உலகத்தில் முட்டாள்கள்,அனைவரும் உங்களை திறமைசாலிகளாக மாற்றவே இருக்கின்றனர்....


5, மார்ச், 2012


கேள்வி: பகவத் கீதையில் கிருஷ்ணன்
,"என்னை வணங்கு, என்னை பின் பற்று நான் உன்னை விடுவிக்கிறேன்" என்று சொல்கிறான். ஒரு சாதாரண மனிதனும் நான், எனது என்று தான் ஆட்பட்டிருக்கிறான். அப்படியானால் கிருஷ்ணன் எப்படி வேறுபடுகிறான்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நமது பாபங்களை எல்லாம் விடுவிப்பவன் ஒருவன் அவன் என்னிடம் எல்லா வற்றையும் விட்டுவிடு என்று சொல்கிறான்.நான் என்று சொல்லும் மற்றொருவன் எதையும் விடுவிக்க முடியாதவன் .இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது. ஒரு மருத்துவர் வந்து, உனக்கு காய்ச்சல் உள்ளதா?நான் பார்த்து கொள்கிறேன்,என்று சொன்னால் அது ஒத்துக்கொள்ளக் கூடியது. ஆனால் யாரோ ஒருவர் மருத்துவ அறிவில்லாதவர், நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னால் அது அர்த்தமற்றது.

நான் என்று கிருஷ்ணன் சொல்லும் நிலை வேறு.நான் என்பது இங்கு உடம்பை குறிப்பது அல்ல. அதனால தான் கிருஷ்ணன், 'அவஜானந்தி மாம் முத்த மனுஷம் தனும் அஸ்ரிதம்; பரம் பவம் அஜானந்தோ மமா பஹுதா மகேஸ்வரம்" என்று அவரே சொல்கிறார்.

எனக்குள் இருக்கும் நான் என்பது வித்தியாசமான நான் ஆகும் .என்னுடைய தெய்வீக நிலை பற்றி அறியாதவர்கள் நான் சாதாரண மானிட உடம்பும் ,மனமும் கொண்டவன் என்று நினைக்கி றார்கள். அதுதான் வித்தியாசம் என்று சொல்கிறார்.

அர்ஜுனன், கிருஷ்ணனிடம் போருக்குப் பிறகு பகவத் கீதையை திரும்பச் சொல்லும்படி கேட்ட பொழுது, இல்லை, என்னால் முடியாது,அச்சமயத்தில் நான் சமாதி நிலையிலிருந்தேன்; வித்தியாசமான மன நிலையிலருந்தேன். அதனால் சொல்ல முடிந்தது இப்பொழுது மறுபடியும் சொல்ல முடியாது என்று கூறுகிறான்.

கேள்வி: எண்ணத்திற்கும், குறிக்கோளுக்கும் என்ன வித்தியாசம்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: குறிக்கோள் என்பதும் ஒரு எண்ணமே. அது உறுதியான எண்ணம் அல்லது நிறைவேற்றப்பட கூடிய எண்ணம். நிறைய எண்ணங்கள் வரும், அலை பாயும். ஆனால் சில எண்ணங்களே நிறைவேறும் அப்படி நிறைவேற கூடிய எண்ணங்களை நாம் குறிக்கோள் என்கிறோம்.

கேள்வி: என்னுடைய இந்த வாழ்க்கையை நான் எப்படிப் பயன்படுத்தி கொள்வதுஎன்னுடைய இருபத்தியேழு வருட வாழ்க்கையை வீணடித்து விட்டதாக உணருகிறேன் .இப்பொழுது நான் உபயோகமுள்ளவனாய் இருக்க விரும்புகிறேன். 
 
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நல்லது. இது ஒரு நல்ல உணர்வாகும். நீ உபயோக முள்ளவனாய் இருக்க விரும்புகிறாய். ஒரு நல்ல குறிக்கோளாகும். முதலில், வீணடித்து விட்டோம் என்ற உணர்வு வந்தவுடன், உபயோகமாக இருக்க வேண்டும் என்று அதற்குத் தீர்வும் வந்து விட்டது.அதனால் எதுவும் உங்களை நிறுத்த முடியாது. முன்னேறிச் செல்லுங்கள் .அது ரொம்ப நல்லது. 

