மற்றவர்களுக்கு பயன்படும் வாழ்கையே, பயனுள்ள வாழ்கை.

மார்ச் 13 , 2012

இஸ்லாமாபாத், பாகிஸ்தான்..

(ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள், ஏழு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பாகிஸ்தான் செல்கிறார். ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள், இந்த முழு உலகமும் ஒரே குடும்பம் 'என்பதை வலியுறுத்தி பாகிஸ்தான் மக்களை அரவணைக்கிறார்.ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் எனக்கு இங்கு நன்றாக உள்ளது. இந்த மக்கள் மிகவும் அழகானவர்கள் மற்றும் இனிமையானவர்கள்." அவர் கூறினார் " இந்த நாடும் சகிப்பு தன்மை வாய்ந்தது,இந்த நாடும் வேறுபாடுகளை மதிக்கறது,எல்லா மக்களையும் நாங்கள் ஏற்று கொள்கிறோம் என்ற புதிய தோற்றத்தை உருவாக்க வேண்டும்.இப்படிப்பட்ட தெளிவான செய்தி மக்களிடம் போய் சேர வேண்டும்."குருஜி பாகிஸ்தான் மக்களிடம் கலந்து உரையாடியதை மேலும் படியுங்கள்.

உங்களுடன் இங்கே இருப்பது மிகவும் அழகாக உள்ளது....

முதலில் இங்கு இந்த நிகழ்ச்சி நடை பெறுவதற்கு காரணமாய் இருந்த வாழும் கலை ஆசிரியர்களுக்கும்,வாழும் கலை தொண்டர்களையும் நான் பாராட்டுகிறேன்.மேலும் இதற்காக அயராது பணி செய்த எல்லோருக்கும் நான் பாராட்டு தெரிவிக்கறேன். சில வருடங்களுக்கு
முன் சிந்து மாகாணம் புயலால் பாதிக்கப்பட்ட போது நம் வாழும் கலை YLTP இளைஞர்கள்
அங்கு சென்று உதவி செய்தனர். அந்த சேவைகள் நடக்கும் போது நான் தொலைபேசியில்
தான் தொடர்பு கொள்ள முடிந்தது. இப்பொழுது நான் அவர்களுக்கும் என்னுடைய பாராட்டை தெரிவிக்கிறேன். அதிர்ச்சியும், மன வேதனையாலும் பாதிக்கப்பட்ட பல ஆயிர மக்களுக்கு இன்னலை தீர்க்கும் பயிற்சிகளும், அடிப்படை வசதிகளும் அளிக்கப்பட்டு ,வீடுகளும் கட்டி தரப்பட்டன. உலகு எங்கிலும் இருக்கும் வாழும் கலை குடும்பங்கள் உதவி செய்ய முன் வந்தன. நாம் இங்கே தனியாக இல்லை, இந்த மொத்த உலகமும் நம்முடைய குடும்பம் என்பதை நாம் செய்து காட்டினோம். இதை நாம் நடை முறையில் செய்து முடித்ததை பார்க்க மிகவும் சந்தோஷமாக உள்ளது.

மேலும் இங்கு உள்ள நிறையபேர் வாழும் கலை ஆசிரியர்களாக மாறி, ஒவ்வொருவரின் கண்ணீரும் புன்னகையாக மாற்ற வேண்டும். இப்பொழுதெல்லாம், எந்த விகிதத்தில் மன உளைச்சல்,உள்ளதோ அந்த அளவில் புற்றுநோயும், இருதய சம்பந்தமான நோய்களும், ரத்த அழுத்த நோய்களும் அதிகரித்து வருகிறது.

உடல் நோய்கள், சமுதாய முரண்பாடுகள், ஊழல், பயங்கரவாதம்- இவை யாவும் ஆன்மிகம் இல்லாததை காட்டுகின்றன. 'எல்லோரும் நம்மை சார்ந்தவர்கள்' என்ற உணர்வை நாம் எங்கோ விட்டு விட்டோம்.ஆகையால், ஆரோக்யமான உடல்,அமைதியான மனம் மற்றும் ஆன்மாவிற்கான அன்பு, இவை யாவும் கொண்டு வர நம் வாழும் கலை உறுதிபூண்டு உள்ளது. வன்முறையற்ற சமுதாயம், நோயற்ற உடல், அழுத்தம் இல்லாத மனம், தடையற்ற அறிவு, இன்னல்கள் அற்ற ஞாபக சக்தி, துயர்அற்ற ஆன்மா, இவை யாவும் ஒவ்வொரு தனி மனிதனின் பிறப்பு உரிமை என்பதை நான் கூறி கொண்டு வருகிறேன்.

நீங்கள் அறிவிர்களா ? நம்முடைய அறிவு தடையுற்று இருக்கிறது. பலரிடம் நிறைய நல்ல யோசனைகள் இருக்கின்றன ஆனால் அவர்களால் அதை வெளிபடுத்த முடிவதில்லை. ஆகையால் நாம் நம் அந்த தடைகளில் இருந்து விடுபட வேண்டும். மேலும் நம்முடைய 'நான்' என்பது எல்லோரையும் அரவணைத்து செல்வதாக இருக்க வேண்டும். வெறும் 'நான்' மட்டும் அல்ல 'நாம்' இந்த உலகத்தில் உள்ள எல்லோருமே ஆவர் .
  
