பிரச்சினைகளை சந்திக்க அமைதி தான் முதல் படி

மார்ச், 4 , 2012


கேள்வி: பல்வேறு வகையான யக்ஞங்கள் (பிரார்த்தனை முறைகள்) யாவை? ஒருவர் வாழ்கையில் அம்முறைகளின் முக்யத்துவம் என்ன? எந்த முறை மிகவும் சிறந்தது? 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: தியானம், ஜபம், திரவ்ய யக்ஞங்கள் ஆகியவை. இவற்றில் மிகச்சிறந்தது தியான முறை. தனிப்பட்ட தியானமும், கூட்டுத்தியானமும்.அடுத்து ஞானத்தை அடையும் வழியை செவிமடுத்தல்,ஜப யக்ஞமுறை என்பதுயக்ஞநாம் ஜப யக்ஞகோசமி’ - இறைவன் நாமத்தைப் பண்ணிசைத்தல். கிருஷ்ணரும் இதைச் சிறப்பானதாகக்கூறுகிறார். யக்ஞங்கள் என்ன செய்கின்றன? மனம், உடல், சுற்றுச்சூழல் அனைத்தையும் தூய்மையாக்குகின்றன. 

கேள்வி: எனது ஆன்மீக நண்பர்கள் நான் இன்னும் தீட்சை பெறாததால் அதைப்பெறும் வரை என் ஆன்மீக பயணம் முற்றுப்பெறாது என்கிறார்கள். 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீங்கள் முதன்முதலில் சுதர்சன க்ரியா செய்யும்போது தீட்சை பெற்று விட்டீர்கள். சஹஜ் சமாதி தியானமுறையை கற்றிருந்தால் அப்போது நீங்கள் மந்திர தீட்சையும் பெற்று விட்டீர்கள். 

கேள்வி: குருஜி! தாங்கள் தியானம் செய்யும்போது தங்களுக்கு என்ன நிகழ்கிறது ? நான் தியானம் செய்யும்போது எனக்கு என்ன நிகழவேண்டும்? 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இதுதான் பிரச்சினை.தியானத்தில் இருக்கும்போது மற்றவர்களுக்கு என்ன நிகழ்கிறது என்று கவனித்துக்கொண்டு அதே உங்களுக்கு நிகழவேண்டும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்தால் உங்களுக்கு தியான நிலை ஏற்படாது. எதுவும் செய்யாமல் சும்மா இருங்கள். 

கேள்வி: திருமணம் செய்ய ஜாதகங்கள் இணைய வேண்டுமா? இரு மனங்கள் இணைந்தால் போதாதா? 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆம் அது போதும். ஏதேனும் சந்தேகம் இருந்தால் ஜாதகங்களைப் பாருங்கள். ஜாதகங்களில் நம்பிக்கை இருந்து, அவை பொருந்தாமல் இருந்தால்,வாழ்வில் ஏதேனும் ஒரு சிறு தவறு ஏற்பட்டாலும் அது ஜாதகப் பொருத்த மின்மையால் தான் என்று உங்கள் மனம் கூறும்.மனப் பொருத்தமில்லாமல் நாற்பது வருடங்கள் கூட ஒன்றாக வாழ்கிறார்கள்.

எப்படி என்று நான் கேட்கும்போது எண்ணங்கள் சிறிதும் ஒத்து போகாமல் எந்த நிலையிலும் ஒத்தியல்பு இல்லாமல் வாழ்வதாகவே கூறுகிறார்கள். ஆகவே அது தான் வாழ்க்கை. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சமரசத்துடன் வாழ்வது தான் வாழ்க்கை. தவிர ஜாதகங்களின் பொருத்தமின்மையைப் பரிகாரம் மூலம் அதாவது இறைவன் பெயரைப் பண்ணிசைத்தல், தானம் செய்தல் போன்றவற்றால் தீர்வு காண்பது ஆகலாம். 

கேள்வி: குருஜி! நான் துறவி அல்லது சுவாமி ஆவதற்கு என்ன செய்யவேண்டும் என்று ஆலோசனை கூறுங்கள். நான் ஏதேனும் செய்ய வேண்டுமா அல்லது அது தானாகவே நிகழுமா? 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: சுவாமியாக வேண்டுமென்றால் ஆஸ்ரமத்திற்கு வாருங்கள். இங்கு தங்கி படித்து, தியானம் செய்து ஸ்வாமியாகலாம்.உங்கள் வாழ்கையை நாட்டிற்காக அர்ப்பணம் செய்து கொள்ளுங்கள்.பல ஆஸ்ரமங்கள் இருக்கின்றன.மின் கட்டணம்,வரிகள் போன்ற வற்றை பற்றி கவலைப்பட வேண்டாம். அவற்றை ஆஸ்ரமம் பார்த்துக்கொள்ளும்.நீங்கள் உங்கள் ஆன்மீக பயிற்சிகளை செய்து வந்தால் போதும். 

கேள்வி: குருஜி! நான் எனது பணியில் தினமும் நிறைய மனிதர்களை சந்திக்க வேண்டி யிருக்கிறது.அதனால் நான் முழுமையாகக் களைப்படைந்து விடுகிறேன்.தாங்கள் தினமும் ஆயிரக்கணக்கான மக்களை சந்திக்கிறீர்கள்.இரவும் பகலும் உழைக்கிறீர்கள். ஆனால் களைப்படைவதில்லையே? அதன் ரகசியம் என்ன? 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நான் என் ரகசியங்கள் அனைத்தையும் வாழும் கலை முதல் நிலை, மேல்நிலை பயிற்சிகளிலும்,அஷ்டவக்கிர கீதாவிலும்,ஏனபிறவற்றிலும் வைத்திருக்கிறேன். 