ஆனால் கடந்ததை நினைத்து வருத்தப்பட்டு கொண்டு சும்மா உட்கர்ந்திருக்க கூடாது .நீங்கள் கடந்த காலத்தில் செய்த தவறுகளினால் வாழ்க்கையில் விலை மதிப்பில்லா நல்லபடத்தைக் கற்றுக் கொண்டுள்ளீர்கள்.அதனால் எதிர்காலத்தை நோக்கிச் செல்லுங்கள்.

கேள்வி: கேனோ உபநிஷதத்தில்,அறியாமையை போற்றுபவர்கள் நரகத்திற்கு செல்வார்கள் எனவும்,அறிவை தொழுபவர்கள் அதை விடக் கொடிய நரகத்திற்கு செல்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளதே? இதை விவரிக்கமுடியுமா? 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இரண்டு விதமான அறிவுகள் உள்ளன. வித்யா மற்றும் அவித்யா. அவித்யா என்பது அறியாமை அல்ல.ஒப்பு நோக்கம் தழுவிய அறிவு. வித்யா என்பது சார்பில்லாத அறிவு. சார்பில்லாத அறிவைப்பெற்றவன் நரகத்திற்கு சென்றால் ஒப்பு நோக்கம் உள்ள அறிவைக் கொண்டவனும் அதைவிடக் கொடிய நரகத்திற்கே செல்வான் என்பதாகும்.அதை தான் இருண்ட நரகம் என்று கூறப்பட்டுள்ளது.அது உடலும் மனமும் போன்றது. ஒருவன் தன் மனதை பற்றியே எண்ணி கொண்டு உடலை உதாசீனம் செய்வது தீமை. அது போல உடலை பற்றியே விசாரம் கொண்டு மனநலம் பேணாமையும் நல்ல தல்ல. உடலும் மனமும் இணைந்த ஒரு பல் கூட்டமைப்பு. அது போலவே அறிவும்.ஆக, சரியாகவே கூறப்பட்டுள்ளது. 

கேள்வி: எப்படி களங்கமற்ற மனதுடனும்,செயல் நேர்த்தியுடனும் இருப்பது? இது மிக கடினமாக இருக்கிறதே?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: அதுதான் முழுமையான ரஹசியம். களங்கமற்ற மனமும் நேர்த்தியான செயல்பாடும் இணைந்த நிலை. இந்நிலையை அடைய ஈடுபாடு உதவும். நம்பிக்கையும் ஈடுபாடும் இருந்தால் ஆற்றல் பெருகும். அத்தகைய ஆற்றல் கட்டுப்பாட்டுடன் இருந்தால் களங்கமற்ற மனநிலையை அடையலாம். இத்தகைய மனநிலையுடன் ஒரு வேலையில் ஈடுபடும்போது அதில் நேர்த்தி உண்டாகும். நமக்கு மேல் ஒரு சக்தி நம்மை காக்கும் என்ற விழிப்புணர்வு இருந்தால் தான்என்ற அகந்தை ஏற்படாது. ஆனால் அதற்காக ரயில் அல்லது பஸ் பயணத்தின் போது டிக்கெட் எடுக்காமல் ஏதோ ஒரு சக்தி காக்கும் என்றிருந்தால் போலீசிடம் பிடிபடுவீர்கள். ஆகவே வாழ்கை என்பது சீர்மையான செயல்பாடும் எல்லாவற்றிற்கும் பொருத்தமான விழிப்புணர்வும், கலந்த கூட்டமைப்பு.

கேள்வி: சோம்பலுக்கும் யோக பயிற்சியின் நிலைக்கும் வேறுபாடு என்ன?
 