வன்முறையற்ற சமுதாயம், நோயற்ற உடல், என்ற இந்த பார்வையுடன் இது வரை செய்து முடித்ததை பார்த்து ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் ,மற்றொரு பக்கம், மேலும் பல லட்ச கணக்கான மக்களின் வாழ்க்கையில் அமைதியும் சந்தோஷமும் கொண்டு வர வேண்டிய பொறுப்பு வாழும் கலைக்கு உள்ளது. எனக்கு நிச்சயமாக தெரியும், நீங்கள் அந்த வேலை செய்து முடிப்பிர்கள் என்று..
  
எப்பொழுது நாம் மற்றவர்களுக்கு பயன் உள்ளவர்களாக இருக்கிறோமோ,அப்பொழுதுதான் நம் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் வருகிறது. பொருட்களையும் பண்டங்களையும் கொடுத்து உதவுவது ஒன்று ஆனால் அது நீண்ட காலம் பயன் கொடுப்பது இல்லை. அதை விட பெரிய உதவி ஒருவற்கு அவர்களின், மனதையும், உணர்வுகளையும், எப்படி கையாள்வது என்பதை பற்றிய ஞானத்தை சொல்லி தருவதும், மற்றும் தன்னுள்ளே சென்று தன்னை ஆராய்வதும்..

இது எப்படி இருக்கிறது என்றால் ஒருவற்கு எப்படி மீன்களை பிடிப்பது என்பதை சொல்லி தராமல் மீன்களையே கொடுப்பது போல் உள்ளது. ஒரு பழமொழி உள்ளது " ஒருவர்க்கு மீன்களை கொடுப்பதை விட்டு மீன்களை எப்படி பிடிப்பது என்பதை சொல்லி கொடுப்பதே சால சிறந்தது."

இதை தான் வாழும் கலை செய்து வருகிறது.மக்களுக்கு, அவர்களின் மனம் , உணர்வுகள், அவர்களின் சொந்த கருத்துக்கள், அவர்களுக்கு வரையறுக்கப்பட்ட எல்லைகோடுகள் .அந்த எல்லைகோடுகள்ளிருந்து வெளிவரும் உக்திகள் இவற்றை வாழும் கலை சொல்லி தருகிறது. மேலும்,மக்களையும், சூழலையும் அப்படியே ஏற்று கொண்டு ,பின் அதை மாற்றி மேம்பட செய்வது.

மொத்த தெற்கு ஆசியா, அமெரிக்கா, மற்றும் ஐரோப்பா இங்கு எல்லாம் நாம் எதிர் கொள்ளும் பெரிய பிரச்சினை 'ஊழல்'. இந்தியாவில் வாழும் கலை தொண்டர்கள் மிக பெரிய நல்ல வேலை செய்து உள்ளார்கள்.

அவர்கள் மூன்று நிலைகளில் பணி ஆற்றுகிறார்கள்.மிக பெரிய சத்சங்களுக்கு ஏற்பாடு செய்கிறார்கள். எல்லா சத்சங்களிலும் நான் மக்களை ஒரு உறுதி மொழி எடுத்து கொள்ள சொல்கிறேன்.அதாவது "லஞ்சம் கொடுக்கவும் மாட்டேன் வாங்கவும் மாட்டேன்".
இரண்டாவதாக அவர்கள் நான் லஞ்சம் வாங்க மாட்டேன் என்ற வாசகத்தை அலுவலர் களின் மேசைகள் மேல் ஒட்டிவிடுகிறார்கள். அப்படி நம் தொண்டர்கள் செய்யும் போது அவர்களால் அதற்கு மறுப்பு தெரிவிக்க முடியவில்லை.அங்கு அந்த ஸ்டிக்கர் ஒட்டி உள்ளதால் யாரும் லஞ்சம் கொடுப்பது இல்லை. இதை நாம் எல்லோரும் செய்யலாம். இல்லை என்றால் நாம் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்,மின்சாரம் இணைப்பு வாங்க என எல்லாவற்றிகும் லஞ்சம் தர வேண்டி உள்ளது. இது ஒரு அமைதி புரட்சியை கொண்டு வருகின்றது.

மூன்றாவதாக ஊழல் குறைப்பதற்கும், தவறு செய்வதை தண்டிப்பதற்கும் கடுமையான சட்டங்கள் கொண்டு வர வேண்டும் என ஆட்சியாளர்களிடம் வலியுறுத்துகிறோம். இதை போல் பாகிஸ்தானிலும் ஊழலுக்கு எதிரான மிக பெரிய அலை வருவதை என்னால் அறிய முடிகிறது. ஏன் என்றால் அது தேவையாய் உள்ளது.ரஷ்யாவிலும், ஆப்ரிக்காவிலும் இதே நிலமைதான். ஒட்டு மொத்த சமுதாயமும் எழுந்து நின்று ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். வெறும் சட்டங்களிலும் சட்ட தீர்மானங்களாலும் இந்த ஊழலை தீர்த்து வைக்க முடியாது. ஆன்மிக மாற்றம், மற்றும் எல்லோரும் நம்மை சேர்ந்தவர்கள் என்ற உணர்வு இருந்தால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும். எப்பொழுது இந்த உணர்வு மறைந்து விடுகிறதோ அப்பொழுது ஊழல் ஆரம்பம் ஆகிறது. இதன் மேல் நம் முழு கவனத்தை செலுத்த வேண்டி உள்ளது.

