நாட்டுப்பற்றும் கடவுள் மேல் உள்ள அன்பும் வெவ்வேறல்ல

 
17,February,2012


சந்தோஷத்தையும் கட்டுப்படுத்த வேண்டும்.நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது அதை
நல்வழிப்படுத்த வேண்டும் சுகமாக இருக்கும்போது சேவை, துக்கத்தில் இருக்கயில்
சரண் அடைந்துவிடுங்கள்.இந்த சூத்திரங்களை மறக்காதீர்கள் i


நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது சேவை செய்யுங்கள் .துக்கமாகவோ கவலையோடோ இருக்கும்போது சரணடைந்து விடுங்கள் சரணடையும் எண்ணம் இல்லையானால்,கஷ்டம்
உங்களை விட்டு நீங்காது..கஷ்டத்திலும் சரணடையாவிட்டால் அவனுக்கு விடிவே இல்லை சேவையும் சரணாகதியும் வாழ்க்கையில் சேர்ந்தே செல்ல வேண்டும் ..


மகிழ்ச்சியால்i ஒரு வழிப்படுத்தவேண்டும்.நாம் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறோம் . காலையிலிருந்து நாம் தியானம் செய்து நன்றாக இருப்பதை உணர்கிறோம். நாம் இந்த
மகிழ்ச்சியை மற்றவர்களும் உணர என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்.
சேவை செய்யுங்கள்.ஊழல் அற்ற,வன்முறை அற்ற அமுக்கப்படாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.அதற்கு அறியாமையை எதிர்த்து போராட வேண்டும். நம் நாட்டில் நிறைய மூட நம்பிக்கைகள் உள்ளன அதை அகற்ற வேண்டும்.படிப்பறிவில்லா சூழ்நிலையை களைய
வேண்டும் அறியாமையை எதிர்த்து போராட வேண்டும்.வலைதளம் வழியே பார்த்துக்
கொண்டிருக்கும் மக்களுக்கு நான் சொல்வதெல்லாம் நீங்களும் தினமும் சிறிது தியானம்
செய்யுங்கள்.
 

தியானம் மகிழ்ச்சியை அதிகப்படுத்தி,உடலை ஆரோக்கியமாகவும்,அறிவை கூர்மையாகவும், பினனால்என்ன நடக்கப்போகிறதோ,அதை முன்னாலேயே மனதுக்கு உணரும் சக்தியும் உண்டாக்குகிறது.எல்லா கெட்ட எண்ணங்களையும் ஏற்றுகொள்ளுங்கள். ஏன்? நீங்கள் அதை
விரட்ட முயற்சி செய்தால் அவை பிடிவாதமாக உங்களோடு இருக்கும்..நீங்கள் அதோடு கை கோர்த்துக் கொண்டால் அவை உடனேயே ஓடிவிடும்.மெதுவாக,படிப்படியாக மனதை எண்ணங்களிலிருந்து விடுவித்தால்,2 அல்லது 4 நிமிடங்களிலோ,10,15 நிமிடங்களிலோ மனது நிலைப்படும்.இதை முறையாக பயிற்சி செய்தால்,அமைதியும்,சந்தோஷமும் வந்து உண்மையே நேர்மையே இயல்பாகிறது.நாம் நேர்மையாக இருக்க எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை,
அது இயற்கையாகவே வந்துவிடும் .நாம் திறந்த மனதோடு இருக்கவேண்டும் .


இன்று அண்ணாஜி (அண்ணா ஹசாரே ) வந்திருக்கிறார் .அவர் வாழ்வில் ஒரு திறந்த மனோபாவம் உள்ள மனிதராகவே உள்ளார்.ஒவ்வொருவரோடும் ஆழ்ந்த தொடர்புடையவர் முழு மனதுடன் நாட்டிற்காக எதாவது செய்யவேண்டும் ,எனக்கென்று ஒன்றும் தேவை இல்லை,எல்லாம் நாட்டிற்கே என்ற உணர்வு ஒவ்வொரு இளைங்கர்ளிடம் வந்தால்,நாட்டின் பார்வையே மாறும் .அந்த மாற்றத்தை நாம் கொண்டு வரவேண்டும் .வேறு வழி இல்லை அதற்கு நீங்கள் தயாரா?


