காலப்போக்கில் நல்லிணக்கம் நல்விளைவு நல்கும்


மார்ச் 27, 2012
 

கேள்வி: தாங்கள் ஒருவரே. ஆனால் எப்படி ஒவ்வொருவருடனும் தொடர்பு கொண்டும், அவருடன் பேசிக்கொண்டும் இருப்பது போல் தோன்றுகிறது? என்ன தொலை தொடர்பு சாதனம் உபயோகப்படுத்துகிறீர்கள்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஒரே ஒரு சூரியன்தான், ஆனால் எல்லா ஜன்னல்களிலும் முழுமையாக நுழைகிறதில்லையா?

கேள்வி: சூதாட்டத்தின் விளைவுகள் என்ன? அது எவ்வாறு மனதை பாதிக்கிறது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: மகாபாரத போரிலிருந்து இப்பாடத்தை கற்று கொள்ளலாம்.

கேள்வி: குருஜி! ஒவ்வொரு உருப்படிவமும் சக்தி, உருவில்லாதது சிவம். அப்போது மூச்சு என்பதின் உருநிலை என்ன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: சிவமும் சக்தியும் சேர்ந்ததே மூச்சு.

கேள்வி: குருஜி! நான் உங்களுடன் இருப்பதற்கு மிக நன்றியுடன் இருக்கிறேன்.என்னை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீங்கள் தகுதியுள்ளவர் என்பதால்!

கேள்வி: குருஜி! இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஆன உறவை எப்படி பல முள்ளதாக மாற்றுவது? இளைஞனாகிய நான் என்ன செய்ய வேண்டும்? கிரிக்கெட்டில்
மட்டுமே போட்டி நிலவ வேண்டும் என்று எண்ணுகிறேன்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இரு நாடுகளுக்குமிடையே நட்பு அதிகரிக்க வேண்டும். இரு நாடுகளிலிருந்தும் அதிகமான மக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க வேண்டும்.
இரு நாட்டு மக்களிடையேயும் சகிப்புத்தன்மை அதிகரிக்க வேண்டும்.அப்போது உறவு மேம்படும்.

கேள்வி: கடவுளின் பெயரை ஜபித்தபின்னரும் பூரண திருப்தி நிலையையும் மகிழ்ச்சியையும் அடைய முடியவில்லையே? என்ன செய்வது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: அதற்குத்தான் வாழும்கலை பயிற்சியை அளிக்கிறோம். வாழும்கலை முதல் நிலை பயிற்சியிலேயே சுதர்சனக்ரியா செய்தபின் மனநிறைவும்,அமைதியும் ஏற்படுகிறது. அனுபவித்துப்பாருங்கள். பாகிஸ்தானில் ஆயிரக்கணக்கானவர்கள் இதை செய்து ஒருவரோடு மற்றொருவருக்கு உள்ள தொடர்பை உணர்ந்தும், தங்களிடையே பூர்ணத்வத்தையும்அனுபவித்து, மனநிறைவும்,மாற்றங்களையும் அடைந்திருக்கிறார்கள்.எம்முடன் தொடர்பு நிலையை அடைந்து, அங்கு என்னை அழைக்கிறார்கள். நீங்களும் செய்யுங்கள்.

கேள்வி: குருஜி! ஜப மாலையின் முக்கியத்துவம் என்ன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஒருவரின் மேல் விருப்பம் ஏற்படும்போது அவர் பெயரை பல தடவைகள் கூற விரும்புகிறோம். சுவர்களிலும், கல்லிலும் எழுதுகிறார்கள் பார்த்திருக்கிறீர்களா? ஒரு பையன் தனது காதலியின் பெயரை அறையின் எல்லா இடங்களிலும் எழுதிவைத்திருக்கிறான்.ஏன்? அதுதான் ஜபம். தாம் விரும்புவருக்கு கடிதம் எழுதும்போது,"நான் உன்னை காதலிக்கிறேன், நான் உன்னை காதலிக்கிறேன் , நான் உன்னை காதலிக்கிறேன் , நான் உன்னை காதலிக்கிறேன் என்று பல தடவைகள் எழுதுகிறார்கள். ஒரு முறை எழுதினாலே போதும். மனம் பல தடவைகள்
திரும்ப கூற, எழுத விரும்புகிறது. அது போல இறையின் மீதுள்ள பற்றினால் "ஓம் நமசிவாய, ஓம்  நமசிவாய, ஓம் நமசிவாய என்று மீண்டும் மீண்டும் கூற தோன்றுகிறது.

