பிரார்த்தனை என்பது ஒரு நிகழ்வு

வெள்ளிக்கிழமை, 15/08/2014

பெங்களூரு, இந்தியா


(கீழ் உள்ளது ‘இந்தியா – முன்னேறும் வழி’ என்ற பதிவின் தொடர்ச்சி)

கேள்வி பதில்

கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் 21 வயதுப் பெண் நான். கோவிலுக்கு செல்வதை விட ஸ்டார்பக்ஸ் போன்ற காஃபி கடைக்குச் செல்வது சுவாரசியமாக இருக்கிறது. கடவுள் மீது ஈடுபாட்டை எப்படி வளர்த்துக் கொள்வது?

கடவுள் மீது ஈடுபாடெல்லாம் ஏற்படுத்திக்கொள்ள முடியாது, இறுக்கம் தளருங்கள்.அது ஏற்கனவே இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.அதை ஏற்படுத்திக் கொள்ள முயல்வதே உங்கள் மனதில் அழுத்தத்தை தரும். எனவே அந்த முயற்சித் தேவையில்லை. ஸ்டார்பக்ஸில் எவ்வளவு நேரம் உங்களால் உட்கார முடியும்? உங்கள் படிப்பில் தேர்வு வரும் போதோ அல்லது ஒரு பிரச்சினை வரும் போதோ நீங்கள் தானாகவே கோவிலுக்குச் செல்கிறீர்கள் அல்லது கோவில் வழியாகச் செல்லும் போது தானாகவே உங்கள் தலை வணங்குகிறது. உங்கள் வாழ்க்கையில் தெளிவின்மை ஏற்படும் போதோ அல்லது பாதுகாப்பின்மையை உணரும் போதோ, அல்லது வகுப்பில் முதல் தரம் அடைய ஆசைப்படும் போதோ அல்லது ஏதாவது பரிசுக்கு ஆசைப்படும் போதோ, நீங்கள் தானாகவே கோவிலுக்கு ஓடுகிறீர்கள். தேவை ஏற்படும் கணத்தில், நன்றியுணர்வு ஏற்படும் கணத்தில் நீங்கள் எப்போதும் ஒரு பெரிய சக்தியை நினவு கூர்வீர்கள். அந்த நேரத்தில் பிரார்த்தனை நிகழ்கிறது.

பிரார்த்தனை என்பது ஒரு நிகழ்வு மற்றும் அது இரண்டு தருணங்களில் அது நிகழ்கிறது;
1.        உங்களில் நன்றியுணர்வு பெருகுகையில் அது நிகழ்கிறது. நல்லவேலை, நாம் காப்பற்றப்பட்டோம் என்று நீங்கள் உணரும் அந்தத் தருணத்தில் நீங்கள் ஸ்டார்பக்ஸ் என்று கூறுவதில்லை. ஒரு பெரும் இக்கட்டிலிருந்து காப்பாற்றபடும் போது, ‘ராமா’ அல்லது ‘ஓம் நமசிவாய’ என்ற வார்த்தைகள் தான் உடனடியாக வருகிறது.
2.       உங்களுக்கு தேவை ஏற்படும் போதும் பிரார்த்தனை நிகழ்கிறது. ஓட்டப்பந்தயத்தில் இருக்கும் போதோ அல்லது வேலைக்கு விண்ணப்பம் செய்த பின்போ, வேலை கிடைக்க நீங்கள் ஸ்டார்பக்ஸிடமா வேண்டுகிறீர்கள்? இல்லை! நீங்கள் தானாகவே ஒரு உயர்ந்த சக்தியை நினைக்கிறீர்கள். யாராக இருந்தாலும் அதுதான் இயல்பு, தன்னை ஆகச் சிறந்த நாத்திகவாதி என்று கூறுபவர்களுக்கும் கூட.
நாத்திகவாதம் மிக மேலோட்டமானது. ஒரு உண்மையான நாத்தீகராவது  மிகக் கடினம். நீங்கள் ஒரு உண்மையான நாத்தீகராக இருந்தால், அதே நேரத்தில் கூடவே நீங்கள் ஒரு உண்மையான ஆத்தீகராகவும் ஆகிவிடுவீர்கள். 

விவசாயம், மருந்துப்பொருள், சத்துணவு மற்றும் பல்வேறு துறைகளில், மரபணு பொறியியல் பல நன்மைகளை தருகிறது. வறியவர்களுக்கு உதவ வேண்டும் என்ற சீரிய நோக்கம் கொண்டது, இதைப் பற்றி உங்கள் கருத்தை வேண்டுகிறேன்.

