மங்களகரமான ஷ்ரவண மாதம் பற்றி ஸ்ரீ ஸ்ரீ. . . . .

ஆகஸ்ட் 4, 2014

பெங்களுரு, இந்தியா



ஷ்ரவண மாதத்தின் (ஜூலை மாத  கடைசியில் தொடங்கி ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் முடியும் இந்து நாள்காட்டியின் ஐந்தாவது மாதம்)  கடைசி திங்கள் கிழமை இன்று தான். 



நாள்காட்டியில் இருக்கும் அனைத்து மாதங்களும் மங்களகரமானவையே, ஆனால் ஷ்ரவண மாதம் குறிப்பாக சிவபெருமானை  வழிபடவும் பிரார்த்தனை செய்யவும் உகந்த மங்களகரமான மாதமாக கருதப்படுகிறது. வட இந்தியாவில் ஷ்ரவண மாதத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்படுகையில், தென் இந்தியாவில் கார்த்திகை மாதம்( அக்டோபர் நவம்பர் மாதங்களில் அமாவாசை அன்று தொடங்கும் நாள்காட்டியில் எட்டாவது மாதம்) குறிப்பாக சிவபெருமானை  பிரார்த்தனை செய்வதற்கு உகந்த  மங்களகரமான மாதமாக கருதப்படுகிறது. ஷ்ரவண மாதத்தின் முக்கியத்துவம் உங்களுக்குத் தெரியுமா? நம்மில் பலருக்கு அதனுடைய முக்கியத்துவம் தெரியாது, ஆனால் அதை மங்களகரமான மாதமாகக் கருதுகிறோம். எனவே இது சிவபெருமானை வணங்குவதற்கு உரிய சிறப்பான நேரம் ஆகும்.

புராணங்களில்,அலங்கார பிரிய விஷ்ணு, அபிஷேகப் பிரிய சிவன் என்று சொல்லப் பட்டிருக்கிறது. விஷ்ணு பகவானை அலங்கரிப்பதில் ஒருவருக்கு மிக்க மகிழ்ச்சி உண்டாகும், எனவ நீங்கள் எப்போதுமே அவருக்கு நேர்த்தியான உடைகள் அணியப்பட்டிருப்பதையும் அழகான ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பதையும் பார்க்கலாம். இதற்கு மாறாக சிவபெருமான் அபிஷேகத்தில் மகிழ்ச்சி கொள்ளுவார். நம்மில் பலர் தினமும் கோவிலுக்கு சென்று சிவலிங்கத்திற்கு நீரை அர்ப்பணிக்கிறோம், ஆனால் விஷ்ணு பகவானுக்கு நாம் அபிஷேகம் செய்வது இல்லை.     

சிவ பெருமான் எங்கு இருக்கிறார்? அவர் ஒரு கோவிலில் மட்டும் தான் வசிக்கிறாரா? அல்ல. அவர் இந்த படைப்பு முழுவதிலும் வெளிப்படுகிறார். சிவபெருமானின் உடல் எந்த மாதிரி இருக்கும்? அவரது உடல் இந்த படைப்பு முழவதும் படர்ந்துள்ளது என்று வேதங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த உடல் அவ்வாறு பரந்திருக்கும் போது எப்படி ஒருவரால் அவர் மீது நீரை ஊற்ற முடியும். அவரால் மட்டுமே அவரது உடல் முழுவதும் நீரை ஊற்றிக்கொள்ள முடியும். ஷ்ரவண மாதத்தில் இந்த பூமிக்கு வானத்தில் இருந்து அபிஷேகம் செய்யப்படுவது போல் பூமியில் எங்கும் மழை பெய்து கொண்டிருக்கும். அது மட்டும் அல்ல, இந்த படைப்பு முழுவதற்குமே வானத்தில் இருந்து நீர் அபிஷேகம் செய்யப்படுவது போல இருக்கும். அனைத்துமே மழையினால் சுத்தப்படுத்தவும், சுத்திகரிக்கப்படுதவும் செய்யப்பட்டு இந்த பூமி அழகில் மலரும்.   

இந்த பூமியே அவரது பாதங்கள். வானமும் நட்சத்திரக் கூட்டமும் அவரது கழுத்தை சுற்றியுள்ள மாலை. இந்த மாதத்தில் சிவபெருமான் தனக்குத் தானே மழை மேகங்களால் அபிஷேகம் செய்து கொள்ளுகிறார். அதனால் தான் இந்த மாதம் சிவபெருமானை வணங்கி வழிபடுவதற்கு உயர்வானதாக கருதப்படுகிறது. இந்த படைப்பு முழுவதும் சந்தோஷத்துடன் மலர்ந்து தெய்வீக அமுதத்தில் நனைகிறது. மொத்த படைப்பும் தெய்வீகத்தில் நனைந்திருக்கும் போது, மனித இனமும் கூட தங்களை அதில் மூழ்கடித்துக் கொள்ளுகின்றன. நாம் இந்த படைப்புடனும் தெய்வீகத்துடனும் ஒன்றாக இணைந்து தெய்வங்களை புகழ்ந்து பாடல்கள் பாடுகிறோம். அதனால் தான் இந்த ஷ்ரவண மாதத்தில் சிவபெருமானை வழிபாட்டு பிரார்த்தனை செய்யவேண்டும் என்று சொல்லப்படுகிறது.  