கேள்வி: குருஜி! வெற்றிக்கு நேரம் மிக முக்யமான காரணி. எதுவும் சரியான நேரத்தில் நடந்தால்தான் நற்பயனளிக்கும். எது சரியான நேரம் என்று தெரிந்து கொள்ள நமது உள்திறன் உதவுமா? ஆம் என்றால் எவ்வாறு? 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆம். ஒரு பணியைத் தொடங்கு முன் அமைதியாக அமர்ந்து சலனமற்ற நிலையில் உங்கள் உள்ளுணர்வை கவனியுங்கள்.பின்னர் பணியைத் துவங்குங்கள். 

கேள்வி: குருஜி! ஒருவருக்கு வல்லமை,செயல்திறம், ஈடுபாடு, விடுதலை ஆகியவை அவசியம் என்று கூறியிருக்கிறீர்கள்.ஒவ்வொன்றையும் விவரிக்க முடியுமா? 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்:முதலில் விடுபட்டு உணருங்கள். தளையுடன் அன்பும் ஈடுபாடும் ஏற்படாது. உங்கள் உள்ளிலிருந்து விடுதலையை உணருங்கள். விடுதலையுடன் அன்பு பூரணமாகும். ஈடுபாடு ஏற்படும்.அதிலிருந்து வல்லமையும், செயல்திறனும் ஏற்படும். 

கேள்வி: மாயை என்றால் என்ன?மாயை என்பதை ஏற்றுக்கொள்ளலாமா அல்லது ஆய்வுக்குறிய தாகத் தட்டிக்கேட்க வேண்டுமா? 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: மாயை என்பது தோற்றம்,அதை நெருங்கிப் பிடிக்க முயன்றால் கையில் அகப்படாது. அதனாலேயே அதை மாயை என்கிறோம். உலகமே இவ்வாறுதான் இயங்குகிறது. அழகாக ஒன்றைக்கண்டு அதை அடைய முயல்கிறீர்கள் அடைந்த வினாடியே அதன் அழகு மறைந்து விடுவதை உணர்கிறீர்கள். எதை எண்ணி அடைய முயன்றீர்களோ அதுவல்ல என்று தெரிந்துகொள்கிறீர்கள்.உலகில் பெரும்பான்மையான விஷயங்கள் அப்படித்தான். மகிழ்ச்சி என்பதைத் தேடி ஓடி அதை அடையும்போது அது மகிழ்வல்ல என்று உணருகிறீர்கள். 

நமது நாட்டின் முன்னாள் பிரதமர் ஒருவருக்கு டெல்லியிலிருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில்
ஓர் பண்ணை வீடு இருந்தது. .என்னை அவர் அழைத்ததால் ஒரு ஞாயிற்று கிழமை அங்கு சென்றிருந்தேன்.அங்கு அவர் என்னிடம் " குருஜி! நான் கடந்த இருபத்து ஆறு ஆண்டுகளாக பிரதமராக வேண்டும் என்ற நோக்கம் கொண்டிருந்தேன். இப்போது பிரதமரான பின் அது எவ்வளவு முட்டாள்தனமான நோக்கம் என்பதை உணருகிறேன். முன்பெல்லாம் இயற்கையை ரசித்துக்கொண்டு வெளியே கட்டிலில் படுத்திருப்பேன். இப்போது எங்கும் என்னைச் சுற்றி பாதுகாவலர்கள்.என்னுடைய சுதந்திரத்தை இழந்து விட்டேன்.நான் விரும்பியபடி வெளியில் செல்ல முடிவதில்லை. என் வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டிருக்கிறேன்.என்னவெல்லாம்
செய்ய முடியுமோ, என்னவெல்லாம் செய்யக் கூடாதோ அவற்றை எல்லாம் செய்து பிரதமர் ஆனேன்.எல்லாமே இப்போது பயனற்றதாகி விட்டது என்பதை உணருகிறேன்". என்றார். நான் அவரிடம்" இவ்வாறு தாங்கள் உணருவதே உங்கள் அதிர்ஷ்டம்தான். எத்தனையோ பேர் உணராமலேயே இறந்து விடுகிறார்கள்." என்றேன். எப்படியும் அவர் அதிக காலம் பிரதமர் பதவியில் இருக்கவில்லை. 

அதனால்தான் அது மாயை என்று அழைக்கப்படுகிறது.

கேள்வி: குருஜி, இந்த உலகம் ஒரு மாயை என்று வேதபுத்தகங்கள் கூறுகின்றன. ஆனால் வேதங்கள் இது ஒரு அறியாமை என்று கூறுகிறது. இது இரண்டையும் எப்படி சமரசபடுத்தி பார்ப்பது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: மாயை என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் இருக்கின்றன. மாயை என்பதற்கு வேறு அர்த்தம் என்ன என்றால் -அதனை அளவு காண முடியும்.அளவு என்ற சொல் ஆங்கிலத்தில் "மெஷர்" என்று கூறபடுகிறது. இந்த மெஷர் என்ற சொல் மியாட் என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். மியா என்றால் மெஷர் என்று பொருள். அதனால் இந்த உலகத்தை அளக்க முடியும். அதனால் தான் நாம் அதனை மாயை என்று அழைக்கிறோம். அளக்க முடியாதது என்ன என்றால் - உண்மை, அன்பு, அழகு இவைகளாகும்.நீங்கள் என்னிடம் மூன்று கிலோ அன்பிருக்கிறது, இரண்டு அவுன்ஸ் அழகிருக்கிறது பத்து கிலோ உண்மை இருக்கிறது என்று கூற முடியாது. அதனால் நீங்கள் இதனை அளவிடமுடியாது. எனவே இதுதான் மாயை இல்லாதது. தெயவீக தன்மயை நம்மால் அளவிடமுடியாது. நம்முள் உள்ள ஆத்மாவை அளவிடமுடியாது. நம் உள்ளுணர்வை அளவிடமுடியாது.எதை அளவிட முடியுமோ அது ஜடபொருள் - அதுதான் மாயை. 

