நல்லதும் கெட்டதும் . . . .

ஜூன் 14, 2014

பெங்களுரு, இந்தியா





கேள்வி - பதில்கள்:






குருதேவ்! இந்த உலகில் நல்லவை கெட்டவை ஆகிய அனைத்தும் இயல்பானதே.பின் எதனால் நாம் கெட்டவைகளை நல்லவைகளாக மாற்ற முயலுகிறோம்?

ஸ்ரீ ஸ்ரீ: அதுவும் இயல்பின் ஒரு பகுதியே. மக்கள் பிறக்கின்றார்கள். மக்கள் இறக்கின்றார்கள். அப்படி அவர்களை இறப்பில் இருந்து காப்பாற்ற வேண்டிய அவசியம் என்ன? மருத்துவமனைகள் அனைத்தையும் மூடி விடலாமே. எல்லா சேவைகளையும் நிறுத்தி விடலாமே. எப்படியும் மக்கள் இறக்கத்தான் போகிறார்கள். அவர்கள் சற்று சீக்கிரமே இறப்பதிலோ அல்லது நிதானமாக இறப்பதிலோ வித்தியாசம் ஒன்றும் இல்லை. சீக்கிரம் இறப்பது நல்லதே. இந்த மாதிரியான ஒரு தர்க்கம் நல்லது அல்ல.

உதவி செய்வதே நம்முடைய இயல்பு. ஒளியை கொண்டு வருவதே நம்முடைய இயல்பு. அனைவருக்கும் வசதி, ஆறுதல் கொண்டு வருவதும் அனைவரையும் மகிழ்ச்சியுடன் இருக்க வைப்பதுமே நம்முடைய இயல்பு. எப்படியும் நம்மால் மாறுபட்டு இருக்க இயலாது. படிகாரத்தை பார்த்து நீ என் தண்ணீரை சுத்தம் செய்கிறாய் என கேட்டால் அது என்னுடைய இயற்கை என்று பதில் சொல்லும். சூரியனை பார்த்து நீ என் அனைவருக்கும் வெளிச்சம் தருகிறாய் எனக் கேட்டால் அது என்னுடைய இயற்கை என்று பதில் சொல்லும். ஒரு நட்சத்திரத்தை பார்த்து நீ இரவில் மின்னுகிறாய், அதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லையே என்று கேட்டால் அது மின்னுவது தான் என்னுடைய இயற்கை என்று சொல்லும். அதனால் மற்றவர்களுக்கு ஆறுதல் தருவதும் உதவுவதுமே, நம்முடைய இயல்பு.

ஒவ்வொரு தனி மனிதனும் சந்தோஷத்தையே தேடுகிறான். கெட்ட செயல்களையே செய்யும்   மனிதர்களும் அந்த சந்தோஷத்தை நாடியே அச்செயல்களை செய்கிறார்கள். அவர்களுக்கு சந்தோஷம் கிடைக்காது என அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு சந்தோஷம் கிடைக்காது என்று  தெரிந்திருந்தால் அவர்கள்  அந்த கெட்ட செயல்களை செய்ய மாட்டார்கள். ஒரு போதும் செய்ய மாட்டார்கள். அவர்கள் செய்யும் செயல்களின் மூலம் அவர்களுக்கு சந்தோஷம் கிடைக்காது என்று தெரியாததனால் தான் அவர்கள் அத்தகைய செயல்களை செய்து கொண்டிருக்கிறார்கள்.   
அவர்கள் செய்யும் தவறான செயல்களை தொடர்ந்து செய்வதால் அவர்கள் இன்னும் பரிதாபமான   நிலையையே பெறுவார்கள் என்பதை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுவது நம்முடைய வேலை ஆகும். நீங்கள் நல்ல செயல்களை செய்வதன் மூலமாக சந்தோஷத்தை பெறலாம் என எடுத்துச் சொல்ல வேண்டும்.

குருதேவ்! பித்ரு என்றால் என்ன? பித்ருலோகம் என்றால் என்ன?

