படுவதில்லை?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஏன் மேப்பிள் மரம் இங்கு மட்டும் வளர்கிறது, ஃப்ளோரிடாவில் இல்லை?

கே: உலகில் ஏன் இவ்வளவு ஏழ்மை இருக்கிறது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீ அது பற்றி நினைத்து ஏதாவது செய்ய வேண்டுமென்று தான். எதிர் மறைகள் இல்லையெனில், உங்களுக்கு அது பற்றி தெரிந்திருக்கக் கூட முடியாது. உடல் உபாதை இருப்பதால் ஆரோக்கியத்திற்கு மதிப்பு உள்ளது. ஏழ்மை இருப்பதால், செல்வத்திற்கு கொஞ்சம் மதிப்பு இருக்கிறது. சரியா? எதிர்மறைகள் சேர்ந்து உள்ளன, ஒன்றுக்கொன்று ஈடுகொடுக்கின்றன. நான் இங்கு ஏழ்மையை பரிந்துரைக்கவில்லை, என் கூற்றை தவறாக எதிரொலிக்காதீர்கள்.

கே: ஏசு கிருஸ்து என்னைக் காப்பவர் என்று நான் ஏற்கவில்லையெனில், நான் அவருடன் சுவர்கத்தில் இருக்க மாட்டேன் என்று என் கணவர் பயப்படுகிறார். கிருஸ்தவம் வலிமையானது. நாம் ஒரே சுவர்கத்தில் எப்போதாவது இருப்போமா என்று எனக்குத் தெரியவில்லை.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: உன் நலனுக்காக அவருடன் விவாதம் செய்து இங்கே நரகத்தை உண்டாக்காதே. அவரிடம் சொல்,” மிகவும் சரியானது, நானும் அதே சுவர்கத்திற்குப் போக குறுக்கு வழியை செய்து கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான். ஏசு கிருஸ்து என்னை இவையனைத்தையும் செய்யச் சொன்னார், நானும் முற்றிலும் அவர் கூறிய படியே செய்து கொண்டிருக்கிறேன்.” இப்படி அவரிடம் சொல்லுங்கள்.

கே: நான் விரும்பும் பெண் என்னிடமிருந்து விலகி ஓடுகிறாள். என்ன செய்வது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீ உன் அன்பை அவளிடம் வெளிப்படுத்தும் விதத்தில் மிக மோசமான தவறு ஏதேனும் இருக்க வேண்டும். உன் அன்பு தீவிரமாக இருக்க வேண்டும், அதை நீ அழுத்தமாக வெளிப்படுத்தியிருப்பாய். இதோ பார், நீ ஒரு நீர் வீழ்ச்சியின் கீழே நின்று கொண்டிருக்கும் போது, வீச்சு மிகவும் பலமாக இருந்தால், நிச்சயமாக மக்கள் அங்கிருந்து நகர வேண்டும். உனக்குப் புரிகிறதா? வீச்சு பலமாக இருந்து உன்னைத் தாக்கி உன் கேசத்தை பிடித்து இழுக்கிறது. நீ அந்த வீச்சின் கீழே நிற்க விரும்ப மாட்டாய், அவ்வளவு வேதனையானது அது. அதனால், உன் அன்பை மென்மையாகவும் நாசூக்காகவும் வெளிப்படுத்து,அபரிமிதமாக அல்ல. சில சமயங்களில் அன்பின் அதிகப்படியான வெளிப்பாடு தாங்க முடியாமலிருக்கும். ஒருக்கால் அதுதான் நடக்கிறதோ என்னவோ.நல்ல வேளை, நீ அமைதியான வகுப்பில் இருக்கிறாய். நடப்பதை நன்கு ஆராய்ந்து பார்.

கே: குருஜி, எதிர்பார்ப்பை குறைக்கும் வழிகளை நீங்கள் போதிக்க முடியுமா? நான் நிறைய திட்டம் போடுகிறேன், அது என்னை நிறைய எதிர்பார்ப்பிற்கு உள்ளாக்குகிறது.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: பரவாயில்லை, எதிர்பார், அதற்கும் வழி விடு.