நம் கருத்தில் அல்லது உணருதலில் (perception) தான் அறியாமை இருக்கிறது. சூரியன் மறைகிறது என்று நினைப்பது அறியாமை. சூரியன் மறைவதில்லை. பூமி சுழலுவதனால் அவ்வாறு தெரிகிறது. பூமி சுழல்கிறது என்பது ஞானம். சூரியன் மறைகிறது, பூமி சுழலவில்லை என்று கருதுவது அறியாமை.  

வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு விதமாக நினைக்கின்றனர். அதனால் எல்லோரும் வெவ்வேறு மனிதர்கள் என்று நினைப்பது ஒரு புரிந்துகொள்ளுதலின் ஒரு நிலை. ஆனால் உண்மை என்னவென்றால் ஒரே உட்பொருள் தான் அனைவருக்குள்ளும் இருக்கின்றது. இது ஞானம்.  

நீங்கள் சிறிது பின்னோக்கிப் பார்த்தால் உங்களுடைய பெரும்பாலான முடிவுகள் தவறானவை என்று காண்பீர்கள். எத்தனை பேருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது? நீங்கள் ஒன்றை நினைக்க அது வேறாக இருந்திருக்கும்.இதுதான் அறியாமை என்பது. பல சமயங்களில் நாம் நடக்கும் என்று நினைப்பது நடக்காது. 

தேர்தல் கணிப்புகளை , மக்கள் பலரும் சொல்வதை பதிவு செய்து வைத்ததை முடிவு அறிவிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு திருப்பிப் பார்த்தால், கடவுளே! அறியாமையில் எத்தனை மணி நேரம் வீணாகியுள்ளது" என்று உணருவோம். எதோ உள்ளுணர்வில் ஒருவர் இவர்தான் ஜெயிக்கப்போகிறார் என்று சொல்வார்.தேர்தலுக்கும் அதன் முடிவு அறிவிக்கப்படு வதற்கும் இடையில் எல்லா தொலைகாட்சி அலை வரிசைகளிலும் செய்யப்பட கணிப்புகள், மணிக்கணக்கான விவாதங்கள் எல்லமே வெறும் அறியாமை என்று காண்பீர்கள்.  

உண்மையில் உங்களுக்குத் தெரியாது என்பதனால்தான் நீங்கள் வெறுமனே கணிப்புகள் யூகங்கள் செய்து உங்கள் தியரிகளை கொடுக்கிறீர்கள். வேடிக்கையாக இருக்கிறது.  

கேள்வி: குருஜி, நான் பாலுணர்வு மற்றும் அது தொடர்பான செயல்களினால் நீண்ட காலமாக ஆட்டி வைக்கப்படுகிறேன். . என்னால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. நான் அதிலிருந்து வெளி வர விரும்புகிறேன். ஆனால் முடியவில்லை. நான் என்னை கட்டுபபடுத்திக் கொண்டால் மூச்சுத் தினரளாகவும் அடக்கி ஒடுக்கப்பட்டது போலவும் உணர்கிறேன்? 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: உங்களை நீங்கள் ஆக்கபூர்வமான வேலைகளில் ஈடுபடுத்திக்கொண்டால் பாலுணர்வு உங்களை அந்த அளவிற்கு தொந்திரவு செய்யாது. எதையேனும் சாதிக்க வேண்டும் என்ற முனைப்பு இல்லாமல், ஆக்கபூர்வமான வேலை எதுவும் இல்லாமல், வாழ்க்கையில் ஒரு இலக்கு அல்லது அர்ப்பணம் இல்லாமல் இப்படி செய்வதற்கு எதுவுமே இல்லாமல் இருந்தால் இயற்கையாகவே உங்கள் சக்தியின் மாற்று வெளிப்பாடு பாலுணர்வு என்றாகிவிடும். அது உங்களை இரவும் பகலும் தொந்தரவு செய்யும். நீங்கள் கண்ட ஆபாச வலை தலங்களை எல்லாம் பார்த்துவிட்டு உங்கள் தூக்கத்தை இழப்பீர்கள்.  

ஒரு இளைஞர் அது போன்றவற்றை தொடர்ந்து பார்த்து வந்ததனால் தூக்கமே வரவில்லை யென்று சொன்னார். அப்படித்தான் நடக்கும். ஏதேனும் ஒன்றில் ஈடுபடுத்திக் கொள்வதுதான் உங்கள் சக்தியை முறைப்படுத்த சரியான வழி. உங்கள் பள்ளி அல்லது கல்லுரி நாட்களில் தேர்வு நேரங்களில் பாலுணர்வு வேட்கை மிகவும் குறைந்திருக்கும். ஏனென்றால் நீங்கள் எதோ ஒன்றை சாதிக்க வேண்டி இருந்தது. இரவும், பகலும் நீங்கள் புத்தகங்களைப் படித்துக்கொண்டும் மனப்பாடம் செய்து கொண்டும் இருந்ததனால் உங்களுக்கு வேறு எதற்கும் நேரம் இல்லை. ஆகவே தேர்வு நேரங்களில் அந்த எண்ணங்கள் உங்கள் மனதில் உண்டாகவில்லை.நீங்கள் இளமைப் பருவத்தில் இருப்பதனால், நீங்கள் எதுவும் செய்யாமல் சும்மா இருக்கும்போது அத்தகைய எண்ணங்கள் உங்களுக்கு உண்டாகும். அதனைத் தவிர்க்க நான்கு வழிகள் உள்ளன.

