குரு உத்சவ தினம்


வெள்ளிக்கிழமை , 5 செப்டம்பர் 2014,

பெங்களூரு, இந்தியா.

இந்தியாவில் ஆசிரியர் தினம் இன்று ஒரு புதிய பெயரை அடைந்துள்ளது.  இனி குரு உத்சவ தினம் என்று அழைக்கப்படும். மிகவும் பொருத்தமானதும் கூட. குரு என்னும் சொல் நடுநிலையான பால்வகை சொல்லாக கருதப்பட்டால் இந்த தினத்தின் பெயர் " பெரிய கொண்டாட்டம் " என்று மொழிபெயர்க்கப்படலாம்.
குரு என்பதன் பொருள் எப்போதுமே பெரியது என்பது.  நமது நாட்டின் பிரதமர், இந்த நாளுக்குப் புதுப் பெயர் கொடுத்தது ஒரு நல்ல கருத்து என்றே நான் எண்ணுகின்றேன்.   உலகெங்கிலும் மக்கள் மேலாண்மை குரு, ஆலோசனை குரு  என்றெல்லாம் குரு என்னும் சொல்லை பல விதங்களில் பயன் படுத்துகின்றார்கள்


அப்போது ஏன் ஆசிரியர் தினம் என்று அழைக்க வேண்டும்ஆசிரியர் என்பவர் கல்வி கற்பிப்பவர், ஆனால் குரு வழிகாட்டியும் கூட.  ஆசிரியர் குருவை விட ஒரு படி கீழேயே உள்ளார்ஏனெனில் ஆசிரியர் தகவல்களையும் திறன்களையும் கற்பிக்கின்றார்,குரு உங்களது இலக்கை அடைய உதவுகின்றார்இந்த வித்தியாசத்தைப் பார்த்தீர்களாஇது ஒரு புதிய, கண்ணோட்டம்.

ஒரு ஆசிரியர் உங்களுக்கு நிறைய தகவல்களை தரமுடியும். அத்தகவல்கள் முழுமையானவையாக இருக்க வேண்டும் என்னும் அவசியம் இல்லை. ஆனால் குரு என்பவர்  உங்களது இலக்கை நோக்கி அழைத்து செல்கின்றார். எனவே இந்த நாள் இதை கொண்டாடச் சிறந்த நாளாகும்பல ஆண்டுகளாக நாம் இந்தியாவில் ஆசிரியர் தினமாகவே கொண்டாடி வருகின்றோம். இன்று புதிய பெயரிடப்பட்டு குரு உத்சவ தினமாக நமது வாழ்வில் உயர் பீடத்தில் இருத்தப்பட்டு மிகுந்த கண்ணியத்தினை அடைந்துள்ளது

ஒருவன் தன்னுடைய  பாத்ரதா வை ( அருள் மற்றும் ஆசியினைப் பெறுவதற்கான திறன்) உயர்த்திக் கொள்வதற்கு என்ன செயல்களைப் புரிய வேண்டும்?

குருதேவ்பாத்ரதாவை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்னும் ஆசை எழும்போது பாதி வேலை     முடித்து விடுகின்றதுஇந்த ஆசை எழும்போது தன்னுடைய குறைகளை உணர்ந்து அவற்றை கடக்க முயற்சி எடுக்கின்றான்அதுவும் அந்த உண்மையான நோக்கத்தின் மூலம் தானாகவே நிகழ்கின்றது. முக்கியமானது என்னவென்றால், இயல்பாகவும் எளிமையாகவும் பணிவாகவாகவும் இருப்பதுவே ஆகும். பணிவு உள்ளிருந்து எழவேண்டும்பாத்ரதா இயல்பாகவே அதிகரிப்பதை  காண்பீர்கள். ஒருவரது பாத்ரதாவிற்கு தகுந்தபடியே வாழ்வில் அனைத்தும் நடை பெறுவதாக உங்கள் மனதில் எண்ணம் கொள்ளாதீர்கள். சில சமயங்களில் குறைவான தகுதியுடையவன் சிறப்பானவைகளை அடைகின்றான்காலம் செய்யும் வேலை அதுஉதாரணமாக நம் நாட்டில் ஒரு முதல்வர் விபத்தில் சிக்கி ஆறு மாதங்கள் கோமாவில் இருந்தார்அப்போதும் பதவியை ராஜினாமா செய்யவில்லை, கோமாவிலேயே பதவியைத் தொடர்ந்தார்

ஒரு மாநிலத்தில், ஒரு முதல்வர் மனச்சோர்வினால் ஏற்படும் டிமென்ஷியா நோயினால் பாதிக்கப் பட்டிருந்தார். டிமென்ஷியா என்பது ஒரு மூளை நோய். அதனால் ஒருவன் நினைவுத் திறனை இழந்து விடுவான். அனைத்து மக்கள் , சம்பவங்கள் ஆகியவற்றை மறந்து விடுவான்முதல்வராக இருந்த போதிலும், எந்த வேலையும் செய்யவில்லை.அவரது செயலாளரே அனைத்தையும் கவனித்து  கொண்டார்செயலாளர் என்ன எழுதிக் கொடுத்தாரோ அதைப் பேசுவார், எதுவும் நினைவில் இருப்பதில்லை.