அண்ணாஜி, உங்கள் படை தயாராகிவிட்டது .அதை ஏற்படுத்தும் தொழிற்சாலை இங்கு இருக்கிறது. நம்முள்ளே நோக்காமல் நாம் சரியான பாதையில் செல்லமுடியாது.வெற்றியும் கிட்டாது .தொழிலில் வெற்றி கிடைக்கவேண்டுமென்றால் ஒவ்வொரு நாளும் நாம் சிறிது நேரத்திர்காகவது உள்நோக்கிப் பார்க்கவேண்டும் .தொழிலில் வெற்றி கிடைத்து விட்டால் வாழ்க்கையில் நிலையான அமைதியும் இருக்கும் .அதன் பின் நாம் என்ன விரும்புகிறோமோ அது நடக்க ஆரம்பிக்கும் .இதை எத்தனை பேர் இதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறீர்கள் ?


இது தான் இந்தியாவின் ஆன்மீகம் -"சங்கல்ப சித்தி "..தோல்வி நம்மை நெருங்காது.


இது தான் இந்தியாவின் ஆன்மிக உணர்வின் முக்கியத்துவம்- சங்கல்ப சித்தி. தோல்வி நமக்கு கிட்ட வருவதில்லை.ஏன்?அது ஏன் என்றால்" சட்வத்தின்" அதிகரிப்பு."சத்வ குணம் அதிகரிக்கை யில்,நம்மால் உலகத்தில் வெற்றி அடைய முடியும். நீங்கள் எங்கே,எந்த மூலைக்குப் போனாலும், எந்த சவால் ஆனாலும்,அதை சுலபமாக ஒரு புன்னகையுடன் எதிர்கொள்வீர்கள். எப்படி?அது ஓர் தனி மனிதனின் சாதனையாக இருக்காது.அது ஒரு சிறிய மூளையின் சாதனையாகவும்
இருக்காது. அது பிரபஞ்சம் சம்மந்தமான ஒரு உணர்வு.ஒரு உச்ச சக்தியின் அடையாளம்.
அதில் சேர்ந்துகொண்டால் நம்மால் வெற்றியும் பூர்ணத்துவமும் (சித்தி) அடைய முடியும்.



உத்தர பிரதேசத்தில் ஒரு பழமொழி இருக்கிறது -ராம் ஜ்ஹரோக்ஹி பிதே சப்க முஜ்ரா லே.இது வாழ்கையில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது .நீங்கள் ஆன்மிக உணர்வு இல்லாமல் எதாவது செய்திர்களானால் அதில் வெற்றி அடைய முடியாது. ஆன்மிக உணர்வுதான் நம் சாரம்,அடித்தளம் மற்றும் நம் வாழ்வின் அடிப்படை.அதில் கவனமாக இருங்கள்,அது எப்படி எல்லோரின் மனதை மாற்றுகிறது என்று பாருங்கள். இதனால் மிக மோசமான மனதும் மாறும்.

இந்த உலகத்தில் யாரும் கெட்டவர் என்று கிடையாது, அப்படி யாராவது இருந்தால் நம்மால் அவரின் மனதைக்கூட மாற்ற முடியும்.இந்த அறிவில் நிறைய பலம் இருக்கிறது. அதனால்
தான் இதை பிரம்ம ஞானம் என்று சொல்கிறோம்.(உயர் அறிவு)நேற்று ஒருத்தர் என்னை
கேட்டார்.இங்கு ஏன் இந்த ஊழல் மனிதர்கள் வருகிறார்கள்?''