அடுத்து வேற்றுமைகளிலும் ஒத்திசைவு இருக்க வேண்டும். இந்த கல்வியை நம் மக்களுக்கு அளிக்க வேண்டும் . இஸ்லாத்தில் பல பிரிவுகள் உள்ளன.சுன்னி,ஷியா.அதே போல் கிறிஸ்துவ மற்றும் ஹிந்து, சீக்கிய மதங்களை சார்ந்த பலரும் இங்கு உள்ளன. மதங்களுக்கு இடையேயான பரஸ்பர நல்லின்ணக்கம்,, ஆழ்ந்த அறிவு செறிந்த பேச்சுவார்த்தை (இவை யாவும் ஒரு சேர்ந்த ஒரு பூங்கொத்தை போல) இவற்றை வளர்ப்பதற்காகவே வாழும் கலை உள்ளது, எல்லோரும் இதை ஆதரிக்க வேண்டும்.

இவை எல்லாவற்றிக்கும் மேலானது என்ன நடந்தாலும் உங்கள் புன் முறுவலை நீங்கள் இழக்க கூடாது.

கேள்வி: குருஜி, இப்பொழுது தாங்கள் வந்ததற்கும், இதற்கு முன்பு வந்ததற்கும் என்ன வித்தியாசம் ?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: போன முறை நான் வந்தபோது என்னை சுற்றிலும் பதுகாப்பு பலமாக இருந்தது. நான் அதிகமான நேரம் ஓட்டலில் தங்க நேர்ந்தது. ஆனால் இந்த முறை நான் மக்களுடன் இருக்கிறேன்.

நேற்று நான் 900 இளைஞர்களை FCC கல்லூரியில் சந்தித்தேன். அவர்களுடன் ஒரு நல்ல உரையாடல் நடந்தது. எங்களுக்குள் அன்பு பரிமாற்றம் சிறப்பாக நடந்தது.ஒரு சிறப்பான நிகழ்ச்சியாக இருந்தது. மேலும் என்னால் முன்பை விட அதிக அமைதி இப்பொழுது உலவுவதை உணர முடிகிறது.

கேள்வி: குருஜி நீங்கள் FCC கல்லுரி வந்து சென்ற பின் மாணவர்களிடம் இருந்து நல்ல feedback (தகவல் பரிமாற்றம்) வந்து உள்ளது. அவர்கள் மிக மகிழ்ச்சியாகவும் பல விஷயங்கள் கற்று ஞானம் அடைந்ததாகவும் சொல்கிறார்கள். நாங்கள் உங்களுக்கு மிக நன்றி கடன் பட்டு இருக்கிறோம்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இங்கு இருக்கும் மாணவர்களின் உற்சாகத்திலும்,இந்தியாவில் உள்ள மாணவர்களின் உற்சாகத்திலும், நான் எந்த வித்தியாசத்தையும் பார்க்க முடியவில்லை. இரண்டும் ஒருபோலத்தான் உள்ளது. மிகுந்த உற்சாகம்,அறிந்து கொள்வதற்கான ஆர்வம், கற்று கொள்வதற்கான விருப்பம்,திறந்த மனபான்மை இருப்பதை காண்கிறேன். இதை பார்பதற்கு பிரமாதமாக உள்ளது.

கேள்வி: குருஜி இந்த பயிற்சியை மேற்கொண்ட பல பேர் இடையில் எப்படியோ இதை விட்டுவிடுகிறார்கள். அவர்கள் மீண்டும் இந்த பயிற்சியுடன் இணைப்பதற்கு வழி உள்ளதா ?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஒரு வாழும் கலை மையம் இருந்தால், அவர்கள் கணடிப்பாக மீண்டும் மீண்டும் வந்து கொண்டு இருப்பார்கள் என நினைக்கிறேன். மேலும், சேவை காரியங்கள், ஞான பேழை, ஒலி நாடாக்கள், குறுந்தட்டுக்கள்(knowledge books ,tapes, cds) இவை எல்லாம் இருந்தால் அவர்கள் வர தொடங்கி விடுவார்கள்.

கேள்வி: குருஜி, நாங்கள் எல்லோரும் உலகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்தாலும், எங்களுடைய அடிப்படை தேவைகள் எல்லாம் ஒரே மாதிரியாக உள்ளன. எங்கள் எல்லோருக்கும் அமைதியும், சந்தோஷமும் தான் வேண்டி உள்ளது. நாம் இன்னுமும் மேலோட்டமாகவே இருப்பதாகவும் இன்னும் முக்கியமான, அடிப்படையான தேவைகளை நாம் இன்னும் கவனிக்காதது போல் உள்ளது,

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: சரி, அடிப்படையான விஷயங்கள் என்ன என்பது முதலில் பார்க்க வேண்டி உள்ளது. உலகத்தில் உள்ள பல் வேறு பகுதிகளில் அடிப்படையான தேவைகள் வெவ்வேறு பட்டு உள்ளது . சில இடங்களில் பஞ்சம், சில இடங்களில் தப்பான கருத்துக்களை வலியுறித்தி புகுத்துதல், சில இடங்களில் வாய்ப்புகள் இல்லாமை, சில இடங்களில் மிக சிறிய மக்கள் தங்கள் சுய நலத்திற்காக நாட்டின் அனைத்து மக்களையும் அடிமை படுத்துகிறார்கள். 