கே: தியானத்திற்குப் பிறகு நாம் ஏன் ஒய்வெடுக்கிறோம்? தியானமே ஓய்வு தானே?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆமாம், சில சமயங்களில், முடிவடையாத அனுபவங்கள் அல்லது அழுத்த வெளிப்பாடு இருப்பின், உடல் கீழே படுத்து, கொஞ்சம் ஓய்வை விரும்பும். ஒவ்வொரு தியான த்திற்கு பின்பும் உள்ளூர நிறைய மாறுதல் நிகழ்கிறது. உடலுக்குத் தேவைப்பட்டால் சிறிது ஓய்வெடுப்பது நல்லது. அது கட்டாயம் இல்லை, ஒவ்வொருவரும் படுத்து ஓய்வெடுக்க வேண்டு மென்ற அவசியம் இல்லை. ஆனால், உடலுக்குத் தேவையென்றால், ஓய்வெடு. அதனால் தான் நாங்கள் எப்போதும் சொல்வது, “ உங்களுக்கு வேண்டுமென்றால் நீங்கள் படுத்து ஓய்வெடுக்கலாம்’ என்று.

ஒவ்வொரு அறிவுரையும் நன்கு அளக்கப்பட்டு, சரியாகக் கொடுக்கப்படுகிறது. இல்லையெனில், “ஒவ்வொருவரும் படுத்து ஓய்வெடுங்கள்’ என்று கூறியிருப்போம். அது ஒரு கட்டளையல்ல. உங்களுக்கு ஓய்வு வேண்டுமானல் நீங்கள் காலை நீட்டி, படுத்து ஓய்வெடுக்கலாம், அது நல்லது செய்கிறது. அது இரத்த ஓட்டத்திற்கு நல்லது.

கே: மக்கள் எந்த கேள்வியை அடிக்கடி கேட்க வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: “இதை கூட நான் குருஜியிடம் கேட்க வேண்டுமா?” அது நல்ல கேள்வி..

கே: குருஜி, என் மனதிற்கு எதிர்மறை போக்கு இருக்கும் பக்ஷத்தில் நான் என்ன செய்வது? நான் சுதந்திரமாகி நல்லதையே பார்க்க விரும்புகிறேன். இத்தருணத்தில்  மிகவும் பலமற்று இருக்கிறேன்.

ஒரு சிங்கம்,தான் ஒரு செம்மறியாட்டுக் குட்டி என்று எழுதி தன் தலையில் ஒரு காகிதத்தை வைத்துக் கொண்டால், யாரும் அதை நம்ப மாட்டார்கள். சிங்கம், “ நான் ஒரு செம்மறியாட்டுக் குட்டி, நான் ஒரு செம்மறியாடு” என்று கூறிக்கொண்டு சுற்றுகிறது. நீ இதைத்தான் செய்கிறாய்.

வாருங்கள்! உங்கள் பட்டையை அகற்றுங்கள். நீ பலமில்லாதவன் என்று சொல்லாதே. உன் கடந்தகாலம் எவ்வாறு இருந்திருப்பினும், அதை உதறித் தள்ளி, நிகழ்காலத்திலிருந்து முன்னேறு. நீ பத்து முறையோ அல்லது நூறு முறையோ தோல்வியுற்றாலும், கவலைப்படாதே; நான் கவலைப் படுவதில்லை, சென்றுகொண்டே இருக்கிறேன். எழுந்து ஓடு, தோல்வியடைந்தால் தளராமல் எழுந்து மறுபடியும் ஓடு. ஒரு சாதகர் இப்படித்தான் இருக்கிறார், இதில் விருப்பமுடையவர் இப்படித்தான் இருக்கிறார்.

இதோ பார், நீ குழந்தையாக இருந்த போது, உன் கால்களில் நிற்பதற்கு முன்பு எவ்வளவு முறை விழுந்திருக்கிறாய். தவிழ்ந்து,எழ முயற்சித்து பலமுறை விழுந்தாய்,முடிவில் நடக்க ஆரம்பித்தாய். அதுதான், அதேதான். “நான் பத்து முறை விழுந்துள்ளேன், நான் மறுபடியும் நிற்க முடியாது. நான் பூனை போல இரண்டு கால்கள்,கைகளுடன் நடக்கப் போகிறேன். நான் எப்போதுமே எழுந்து நிற்க முடியாது” என்று போதும் சொல்லாதே. அது அர்த்தமற்றது.

