கிடைத்த வரையில், திருப்தியாக இருங்கள்

 
3, மார்ச், 2012

கேள்வி: குருஜி! நன்றியுணர்வு பற்றி பேசுங்கள். அதிக நன்றியுணர்வுடன் இருந்தால் வாழ்வில் மேலும் அருள் கூடும் என்று முன்னரே தாங்கள் கூறியிருக்கிறீர்கள்.ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் அதிக நன்றியுணர்வுடன் எவ்வாறு இருப்பது?
 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: மேலும்' என்பதை விட்டு விடுங்கள்.அதிக ஈடுபாடு, அதிக நன்றி,அதிக மகிழ்ச்சி என்பன போன்ற மேலும் மேலும் வேண்டும்என்பதை தவிருங்கள். முதலில் மேலும் அதிக பணம், மகிழ்ச்சி , சுகங்கள் என்பன வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.பிறகு, மேலும் அதிக அமைதி, அறிவு, ஞானம் இவை வேண்டும் என்று விரும்புகிறீர்கள்.மேலும் அதிக‘’ என்கிற நிலைக்கு முடிவே கிடையாது. இதை முடிவுக்கு கொண்டு வராதவரை அமைதியும் அருளும் கிட்டாது.புரிந்ததா? மேலும் தேவை என்பதை விடுத்து இது போதும் என்று எண்ணி அமைதிப்படுங்கள்.

பகவத் கீதையில்," யத்ர்ச்ச லாப சந்துஷ்டோ த்வாந்த்வாடீதோ விமத்ஸரஹ என்று கூறப்பட்டுள்ளது. " என்ன உங்களை வந்தடைகிறதோ அதில் திருப்தி அடைந்தால் அத்திருப்தியுடன் நன்றியுணர்வு ஏற்படும். அதிருப்தியுடன் இருந்தால் நன்றிஉணர்வு எப்படி ஏற்படும்? நன்றி யுணர்வின்றி அருள் எப்படி கிடைக்கும்? நாம் சொல்வது உங்களுக்கு புரிகிறதா? இது ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது.ஆகையால் எவ்வாறு அதிக நன்றியுணர்வுடன் இருப்பது என்று என்னிடம் கேட்காதீர்கள் .குறைப்படுவதை முதலில் நிறுத்துங்கள்.வாழ்க்கையே ஒரு கனவு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.எல்லாமே ஒரு நாள் முடிந்துவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த விழிப்புணர்வு இருந்தால் உங்களிடம் மாறுதல் வரும்.இவ்விழிப்புணர்வு திருப்தியை தேடி ஓடும் உங்கள் மனநிலையை மாற்றும்.

கேள்வி: பகவத் கீதையில்"அவ்யதஹி கதிர் துக்கம்'' அரூபமானதை வழிபாடு செய்தல் துன்பத்தைகொடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. வழிபாட்டிற்கு ஒரு உருப்படிவம் தேவையா? அல்லது உரு இல்லா நிலையில் தியானம் செய்யலாமா? 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: உருவற்ற நிலையில் தியானம் ஏற்படுகிறது. ஆனால் தியானம் செய்யத் தொடங்குமுன் ஒரு உருவமைப்பு தேவைஅது எதுவாகவும் இருக்கலாம் .அதனால்தான் கிருஷ்ணர் ஒரு குரு, வழிகாட்டி, அல்லது ஆசிரியர் தேவை என்று கூறியுள்ளார். ஏசுநாதரும் என் தகப்பனிடம் என் வழியாகவே செல்ல வேண்டும்என்று கூறியுள்ளார். இதையே கீதையில் கிருஷ்ணர்,''அவ்யதஹி கதிர் துக்கம் தேஹ்வைட்விர் வப்யதே '' என்றார். உடல் உணர்ச்சிமுனைப்புடையவர்களுக்கு உருவில்லா வெளிநிலைக்குச்செல்வது மிகவும் கடினம்.அது அவர்களை பல இன்னல்களுக்கு உள்ளாக்கி உள்ளது. இதை நாம் நிதர்சனமாக பார்த்துள்ளோம். யூத மார்கத்தில் இதை முயன்றவர்கள் மிகுந்த துன்பங்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள். எது சரி எது தவறு என்பது பிரச்சினை அல்ல. உருவில்லா வெளிநிலைக்குச்செல்லும் பாதை சலிப்பூட்டுகிற கடினமான பாதை.இந்த வழியில் சென்றவர்கள் மிகவும் துன்பத்தை அனுபவித்து இருக்கின்றனர்.