நான் அவரிடம் சொன்னேன்-''நீங்கள் உலகத்தில் உள்ள எல்லா ஊழல் மனிதர்களை இங்கு
கூப்பிட்டு வாருங்கள்,இந்த ஆஷ்ரமத்தில் அவர்கள் வந்து இங்கு உட்கார்ந்தால் இங்கு இருக்கும் சந்தோஷத்தை அவர்கள் உணர்வார்கள்.அவர்களின் வாழ்க்கைளில் அன்பிற்கு இடம் இல்லை, அதனால் தான் பணத்திற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.எந்த தியாகமும் , எந்த அமைதியும் அவர்கள் உணர்ந்ததில்லை.அதனால் எந்த மகிழிச்சியும் இல்லை.இங்கு வந்து இந்த மகிழ்ச்சியை அவர்கள் உணர்ந்தார்களானால் பணம் அதன் வசீகரத்தை இழந்துவிடும்.அவர்களால் உங்களை போல குதித்து, ஆடி பாட முடியும் என்றால் , எல்லாம் அதன் வசீகரத்தை இழந்துவிடும்.
சொத்து, செல்வம், மது எல்லாம் ஒன்றும் இல்லை,அதில் ரசம் ஏதும் இல்லை.இதனால் வாழ்கையில் ரசம் இருக்க வேண்டும்.


நீங்கள் இந்த வாழ்கையில் எப்படி இந்த சந்தோஷத்தை அனுபவிக்கிறீர்களோ இதை மற்றவர் களுக்கும்   பரப்புங்கள்.அவர்களும் அதை உணர்ந்து, பகிரட்டும்.நீங்களும் அருந்துங்கள், மற்றவர்களையும் அருந்த வையுங்கள்.மது அருந்தகத்தில் அந்த ஆள் மற்றவர்களை மது
அருந்த வைக்கிறான்.ஆனால் அவன் அருந்துவதில்லை. இங்கு நாம் முதலில் அருந்துகிறோம், பிறகு மற்றவர்களையும் அருந்த வைக்கிறோம்.இன்று, அர்விந்த் அவர்கள்(அர்விந்த்கேஜ்ரிவால்) நம்முடன் இங்கு இருக்கிறார்.அவர் நல்லவர், எல்லா தகவல்கள் அறிந்தவர். அவருக்கு இந்த நாட்டின் மீது ரொம்ப நேசம் இருக்கிறது. நாம் எல்லோரும் அவருடன் இருக்கிறோம்,அவர்
இந்த நாட்டிற்காக நிறைய செய்ய போகிறார்.


சத்தியத்தின் குரல் துணிவாக இருக்கவேண்டும்.உங்களின் குரலை சக்தி வாய்ந்ததாக இருக்கச்செய்யுங்கள்.நாட்டின் மீது நேசம் மற்றும் தெய்வம் மீது நேசம் ரெண்டும் வேறு அல்ல. நீங்கள் கடவுளை நேசித்தீர்கள்,ஆனால் நிச்சயம் உங்கள் தேசத்தையும் நேசிப்பீர்கள் தேசமும் கடவுளின் படைப்பு. அது ரெண்டும் வேறு அல்ல.நீங்கள் உலகை நேசித்தீர்கள் ஆனால்,அந்த படைப்பாளி உங்களுக்குள் இருக்கிறார் , நீங்கள் அவருக்கும் நன்றி சொல்வீர்கள். அதை நீங்கள் செய்யவில்லை என்றல், இது வேலை செய்யாது.

நாம் எல்லோரும் சோளம் போல. சோளம் கடினமானது. ஆனால் ,பாப்கார்ன் வெள்ளை நிறத்தில் உள்ளது மற்றும் மிருதுவானது .எப்படி கடினமான சோளம் ,பாப் கார்ன் ஆகமாறும்போது மிருது ஆகிறதோ அதேபோல த்யானத்தில் இருந்து வரும் சக்தி மற்றும் இந்த நல்ல ஆன்மீக வழிகள் , உங்கள் இதயத்தை திறந்து, மனதை தெளிவாக்குகிறது. இது ஒரு அழகான ஞானம். இது ஒரு அருமையான விவேகம் அல்லவா?