முதலாவது ஆக்கபூர்வமான வேலையில் ஈடுபடுத்திக்கொள்ளுங்கள் இரண்டாவதாக நீங்கள் உண்ணும் உணவைக் கவனியுங்கள். நீங்கள் அதிக அளவு உணவை உண்டு, அது அப்படியே சக்தியாக மாறி வெளியேறத் தயாராக உள்ளது. அதற்கென நீங்கள் உடற்பயிற்சி,யோகா, பிராணாயாமம் போன்ற எதுவும் செய்யவில்லை என்றால் நிச்சயமாக அது பாலுணர்வு உந்துதலாக வெளிப்படும்.  

மூன்றாவதாக ஹார்மோன்களின் சமனற்ற நிலை. நம் உடலில் அதிக அளவு ஹார்மோன்கள் இருந்தால் வேட்கை உண்டாகும்.  

நான்காவதாக வயது.15 முதல் 45 வயது வரை செக்ஸ் உணர்வுகள் ஆக்கிரமிக்கின்றன. அந்த வயதையும் தாண்டி உதாரணமாக நீங்கள் 60 வயதானவராக இருந்து செக்ஸ் உணர்வுகள் ஆட்கொண்டால் ஏதோ பெரும் தவறு உள்ளது. 

உங்களுக்கு மருத்துவ ஆலோசனை தேவைப்படுகிறது. ஆகவே இவை எல்லாவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் இளமைப்பருவத்தில், இருபது அல்லது முப்பது வயதுகளில் இருந்தால் இது கடந்து செல்லக்கூடிய ஒரு பருவம். வயதுக் கோளாறு!. 

கேள்வி: குருஜி, என் குடும்பத்தில் உள்ளவர்கள் நிறைய கெட்ட வார்த்தைகள் பேசுகிறார்கள். பேச்சில் பரிசுத்தம் எவ்வளவு முக்கியமானது? அது நல்ல அல்லது தீய விளைவுகளை உண்டாக்குமா? அல்லது அது வெறும் ஒழுங்குபடுத்தப்பட்ட சத்தம் மட்டும் தானா? 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நல்லது. நீங்கள் அதனை உணர்ந்து விட்டதனால் நீங்கள் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள். உங்கள் பெற்றோர்கள் உபயோகப்படுத்தினால் என்ன செய்வது? நீங்கள் ஓரிரவில் அவர்களை மாற்றிவிட முடியாது. நீங்கள் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு உங்கள் குழந்தைகள் அவற்றை கேட்காமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.  

ஒருவரிடம் சாத்வீக குணம் அதிகரிக்கும்போது தானாகவே அவரது பேச்சு சுத்திகரிக்கப்பட்டு விடுகிறது. நம் பேச்சு நம் உடலின் சாத்விகத்தின் அளவைப் பொறுத்தே உள்ளது. பண்பாடு, பழக்கம் என்று எப்படி அழைத்தாலும்,உண்மை இதுதான். 

கேள்வி: குருஜி, நீங்கள் எங்களை நிகழ் காலத்தில் வாழச் சொல்கிறீர்கள். அப்படியானால், ஒருவர் செய்யும் ஆன்மீக சாதனாவில் கடந்த காலம் அல்லது எதிர் காலத்தின் முக்கியத்துவம் என்ன? 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆம். நிகழ் காலத்தில் வாழுங்கள். கடந்த காலம், எதிர் காலம் இரண்டும் நிகழ் காலத்திலேயே உள்ளடங்கி உள்ளன. அனைத்தும் நிகழ் காலத்திலேயே கிடைக்கின்றன. கடந்த காலத்தில் கற்ற பாடங்கள் எவ்வித முயற்சியும் இன்றி தானாகவே நிகழ் காலத்தில் கிடைக்கும். நாம் எதிர் காலத்தில் செய்ய வேண்டியவை இயல்பாகவே உள்ளுணர்வாக நம்முள் தோன்றும். 

கேள்வி: குருஜி, யோக வஷிஷ்டத்தில் உள்ள ஞானம் பற்றி தயவு செய்து சொல்லுங்கள். நான் எப்போது படித்தாலும் குழப்பமாக இருக்கிறது. குழப்பத்தைத் தீர்த்து வையுங்கள்.  

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீங்கள் என்னுடையது அல்லாத ஒரு வேலையை என்னைச் செய்யச் சொல்கிறீர்கள். என் வேலை அதிக குழப்பத்தை உண்டாக்குவது. ஒவ்வொரு முறை நீங்கள் குழப்பமடையும்போதும் நீங்கள் ஒரு படி முன்னேருகிரீர்கள். குழப்பத்தை உண்டாக்குவது என் வேலை. அதிலிருந்து மீண்டு வருவது உங்களின் பயிற்சி அல்லது முயற்சி. யோக வஷிஷ்டம் அதே வேலையைச் செய்கிறதென்றால் மிகவும் நல்லதே. 