கேள்வி:
அன்புள்ள குருஜி! ஏழு சக்ரங்களையும் பஞ்சமஹாபூதங்களுடன் அவற்றின் தொடர்பையும் பற்றி கூறமுடியுமா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: பஞ்சமஹபூதங்களுக்கு ஒவ்வொரு சக்ரத்துடனும் தாக்கம் உள்ளது.வயிறு நெருப்புடனும், ஸ்வாதிஷ்டானம் நீருடனும்,இதயம் காற்றுடனும், தொண்டை வெற்றிடத்துடனும் மூலாதாரம் நிலத்துடனும் தொடர்புடையவை.

கேள்வி: குருஜி! தாங்கள் எப்போதுமே, நம்முடைய சுய ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறுகிறீர்கள். என்னுடைய செயல்களை பட்டியலிட்டுப்பார்த்ததில், பெரும்பான்மை நகலாகவே அமைந்துள்ளன.தங்களைப்போல சுய ஆற்றலை எவ்வாறு கொணர்வது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: உங்களைத் தளர்த்திக்கொள்ளுங்கள்.இயல்பாக இருங்கள்.ஆழ்ந்த தியானம் செய்யுங்கள்.அதுதான் படைப்பாற்றலின் தோற்றுவாய்.

கேள்வி: தெய்வபக்தியுள்ள, தர்மவழியில் செல்பவருக்கும் தீங்குகள் நிகழ்கின்றனவே?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: சில சமயங்களில் அவ்வாறு நிகழ்கின்றன. பொறுமையாக இருக்கவேண்டும். எல்லாம் சரியாகி,வாழ்வில் முன்னோக்கி செல்வீர்கள்.

கேள்வி: குருஜி! பல சந்தர்பங்களில் தீயவை தண்டிக்கப்படாமலும், நல்லவை வெகுமதி அடையாமலும் இருக்கின்றனவே?ஏன்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: தீயவை தண்டிக்கப்படாமலும், நல்லவை வெகுமதி அடையாமலும் இருப்பது போலத்தோன்றுகிறது. இது தோற்றம்தான்.உண்மையல்ல.காலப்போக்கில், நன்மையே பயனளிக்கும், தீயவை தண்டிக்கப்படும்.

கேள்வி: என் குடும்பத்தில் யாரோ ஒருவர் இறக்கும் தருவாயில் இருக்கிறார்.
அந்த நேரத்தில் அவர் என்ன செய்யலாம்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்:
நீங்கள் மந்திரங்களை உச்சரித்து பிரார்த்தனை செய்து அவர்களை ஆசீர்வதிக்கலாம்.

கேள்வி:
குருஜி, நான் மற்றவர்களின் அங்கீகாரத்திற்காக மிகவும் ஏங்குவதாக உணர்கின்றேன். இதனைக் கைவிடுவது எப்படி?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: முதல் படியாக நீங்கள் அங்கீகாரத்திற்காக ஏங்குகிறீர்கள் என்பதனை ஏற்கெனவே கவனித்து உணர்ந்துவிட்டீர்கள். இரண்டாவது படியாக அது தானாகவே விலகிவிடும். இது நிச்சயம் நிகழும்.

கேள்வி:
நீங்கள் இருக்கும்போது கூட சூனியம் மந்திர தந்திரம் போன்றவை நிலவுகின்றனவே? தயவு செய்து இவைகளை ஒழித்து விடுங்கள்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்:
நீங்கள் அனைவரும் ஓம் நமசிவாய என்னும் மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வாருங்கள். சூனியம் போன்றவை எந்த பாதிப்பையும் உங்கள் மேல் ஏற்படுத்தாது. கவலைப்படாதீர்கள் . எல்லாம் சரியாகிவிடும்.

கேள்வி:
இந்த மார்ச் மாதம் முதல் மகிழ்ச்சிகரமான ஆண்டு துவங்கிவிட்டது எல்லாம் நன்மையாக மாறும் என்று சொல்லப்படுகிறது. தயவுசெய்து இதைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆம்.
ஒவ்வொரு கணத்திலும் ஏதாவது நல்லதும் நிகழ்கின்றது. நல்லது அல்லாததுவும் நிகழ்கின்றது. கேட்ட நேரம் மட்டுமே என்று எப்போதுமே இருந்ததில்லை. நம் மீது நேரத்தின் தாக்கம் என்பது நிச்சயமாக இருக்கின்றது. இந்த ஆண்டு மிகவும் நல்ல ஆண்டு. எனவே மகிழ்ச்சியோடு சேவா, சாதனா, சத்சங்கம் செய்து முன்னேறிச் செல்லுங்கள். மகிழ்ச்சியாக இருக்கும்போது சேவை செய்யுங்கள். வருத்தமாக இருக்கும்போது சமர்ப்பணம் செய்யுங்கள்.

