பயத்தை வெற்றி கொள்வது

ஞாயிற்றுக்கிழமை,07/13/2014,

மோன்ட்ரியல், கனடா


நான் இன்று ஒரு ஞானத்தை “டீவீட்” செய்யவேண்டும். எந்த ஞானத்தை பற்றி நாம் இன்று பேசலாம்? எனது முந்தைய “டீவீட்” படித்தீர்களா? என்ன அது? (சபையிலுள்ள ஒருவர் பேசினார்.) ஆம், “ஞானத்தினால் மகிழ்ச்சியை கொடுக்க ,மற்றும் துன்பத்தை துடைக்க  முடியவில்லை என்றால், வேறு எதுவாலும் முடியாது.” இது தான் முந்தைய “டீவீட்”. இன்று நாம் என்ன “டீவீட்” செய்யலாம்.           

(சபையிலுள்ள ஒருவர் கேட்டார், ஞானம் என்றால் என்ன?)

ஞானம் என்பது வெறும் தகவல் அல்ல. ஞானம் என்பது வெறும் கல்விமானாக இருப்பது அல்ல. ஞானம் என்பது உள்ளுர்ணர்வு, அதாவது எச்சரிக்கை மேல் நோக்கி உயர்தல்,மற்றும். இதை பற்றி யோசித்து, வெற்றிடத்தை நிரப்பிக் கொள்க. ஆகவே, நீங்கள் விவேகமுள்ளவர் ஆக இருந்தால், அதுவே தரமான உள்ளுர்ணர்வு ஆகும். எப்படி நீ ஞானத்தை பெறுவது? எவ்வாறு நாம் நமது உள்ளுர்ணர்வை அந்த நிலைக்கு உயர்த்துவது? நேரிடை மாறுதல் மூலமாகவோ அல்லது ஆன்மீக பயிற்சி மூலமாகவோ இது சாத்தியப்படுகிறதுதானாகவே  சிலர் விவேகம் உள்ளவர்களாக உள்ளனர். அவ்வாறு இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இல்லையா? யாரெல்லாம் இங்கு வந்து, அமர்ந்து மற்றும் தியானப்\ பயிற்சி,சத்சங் போன்ற அனைத்தும் உதவுகின்றன.

மக்களுக்கு பலவிதமான பயம் உள்ளது.

1. ஒதுக்கி வைப்பதால் ஏற்படும் பயம்.
2. நன்றி கடனால் ஏற்படும் பயம்.
3 .பொறுப்பினால் ஏற்படும் பயம்.
4. தெரியாததால் ஏற்படும் பயம்.
5. தோல்வியால் ஏற்படும் பயம்.
6. கைவிட்டு விடுவதால் ஏற்படும் பயம்
7. உண்மையை எதிர் கொள்ளும் பயம்.
8. பிரிவால் பயம்.
9. அவமானம் மற்றும் பிறர் கருத்துக்கு பயம்.
10. போதுமானவைகள் இல்லாததால் பயம்.

இது போல் ஒரு பட்டியல் தயாரித்து, ஒரே நேரத்தில் இவைகளிலிருந்து எவ்வாறு நாம் வெளி வருவது என்று பார்ப்போம். எல்லாவித பயத்திற்கும் காரணம், நாம் முடிவில்லாத ஒன்றுடன் தொடர்பு உள்ளவர்கள் என்று உணராததுதான். “நான் இந்த முடிவில்லாத ஒன்றின் ஒரு பகுதி” என்பதை மறந்து விடுவதால் தான் பயம் வருகிறது.அனைத்து இந்த பயமும், ஒரு பயம் தான்.அது இருக்க முடியாததாக இருக்கிறது. நீங்கள் சமுத்திரத்துடன் தொடர்பு உள்ளவர் ஆதலால், நீங்கள் எப்பொழுதும் இருக்கிறீர்கள்.

நீர்த்துளிகள் தான் பயம்,அது சமுத்திரத்திலிருந்து தனியாக இருப்பதாக எண்ணுவதால் தான். ஆனால், நீர்த்துளிகள் கடலோடு இருக்கும் போது, நீர்த்துளிக்கு பயம் கிடையாது. நீர்த்துளிகள் கடலில் இருப்பதால் அது எப்பொழுதும் அணையாமல் இருக்கிறது. பிரிவு பயத்தை கொடுக்கிறது. அனைத்தும் ஒன்றே என்று இருக்கும் போது, பயம் இல்லை.ஆகவே, எவ்வாறு பயத்திலிருந்து மீளுவது? எல்லாம் ஒன்றில் அடக்கம் என்பதை ஞாபகத்தில் கொள்வதால், பிறகு பயம் கிடையாது.