மரபணு பொறியியல் பல நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கும் போது,நாம் ஏன் இங்கு வரவேற்க வேண்டும்? கனடா,அமெரிக்கா,ஐரோப்பா தடை செய்துவிட்டது, ஏன் இந்தியா மட்டும் அதை அனுமதிக்க வேண்டும்? இரண்டாவதாக, பரிசோதனைகள் பரவாயில்லை, அதை பெருமளவில் செய்யும் முன் அதன் நன்மை தீமைகளை முதலில் பார்க்க வேண்டும். அதைப் பற்றி தெரியாமல் காலை வைத்து விட்டு பின்னர் வருந்தக் கூடாது. பி.டி பருத்தியின் விஷயத்தில் அப்படி செய்து விட்டோம், அதன் விளைவுகள் உங்களுக்குத் தெரியும். இது தீவிரமான ஒன்று.மொன்சாண்டோ நிறுவனத்தின் (விவசாயத்தில் மரபணு ஆராய்ச்சி செய்யும் நிறுவனம்) தொழிலாளிகள் தங்கள் அலுவலக உணவகத்தில் மரபணு மாற்றம் செய்யப்படாத உணவுப் பொருட்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று போராட்டம் செய்துள்ளனர். இந்த நிகழ்வே நமக்கு ஏராளமான செய்திகளை உணர்த்தும்.

இந்தியா, தொன்மையான விஞ்ஞானமான ஆயுர்வேதத்திற்குப் பெயர் பெற்றது. இதை உலகளாவச் செய்வதில் அடுத்த கட்ட செயல்கள் என்ன?

முதலில் நாம் இங்கே பயன்படுத்துவோம். உலகம் ஏற்கனவே அதை உணர ஆரம்பித்துவிட்டது.
1980ல் நடந்த நிகழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். புதுதில்லியில், ஆயுர்வேத மற்றும் நவீன மருத்துவத்தின் மருத்துவர்கள் இணைந்த ஒரு மாநாட்டை நான் ஒருங்கிணைத்தேன். வசந்த விகாரில் நடந்த அந்த நிகழ்ச்சியில் இருபுறமும் இருந்து சுமார் 50 – 60 மருத்துவர்கள் கலந்துகொண்டனர். உரையாடல் நடந்து கொண்டிருந்த போது,மஞ்சளை பற்றிய பேச்சு வந்தது எனக்கு நன்றாக கவனத்தில் உள்ளது.அனைத்து அல்லோபதி மருத்துவர்களும் மஞ்சள் வெறும் வண்ணப் பொருள் மட்டுமே அதற்கு எந்த மதிப்பும் இல்லை என்று கூறினார். மஞ்சள் ஒரு வயோஸ்தபான், அது முதுமையைக் மட்டுப்படுத்தும், உடலுக்கு அதிக சக்தியை (ஓஜஸ்) அளிக்கும் என்று கூறிய ஆயுர்வேத மருத்துவர்களை நிராகரித்துவிட்டனர். இதைக் கூறிய ஆயுர்வேத மருத்துவர்கள் சொல்வது அனைத்தும் அறிவின்மை என்று அல்லோபதி மருத்துவர்கள் நிராகரித்தனர்.