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: சோம்பல் என்பது உங்களை சோர்வடைய செய்யும். மேலும், ஆற்றல், மகிழ்ச்சி இயக்க சக்தி இன்மை ஆகியவை ஏற்படும். யோக நிலை என்பது அதிக ஆற்றலையும் உற்சாகத்தையும் தரும். செயல்பட ஆரம்பிப்பதற்கு முன்னரே காரியங்கள் பூரணமாக நிகழக்கூடிய நிலை நைஷ்கர்ம்ய சித்தி ஆகும். இது ஒரு உயர்ந்த நிலை. அந்நிலையை அடையும்போது இந்த கேள்வியே எழாது.


கேள்வி: குருஜி! ஒரு குழுவில் ஆணவம் என்று தோன்றாமல் என் தனித்தன்மையை எப்படி நிலை நிறுத்திக்கொள்வது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இயல்பாக இருங்கள். பரிவுடனும்,கருணையுடனும் குழுப் பணிகளை செய்து வாருங்கள். 
 
கேள்வி: குருஜி! இறப்பிற்குப்பின் ஜீவாத்மா ஏதேனும் அனுபவம் பெற முடியுமா? அந்த ஆத்மா நம்முடன் தொடர்பு கொள்ளமுடியுமா

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆம்! முடியும். இறப்பிற்குப் பின்னர் ஆத்மா ஒரு தளத்தில் தனது ஆழ்ந்த கருத்துப்பதிவுகளுடன் மறு பிறவி கிடைக்கும் வரை காத்திருக்கிறது. கருத்து பதிவுகளை அனைத்தையும் விடவேண்டும், என்றெண்ணி எடுக்கும் மறு பிறவியில், பதிவுகள் மேலும் கூடுகிறது.இதுவே ஒரு சுழற்சி ஆகிறது இச் சுழற்சியை உடைக்கவே, யோகா, தியானம், பக்தி, ஆகியவை. பூரண திருப்தி நிலை விடுதலையை கொடுக்கும்.

கேள்வி: குருஜி நான் போன வாரம் தான் முது நிலை பயிற்சி செய்து மிக ஊக்கத்துடன் இருக்கிறேன். ஆனால், நான் அலுவலகம் சென்ற உடனே மீண்டும் என்னுடைய மனநிலையை உயர் அதிகாரியால் இழக்கிறேன்.எப்படி என் மன நிலையை நான் இழக்காமல் இருப்பது அல்லது என் உயர் அதிகாரியிடம் இருந்து விடுபடுவது என்பதை கூறவும். 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இரண்டும் இருப்பதற்கு எதோ காரணம் உள்ளது.ஆகையால்,உயர் அதிகாரி அப்படி உன்னுடன் நடந்து கொள்ளும் பொழுது உனக்குள் எப்படி எரிச்சல் ஏற்படுக்கிறது என்பதை கவனிக்கவும். என்ன நடக்கிறது? உனக்குள் ஏதேனும் ஆரம்பித்தால், ஓர் ஆழமான மூச்சு எடு,உன் கவனத்zதை உன் மேல் அதிகாரியிடம் இருந்து நீக்கி,உன் உடலில் ஏற்படும், உணர்ச்சிகள், அதிர்வுகள் மேல் மாற்று. உன்னையே அமைதி படுத்தி கொள்ள முயற்சி செய். அப்படி நீ செய்தால் அந்த சூழ்நிலையை திறமையாக அணுகலாம், திறமைசாலியாக மாறுவாய்.

உலகத்தில் முட்டாள்தனமான மக்கள் இருப்பது உன்னில் இருக்கும் திறமைகளை வெளி கொணர்வதற்காக தான்.எப்படி அவர்களை கையாள்வது? எப்படி அவர்களிடம் நடந்து கொள்வது? என எல்லா திறமைகளும் உன்னிடம் இருந்து வெளி வரும்.
கேள்வி: குருஜி, ஒருவரிடம் இருந்து விலகுவதற்கு எது சரியான தருணம் என எனக்கு எப்படி தெரியும்? கடந்த5 வருடமாக நான் ஒரு உறவினால் கஷ்டப்பட்டு கொண்டு இருக்றேன். இது என் வாழ்கையில் மிக பெரிய கஷ்டமாக உள்ளது?

