கடவுளின் அன்புக்கு சான்றுகள் கேட்கக்கூடாது



பிப்ரவரி 18,  2012


கேள்வி: குருஜி, சில சமயங்களில் நீங்கள் 'karmanye vadhikaraste' (செயல்) என்று சொல்கிறீர்கள். சில சமயங்களில் 'vishraam mein Ram hai' (ஓய்வு ) என்று சொல்கிறீர்கள். நான் ஓயவெடுத்து கொண்டிருக்க வேண்டுமா அல்லது வேலை செய்துகொண்டிருக்க வேண்டுமா?
 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: எதிர்மறையானவை ஒன்றை ஒன்று சார்ந்தவை. நீங்கள் நன்றாக வேலை செய்தால் நன்றாக ஓய்வெடுக்க முடியும். நீங்கள் ஓய்வெடுத்தால், நன்றாக வேலை செய்ய முடியும். எந்த வேலையும் செய்யாமல் வெறுமனே படுத்துக்கிடந்தால், உங்களால் ஓய்வெடுக்கவும் கூட முடியாது.. ஓய்வில்லாமல் தொடர்ந்து வேலை செய்துகொண்டிருந்தால் வேலையும் செய்ய முடியாது. எனவே வேலையும் ஓய்வும் ஒன்றோடொன்று இணைந்திருக்க வேண்டும்.


கேள்வி: குருஜி, ஒருவர் தன்னுடைய கர்மாவைப் பொறுத்தே ஞானம் அடைகிறாரா?


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஞானம் அடைவதற்கு முதலில் அதற்கான விருப்பம் உண்டாக வேண்டும். ஞானம் அடையவேண்டுமென்ற விருப்பம் ஒருவரது கர்மாவைப்பொருத்தே உள்ளது என்று நான் சொல்வேன். உண்மை. ஆனால் கர்மாவை ஞானம் நீக்கிவிடும்.



கேள்வி: குருஜி, ஒருவரது வாழ்வில் ஒழுக்கத்தை நிலைநிறுத்த என்னவெல்லாம் செய்ய வேண்டும் ?
 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: முதலில் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்ற விருப்பம் மனதில் இருக்க வேண்டும். அந்த விருப்பம் இருந்தால் அது நிறைவேறிவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். மூன்று காரனங்களுக்காகத்தான் ஒழுக்கம் கடைபிடிக்கப் படுகிறது.

ஒன்று அன்பு. அன்பிற்கு ஒழுக்கம், கட்டுப்பாடு எதுவும் தேவையில்லை. என்றாலும் அன்பின் மூலமாக ஒழுக்கத்தை அடையலாம்.

இரண்டாவது பயம். ஒருவரிடம் "நீங்கள் ஒழுக்கத்தைக் கடை பிடிக்கவில்லைஎன்றால் உடல் நலம் கெடுவீர்கள்" என்று சொன்னால் அவர் வியாதிக்குப் பயந்து ஒழுக்கத்தை கடைபிடிப்பர்.

மூன்றவதாக பேராசை. நீங்கள் ஒருவரிடம் "நீங்கள் ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வில்லை யென்றால் நஷ்டம் உண்டாகும்" என்று சொன்னால் அவர் லாபம் பெற வேண்டும் என்ற ஆசையில் ஒழுக்கத்தை கடைபிடிப்பர். எனவே நிபந்தனையற்ற அன்பிலிருந்து உண்டாகும் ஒழுக்கமே மிகவும் சிறந்தது.

  
கேள்வி: குருஜி, ஒரு குறிப்பிட்ட நகரத்திற்கு நீங்கள் வரப்போகிறீர்கள் என்ற செய்தியே ஓர் சண்டையை உருவாக்கிவிடுகிறது என்று சொல்லப்படுகிறது. சேவை என்பது ஏன் முரண் பாடுகளைத் தூண்டிவிடுகிறது?


