அலைபாயும் மனமுடையவன், இறைவனை அடைய முடியாது..


08, மார்ச், 2012

கடைக்குச் சென்று ஏதாவது ஒரு பொருளை வாங்கும்போது அது ஒரு பொட்டலம் அல்லது பார்சலில் பேக் (pack) செய்யப்பட்டு வருகிறது. பொட்டலம் முக்கியமானதுதான் என்றாலும் அதுவே பொருளாகாது. பேக் செய்யப்பட்டு உள்ளே இருக்கும் பொருள்தான் முக்கியமானது. அதே போல் தான் நம் சம்பிரதாயங்கள் எல்லாம் வெறும் மேலுறை போன்றவை. அனைத்தும் ஒன்றென்ற நேச உணர்வுதான் உண்மையானது. அது இல்லாத ஒன்றை சத்சங்கம் என்றோ அல்லது கொண்டாட்டம் என்றோ அழைக்க முடியாது.

நான் உலகத்தைச் சுற்றி பயணம் செய்தபோது இந்தியாவில் ஆன்மீகமும் கொண்டாட்டமும் ஆழமாக இணைந்துள்ளது போல் வேறெந்த நாட்டிலும் இல்லை என்பதைக் கவனித்தேன். ஒரு புறம் ஆன்மீகத்தில் ஈடுபடுகின்றனர் மறு புறம் கேளிக்கைக்காக கூட்டங்கள் கூடி மகிழ்கின்றனர். ஆன்மீகக்கூட்டங்களில் கேளிக்கை, மகிழ்ச்சி இருப்பதில்லை. அது மிகவும் தீவிரமாக வறண்டு இருக்கும். இந்தியாவிலும் அதுபோல் நடக்கின்றது. ஆனால் அப்படி இருக்கக்கூடாது. ஹோலி போன்ற பண்டிகைகள் வேடிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடப்பட வேண்டியவை.

நீங்கள் எல்லோரும் ஹோலி கொண்டாடி இருக்கிறீர்களா? நான் ஒருவர் மீது ஒருவர் வண்ணங்களை பூசும் ஹோலியைக் குறிப்பிடவில்லை . நீங்கள் உங்கள் ஆன்மாவின்
நிறங்களைக் கொண்டாடும் பண்டிகை அது.ஆன்மா ஏழு நிறங்களை உடையது.

நீங்கள் இந்தக் நிகழ்ச்சிக்கு ஒரு அற்புதமான பெயரைக் கொடுத்துள்ளீர்கள்." ஆத்மோத்சவம். ஆன்மாவைக் கொண்டாடுவதுதான் ஆத்மோசவ்.பெங்களுரு,போபால் அல்லது வேறு எங்கு பெரும் கொண்டாட்டம் நடைபெற்றாலும் ராட்லமிலிருந்து பெருமளவில் மக்கள் வந்து கலந்து கொண்டு "நீங்கள் எப்போது ராட்லம் வருவீர்கள் என்று கேட்பது வழக்கம். பார்த்தீர்களா? நான் இப்போது ராட்லம் வந்திருக்கிறேன்.


சொந்தம் கொண்டாடும் நேச உணர்வுதான் வாழ்க்கையின் சாரமாகும். நேச உணர்வு இருக்கும் இடத்தில் எதுவும் மந்தமாகத் தோன்றாது. மந்தம் அல்லது சோர்வு இல்லாத இடத்தில் பேராசை இருக்காது. ஆசைகள் உங்களைத் தொந்திரவு செய்யாது. மனதில் ஏற்படும் எல்லா விதமான கோளாறுகள் நீங்கிவிடும். இவ்வாறு ஏற்படும் கோளாறுகளுக்கு காரணம் மனதில் ஏற்படும் மந்த நிலை அதாவது எதுவுமே பிடிக்காமல் போகும்.இந்த உணர்ச்சி மனதில் உள்ள மந்த நிலையால் ஏற்படுகிறது .நேச உணர்வு இருக்கும் இடத்தில் மந்த நிலை அழிக்கப்பட்டு ஆனந்தம் உண்டாகின்றது. நீங்கள் இயல்பாகவே குடிப்பழக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டு விடுவீர்கள்.