 
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நான் உனக்கு அறிவுரை வழங்க முடியாது,ஏனென்றால், எனக்கு யாரிடம் இருந்து பிரிந்த அனுபவம் இல்லை.உனக்கு நீயே கேட்டு கொள். நீ நூறு சதவீதம் அந்த உறவு முறைக்கு பங்கு அளித்தாயா? இல்லை என்றால் அதை கொடுக்க முயற்சி செய்து, உறவை வலுப்படுத்து. அதுவும் சரிப்படவில்லை,என்றால் நீ விட்டு விலகிவிடுவது நல்லது. விலகி விடு. வாழ்கையை வீணாக்காதே. நீ வாழ்கையில் உறவுகளை பேணுவதை விட செய்ய வேண்டியது அதிகம் உள்ளது, அதனால் அதிலேயே மாட்டிகொள்ளாதே. 

கேள்வி: குருஜி, நாம் இந்த பிறவியில் அல்லது வேறு பிறவிகளிலோ, ஏதேனும் கெட்ட செயல்கள் செய்கிறோம். எந்த கர்மாக்களை அழிக்க முடியும்? எந்த கர்மாக்களால் கஷ்டப்பட வேண்டும் 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: உட்கார்ந்து கொண்டு இதை பற்றி ஆராய்ச்சி செய்யாதே. அப்படியே, வாழ்கையை நடத்து. உன்னால் அதை அறிய முடியாது. பகவத் கீதையில் கூட சொல்லப்பட்டு உள்ளது. இந்த உலகத்தில் ஆன்மிகத்தில் மிக சிறந்த மனிதனாலும் எந்த கர்மா எந்த பயனை அளிக்கிறது என்பதை பற்றி அறிய முடியாது. ஆகையால் எல்லா கர்மாக்களையும் இறைவனிடத்தில் சமர்ப்பித்துவிடு.அந்த கர்மாக்களை பற்றி யோசிப்பதை விட்டு, உன்னுடைய தர்மத்தை செய்து கொண்டே இருந்தாய் என்றால், எந்த கர்மாக்கள் அழிய வேண்டுமோ அது தானாகவே அழியும். சாதனாவால் ஒரு சில கெட்ட கர்மாக்களை அழிக்க முடியும். ஆனால் ஒரு சில கர்மாக்களை நாம் அனுபவித்து தீரவே வேண்டும்.

கேளவி: குருஜி அரசியல்வாதிகளில், ஒரு சிலர் நல்லவர்களாகவும் உள்ளனர். ஆனால், அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. நீங்கள் நல்ல அரசியல்வாதிகளை, உருவாக்குவதற்கு, பயிற்சி அளிக்க நல்ல பள்ளிகளையும்,கல்லூரிகளையும் திறப்பிர்களா ?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆம்.ஒரிசாவில் உள்ள நம் பல்கலைகழகத்தில் நல்ல ஆட்சிமுறைக்கான  கல்லூரியை திறக்க போகிறோம். இந்த கல்லூரியில் கிராம பஞ்சாயத்து ,வட்டதலைமை   மாவட்டதலமை போன்ற முக்கிய பதவிகளை வகிக்க போகிரவர்களுக்கு சீரிய பயிற்சிகள் தரப்படும்., இந்த பல்கலைகழகத்தில் தேர்வு பெற்ற நபர்கள் நகர நிகாம், மற்றும் நகர பாலிகா போன்ற அமைப்புகளில் நடக்கும் தேர்தலில் நிற்பார்கள். அதற்கான வேலைகள் ஏற்கனவே ஆரம்பித்து விட்டது.  

