இயற்கையின் நியதிகளை மீறினால் நாம் துன்பப்படுவோம்

 
பிப்ரவரி, 01 2012
கே: அர்க்க்யத்தின் முக்யத்வம் என்ன?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்:நீர் அன்பின் அடையாளம் சமஸ்கிருதத்தில் அது அன்பின் அர்த்தமாக சொல்லப் படுகிறது.அப என்றால் தண்ணீர்,அன்பு.அதனால்தான் உங்களுக்கு மிகவும் நெருங்கியவரை அப்தா என்கிறோம்.அப அப்தா இரண்டும் மிகவும் நெருங்கியது நீரை கொடுப்பது முக்கியமல்ல, சூரியனுடன்  உள்ள தொடர்பினை உணர்வதே முக்கியமானது.
மக்கள் கைகளில் நீரை வைத்துக்கொண்டு நீரை கைகளிலிருந்து வெளியேர விடுவர்.அதே சமயத்தில் சூரியனையும் பார்த்துக்கொண்டே இருப்பார்கள்.நீங்களும் அவ்வாறே செய்து பாருங்கள்.நேர கணிப்பு தெரிய வேண்டும்..இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் நீர் வழிந்துவிடும்.அது வரை நீங்கள் சூரியனைப்பார்த்துக் கொண்டிருப்பீர்கள்.அதனால் உங்கள் உடல் சக்தி பெரும்.அதுதான் இதன் பயனுள்ள நுணுக்கம் .சூரியனுக்கு வெறுமனே தண்ணீர் கொடுப்பது நோக்கம் இல்லை. . .

கே: குருஜி, இந்த பிரபஞ்சம்,இயற்கையும் ,பரம்பொருளும் இணைந்து ஸ்ரிஷ்டிக்கப்பட்டது என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள்.பூரண ஆனந்தம் என்று சொல்லப்படும் பரமாத்மாவிற்கு இந்த எண்ணம் எவ்வாறு அவருள் தோன்றியது ?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: உபநிஷங்களில், பரமாத்மா மட்டும் முதலில் தனியாக இருந்தார்,அவர் தனித்து இருந்ததால் ,பலவாறாக ஆக விரும்பினார்.,பலவாறாக ஆனார் என்று இருக்கிறது. இந்த எண்ணம் தானே தோன்றியதுதான் .இது விலக்கு இல்லை ஒரு சாதகர், சிறிய அறிவிலிருந்து, பெரிய மன உணர்வுக்குப்போகும்போது, சங்கல்பம் ஒரு தடையாகத் தெரியும் ஆனால் அது மேலும் அடுத்த நிலைக்கு போவதற்கு ஒரு படியாகும். ஏன் இந்த எண்ணம் பரமாத்மாவிற்கு எழுந்தது என்றால், அவர் மனம் ஒரே நிலையாக இருப்பதற்காக(நிர்விகல்ப)அப்படி இல்லை.சங்கல்பம், நிர்விகல்பம், விகல்பம் ஆகிய எல்லாம் அவரே.(உறுதியான எண்ணங்கள் அறவே இல்லாத நிலை, அதற்க்கு எதிர் மறையான நிலை).
ஒரு சமுத்ரத்தில் அலைகள் தானாகவே எழுகிறது.அதே போல் பரமாத்மாவுக்கும் தான் பலவாறாக வேண்டும் என தோன்றியது. அவரும் பலவாறாக மாறினார் ஆகையால் பல விதமான இயற்கைகள்,வித்யாசமானமனிதர்கள்,வெவ்வேறானஜீவராசிகள்வித்தியாசமானஅறிவுக்கூர்மையோடு தோற்றுவிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் நேஷனல் ஜிகிராபிக் குறும்படம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன் அதன் படி 400 பில்லியன் வருடத்திற்கு முன் வாயு மட்டுமே இருந்தது.அது சுழன்று நெருப்பு வெடித்தது. அதிலிருந்து நீரும், பின்னர் பூமியும் ஏற்ப்பட்டன. நான் திடீரென்று உணர்ந்தேன் :!இது வேதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது புதிதாக இவர்கள் என்ன சொல்லிவிட்டார்கள்? வேதத்தில் சுலோகமாக:அண்டத்தில் முதலில் காற்றும்,அதிலிருந்துநெருப்பும்,நெருப்பிலிருந்துநீரும், நீரிலிருந்து பூமியும் உண்டாக்கப்பட்டன நெருப்பிற்கு,நீரைகொடுப்பதன் நோக்கம்,நாம் பின்னோக்கிப்போகிறோம். நீரிலிருந்து நெருப்பிற்கு,நெருப்பிலிருந்து காற்றிற்கு,பின் பிராணாயாமம் செய்து பிறகு சூரியனுக்கு அர்க்யம்அளிக்கிறோம்.அளித்தபின்,காற்று,அதிலிருந்துஅண்டவெளி,பின்த்யானத்தில்அமர்கிறோம.இவை மாதிரியாக வித விதமான கருத்துக்கள் அவைகளை ஆழ்ந்து ஆராய்ந்தால், புதிய சில கருத்துகள் புலப்படும்.
  