நீ ஒரு பறவை, நீ கீழே விழலாம் ஆனால் உனக்கு இறக்கைகள் இருக்கின்றன. விழித்து பறந்து கொண்டிரு,இங்கு ஒருவாரமாக இருந்து, ஆன்மீகத்துடனும், குருவுடனும், பாரம்பரியத்துடனும் தொடர்பை உணர்ந்துவிட்டு,“நான் பலமற்றவன்’ என்பது ஒத்துக் கொள்ளக் கூடியது இல்லை, அது அறியாமை.

கே: திருமணத்தின் காரணம் என்ன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீ தவறான நபரை கேட்கிறாய். திருமணம் செய்து கொண்டவர்களை இந்த கேள்வி கேள்.

அது முக்கியமான முடிவு என்று சொல்லுவேன். உனக்கு குழந்தைகள் வேண்டுமென்றால், நீ திருமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்று அவர்களுக்கு நல்ல கல்வியை அளிக்க வேண்டும்.

என் அனைத்து ஆசைகளையும் உனக்கு கொடுக்கிறேன், உன் அனைத்து ஆசைகளையும் உன்னிடமிருந்து எடுத்துக் கொள்கிறேன்,என்று நீ உருகி கூறும் ஒரு நிகழ்வு திருமணம். ஆசைகளை பரிமாறிக் கொள்ளுங்கள், ஒவ்வொருவரும் சொந்த ஆசைகளில்லாமல் மற்றவர்கள் ஆசைகளை நிறைவேற்றும் பொறுப்புடையவராகிறார்கள்.

ஒரு பக்தன் அவன் ஆசைகளை கடவுளிடம் விடுகிறான். “இவைகள் என் ஆசைகள் இது என் வேலை இல்லை நீ இதை நிறைவேற்று. நான் சுதந்திரமாக இருக்கிறேன். நான் என் ஆசைகளை உன்னிடம் விட்டு விடுகிறேன்” என்று..

உன்னுடைய ஆசைகளை நீ விட்டுவிடும்போது அவைகள் உன்னை தொந்திரவு செய்வதில்லை. அது போலவே, திருமணத்தில் கணவன் சொல்கிறான்,” என் அனைத்து ஆசைகளையும் உன்னிடம் விடுகிறேன், நான் ஆசையிலிருந்து விடுபட்டுள்ளேன். நீ சொல்வதை மட்டும் நான் செய்வேன்” என்று.மனைவியும் அதையே சொல்கிறாள், என் ஆசைகளை உங்களிடம் விட்டுவிட்டேன்.  உங்களுக்குத் தேவையானதை மட்டும் நான் செய்வேன்” என்று. ஆகவே, ஒவ்வொருவரும் மற்றவர் வேண்டுவதை செய்ய உறுதிமொழி எடுக்கிறார்கள். நீ உன்னுடைய சங்கல்பத்தையும், ஆசையையும் தியாகம் செய்வதாகும்..

படகிலிருந்த இரு ஜப்பானியர்களைப் பற்றிய ஒரு சிறிய கதை இருக்கிறது. புதிதாக திருமணம் ஆன தம்பதிகள் படகில் இருந்தனர். அவர்கள் தேன் நிலவிற்கு போய்க் கொண்டிருந்தார்கள் அப்போது படகு ஆட ஆரம்பிக்க,புயலும் வருகிறது. அப்பெண்மணி பதட்டப்பட, அந்த மனிதர் எப்ப்போதும் போல அமைதியாக புன்னகையுடனிருந்தார்.அந்த பெண்மணி அவரைக் கேட்டாள்,“ இந்த படகு கவிழ்ந்து விடுமோ? “நான் நடுங்கி பயந்து கொண்டிருக்கிறேன் ஆனால் நீங்கள் அவ்வளவு அமைதியாக இருக்கிறீர்கள். நாம் மூழ்கி இறக்கக் கூடியது குறித்து நீங்கள் கவலையே படவில்லை?

திடீரென, அவர் அவருடைய இழுவையை அவள் கழுத்தில் போட்டுவிட, அவள் சிரித்துக் கொண்டே கூறினாள் “ இது விளையாடும் நேரமா? நம்ம எதிர்காலத்தைப் பற்றி யோசியுங்கள். கேலி செய்யும் நேரமல்ல இது.” அவர் பதிலளித்தார், “ஏன் நீ பயப்படவில்லை? நான் இழுவையை உன் கழுத்தில் வைக்கிறேன். நான் உன்னை கொல்லப் போகிறேன்” சிரிப்புடன் அவள் சொன்னாள், “இழுவை உன் கையில் இருக்கையில் நான் ஏன் கவலைப்பட வேண்டும்? நீங்கள் எனக்கு எந்த கெடுதலையும் செய்ய மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்.”