கேள்வி: குருஜி, நாம் எல்லோருமே அடுத்தவர்கள் அவர்களது வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறோம், ஆனால் ஒரு சிலரே தங்களது வாழ்க்கையை எப்படி அமைத்து கொள்ளலாம் என்று யோசிகிறார்கள். இது ஏன், இதற்காக
நாம் என்ன செய்ய வேண்டும்?


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீங்கள் இப்போது உங்களை பற்றி பேசுகிறீர்களா அல்லது உங்கள் வாழ்கை துணையை பற்றியா அல்லது வேறொருவரை பற்றியா? ஆம் உங்கள் மனைவி உங்களுக்கு யோசனை கூறுவார் - நீங்கள் எப்படி வாழ வேண்டும்,என்ன செய்ய வேண்டும் என்று, உங்கள் தாய் உங்களுக்கு புத்திமதி கூறுவார், உங்கள் தமக்கை உங்களை அதிகாரம் செய்வார்,ஏன்
உங்கள் மகள் கூட உங்களிடம் "அப்பா நீங்கள் இப்படிதான் நடந்து கொள்ள வேண்டும்"என்று கூறுவார்.

பெண்களுக்கும் அதே போல்தான் கணவர் யோசனை கூறுவார் அண்ணன் புத்திமதி கூறுவார். அளவுக்கு அதிகமாக உங்களை புத்திமதிகள் வந்தடையும். அதனை எல்லாம் கேளுங்கள்
ஆனால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எண்ணினீர்களோ அதனை மறக்காதீர்கள். உங்களுக்கு என்று ஒரு நோக்கமும் இந்த சமூகம் எங்கே செல்ல வேண்டும் என்ற நோக்கமும் நமக்கு இருப்பது அவசியம். புத்திமதிகள் கெட்டவை அல்ல.அதனை எப்பொழுதும் உதாசீனபடுத்த முடியாது. எல்லாவற்றையும் எடுத்து கொள்ளவும் முடியாது.


உங்கள் மனதை எதையும் வைத்திருக்க வேண்டும். உங்களுக்கு வாழ்க்கையில் என்ன வேண்டும்? நீங்கள் ஏற்கும் படி எந்த விதத்தில் முன்னேறி இருகிறீர்கள்? இதை நீங்கள் கவனிப்பது அவசியம். அவ்வப்பொழுது நாம் நம் மனதை அலச வேண்டும்."நாம் எங்கே செல்கிறோம், எனக்கு எந்த வாழ்க்கையில் என்ன வேண்டும்? நாம் செய்தது சரியா? செய்ய போவது சரியா?" இதுபோன்ற நம்மை நாமே சரிபார்த்துகொள்வது அவசியம்.


கேள்வி : குருஜி, நீங்கள் நம் மனதில் வரும் எண்ணஅலைகளை பற்றி கூறினீர்கள். எப்படி வரும் நினைவலைகளை குறைத்துகொள்ளவோ அல்லது நிறுத்தவோ நாம் ஏதாவது செய்ய முடியுமா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: எண்ணங்கள் நம் உள்ளுணர்வின் ஒரு பகுதி, அவை வந்து வந்து போகும்
இந்த எண்ணஅலைகளிலிருந்து எப்படி விடுபடுவது? நான்கு வழிகள் உள்ளன.


உங்களுக்கு ஒரு அதிர்ச்சி ஏற்பட்டால் உங்கள் மனம் வெறுமையாகி விடும். இந்த அதிர்ச்சி
என்பது மின்சார அதிர்ச்சியாக கூட இருக்கலாம். நீங்கள் அத்தகைய அதிர்ச்சிக்கு உள்ளாக வேண்டும், எனக்கு அது விருப்பமும் இல்லை.ஒவ்வொரு அதிர்ச்சி தரும் நிகழ்வுகளும்
உங்கள் மனதை வெறுமை ஆக்கிறது.