இந்த சரவண மாதத்தில் வானத்தில் இருந்து பூமிக்கு அபிஷகம் செய்வது போல பூமியெங்கும் மழை பொழியும். மழையினால் பூமியில் அனைத்தும் சுத்தப்படுத்தவும் சுத்திகரிக்கப்படுத்தவும் செய்யப்படுகிறது. பூமி அழகில் மலர்கிறது. ஒருமுறை, சிவபெருமானின் மனைவி, முதல் சீடனும் ஆகிய  பார்வதி தேவி சிவனிடம் எப்படி ஒருவர் பரபிரம்ம கதியை அடைவது எனக் கேட்டார். இதற்கு சிவபெருமான் மிகவும் அழகாக தெய்வீக சுருதி நமது இதயத்திற்குள்ளே ஆழ்ந்து இசைக்கப்படுகிறது என்றும் நமக்குள் அனைத்து நேரமும் அது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் கூறினார். தியானத்தில் அமர்ந்து அந்த உள் ஒலியை தீவிரமாக கவனிக்கவும்.

உங்களால் அதை கேட்க முடியவில்லை என்றாலோ அல்லது உங்களுக்கு அந்த உள் ஒலியை கேட்கும் திறன் இல்லை என்றாலோ உங்களுக்குள் ஆழ்ந்து இருக்கும் ஒலியை தூண்டவும். அமைதியுடன் அமர்ந்து ஆழ்ந்து கேட்கவும். உள்ளுக்குள் இருந்து எதிரொலிக்கும் ஒற்றை கம்பியின் இசையை உங்களால் கேட்க முடிகிறதா? அது மிக நுண்ணியது, ஆனாலும் அது அங்கு இருக்கிறது. நீங்கள் அனைவரும் அதை கேட்கிறீர்களா? இதைத் தான் சிவபெருமான் இடையீடு இல்லாத நித்திய ஒலி என்னும் பொருள் கொண்ட "அபாங்க இசை" என்று கூறுகிறார். பெரும்பாலும் ஒலிகளுக்கு இடையே இடைவெளி இருக்கும் ஆனால் இது இடைவெளி இல்லாமல் ஒரு ரீங்காரம் போல தொடர்ந்து இருக்கும். இது ஒரு சில்வண்டு  ஏற்படுத்தும் ஒலி குறைவான ரீங்காரம் போன்றது அல்லது  ஆட்களோ வாகனங்களோ     எதுவும் இல்லாத தனிமையான ஒரு காட்டில் கேட்ககூடிய மிக மெல்லிய ஒலி போன்றது. நீங்கள் தீவிரமாக அந்த அமைதியை கவனிக்கும் போது உங்களால் அந்த ஒலியை கேட்க இயலும். அந்த ஒலியை தொடர்ந்து கைவைத்தால் நீங்கள் தியான நிலையை எட்டலாம்.

இன்றைய உலகில் இந்த ஒலிக்கு ஒரு மின் விசிறி அல்லது ஒரு குளிரூட்டி ஓடும் பொது ஏற்படும் சப்தத்தை உதாரணமாகக் கூறலாம். அது தடை இல்லாமல் தொடர்ந்து கேட்ககூடிய ஒரு ஒலி மற்றும் அதை கவனித்து வருவது கூட உங்களை தியான நிலைக்கு கொண்டு செல்லும். அந்த செய்யுளில் "சரித்ரதே" என்பதின் பொருள் நீரோடை அல்லது நீர்வீழ்ச்சி ஆகும். எனவே “அபங்க சப்த சரித்ரதே” என்பதன் பொருள் நிரந்தரமான தடையற்ற நீரோடையில் உருவாகும் அலை ஒலி ஆகும்.

கங்கை ஆற்றின் கரையிலோ அல்லது வேறு ஏதாவது ஒரு ஆற்றின் கரையிலோ அமர்ந்து கண்களை மூடி தண்ணீர் தொடர்ந்து பாய்ந்து சென்று கொண்டிருப்பதை கவனிக்கவும். இந்த காலத்தில் வீட்டிலேயே ஒரு நீரூற்றை அமைத்து தண்ணீர் நீரோடையில் தடையின்றி பாய்ந்து செல்லுவது போன்ற ஒலியை கேட்டுக் கொண்டிருக்கலாம். சங்கர் சிவபெருமானின் மற்றொரு பெயர் என்றால் எந்நேரமும் நல்ல நேரமே மற்றும் அனைவரையும் நலனுக்காக ஆசிர்வதிப்பது என்று பொருள் ஆகவே இந்த மாதத்தில் நாம் அனைவருடைய நலனுக்காகவும் பிரார்த்தனை செய்கிறோம்.