ஒரு முதல்வருக்கு எந்த ஒரு  ஒரு சிறு விஷயமும்  கோபத்தை அளிக்கும். காற்றில் இலைகள் அசைந்து ஓசை எழுப்பினால்கூட கோபம் ஏற்படும். இத்தகைய மனிதர்கள் நமக்கு ஆட்சியில் இருக்கின்றார்கள்இத்தகையவர்கள் முதல்வர்களாக ஆகக் கூடுமானால்,  அவர்கள் மன நல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.( சிரிப்பு)  எனவே உங்களுக்கு இரண்டு விருப்பத் தேர்வுகள் உள்ளன.   ஒன்று, எல்லாமே கர்மாவின் விளையாட்டு என்று எடுத்துக் கொள்வது.  குறைந்த தகுதி உள்ளவர்களும் பூர்வ ஜென்மத்தின் புண்ணியத்தால் இப்போது பலன்களை அனுபவிப்பதாக ஏற்றுக் கொள்வது.   இது காலத்தின் விளையாட்டு என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லது இதைப் பற்றி எண்ணியே வருந்தி  உங்களை பலவீனப்படுத்திக் கொள்வது. அவ்வாறெனில் நீங்கள் நடுங்கியே உண்மைப் பாதையிலிருந்து விலகி விடுவீர்கள் அல்லது சோர்வடைந்து உண்மையாக இருந்து நான் என்ன கண்டேன்? நானும் குறுக்கு வழியில் சென்று நான் விரும்புவதை அடையலாமே என்று எண்ணுவீர்கள்.

நான் உங்களுக்கு ஒரு ரகசியம் கூறுகின்றேன்.  இவ்வாறு தவறான குறுக்கு வழிகளை பின்பற்றினால் இன்னும் அதிகமான துன்பத்தில் மிக ஆழமாக மூழ்கி விடுவீர்கள்ஒரு வேளை, ஒருவன் பிறரிடமிருந்து திருடுவதன் மூலம் செல்வச் செழிப்பினை அடைவதை பார்த்து நீங்களும் அவ்வாறே ஆக வேண்டும் என்று விரும்பினால் நான் கூறுவதை கவனியுங்கள்.  அவன்  சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிடுவான், ஆனால் நீங்கள் மாட்டிக் கொண்டு தண்டனை அனுபவிப்பீர்கள். ஏனெனில் அத்தகைய தவறான செயல்பாடுகள் உங்கள் உண்மையான சுபாவம் அல்ல. அத்தகைய தீயவை உங்கள் இயல்பானால் ,   இங்கு சத்சங்கத்திற்கு வந்து என்னுடைய ஞான சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டு இருக்க மாட்டீர்கள்.

நீங்கள் இங்கு அமர்ந்து அறிவார்ந்த விஷயங்களைக் கவனித்துக் கொண்டிருப்பதால், தீயவை உங்களது இயல்பு அல்ல என்பது தெளிவாகின்றதுஉங்கள் மரபணுக்களிலேயே தீமை என்பது இல்லை. ஒரு வேளை முன்வினைப் பயன் களினால், அம்மனிதன் தப்பித்துக் கொண்டு வருவானாக இருக்கும். ஆனால் அதைப் பார்த்து நீங்கள் செய்தால் நீங்கள் மாட்டிக் கொள்வீர்கள்.

மனநிறைவுநுகர்விற்குப் பின்னர் வருகின்றதா அல்லது  நுகர்வினை தவிர்ப்பதால் வருகின்றதா?

குருதேவ்: மனநிறைவு  உங்களது விழிப்புணர்வு நிலை மேம்படுவதால் ஏற்படுகின்றது. அது , மீண்டும் மீண்டும் ஏதாவது ஒன்றில்  இயங்கிக் கொண்டே இல்லாத நிலையில் ஏற்படும் ஒரு உயர்ந்த அனுபவம் ஆகும். பதஞ்சலியின்  யோக சூத்திராவில் எவ்வாறு வைராக்யா (சாந்தமான நிலை) அடைவது என்னும் கேள்விக்கு மகரிஷி பதஞ்சலி பதில் கூறுகின்றார், " த்ரிஷ்டானு ஷ்ரவி கவிஷய விட்ருஷ சய வசிகர சஞ்சன வைராக்கியம் "

பார்க்கும் அனைத்திலும் கேட்கும் அனைத்திலும் உங்கள் மனதின் கவனத்தைச் செலுத்தி வந்தால் அவை மட்டுமே உங்களுக்கு அதிகமாகக் கிடைக்கும்பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகின்றார், " த்யாயதோ விஷயான் பும்சாஹ் சங்கச் தேஷு பஜாயதே . சங்கத் சஞ்சயதே காமஹ் காமத் க்ரோதோ பீஜயதே . க்ரோதாத் பவதி சம்மோஹாஹ் சம்மோஹத் ஸ்ம்ரிதி விப்ரமாஹ், ஸ்ம்ரிதி பிராமஷாத்  புத்தி -நாஷோ புத்தி நாசத் ப்ரனஷ்யதி " ( 2.62 & 2.63 )   

