கர்மத்தின் அளவு

செவ்வாய்கிழமை, 9 செப்டம்பர்,

பெங்களூரு. இந்தியா


செய்யக் கூடிய, கூடாத கர்மாக்களை அறிய ஒருவன் எதை நாட வேண்டும்?

குருதேவ்: உள்ளிலிருந்து மனசாட்சியை கவனியுங்கள். உங்களுக்குப் பிறர் செய்யக் கூடாது என்று விரும்புகின்றீர்களோ அதைப் பிறருக்குச் செய்யாதீர்கள்.அதுதான் அடிப்படையானது. குறுகிய காலத்திற்கு விரும்பத் தகாத சூழலை ஏற்படுத்தினாலும் எது நீண்ட காலப் பயனை அளிக்குமோ, அதைச் செய்யுங்கள். குறுகிய கால இன்பத்தினை அளித்து நீண்ட காலத்திற்கு பிரச்சினை அளிக்கும் எதையும் நாம் செய்யக் கூடாது. இதுவே கர்மாவின் அடிப்படை ஆகும்.

மற்றொரு ஆன்மீகத் தலைவர் மரியாதை குறைவான நடத்தையுடன் காணப் பட்டால், அல்லது வெட்கக்கேடான செயலில் பிடிபட்டால், தங்களது மனதில் எழும் எண்ணங்கள் என்ன ?

குருதேவ்: இரக்கமும் வியப்பும். முதலில் ஞானமுள்ள ஒருவர் இவ்வாறு எப்படி இருக்க முடியும் என்னும் வியப்பு. நகைக்கடை வைத்திருப்பவர் சில காய்கறிகளையோ, ஒரு டஜன் வாழைப் பழங்களையோ அல்லது ஆப்பிளையோ திருடமாட்டார். அவ்வாறு ஒருவர் செய்தால் நீங்கள் வியப்படைவீர்கள், அல்லது இரக்கம் கொள்வீர்கள்.ஆழ்ந்து வேரூன்றிய அறியாமை இருந்திருக்க வேண்டும் என்று அதை பற்றிய இரக்கமே கொள்ள முடியும். அவர்களிடம் கோபப்பட்டுப் பயன் இல்லை. அதனால் யாருக்கும் பயன் இல்லை. உயரே சென்று கொண்டிருந்த இந்த மனிதர் சறுக்கி விட்டார். அவர் தனது அடித்தள ஏக்கங்கள் மற்றும் வெறுப்புகளுக்கு இரையாகி விட்டார். அவர்கள் உண்மையானவர்களாக இருந்தால்,தாங்களாகவே தண்டனையை ஏற்றுக் கொள்வார்கள். அது பிராயச்சித்தம் என்று அழைக்கப்படும். தவறு செய்யும் ஒருவர் அதை உணர்ந்தவுடன், பிறர் தண்டிப்பதற்கு காத்திராமல்,தாமாகவே தன்னைத் தண்டித்துக் கொள்ள வேண்டும். இவையெல்லாம் இல்லையெனில் அவர்கள் ஆன்மீகத் தலைவர்கள் என்று கருதவே முடியாதவர்கள். தங்களுடைய சுயநலனிற்காக ஆன்மீகத் துறையை தவறாக பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.

ஆன்மீகப் பயிற்சிகளையும் சூழலையும் நான் மிகவும் விரும்புகின்றேன். ஆன்மீக முதிர்ச்சி பெற்றவர்கள் மத்தியில் நான் சமநிலையிலும் திருப்தியுடனும் உணருகின்றேன். இந்த ஆன்மீகப் பயிற்சிகளை தொழிலாகக் கொள்ள முடியுமா? ஆம் என்றால் எனக்கு என்ன ஆலோசனை கூறுவீர்கள்?

குருதேவ்: ஆன்மீகப் பயிற்சிகள் தொழிலாக இயலாது.வாழும் கலையில்,பல வாய்ப்புக்கள் உள்ளன. பல பள்ளிகள், நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன, எங்களிடம் வேலைவாய்ப்பு பணியகம் உள்ளது. அதில் வந்து பதிவு செய்து கொள்ள உங்களை வரவேற்கின்றோம். நம் நாட்டில் ஆன்மீக மனப்போக்குடைய செயல்திறன் மிகவும் தேவையானது. எனவே வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.

மக்களிடமிருந்து எந்த வகையான கேள்விகள் உங்களை சங்கடப்படுத்துகின்றன?

குருதேவ்: இதுவரையில் யாரும் அத்தகைய கேள்விகளைக் கேட்டதாக எனக்கு நினைவில்லை. யாரிடமும் நான் சங்கடமாக உணர்ந்ததில்லை. இது வரையில் இல்லை.வருங்காலத்தை பற்றித் தெரியாது.

துன்பம் மற்றும் பயம் இவற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கின்றீர்கள். தங்கள் வாழ்வில், சந்தித்த மனஅழுத்தம் மற்றும் பதட்டம் இவற்றுடன் கூடிய தருணங்கள் யாவை?