உலகின் கோடிக்கணக்கான மக்கள் தியானமும் சுதர்ஷன கிரியாவும் செய்வதால் இயல்பாகவே தங்களது தீய பழக்கங்களிலிருந்து விடுபட்டதை உணர்ந்திருக்கிறார்கள். பிறக்கும் போது ஒவ்வொருவரும் நல்லவரே என்பதில் சந்தேகமே இல்லை.அவர்களிடம் நல்ல பண்புகள் உள்ளன. காலப்போக்கில் அவை மறைந்து, மாற்றங்கள் தெரிய வருகின்றன.

(ஒருவர் குருஜிக்கு மாலை அணிவிக்கிறார். குருஜி சொல்கிறார்)

இந்த மாலைக்குப் பின்னால் இருக்கும் உங்கள் உணர்வுகளை நான் அறிவேன். நம்மை நாம் வெளிப்படுத்த இயலாததனால் மலர்கள் மூலம் வெளிப்படுத்த முயலுகிறோம். நான் சொல்கிறேன் அதற்கு அவசியமே இல்லை. உங்கள் முகத்திலிருக்கும் ஒரு புன்னகையே போதுமானது. மலர்ந்திருக்கும் உங்கள் முகத்திலிருக்கும் புன்னகை மலரை விட மிகப் பெரியது. அதுவே எனக்கு நிறைய திருப்தியை அளிக்கும்.

நாம் எது பற்றிப் பேசிக்கொண்டிரிந்தோம்? ஒருவரோடு மற்றொருவர் சொந்தம் கொண்டாடும் நேசஉணர்வு.எங்கு அந்த உணர்வு இல்லையோ அங்கு ஊழல் துவங்குகிறது. யாரும் தன்னுடையவர்களிடம், கெட்டவர்களாகவோ, ஊழல் செய்பவர்களாகவோ இருக்க மாட்டார்கள். நாம் நம்முடைய வரல்லாதவர்களிடம் தான் இவ்வாறு உள்ளோம். இன்று இந்த சமுதாயத்தில் மீண்டும் அமைதியை கொண்டு வர வேண்டுமென்றால், ஆன்மீக உணர்வின் அலைகளை ஏற்ப்படுத்தவேண்டும்.நாம் எல்லோரும் இதற்கு பாடுபட வேண்டும்.வன்முறை, திருட்டு மற்றவர் மேல் கெட்ட எண்ணம் இல்லாமல்,அவர்களிடையே நெருங்கிய பிணைப்பு இருக்கவேண்டும்.முன்பு இவ்வாறு தான் இருந்தது.இந்தியாவில் ஆன்மீக உணர்வு தழைத்திருந்தபோதுபொருளாதார நிலைமையும் நன்றாக இருந்தது.ஆன்மீக உணர்வு சரியும் நேரம் போருளாதார நிலைமையும் சரிந்துவிட்டது. இவ்வாறும் எண்ணலாம்: பொருளாதார நிலை இறக்கத்தால், நம் ஆன்மீக உணர்விலும் சரிவு வந்தது.நாம் இப்பொழுது, சமுதாயத்தை ஆன்மீகம், யோகா, வேலை வாய்ப்பு, யக்ஞம் முதலியவற்றால், நிரம்ப செய்தால்,மகாத்மா காந்தி சொன்னதுபோல்,ராம ராஜ்யத்தை கொண்டுவரமுடியும்.இன்று நாம் ஆத்மோத்சவத்தை கொண்டாடும் விதமாக மூன்று விஷயங்களைச் செய்வோம்: பாட்டு, அறிவு. தியானம்.

வாழ்க்கையில்,நீங்கள் மட்டும் தனியே இல்லாமல் உங்களோடு வேறு யாரோ உடன் இருக்கிறார் என்ற நம்பிக்கை வையுங்கள். என்னவிதமான கஷ்டங்களோ, வலியோ, இருந்தாலும், ."குருஜி,என்னால் தாங்க முடியவில்லை.தயவுசெய்து ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று என்னிடம் தந்து விடுங்கள்.நினைத்தோ,எழுதியோ அனுப்பிவிட்டு,மன இறுக்கம் இல்லாமல் வாழ்க்கையில் மேலே செல்லுங்கள்.இது தான் எனக்கு வேண்டும்.நிசப்த நிலை இல்லா கொண்டாட்டமும், கொண்டாட்டத்தை தராத நிசப்த நிலையும் உபயோகமில்லை. நிசப்த நிலை,கொண்டாட்டத்திற்கு ஆழத்தையும், கொண்டாட்டம், நிசப்த நிலை அமைதிக்கு உள்சக்தியையும் அளிக்கிறது.அதனால் தான் நாம் சிறிது நேரம் த்யனாத்தில் ஈடுபடவேண்டும்.முக்கியமானது.உங்கள் ஞாபகசக்தியை கூராக்கி, ஆரோக்கியமாக வைக்கிறது.