கேள்வி: குருஜி, அர்ஜுனன் போருக்குச் செல்வதற்கு முன் கௌரவர்களை கொன்று விட்டால் பிறகு அவன் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நினைத்தான். ஆனால் போர்க்களம் அடைந்ததும் அவன் மனம் மாறி விட்டது. அதேபோல் சத்சங்கத்தில் இருக்கும்போது நாங்கள் அனைத்தையும் ஆமோதித்து தலையாட்டுகிறோம் . ஆனால் அந்த ஞானத்தினை நடைமுறைப்படுத்த வேண்டிய நேரம் வரும்போது மிகவும் கடினமாக இருக்கிறது. 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நான் சொல்லும் இந்த ஒரு சூத்திரத்தினை கடைபிடியுங்கள். "எதையெல்லாம் என்னால் எவ்வித பிரயத்தனமும் இன்றி எளிமையாக செய்ய முடிகிறதோ அதை மட்டுமே நான் செய்வேன்"

வாழ்க்கையில் ஞான சூத்திரங்களைவிட எளிமையானது வேறெதுவம் இல்லை. கடினம் போல் தோன்றுவது உண்மையில் மிகவும் எளிமையானது. எளிமையானது போல் தோன்றுவது உண்மையில் மிகவும் கடினமானது.இதை மட்டும் தெரிந்துகொள்ளுங்கள்.  

கேள்வி: குருஜி, இந்து கடவுள்களை பற்றியும் அவர்களது வாகனங்கள் பற்றியும் எங்களுக்கு சொல்லுங்களேன். இந்த வாகனங்களில் பொதிந்துள்ள அர்த்தம் என்ன? 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இதற்கு நிச்சியமாக ஏதோ ஒரு அர்த்தம் இருக்கிறது. 

இந்த விசாலாக்ஷி மண்டபத்தை இங்கு கட்டும்பொழுது, நாங்கள் நந்தியை முன்னால் இங்கு வைப்பதாக நினைக்கவேயில்லை . . 

ஒரு பெரியவர் வந்து சொன்னார், "'குருஜி, என் சொந்தக்காரர் ஒருவர் அமெரிக்காவில் கோவில் கட்ட வேண்டும் என்று நினைத்தார். அவர் இப்பொழுது மறைந்துவிட்டார்..நாங்கள் இந்த நந்தியின் சிலையையும் நடராஜர் சிலையையும் ஆர்டர் செய்து இருந்தோம், எங்கள் வீட்டில் இந்த சிலைகளை வைக்கமுடியவில்லை ஏன் என்றால் இது மிக பெரிதாக இருக்கிறது.நீங்கள் இதை இங்கு தயவுசெய்து வைத்து கொள்கிறிர்களா என கேட்டு பிறகு நந்தியை முன்னால் வைத்து நடராஜரை இங்கு மேடையில் உட்கார்ந்தார். 

அடுத்தது என்ன ஆயிற்று என்றால், மும்பையில் ஒரு சத்சங்கத்தில் அன்னபட்சிகளை பார்க்க நேரிட்டது.. யாரோ ஒரு அன்பர் அந்த அன்னபட்சிகளை இங்கு கொண்டுவந்து வைத்தார்.. 

அடுத்து, ஒரு அன்பர் கருடரை, இந்தோனேசியாவில் இருந்து கப்பலில் கொண்டுவந்தார்.. இதன் எடை ஒரு டன். நான் இதை எதையும் திட்டமிட்டு செய்யவில்லை, இந்த வாகனங்கள் அவர்களாகவே இங்கு வந்தார்கள். குரு பீடத்தில், இந்த முன்று வாகனங்களும்-பிரம்மா (அன்ன பட்சிகள்), விஷ்ணு (கருடர்), சிவன் (நந்தி) இங்கு தானாகவே வந்து சரியான வரிசையில் உட்கார்ந்தார்கள்..

இந்த வாகனங்கள் எல்லாம் ஒரு குறியீடு தான்.இதன் நிஜமான அர்த்தம் என்னவென்றால் ஒவ்வொரு மிருகமும், பட்சியும் அதனுடன் ப்ரமாண்டத்தில்லிருந்து கதிர்கள் மூலம் ஈர்த்து அல்லது உயிர் மின்சார சக்தியை இந்த உலகத்திற்கு கொண்டு வருகிறது. 

உதாரணத்துக்கு, சிங்கம் அதனுடன் ஒரு விதமான சக்தியை கொண்டுவரும், காகம்அதனுடன் வேறு ஒருதனக்கே உரித்தான சக்தியை கொண்டு வரும்.இதே மாதிரி, ஒரு அன்னபட்சியும் , பசு மாடும் அதனுடன் அவர்களுக்கே உகந்த சக்தியை கொண்டு வரும். 

அதனால் தான் ஏதாவது ஒரு பறவையோ அல்லது விலங்கோ உலகத்தில் இருந்து அழிந்து விட்டது என்றால், இந்த பூமி இயங்காது.இதை அறிவுபூர்வமாக சொல்கிரார்கள்.இது உண்மையும் கூட. 

நமது பண்டைய முனிவர்களும் இதையே தான் சொல்லி இருக்கிறார்கள். ஒவ்வொரு தேவதையும் இங்கு கண்ணுக்கு தெரியாத சக்தியாய் ஒவ்வொரு விதமான உயிருள்ள ஜீவன் இடத்தில் இருக்கிறார்கள். இது அறிவுபூர்வமானதும் கூட. 

கேள்வி: குருஜி ஐந்தாயிரம் வருஷங்கள் முன்னால் நீங்கள் தேரை உங்கள் வாகனமாக வைத்து இருந்தீர்கள். இப்பொழுது "இன்னோவா" வை உங்கள் வாகனமாக வைத்து இருக்கிறிர்கள். 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நான் உங்களின் இதயத்தில் உட்கார்ந்து இருக்கிறேன் என்று நினைத்து இருந்தேன், ஆனால் நீங்கள் என்னை இன்னோவாவில் உட்காரவைக்கிரீர்கள். எனக்கு எல்லோருடைய இதயத்தில் இருக்கும் ஆசனத்தில் உட்கார்வதுதான் பிடிக்கும். 