அவர் சொன்னார், “ நான் இதே உறவைத்தான் இயற்கையிடமும், கடவுளிடமும் வைத்துள்ளேன். என் உயிர் அவர் கையில் இருக்கையில் இந்த மாதிரி புயலில் என்னை சாக விடமாட்டார். அவர் என்னை கைவிட மாட்டார். என் வாழ்கையின் பிணைப்புகள் அவர் கையில் இருப்பதால் நான் பயப்படவில்லை. ஆகவே நான் ஏன் கவலைப்பட வேண்டும்?”.  

அந்த க்ஷணமே அவள் ஆன்மீகத்திற்கு மாறினாள், கதையின்படி கடல் உடனே அமைதியானது. கடல் அமைதியாகி அவர்கள் இருவரும் தொழுதார்கள்நெருக்கடியில் தான் நம்பிக்கை கைகூடுகிறது. வேடிக்கையான விஷயம் என்னவெனில், நெருக்கடியில் முதலில் ஒருவர் இழப்பது நம்பிக்கை. மிகவும் தேவையான போதுதான் மக்கள் நம்பிக்கை இழக்கிறார்கள்.ஆகவே தான் நம்பிக்கையும் ஒரு பரிசு, நீ உண்டாக்குவதல்ல..

“நான் அவ்வளவு நம்புகிறேன், ஆனால் எனக்கு இது ஏன் நடந்தது?” என்று ஒருவரும் சொல்ல முடியாது. நீ பெரிதாக என்ன செய்தாய்? நம்பிக்கை உனக்கு அளிக்கப்பட்டது. அது உனக்கு ஒரு படகையும், துடுப்பையும் கொடுத்தது போல. ஆகவே, நம்பிக்கை கூட நீ வளர்த்த ஒன்றல்லஆனால் நெருக்கடியில் மிகவும் தேவைப்பட்டது. அதுவும் பரிசுதான்..ஆக இப்போது வரும் கேள்வி, “பிறகு என்ன?” பிறகு ஒன்றுமில்லை!

“நான் எப்படி என் நம்பிக்கையை அதிகப்படுத்துவது?” ஒன்றுமில்லை, ஓய்வெடு. நீ ஒன்றுமே செய்ய முடியாது.நான் சொல்வதெல்லாம், நான் என்ற நினைப்பை உன்னிடமிருந்து விலக்குவதே. நீ மறுபடியும் கேட்கிறாய், “எவ்வாறு நான் என்ற நினைப்பை விடுவது?” இது மக்கள் கேட்கும் மட்டமான கேள்வி, அன்புள்ளவனே, நீ செய்பவனல்ல,நான் சொல்கிறேன்.

முதன் முதலாக, நீ கைவிட ஒரு காரியகர்த்தா அந்தஸ்து உனக்கு வேண்டும். நீ செய்பவன் கூட இல்லை, ஆம்! ஆகவே ஒரு வழியுமில்லை, எவ்வகையிலும் இல்லை, அனைத்து சாலைகளும் அடைக்கப் பட்டுள்ளன, அனைத்தும் செய்யப்பட்டு விட்டன. எதை பற்றியும் நீ ஒன்றும் செய்வதற்கில்லை, புரிந்ததா?

இது அபரிமிதமான சுதந்திரத்தை அளிக்கிறது, “எதைப் பற்றியும் நான் எதுவும் செய்வதற்கில்லை” அதற்காக நீ என்னைக் கேட்காதே,“நான் எதைப் பற்றியும் எதுவும் செய்ய முடியாத போது நான் என்ன செய்ய முடியும்?” (ஸ்ரீ ஸ்ரீ சிரிக்கிறார்)

கே: ஒவ்வொரு நபருக்கும் ஆன்மீகப் பாதை தனிப்பட்டதா? அப்படியென்றால் நாங்கள் எவ்வாறு உங்களிடமிருந்து தனிப்பட்ட வழிகாட்டலைப் பெற முடியும்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆம், நாங்கள் தனித்தனியாக போதிக்கிறோம், ஒரே சமயம், மொத்தமாக. 7 பில்லியன் மக்களில் 0.00000000000001 சதவீத மக்களில் நீயும் ஒருவன்.