கே:நாம் நம்முடைய இறந்த பெற்றோர்களின் படங்களை ,நாம் வணங்கும் தெய்வங்களின் படங்களோடு வைக்ககூடாது என்று சொல்லப்படுகிறது.சிலர் நம் இல்லங்களில் இறந்த பெற்றோர்களின் படங்களை மாட்டவேகூடாது என்கிறார்கள். இது உண்மையா ?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்:இதில் ஒரு பிரச்சனை இல்லை.இறந்த பெற்றோர்களின் படங்களை நாம் வணங்கும்தெய்வங்களின் படங்களோடு வைக்கலாம் சன்யாசி ஆக இருந்தால் கடவுள் படத்தோடு அவர்உயிருடனிருக்கும்போதேவைக்கலாம்.ஆனால்அவர்க்ரிஹச்தராக இருந்தால் மாட்டுவதில்லை. இது தான் நடைமுறை.

கே: தயவுசெய்து கஷ்டங்களின் காரணங்களை தெளிவுபடுத்துங்கள்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இன்று நீங்கள் ஐந்து மசாலா தோசையோ, 20 பூரியோ சாப்பிடவேண்டும் என்று நான் சொன்னால் உங்களுக்கு என்ன ஆகும்?முதலில் நீங்கள் கஷ்டப்படுவீர்கள் இரவு தூங்க முடியாது.தலைவலி,வயிற்றுவலி பிற வலிகள் வரும் இயற்கையின் நியதிகளை எதிர்த்தால் நாம் கஷ்டப்படுவோம்.இரண்டாவது,அறியாமை.-நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்று தெரியாமல் தவறானவற்றை சாப்பிட்டாலும் கஷ்டப்படுவீர்கள். மூன்றாவது, பழைய முந்தைய பிறவிகளில், நியதிகளை எதிர்த்திருந்தாலும்,ஊழ்வினைஏற்ப்படும்.அதனால் கர்மாவும்,அறியாமையும் தவறும் கஷ்டங்களைக்கொடுக்கின்றனஅறியாமையைஎப்படி ஒழிப்பது? அறிவாலும், புரிந்து கொள்வதாலும் இவ்வாறு கேள்விகள் கேட்ப்பதாலும் தான்... .

கே: உண்மையாக மன்னிப்பது எப்படி ?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: உண்மையாகவா ? பொய்யான மன்னிப்பு என்று உண்டா? எனக்கு தெரியாது. உண்மையாக மன்னிப்பது தான் எனக்குத்தெரியும் .மன்னிப்பது என்பது நடந்தது நடந்து விட்டது. மக்கள் தவறுகள் செய்கிறார்கள் .மேலே செல்லுங்கள்., ஏனென்றால் உங்களுடைய ஈடுபாடு சில விருப்பங்கள் மேல் .அது மற்றவர்களுடைய தவறு இல்ல.சிலர் உங்களுக்கு ஏதாவது தவறு செய்திருந்தால் அதை மன்னித்துவிடலாம் .ஆனால் மகிழிச்சியை கொடுத்திருந்தால் அந்த இன்பம் மீண்டும் தேவை என்ற ஏக்கம் வரும்.அது ஒரு மாயை என்று நினைத்தால் நீங்கள் முக்கியத்துவம் அடைவீர்கள் .
கே::2012 யின் தனித்தன்மை என்ன ?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நமக்கு ஒவ்வொரு நாளுமே சிறந்தது தான் ஒவ்வொரு வருடமும் சிறந்தது தான் .இந்து நாள்காட்டியின்படி, அடுத்த வருடத்தின் பெயர் :"நந்த :":நந்த என்றால் மகிழ்ச்சி. ஆனந்த வருடம். மார்ச் 23 இல் முடியக்கூடிய வருடத்தின் பெயர் :"கர" கர என்றால் கட்டாயம், நிச்சயம் முந்திய வருடம் நிச்சயமில்லாதது ,இந்த வருடம் "நிச்சயம்",அடுத்த வருடம் "சந்தோசம்" .