இதன் பொருள்: ஒரு நாள் முழுவதும் உணவையே பார்த்துக் கொண்டிருந்தால், பசி இல்லாவிடினும் அதிகமாக உணவினை உண்ண விரும்புவீர்கள். ஏனெனில் உங்கள் மனம் உணவிலேயே திளைத்துக் கொண்டிருக்கின்றதுநமது புலன்களின் அனுபவிக்கும் திறன் வரையறுக்கப்பட்ட ஒன்று , ஆனால் மனப் பசி எல்லையில்லாததுமனதிற்கும் உடலுக்கும் இடையே ஏறுமாறான நிலை இருந்தால் நல்லிணக்கம் அற்ற நிலை ஏற்படுகின்றது.

மனதிற்கும் உடலுக்கும் தேவைகள் வெவ்வேறானதுஇவையிரண்டும் இசைந்து ஒத்துவராமல் இருந்தால் சமநிலையற்ற பதற்றம் உருவாகும்பெருத்த சங்கடம் மற்றும் பல பிரச்சினைகள் ஏற்படும். புலிமியா (இயற்கை மீறிய பெரும் பசி) போன்ற கோளாறுகள் ஏற்படுகின்றனமுதலில் நீங்கள் மனதின் பழக்கங்கள் அல்லது போக்கிற்கு வேகத்தடை போட வேண்டும் என்பதைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதற்கு மாற்று என்ன என்பதை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, ஒருவர் புகைப் பிடிக்கும் பழக்கம் கொண்டிருந்தால், அதை நிறுத்த வேண்டும் என்று முடிவெடுத்தால், உடனேயே நிறுத்த முடியாது.  அதற்குப்  பதிலாக மாற்று  தரப்பட வேண்டும்மிகச் சிறந்த மாற்று சாதனா ஆகும். (பிராணாயாமம் ஆகியவை ) சாதனாவின் மூலம் வேறு வகையான மகழ்ச்சி உள்ளிருந்து எழுகின்றது. அது பிரத்யாஹரா என்று அழைக்கப்படுகின்றது.

வாழும் கலையின் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் போது, பிரசன்னா மற்றும், கமோடர் ராவ் போன்றவர்கள்  உணவு உறக்கம் எதுவுமே இல்லாமல் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தனர். இவர்களைப் போன்று பல குழுக்கள் வேலையில் ஈடுபட்டிருந்தனர். சுவாமி ப்ரக்யபாதா ஜி, மற்றும் பலர் ஆஸ்ரமத்தில் முழு ஈடுபாட்டுடன் பணி புரிந்தனர். அவர்களின் ஒரே நோக்கம் விழா சிறப்பாக அமைய வேண்டும் என்பது தான். நூறு சதவீதம் எப்போதும் தங்கள் திறனை செலுத்தி, வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் பணி புரிந்தனர்.  அவர்கள் மனதில் இருந்த ஒரே விஷயம் விழா வெற்றி கரமாக நிகழ வேண்டும் என்பது தான்பல சமயங்களில் உங்கள் வேலையில் உள்ள காலக்கெடு, உங்கள் உள்ளிருந்து ஒரு வேறு வகையான சக்தியை அளிக்கும். அச்சமயத்தில் வேறெதுவும் ஒரு பொருட்டாக தெரியாது. மன நிறைவு என்பது கூட அப்போது ஒரு பிரச்சினை அல்ல.

ஒரு பணியினை முடிக்கும் அர்பணிப்பு அல்லது எதையாவது ஒன்றினை முடிக்கும் அவசரம் ஏற்படும் போது உங்கள் அனைத்து சக்தியும் தாமாகவே அப்பணியினை நிறைவேற்றும் வகையில் வழிநடத்தப்படும்.  அனைத்து விருப்பு வெறுப்புக்களும் தாமாகவே குறைந்து விடும்.  ஆனால் இந்நிலை எப்போதும் இருக்காது. வாழ்வில் ஒரு குறிக்கோள், அல்லது காரணம் அவ்வப்போது இருந்து வந்தால், தீராத ஆசைகளின் பசியிலிருந்து வெளி வரலாம். ஆகவே, விவேகத்தின்  ஒரு பணி அல்லது இலக்கு இவற்றை நோக்கி மனதைச் செலுத்துவது உதவியாகும். இரண்டாவதாக உதவி செய்வது சாதனா.   இவையிரண்டுக்கும் மேலானது முழுமையான அன்பில் திளைத்திருக்கும் நிலை ஆகும். நீங்கள் மிக ஆழமாக அன்பில் திளைத்திருக்கும் போது எதனாலும் தொந்தரவு அடைய மாட்டீர்கள். அந்நிலையில் சட்ட திட்டங்கள் ஒழுங்குமுறைகள் இவற்றையெல்லாம் பின்பற்றுவது கூட பாரமாகத் தோன்றாது. ஏனெனில் அன்பும் அர்ப்பணிப்பும் ஒரு இலக்கை நோக்கி செலுத்தப்படுகின்றன.