இதே போல் பத்திரிக்கை நிருபர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கும், இந்த பயிற்சி அளிப்பது பற்றி யோசித்து கொண்டு இருக்கிறேன்.அவர்கள் தாங்கள் எவ்வாறு ஒரு முன்னோடியாக நடந்து கொள்ள வேண்டும் என்ற பயிற்சியை பெற்றுக்கொள்ள வேண்டும் மூன்று நாட்களுக்கு முன்பு பெங்களூரில் என்ன ஆயிற்று என்று பாருங்கள்.வழக்கறிஞர்கள் ஒரு பக்கமும், ஊடங்கங்கள் ஒரு பக்கமும்,பத்திரிக்கையாளர்கள் ஒரு பக்கமும், சிறிய பிரச்சினையை, சிக்கலாக்கி உள்ளனர். இந்த பிரச்சினையை சரி செய்வதற்கு, ஒவ்வொரு தனி நபரின், நடத்தைக்கும், நாம் கவனம் செலுத்த வேண்டி உள்ளது. அதனால் தான் கீதை சொல்கிறது.(ச்வல்பம் அபி ஆசய, தர்மஸ்ய த்ரயதே மஹாதோ பாயத்) சிறிய ஞானமும், தர்மமும், கூட மிக சிறந்தது. ஒருவர் ஒருபடி இப்படி முன்னேறினால், அவர், எல்லா பயங்களில் இருந்து விடுபடுவார். இதைதான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் சொல்கிறார்.

கேள்வி: குருஜி! நான் ஒரு மாணவன். நான் மேலும் அதிகம் படிக்கவேண்டும் என்று விரும்புகிறேன். தாங்கள் நேற்று, மேலும் வேண்டும் என்கிற விருப்பத்தை வளர்த்துக் கொள்ளக்கூடாது என்று கூறினீர்கள். நான் எதை விட வேண்டும்? எதில் முயற்சி எடுக்கவேண்டும்? 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஒரு மாணவனுக்கு மேலும் மேலும் படியுங்கள் என்றுதான் கூறுவேன். நேற்று நான் சொன்னது பெரியவர்களுக்காக. அதுவும் மகிழ்ச்சியைத் தேடி ஓட வேண்டாம் என்று கூறினேன்.ஞானம் பயிற்சிகள், தொண்டு ஆகியவற்றை மேலும் அடைய விரும்பலாம். 

கேள்வி: குருஜி! எனது அண்ணனுக்கு சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆயிற்று. அவன் இப்போது,”எவ்வாறு தொலைக்காட்சி பெட்டியை ஒரு தொலை இயக்கிக்கருவி மூலம் இயக்குகிரோமோ,அதுபோல் மனைவியை பணத்தின் மூலம்தான் சமாளிக்க முடியும் என்று கூறுகிறான். இக்காலத்தில் மனைவியை பராமரிப்பது விலையுயர்ந்ததாகி விட்டது. இதற்குத் தீர்வு என்ன? 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இதற்கு வேறு வழியில்லை. பராமரிப்பு செலவு அதிகமானால் அதற்கேற்றபடி சம்பாதிக்க முயற்சி செய்யுங்கள்.

கேள்வி: குருஜி! நான் தங்களை மிகவும் நேசிக்கிறேன். ஆனால் எப்போது தங்களை நேரில் பார்த்தாலும் என் கண்களில் கண்ணீர் பெருகுகிறது. என்னிடம் ஏதாவது கோளாறு உள்ளதா? 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இல்லை. கண்ணீர் பெருகுவதில் எந்த தவறும் இல்லை. அது இயல்பானது, நல்லது. உங்கள் உள்ளம் மலரும் போது கண்ணீர் வருகிறது. உபநிஷதத்தில் ஒரு ஸ்லோகம் உண்டு."பீத்யதே ஹ்ரிதய கிராந்தி ,சித்யந்தே சர்வ சம்ஷ்யாஹ், க்ஷீயந்தே ச அஸ்ய கர்மாணி, தஸ்மின் திரிஷ்டா பராவரே" மனம் விரும்புவர் , அல்லது குரு, அல்லது ஞாநி இவர்களை காணும் போது. இதயத்திலுள்ள முடிச்சுகள் அவிழ்கின்றன, மனதிலுள்ள கேள்விகளும் சந்தேகங்களும் மறைகின்றன,கர்மவினைகள் அகல்கின்றன. அதனால் தான் கண்ணீர். உபநிஷதத்தில் கூறப்பட்டுள்ளது உண்மையல்லவா? 