ஆனால் ஒரு பொதுவான பிரச்சினை என்னவென்றால் 'மனித நேயத்தை' பற்றிய அறியாமை. மனித நேயம் இருந்தால் - யாரும் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள், யாரும் ஊழலில் ஈடுபடமாட்டார்கள், யாரும் பொது மக்களை கண் மூடித்தனமாக கொல்ல மாட்டார்கள். ஆகையால் அடிப்படை 'மனித நேயம்' நம் சமுதாயத்தில் வேர் உன்ற வேண்டும். அது மிகவும் கடினம், மிக பெரியவேலை என்பதையே நான் அறிவேன் ஆனால் அதே சமயம் அது முடியாதது என்பது இல்லை. அது முடியாத ஒன்று என என்னால் நினைத்து பார்க்க கூட பிடிக்கவில்லை. ஆகையால் எங்கெல்லாம் முடியுமோ அங்கே இடைவெளிகளை மறைய நாம் முயற்சி செய்து மிச்சத்தை கடவுளிடம் விட்டுவிடலாம்.

கேள்வி: குருஜி ! ஏன் வாழும் கலை நிறுவனத்தில் ஆண்களை விடப்பெண்கள் அதிகமாக இருக்கிறார்கள்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆண் பெண் இருபாலரும் சமமாக இருப்பதாகவே நான் கருதுகிறேன். வாழும் கலை நிறுவனம் பெண்களுக்கு சம அந்தஸ்து அளித்தலை நம்புகிறது. பெண்கள் எதையும் சிறப்பாக செய்கிறார்கள்! ஆண்கள் அவ்வாறு கூறவேண்டுமென்றே விரும்புகிறார்கள்!

கேள்வி: எங்களது நாடு (பாகிஸ்தான்) மிகுந்த கடினமான கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது. தற்சமயம் எங்களது அண்டைநாடுகளுடன் உள்ள பிரச்சினைகளை வாழும் கலை உறுப்பினர்களாகிய நாங்கள் எப்படி அணுகி தீர்த்துக்கொள்வது? எங்களது அண்டை நாடுகளான இந்தியா,ஆப்கானிஸ்தானம், ஈரான் ஆகியவற்றோடு எங்களது உறவை பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.வாழும் கலை நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த சக்தி இதற்கு எவ்வாறு உதவ முடியும்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: முடிவுகளை எடுக்கும் பதவியில் இருப்பவர்கள் சாந்தமான, அமைதி கூட்டமைப்பு மன நிலையில் இருக்க வேண்டும். பதற்றம், கோபம், மனப்புழுக்கம் இவற்றுடன் செயல்பட்டால் இவையே அனைத்து செயல்களிலும் பிரதிபலிக்கும்.ஆகவே இவர்கள் தியானம் செய்து மனதைத் தளர்த்திக்கொள்ளவேண்டும். குறிப்பாக, நிறைய மக்களை சம்பந்தப்படுத்தக் கூடிய முக்கியமான முடிவுகள் எடுக்கும் போது இது மிக அவசியம்.ஆலோசனை கூறுபவர் களுக்கும் இது பொருந்தும். இவ்விரு வர்க்கத்தினரும் அமைதியான மன நிலையில் முடிவுகள் எடுத்தால் அவை சரியானதாகவும்,மனித நேயத்துடன் கூடியதாகவும் அமையும். இது ஒரு விஷயம்.

இரண்டாவதாக, சொல்லாட்சியால் பெரும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.ஒ அங்கு ஆபத்து! 
இங்கு ஆபத்து! "என்று வாய்வழி பரவும் செய்திகளால் மக்கள் பயமடைகின்றனர். பீதியை பரப்புவதன் மூலம் சிலர் முக்யத்துவம் அடைகிறார்கள்! இதை நிறுத்த வேண்டும். மக்களுக்கு நம்பிக்கையை வளர்க்க வேண்டும். வருங்காலம் நல்வாய்ப்பற்றது என்கிற எண்ணத்தை மாற்றி வருங்காலம் வளமாக இருக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்க வேண்டும்.அது பதற்றத்தை பெருமளவு குறைக்கும்.ஆகவே வாழும்கலை உறுப்பினர்கள் முரண்பாடுகளுக்கு தீர்வளிக்கும் வழிகளை மக்களுக்கு கற்பிக்கலாம். நான் முன்பே கூறிய படி, தாலிபான் இயக்கத்தினருடன் பேசி,அவர்களைப் புரிந்து கொண்டு,என்னுடைய கருத்துக்களை எடுத்துக்கூற விரும்புகிறேன். ஆகவே நாம் மாற்றத்தை ஏற்படுத்தலாம். விடாமல் மீண்டும் மீண்டும் முயற்சிக்கலாம்.நூறு தடவைகளே ஆனாலும் சரி முயற்சியை விட்டு விடக்கூடாது.