உங்களில் எத்தனை பேருக்கு உடல் வலி இருக்கிறது? ஏன் தெரியுமா? நாம் நிலத்தில் ரசாயன பொருட்களையும் பூசிகொல்லிகளையும் போட்டு,அதிலிருந்து வரும் பயிரை உண்ணும்போது,நம் உடலில் வலியை உணர்கிறோம். முன்பு நம் வீட்டில் வைத்த அரிசி,கோதுமை போன்றவற்றை, பூச்சிகள் சாப்பிடும். இப்பொழுது அவ்வாறு நடப்பதில்லை. ஏன்?

உங்கள் உடலை சுத்தப்படுத்தவேண்டுமானால்,ஆயுர்வேதத்தைப் பயன்படுத்துங்கள்.வாரம் ஒரு முறையேனும் திரிபலா சூர்ணம் எடுத்துக்கொண்டால்,குடலைச் சுத்தப்படுத்தும். 

உடலை சுத்தப்படுத்த ஆயுர்வேதம் தேவை.தினமும் பிராணாயாமம் சிறிது நேரம் செய்தால், உடலுக்கு வலிமையையும்,மனதுக்கு நிறைவையும் தரும்.எல்லோரும் இசையை கவனத்துடன் கேட்கவேண்டும்.பாட்டு பாடிக்கொண்டிருக்கும்,ஆனால் மனமோ எங்கோ சுற்றிக் கொண்டிருக்கும், அல்லது பேசிக்கொண்டிருப்பீர்கள்.அப்படி இருக்க கூடாது..இசையை கவனமாக கேளுங்கள் .இசை நம் உணர்ச்சியை சுத்தப்படுத்தும்.

அறிவு மனதை சுத்தப்படுத்தும்.நன்கொடை செல்வத்தை சுத்தப்படுத்தும்.நெய் உணவை சுத்தப் படுத்தும். பக்தி பாடல்களை கேட்பதற்கும்,நல்ல உணவை உண்பதற்கும்,தயங்க கூடாது.
இல்லையென்றால்,உடலாலும்,உள்ளத்தாலும் (ஆன்மீக உணர்வுகள்) பசியோடு இருக்க வேண்டியது தான்.

கேள்வி: வாழ்க்கையின் குறிக்கோள் என்ன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: உங்கள் மனதில் தோன்றிய இந்த கேள்வி நல்ல கேள்வி தான்.நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று எண்ணிக்கொள்ளுங்கள்.இந்த கேள்வி உங்களுக்குத் தோன்றியதே ஒரு நற்பேறு. நம் வாழ்வின் நோக்கம் என்ன?நாம் வாழ்க்கையை வாழ்ந்து விட்டு,வாழ்க்கை என்பது என்ன என்று கூட எண்ணுவதில்லை.தெரிந்தவர்கள் சொல்லமாட்டார்கள், சொல்பவர்கள் அறியமாட்டார்கள்.

கேள்வி: குருஜி, கடவுள் நம் உள்ளே இருக்கிறார் என்றால்,ஏன் வாழ்க்கையில் கஷ்டங்களை அனுபவிக்கிறோம்?
 
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: ஏன் என்றால் நாம் கடவுளை நோக்கி இல்லை சூரியன் பிரகாசிக்கும் போது,அதற்கு உங்கள் முதுகைக் காண்பித்து நின்றால்,உங்கள் நிழலைத்தான் எதிரில் பார்க்க முடியும்.உங்கள் கவலை தான் அந்த நிழல்.அது உண்மை அல்ல. நிழல்.கடவுளை காணாத உங்கள் நிலை தான் அந்த நிழல்.கடவுளை விட்டு விலகினதால் தான்,நாம் துயரங்களை அனுபவிக்கிறோம்


கேள்வி: குருஜி, பகவத் கீதைக்கும்,மகாபாரதத்திற்கும் என்ன வேறுபாடு?

ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்; பகவத் கீதை, மகாபாரத அத்யாயத்தின் பாகம்.

கேள்வி: குருஜி, குருவிற்கும்,சத்குருவிற்கும் உள்ள வேறுபாடு என்ன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: வேறுபாடு ஒன்றும் இல்லை. இரண்டும் ஒன்று தான். உண்மையின் பண்பில்லாதவரை குரு என்று அழைக்க முடியாது.

கேள்வி: குருஜி,மனதின் உந்துதலில் ஒரு கேள்வி,வெற்றி என்றால் என்ன? நாம் எவ்வாறு முழுமையான வெற்றி அடைய முடியும்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்; வெற்றியின் அடையாளம் முகத்தில் ஒரு புன்னகை. என்ன நடந்தாலும் நீங்கள் சிரித்து கொண்டிருந்தீர்களானால்,அது தான் வெற்றியின் அறிகுறி.

கேள்வி: கர்மா,தர்மம்,ஆன்மிகம்,இதில் எதற்கு முதன்மை அளிக்கவேண்டும்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: நீங்கள் முதலில் தொலைபேசியை பார்ப்பீர்களா? அல்லது முதலில் பேச்சை கேட்டு விட்டு பின் பார்ப்பீர்களா? அது வேலைக்கு ஆகாது இரண்டும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும்..அது போல் கர்மா,தர்மம்,ஆன்மிகம் மூன்றும் சேர்ந்தே நிகழக்கூடியது.

கேள்வி: குருஜி ,நாம் செய்வது சரியா ,இல்லையா என்று எப்படி தெரிந்து கொள்ள முடியும் ?

ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: உங்களையே ,உங்கள் உள் மனதை கேளுங்கள். நீங்கள் தவறு செய்திருந்தால் அது உங்களை கிள்ளும் .ஆனால் சரியாக செய்திருந்தால் நீங்கள் பயப்படமாட்டீர்கள் .சரியானதை செய்திருந்தால் பயப்படமாட்டீர்கள்.அதேசமயம் தவறான செயல் செய்திருந்தால் ,உங்கள் உள்ளே ஒரு நமனமப்பு ,இருந்து சங்கடங்களை எதிர்கொள்வீர்கள்

கேள்வி: எப்பொழுது ஊழலும் தீவிரவாதமும் முடியும்? சனாதன தர்மமும் முடிந்து விடுமா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: இல்லை சனாதன தர்மம் எப்பொழுதுமே முடிவடையாது.காலம் காலமாக அது நடைமுறையில் உள்ளது,தொடர்ந்து நிலைத்து நிற்கும் .வாழும் கலை பயிற்சி கடந்த 30 வருடங்களாக நடைபெற்று வருகிறது. யோகா,பிரணாயமம்,சுதர்சன் க்ரியா உலகில் 152 நாடுகளில் நடைமுறையில் உள்ளது. அங்குள்ள பல்கலை கழகத்தில் சாதனா செய்வதாக சொன்னார்கள். இது உலகம் முழுதும் இப்பொழுது பழக்கமாகிவிட்டது. இம்முறையும்,மத்யப்ரதேசத்தில், இந்தூர் ,ரத்லம் வந்து பாகிஸ்தான் செல்வேன். அங்கு ஆயிரக்கணக்கானவர்கள் சாதனா செய்கிறார்கள் ,என்னை வற்புறுத்தி அழைப்பதால் அங்கு செல்கிறேன். உலகின் ஒவ்வொரு மூலை முடிக்கிலும் நம் தியானம், அறிவாற்றலின் பாரம்பரியம் தேவைப்படுகிறது. நாம் இதை அவர்களுக்கு புரியும்படி கூறவேண்டும்.