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: முதலில் ஒரு சண்டை துவங்கினால் பின்னர் கீதை ஆரம்பமாகிறது.ஆம்.
நான் ஒரு நகரத்திற்கு வருவதற்கு முன் ஒரு சண்டை உரூவாகிறது என்று நானும் கேள்விப் பட்டிருக்கிறேன். குருஜி எங்கே யாருடைய வீட்டில் தங்குவார்? என்ற கேள்வி வந்தவுடன் ஒவ்வொருவரும் என வீட்டில் தங்கினால் நான் இப்படிச் செய்வேன் நான் அப்படிச் செய்வேன் என்று சண்டை துவங்குகிறது. என்ன செய்வது? எனக்கும் வியப்பாக இருக்கிறது. அன்பு மலரும் இடத்தில் கருத்து வேறுபாடுகளும் முளைக்கும் .கருத்து வேறுபாடுகள் உள்ள இடத்தில அன்பும் மலரும். எங்கோபின் அவை இரண்டும் இணைந்துவிடும்.

 
கேள்வி: குருஜி, தியானத்தில் அடையும் நிலையை அப்படியே தக்க வைத்துக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?
 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இப்பொழுது செய்வதையே தொடர்ந்து செய்து கொண்டிருங்கள். திரும்பத் திரும்ப அதையே தொடர்ந்து செய்து கொண்டிருங்கள். 'baar baar Raghuveer samai' . மீண்டும் மீண்டும் தியானம் செய்யுங்கள். தியானம், சாதனா, சத்சங் செய்யுங்கள். அதைப் பற்றி பேசவும் செய்யுங்கள். உங்கள் சொல், மனம் , செயல் ஆகியவற்றில் எப்போதும் இருக்கும் ஒன்று அப்படியே நிலைத்து விடுகிறது.

நீங்கள் சாதனா செய்து விட்டு மற்ற நேரங்களில் அற்ப விஷயங்களை பற்றி பேசிக் கொண்டி ருந்தால் சாதனாவிலிருந்து உங்களுக்குக் கிடைத்த சாரம் சிறிது சிறிதாக மறைந்து விடும்.
எனவே பேசும்போது அந்த நிலையைப் பற்றிய விளக்கம் இருக்கட்டும். நீங்கள் பேசும்போ தெல்லாம் ஞானம் பற்றி அன்பு பற்றி பேசுங்கள். பிறகு அது அப்படியே உங்களிடம் நிலைத்து விடுவதை காண்பீர்கள். சத்சங்கத்தில் நாம் தியானம், ஞானம், போன்ற நல்ல விஷயங்களையே பேசுவதனால்தான் சத்சங்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.


நாம் யாரோ ஒருவருடைய வாழ்வில் நிகழும் அதிசயத்தைப் பற்றி பேசுகிறோம் இல்லையா? எத்தனை பேர் இப்படி அதிசயங்களைப் பற்றி பேசுகிறீர்கள்? அதிசயங்களைப் பற்றி மட்டும் நீங்கள் பேசும்போது என்ன நடக்கிறது? உங்கள் வாழ்வில் ஒவ்வொரு நாளும் புதுமையாக ஏதோ ஒன்று நடக்கிறது; புது பாடங்கள் கற்றுக் கொள்ளப்படுகின்றன எனவே இது போன்ற விவாதங்களினால் மனம் மேலும் வலுவடைகிறது.

கேள்வி: குருஜி,நான் எப்பொழுது வேண்டுமானாலும் மௌனத்தில் இருக்கலாமா?அது எனக்கு மிகுந்த நன்மை பயக்கும் என்று எண்ணுகிறேன்.


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆம்.மற்றவர்களையும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களையும் கேளுங்கள். ஆனால் மற்றவர்களுக்கு இடைஞ்சலோ,தொந்தரவோ தரக்கூடிய மௌனம் தேவை இல்லை. குறைவாகவும் தேவைக்கு ஏற்பவும் பேசுங்கள். நீங்கள் நட்புடனும் இதமாகவும், அன்புடனும், உண்மையாகவும் பேச வேண்டும். குறைவாக  நன்மை பயக்ககூடியதாக இதமாக உண்மையைப் பேசுங்கள் .