இந்த வழியில் யூதர்களும், இஸ்லாமியர்களும் சென்றதைப் பார்த்திருக்கிறோம். இஸ்லாமியர்கள் ஆரம்பகாலத்தில்லிருந்தே இவ்வழியில் சென்றதால் துன்பத்தை அனுபவித்திருக்கின்றனர் . கிருத்துவத்தில் இந்த அளவு சிரமமில்லா வழி காணப்பட்டது.இஸ்லாமிய குரு முஹமது தன்னுடைய காலத்திலேயே மிகுந்த இன்னல்களுக்கு ஆளானார்.அவ்வாறே யூதர்களின் குருவும். சீக்கியர்களும் அவ்வ்யக்தா ' என்கிற உருவெளித் தோற்றமில்லா வழிபாட்டுமுறையை கடைப்பிடித்து சிரமங்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள். முஹம்மது காலத்திலேயே மிகுந்த கடினமானதாக இருந்த இஸ்லாமிய சமய வழியை போலல்லாமல் .புத்தம், ஜைனம், தவோ, ஷிண்டோ ஆகிய சமய வழிகள் சீரானவைகளாக அமைந்தன.

கேள்வி: அன்புள்ள குருஜி! நோக்கம், கவனம், தோற்றம் - இவற்றின் மறைபுதிரான விஞ்ஞானம் என்ன?அவை ஒன்றுடன் ஒன்று எவ்வாறு தொடர்புடையது ?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இம்மூன்றுமே ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஒரு நோக்கம் எழும்போது அதில் சிறிது கவனம் செலுத்தினால் அதில் ஒரு தோற்றம் எழுகிறது. இல்லையெனில் கவனம் செலுத்தாத பல நோக்கங்கள் உருப்பெறாமல் மறைந்து விடுகின்றன அல்லவா? ஆனால் கவனத்துடன் செயல் படுத்தப்படும் நோக்கங்கள் உருப்பெறுகின்றன.

கேள்வி: குருஜி! வெற்றிக்கு ஒரு ரஹசியம் கூறவேண்டுமென்றால் தாங்கள் எதைக்கூறுவீர்கள்?
 
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீங்கள் ஆழ்ந்து எதையாவது விரும்பினால் அது நிச்சயம் நடக்கும் என நம்புங்கள்.அதைக்கொடுப்பவர் கருணையுள்ள கடவுள்.உங்களுக்கு விருப்பமானதில் எது மிகவும் நல்லதோ அதைக்கொடுப்பார். எது கிடைக்கிறதோ அது மிகவும் நன்மையானது என்று நம்புங்கள்.

கேள்வி: குருஜி, நீங்கள் அனைத்துமே மாறக்கூடியது என்று சொல்கிறீர்கள். நம் வாழ்வில் ஒரு நிலையான தன்மை ஏற்பட்டிருந்தால் அதுவும் மாறக்கூடியதா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: அனைத்தும் மாறுவதன் மூலம் நீங்கள் உங்களுக்கு உள்ளே எதோ ஒன்று மாறாமல் இருப்பதை உணர்வீர்கள். மாற்றங்களுக்கான காரணம் மாறாத ஒன்றினை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் .

கேள்வி: குருஜி, முரண்பாடுகளிலிருந்து விலகி இருக்க ஒரு சாதகர் என்ன செய்ய வேண்டும்?
 
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: சாதனா, சேவா, தியானம், பிராணாயாமம் செய்யுங்கள். அதற்காகவே இந்தப் பயிற்சிகளெல்லாம் இருக்கின்றன. இந்தப் பயிற்ச்சிகளை நிறைய செய்து வந்தால், முரண்பாடு உண்டாகும் நேரங்களில் நீங்கள் சமநிலையில் இருக்க மிகவும் உதவி செய்யும்.

