ஆழ்நிலை தியானம் என்பது எதுவுமாக இல்லாமல் யாருமாக இல்லாமல் இருப்பது


06, பிப்ரவரி, 2012,
  
கேள்வி: ஒரு அன்னையாக நான் என் குழந்தைகளை தகவல் அடிமைகளாக இல்லாமல் சிறந்த 
படைப்பாற்றல் மிக்கவர்களாக  செய்வது எப்படி?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: அதிக அளவு மக்கள் தொடர்பு ஏற்படுத்துவதன் மூலம் தான்.உங்கள் குழந்தைகளை நிறைய குழந்தைகளுடன் விளையாட விடுங்கள்.  சில சேவைகளை செய்ய வையுங்கள்.  வேலை செய்ய வையுங்கள்.அனைத்து சமுதாய பொருளாதார நிலையிலுள்ள மக்களுடனும் 
பழக விடுங்கள். 

கேள்வி: நான் ஒரு மாணவி, என் பெற்றோர்களை என்னுடைய  தர்மம் என்னவென்று கேட்டால் படிப்பு மட்டும் தான் என்று சொல்கிறார்கள்,விளையாட்டும் தர்மத்தின் பகுதி இல்லையா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆமாம். படிக்கும் நேரத்தில் படிக்கவும்.விளையாடும் நேரத்தில் விளையாடவும்

கேள்வி: குருஜி, நான் உங்களுடைய வேலையைச் செய்தால் என் தீயகர்மாவிலிருந்து 
தள்ளுபடியும். நல்ல கர்மாவில் கூடுதல் போனசும் கிடைக்குமா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்:  நிச்சயமாக.

கேள்வி: குருஜி! இறைமை உணர்வுள்ளவர்கள் விரும்புவது கிடைக்கும் என்று கூறுவீர்கள்.அது உண்மை.ஆனால் ஆன்மிகமும் இறைபற்றுதலும் இல்லாதவர்களுக்கும்,எந்த பிரச்சினையும்
இல்லாமல் அவர்கள் விருப்பங்கள் நிறைவேருகின்றனவே?அப்போது என்ன வேறுபாடு?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: அவர்கள் எப்படி உணருகிறார்கள் என்று கேளுங்கள்?  நீங்கள் ஆன்மீக மார்கத்தில் சார்ந்து விழித்திருக்கும் போதும் அதிக மகிழ்ச்சியாக உணருவீர்கள். உங்கள் வாழ்க்கையை திரும்பிப் பாருங்கள்.

தியான பயிற்சி ஆரம்பிக்கும் முன் உங்களுக்கு கிடைத்த அளவு ஆனந்தம் இல்லையல்லவா?
அப்போதும் நீங்கள் பல ஊர்களுக்கு சென்றீர்கள் இயற்கை சூழலைஅனுபவித்தீர்கள்.ஆனால்
இப்போது தியானத்திற்க்கு பிறகு ஆன்மீக ஞானத்தை அடையும்  பாதையில் உங்கள் அனுபவம் வேறாகத்தான் இருக்கிறது.

கேள்வி:சிவலோகம், பிரம்மாலோகம், விஷ்ணுலோகம் என்பவை என்ன? இவை ஒன்றுடன் ஒன்று எவ்வாறு வேறுபடுகிறது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: பல உலகங்களும்,கால பரிமாணங்களும் உள்ளன.ஆகவே,இப்புவியில் ஒரு 
ஆண்டு என்பது பித்ரு உலகத்தில் ஒரு நாள் என்று கூறப்படுகிறது.இதில் ஆறு மாதங்கள் ஒரு 
பகலாகவும் ஆறு மாதங்கள் ஒரு இரவாகவும் கணக்கிடப்படும்.நீங்கள் வானியல் மாணவராக 
இருந்தால் பல்வேறு கால பரிமாணங்களை கண்டு வியப்பீர்கள்.பழமையான வானியல் மற்றும் நவீன வானியல் இரண்டையும்  அறிய வேண்டும்.காலம் மற்றும் வாழ்கையின் பல பரிமாணங்களை பற்றிய பல செய்திகளை தெரிந்து கொள்ளமுடியும். உதாரணமாக இன்று நீங்கள் காணும்நட்சத்திர ஒளி இன்று ஏற்பட்டதல்ல.அது நான்கு வருடங்களுக்கு முன் நட்சத்திரத்தில்
இருந்து வெளிப்பட்டது.இதை நீங்கள் கேள்விபட்டதுண்டா?

கேள்வி:தொழில்ரீதியான இந்த உலகத்தில் எப்படி வாழ்வது? மக்கள் அவர்களுக்கு தேவைப்படும் போது மட்டுமே சிநேகமாக இருக்கிறார்கள். நான் மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டது போல் உணருகிறேன். இன்று தொழில்மயமான மனப்பான்மை
யில் அன்பில்லை,உண்மையான புன்னகையுமில்லை என்ன செய்வது?

நீங்கள் கொடுங்களேன், அவர்களிடம் இல்லையென்றாலும் உங்களிடம் உள்ளது.எனவே நீங்கள்
ஒரு நிலவைப் போல் பிரகாசிக்கலாமே... 