கேள்வி: குருஜி, சத்குருவிடமிருந்து ஒருவர் என்ன கேட்கவேண்டும்? சத்குரு இருக்கும் போது, ஜெபம் அவசியமா ?


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: என்ன  தேவையோ,அதைக்கேட்கலாம். அதனால் தான் "தேவை " என்று கூறப்படுகிறது என்ன கேட்கலாம் என்று நீங்கள் உட்கார்ந்து யோசனை செய்யக்கூடாது .உங்கள் தேவையோ ,அவசியமோ ஒரு கேள்வியாகவோ,வேண்டுதலாகவோ இருக்கலாம் .


கேள்வி: குருஜி, மனச்சாட்சி உருவமில்லாததாக இருக்கும்போது, நம் நம்பிக்கை உருவத்தின் மேலா, அல்லது உருவமில்லாததன்  மேலா ?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: உருவமில்லாததை நீங்கள் எட்டி விட்டீர்களானால் நல்லது. உருவங்கள் உருவமில்லாத தன் அங்கமே .உருவமில்லாததை முதலில் நீங்கள், ஊகிக்க முடியாது..

அதனால் நீங்கள் கண்ணைத் திறக்கும்போது ,உருவகப்படுத்திக்கொள்கிரீர்கள். ஆனால் நீங்கள்  கண்களை மூடி ஆழ்ந்த தியானம் செய்யும்போது, உருவமில்லாததை உணர்வீர்கள் .

இது ஒரு ஆரம்பமே .பின்னர்  படிப்படியாக உங்கள் கண்கள் முடி இருந்தாலும் திறந்திருந்தாலும், உருவமில்லாததுடன் ஒன்றி விடுவீர்கள் .


கேள்வி: குருஜி ,நான் என் வேலையிலோ ,சாதனா மீதோ ஈடு படும்போது ,என் உறவுகள் தடைபடுகின்றன .நான் என் சாதனையையும் செய்யவேண்டும் ,அதோடு என்னைச் சுற்றி உள்ளவர்களும் சந்தோஷமாக இருக்கணும் .இது எப்படி சாத்தியம் ?


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: சாமர்த்தியமாக இரண்டையும் செய்யணும். இது தானே வந்து விடும் .


கேள்வி: குருஜி ,சிலசமயங்களில் என்னால் சேவை செய்யமுடியவில்லை. அன்பளிப்பும்
சேவை தானா ?


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆம் .அதுவும் சேவைதான்.உங்களால் எது முடியுமோ, அதுவே சேவை .
உங்களால் ஒரு கல்லைத்தூக்க முடியவில்லை என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் தூக்கத் தேவை இல்லை உங்களால் முடியாததை நீங்கள் செய்யக்கூடாது. வேறு யாரவது அதைச் செய்யமுடிந்தால்,அவர்களை செய்யச்சொல்வதும் சேவை தான். அது போல்,உங்களால் ஒரு மாணவனுக்கு பாடம் கற்ப்பிக்க முடியவில்லை என்றால் மற்ற ஆசிரியர் மூலமாக உதவி செய்யலாம் அவர்கள் சொல்லித்தருவார்கள்.அதனால் சேவை என்பது உங்களால் முடியக்
கூடியது தான் நேரம் இருந்தால் அதைக்கொடுங்கள். பணம் இருந்தால் அதைக்கொடுக்கலாம்
எந்த விதத்தில் இருந்தாலும் அது சேவையே.