குருதேவ்: பதட்டம் என்று கூற முடியாது, அழுத்தம் நிறைந்த தருணங்கள் இருந்திருக்கின்றன.  சுனாமி ஏற்பட்டபோது 48 மணி நேரங்கள் இடைவிடாது பயணம் செய்தோம். அந்த நாட்கள் மிகுந்த மன அழுத்தம் நிறைந்தவை. இராக்கில் முன்னும் பின்னும் குண்டுகள் நிறைந்த அபாயச் சிவப்புப் பகுதியில் நான் சென்றிருந்திருக்கின்றேன். நான் பதட்டம் அடையவில்லை அனால் என்னை சுற்றியுள்ளோருக்கு பதட்டம் அளித்திருக்கின்றேன். எங்களுக்கு எதுவும் நேராது என்பதை நான் உணர்ந்திருந்தேன். அரசு தடை செய்த போதிலும் அந்த அபாயப் பகுதிக்கு சென்று பழங்குடி மக்களைச் சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.இரண்டு டாங்கர்கள் உட்பட12 வாகனங்கள் என்னுடை பாதுகாப்பிற்காக அளித்தார்கள். அரைமணி நேரம் கூட ஆகாத அளவுள்ள தூரத்தைக் கடக்க இரண்டு மணி நேரம் ஆயிற்று. போர் நிகழும் இடத்தில் பயணம் செய்வது சிலிர்ப்பாக இருந்தது, ஆனால் பதட்டம் இல்லை.

நீண்ட காலத்திற்கு முன்னர் போரின் பிடியில் இருந்த காஷ்மீரில் பல பகுதிகளில் நான் பயணம் செய்திருக்கின்றேன். ஸ்ரீலங்காவிலும் பயணம் செய்திருக்கின்றேன் ஆனால் அது எனக்கு ஏமாற்றத்தையே அளித்தது. அமைதியை ஏற்படுத்தவே நான் அங்கு சென்றேன். ஸ்ரீலங்காவின் தலைவருடன் பேசினேன், பிரபாகரனுடனும் பேச விரும்பினேன். போருக்குச் செல்லாமல் பேச்சுவார்த்தை நடத்தும்படி கூற விரும்பினேன். அவர் என்னைச் சந்திக்கவில்லை. அது சற்று ஏமாற்றத்தை அளித்தது. கிளிநொச்சியில் ஒரு நாள் தங்கி இருந்தேன். அந்த ஒரு மனிதரின் அகம்பாவம் கீழிரங்காவிடில் எண்பதாயிரம் பேர் அழிக்கப்படுவார்கள் என்பதைக் காண முடிந்தது.  அவர் மட்டும் பேச்சு வார்த்தைக்கு இணங்கியிருந்தால், ஸ்ரீலங்காவில் போர் தவிர்த்திருக்கப் படும். அவருக்குக் கீழிருந்த மக்களும் நம்பிக்கை இழந்திருந்தார்கள். அவர்கள்,''குருதேவ், தயவு செய்து எங்கள் தலைவரைச் சந்தியுங்கள்” என்றே கூறினார்கள். உங்களை சந்தித்தால் அவர் மனம் மாறக்கூடும் என்று கூறினார்கள். பிரபாகரன் என்னைச் சந்திக்க மறுத்து விட்டார். ஆன்மீகத் தலைவர்களைச் சந்திக்க மாட்டேன் என்றே கூறினார்.

வட கொரியா மற்றும் தென் கொரியாவிற்கு இடையே பிரச்சினை ஏற்பட்டபோது, அங்கு புதிய தலைவரை சந்திக்க முயற்சி எடுத்தேன். தனது இருபது வயதுகளில் உள்ள இளம் தலைவர் அவர். ஆனால் மாஃபியாக்களினால் சூழப்பட்டிருந்தார்.அவர்கள் தலைவரை சந்திக்க அனுமதிக்கவில்லை. அந்த அளவு நெருங்கிய பின்னர் அம்முயற்சி தோல்வி அடைந்து விட்டது. இவையெல்லாம் நிகழ்ந்தன, ஆனால் இவற்றால் நான் பாதிக்கப்பட வில்லை.

எனக்கு 30 வயது ஆகின்றது. ஆயினும் வாழ்வில் எனக்கு என்ன வேண்டும் என்று தெரிய வில்லை.. எது ஒன்றிலும் எனக்குத் தீவிர ஈடுபாடு இல்லை. பிறர் எதையேனும் தீவிரப் பற்றுடன் செய்யும்போது நான் என்னுள்ளில் காலியாகவே உணருகின்றேன். எனக்கு வாழ்வில் என்ன வேண்டும் என்பதை எவ்வாறு நான் கண்டு பிடிப்பது?


குருதேவ்: என்ன வேண்டும் என்பதைத் தவிர்த்து சுற்றியிருப்பவர்களுக்கு என்ன வேண்டும் என்று மாற்றிச் சிந்திக்கத் துவங்குங்கள். எனக்கு என்ன தேவை என்பதிலிருந்து என்னால் என்ன பயன் என்று மாற்றினால் வாழ்வின் முழுமையை உணருவீர்கள். நாட்டின் மேன்மைக்கு என்ன செய்ய முடியும், சமுதாயத்திற்கு என்ன செய்ய முடியும் என்று யோசிக்கத் துவங்கினால் வெற்றிடம் மறைந்து விடும். வாழும்கலையில் பல திட்டங்கள் உள்ளன. ஒரு தன்னார்வத் தொண்டரை நீங்கள் அழைத்தால், அவர் தங்களுடன் உங்களை அழைத்துச் செல்வார்.ஒரு சமூகப் பணியில் ஈடுபடும் போது ஏற்படும் மகிழ்ச்சி கொண்டாட்டம் இவற்றை அறிந்துணர்வீர்கள். இத்தகைய மகிழ்ச்சியை நீங்கள் எங்கும் வாங்க முடியாது.