அதனால் எவர் ஒருவர் ஒரு ஓடையின் தடையற்ற நிரந்தரமான பாய்ந்து செல்லும் நீரின் ஒலியில் தன்னை திளைத்துக் கொள்ளுகிறாரோ அவர் பரபிரம்மத்தை நோக்கி செல்லுகிறார் என்று சொல்லுகிறார். எவர் ஒருவர் இந்த ஒலியினை கேட்கும் முறையை பூரணமாக அறிந்து   கொள்கிறாரோ, அவர் அவருக்கு உள்ளும் மற்றும் வெளியிலும் உள்ள ஒலிகளை போக விட்டு விடுவார். மற்ற அனைத்து சப்தங்களும் அவருக்கு மௌனமாகவே தோன்றும். இதை செய்வதன் மூலம் ஒருவர் சீக்கிரமே தன் மனத்தினுள் சென்று அவருடைய சொந்த உணர்வுகளின் ஆனந்தத்தை பெறுகிறார்.

ஷ்ரவண மாதத்தில் மழை பெய்யவில்லை என்றால் இந்த பூமி வறண்டு விடும். நமக்கு உணவோ தண்ணீரோ கிடைக்காது. எனவே இந்த மாதத்தில் மழை பெய்வது மிகவும் அத்தியாவசியமாகிறது. முழு வருடத்தின் மழை இந்த மாதத்தில் பொழிந்து முழு படைப்புமே மலர்ந்து காணப்படும். சிவபெருமானை வழிபடும் ஆனந்தத்தில் நாமும் இந்த படைப்புடன் சேர்ந்து உள்ளுக்குள் மலருவோம்.

நாம் அனைவரும் "சிவ பெருமானே! எங்களுடைய கவலைகளை எடுத்துக்கொண்டு எங்கள் அறியாமையில் இருந்து எங்களை விடுவிக்கவும்" என்னும் பொருளுடைய "ஹர ஹர மகாதேவா!" என்று பாடுவோம். சமஸ்கிருதத்தில் "ஜனம் இச்சத் மகேஸ்வரா! மோக்ஷம் இச்சத்  ஜனார்தனா!" என்று ஒரு செய்யுள் உள்ளது. சுய அறிவை எட்டுவதற்கு சிவனை வழிபடவும், முக்தி அடைவதற்கு விஷ்ணுவை வழிபடவும் என்பதே இதன் அர்த்தம்.   

இரு கடவுளும் ஒன்றே, மாறுபட்டவர்கள் அல்ல. விஷ்ணு பகவான் சிவபெருமானின் இதயத்தில் வசிக்கிறார், சிவபெருமான் விஷ்ணு பகவானின் இதயத்தில் வசிக்கிறார். நான் தான் நம்முடைய சௌகரியங்களுக்காகவும் அவர்களுடைய வடிவங்களை கொண்டும் அவர்களை வேறுபடுத்திப் பார்க்கிறோம் ஆனால் உண்மையில் வித்தியாசம் ஏதும் இல்லை. இது ஒரு தெய்வீகத்தன்மை மட்டுமே.

கார்த்திகை மாதத்தில் அதிகமான அளவு இருள் இருப்பதால் சிவபெருமானை பிரார்த்திக்கிறோம். எந்த கடவுளும் இந்த இருளை மறைய செய்யக்கூடிய ஞான ஒளி ஆவர். எனவே தான் கார்த்திகை மாதத்தில் நிறைய விளக்குகள் ஏற்றப்பட வேண்டும் என்றும் ஞானம் தரும் இறைவனை பிரார்த்திக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.கார்த்திகை மாதங்களில் வரும் திங்கட்கிழமைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.     

கேள்வி  - பதில்கள்:

கே: குருதேவ்! ஆன்மிகம் ஜோதிடம் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

ஸ்ரீ ஸ்ரீ:  ஆன்மிகம் ஆன்மாவுடன் தொடர்புடையது. ஜோதிடம் கிரகங்களுடன் தொடர்புடையது. ஜோதிடம் கிரகங்களின் இயக்கங்களை கண்காணிப்பதையும் எதிர் காலத்தில் நடக்கவுள்ள நிகழ்வுகளை கணிப்பதையும் கையாள்வது. வாஸ்து அறிவியல் திசைகள் மற்றும் நில எல்லை ஆகியவற்றுடன் தொடர்புடையது. ஜோதிடம் நேரத்துடன் தொடர்புடையது. ஆனால் நில எல்லைகள் மற்றும் நேரம் ஆகியவைகளை கடந்தவர் சிவபெருமான். அதனால் தான் வாஸ்து அல்லது ஜோதிடப்படி கிரகங்களின் இயக்கங்களின் தவறான விளைவுகளுக்கு தீர்வு ஏற்பட சிவபெருமானை வணங்குவது போதுமானது. அவர் அனைத்து கிரகங்களின் கடவுள் மற்றும் உங்களுடைய நன்மைக்காக கிரகங்களை சாதகமான நிலைகளுக்கு நகர்த்தக்கூடியவர்.