இரண்டவது இசை. நீங்கள் பாடினாலோ அல்லது அத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டாலோ உங்கள் நினைவில் குறையும்.எந்த ஒரு வலுவான உணர்ச்சியும் உங்கள் நினைவுகளை அந்த நிமிடத்திற்கு குறைக்கும்.

மூன்றாவது உடற்பயிற்சி.நான்காவது பிராணயாமா, ஆழ்ந்த தியானம் என்ற இரண்டிலும் ஈடுபடுவது. இருந்தும் உங்கள் மனம் கெட்ட நினைவுகளை அசைபோடுகிறது என்றால் உங்கள் குடலில் எதோ பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம். நீங்கள் ஷன்க் பிரக்ஷலன் (குடலை சுத்தபடுத்துதல்) செய்ய வேண்டும். அது உங்களுக்கு உதவும். அது உங்கள் மனதை அமைதி படுத்தும். ஆனால் பிராணயாமம் ஆழ்ந்த தியானம் இரண்டும் மிக சிறந்தது.


கேள்வி: குருஜி, அடிப்படையில் அல்லது மையத்தில் நாம் அனைவரும் ஒன்றே. ஒரு சிலர் தன்னைப்பற்றியும் ஆன்மிகம் பற்றியும் அறிந்துகொள்ள ஏங்கும்போது வேறு சிலர் அப்படி இருப்பதில்லையே. ஏன்? அவர்களுக்குள் இருப்பதும் அதே ஆன்மாதானே?


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: அது மாறும், பாருங்கள். வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறு ஆர்வம் இருக்கும். சிலர் கணிதத்தில் ஈடுபாட்டுடன் இருப்பார்கள். பாவா (குர்ஷேத் பாட்லிவாலா) வைக் கேளுங்கள். கணிதத்தில் மிகுந்த ஈடுபாடுள்ள அவர் கணிதத்தில் (a + b )2 =(a2+2ab=b2) பற்றி ஒரு வீடியோ  தயாரித்துள்ளார். அந்த வலைதளத்திற்கு இரண்டரை லட்சத்திற்கு மேல் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே, பாவா ஒரு கணித மேதை; அவர் அதில் ஆர்வம் காட்டுகிறார். டி.கே.ஹரி வரலாற்றில் ஆராய்ச்சி செய்துள்ளார். அவர் ஊழல் பற்றி 'U turn India" என்னும் புத்தகம் எழுதியுள்ளார் இந்தியா எவ்வாறு ஒரு திருப்பத்தை அடைந்து பொருளாதாரத்தில் மேம்பட முடியும் என்பதற்கான ஒரு சிறந்த நன்கு சிந்திக்கப்பட்டஒரு திட்டம் அது.மொத்த நாட்டின் பொருளாதாரத்தை அதன் அடிப்படையிலிருந்து மாற்றக்கூடியது . இயற்கையான நதி என்று நாம் நினைத்துக்
கொண்டிருக்கும் கங்கை நதி மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை நதி என்று அவர் அனைத்து ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளார்.bharatgyan.com என்னும் வலைத்தளத்திற்கு சென்றால் ஹேமா,ஹரி இவர்களுடைய அற்புதமான வேலையைப் பார்க்கலாம்.

எனவே ஆர்வம், அறிந்து கொள்ளும் ஆவல், நான் யார்? என் விழிப்புணர்வு என்பது என்ன? தான் என்னும் தன்மை என்ன? நான் என்பது யார்? நான் உண்ணுகிறேன், உறங்குகிறேன் ; குடிக்கிறேன. ஆனால் இறுதியில் நான் யார்? ஒரு நாள் நான் இறக்கப்போகிறேன் . மரணத்திற்குப்பிறகு எனக்கு என்ன ஆகும்? நான் எங்கே போவேன்? இது போன்ற கேள்விகள் சிலரிடம் உண்டாகின்றன.இக் கேள்விகள் மிகவும் இயற்கையானவை. அறிவின் முதிர்ச்சியை காட்டுபவை.