கேள்வி: குருதேவ், உங்களுக்கு  நிறைய சீடர்கள் இருக்கிறார்கள்.எப்படி ஒவ்வொருவருடைய ஆன்மீக முன்னேற்றத்தைத் தெரிந்து கொள்கிறீர்கள் ?
 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: அது என்னுடைய வியாபார ரகசியம் (சிரிக்கிறார் )
 

கேள்வி: குருஜி ,உலகத்தில் உள்ள காதலர்கள் தன்னுடைய துணைகளைஆசை காட்டி அன்பை வெளிப்படுத்துகிறார்கள். அதே நிறைவை நாம் இறை துணையிடம் எப்படி பெறமுடியும்?
 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இறைவன் உங்களிடம்  ஏற்கனவே  நிறைய ஆசைகாட்டி இருக்கிறார். இது தொடரும்.
 

கேள்வி: குருஜி, தினசரி வாழ்வில் நாம் கர்ம பந்தத்தை எவ்வாறு தவிர்க்க முடியும்? (செயல்களின் பிணைப்புக்கள்)
 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆசையோ,வெறுப்போ இருக்கும் பட்சத்தில் அதை கர்ம பந்தன் என்கிறோம் அதனால் நீங்கள் ஒரு செயலை :ஆசையோ, வெறுப்போ இல்லாமல், புன்சிரிப்புடன் திறந்த மனதோடும் ,தூய இதயத்துடனும் செய்தால் அதில் ஒரு தளையோ, கட்டோ  இல்லை அவ்வாறான செயல்கள்  உள் சுதந்திரத்தையும் கொண்டு வரும் .

கேள்வி: பார்வையற்றோருக்கு எதாவது கூற விரும்புகிறீர்களா?


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆம்! பார்வையற்ற நிலை வளர்ச்சிக்குத் தடையாகாது. இதை நீங்கள் அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். சூர்தாஸ் எனும் சிறந்த முனிவர் பார்வையற்றவர். நம் நாட்டை ஆண்ட திருதிராஷ்டிரன் பார்வையற்றவர்.

இந்த நூற்றாண்டின் சிறந்த துறவியான ஷ்ராத்தானந்தா பார்வையற்றவர். சில பத்தாண்டுகளுக்கு முன்தான் அவர் இறுதி நிலையகத்தை அடைந்தார்.அவர் தினமும் பிருந்தாவன் கோவிலுக்கு செல்லுவார். ஒருவர் அவரிடம் " சுவாமிஜி ! கோவிலில் நிறைய கூட்டம் உள்ளது. நீங்களோ பார்வையற்றவர். அங்கு சென்று என்ன காணப்போகிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு சுவாமிஜி புன் முறுவலுடன் "என்னால் பார்க்க முடியாவிட்டால் என்ன? கடவுளுக்கு என்னை பார்க்க முடியும். அவர் என்னைக் காண விரும்புகிறார். அதனால் நான் தினமும் கோவிலுக்கு செல்லுகிறேன். அவர் என்னை காணமுடியுமல்லவா? அதனால் அவருக்கு மகிழ்ச்சி உண்டாகிறது! அவர் என்னைக் காணட்டும்" என்று கூறினார்.

கடவுள் என்னை விரும்புகிறார் என்பதுதான் முழுமையான பக்தி, முழுமையான அன்பும் நம்பிக்கையும் ஆகும். கடவுளின் அன்புக்கு சான்றுகள் கேட்கக்கூடாது. எப்போதும் கடவுள் உங்களை நேசிக்கிறார் என்று உணர்ந்து கொள்ளுங்கள். அது போதும். மேலும் கேள்விகள் வேண்டாம்.அதே மாதிரிதான் நாம் தினம் தினம் சந்திப்பவர்களிடையும் அவர்கள் உங்களை நேசிப்பதை பற்றி கேள்வி எழுப்பாதீர்கள். குருஜி என்னை நேசிக்கிறாரா? இந்த கேள்வி எழவே கூடாது.அதே மாதிரி நண்பர்கள் கணவன், மனைவி இவர்கள் நம்மை நேசிக்கிறார்களா? இல்லையா? என்று கேள்வி எழுப்பாதீர்கள். அவர்கள் எல்லோரும் உங்களை நேசிக்கிறார்கள்
என நம்பி மேலே செல்லுங்கள். அவர்கள் நடத்தையை பற்றி கவலை படாதீர்கள்.


