ஸ்ரீ ஸ்ரீ - ஞான் விகார் பல்கலை கழகத்தின் பயணம்

21 ,மார்ச் 2012


மதிப்பிற்குரிய தலைமை ஆலோசகர் அவர்களே, பல்கலைகழகத்தின் துணைவேந்தர் அவர்களே, மற்றும் ஆசிரியர் குழுமத்தின் உறுப்பினர்களே, நான் தாழ்மையுடன் நீங்கள் எனக்கு வழங்கிய இந்த பட்டத்தை ஏற்றுக் கொள்கிறேன்.பாருங்கள் இன்று நான் ஒன்றை வாங்கினேன் ஆனால் பலருக்கு கொடுத்தேன்.. இதைத் தான் ஒரு கல்வி நிலையம்   செய்ய வேண்டும்.நாம் எதைப் பெறுகிறோமோ,அதை திரும்பவும் சமுதாயத்திற்கே கொடுக்க வேண்டும், மாணவர்களாகிய நீங்கள் இங்கே நிறைய கல்வி அறிவு பெற்றீர்கள் , அதை வாழ்க்கையில் எப்படி உபயோகிக்க முடியும் என்று இப்பொழுது சிந்தியுங்கள்.

இன்றைய உலகின் பிரச்னை, கல்வி அறிவு கிடைக்காமல் இருப்பது மட்டுமல்ல,கல்வி அறிவு தவறாக திரித்து கூறப்படுகிறது,தவறாக உபயோகிக்கப் படுகிறது மற்றும் தவறாகவும் புரிந்து கொள்ளப்படுகிறது.

நாம் இந்த மூன்று விசயங்களை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.கல்வி என்பது நம்மை வெறும் கல்வி (தகவல்களை உள்ளடக்கிய மாத்திரையாக) உருவாக்குவது மட்டும் அல்ல,உயர்ந்த தரமான நெறிமுறைகளின் வாழும் உதாரணங்களாக உருவாக்குவதாகும். கல்வி அப்படிப்பட்ட ஒரு உறுதியான ஆளுமையினராக ஆக்குவதற்கு இருக்கிறது, அது நல்லிணக்கத்தை பரவச் செய்ய வேண்டும்,அது சமுதாயத்தில் வளர்ச்சியை கொண்டு வரவேண்டும் மற்றும் அன்பையும் கருணையையும் பரப்ப வேண்டும். இதைத் தான் நான் உறுதியாக நம்புகிறேன்.ஆகையால் நாமும் நம்மை சுற்றியிருக்கும் மக்களையும் கற்க செய்ய வேண்டும்.


கல்வி ஒருவரை உறுதியான ஒழுக்கதினுடன் கூடிய எல்லோராலும் விரும்பக்கூடிய குணங்களை உடைய ஆளுமையினராகவும்,விமர்சினத்திற்கு உறுதியாக நிற்கக் கூடியவராகவும் மற்றும் ஆக்க பூர்வமான விமர்சனத்தை கொடுக்கும் ஒரு ஆளுமையினராகவும் உருவாக்க வேண்டும். அனைவரின் மேல் நேசத்தை உருவாக்க கூடிய, நகைச்சுவை மற்றும் தன்னைச் சார்ந்தவர் என்கிற உணர்வு இருக்கிற ஆளுமையினரை தான் இன்றைய உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒருவர் சுதந்திரமாக சிந்திக்கக் கூடியவராக இருக்கும்போது அவரில் படைப்பு திறன் வெளிப்படுகிறது. இந்த கிரகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் சுதந்திரமான சிந்தனை வேண்டும்.துரதிர்ஷ்டவசமாக அது இல்லை. நாம் சிந்தனைகள் வரம்புகளுக்கு உட்பட்டு உள்ளது. இதிலிருந்து நாம் வெளியே வர வேண்டும்.நாம் சுதந்திரமாக் சிந்திக்க வேண்டும் மற்றும் குறிகிய கருத்துகளில் இருந்து நம் சிந்தனை விடுபட்டு இருக்க வேண்டும்.

ஜெய்ப்பூரின் மத்தியில்,ஞான் விகார் பல்கலைகழகம் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பினை கொடுத்திருக்கிறது என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் மற்றும் உங்களுடைய நாட்டையும் உங்களுடைய பல்கலைகழகத்தையும் நீங்கள் பெருமை படுத்துவீர்கள்.என நிச்சயமாக நம்புகிறேன்.

நிர்வாகத்தினர், துணைவேந்தர், மரியாதைக்குரிய தலைவர்,முனைவர்கள் மற்றும் உங்கள் அனைவருக்கும் நான் மீண்டும் நன்றி கூறுகிறேன்.என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.நான் உங்களில் ஒருவன், இப்பொழுது இந்தப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவனும் கூட.