கேள்வி: குருஜி! தாங்கள் ஆழ்நிலை தியான மையத்தில் இருந்தீர்கள்.பின்னர் எண்பதுகளில் வாழும் கலையைத் துவக்கினீர்கள். இதைத் துவக்க என்ன அவசியத்தை தாங்கள் உணர்ந்தீர்கள்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆழ்நிலை தியான மையமும் தியானமுறையை கற்றுத்தந்து, உலக அமைதிக்காக பேசுகிறார்கள். அதில் சந்தேகம் இல்லை.என்னுடைய பதின்மவயதுகளில் நான் அங்கு விரிவுரைகள் அளிப்பதுண்டு. எனது இருபத்துநான்காம் வயதில் நான் வாழும் கலை நிறுவனத்தை துவக்கினேன். வாழும் கலை எல்லோருக்குமான உலகமுழுதளாவியது.மூச்சை அடிப்படையாக கொண்ட இது, சில விஷயங்களில் தியான மைய கொள்கைகளிலிருந்து வேறுபட்டது. எனினும் சஹஜ் தியான முறை ஆழ்நிலை தியானத்தைப் போன்றதே. தியான மையத்தை போலல்லாமல், வாழும் கலை சமுதாயப்பணிகளில் அதிக ஈடுபாடு கொண்டது. இங்குள்ள சங்கீதமும், கலாச்சாரமும் வேறுபட்டவை. ஆழ்நிலை தியான மையம் விஞ்ஞான ஆராய்ச்சி அடிப்படையிலானது. வாழும்கலையின் செய்முறை நுட்பக்கூறுகள் எந்த விதத்திலும் வாழ்வியலுக்கு முரணானது அல்ல. வாழும்கலை நிறுவனம் தண்ணீர் போன்றது. எந்த பாத்திரத்தில் இடப்படுகிறதோ அதன் வடிவத்தைக் காண்பிக்கும்.எந்த தியான முறையையும் சுலபமாகத் தழுவிக்கொள்ளும்.

கேள்வி: வாழும்கலை நிறுவனத்திற்கு ஊடகங்களின் பங்கு என்ன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஊடகங்கள் நிறைய செய்யலாம். மன அழுத்தம், குடும்பச் சண்டைகள், ஆகியவற்றிலிருந்து மீண்டு மக்கள் ஒன்று சேர்வதற்கு வாழும்கலையின் பங்கினை கவனஈர்ப்புச் செய்யலாம். ஆரோக்கியம், மாணவர் நலன், தனி மனிதருக்கிடையேயும் குழுக்களிடையேயும் ஏற்படும் மன சிக்கல்களிருந்து மீளுதல், ஆகியவற்றுக்கு வாழும்கலையின் பங்கினை மக்களிடேயே ஊடகங்கள் எடுத்துச் செல்லலாம்.
கேள்வி: வாழும் கலையின் பயன்களை எடுத்துரைக்க எப்படி இந்திய மற்றும் பாகிஸ்தானிய ஊடகங்களை அணுகுவது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இந்திய ஊடகங்கள் ஏற்கனவே செய்து வருகின்றன.வாழும் கலை செயல் திறனுடய தாகையால் அதன் முக்கிய பணி நிகழ்ச்சிகள் ஊடகங்களில் வெளியாகி கொண்டு
தான் இருக்கிறது.வடகிழக்கு மாகாணத்திலுள்ள தீவிரவாதிகள், மற்றும் மாவோய்ஸ்ட்
இயக்கத்தை சேந்தவர்கள், வாழும்கலை பயிற்சி பெற்று, தங்கள் ஆயுதங்களை துறந்து, தீவிரவாதத்தை விடுத்து மக்கள் பெரு வோட்டத்தில் கலந்த நிகழ்வு இந்திய செய்தித்தாள்களில் வெளியாகின.இங்கு பாகிஸ்தானிலும் ஊடகங்கள் மக்களுக்குச் செய்திகளை பரப்புகின்றன என்று எண்ணுகிறேன். ஊடகங்கள் இங்கு பெரும்மாற்றங்களைக் கொண்டு வரமுடியும். ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானது. உதாரணமாக ஊடகங்கள், தாலிபான் மற்றும் பிற தீவிரவாத அமைப்புகள் இவற்றுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு பெரிதும் உதவமுடியும்.இரண்டாவதாக, ஊழலை அகற்றி மக்கள் மேம்பாட்டுக்கு உதவமுடியும். மூன்றாவதாக, இருதரப்பு பேச்சு வார்த்தையில் நேர்மறையான கருத்துக்களை வெளியிட வேண்டும்.

நான் இங்கு வருவதற்கு முன்பு பலர் என்னிடத்தில்" ஒ! நீங்கள் அங்கு செல்ல வேண்டாம்
மிகுந்த ஆபத்தான இடம், உங்களது சொந்த மெய்க்காப்பாளர்கள்இல்லாமல் அங்கு செல்லாதீர்கள். அங்கு பாதுகாப்பே இல்லை, தினமும் யாராவது கொல்லப்படுகிறார்கள்" என்றெல்லாம் கூறினார்கள். ஊடகங்களிலிருந்து மக்கள் தெரிந்து கொள்வதெல்லாம், தீவிரவாதம், சகிப்பு தன்மையின்மை, குண்டு வெடிப்புகள் இவை தாம். நான் அப்படியெல்லாம் இல்லை, அங்கு செல்வதாக ஏற்கனவே முடிவு செய்துவிட்டேன்'' என்று கூறினேன். நேற்று இரவு கூட, சில அரசாங்க அதிகாரிகள் என்னிடம் இங்கு வர வேண்டாம் என்று தடுத்தார்கள். நான் "என்னுடைய பாதுகாப்பைப் பற்றி கவலைப்படாதீர்கள். என்னுடைய பாதுகாப்பு வேறிடத்தில் உள்ளது. ஆகவே நான் செல்வேன் " என்று கூறினேன். ஆகவே மக்கள் ஒருவரை ஒருவர் மதிக்கிறார்கள். வேற்றுமைகள் ஏற்று கொள்ளப்பட்டுள்ளன என்று ஊடகங்கள் மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். தவிர சுற்றுலாவையும் ஊடகங்கள் ஊக்குவிக்கலாம். தக்ஷசீலா போன்ற இடங்கள் சுற்றுலாத் தலமாக ஊக்குவிக்கப்பட்டால், அரசாங்கத்திற்கு வருவாய் கூடும். கிரீஸ் மிகச்சிறிய நாடு. அங்கு ஒவ்வொரு ஆண்டும் பன்னிரண்டு மில்லியன் சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள். இந்தியாவிற்கு நான்கு மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். ஆனால் பாகிஸ்தானுக்கு சில நூறாயிரம் பேர்களே வருகிறார்கள்.சுற்றுலா இங்கு மிகக்குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. அதை முன்னேற்றினால் பாகிஸ்தானின் பொருளாதாரம் உயரும்.
 