நான் பாகிஸ்தான் போனபோது," உங்கள் நாட்டில்,மக்கள் நிறைய கடவுளர்களை வணங்கு கிறார்கள் ,ஆனால் இங்கு நாங்கள் ஒரு கடவுளை தான் வழிபடுகிறோம்" என்று கேட்டார்கள்.
நான் சொன்னேன் ; நாங்களும் ஒரு கடவுளைத்தான் வழிபடுகிறோம்.எப்படி தெரியுமா? ஒரே கோதுமை மாவிலிருந்து, சமோசா ,பராந்தா ,கராச்சி அல்வா போன்ற பல பலகாரங்களை செய்கிறோம்.ஏன் ஒரே கோதுமையிலிருந்து விதவிதமான பண்டங்களை செய்கிறோம்?அதுபோல் ஒரு கடவுளை பல விதமாக வழிபடுகிறோம். அந்த கடவுளுக்கு பலவிதமான குணாதிசயங்கள் உள்ளன. ஒவ்வொரு குணத்திற்கும் ஒரு உருவத்தை கொடுத்திருக்கிறோம் .


இஸ்லாமியத்தில் அல்லாவிற்கு 99 பெயர்கள் உள்ளன. சனாதன தர்மத்தில்,108 பெயர்கள் இருப்பதால்,அத்தனை உருவங்கள் செய்துள்ளோம். ஏன்?108 மட்டும் இல்லை ஆயிரம் நாமங்கள்/பெயர்கள் உள்ளன.ஆனால் ஒரே ஒரு கடவுள் -நூர்/பரமாத்மா, அவரைத்தான் நாங்கள் வெவ்வேறு பெயர்களிலும்.உருவங்களிலும் வழிபடுகிறோம் என்னுடைய இந்த பதில் அவர்களுக்கு திருப்தியை அளித்தது ."

நாங்கள் இவ்வாறு இதுவரை கேட்டதில்லை. இந்த அறிவை பெற முடியவில்லை.நாங்கள் நீங்கள் எல்லோரும் .(மற்ற மத மக்களை) எங்களிலிருந்து வேறுபட்டவர்கள் என்று எண்ணியிருந்தோம்"


கேள்வி: மக்கள் பணத்தைத்தேடி ஓடுகின்றனர்.அந்த நிலையில் எப்படி ஆன்மீக வழியில் ஈடுபடுவது? எங்கிருந்து இதைத் துவங்கவேண்டும்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆன்மீகமும் பொருளியல் முறைமையும் ஒன்றுக்கொன்று எதிரியல்ல. இதை முதலில் புரிந்து ஏற்றுக்கொள்ளுங்கள். செல்வந்தராக இருப்பதால் ஆன்மீக வாழ்கையை அடையமுடியாது என்பதல்ல.நிறைய சம்பாதியுங்கள். செல்வந்தராக இருங்கள். ஆனால் அதை நியமமாகச் செய்யுங்கள்.

கேள்வி: குருஜி! தற்போது எல்லா இடங்களிலும் சமயக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால் உண்மையில் சமயம் என்பது தொலைந்துவிட்டதாகவே தோன்றுகிறது. என்ன காரணமாக இருக்கும்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நான் அவ்வாறு நினைக்கவில்லை. நன்றாக கண்ணைத் துடைத்துக் கொண்டு பாருங்கள்! உலகெங்கிலும் நிறைந்த அளவில் நல்லவர்கள் இருக்கிறார்கள். தீயவர்கள் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளனர்.ஆனால் நல்லவர்கள் மிகவும் அமைதியாக இருக்கிறார்கள். செயலிழந்து இருக்கிறார்கள். அதுதான் தவறு. நல்லவர்கள் எழுச்சியுடன் என்று செயல்படு கிறார்களோ அன்று தீயவர்கள் அடக்கப்படுவார்கள்.

கேள்வி: குருஜி! இந்த ஆண்டான 2012 பற்றி நிறையக் கூறப்பட்டுவருகின்றன, இந்த சூழ்நிலையில் இந்தியாவின் வருங்காலம் இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்று எண்ணுகிறீர்கள்??


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இந்தியாவின் வருங்காலம் பிரகாசமாக இருக்கும்.மக்கள் இந்த ஆண்டு விழித்தெழுவார்கள். நிச்சயமாக இங்கு இளைஞர்களும் விழிப்புடன் இருக்கிறார்கள்.இந்த தேர்தலிலிருந்து மக்கள் ஊழலை எதிர்ப்பது நன்றாகவேத்தெரிகிறது.