கே: குருஜி, நான் என் வாழ்வில் ஒரு கஷ்டமான கட்டத்தில் உள்ளேன், நான் பிரச்சினையாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். ஆன்மீகத்தைக் கொண்டு அதை சமாளிக்க முயலுகிறேன், நடை முறையில் ஜோதிட வழியில், இருந்தும் எதுவும் ஒத்து வரவில்லை. நான் ஒழுங்காக சாதனா செய்கிறேன், என்ன செய்வது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆனால் அப்படியிருந்தும் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. கொஞ்சம் திரும்பிப்பார், எந்த பிரச்சினையையும் தீர்க்க வில்லையென்றால் நீ எவ்வாறு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறாய்? அன்பார்ந்தவனே, நீ திரும்பிப் பார்க்க வேண்டும், இன்னொருவரை மதிப்பிடச் சொல். கடந்த 10 வருடங்களில், உனக்கு பிரச்சினைகள் மட்டுமே இருந்தன? சரி, உனக்கு பிரச்சினைகள் இருந்தன என்றால், கடந்த 10 -15 வருடங்களில் நீ ஒரு பிரச்சினையைக் கூட தீர்க்க வில்லையா?

அப்போது, பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய அவசியமில்லை ஏனெனில் வந்த பிரச்சினைகள் அனைத்தும் சென்றுவிட்டன, நீ இன்னும் உயிருடன் இருக்கிறாய், இன்னும் சாதனா செய்து கொண்டிருக்கிறாய்.அது பெரிய விஷயம்.அப்படியென்றால், பிரச்சினைகள் உன்னை எதுவும் செய்ய முடியவில்லை என்று அர்த்தம்.அவைகள் வந்து போயின, அவைகளுக்கு நீ தீர்வுகாண வேண்டி யிருக்கவில்லை. நான் சொல்வதை நீ புரிந்துகொள்கிறாயா?

பெரிய பிரச்சினைகள் உள்ளவர்களைப் பாருங்கள், என்னுடைய பிரச்சினைகளைப் பாருங்கள். நான் ஒவ்வொரு நாளும் எவ்வளவு கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது தெரியுமா? ஒருவர் சொன்னார், “குருஜி, நீங்கள் ஒரு கேள்விக்கு $10 கட்டணம் வசூலித்தாலும், நீங்கள் பில் கேட்ஸை விட பெரியவராகிவிடலாம்” என்று. எனக்கு அவர் சொன்னதுடன் முரண்பாடு இல்லை, ஒரு வேளை அது சரிதான். எனக்கு எவ்வளவு ஈமெயில்கள் வருகின்றன தெரியுமா? 101,000 ஈமெயில்கள்.

கடந்த மாதம் நான் பல தேசங்களுக்கு பயணம் செய்தேன். பன்னிரண்டு தேசங்கள், பதினெட்டு பட்டினங்கள் ஒரு மாதத்தில். நாளுக்கு பத்தொன்பது மணி நேரம் நான் மும்முரமாக இருக்கிறேன். நான் நீண்ட பயணத்திலிருந்து வருகிறேன், உடனே பதிலளிக்க நூறு கேள்விகள் இருக்கின்றன. மக்களை வரவேற்கிறேன். விதமாக நினைப்பவர்கள், விவாத்ங்கள், முரண்பாடுகள் உடையவர்கள், தவிர பலதரப்பட்டவர்கள் கூட. நீங்கள் எப்போதாவது நான் எரிச்சல் பட்டு பார்த்திருக்கிறீர்களா, எப்போதாவது? யோசித்துப் பாருங்கள், இந்த நிலமையில் புத்தி ஸ்வாதீனத்தோடு இருப்பது பெரிய பிரச்சினை. மன நோய் மருத்துவர்கள் சில காலம் கழித்து நோயாளிகளாகிறார்கள் என்று நான் கேள்விப்பட்டுள்ளேன். ஏனெனில் அவர்கள் சதா மக்களின் பிரச்சினைகளை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்..