கேள்வி: குருஜி, மரணத்தைப் பற்றி தெரிந்து கொள்ளாமல்.நான் வாழ்வைப்பற்றி தெரிந்து கொள்ள முடியாது என நினைக்கிறேன். நான் உயிருடன் இருக்கும்போதே மரணத்தைப் பற்றி அறிந்து கொள்வது எப்படி என்று தயவு செய்து சொல்லுங்கள்?

ஸ்ரீ: ஆழ்நிலை தியானம்,எதுவுமாக இல்லாமல்,யாருமாக இல்லாமல் இருப்பதை போன்றது .

கேள்விகுருஜிநான் என் ஆன்மாவிற்கும் சமுதாயத்திற்கும் இடையில் மாட்டிக்
கொண்டேன் வஞ்சனையான பாசாங்குக்கார சமுதாயத்தை என் மனம் வெறுக்கிறது. இந்த சமுதாயத்திற்கு விடுதலையடைந்த பரந்த மனம் உள்ளவர்களைப் பிடிக்கவில்லை. நான் எதை தியாகம் செய்வதுஆன்மாவையா அல்லது இந்த சமுதாயத்தையா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீங்கள் எதையும் தியாகம் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் உங்கள் ஆன்மாவின் படி நடந்துகொண்டே சமுதாயத்தில் வெற்றியும் அடைவது தான்  திறமை.
முடிவற்ற ஒன்றை முடியக்கூடிய ஒன்றில் நிரப்புவதே இந்த வாழ்க்கை ஆகும்நம் உடல் அழியகூடிய  ஒன்று ஆன்மா முடிவில்லாதது. அவை இரண்டும் இணைந்திருப்பதே நுட்பம்.அதுவே யோகா அதுவே  செயலில் திறமை.

கேள்வி: 2012 பற்றிய உங்களுடைய கருத்து என்னஒரு ஜப்பானிய இளவரசியும் மற்றும் பல தகவல்களும் சொல்வது மூன்று நாள்கள் தொடர்ந்து இருள் சூழ்ந்து இருக்கும் என்பதாகும்இது உண்மையா?

Dr.D.K. ஹரி,அவர்கள் எழுதிய 2012 புத்தகத்தை வெளியிட்டேன்அதனை நீங்கள் படியுங்கள்அது இன்டர்நெட்டில்ஆன்லைனிலும் கிடைக்கும்.2012 ஆண்டை குறித்த அறிவியல் ஆராய்ச்சியும் அது என்ன சொல்கின்றது என்பதைமாயன் கால அட்டவணை எப்படி உருவானது என்பதையும் தெரிவிக்கிறது.

உங்களுக்கு தெரியுமா ?மாயன்கள் இருந்தார்கள்அவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள்
இராவணன் மாயன் வம்சத்தவன்.நான் முழுதாக படிக்கவில்லைநோட்டம் விட்டேன்.அந்த 
புத்தகம் மிகவும் அழகாவும்விவரமாகவும் உள்ளதுஆகையால் நீங்கள் நிச்சயம் படிக்க
வேண்டும்நிறைய விளக்க படங்களும் உள்ளது.நான்சொல்கிறேன்,ஒன்றும் நடக்க
போவதில்லைஉலகம் காணாமல் போக போவதில்லைஇன்றைக்கு இருப்பது போல
தான் என்றும் இருக்கும்.

இந்த கேள்வி உண்மையா அல்லது மாயையா? முதலில் நீங்கள் அதை கூறுங்கள்? உங்கள் கேள்வி உண்மையானது என்றால் என் பதிலும் உண்மை தான்.உங்கள் கேள்வி மாயை என்றால் மாயை தான். உங்களுக்கு கேள்வி ஞானம் மூலம் எல்லாம் அறிய வேண்டும் என்பதும் மாயைதான். பின்னர் அதற்கு ஒரு பதில் அவசியமில்லை, புரிந்ததா? இதற்கு இரண்டு கோணங்கள் உள்ளது.ஒன்று அளவுகளின் கோணம் அணுவின் அளவுக்கு சென்று பார்த்தால் எல்லாமே ஒன்றுதான். குவாண்டும் மெக்கானிக்ஸ்,எல்லாமே சக்தி ரூபம் என்ற கொள்கைபடி பார்த்தால்அணுக்களால் ஆனவை தான்.தரை,நாற்காலி, கதவு, ஜன்னல் என்று எல்லாமே ஒரு பொருளை கொண்டு தயாரானவை.பழைய அளவில் பார்த்தால் எல்லாமே வேறுதான். நாற்காலியும் கதவும் வேறு வேறு. நாற்காலி என்று நினைத்து கதவில் உட்கார முடியாது அதே போல் நாற்காலியை கதவாக உபயோகிக்க முடியாது. அதனால் எல்லாமே வேறுதான். வேதியலில் கால அளவு மூலக அட்டவணை பல்வேறு மூலகங்களை பற்றி கூறுகிறது. 

பெளதிகத்தில் எல்லாமே ஒரு அலையின் இயக்கம்இது இரண்டும் உண்மை மட்டும் 
அல்லாது தேவையும் கூடபுரிந்ததா?ஒன்று த்வைதம் மற்றொன்று அத்வைதம்.பகவத்கீதைஇதை இரண்டையும் இணைகிறதுமுதலில் நம்மை அத்வைதத்திற்கு அழைத்து சென்று 
பின்னர் த்வைததோடு இணைக்கிறது –இந்த இரட்டை தன்மை உங்களுக்கு எல்லா வற்றையும் புரியவைக்கிறது.