கேள்வி: குருஜி! ஆண் பெண் இருபாலருக்கிடையே ஏன் இந்த அளவு பாரபட்சம் காண்பிக்கபடுகிறது?


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இந்த பாகுபாடு தவறானது. இந்தியாவில்தான் கடவுள் அர்த்தநாரீஸ்வரர்  பாதி ஆண் பாதி பெண் என்ற உருவில் - வணங்கப்படுகிறார்.உண்மையில் இந்தியாவில் பெண்கள் ஆண்களை விட ஒரு படி முந்தியவராகவே கருதப்படுகின்றனர். ஆங்கிலத்தில் ஒரு தம்பதியரை மிஸ்டர் மற்றும் மிசெஸ் என்று அழைக்கிறார்கள்.ஆனால் இந்தியாவில் முதலில் பெண்ணின் பெயர்தான் குறிப்பிடப்படுகிறது. இந்தியாவில்தான் ஸ்ரீமதி மற்றும் ஸ்ரீ என்று குறிப்பிடுகிறார்கள்.


கேள்வி: குருஜி! நாம் வாழ்வில் எதை முக்கியமாகக்கருத வேண்டும்- நம்முடைய சந்தோஷத்தையா அல்லது நம்முடன் நெருங்கியவர் சந்தோஷத்தையா ?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: அதை உங்கள் இரு கண்கள் போலக் கருதுங்கள். நீங்கள் சந்தோஷமாக இருந்தால்தான் உங்களுடன் இருப்பவரை சந்தோஷப்படுத்தமுடியும். அவர்களை சந்தோஷப்படுத்துவதில் நீங்கள் மகிழ்ச்சியடைந்தால்தான் நீங்கள் முன்னேறுவீர்கள்.


கேள்வி: குருஜி! வாழ்வில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களில் சமநிலையை அடைந்து மகிழ்வுடன் இருக்க என்ன செய்யவேண்டும்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: கான , ஞான, தியான வழி. அதாவது, சங்கீதம், ஞானம், மற்றும் தியானம்.

கேள்வி: முக்தியடைய என்ன வழி?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீங்கள் சரியான இடத்தில்,சரியான வாக்கினை கேட்டுக் கொண்டிருக்கிரீர்கள். விடுதலையடைந்தவர் யாரோ ,அவரால் தான் உங்களை விடுவிக்க முடியும். என்ன நான் சொல்வது புரிகிறதா?

கேள்வி: குருஜி! எந்த வயதில் தங்களுக்கு ஆன்மீக வழியில் விருப்பம் ஏற்பட்டது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: பிரியமானவரே ! நான் பிறக்கும்போதே இது என்னுடன் வந்தது. இது என்னுடைய இயல்பு என்று நினைக்கிறேன். எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்தே இதை உணருகிறேன். இந்த உலகமே எனக்குப்புதியதாகவும்,பழகியதாகவும் தோன்றுகிறது. ஒவ்வொருவருமே எனக்குத்தெரிந்தவராக உணருகிறேன். யாருமே அன்னியர் அல்லர்.

கேள்வி: குருஜி! தவறு செய்பவரை எவ்வளவோ முயற்சி எடுத்தும் சரியான வழிக்குக்கொண்டு வரமுடியவில்லைஎன்றால் என்ன செய்வது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: தவறு செய்பவரை சரியான வழிக்குக்கொண்டு வர முயற்சி செய்யுங்கள். முடியவில்லைஎன்றால் அவருக்காகக்கடவுளிடம் பிரார்த்தியுங்கள். அப்போது நிச்சயம் சரியான வழிக்கு வருவார். பிரார்த்தனை என்றால் மேலோட்டமான பிரார்த்தனை அல்ல. அவரது தவறான வழி கண்டு உங்கள் மனதில் ஆழமான வேதனையை உணர்ந்து பிரார்த்திக்கவேண்டும். அந்த வேதனையை உங்கள் மனதிலேயே வைத்துக்கொள்ளாமல் அதை கடவுளிடம் சரணடைந்து ஒப்படைத்துவிடுங்கள்.தவறு செய்பவர் திருந்துவதற்கான பிரார்த்தனை உங்கள் ஆழ்மனதிலிருந்து எழ வேண்டும். அப்போதும் திருந்த வில்லை என்றால் பின்னர் அவர்தம் கர்மவினை என்று கருதி விட்டுவிடுங்கள்.