கேள்வி: குருஜி! கடவுள் தான் இவ்வுலகை படைத்து இயக்குகிறார். அவர் தாம் நம் தந்தை. அப்போது ஏன் உலகில் துன்பம், ஏழ்மை, மற்றும் அறியாமை இவை இருக்கின்றன?


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஒரு முனிவரிடம் ஒருவர் இதே போல் ஏன் உலகில் துன்பம் இருக்கிறது? என்று கேட்டார்.அதற்குத் துறவி " கடவுள் எனக்காகத்தான் அதை வைத்திரு க்கிறார். துன்பமிகு உலக வாழ்வையேத் துறக்க முடியாதபோது, துன்பமில்லா வாழ்வை எப்படித் துறக்க முடியும்? துறக்காவிட்டால் எவ்வாறு என் கவனத்தை கடவுளிடம் செலுத்த முடியும்? துன்பங்கள் நிறைந்தி ருப்பதால்தான் இந்த இக வாழ்வில் கட்டுப்பட்டு இருப்ப தில்லை. துன்பங்களை அனுபவித்த பின் துறவு மனப்பான்மையும், கடவுளிடம் ஈடுபாடும் ஏற்படுகிறது. அதனால்தான் "துக் மெய்ன் சுமிரன் சாப் கரேன் சுக் மெய்ன் கரேன் ந கோயி சுக் மெய்ன் சுமிரன் ஜோ கரே துக் கஹீ கோ ஹோய் "என்று கூறப்படுகிறது.


கேள்வி: குரு, தர்ம குரு, சத்குரு இவர்களுக்கிடையே உள்ள வேறுபாடு என்ன? அடுத்த கேள்வி இவ்வுலகில் ஒரு யுகத்தில் ஒரு சத்குருதான் இருக்க முடியும் என்று கூறப்படுகிறது. அவ்வாறெனில் அது நீங்களா?


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: " மேரே குரு ஹி ஜகத் குரு ஹைன் ! மேரே நாத் ஹி ஜகத் ஹி நாத் ஹைன் "என்னுடைய குரு இந்த உலகின் குரு . இதுதான் உண்மை. இதையே நம்பலாம். தர்மகுரு, ஜகத் குரு என்பதெல்லாம் வெவ்வேறு அழைப்பு முறைகள் . யாரொருவர் உண்மையை எடுத்துக் கூறுகிறாரோ அவர் சத்குரு. சங்கீதத்திற்கு குரு இருப்பது போல உண்மைக்கு சத்குரு இருக்கிறார். சத்குரு என்பவர் உண்மை என்ன , பொய்மை என்ன, இகவாழ்கை என்ன , ஆத்மா என்ன என்கிற விஷயங்களை உங்களுக்குப் புரியவைக்கிறார். யார் ஒருவர் இதை செய்கிறாரோ அவர் சத்குரு.
 

கேள்வி: எல்லாமே முன்னாலேயே தீர்மானிக்கப்படும் பட்சத்தில் மனிதர்கள் செயல்பட வேண்டியது ஏன்?


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: எல்லாமே விதிப்படி என்றாலும் மனிதர்கள் தங்களுக்கு தேவையான வற்றையும் விருப்பமானவற்றையும் அடைய முயற்சிக்க வேண்டும். உதாரணமாக, உங்கள் வீட்டிற்குள் சூரிய ஒளி வேண்டுமென்றால் ஜன்னல்களையும் கதவுகளையும் திறக்க வேண்டும். எல்லாவற்றையும் மூடி வைத்துவிட்டு சூரிய ஒளி தானாக வருமென்று எதிர்பார்க்க முடியாது. அதே சமயம், நடு இரவில் கதவுகளையும் ஜன்னல்களையும் திறந்து சூரிய ஒளியை எதிர்பார்க்க முடியாது.ஆகவே, உங்கள் இலக்கை நோக்கி முழு முயற்சி செய்யுங்கள்.எது நடக்க வேண்டுமோ அது நடக்கும்.உங்கள் முயற்சியும் விதியும் ஒன்றாகவே செயல்படும்.


