நிகழ் தருணமே ஞானத்தின் நுழைவாயில்

புதன் கிழமை, 2 மார்ச் 2016,

பெங்களூரு ,இந்தியா


 குருதேவ், தாங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா ?

பார்க்க எப்படி நான் இருக்கிறேன்? சந்தோஷமாகக் காணப்படுகின்றேனா? நீங்கள் அனைவரும் இங்கு வந்திருப்பதில் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். மிகத்  தொலைவிலிருந்து பல சிரமங்களை ஏற்றுப் பயணம் செய்து இங்கு வந்திருக்கின்றீர்கள். எவ்வாறு நான் சந்தோஷமின்றி இருப்பேன்? உலகெங்குமிருந்து பலமணி நேர விமானப் பயணம் செய்து இங்கு வந்தடைந்திருக்கின்றீர்கள். நீங்களனைவரும் சௌகரியமாக சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

மனித உடலும் குதிரை முகமும் கொண்ட ஹயக்ரீவரிடமிருந்தே ஞானம் பிறந்தது என்று வேதங்களில் கூறப் பட்டுள்ளது. புனித நூல்களில் குதிரையின் முக்கியத்துவம் என்ன?

குதிரை அஷ்வா என்றழைக்கப் படுகிறது. ஸ்வா என்றால் நேற்று அல்லது நாளை. அஷ்வா என்றால் இப்போது (நிகழ் தருணம்) சமஸ்க்ருதத்தில்  இப்போது என்பதற்கும் குதிரை என்பதற்கும் ஒரே சொல்தான். அந்த அஷ்வா என்னும் சொல்லுக்கு இரண்டு பொருட்கள் உள்ளன.
1. இப்போது (நிகழ் தருணம்)
2. குதிரை
அனைத்து ஞானமும் நிகழ் தருணத்தில் ஏற்படுபவை என்பதற்குப் பதிலாக 

குதிரையிடமிருந்து வந்தது என்று கூறினார்கள். ஹயக்ரிவா என்பதில் ஹயா  என்றால் தலை என்பது பொருள். உங்கள் தலை நிகழ் தருணத்தில் இருந்தால் உங்கள் உள்ளேயிருந்து ஞானம் பிறக்கும். அனைத்து வாழும் கலை ஆசிரியர்களும் இதனை அனுபவித்திருப்பார்கள். அல்லவா? உங்களிடம் பயில்பவர்கள் என்ன கேள்விகள் கேட்கப் போகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியாது, ஆனால் அவைகளுக்கு உங்களால் விடையளிக்க முடியும். எங்கிருந்து அந்த ஞானம் வருகிறது? நிகழ் தருணத்தில் நீங்கள் இருக்கும் போது , கடல் போன்ற பாரம்பரிய ஞானத்துடன் நீங்கள் தொடர்பு கொண்டு அதனை உடனடியாக பதிவிறக்கம் செய்கின்றீர்கள். அவ்வளவு தான்

சந்தியாவந்தனத்தின் போது, நான் பிரம்மன் என்று கூறுகிறோம். ஆனால் அதன் பிறகு திசை வணக்கம் செய்கிறோம். இதன் பொருள் என்ன?

இவையெல்லாமே மனதை விடுதலையாக்கி வைத்துக் கொள்வதற்குத்தான். தொல்லை செய்யும் அனைத்து விஷயங்களிலிருந்தும்  நமது மனதை விடுவித்து கொள்ள வெவ்வேறு திசைகளையும் வணங்குகிறோம். விருப்பமிருந்தால் செய்யுங்கள், விருப்பமில்லையெனில் செய்யாதீர்கள் !  நம்மை விடுவித்துக் கொள்வதற்கான பயிற்சியே இது. அவ்வளவு தான் என்னால் கூற முடியும். இதை ஏற்படுத்திய அல்லது ஏற்படுத்தாத கடந்த கால மனிதர்களைப் பற்றி என்னால் எதுவும் பேச முடியாது. உங்கள் மனதை நன்கு அறிந்து அதனைக் காத்துக் கொள்ளுங்கள் என்று மட்டுமே என்னால் கூற முடியும்.

நாம் திரும்பத் திரும்ப நமக்கு நாமே நினைவு படுத்திக் கொள்ள வேண்டிய ஓர் மிக அழகான விஷயம் க்ஷமா (நிகழ் தருணத்தில் செயல் படுதல்) க்ஷமா என்பதன் பொருள்  உள்ளிலிருந்து பூரண அமைதி மற்றும் நடுநிலையில் இருத்தல் என்பதாகும். எப்படியென்றால்," என்ன வந்தாலும் சரி, இந்த மன அமைதி என்னும் என்னுடைய செல்வம் என்னை விட்டுப் போகாது, அது என்னில் பகுதியாகும்" என்பது போலாகும்.


க்ஷமா என்று உங்களுக்குள்ளேயே இருக்கும் செல்வத்தை எப்போதும் நீங்கள் எடுத்துச் செல்கின்றீர்கள். அந்த நினைவு எழுந்தவுடனேயே அமைதியின்றி  சலசலத்துக் கொண்டிருக் கும் மனம் உடனேயே எளிதாக அடங்கி விடும். வெளிப்படையாகத் தெளிவாகத் தெரியும் அசல் கண்ணாடி க்ஷமா . இன்று அது தெளிவாகத் தெரியவில்லையெனில் அது தூசி படிந்துள்ளது என்பதே காரணம். ஆனால் அது சரியாகி விடும். அனைத்து ரீங்காரமும் செயல்பாடுகளும் கண்ணாடி மீது படிந்துள்ள தூசியைப் போன்றது. கண்ணாடி  வெளிப் படையாகத் தெரியக் கூடியது சுத்தமானது என்று நினைவில் கொள்ளும்போது தெளிவு பிறக்கும். தியானத்தில் அதனை அறிவீர்கள். நீங்கள் தியானநிலையில் அமரும் போது, உள்ளே ஆழமாக, அப்பழுக்கற்று தீண்டப்படாமல் , வீணாகாமல்  அப்படியே இருக்கும் அமைதியே  நீங்கள் என்பதைக்  கண்டறிவீர்கள்