கேள்வி: குருஜி! உண்மையில் கடவுள் இருக்கிறாரா? ஆம் என்றால் எப்படி அறிவது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: கடவுள் இருக்கிறார் அவர் உங்களுக்குள்ளேயே இருக்கிறார் என்று கூறவே நான் இங்கு வந்திருக்கிறேன். கடவுளைக்காண முயற்சிக்காதீர்கள். கடவுளைக் காண்பிக்கிறேன் என்று யாராவது கூறினால் அவர் முட்டாள்.கடவுள் ஒரு பொருள் அல்ல, காணப்படுபவரும் அல்ல. அவரே காண்கின்றவர். அதனால் தியானத்தின் மூலமே அவரை உணரமுடியும். ஒரு மனிதருடைய மனம் வெளிப்புறமாகவே சென்றிருந்தால் உணர முடியாது.யாரவது ஹனுமானைக் கண்டதாகக் கூறினால் அது பிரமை. ஏன்? காண்பவரே அதைக்காட்சியாகக் காணமுடியாது.கடவுள் காட்சிப்பொருளோ, உருவப்பொருளோ அல்ல.நம்மிலிருந்து வேறுபட்டவரும் அல்ல.பரமாத்மா ஒவ்வொரு ஆத்மாவிற்குள்ளும் மறைந்திருக்கிறது.தியானம் செய்தால் " ஆஹா! இத்தனை நாள் எங்கெங்கோ தேடியது என்னுள்ளே இருக்கிறதே ''என்று உணருவீர்கள்.இந்த உணர்நிலையை நீங்கள் அடைந்த பின்னர் யாரும் உங்களை அசைக்க முடியாது. உங்கள் முகங்களில் காணப்படும் புன்முறுவலை யாராலும் அழிக்கமுடியாது. கடவுள் இங்கேயே, இந்த க்ஷணத்தில் நம்முள்ளேயே இருக்கிறார். இதை உணர்ந்து உங்களை தளர்த்திக்கொள்ளுங்கள்.விஷ்ராம் மெய்ன் ராம் ஹி !

கேள்வி: வாழ்வின் உண்மைத்தத்துவம் என்ன?சில நேரங்களில் நான் ஏதோ ஒரு மாயையில் சிக்கிக் கொண்டது போல் உணருகிறேன்!

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆம்! இந்த மாயையிலிருந்து விடுபடுவதுதான் வாழ்வின் உண்மைத்தத்துவம்.

கேள்வி: சமுதாயத்திற்கு எவ்வாறு உதவலாம்?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இது ஒரு நல்ல கேள்வி. எப்படிசமுதாயத்திற்கு உதவலாம் என்று சிந்தியுங்கள். அனைத்து இளைஞர்களும் எங்களுடன் இணைந்து ஆறு மாதங்களுக்கு செயல்பட்டால் நாட்டின் எல்லா இடங்களிலும் ஒரு புரட்சி அலையை ஏற்படுத்தலாம்.. பின்னர் எப்படி ஒரு மாற்றம் ஏற்படுகிறது என்று பாருங்கள்.உலகிலேயே இந்தியா ஒரு முன்னேற்றமடைந்த நாடாக வேண்டும் என்பது என் கனவு.இந்தியா மிக ஆற்றல் மிக்க நாடாகி, தொன்மைகாலப் பெருமையையும் கௌரவத்தையும் திரும்ப அடைய வேண்டும். உங்களில் எத்தனை பேர் இதில் என்னுடன் உடன்படுகிறீர்கள்? நாட்டில் ஒரு இளைஞன் கூட வேலையின்றி இருக்கக்கூடாது.இங்குள்ள இளைஞர்களில் எத்தனை பேர் வேலையின்றி இருக்கிறீர்கள்?இங்குள்ள மையத்தில் பதிவு
செய்து கொள்ளுங்கள்.

