அமைதியான மனமே தெளிவான செயலுக்குத் திறவுகோல் ஆகின்றது

9 டிசம்பர் 2014,


பெங்களூரு ,இந்தியா

சற்று நேரத்திற்கு முன்னர், எனக்கு ஓர் எண்ணம் தோன்றியது.ஓர் அரசனுக்கு நண்பர்கள் இல்லை, ஒரு துறவிக்கு எதிரிகள் இல்லை. நண்பர்கள் இருந்தால் அது அரசனுக்கு அனுகூலம் அல்ல. அது போன்றே,ஓர் துறவிக்கு எதிரிகள் இருந்தால் அவரும் ஏதோ ஒரு விதத்தில் நஷ்டமடைவார். ஓர் அரசனுக்கு நண்பர்கள் இருந்தால், அவருடைய முடிவுகள் மக்களுடைய நலனைக் காட்டிலும் நண்பர்களுக்கு பாரபட்சமாக அமையக் கூடிய வாய்ப்பு உள்ளது. மிக அதிகமான நண்பர்கள் ஓர் அரசனுக்கு இருந்தால்,மக்களுக்குப் பாரபட்சம் இன்றி இருக்க மாட்டார், மற்றும் மக்களும் அவரிடமிருந்து நியாயமான நீதியைப் பெற முடியாது.அல்லவா?

ஒருவர், அரசரிடம் நெருக்கமாக இருக்கக் கூடாது. அது போன்று, ஞானியான துறவியை விட்டு ஒருவர் தூர நகர்ந்து செல்லவும் கூடாது. அரசனிடம் நெருக்கமாக இருப்பவர்களும், துறவியை விட்டு அகன்றவர்களும் ஏதோ ஒரு விதத்தில் இழப்பினை அடைவார்கள்.

தீவிரவாதத் தாக்குதல்களால் கடந்த காலத்தில் பல குற்றமற்றவர்கள் இறந்திருக்கின்றனர், இன்றும் இறந்து கொண்டிருக்கின்றனர். இதையெல்லாம் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

குருதேவ்: உலகில் தீவிரவாதிகள் ஒரு பெரும் பிரச்சினையானவர்கள் தாம்.அதனால் தான் பகவத் கீதை இன்றும் கூட பொருத்தமானதாக விளங்குகின்றது. பகவத் கீதை, ஒரு கன்னத்தில் அடி வாங்கினால் மறு கன்னத்தையும் காட்டு என்று கூற வில்லை. ஒருவன் உன்னை அடித்தால், உன்னுடைய வில்லையும் அம்புகளையும் எடுத்து உடனடியாகத் தாக்கு, ஆனால் பழியுணர்வுடனும் வெறுப்புடனும் இருக்க வேண்டாம், அமைதியுடன் இருக்கட்டும். ஸ்ரீ கிருஷ்ணர் ," மயி சர்வாணி கர்மணி சம்ன்யச்ய தைத மசீதாஸா நிற சிரினி மாமோ பூத யுத்யஸ்வ விகத ஜ்வரஹ " என்று கூறுகின்றார். அதாவது யோகாவில் ஆழ்ந்தமைந்து, தீயவற்றை எதிர்த்துப் போரிடு என்பதாகும்.

ஏதேனும் ஒரு சொல் அல்லது ஒரு வாக்கியம் அனைத்து வயதினரிடமும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கூற முடியும்? ஆம் எனில் அது என்ன?

குருதேவ்: ஜெய் குருதேவ்! இது அனைவரிடமும் எந்த நேரத்திலும்,எதற்கும் கூறுவதற்கு உகந்தது. காலை வணக்கம், நல்லிரவு, நல்வரவு, பிரியாவிடை வாழ்த்து, கடவுளே! அனைத்திற்கும் ஜெய் குருதேவ் என்றே கூறலாம். காரியங்கள் சரியாக நடக்க வில்லையென்றால் ஜெய் குருதேவ் என்றோ ஓம் நமசிவாய என்றோ கூறலாம்.

குருதேவ், எனது தலையில் எப்போதும் பல்வேறு எண்ணங்கள் நிறைந்துள்ளன. என்ன செய்வதென்று தெரிய வில்லை. ஏதேனும் ஆலோசனை கூறுங்கள்.