கேள்வி: அன்புள்ள குருஜி! எவ்வளவு தியானம் செய்தாலும் என்னால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லையே? நான் என்ன செய்வது?
 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: கோபத்தைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யாதீர்கள். தினமும் பிராணாயாமம் செய்யுங்கள். உங்களை சுற்றியுள்ள அனைவரையும் எப்படி இருக்கிறா ர்களோ அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள், அவர்களை மாற்ற முயற்சி செய்யாதீர்கள். தொடர்ந்து தியானம் செய்யுங்கள்.இவ்வளவு தியானம் செய்தும் கோபம் மிகுதியாக இருந்தால், தியானம் செய்யாமல் இருந்தால் எவ்வளவு இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். தியானமும் பிராணாயாமமும் கோபத்தை படிப்படியாகக் குறைக்கும்.


கேள்வி: குருஜி! நான் தங்களை கடந்த நான்கு வருடங்களாக முழு மனதுடன் பின்பற்றி வருகிறேன். நான் தாடி வளர்த்து,வெள்ளை ஆடை அணிகிறேன். இது என் பெற்றோருக்கும், மனைவிக்கும் பிடிக்கவில்லை……


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இதெல்லாம் நீங்கள் செய்ய வேண்டாம். தாடியை எடுத்து சவரம் செய்து கொள்ளுங்கள். வண்ண ஆடைகளை அணியுங்கள். சாதரணமாக இருங்கள். முன்மாதிரியாக விளங்குபவர் போல ஆடைகள் வேண்டும் என்று அவசியமில்லை. கருணை, அன்பு, இவற்றுடன் செய்யவேண்டிய நல்ல காரியங்களை தொடர்ந்து செய்து வாருங்கள்.


கேள்வி: குருஜி, சிவராத்திரி மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி சொல்வீர்களா?



ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: சிவ தத்துவம் பூமியைத்தொடும் நாளே சிவராத்திரி ஆகும். பூமிக்கு பத்து அங்குலம்மேலே இருக்கும். தெய்விகம்,குருவை சூழிந்திறுக்கும் ஆனால் புல கண்ணில் படாத ஓளி, விண்ணுலகம் ( consciousness , the aura, the ethereal வேர்ல்ட்) மகா சிவராத்திரி அன்று நிலத்தைத் தொடுகிறது .எனவே, அந்த இரவு மக்கள் விழித்திருந்து தியானம் செய்தால் மிகுந்த பயன் பெறுவார்கள். அதிகம் இல்லாமல் எளிமையான உணவை சாப்பிட்டு விட்டு நிறைய தியானம் செய்தால் நம் விருப்பங்கள் எல்லாம் நிறைவேரும் என்பது பழங்கால நம்பிக்கை.
அது நம்முள்ளே ஆன்ம பலத்தை வளர்க்க உதவுகிறது. ஒரு சாதகருக்கு அது புது வருடம்
போல. இவ்வுலகபபேறு, ஆன்மீகப் பேறு, ஆன்மீக வளர்ச்சிக்கு உதவும் நாள். எனவே அது புனிதமானநாளாகக் கருதப்படுகிறது.

