தியானம் என்பது சப்தத்திலிருந்து நிசப்தத்திற்கு செல்வது


பிப்ரவரி 04, 2012


சர்வதேச மகளிர் மாநாடு௧, நிகழ்ச்சியினை முன்னிட்டு இசைக்கலைஞர் இங்க்ரிட்த் நிகழ்த்தும் இனிய பியானோ இசையுடன் சத்சங்கம் துவங்கியது..


தியானம் என்பது சப்தத்திலிருந்து நிசப்த்தத்திற்கு செல்வது. பியானோ இசைக்கப்படும்போது நாம்  என்ன செய்யலாம்? நாம் நம் கண்களை மூடி. ஓய்வாக அப்படியே இசையில் மூழ்கலாம். நாம்  இசையையும் தியானத்தையும் ஒன்று சேர்க்கலாம்.தியானம் என்பது என்ன? ஆழ்ந்த ஓய்வு நிலை.  எனவே நாம் கண்களை மூடி உடலைத்தளர்த்தி அமர்ந்து இசை நம்முள்ளே ஊடுருவிச் செல்ல அனுமதிப்போம்.நம் உடல் ஏற்கெனவே வெற்றிடமாகவும் காலியாகவும் தான் இருக்கிறதுஇசை அவ்விடத்தை  நிரப்பட்டும். ஒரு சில நிமிடங்களுக்கு அனைவரும் அமருவோம்ஓய்வு எடுப்போம்


தியானம் செய்வோம்.நீங்கள் இசையை கேட்கும்போது இசையுடன் ஒன்றி யிருப்பது நல்லது. பொதுவாக நாம் வானொலி அல்லது தொலைக்காட்சிப்பெட்டியை இயக்கி விட்டு விட்டு ஏதாவது பேசிக் கொண்டிருக்கிறோம்.இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்போது நாம் நம் கண்களைத் திறந்து வைத்துக்கொண்டு இங்கும் அங்கும் என்ன நடக்கிறதென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கி றோம்.அதனால் நாம் இசையை முழுவதும் கிரகித்துக் கொள்வதுமில்லை அதன் நூறு சதவீத பயனை அடைவதுமில்லை.என்னைப் பொறுத்தவரை நாம் இசையை கேட்கும்போது கண்களை மூடி ஓய்வாக இருக்க வேண்டும்.புல்லாங்குழல் இசையைக் கேட்கும்போது அதன்இசை  நமக்குள் பாய்வதை உணர வேண்டும்.இசையின் மூலமாக  நாம் அமைதியைப் பெறலாம்.அதே போல் பியானோவின் இசை கூட நல்ல அமைதியான நிலையையும் தியான நிலையையும் அளிப்பதாக இருக்கலாம்.இந்த விதத்தில் இசையைக் கேட்பதே சிறந்த கலை.

கேள்வி:  குருஜி, குழந்தைகளுக்கு அளிக்கப்பட வேண்டிய சிறந்த அறிவுரை என்ன? 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: கடவுள் புன்னகை என்னும் மிகப் பெரிய பரிசினை உங்களுக்குக் கொடுத்திரு க்கிறார்.அதனைப் பெரியவர்கள் கைவிட்டுவிட அனுமதிக்காதீர்கள். நீங்கள் பெரியவர்களாகும் போதும் அதனை அப்படியே பத்திரமாக வைத்திருங்கள். உங்கள் வேர்களை ஆழப்படுத்துங்கள். உங்கள் நோக்கை விரிவுபடுத்துங்கள். 

வாழ்க்கை ஒரு மரம் போன்றது.  வேர்கள் பழமையானவை.இலந்துளிர்கள் புதுமையானவை.  வாழ்க்கை பழமையும் புதுமையும் கலந்து இருக்கவேண்டும். வெறும் பழமையும்  நல்லதல்ல.  வெறும் புதுமையும் நல்லதல்ல.பழமையும் புதுமையும் சேர்ந்ததே வாழ்க்கை நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?