குருதேவ்: உங்கள் தலையில் அதிக எண்ணங்கள் சூழ்ந்து நிரம்பியிருந்தால்,தரையில் படுத்து உருளுங்கள். உடலில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதை உணருவீர்கள். ரத்த ஓட்டம் அதிகரிக்கும் போது, மனம் சற்றுத் தெளிவாகும். சயனப் பிரதக்ஷணம் (தரையில் உருண்டு செய்யும் வழிபாட்டு முறை) செய்வதற்கு இதுவே காரணம். இதை செய்து உங்கள் மனம் மாறுவதை அனுபவித்து பாருங்கள்.
முற்காலத்தில் பயிற்சியின் ஒரு அங்கமாக இது இருந்தது.கனடாவில் புள் மலைகள் இருந்தன, அதில் மக்கள் உருளுவது வழக்கம். மிகவும் பாதுகாப்பானது. கற்கள் கிடையாது, வெறும் புற்கள் மட்டுமே. இவ்வாறு உருளும் போது உங்கள் பயம் பதட்டம் அனைத்தும் விலகும்.

குருதேவ், வாழ்க்கையின் ரகசியம் என்ன? இது ஒரு விளையாட்டா?

குருதேவ்: ஒவ்வொரு சிறு விஷயத்திற்கும் அதிகமான அளவு பொருள் கண்டுபிடிக்க முயலாதீர்கள். அப்போது வாழ்க்கையை வாழாமல் வெறும் கருத்துக்கள் எண்ணங்களிலேயே சிக்கிக் கொண்டிருப்பீர்கள். ஒவ்வொன்றுக்கும் காரணம் கண்டு பிடித்துக் கொண்டிராமல், விட்டு விடுங்கள், ஏனெனில் உங்களுடைய புரிதல் வரையறுக்கப்பட்டது. நாம் வளரும் போது, நமது புரிதலும் மாறு படுகின்றது. மனம் மாறுகின்றது, கருத்துக்களும் மாறுகின்றன. இப்போது எந்தக் கருத்து நிலையில் இருக்கின்றீர்களோ மிகவும் ஆய்ந்து கொண்டிருந்தால், நீங்கள் அதிலேயே கட்டுண்டு கிடப்பீர்கள், உங்களால் வளர முடியாது. வயதளவில் வளர்ந்தாலும் பழைய வடிவத்திலேயே நின்று விடுவீர்கள். ஆய்வது சிறந்தது அல்ல என்று கூறமுடியாது, ஆனால் எதுவுமே அளவுக்கு அதிகமாவது நல்லதல்ல.

குருதேவ், ஏன் விலங்குகள் இயற்கை மரணத்தினை அடையக் கூடாது? ஏன் மக்கள் அவைகளை கொல்ல வேண்டும்?

குருதேவ்: ஆம் தவறு தான். மக்கள் எந்த விலங்கையும் கொல்வதை ஏற்றுக் கொள்வதில்லை. பல இடம்பெயரும் பறவைகள் இந்த ஆண்டு ஆஸ்ரமத்திற்கு வந்திருக்கின்றன. நாரைகளும் நீர்க் கோழிகளும் நமது ஏரிக்கு முதன் முறையாக வந்திருக்கின்றன. அவைகளுக்கு ஒரு நல்ல சூழல் விருப்பமாக இருக்கின்றது அல்லது வேறிடங்களில் நீரின்றி இருக்கலாம். நாம் சுற்றுச் சூழல் துறையினரிடம் ஏரிகளில் மீன் பிடித்தல் அனுமதிக்கப்படக் கூடாது என்று கூற வேண்டும், ஏனெனில் அங்கு பறவைகள் வந்துள்ளன. அவர்கள் காற்றில் சுட்டால் பறவைகள் பயந்து விடும்

கேள்வி செவிக்குப் புலப்படவில்லை.


குருதேவ்: மக்களுக்கு ஆறுதல் அளியுங்கள், அவர்களை கேள்வி கேட்காதீர்கள், அவர்களிடமிருந்து எந்த ஆறுதலையும் எதிர்பார்க்காதீர்கள். நாம் நமது குடும்பத்தினர் எப்போதும் தெம்பு கொடுக்கும் விதம் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. வாழ்க்கை என்பது அப்படித்தான். கோபம், மகிழ்ச்சி, சிரிப்பு, அழுகை, புன்முறுவல் ஆகியவை மாறி மாறி நிகழும். அணித்து உணர்ச்சிகளையும் வெளிப்படுத்திக் கொண்டிருப்பீர்கள். அது சாதரணமாக நிகழக் கூடியது தான். அதைப் பற்றியெல்லாம் கவலைபட்டுக் கொண்டிருக்காதீர்கள். நீங்கள் செய்யக் கூடிய பல வேலைகள் உள்ளன. வீட்டிலுள்ள மக்களை மாற்றுவதற்கு முற்பட்டு உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.