கேள்வி: முஹம்மது
கஜினி குஜராத்தில் உள்ள சோமநாதர் ஆலயத்தைத் தாக்கியபோது ஆலயத்தின் பண்டிதர்கள் அனைவரிடமும் 'சிவ பகவான் உதவி செய்வார் சண்டையிடவேண்டிய அவசியம் இல்லை ' என்று சொன்னார்கள். வீரர்கள் அனைவரும் தங்களுடைய ஆயுதங்களை கை விட்டனர். ஆனால் அவர்கள் தோல்வியடைந்தனர். அப்படியானால் இறுதியில் மிக உயர்ந்த கடவுள் யார்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்:
அவர்கள் தவறு செய்து விட்டனர். சிவன் இருக்கின்றார். அவர் எல்லோரும் தங்கள் தர்மத்தினை கடைபிடிக்க வேண்டும் அதர்மத்திற்கு எதிராக போராட வேண்டும் என்று சொல்கிறார். இல்லையென்றால் சிவபெருமானே ஏன் தன கையில் திரிசூலத்தை வைத்திருக்க வேண்டும்? எல்லா கடவுள்களும் தங்கள் கைகளில் ஆயுதம் வைத்திருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்கள் ஏன் ஆயுதம் வைத்திருக்க வேண்டும்? ஏனென்றால் எண்ணமும் செயலும் ஒருங்கிணைந்து செல்ல வேண்டும்.

பகவான் கிருஷ்ணன்
ஞானம் அளித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் சுதர்சன சக்கரத்தையும் கையில் வைத்திருந்தார். கடவுளே இறுதியானவர். ஏனென்றால் கடவுள் ஒருவரே.

இத்தனை சிலை வழிபாடுகள் ஏன் என்று என்னை பாகிஸ்தானில் கேட்டார்கள். "இந்தியாவிலும் கடவுள் ஒருவரே என்று நம்புகின்றோம். ஆனால் அந்த ஒரே கடவுளை பல வடிவங்களிலும் பல முறைகளிலும் வழிபடுகின்றோம்" என்று நான் சொன்னேன். ஒரே கடவுள் பல சீருடைகளில் தோன்றுகின்றார். கடவுள் ராணுவத்தில் இல்லை. ராணுவத்தில்தான் ஒரே சீருடையை எப்போதும் அணிந்துகொண்டிருப்பார்கள். ஒரே தெய்வம்தான் எல்லா வடிவங்களிலும் எல்லா பெயர்களிலும் தோன்றுகின்றது.

எனவே ஒரு உருவம்
, ஒரு சிவலிங்கம் அல்லது ஒரு சாலிக்ராமம் போதும். உங்கள் ஆலயங்களில் பல சிலை வடிவங்களை அமைக்காதீர்கள். அனைத்தும் ஒரே கடவுளையே குறிக்கும்.

முதன் முதலில்
நம் இந்து பண்பாட்டில் நெருப்பிற்கும், கலசத்திற்கும் மட்டுமே பூஜை செய்யப்பட்டது. பூஜை என்பது இப்படித்தான் துவங்கியது. ஆனால் ஜைன மதத்தினர் வந்து சிலைகளை அமைத்து அற்புதமாக வழிபாடுகள் செய்தனர். அதனைப் பார்த்து இந்துக்கள் தாங்களும் ஏதாவது செய்ய வேண்டுமென்று பலவிதமான உருவங்களை செய்ய ஆரம்பித்தனர். அதற்கு முன் சிவ லிங்கம் மட்டுமே இருந்தது.

கேள்வி: நான் இறைவனுக்கும் இந்த உலகத்திற்கும் இடையில் தடைப்பட்டுவிட்டேன். இந்த உலக பந்தத்திலிருந்து விலகி இறைவனை அடைவது எப்படி?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இறைவன் உங்களிடமிருந்து வெகு தூரத்தில் இல்லை. நீங்கள் வெறுமனே ஓய்வெடுப்பதுதான் அவசியம். நாம் நன்றாக ஓய்வெடுக்கும் நிலையில் இறைவன் இருப்பதை உணரலாம். முழுவதும் அர்ப்பணம் செய்துவிட்டு ஓய்வெடுங்கள். வேலைக்கு முன்பும் பின்பும் நன்றாக ஓய்வெடுக்கத் தெரிந்தால் ஒருவர் நல்ல ஆழ்ந்த தியான நிலைக்குச் சென்று இறைவனுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளலாம்.