மனித நேயத்திலும்,அறிவியலிலும் நன்கு கற்றவர்களாக உருவாக என்னுடைய வாழ்த்துக்கள். கலை பாடங்கள் இதயத்தை பற்றிய அறிவை புகட்டும்.அறிவியல் பாடங்கள் மூளையை பற்றிய அறிவை புகட்டும்.நமக்கு இரண்டும் தேவை.பகவான் கிருஷ்ணர்,புத்தி(புத்திசாலித்தனம்) மற்றும் பாவ (உணர்ச்சி) இவை இரண்டும் அத்தியாவசியமானவை என்கிறார்.இது தான் பகவத் கீதையின் சாராம்சம்.இதயம் மற்றும் மூளை வளர்ச்சி மிகவும் முக்கியம்.அதன் பிறகு தான் நீங்கள் ஒரு முழுமையான மனிதனாக மாற முடியும். ஆகையால்,உங்களுடைய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். சமுதாயத்திற்கு சேவை செய்யும் வாழ்க்கைக்கும்,மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

 கேள்வி: குருஜி, சுயம் (ஆத்ம ஞானம்) பற்றிய ஞானம் மிக முக்கியம் என்று சொன்னீர்கள்,  பிறகு அதை ஏன் மிகவும் ரகசியமாகவும்,அடைவதற்கு கஷ்டமாகவும் வைத்தார்கள்?


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: உண்மையில், இனிமேலும் அதை ரகசியமாக வைத்திருக்க முடியாது. துரதிர்ஷ்டவசமாக கடந்தகாலத்தில், மக்கள் விலை மதிப்பற்றது,மிக நல்லது மற்றும் மக்களுக்கு உபயோகமான எல்லாவற்றையும்,தங்களுடைய சுய நலத்தினால் ரகசியமாக வைத்து விட்டனர்.ஆனால் அது இப்பொழுது எல்லோருக்கும் கிடைக்க வழி வகுக்கப்பட்டுள்ளது. பிராணாயமம் எல்லோருக்கும் கற்றுக் கொடுக்கப்படவில்லை, அது ஒரு சிலருக்கு மட்டுமே கற்றுக் கொடுக்கப்பட்டது.அது நமது நாட்டை பற்றிய துரதிர்ஷ்டமான கதை.ஆனால் இப்பொழுது உங்களுக்கு எல்லாமே கிடைக்கும்.


கேள்வி: உண்மையான கல்வி அனுபவத்தின் மூலம் நிகழ்கிறது,பிறகு என் ஒருவர் கல்லூரிக்கு போக வேண்டும்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: கல்லூரி வாழ்க்கை நல்ல இதமானது,அது மிக நன்றாக இருக்கிறது! நீங்கள் நிறைய கற்கிறீர்கள். கல்லூரியில் வாழ்க்கை இல்லை என்று நினைக்காதீர்கள். உண்மையில் கல்லூரி வாழ்க்கை தான் வாழ்க்கை ஏனெனில் நீங்கள் நிறைய விஷயங்களை கற்கிறீர்கள்.பல நேரங்களில் காதலில் விழுகிறீர்கள், உங்களுடைய இதயம் உடைந்து சீரடைகிறது. நிறைய விசயங்கள் அங்கே நடக்கின்றன


கேள்வி: உங்களுடைய வெற்றியின் ரகசியம் என்ன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்:சொன்னபடி நடப்பது,அல்லது நடப்பதை சொல்வது.

கேள்வி: எல்லாமே முன்னமே விதிக்கப்பட்டது என்றால், பிராத்தனையின் சக்தி என்ன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: எல்லாமே நிச்சயிக்கப்பட்டது அல்ல. சிலது நிச்சயிக்கப்பட்டது,சிலது நிச்சயிக்கப்பட்டதல்ல,மற்றும் பிராத்தனை அவற்றிக்கிடையே ஆன பாலம்.

கேள்வி: எல்லாமே பணம் என்ற நிலை இல்லையென்றால்,பிறகு ஏன் வெற்றி பெற்ற எல்லோரும் பணக்காரர்களாக இருக்கிறார்கள்?.


ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: பணக்காரர்கள் எப்போதுமே மகிழ்ச்சியாக இருப்பது இல்லை.என்னை பொறுத்தவரை,வெற்றி என்பது வங்கியில் இருக்கும் பணத்தில் இல்லை.அது முகத்தில் தோன்றும் புன்னகை மற்றும் அகத்தில் எழும் நம்பிக்கையும் ஆகும்.