பெரும் குழப்பங்களுக்கு மத்தியிலும் புன்னகையுடன் வாழ்வது .....

டிசம்பர் 28, 2013

பூன், நார்த் கரோலினா  



அன்பை கொண்டாடுதல், மௌனம் ஒரு கொண்டாட்டம் ஆகிய புத்தகங்களை படிக்கவும். 
ஞானப்பேழைகளை படிக் வேண்டும். அஷ்டவக்ர கீதையை கண்டிப்பாக கேட்க வேண்டும். உங்களை உணர்வு பூர்வமாகவும் ஆன்மிக பூர்வமாகவும் வலிமை மிக்கவராக்கும். நீங்கள் அஷ்டவக்ர கீதையை கேட்டிருந்தாலும் மற்றும் ஒன்று அல்லது இரண்டு முதுநிலை தியானப் பயிற்சி பெற்றிருந்தாலும் உங்கள் வீட்டில் சத்சங்கம் தொடங்கலாம். ஓரிரு பாடல்கள் பாடலாம், அஷ்டவக்ர கீதையை கேட்கலாம் அல்லது பார்க்கலாம். அதன் பின் ஒன்றாக அதைப்பற்றி விவாதிக்கலாம். அது ஒரு மையமாக இருந்தால் நல்லது, இல்லையென்றால் உங்கள் வீட்டிலேயே அதை நடத்தலாம்.

நமது அடிப்படை ஞானம்மிக்க வலிமை உள்ளதாக இருக்கவேண்டும். ஞானம் மட்டுமே குழப்பங்களுக்கு இடையிலும் நம் வாழ்வை நடத்திச் செல்லும். இந்த உலகத்தில் குழப்பங்கள் ஏராளமாக உள்ளன. அவைகளுக்கு மத்தியில் நாம் புன்னகையுடன் வாழ வேண்டுமென்றால், வலுவான ஞானம் அவசியமாகிறது. நீங்கள் ஏன் என்னை டுவிட்டரிலும் பேஸ் புக்கிலும்    பின்பற்றக்கூடாது? டுவிட்டரில் நான் எப்போதுமே சிறுசிறு ஞானத் துணுக்குகளை கொடுத்து கொண்டிருக்கிறேன்.

சமீபத்தில், எனக்கு பிடித்த, எனக்குள் தோன்றிய ஞானம் மிக நன்றாக இருந்தது. பெரும்பாலும், நான் சொல்லும் ஞானங்கள் அனைத்தும் எனக்கு பிடித்ததாக இருக்காது, அதனால் நான் வேறு ஏதாவது சொல்ல வேண்டி இருக்கும். இது ஏன் என்றால் உண்மை என்பது வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவு சுருக்கமாக இருக்கும். ஆனால் சமீபத்தில் எனக்கு கிடைத்த ஒன்று நன்றாக இருந்தது. காரணம் என்பது தெரிந்த ஒன்றிலேயே சுழன்று கொண்டிருப்பது. நம்பிக்கை என்பது தெரியாத ஒன்றிற்குள் துணிந்து செல்லுவது. காரணம் என்பது வழக்கமானது மற்றும் ஒப்பிப்பது. நம்பிக்கை என்பது துணிந்து ஆய்வு செய்வது. 

மக்கள் ராக்கெட்டில் சந்திரனுக்கு சென்ற போது அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். அதை ஒரு தற்கொலை பயணமாக எண்ணாமல், திரும்ப வருவோம் என்ற நம்பிக்கையோடு சென்றதால், அவர்களால் தெரியாத ஒரு விஷயத்தில் துணிச்சலோடு ஈடுபட முடிந்தது. அறிவியல் பூர்வமான மனம் எப்போதுமே தெரியாத ஒரு செயலில் ஈடுபடுவதையே விரும்பும், இல்லையென்றால் அது அறிவியலே ஆகாது. தெரிந்த விஷயங்களிலேயே மறுபடியும் மறுபடியும் சுழன்று கொண்டிருந்தால் அது பொது அறிவும், ஒப்பிப்பதுமே ஆகும்.அறிவியல் என்பது தெரியாத ஒன்றில் நம்பிக்கையோடு துணிந்து ஈடுபடுவது. பொதுவாக மக்கள் அறிவியல் என்பது நம்பிக்கை சார்ந்ததல்ல என்றே நினைக்கிறார்கள். நம்பிக்கை இன்றி நீங்கள் அறிவியலை ஆராய முடியாது என்று நான் கூறுகிறேன். ஆழ்ந்து சென்றால் அது மிகவும் சுவாரசியமானதாக இருக்கும்.    

நீங்கள் உங்களுடைய கவலைகளையும் பிரச்சினைகளையும் மூட்டைகட்டி இங்கேயே விட்டுச் சென்று விடவும். புன்னகையுடன் திரும்பி செல்லவும். ஆனந்தத்தை பரப்பவும். சிறுசிறு விஷயங்கள் குறித்து கவலை கொள்ள வேண்டாம். சிரமமான நாட்களும் வரும் சந்தோஷமான நாட்களும் வரும். வாழ்க்கை அவ்வாறு இனிமையானதும் கசப்பானதுமான கலவையாகவே இருக்கும், இறுதியில் அனைத்தும் நல்லதாகவே நடக்கும். இந்த நம்பிக்கையை தான் நீங்கள் உங்களுடன் கொண்டு செல்லவேண்டும்.