இலங்கையில் என்ன செய்தார்கள் தெரியுமா?ராமாயணத்தில் கூறப்பட்டுள்ள இடங்களை
யெல்லாம் அரசு எடுத்து, சுற்றுலாத்தலங்கலாக மாற்றி உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்படிப்பட்ட இடங்கள் இருக்கின்றன என்பதே தெரியாது. நிலம் நீர் இரண்டிலும் இயங்கவல்ல விமானங்கள், படகுகள், ஆகியவற்றை ஏற்படுத்தி, சுற்றுலாதுறை மிக நன்றாக இயங்குகிறது. தாய்லாந்து மிகச்சிறிய நாடு,ஆனால் சுற்றுலா மேம்பட்ட நாடு. பாலி மிகச்சிறிய தீவு, சுற்றுலாவினாலேயே செழிக்கிறது. செய்தி தாள்கள், சுற்றுலாவை ஊக்குவிக்கலாம்.
சீனா, கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து. புத்த மதத்தை சேர்ந்தவர்கள் வருவார்கள். இந்தியாவிலிருந்து ஹிந்துக்கள் தக்ஷ் சீலம், கந்தஹார் ஆகிய இடங்களைக் காண வருவார்கள். இது பொருளாதாரத்துக்கு சிறந்த ஊக்கியாக அமையும். நீங்கள் இதைச் செய்யலாம். இந்தியாவில் சாணக்கியா என்கிற திரைப்படத்திற்க்குப் பிறகு,மக்கள் கந்தஹார் எனும் இடத்தைக் காண விரும்புகிறார்கள்.

சாணக்கியர் யார் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தக்ஷ்சீலாவிலிருந்த அதி புத்திசாலியான அமைச்சரான இவர்தாம், மௌரியப்பேரரசு ஏற்படுவதற்கு காரணமானவர். தக்ஷ்சீலாவிலிருந்து இவர் கண்டெடுத்த மிக ஏழையான சிறுவன் தான் சந்திர குப்த மௌரியன். ஒரு பேரரசுக்கே இவரால் பின்னர் சக்ரவர்த்தியாக்கப்பட்டார். சாணக்கியர் எழுதிய அர்த்த சாஸ்திரம் என்கிற மேலாண்மை மற்றும், பொருளாதார நூல்,இன்றும், இந்தியாவில் உள்ள மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் கற்றுத்தரப்படுகிறது. இவர்களெல்லாம்,பாகிஸ்தானில் இருந்தவர்கள் தாம்.ஆயுர்வேதம், யோகா, முதல் யோகப்பயிற்சி ஆகியவைகளும் பாகிஸ்தானில் இருந்தவை தாம். ஆகவே,இப்பழம் பெரும் பாரம்பரியத்தை உங்களுடையதாக உணர்ந்து, சுற்றுலாத் துறையை வளமாக்கினால் பொருளாதார வளம் ஏற்படும்.

கேள்வி: பாகிஸ்தானுக்கு வந்ததை எவ்வாறு எண்ணுகிறீர்கள்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: இப்பொழுது முழுதும் மாறுபட்டுள்ளது. இளைங்கர்களுடன் உரையாடிய
போது நம் இந்திய இளைஞர்கள் போல் அதே உற்சாகத்துடனும்,ஒருவரோடு ஒருவர்
இணைந்தும் இருக்கிறார்கள். இங்குள்ள மக்களே, நீங்கள் எல்லோரும் படித்தவர்கள், உங்களில் ஒரு குறிகிய மனப்பான்மை தெரியவில்லை.

நான் என்ன கூற விரும்புகிறேன் என்றால் உடகங்கள் எடுத்துக்கூறும் தகவல்கள் தவறானவை.. ஊடகம் எங்கு பிரச்சனைகளும், குழப்பங்களும் உள்ளதோ அதை முன் வைக்கின்றன.அதனால் இந்த நாட்டிற்கு ஒரு புது தோற்றத்தை உண்டாக்க வேண்டும். அதாவது இந்நாடும் பொறுமை உடையது, வேற்றுமையை மதிக்கிறது, என்று காண்பிக்கவேண்டும். எல்லா இடத்திலிருந்தும் வந்த மக்களை அங்கீகரிக்கிறோம் என்று தெளிவாகவும் இரைந்தும் சொல்ல வேண்டும். இதனால், பாகிஸ்தானின் சுற்றுலாவும், பொருளாதாரமும் முன்னேறும். இங்குள்ள மக்களிடையே அன்பு நிறைந்திருக்கிறது, என்ற தகவல் என்னுடைய வருகை மூலம் உலகிற்கு ஒரு மாற்றத்தை தோற்றுவிக்கும்.ஏற்கனவே, ஊடகம் குருஜி, வரவேற்க்கப்பட்டிருக்கிறார் என்றும், மக்களும், அவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றும் தெரியப்படுத்தியுள்ளது. இதனால் இரு நாடுகளும் நெருங்கிவரும்.