அறிவின் முதிற்ச்சியடைந்தவர் மட்டுமே ஆன்மீகத்தின் ஆழத்திற்குச் செல்ல முடியும். ஆன்மீகத் தேடல் அப்பொழுதுதான் உண்டாகிறது. இந்தியா பொருள் வளம் நிறைந்திருந்த போது ஆன்மிகம் தழைத்தது. ஆன்மிகம் அதன் உச்சியில் இருந்த போதுதான் இந்தியா பொருள் வளம் நிறைந்திருந்தது. ஆனால் இன்று இரண்டிலும் கீழ்நோக்கிச் சென்றுள்ளது. ஒரு திருப்பம் தேவை.

கேள்வி: குருஜி, கவலையைக் கையாளச் சிறந்த வழி இருக்கிறதா? நான் சிறு வீட்டு வேலைகளுக்கு கூட மிகவும் கவலை கொள்கிறேன்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: உஜ்ஜெய் மூச்சுப்பயிற்ச்சி செய்யுங்கள். ஒரு நாளைக்குப் பல முறை அவ்வப்போது செய்து கொண்டிருங்கள். பயிற்சியின் ஆரம்பத்திலிருந்தே கவலை குறைந்து வருவதை உணரலாம். தொடர்ந்து தியானமும் செய்து வாருங்கள்..


கேள்வி: அன்புள்ள குருஜி! ஒரு கேள்விக்கு பதில் கூறுகையில், நீங்கள் திரைப்படங்களை பார்ப்பதால் ஆற்றல் குறையும் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.ஆனால் உங்களை பார்த்து கொண்டிருந்தால் ஆற்றல் கூடுவதை உணர்கிறேன்.


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: அது சரி! அது உங்கள் அனுபவம்.பொதுவாக திரை அரங்குகளுக்குள் மக்கள், உற்சாகமாகவும், ஆற்றலுடனும் செல்கிறார்கள். திரும்பும்போது பாருங்கள்! களைப்பாகவும் சோர்வாகவும் காணப்படுகிறார்கள். அவர்களது உற்சாகமெல்லாம் வடிந்து விடுகிறது அல்லவா? திரைப்படங்களே பார்க்கக்கூடாது என்று நான் கூறவில்லை. அதிகமாகவும் அடிக்கடியும் பார்க்க வேண்டாம்.கவனித்து கொள்ளுங்கள் நடப்பு செய்திகளை அறிந்து கொள்ளவேண்டும்,ஆனால்
ஒரே மாதிரியான வன்முறை, குடும்ப சண்டைகள் போன்றவற்றை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டாம்.ஒரு நன்முறை பயிற்சியாளருக்கு அது நல்லதல்ல.


கேள்வி: குருஜி! கேட்பதற்கு எந்த கேள்வியும் என்னிடம் இல்லை. நான் உங்களை நேசிக்கிறேன். எல்லாவற்றுக்கும் உங்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன். குருஜி! நீங்கள் என்னிடம் ஏதாவது
கூற விரும்புகிறீர்களா?


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நான் கூறிக்கொண்டேதான் இருக்கிறேன். என்ன சொல்ல விரும்புகிறேனோ அதை விடாமல் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். சரியா ?


கேள்வி:( பார்வையாளர்களில் ஒருவர் ஒலிவாங்கியில் பேசாததால் சரியாக பதிவாகவில்லை)


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: வருங்காலம் விதிப்படி என்று எண்ணாதீர்கள். கடந்த காலம் விதிப்பயன். வருங்காலம் சுயேச்சையான மனப்போக்குப்படி . நிகழ்காலத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்.இது
தான் புத்திசாலித்தனமான வாழ்க்கை.. முட்டாள்கள்தாம், கடந்த காலத்தை பற்றி வருந்திக் கொண்டும், வருங்காலம் விதிப்படி என்றும் நிகழ்காலத்தை மகிழ்ச்சியற்றதாக ஆக்கிக் கொள்கிறார்கள். உங்களுக்கு தேர்ந்தெடுக்க இரண்டு வழிகள் உள்ளன. புரிந்ததா?