புற்றுநோய் முதல் 19 உயிர் காக்கும் மருந்துப் பொருட்களின் வேலையை மஞ்சள் செய்கிறது என்று அல்லோபதி மருத்துவர்கள் இன்று அங்கீகரித்திருக்கிறார்கள். வைரசால் ஏற்படும் காய்ச்சலுக்கு எதிர்ப்பு மஞ்சளில் இருக்கிறது. பொதுவாக வைரஸ் காய்ச்சலுக்கு மருந்தில்லை என்று அல்லோபதி மருத்துவர்கள் கூறுவார்கள். புதிய மஞ்சளை எலுமிச்சைச் சாரில் கலந்து எடுத்துக் கொண்டால் போதும். இந்தியாவில், மஞ்சள், இஞ்சி மற்றும் எலுமிச்சை கொண்டு ஊறுகாய் செய்வார்கள். இது ஆகச் சிறந்து. மஞ்சள் ஒரு வைரஸ் எதிர்ப்பான், பாக்டீரியா எதிர்ப்பான் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட். இரத்தத்தை நீர்த்து, இரதம் கெட்டிப்படுவதைத் தவிர்த்து ஆஸ்பிரின் செய்யும் வேலையைச் செய்கிறது. 19 மிக முக்கியமான உயிர் காக்கும் மருந்துகள் செய்யும் வேலையைச் செய்கிறது. நமது மரபில், எந்த ஒரு புனித நிகழ்ச்சிக்கும், முதலில் மஞ்சளை வாங்குவார்கள். பிறகே துணிமணி மற்றும் பிற பொருட்களை வாங்குவார்கள். என்னுடைய பாட்டி, எங்களுக்கு எப்போது புதுத்துணி வாங்கினாலும் அதன் முனையில் சிறிது மஞ்சளைத் தடவுவார்கள் என்பது எனக்கு ஞாபகம் இருக்கிறது. புதுத்துணியின் மூலையில் சற்று மஞ்சளைத் தடவுங்கள். இன்று இந்தியாவில் மஞ்சளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் உண்டு. 21ஆம் நூற்றாண்டின் மருத்துவம் ஆயுர்வேதம். மக்கள் தயாரிக்கும் எல்லா ஆயுர்வேத தயாரிப்புகளும் சுத்தமானவையோ அல்லது அறிவியல் பூர்வமானதோ அல்ல. அறிவியலைப் புறக்கணிக்கக் கூடாது, ஆனால் அறிவியலோடு ஆயுர்வேதத்தையும் எடுத்துச் செல்ல வேண்டும்.

இந்த நாட்டில் எந்த ஒரு பிரச்சினைக்கும் திடமான நிலைப்பாட்டை மக்கள் எடுப்பதில்லை. மற்றவர்களுடைய கருத்துக்கு செவி சாய்ப்பதில்லை. ஒரு துண்டு துண்டான சமூகமாக இருக்கிறது. ஒற்றுமையாக எப்படி முன்னே செல்வது என்று தயை கூர்ந்து வழி காட்டுங்கள்.

இதற்கு ஒரே வழிதான் இருக்கிறது, மக்களிடையே தகவல் தொடர்பு அதிகமாக வேண்டும். மக்களுக்கு நாம் எல்லாவற்றையும் கற்றுத் தருகிறோம், ஆனால் எப்படி தொடர்பு கொள்வது என்பதை கற்றுத் தருவதில்லை. பள்ளி மற்றும் கல்லூரிகளில் கூட அதைக் கற்றுத்தருவதில்லை. மிக அத்தியாவசியமான இந்தத் திறனை நாம் எங்கும் கற்பதில்லை. உங்கள் வார்த்தைகள் உங்களுக்குச் செல்வதைப் பெற்றுத்தரும், உங்கள் வார்த்தைகள் சிரிப்பை, நகைச்சுவையை உண்டாகும், உங்கள் வார்த்தைகள் உங்களுக்குப் பிரச்சினைகளையும் பெற்றுத் தரவல்லது என்று கன்னட இலக்கியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே எப்படித் தொடர்பு கொள்வது என்று நம் குழந்தைகளுக்குச் சொல்லித்தர வேண்டும்.

கல்வித்துறையில் செய்வதற்கு ஏராளமாக இருக்கிறது.நாம் மாற்றி அமைத்தாக வேண்டும். இளம் சிறார்களின் மனதில் ஏதோ தகவல்களை திணிப்பதாக நமது கல்வி மாறிவிட்டது. சிறார்களின் ஆளுமையை மேம்படுத்துவதாக இல்லாமல் இருக்கிறது நமது இன்றையக் கல்வி முறை. இதைத் தான் நாம் இப்போது செய்தாக வேண்டும். நமது இளைஞர்களின் ஆளுமையைத் தான் நாம் மேம்படுத்த வேண்டும், ஏனென்றால் தகவல்கள் இப்போது எளிதாய்க் கிடைக்கிறது. 

இந்தியா மேலும் மேலும் செழிப்பாகி வளர்ந்து கொண்டிருக்கிறது. தொழில்நுட்ப ரீதியாக வலுவாக இருக்கிறோம், உலக அரங்கில் நமக்கு பிரதிநிதித்துவம் இருக்கிறது, ஆனால் நமது பண்பாடும் ஆன்மீகமும் வலுவிழந்து கொண்டிருக்கிறது. மக்களிடம் ஆன்மீகத்தை பற்றி பேசினால், அதை 60 வயதிற்குப் பின் பார்த்துக் கொள்ளலாம் என்கிறார்கள். மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த ஏதாவது வழி இருக்கிறதா?