கேள்வி: நான் இன்று இங்கு மன நிம்மதியை தேடி வந்திருக்கிறேன். அதே சமயத்தில் ஒரு குற்ற உணர்ச்சியும் இருக்கிறது - நான் என்னுடைய கவலைகளிலிருந்தும், கஷ்டங்களிளிருந்தும் ஓடுகிறேன் என்று..மன நிம்மதி என்றால் உண்மையாக என்ன?

அது பிரச்சனைகளை கண்டு ஒடுவதா அல்லது பிரச்சனைகளை சமாளிப்பதா? 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: உங்களின் பிரச்சனைகளை தீர்க்கவும் கூட உங்களுக்கு மன நிம்மதி வேண்டும்.அதனால், நீங்கள் இங்கு மன நிம்மதியை தேடி வரும் பொழுது, உங்களின் பிரச்சனைகளை விட்டு ஓடுவதாக குற்ற உணர்ச்சி வேண்டாம். 

நீங்கள் ஒரு பிரச்சனையை சந்திக்க வேண்டும் என்றால், அதற்கு வேறு வழி இல்லை. நீங்கள் அதை சந்தித்தே ஆகவேண்டும். புரிகிறதா?ஆனால் நீங்கள் சோர்வாக இருக்கும் போதும்   பிரச்சனைகளை சமாளிப்பதற்கான திறன் இல்லாத போதும் பொறுத்திருங்கள். முதலில் நீங்கள் உங்களை தயார் படுத்தி கொள்ளுங்கள். 

மன அமைதி தான் உங்களுக்கு முதலில் வேண்டும், பிரச்சனைகளை சமாளிப்பதற்கு.நீங்கள் நிம்மதியும்,உள் தைரியம் கொண்டால் , நீங்கள் எல்லாவற்றை சந்திக்கலாம். அது ஒரு பிரச்சனையாகவே தெரியாது. 

கேள்வி: உங்களை மக்கள் சத்சங்கத்தில் கேள்வி கேட்கும் பொழுது, நீங்கள் அந்த கேள்வியை அந்த ஒரு நபருக்காக மட்டும் பதில் சொல்கிறீர்களா இல்லை எல்லோருக்கும் சொல்கிறீர்களா? 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ரெண்டும்!! உங்களுக்கு உங்களின் பதில் கிடைக்கிறது இல்லையா?
நான் என்ன பதில் சொன்னாலும், உங்களுக்கு பதில் கிடைத்தது, மற்றும் அதே நிலமையிலே இருக்கும் சிலருக்கும் பதில் கிடைத்துவிடும். 

கேள்வி: உலகத்தில் தீவினை/கொடுமை இல்லாமல் இருக்க முடியுமா? உலகம் உருவானபோதும், ராக்ஷசர் மற்றும் அரக்கன் இருந்தார்கள். இன்று நாம் ரெண்டு எதிர்மறைகளுடனும் வாழ வேண்டும் -தீயது, நல்லது, இருட்டு, வெளிச்சம். 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: சரி நானும் கேள்விபட்டிருக்கிறேன் ஒரு ஆன்மிக அமைப்பை சேர்ந்த பெண்மணி சொல்வதை - ''ஒ! அந்த ஆத்மா சத்யயுகத்தில் ரொம்ப கள்ளம் கபடமில்லாமல் இருந்தது, காலப்போக்கில் அது தூய்மை குறைந்து கலியுகத்தில் அசுத்தமாகி விட்டது''

.இது முற்றிலும் அபத்தம்.அப்படி கிடையாது. 

சத்யயுகத்தில் கூட ராக்ஷசர்கள் இருந்தார்கள் - ஹிரண்யாக்ஷன்,ஹிரண்யகஷிபு போன்றவர்கள்.. இவர்களை உலகத்தில் இருந்து அழிக்க நான்கு தடவைஅவதாரம் எடுத்து வரவேண்டி இருந்தது.அதனால், ராக்ஷசர்கள் கலியுகதிலும் துவாபரயுகதிலும் தான் இருந்தார்கள் என்று சொல்லமுடியாது.இது எல்லாம் தப்பான எண்ணங்கள் மற்றும் தப்பாகப் புரிந்துகொள்ளுதல். இவர்களால் எப்படி இதெல்லாம் சொல்லமுடிகிறது என்று நான் யோசிப்பேன் , அதாவது ஆத்மா கிழே வருகிறது என்றும், அது இது எல்லாம் நடக்கிறது என்றும். 

ஆத்மா ஒன்றும் ஒரு சிகப்பு புள்ளி அல்ல அது கீழே வருவதற்கு. ஆத்மா எனபது விண்வெளி போல - எப்பொழுதும் தூய்மையாக, எப்பொழுதும் சுதந்திரமாக, எதனாலும் தொடமுடியாததாக இருப்பது.. இந்த அசுர சக்தியும், தெய்வீக சக்தியும் எப்பொழுதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.அசுர சக்தி எப்போழுது தெய்வீக சக்தியின் காலடியில் இருக்கிறதோ, அது ஒரு நல்ல காலம்.ஆனால் அசுர சக்தி தெய்வீக சக்தியின் மேல் இருந்தால் அது துக்ககரமான காலம்..
ஆகையால் சில தீய சக்திகள் எப்பொழுதும் சமுதாயத்தில் இருக்கத்தான் செய்யும். ஆனால் அந்த சக்திகள் நிறைய அல்லது குறைவாகவோ இருப்பது - அது அந்த சமுகத்தின் நலமான அமைப்பின் அடிப்படையில்.இருக்கிறது.  