உங்கள் நண்பர்கள் அனைவரையும் வந்து தியானம் செய்யுமாறு அழைக்கவும். உங்களை சுற்றி தியானம் செய்பவர்கள் அதிகமாக இருப்பது, அங்குள்ள அனைவருக்கும் மற்றும் உலகத்திற்கும் சிறப்பாக இருக்கும். மக்கள் ஞானத்தை தேடிச் செல்லுபவர்களாக இருக்க வேண்டும். எனவே ஞானம் பெறுவது என்பது இந்த சமுதாயத்திற்கு சேவை செய்ய ஒரு சிறந்த வழி ஆகும்.  

ஆப்பிரிக்காவில் செரெங்கெட்டி என்னும் இடத்திற்கு நீங்கள் பயணம் செய்தால் அங்கே சிறு சிறு  கிராமங்களில் மக்கள் பல் துலக்கும் ப்ரஷ். துணிகள், சாப்பிடுவது மற்றும் தீ ஆகியவை பற்றி கூட தெரியாமல் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு அங்கு இருக்கும் மக்களுக்கும் மற்ற நாகரிகமடைந்த மக்களுக்கும் இடைவெளி உள்ளது, ஏனென்றால் அவர்களுக்கு பற்களின் சுகாதாரம் பற்றி கூட தெரியவில்லை. யாருக்குமே, இளைஞர்கள் உட்படவும், அங்கு எல்லா பற்களும் இருப்பதில்லை. அவர்கள் பற்களை துலக்கியதே கிடையாது, ஏனென்றால் அவர்களுக்கு அதை பற்றி தெரியாது. திடீர் என்று தான் நீங்களும் பற்களின் சுகாதாரம் அல்லது தூய்மையை பற்றி உணருகிறீர்கள். அது போலவே தான், இங்கே வந்து இந்த சந்தோஷமான சூழ்நிலையில் இருக்கும்போது தான், நீங்களும் மன சுகாதாரம் மற்று தூய்மையை பற்றி உணருகிறீர்கள்.

எங்கே மக்கள் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டும், சோகமாகவும், கவலையாகவும் மற்றும் மன அழுத்தத்துடனும் இருக்கிறார்களோ அங்கே நீங்கள் சென்று அவர்களுக்கு மன சுகாதாரம் பற்றி சொல்ல வேண்டியுள்ளது. மக்கள் அவர்களுடைய மனதை சரி வர துலக்காத போது தான் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.

நீங்கள் உங்கள் மனதை துலக்கும் போது தான் உங்களுக்குள் ஞானமும் ஒளியும் உள்ளன என்று பார்க்கலாம். நீங்கள் தான் ஒளி உங்களுக்குள் அது உள்ளது. ஆனால் நீங்கள் ஒரு போர்வையை கொண்டு அதை மூடிவிட்டால் உங்களால் அதை பார்க்க இயலாது. நீங்கள் அந்த திரையை விளக்க வேண்டும்.  ஞானம் என்பது உங்களுக்குள்ளே உள்ள ஒளியை வெளியே கொண்டு வர பயன்படுவதாகும். எனவே உங்களுடைய கவலைகளையும் பிரச்சினைகளையும் இங்கேயே விட்டு விடவும். அவைகளை எனக்கு கொடுத்து விட்டு நீங்கள் வீடு சென்று உங்கள் வாழ்க்கையை கொண்டாடலாம்.


நீங்கள் என்னிடம் சொல்லலாம்" குருதேவ், நீங்கள் சுலபமாக சொல்லிவிட்டீர்கள், ஆனால் எனக்கு அது மிகவும் கடினமாக உள்ளது. ஏன் என்றால், நான் நாளை நான் என் வீட்டிற்கு செல்ல வேண்டும், பில்களை கட்டுவது, என்னுடைய மனைவி குழந்தைகளை கவனிப்பது போன்ற பல வேலைகள் இருக்கும்." உங்களுக்கு என்ன சொல்கிறேன் என்றால் இவை அனைத்தும் கடினமானவை என்று நினைக்க வேண்டாம். நீங்கள் அவை சுமை என்றோ கடினமானவை என்றோ நினைத்தால் அவைகள் மேலும் மிகப் பெரிய சுமைகளாக தெரியும். உங்களுடைய ஆற்றலுக்கும், சக்திக்கும் உட்பட்ட  ஒரு வேலையே உங்களுக்கு தரப்படும் என்பதை தெரிந்து கொள்ளவும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட வேண்டாம். ஆசீர்வாதம் அளிக்கும் பயிற்சியை கற்று அறிந்தவராக இருப்பவர்கள் ஆகிய நீங்கள் உங்கள் சக்தியை குறைத்து மதிப்பிடக் கூடாது. உங்களுக்கு என்ன தேவைப்பட்டாலும், உங்களுடைய வலுவான விருப்பம் நிறைவேறத் துவங்கும்.