இளைஞர்களுக்காக ஒரு பயிற்சியை வடிவமைத்திருக்கிறோம். அதன் பெயர் ‘இளைஞர்களுக்கு அதிகாரமளிக்கும் கருத்தரங்கம்’. (Youth Empowerment Seminar – shortly YES). மகிழ்ச்சி வகுப்போ அல்லது இந்த YES பயிற்சியையோ எடுத்துக் கொள்ளச் சொல்லி அனைவரிடமும் கூறுங்கள். அவர்கள் எப்படி ஆனந்தம் கொள்கிறார்கள் என்பதைப் பார்ப்பீர்கள். இது 60 வயதிற்காக அல்ல. ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி இருக்கும் இளைஞர்களுக்காக. இந்த வகுப்பு அவர்களுக்கு நம்பிக்கை, சக்தி மற்றும் உற்சாகத்தையும் அளிக்கும்.

ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். துரதிருஷ்டவசமாக பெங்களூரு நகரம் தற்கொலைகளின் தலைநகரமாக முத்திரை குத்தப்பட்டு விட்டது. அதிகபட்ச தற்கொலைகள் இங்கு நடக்கிறது, இது நமக்கு ஒரு தலை குனிவு. எனவே இன்று, இந்த சுதந்திர நாளில்,தற்கொலைக்கு எதிராக பணி புரிய நாம் அனைவரும் உறுதியெடுத்துக்கொள்வோம். வாழும் கலையில், எட்டு அல்லது ஒன்பது கேள்விகள் அடங்கிய ஒரு மகிழ்ச்சி ஆய்வை உருவாக்கியுள்ளோம். இந்த ஆய்வுப் படிவத்தை நீங்கள் எல்லோரும் எடுத்துச் சென்று உங்கள் சுற்றுப்புரத்திலும் உங்கள் தெருவிலும் உள்ள மக்கள் இந்த ஆய்வை எடுத்துக்கொள்ளும்படி செய்ய வேண்டும். மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா இல்லையா, இல்லையென்றால் அதன் காரணம் என்ன என்று கண்டுகொள்ள வெறும் ஐந்து நிமிடங்களே போதும். இதிலிருந்து நாம் பெரிய புள்ளிவிவரத்தை உருவாக்கி, மக்களின் மகிழ்வின்மைக்கான முக்கிய காரணங்கள் என்ன அதைச் சரிசெய்ய என்ன முயற்சி எடுக்க வேண்டும் என்று அறியலாம். அந்தப் பொறுப்பை நாம் ஏற்றுக் கொள்வோம், நீங்கள் அந்த ஆய்வுப் படிவத்தை நிரப்பினாலே போதும்.

தற்கொலை எண்ணம் கொண்டவர்களை நமது பயிற்சிவகுப்பில் சேர்ப்போம். இந்தப் பயிற்சிக்குப் பின் தற்கொலை எண்ணத்திலிருந்து மீண்ட ஆயிரக்கணக்கானவர்கள் உலகெங்கும் இருப்பதை நான் அறிவேன். இந்த வகுப்பை இன்னும் தீவிரமாக நாம் பெங்களூரில் செய்வோம்.இந்த மகிழ்ச்சி ஆய்வின் மூலம் மன அழுத்ததின் காரணத்தை நாம் அறியலாம், அதிலிருந்து எப்படி அவர்களை வெளியே கொண்டுவருவது என்றும் அறியலாம். இந்தமாத முதல் தேதியில் நான் பெங்களூரு வந்தபோது, அன்று காலை தன்னுடைய மகன் தற்கொலைக்கு முயற்சித்ததாக ஒரு பெண்மணி என்னிடம் கூறினார். நல்ல வசீகரமான 24 வயது இளைஞன். நான் கூறினேன், ‘அவரை இந்த மூன்று நாள் மகிழ்ச்சி வகுப்பிற்கு அழைத்து வாருங்கள், பிறகு அவர் புன்னகைப்பதை, சிரிப்பதை முழுவதுமாக மாறுவதைக் காண்பீர்கள் என்றேன்.’


இதைப்போல கோடிக்கணக்கான உதாரணங்கள் இருக்கிறது. மன அழுத்தத்திலிருந்தும் தற்கொலை எண்ணத்திலிருந்தும் மக்களை வெளிக்கொணர நம்மிடம் ஏதாவது இருக்கும்போது நாம் அதை கட்டாயமாகச் செய்தாக வேண்டும். நாம் எல்லோரும் சேர்ந்து இந்த மகிழ்ச்சி ஆய்வை செய்வோம்.