ஒரு வீடு என்ன தான் நன்றாகவும், பெரிதாகவும் இருந்தாலும், அதில் ஒரு குப்பை தொட்டி இருக்கும். அது ஒரு மூலையில் தான் இருக்கும், எல்லா குப்பைகளும் அதில் தான் போடப்படும் , அது மூடியும் இருக்கும்.இல்லை என்றால் முழு வீடும் குப்பைதொட்டி போல காட்சி அளிக்கும்.. 

இது தான் வித்யாசம். நீங்கள் வீட்டில் ஒரு குப்பை தொட்டி வைக்கலாம் இல்லை என்றால் உங்கள் வீடு முழுவதும் குப்பையாக இருக்கும்.வீட்டில் எதாவது ஒரு இடம் தான் சுத்தமாக இருக்கும்.இப்படித்தான் தெய்வீக சக்தியும்,அசுர சக்தியும் உலகில் ஒன்றோடு ஒன்றாக இருக்கும்.

சில சமயம் இது ஆதிக்கம் செலுத்தும் , சில சமயம் அது ஆதிக்கம் செலுத்தும். 

கேள்வி: இந்த சமூக வாழ்வில் தினமும் நிறைய எல்லைகோடுகளுக்குள்ளும் கட்டுப்பாடுகளும் ,பிரச்னைகள்ளுக்கும் ஈடு கொடுத்து, என்னால் ஒரு நிலைப்படுத்த முடியவில்லை.தயவுசெய்து,எனக்கு ,எப்படி என் வாழ்க்கையின் குறிக்கோளை அடைய நிலைப்படுத்தி ,கவனிக்க வழி சொல்ல வேண்டும் 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: உங்களுக்கு கவனத்துடன் இருக்க ஆசை இருக்கிறது ..அதுவே நல்லதாகும். நீங்கள் ஒரு முகப்பட்டிருக்கிரீர்கள்.நீங்கள் சலனப்படுதலையும், ஒருமுகப்படுதலையும் உணர்ந்து கொள்வதால்,கவனத்துடன் இருக்கிறீர்கள்.அதனால் சந்தேகம் வேண்டாம். கவனத்தை அதிகப்படுத்திக் கொள்ள நீங்கள் செய்யும் தியானம்,பிராணாயாமம்,சத்சங்கம் சரியான முறை ஆகும். உங்கள கவனத்தை திசை திருப்புவது எது என்று கண்டு கொள்ளுங்கள். நீங்கள் அதிக சினிமா பார்க்கிறீர்கள் இல்லையா?(ஆம்) நீங்கள் நிறைய சினிமா பார்க்கும்போது,மனது பலவிதமான எண்ணங்களால் தாக்கப்பட்டு, குழப்பம் அடைகிறது.சினிமா பார்ப்பது ஒரு பழக்க வழக்கமாகி விடும்.அதனால் ஒரு வாரம் அவ்வாறு பார்ப்பதை நிறுத்துங்கள்.வேலையிலிருந்து களைப்பாய் வரும் போது, நன்கு உறங்குங்கள். 

கேள்வி: ஒரு செயலின் நோக்கம் என்ன ? நாம் ஓர் செயலுக்கு 100 % முயற்சி எடுத்தோம் என எப்படி அறிந்து கொள்வது ? நான் செய்து முடித்த காரியங்களை பார்க்கும் போது, நான் இன்னும் நன்றாக செய்து இருக்க வேண்டும் என தோன்றுகிறது. 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: அது மிக நல்லது. நீங்கள் செய்ததை விட இன்னும் நன்றாக செய்யும் திறமை உங்களிடம் உள்ளது என கண்டு கொண்டு உள்ளீர்கள். நீங்கள் நல்ல நிலையில் உள்ளீர்கள், அதனால் வருத்த பட தேவையில்லை. எந்த ஒரு செயலும் நோக்கம் இல்லாமல் இல்லை. நீங்கள் செயல் படும் போது, உங்களக்கு தெரியும், செயலின் காரணம். 

கேள்வி: குருஜி, நான் வியாபாரம் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். ஆனால், என்னுடைய ஜாதகம் அதற்கு உறுதுணையாக இல்லை. ஆனால் என் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நான் இப்பொழுது என்ன செய்யட்டும்? 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: வேறொரு ஜோசியரை சென்று பார். ஒரு வேளை எல்லோருமே வியாபாரம் உங்களுக்கு ஒத்து வராது என்று கூறினால், நீங்கள் வேலைக்கு செல்வதே நல்லது. ஏன் என்றால் நீங்கள் அவர்கள் சொல்வதை மீறி வியாபாரம் செய்தால்,உங்கள் மனம் " எல்லோரும் வியாபாரம் வேண்டாம் " என்று சொன்னார்களே என்பதையே சொல்லி கொண்டு இருக்கும்.

கேள்வி: குருஜி, எனக்கு உங்கள் ஞானத்தை பரப்புவது,மற்றும் நிறைய இளைஞர்களை , yes Plus , பயிற்சிக்கு அழைத்துவருவது போன்ற சேவாக்கள் மிகவும் பிடிக்கும். ஆனால் , நாள் முழுவதும் அதற்காக வெளியே செல்வது என பெற்றோர்களுக்கு பிடிக்கவில்லை.