அந்த இரவு நட்சத்திரக் கூட்டங்கள் ஒரு குறிப்பிட்ட நிலையில் அமைப்பில் இருப்பது தியானத்திற்கு மிகவும் உகந்தது என்பது நம் முன்னோரின் நம்பிக்கை. மற்ற நாட்களில் தியானம் நன்றாக அமையாது என்று அர்த்தமில்லை. எப்போதுமே நாம் இதயம் மலர்ந்து அமைதியான நிலையான மனதுடன் இருக்கும் போது நம் வேண்டுதல்கள் நிறைவேறும். இருந்தாலும் சிவராத்திரி அன்று வேத மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டு, பாடல்கள் இசைக்கப்பட்டு, பூஜைகள் சடங்குகள் செய்யப்படுவதால், அதுஆன்மீகத்தேடல் உள்ளவர்களுக்கு மிகவும் புனிதமான சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. அன்று லௌகீகமும் ஆன்மீகமும் இணையும் இரவாக கருதலாம் பூமி சம்பந்தப்பட்ட எட்டு பங்குகள் விண்ணு லகை சார்ந்த எட்டு பங்குகளின் அருகாமையில் வருகின்றன. அதாவது எட்டு பங்கான பிரகிருதி,இயற்கை நிலம், நீர், வாயு (காற்று), நெருப்பு, ஆகாயம், மனம், புத்தி, அகந்தை நுண்ணிய எட்டான சிவ தத்துவத்துடன் இணைகிறது.


அன்று எதுவுமே சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டியதில்லை. பழங்கள் அல்லது எளிமையாக செறிக்கக்கூடிய சிறிதளவு உணவு சாப்பிடலாம். நாள் முழுவதும் விழித்திருந்து இரவு தியானம் செய்யுங்கள். சிறிது நேர தியானம் போதுமானது. இரவு முழுவதும் தியானம் செய்ய வேண்டிய அவசியமில்லை. நாம் அன்று சத்சங்கம் அமைத்து கொண்டாடலாம். அவ்வளவுதான்.உண்மையில் நாம் தினமும் சத்சங்கம் செய்வதால் ஒவ்வொரு நாளும் புனிதமான நாள்தான்.


ஒவ்வொரு நாளும் செய்ய முடியவில்லை என்றால் பரவாயில்லை. வருடத்தில் ஒரு நாள் சிவராத்திரி அன்று மட்டுமாவது விழித்திருந்து தியானம் செய்யுங்கள் என்று நம் முன்னோர் சொல்லியிருக்கிறார்கள். நம் உள்ளே ஆழத்தில் இருக்கும் தெய்வீகத்தை தட்டி எழுப்புங்கள் என்பதேசிவராத்திரியின் தத்துவம். நம்முள்ளே இருக்கும் தெய்வீகம் விழித்தெழட்டும்.


கேள்வி: இரவு முழுவதும் உறங்காமல் விழித்திருப்பதன் உள்ளர்த்தம் ஏதாவது இருக்கிறதா?
நாம் எவ்வளவு நேரம் விழித்திருக்க வேண்டும்?


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: உங்களை நீங்கள் வருத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. இயற்கையாக இருங்கள்.


கேள்வி: mahashivadiwas (சிவனின் நாள்) என்று இல்லாமல் மகாசிவராத்திரி (சிவனின் இரவு) என்று அழைக்கப்படுவது ஏன்?


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நான் ஏற்கெனவே அதைப்பற்றி சொல்லியிருக்கிறேன். புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். ராத்திரி என்பது ஆறுதல் அளிப்பது. ஓய்வை அளிப்பது எதிலிருந்து ஓய்வு? மூன்று தாபங்களிளிருந்து (கவலைகளிலிருந்து) ஓய்வு தருவதே ராத்திரி.

Aadi bhautika (உடல்), aadhyaatmika (ஆன்மா) , Aadi Daivka (Ethereal) ஆகிய மூன்றிலிருந்தும் ஓய்வைத் தருவது ராத்திரி. taapavitra என்பது பிரச்சினை அல்லது கவலையைக் குறிக்கிறது. கவலையிலிருந்து ஆறுதலுக்கு நம்மை அழைத்துச் செல்வதே ராத்திரி.