21 வது நூற்றாண்டின் மருந்து ஆயுர்வேதம் தான். அது பாகிஸ்தானில்தான் பிறந்தது.
எந்த மூலிகை எதற்கு உபயோகம் என்பது பற்றி ":தக்ஷ ஷீலத்தில்" எழுதப்பட்டது.
இங்கு இருந்த பல்கலைகழகத்தில் உலக நாடுகளிலிருந்து 10000 மாணவர்கள் வந்து படித்தார்கள்.ஆனால் அது பிறந்த இடத்தில் ஆயுர்வேதம் உபயோக படுத்தப்படவில்லை. இந்தியாவும் பிற நாடுகளும் அதன் பலனை அனுபவிக்கின்றன. பாகிஸ்தானும் அதை நினைவுகூர்ந்து உபயோகிக்க ஆரம்பிக்க வேண்டும்.

(சக்தி சொட்டு மருந்து என்னும் ஸ்ரீ ஸ்ரீ ஆயர்வேத மருந்தை ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் செயல்
முறை விளக்கம் காண்பிக்கிறார்.)

ஒரு சொட்டு விஷம் உங்கள் உடலை அழிக்கவல்லது.ஒரு சொட்டு விஷம் 70 கிலோ
சதை பிண்டத்தை அழிக்கவல்லது போல்,ஒரு சொட்டு அமிர்தம் ஊக்கம் அளிக்கக்கூடியது.
சக்தி சொட்டு மருந்துமூன்று மூலிகைகளின் சேர்க்கை ,நீரில் வடிக்கப்பட்டு, உங்களின்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி,உடலுக்கு தெம்பை அளிக்கிறது. இது நம்ப முடிய
வில்லை அல்லவா? காலையில் 3 அல்லது 4 சொட்டு நீரில் கலந்து அருந்தினால் நீங்கள் புத்துணர்ச்சி அடைவீர்கள். பரீட்சை சமயத்தில் சிறிது தோலில் தடவினால்,2 மணி நேரம் சோர்வடையாமல் விழித்து இருக்கலாம்.

ஒஜச்விடா என்ற இன்னொரு பொருள், போர்ன்விடா போல் 7 மூலிகைகளால் ஆனது.
இது மூளைக்கும் ,நரம்பு மண்டலத்திற்கும் நல்லது.,ஒரு கப் சாப்பிட்டால், புத்துணர்வோடு இருக்க்கலாம். இங்கு எத்தனை மருத்துவர்கள் இருக்கிறீர்கள்? எங்கள் இணைய தளத்தில்,
எங்கள் ஆயுர்வேத மருத்துவமனையை பாருங்கள்.ரத்தமோ,மயக்க மருந்தோ, வலியோ
இல்லாமல் பல் பிடுங்கும் நுட்பத்தை பின்பற்றுகிறோம்.

அது போல், நாடி பரிசொதனை செய்து,சில நொடிகளில்,உடல்நிலை எப்படி இருக்கிறது என்று சொல்ல முடியும். எக்ஸ்ரே தேவை இல்லை. இவை ஆயுர்வேதத்தின் சிறப்புக்கள் .யோகாவும், ஆயுர்வேதமும் பாகிஸ்தானில் தோன்றின. துரதரிஷ்டவசமாக இங்கு யாருக்கும் தெரியவில்ல, ஆயுர்வேதம் மக்களுக்கு மிகவும் உபயோகமானது.

கேள்வி: ஆங்கில மருந்து சாப்பிடும் போது,அதோடு ஆயுர்வேத மருந்தும் சாப்பிட்டால்,
ஏதாவது பக்க விளைவுகள் ஏற்படுமா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: இல்லை.ஆயுர்வேத மருந்திற்கு எதிரிடையான குணமோ, பக்க விளைவுகளோ இல்லை.

கேள்வி: எப்படி நமக்கு ஆயுர்வேத மருந்திற்கு பக்க விளைவுகள் கிடையாது என்று
எப்படி தெரியும்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: காலம் காலமாக சோதிக்கப்பட்டது அனுபவ ரீதியில் அறிந்து கொண்டது.
அது தான் மூலிகை மருத்துவத்தின் விசேஷம்.மூலிகை மருத்துவத்திற்கு உலகின் எந்த மூலிகை மருந்தாய் இருந்தாலும், எந்த பக்க விளைவுகளும் கிடையாது என்று அந்த இணைய பக்கம் சொல்கிறது,ஆனால் மூலிகைகளை அளவிற்கதிகமாய் எடுத்துக்கொண்டால்  நல்லதல்ல. உதாரண த்திற்கு, திரிபலா என்ற மருந்தை அளவிற்கதிகமாய் உட்க்கொண்டால் பேதி உண்டாகும். மற்றபடி வேறு பக்க விளைவுகள் இல்லை.

கேள்வி: குருஜி, ஆசைகள், துன்பத்தை தருமா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: ஆசைகள்,துன்பத்திற்கு அடிகோலாது.சில ஆசைகளை நீங்கள் அடைய விரும்பும் போது.தேவையான சக்தி இல்லாமல் அடைய முடியவில்லை என்றால் அது துன்பத்தைத் தரும்.