கேள்வி: குருஜி ! பஞ்சபூதங்களும் சமமானவைகளா அல்லது ஆகாயம் மற்ற நான்கினைவிட மேம்பட்டதா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆம்! ஆகாயம் மற்றவற்றிலிருந்து வித்தியாசமானது ஆகாயம் ஒரு சாக்ஷி.நமது ஆத்மா மாதிரி .மற்ற நான்கும் ஆகயத்திற்குள்ளாகவே இருக்கின்றது. வெட்ட வெளியின்றி நிலம், நீர், காற்று மற்றும் நெருப்பு கிடையாது. மேலும் விண்வெளி இந்த நான்கிற்கும் அடிப்படையானது ஆகும். அதுமட்டுமல்லாது விண்வெளி மற்ற நான்கினையும் எதிர்ப்பது கிடையாது.கூர்ந்து பார்த்தால் நீருக்கும் நெருப்புக்கும் உள்ள ஆழ்ந்த உறவை அறிவீர்கள். அவை ஒன்றை ஒன்று எதிர்க்கும் குணமுள்ளவை. நீர் நெருப்பை அணைத்துவிடும், நெருப்பு நீரை ஆவியாக்கி, உலர்ந்த நிலைக்காளாக்கிவிடும். அது போலவே காற்று நெருப்பைத்தூண்டியும் விடும், அணைத்தும்விடும். பஞ்சபூதங்களும் ஒன்றுக்கொன்று எதிர்மறையாக செயல்படுவதாகவும் ,ஒன்றை மற்றொண்டு நிறை செய்பவையாகவும் அமைகின்றன.

ஒன்றில்லாமல் மற்றது இல்லை. அதனால்தான் அவை ஐந்தும் இணைக்கப்பட்டு பிரபஞ்சம் என்று அழைக்கப்படுகிறது. விண்வெளி மற்ற நான்கினாலும் பாதிக்கப்படாத ஆனால் ஆதாரமானதாக விளங்குகிறது. அதனால்தான் ஆகாயமும் ஆத்மாவும் ஒரே பொருளுடையவையாகக் கருதப்படுகிறது. மனிதனிடம் மனம், அறிவு, நினைவாற்றல், ஆணவம் இவற்றிற்கு ஆத்மாவே ஆதாரமாக விளங்குகிறது .ஆத்மாவில் இந்த நான்கும் இருந்துகொண்டு தம்தம் இயல்புக்கேற்றபடி செயல்படுகின்றன.. சிலசமயம், மனமும் அறிவும் முரண் பட்டுக்கொள்கின்றன,சிலசமயம் நினைவாற்றலும் ஆணவமும் மோதிக்கொள்கின்றன. ஆத்மா அவற்றுக்கு சாட்சியாக மட்டுமே இருக்கின்றது.

கேள்வி: குருஜி,இன்று நான் புத்தகக் கண்காட்சிக்குச்சென்றிருந்தேன்.நான் பகவத் கீதை புத்தகத்தை வாங்கினேன்.முன்பெல்லாம் நான் விறுவிறுப்பான அல்லது காதல் புத்தகங்களை மட்டுமே வாசிப்பேன். இப்பொழுது என் அம்மா ,நான் சரியாகத்தான் இருக்கிறேனா என்று கவலைப்படுகிறார்கள்.நான் என்ன கூற வேண்டும்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: அவர்களிடம் சரியாகத்தான் இருக்கிறேன் என்று சொல்லுங்கள்.வண்டி சரியான பாதையில் தான் செல்கிறது.தவறு செய்பவரிடையே சரியாகச் செய்பவர்கள் வித்தியாசமாகத் தெரியும் சூழல் இருக்கிறது. ஆடை அணியாத மக்கள் வசிக்கும் கிராமத்தில் ஆடை அணியும் ஒருவன் வேடிக்கையாகத் தோன்றுவான் என்ற கூற்று உள்ளது. கவலைப்படாதீர்கள்.நீங்கள் நன்றாகவே இருக்கிறீர்கள்.

கேள்வி: குருஜி,முரண்பாடு இருக்கும் போது,கடவுள்,ஏதாவது பக்கம் சார்ந்திருப்பாரா,அல்லது நடு நிலையாக இருப்பாரா ?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இல்லை.கடவுள்,எந்தப் பக்கமும் சார்ந்திருக்கமாட்டார்.அவர் நடு நிலையாக, தனித்திருப்பார். ஆனால் கடவுளிடம் அடைக்கலம் அடைந்தவர்கள் கடவுளுக்கு, பிரியமான வர்களாக இருப்பார்கள். மகாபாரதத்தில்,ஸ்ரீ கிருஷ்ணர் ஒய்வு எடுத்து கொண்டிருக்கும்போது, அர்ஜுனனும், துரியோதனனும் அவரிடம் சென்றார்கள்.