நாட்டிற்கு செய்ய அநேக பணிகள் காத்திருக்கின்றன. குழாய்- தொட்டி(ப்லேம்பெர்ஸ்) பணியாளர்கள், ஓட்டுனர்கள், சமைப்பவர்கள், மின்பணியானர்கள் நிறையப்பேர் தேவைப் படுகிறார்கள். நாங்கள் உங்களுக்குப்பயிற்சி தருகிறோம். நமது கல்வித் திட்டம் மிகப் பழையதும், பிழைகள் உள்ளதுமாகும். படிப்பை முடித்தவர்கள் வேலை கிடைக்காமல் இருக்கிறார்கள். படிப்பறிவில்லாதவர் பணியில் இருக்கும்போது மேல்நிலை பட்டம் பெற்ற 59 சதவீதம் பேர் வேலையின்றி இருக்கின்றனர். கல்வித்திட்டம் வேலை வாய்ப்புக் குரியதாக இருக்கவேண்டும். நமது கல்வித்திட்டம் ஒருவருக்கு வேலைக்குரிய செயல்திறனை தீட்டுவதாக அமையவேண்டும். கல்வி, ஒருவருக்கு வேலைவாய்ப்புக்குரியதாக இருந்தால், படித்து முடித்தவுடன் வேலை அமையும்.இந்த மாறுதலை நாம் கொண்டு வர வேண்டும்.


இங்குள்ள டாக்டர்களை ஒரு ஆண்டுக்கு மூன்று இலவச சிகிச்சை முகாம்களை நடத்து மாறு கேட்டுக்கொள்கிறேன்.வக்கீல்கள் மூன்று ஏழைகளுக்கு இலவசமாக வழக்குகளை நடத்திதருமாறு கேட்டுக்கொள்கிறேன்.இதை நீங்கள் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை செய்யலாம். செய்வீர்களா? பள்ளி ஆசிரியர்கள் ஒவ்வொரு ஆண்டும் மூன்று மாணவர்களுக்கு இலவசபோதனை கொடுங்கள்.மாணவர்கள் மக்களுக்கு வாக்குரிமை மற்றும் ஊழலுக்கெதிரான வாக்களித்தல் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

கேள்வி: குருஜி! ராம அவதாரம், கிருஷ்ணா அவதாரம் மற்றும் தற்போது தங்களது அவதாரம் இவற்றுக்கான வேறுபாடுகள் என்ன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: அதை கண்டுபிடிக்கவேண்டியது நீங்கள்தாம்.நான் எதற்காக சொல்ல வேண்டும்?.நான் என்னுள் இருப்பவரையும்,உங்களுள் இருப்பவரையும், மற்ற எல்லாருள்ளும் இருப்பவரையும் காண்கிறேன்.

கேள்வி: குருஜி! உண்மையிலேயே நமக்கு குரு அவசியமா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இந்த கேள்விக்கு பதில் தேவையா? கேள்விக்கு விடை அளிப்பவர் குரு, அதைக் கேட்டுக்கொள்பவர் சிஷ்யர். இந்த கேள்வியை கேட்டதன் மூலம் நீங்கள் பிடிபட்டு விட்டீர்கள். இதை கேட்டதால் குரு தேவை என்பதைகூறி விட்டீர்கள். உறங்கிக் கொண்டிருக்கும் ஒருவனிடம் நீ உறங்கிக்கொண்டிருக்கிறாயா என்று கேட்டால் ஆம் என்றாலும் இல்லை என்றாலும் அவன் விழித்துக்கொண்டிருக்கிறான் என்பது தெரியும். அதுபோல குரு தேவையா என்று கேட்டதன் மூலம் உங்களுக்குத்தேவை என்பதை உணர்த்திவிட்டீர்கள்.

கேள்வி: குருஜி! நாம் எதற்கு முதலிடம் தரவேண்டும்- உணர்ச்சிகள் நிறைந்த இதயத்
திற்கா அல்லது அறிவுசார்ந்த மனதிர்க்கா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீங்கள் பணியில் ஈடுபடும்போது அறிவுசார்ந்த மனதிர்க்கும்,உங்கள் வாழ்கை, குடும்பம் மற்றும் பொதுப்பணி இவற்றில் ஈடுபடும் போது இதயத்திற்கும் முதலிடம் கொடுங்கள்.