கேள்வி: தங்களைப்போல் மக்களுக்கு உதவக்கூடிய ஞானிகள் பலர் இருப்பதாக அறிகிறோம். ஆனால் அவர்கள் மக்களிடமிருந்து விலகி இருக்கவே விரும்புகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இன்றும் இருக்கிறார்களா? 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: அப்படி சிலர் இருக்கலாம்.ஞானப் பயிற்சிகளைச் செய்து கொண்டு இருக்கலாம். நாம் ஏன் மக்களிடையே வந்து பிடிபட்டு கொள்ள வேண்டும் என்று எண்ணலாம்.உலகில் பலவிதமானவர்கள் இருக்கிறார்கள். ஒன்றோ இரண்டோ இல்லை அனேக ஞானிகள் உலகில் இருக்கிறார்கள்.அதற்காக காட்டில் வசிக்கும் ஞானிகள் நகரத்தில் வசிப்பவர்களை விட உயர்ந்தவர்கள் என்பது பொருளல்ல. 

கேள்வி: குருஜி! எப்போதுமே தாங்கள் தேர்ந்தெடுப்பது உன்னுடைய பொறுப்பு, ஆசிகள் வழங்குவது என்னுடைய கடமை" என்று கூறுகிறீர்கள். தேர்வு மிகக்கடினமானது.சரியான தேர்வை எப்படி செய்வது? அதற்கு ஏதேனும் சூத்திரம் இருக்கிறதா?அல்லது ஆசிகளுடன் கிட்டுமா? 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: எது சரியான தேர்வு என்று காலம் உங்களுக்குக் கூறும். தேர்வு செய்து முடித்தவுடனேயே அது சரியா, தவறா என்று உங்களுக்கு தெரியும். எல்லாமே நான் செய்ய வேண்டும் என்று ஏன் என்னிடம் விடுகிறீர்கள்? நீங்களும் ஏதேனும் செய்யுங்கள் ! 

கேள்வி: சில ஆண்களைக்காணும் போது நான் மிகவும் பீதியடைகிறேன். சில சமயம் அந்த பயம் பொறுக்க முடியாததாக இருக்கிறது. நான் என்ன செய்வது? 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஒரு பெண் துர்நோக்கமுள்ள ஆண்களை கண்டு அஞ்சுவது இயல்பு தான். அதிலும் தனியாக இருக்கும்போது அந்த பயம் இயல்பு. நல்லது. அவ்வித பயம் இருப்பதால் அப்படிப்பட்டவர்கள் இருக்குமிடம் செல்லாதீர்கள். நமது சமுதாயம் பண்பட்டதாகவும், சாத்வீகமாகவும் இன்னும் ஆகவில்லை. பெண்களுகெதிரான குற்றங்கள் உலகெங்கும் பெருகி கிடக்கின்றன. இந்நிலை மாற வேண்டும்.ஆன்மீக வழி மூலமே இந்த மாற்றத்தை கொண்டு வரமுடியும். 