கேள்வி: வெற்றி என்றால் என்ன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: வெற்றி என்பது வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறாக இருக்கும். எனக்கு வெற்றி என்றால் உங்கள் முகத்திலுள்ள புன்னகை. அதை யாரும் உங்களிடமிருந்து பிரிக்க முடியவில்லை என்றால்,நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள் என்பேன்.எந்த சவாலையும் எதிர்கொள்ளும் நம்பிக்கை வெற்றியின் அளவுகோல்.

கேள்வி: அன்பு என்றால் என்ன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஒன்றும் அறியா குழந்தையின் கண்களை நோக்கினால் தெரிவது அன்பு. வீட்டிற்கு திரும்பி வந்து உங்கள் செல்ல நாயிடம் வந்தால், அது வாலை ஆட்டிக்கொண்டு
உங்கள் மேல் விழுந்து புரளுவது அன்பு. நீங்கள் யாரையாவது நேசித்து அவர்களைப் பற்றி எண்ணிக்கொண்டிருந்தால் உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள். அதே அன்பு உங்கள் கண்களில் தெரியும். அன்பு கல்லையும் கரைய வைக்கும். நம் உடல் எவ்வாறு மாவுசத்து,புரத சத்து,விட்டமின்களால் ஆனதோ, அது போல் நம் உள்ளுணர்வும் அழகு, அன்பால் ஆனது.

கேள்வி: அகங்காரம் என்றால் என்ன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: அகங்காரம் என்பது அன்பை அழிக்கக்கூடியது. நீங்கள் இப்பொழுது இருப்பதுபோல், இயற்கையாக இருந்தால் அகங்காரத்தை விடமுடியும்.

கேள்வி: நான் யார்? நான் ஏன் இங்கு இருக்கிறேன்? என்ற எண்ணம் எழும்போது என் இதயத்தில் எழும் அமைதியின்மையை எவ்வாறு விளக்கமுடியும்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: மிகவும் நல்லது.இந்த துடிப்பு வாழ்க்கைக்கு தேவை, நல்லது தான்.
இது உங்களை உயர்வுபடுத்தும். நான் யார்? நான் ஏன் இங்கு இருக்கிறேன்". இவை
நல்ல கேள்விகள். இதை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள். யாரிடமும் விடை
கேட்காதீர்கள்.

இந்த கேள்விகளை உங்களுள் கேட்டுக்கொண்டால்.நீ ங்கள் ஒளி என்று உணர்ந்து, அது எல்லா இடத்திலும், எல்லாருள்ளும் இருப்பதை உணர்வீர்கள். உங்களுக்கு எல்லை இல்லை என்று உணர்வீர்கள். நாம் மனது உடலுக்குள் இருக்கிறது என்று நினைத்து கொண்டிருக்கிறோம். இல்லை உடல் மனதுள் இருக்கிறது. மனது ஒரு அடி உங்களைச் சுற்றி இருக்கிறது. மெழுகு வர்த்தியில் திரி, பின் சுவாலை போல், நம் உடல் மெழுகுவர்த்தியின் திரி, மனது சுற்றியுள்ள சுவாலை. ஒரு இயற்சக்தி நம்மைச் சுற்றி இருக்கிறது. அதனால் தான் நாம் எதை தொட்டாலும், டச் ஸ்க்ரீன் போல் வேலை செய்கிறது.

20 வருடங்கள் முன் i-pad (சிறிய கணினி) யை தொட்டால் வேலை செய்யும் என்றும் கை பேசி/ தொலைபேசி யை தொட்டால் வேலை செய்யும் என்று சொன்னால் நம்பியிருக்க மாட்டார்கள். முட்டாள் என இகழ்ந்டிருப்பார்கள். இப்பொழது இது ஒரு முன்னேற்றமடைந்த தொழில் நுட்பம்.நீங்கள் தொட்டால் திறக்கும். வேறு யாராவது தொட்டால் திறக்காது.ஏன் என்றால் ஒவ்வொருவரும் ஒரு வகை தனிப்பட்ட சக்தியை ஓர் அலையை நமது உடலில் வைத்துக் கொண்டிருக்கிறோம்.

உங்கள் சக்தி உள்ள இயல் கட்டுக்கள் நீங்கள் கைவைத்தால் தான் திறக்கும்.வேறு யாராவது
கை வைத்தால் திறக்காது. எல்லோருமே சக்தி தான் என்ற பழங்கால கருத்துக்களுக்கு,
இப்பொழுது தொழில் நுட்பம் அருகில் வந்து விட்டது.நாம் எல்லோரும் இயற்சக்தி நம் உள்ளும் நிறைய திறமைகள் புதைந்துள்ளன.

கேள்வி: ஏன் யோகிகள் மணப்பதில்லை?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: அவர்கள் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்று எந்த கட்டுப்பாடும் இல்லை. ஆனால் அவர்கள் குழந்தைகளாகி விடுகிறார்கள்.குழந்தை திருமணம் தடை செய்யப்பட்டுள்ளது.

கேள்வி: மன அழுத்தம் என்றால் என்ன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: எனக்கு தெரியாது. ஒரு அவசர வேலைக்காக விமானத்தைப்
பிடிக்க வேண்டியவர் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டு தவிப்பவரிடம்
கேட்டால் இதைப்பற்றி சொல்வார்.