சில சமயங்களில் நான் வீட்டுக்கு வருவது நேரம் ஆகிறது.நான் இதை எப்படி சமாளிப்பது, வழி காட்டுங்கள்? 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: தினமும் நீ நேரம் கழிந்து வீட்டுக்கு வந்தால்,உன் பெற்றோருக்கும், உன்னுடன் சிறிது நேரம் கழிக்க வேண்டும் என இருக்கும். வீட்டில் உன் பொறுப்புகளையும் மற்றும் சேவா இரண்டையும், சம நிலையில் எடுத்து செல்லுங்கள். வீட்டிற்கு என்ன வேண்டுமோ அதையும் செய். உனக்கு தெரியும் எப்படி இரண்டையும் சம நிலையில் எடுத்து செல்ல வேண்டும் என்று. சரிதானே! 

கேள்வி: கடவுள் எப்படி தோன்றினார்? 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: முதலில் டென்னிஸ் பந்தின் ஆரம்ப புள்ளி எது என்று எனக்கு கூறு. டென்னிஸ் பந்துக்கு ஏதேனும் ஆரம்ப புள்ளி என்று உண்டா? இல்லையே அதே போல்தான், கடவுள் என்றால் ஆதியும் அந்தமும் இல்லாதவர். அநாதி முதல் என்பது இல்லை மற்றும் அனன்தா (முடிவும் இல்லை. 

கேள்வி: குருஜி, ஏன் ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு பழக்கவழக்கம் உள்ளது? 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: பாருங்கள், ஏன் அப்படி இருக்க கூடாது ?எதற்காக எல்லாமே ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்? கடவுளுக்கு விதம் விதமா தினுசுகள் பிடிக்கும். அவர் நீ உருளை கிழங்கு மட்டுமே சாப்பிட வேண்டும் என விரும்புவதில்லை,இல்லை என்றால், கடவுள் மொத்த உலகத்திலும் வெறும் உருளை கிழங்கு மட்டுமே படைத்திருப்பார். பல வகையாக இருப்பது இயற்கை. 

கேள்வி: குருஜி நீங்கள் கூறியுள்ளிர்கள், நீங்கள் லஞ்சம் கொடுக்கவும் கூடாது வாங்கவும் கூடாது 2009 ஆம் ஆண்டு என் கணவர்,ஓர் ரயில் விபத்தில் காலமானார். ரூபாய் நான்கு லட்சம் நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என நிர்ணயம் ஆனது. ஆனால், வழக்கறிஞர்,ருபாய் 25000 /- லஞ்சமாக அளித்தால், பணம் உடனடியாக கிடைக்கும் என்றும்,இல்லை என்றால், வழக்கு உயர்நீதீ மன்றம் சென்று விடும்,பணம் பெற இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என கூறுகிறார். இதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்? 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: அவர்களுக்கு சொல்லுங்கள், அவர்கள் அந்த வேலையை, லஞ்சம் வாங்காமல் செய்தால் நல்லது இல்லையென்றால் நாங்கள் லோகயுக்த விடம் முறை இடுவோம் என்று கூறுங்கள். 

நீங்கள் லஞ்சம் கொடுக்க கூடாது என்பதில் ஸ்திரமாக இருங்கள். இனி நீண்ட காலம் அவர்களால் இதை தொடரமுடியாது.உங்களுடன் ஐந்து அல்லது ஆறு பேரை உடன் அழைத்து செல்லுங்கள். 

அண்மையில்,அஹ்மத் நகரில் நம் வாழும் கலை மையம் முன் சாலை போடாமலேயே அதிகரிகள் சாலை போட்டது போல் கணக்கு காட்டி பணத்தை சுரண்ட. நம் இளைஞர்கள் முப்பது பேர் மேயர் அலுவலகம் முன் அமர்ந்து விட்டனர். நீங்கள் எங்களுக்கு அந்த சாலையை சீர் செய்யும் வரை, நாங்களும் இந்த இடத்தை விட்டு செல்ல மாட்டோம் , உங்களையும் செல்ல விடமாட்டோம் என்று கூறினார்கள். எல்லா அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.மறு நாளே சாலை சரி செய்யப்பட்டது. 

கேள்வி: இந்த கேள்வியும் அதே நபரிடம் இருந்து ஒரு சிலர் சொன்னார்கள்,முதலில் பணம் கொடுப்பதாக கூறி வேலை முடிந்த பின்பு லஞ்சம் கொடுக்க மாட்டோம் என சொல்லிவிடுங்கள் என கூறினார்கள். இந்த ஆலோசனையை பின்பற்றலாமா? 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: சரி அது மாதிரி தந்திரத்தையும் நீங்கள் பயன் படுத்தலாம்! 

கேள்வி: என்னிடம் இருந்த எல்லா தங்கத்தையும் போன ஆகஸ்ட் மாதம் இழந்து விட்டேன். இதனால் நான் நிலை கொள்ளாமல் தவிக்கிறேன்,முக்கியமாக நான் க்ரியா செய்யும் போது. 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஒன்று நடக்கவேண்டும் என்று உள்ளது. அது நடந்து விட்டது. நம் உடல் கூட ஒரு நாள் மறைந்து விடும். இதை புரிந்து கொண்டு அமைதியாக இரு. என்ன சென்றதோ அது சென்று விட்டது. அதற்கு இப்பொழுது என்ன செய்ய முடியும். பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் போது 900 கப்பல்களில் நம் நாட்டில் இருந்து தங்கம் எடுத்து சென்றார்கள். நூறு கோடி மக்களால் ஒன்றும் செய்ய வில்லை. இது போல் அவர்கள் நம் நாட்டை சூறை ஆடினார்கள். இன்னும் பரந்த, தொலைநோக்கு மனப்பான்மையுடன் பாருங்கள்.இப்பொழுது கூட நம் நாடு சூறை ஆடப்பட்டு தான் வருகிறது