கே:ஆத்மாதுன்பத்தையும்,சந்தோஷத்தையும்உணர்கிறதா,அல்லதுமனதுஅவைகளை உணர்கின்றனவா ?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்:மனதுதான் உணர்கிறது.எல்லா உணர்வுகளும் மனத்தால் தான் ஆத்மாவின் உணர்வுகளும் மனத்தளவில் தான் .மனது அமைதியாக இருந்தால்,ஆத்மாவை உணரலாம். ஆத்மா மகிழ்ச்சியின்பூரணத்துவம்.மனதுகவலையைஉணர்கிறது.மனதுஆன்மாவில்இரண்டற கலக்கும்போது மகிழ்ச்சியை உணரமுடியும்.
கே:மனதுக்கும் ஆத்மாவிற்கும் உள்ள எல்லை என்ன?எதுவரை மனது இருக்கும் எதிலிருந்து ஆத்மா தொடரும் ?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: சமுத்ரமும் அலைகளும் போல்,சமுத்ரத்தில் அலைகள் இருப்பது போல், மனது ஆத்மாவில் இருக்கிறது..அதற்க்கு தனித்துவம் கிடையாது .அது சமுத்ரத்தில் உள்ள அலையைப் போன்றது .சிறிது மேலே வரும், அடங்கும், மேலே வரும் ,அடங்கும்.
கே:குருஜி,ஏன் சிலர் வாழ்க்கை முழுதும் துன்பப்படுகிறார்கள்?சிலர் குடிசையில் பிறந்து கஷ்டப்படுகிறார்கள்,சிலர் நல்ல வீடுகளில் பிறந்து சௌக்கியமான சந்தோஷமான வாழ்வு வாழ்கிறார்கள்?எனக்கு தெரிய வேண்டும்..நானும் மற்றவர்களும் கஷ்டப்படுகிறோம் .குருஜி நீங்கள் கஷ்டப்படுகிறீர்களா? உங்கள் கஷ்டமா , அல்லது மற்றவர்களுடயதா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்:நானும் கஷ்டப்படுகிறேன் நீங்களுமா?நீங்கள் சிரித்துக் கொண்டிருக்கிரீர்கள்!உங்கள் முகத்தைப் பார்த்தால் நீங்கள் மிகவும் துன்பபடுகிரீர்கள் என்று சொல்ல முடியாது. நீங்கள் சாதனா பண்ணும்போது உங்கள் முகத்தில் புன்னகை இல்லையா?துன்பப்படும்போதும் சிரிக்கிறோம்.அதுதான்வாழ்க்கைகஷ்டங்கள்போவதற்கேவருகின்றன.வந்தவுடன் போய்விடுகின்றன. எந்த பிரச்சனையும் எப்பொழுதும் இருப்பதில்லை. வந்து போய்விடுகின்றன .
கே: குருஜி ,மிண்டும் பிறப்பு இருக்கா ?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நிச்சயமாக .
கே: நான் உங்களுடைய பிடித்தமான சிஷ்யனாவதர்க்கு என்ன செய்யவேண்டும் ?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்:நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிரீர்களோ அதையே செய்யுங்கள் நீங்கள் இப்பவே எனக்கு பிடித்தமானவர் தான். சேவை ,சாதனா செய்யுங்கள் . சத்சங்கத்திற்கு வாருங்கள். ஆசிரியர் ஆகுங்கள் .மற்றவர்களுக்கு நல்லது செய்யுங்கள் .என்னுடைய சீடன் என்றாலே பிடித்தமானவர் தான் .அதனால் பிடித்தமான சிஷ்யன் பிடிக்காத சிஷ்யன் என்ற வித்யாசம கிடையாது புரிந்ததா? .