கேள்வி: குருஜி! சிவலிங்க தத்துவம் என்ன?


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: அன்பே சிவம்.எங்கும் நிறைந்தது சிவம்.எது ஒன்று எங்கும் நிறைந்துள்ளதோ, அதை  எவ்வாறு அடையாளம் கண்டுகொள்வது?அந்த அடையாளகுறியே சிவலிங்க வடிவம். எல்லாம் வல்ல கடவுளை அந்த உருவ வடிவமைப்புக்குள் சுருக்க முடியாது.அந்த உருவம் நமக்கு கடவுளை நினைவுபடுத்துகிறது. நீங்கள் உங்கள் பாட்டனார் புகைப்படத்தை பார்த்து "இது என் தாத்தா'' என்கிறீர்கள். உங்கள் தாத்தா, பாட்டி, அம்மா ஆகியோரின் புகைப்படங்கள் உங்களுக்கு அவர்களை நினைவுபடுத்துகின்றன.ஆனால் அப்படங்கள் அவர்களாகமாட்டார்கள் அல்லவா?அது போல உருவ வடிவங்கள் உருவத்திர்கப்பாற்பட்ட கடவுளை நினைவுபடுத்துகின்றன.


கேள்வி: இஸ்லாமிய ,கிருத்துவ சமயங்களுக்கும் அது போல் கிருத்துவ, ஹிந்து சமயங்களுக் கிடயிலும் ஒற்றுமைகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஹிந்து புத்த சமயங்களுக்கிடையே ஒற்றுமைகள் உள்ளனவா?


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆம்! நிச்சயமாக! கௌதமபுத்தர் இந்துவாக பிறந்து துறவறம் பெற்றவர்.
புத்தர் உபதேசங்கள் யாவும் அநேகமாக உபநிஷதங்களில் கூறப்பட்டவை. ஹிந்து சமயம்
நிறைய சடங்குமுறைகள் கொண்டதாக இருந்தது. அச்சடங்குகளையும் , யாகங்களில்
விலங்குகள் பலியிடப்படுவதையும் தவிர்க்குமாறு புத்தர் கூறினார். தவிர, தியான முறைக்கு மக்களை அழைத்து சென்றார். கடவுளர்கள் அனைவரும் நம்மை காக்கட்டும், அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று புத்தர் கூறினார். அதுவே உபநிஷதங்களிலும் கூறப்பட்டிருக்கிறது.


கேள்வி: ஏன் இலங்கைத்தமிழர்கள் இன்னும் துன்பப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்?அவர்களுக்கு எதிர்மறை கர்மவினைகள் அதிகமாக இருக்கின்றனவா?


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: '' ஏன்'' என்ற கேள்வியை விடஎன்ன செய்யலாம்என்று கேளுங்கள். அவர்கள் துயரின் காரணம் நமக்கு தெரியாது. நமது ஆஸ்ரமத்திலிருந்து சுவாமி சத்யஜோதா மற்றும் தொண்டர்கள் இலங்கை தமிழர்களுக்காக பணி புரிந்து  கொண்டிருக்கிறார்கள். நீங்களும் அவர்களுடன் இணைந்து செயல்பட்டு நாம் அனைவரும் இலங்கையை பழைய நிலைக்கு கொண்டு வருவோம்.


கேள்வி: குருஜி ! நான் இந்த மயிலிறகுகளை தங்களுக்கும் அன்னாஹசாரே அவர்களுக்கும் கொடுக்க விரும்புகிறேன்.


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: அவற்றை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். நீங்களும் பறக்க வேண்டும். பறக்க கற்றுக்கொள்ளுங்கள்! நாங்கள் ஏற்கனவே பறந்து கொண்டிருக்கிறோம்! நான் இறகுகளை பெற்றுக்கொள்வதில்லை. கொடுக்கவே விரும்புகிறேன்!