கேள்வி: குருஜி, பரமஹம்ச யோகானந்த்ஜி மக்களை கிரியா யோகா என்னும் ஒன்றில் ஈடுபடுத்தினார். சுதர்ஷன கிரியா என்பது கிரியா யோகாவிலிருந்து வேறுபட்டதா? எவ்வாறு?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆம். கிரியா யோகா என்பது வெவ்வேறு சக்கரங்களிலிருந்து தியானம் செய்வது. நாம் ஹரி ஓம் தியானத்தில் செய்வதை போன்றது. ஆனால் சுதர்ஷன கிரியா என்பது முற்றிலும் வேறானது. சுதர்ஷன கிரியாவில் நம் மூச்சு, ஆன்மாவின் லயம், மனதின் லயம் எல்லாமே ஈடுபடுத்தப் படுகிறது. எனவே அது மிக ஆழ்ந்த அனுபவத்தை கொடுக்கிறது. ஒருவரை ஆழ்நிலை தியானதிற்குச் செல்ல உதவுகிறது. நீங்கள் அதனை செய்யும்போது தான் புரிந்துகொள்ள முடியும். 

கேள்வி: அரசாங்கத்தின் இன்றைய கொள்கைகள் நல்ல சமூக கோட்பாடுகளை களைவதுடன், சமுதாயத்திலிருந்து மனித உரிமையை வெகு தூரம் வெகு வேகமாக நீக்கி விடுகின்றன. இந்தக் கொள்கைகளைப் புரிந்து கொண்டு மக்களின் உரிமைகளுக்காக போராடுவதற்கு அதிக நேரமும் மிகுந்த ஈடுபாடும் தேவைப்படுகிறது. நான் இதற்கென போராடுவது என்னை தங்களிடமிருந்து விலக்கி விடுமா? 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இல்லை; நிச்சயமாக இல்லை. நீங்கள் இந்தச் சமுதாயத்தில் ஒரு உண்மையான சீர்திருத்த வாதியாக செயல்படலாம். அதே சமயத்தில் உங்கள் வாழ்க்கையில் சம நிலையில் செயல்பட வேண்டும். இந்த வேலையைச் செய்து கொண்டே உங்களுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும். உங்கள் சாதனா, பிரணாயாமம், தியானம் அனைத்தையும் சரிவர செய்து கொண்டே சமுதாயத்தை சீர்திருத்தும் செயல்களில் ஈடுபடலாம்.  

கேள்வி: குருஜி, இருப்பின் ஏழு நிலைகளில் மனமும், தான் என்னும் முனைப்பும் வெவ்வேறாக பிரித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. தான் என்னும் முனைப்பு ஒரு எண்ணம் அல்லது ஒரு உணர்ச்சிதானே? 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இல்லை. தான் என்னும் முனைப்பு (ஈகோ) என்பது ' நான் என்ற விழிப்புணர்வு.' மனம், புத்தி, ஞாபகம், அகந்தை என்னும் நான்கிற்கும் வெவ்வேறு வேலைகள் உள்ளன என்றாலும் நான்கும் ஒரே உள்ளுணர்வுவை சேர்ந்தவை. மனம் என்பது எண்ணங்கள். ஞாபகம் என்பது அவற்றை பதிவு செய்யும் ஒன்று. அறிவு என்பது சரி அல்லது தவறு என்று தீர்மானம் செய்வது, முடிவுகள் எடுப்பது.ஈகோ என்பது இவை அனைத்தையும் அனுபவபூர்வமாக உணர்வது. நான் இருக்கிறேன் என்ற விழிப்பு உணர்வை தருவது. உறக்கத்தின் பொது புத்தி ஓய்வெடுக்கிறது. உறக்கத்தின் போதும் ஈகோ, மனதில் எண்ணங்கள், ஞாபகம் அனைத்தும் இருக்கின்றன.ஆனால் புத்தி மட்டும் செயல்படாதனால் உறக்கத்தில் பகுத்தறிவு இருப்பதில்லை, எண்ணங்களும் ஒத்திசைவோடு இருப்பதில்லை. உறக்கத்தின் போது மனம் அமைதியாக இருக்கின்றது. ஞாபகத்தை பொறுத்தவரை நான் உறங்குகிறேன் என்ற ஞாபகம் மட்டும் உள்ளது. தியானத்தின் போது இவை அனைத்துமே கரைந்து போய்விடுகிறது. தியானம் செய்யும் போது இதைப்பற்றி நிறைய தெரிந்து கொள்வீர்கள்.