ஏனென்றால் இருவருக்கும் ,அவர் நடு நிலை வகித்து அவர்களுடைய வேண்டுகோள்களை ஏற்ப்பார் என்ற நம்பிக்கை சம அளவில் இருந்தது.துர்யோதனனுக்கு கிருஷ்ணர் நடுநிலை இல்லாதவர் என்று தோன்றி இருந்தால்,அவர் கிருஷ்ணர் இடம் போய் பேசி இருக்க மாட்டார். துர்யோதனன் ஸ்ரீ கிருஷ்ணர் இடம் சென்றார் ஏனென்றால் அவருக்கு ஸ்ரீ கிருஷ்ணர் நடுநிலை யானவர் என்று தெரியும். அர்ஜுனரும் கிருஷ்ணரிடம் அதற்காகத் தான் சென்றார்.
 
அவர்கள் இருவரும் ஸ்ரீ கிருஷ்ணரிடம் சென்ற பொது, ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு நிபந்தனை அவர்கள் முன் வைத்தார். ''ஒருவரின் பக்கம் எனது படை இருக்கும், மற்றொருவரின் பக்கம் நான் இருப்பேன்,நான் எந்த விதமான ஆயுதமும் உபயோகிக்க மாட்டேன். நான் சண்டை போட மாட்டேன். இப்பொழுது உங்களுக்கு என்ன வேண்டுமோ என்னிடம் கேளுங்கள். நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும் உங்களுக்கு நான் வேண்டுமா அல்லது எனது படை வேண்டுமா" என்று. துர்யோதனன் தனது புத்தியை உபயோகித்தான், அவன் சிந்தனை இவ்வாறு சென்றது, - யார் ஒருவர் போரின் போது சண்டை போடமாட்டாரோ ,அவரை எடுத்துகொண்டு என்ன பயன்? அவருக்குப் பதில் அவரின் படையின் உதவியை எடுத்துக் கொள்ளலாம் என்று. அதனால் துர்யோதனன் iகிருஷ்ணரின் படையை எடுத்துக்கொண்டார். அதில் மகிழிச்சியும் கொண்டார்
 

இதை தான் இன்றும் மக்கள் யோசிக்கிறார்கள்.அவர்களுக்கு குருஜி வேண்டாம்,ஆனால் அவரின் அமைப்பில் இருந்து மக்கள் போராட்டத்திர்காக வேண்டும். மக்கள் அவர்களோடு வந்தால், அவர்கள் போராட்டம் நடத்த ஏதுவாக இருக்கும் என்று.நினைக்கிறார்கள்.

அதனால், இன்னொரு பக்கம் அர்ஜூனர் இருந்தார். அவருக்கு பகவான் கிருஷ்ணரின் சக்தியை பற்றித்தெரியாது.ஆனால் அவர் நிரம்ப புத்திசாலி என்றும் அவர் என்ன சொன்னாலும் அது அப்படியே நடக்கிறது என்றும் தெரியும்.அதனால் அர்ஜூனர் ஸ்ரீ கிருஷ்ணரை தேரோட்டியாக இருக்க வேண்டினார்.

தேரில் பயணம் செய்து அம்பு ஏய்துபவரை போல.தேரோட்டியும் பங்கும் மிக முக்கியம். அதனால் அர்ஜூனர் கிருஷ்ணரை அங்கு இருக்க சொன்னார் ஏன் என்றால் அவர் தனது மனதிலிருந்து இருந்து சிந்திக்காமல், தனது இதயத்தில் இருந்து சிந்தித்தார், இல்லை அவர் தனது புத்திசாலித்தனத்தின் உச்சகட்டத்தில் இருந்து சிந்தித்தார்.

இதனால் அவர் கிருஷ்ணரிடம் தஞ்சம் அடைந்தார்.அவரின் ஆதரவிர்க்காக இதயத்தில் இருந்து வேண்டினார்.''நான் போருக்குத் தயார். என்னுடன் நீங்கள் இருங்கள்''.

அதனால் கிருஷ்ணர் ஒப்புக்கொண்டார் . அவருக்கும் அது தான் வேண்டும். அவருக்குத் தெரியும் தான் யாருடன் இருக்கிறேனோ அவர் தான் போரில் வெற்றி பெறுவார்கள் என்று.

இதனால் தான் கடவுளிடம் தஞ்சம் இருப்பவர் கடவுளின் கிருபைக்கு ஆளாகிறார். .தற்பெருமை காட்டுபவர் கடவுளிடமிருந்து விலகி செல்கிறார். துர்யோதனன் தற்பெருமை கொண்டவன், அவன் கடவுள் இடம் இருந்து தள்ளி சென்று விட்டான்