மைகேல் ஃபிஷ்மான் டாக்டர்களுக்கும் அவர்களின் நோயாளிகளுக்கும் ஒரு வகுப்பை நடத்திக் கொண்டிருந்தார். அவர் சொன்னார்,” குருஜி, யார் டாக்டர், யார் நோயாளி என்று சொல்வது மிகவும் கடினமாக இருந்தது” அந்த குழு அப்படியிருந்தது. எவ்வளவு தூரம் இது உண்மை எனக்குத் தெரியாது ஆனால் பலரிடமிருந்து நான் கேட்டது, இத் துறையில் டாக்டராக இருப்பவர்கள் முடிவில் நோயாளிகளாகிறார்கள் என்று.

சமீபத்தில் AIIMS ஒரு ஆய்வு நடத்தியது.அதன்படி 78% டாக்டர்கள் வியாதியுள்ளவர்கள் அவர்களே நோயாளிகளாகிறார்கள். இது ஆய்வின் முடிவுறை, பயமுறுத்துவதாக உள்ளது இல்லையா?ஆகவே, உங்களைவிட பிரச்சினைகள் உள்ளவர்களைப் பாருங்கள், உங்கள் பிரச்சினை ஒன்று மில்லை யென்றாகிவிடும். உலகமே பிரச்சினைகள் தான். யாருக்கு பிரச்சினை இல்லை? ஏசு கிருஸ்துக்கு பிரச்சினைகள் இருந்தன. கிருஸ்துவ மதமே அவர் சந்தித்த பிரச்சினை களிலிருந்து எழுந்தது, அவர் போதனையிலிருந்து அல்ல.அவை எல்லாம் பிரச்சினைகளைக் குறித்தவைகளே அல்லவா? போதனைகள் உண்டு ஆனால் துன்பப்பட்டதே பிரதானமானது. தேச சார்பு கிருஸ்துவமதத்தின் அடையாளமல்ல,அது சிலுவை, சிலுவையிலறைந்தது.

கிருஷ்ணருக்கும் இதே பிரச்சினை தான் கடைசிவரை. அவருக்குப் பிரியமானவர்களிடம் அவர் கூறினார்,நீங்கள் அனைவரும் வடக்கே செல்லுங்கள். இந்த பட்டிணம் முழுகப் போகிறது!! அவருடைய வம்சமே ஒருவருக்கொருவர் சண்டை யிட்டு ஆனவமானர்கள். கிருஷ்ணரின் வம்சங்கள் போர்வீரர்கள், ராஜ்ஜியப்பிரஜைகள் ஆணவம் மிக்கவர்களாக இருந்தார்கள். ஏனெனில் அனைத்துமறிந்த கிருஷ்ணர் அவர்களுக்குச் சொந்தம் என நினைத்தார்கள். ‘பரமாத்மாவே எங்களவர், நாங்கள் அவர் குடும்பத்திலிருந்து வந்துள்ளோம். யார் எங்களை என்ன செய்து விட முடியும்?அந்த ஆணவத்துடன் அவர்கள் நடந்து கொண்டு ஒருவருக்கொருவர் சண்டையிட்டு அழித்து,அழிக்கப்பட்டார்கள்.ஆகையால் தான் நான் இங்கு எந்த முழுமையையும் எதிர்பார்க்க வில்லை, உலகம் முழுமையற்றது. எந்த அளவிற்கு நீ உலகில் முழுமையைக் கொண்டு வரமுடியுமோ கொண்டு வா பிறகு கை கழுவி ஆனந்தமாக இரு.

உன்னால் முடிந்ததை நிச்சயமாகச் செய். அதனால் சிலவற்றை நீ அரைகுறையாக விட வேண்டுமென்று அர்த்தமில்லை, இல்லை. உன்னால் முடிந்த அளவிற்கு முழுமையைக் கொண்டு வர நீ இங்கு இருக்கிறாய் அதற்கான புண்ணியத்தை நீ சம்பாதிக்கிறாய். நீ எவ்வளவு தூரம் செல்கிறாயோ அவ்வளவு திறன்கள் உன்னிடம் மலரும் நீயும் அந்த அளவிற்கு சந்தோஷமாக இருப்பாய். ஆகவே, நீ ஒன்றும் செய்யவில்லையெனில் நீ சந்தோஷமற்று இருப்பாய். ஆகவே நீ செய்ய வேண்டியதைச் செய், சுதந்திரமாகிவிடுவாய்.