ஸ்ரீ ஸ்ரீ: பூத உடலை விட்டு நீங்கிய பிறகு ஆன்மா செல்லும் இடத்திற்கு பெயர் பித்ரு லோகம் எனப்படும். இந்த லோகங்கள் இங்கு மட்டும் தான் உள்ளன. அது தொலைக்காட்சி சேனலை போன்றது. தொலைக்காட்சியின் நாம் ஒரு சேனலை மாற்றினால், மற்ற சேனல்கள் மறைந்து போய் விடும் என்பது அர்த்தம் அல்ல. மற்ற சேனல்கள் இருக்கின்றன ஆனால் நம்மால் அவைகளை பார்க்க இயலாது. அது போலவே நாம் இந்த பரிமாணத்தை தான் பார்க்க முடியும், ஆனால் மற்ற பரிமாணங்களும் இங்கே பரவி இருக்கின்றன. நம்மால் பார்க்க இயலாது. மனம் ஒரு தொலை காட்சி பெட்டியை போன்றது, மற்றும் அனைத்து சேனல்களும் உள்ள இடமே நமது ஆன்மா.

இது மிகவும் சுவாரசியமானது. இது வியக்கத்தக்க மனநிலை தெரியுமா? இந்த படைப்பில் பல அடுக்குகள் உள்ளன. அவற்றில் ஒரு அடுக்கு மனித வாழ்க்கை, மற்றொரு அடுக்கு பிரிந்து   சென்ற ஆன்மா, மற்றுமொரு அடுக்கு தெய்வங்கள் (இந்த அடுக்கில் இருந்தே அனைத்தும் நடக்கின்றன). பின்னர் அங்கே கந்தர்வ அடுக்கு (இசை உலகம்) உள்ளது. ஒரு புகழ் பெற்ற இசைக் கலைஞனிடம் கந்தர்வ ஆன்மா இணைக்கப்பட்டிருக்கும். இம்மாதிரியாக இந்த படைப்பில் பல அடுக்குகள் உள்ளன. 

குருதேவ்! ஒருவர் திரும்ப திரும்ப என்னை எரிச்சலூட்டிக் கொண்டிருந்தால் கோபப்படாமல் எப்படி அவரை சமாளிப்பது?

ஸ்ரீ ஸ்ரீ: அவரும் உங்களால் எரிச்சல் அடைகிறாரா என்று கேட்டீர்களா? அவரிடம் சென்று அவர் எவ்வளவு எரிச்சல் அடைகிறார் என்று கேட்கவும். இந்த மாதிரியான விஷயங்கள் இரு தரப்பு உடையவை. யாரோ ஒருவர் எரிச்சல் ஊட்டினால், நீங்கள் என்ன செய்ய முடியும்? சிலர் அப்படிப்பட்டவர்கள். நீங்கள் எத்தனை முறை தான் அவர்களுக்கு புரிய வைக்க முயன்றாலும் அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். ஆகவே அவர்கள் மீது கோபப்பட்டு உங்களுடைய மன அமைதியை இழப்பதில் என்ன இருக்கின்றது. அது ஒரு புத்திசாலித்தனமான செயலும் அல்ல.
அவர்களுக்கு நீங்கள் மீண்டும் விளக்கி சொல்லுகிறீர்கள், இருந்தும் அவர்கள் கேட்பது கிடையாது. அனைத்திற்கும் மேல் அவர்கள் அந்த ஞானத்தை தவறாக பயன்படுத்துவார்கள். அந்த ஞானத்தை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுவார்கள். அம்மாதிரியானவர்களை உங்களால் என்ன செய்ய முடியும். எனக்கே கூட தெரியவில்லை! உங்களால் எவ்வளவு அமைதியாக இருக்க முடியுமோ இருக்கவும்.

மேலும் உங்களுடைய இயல்பையே மாற்றி விடக்கூடிய சிலரும் இருப்பார்கள். நீங்கள் மிகவும் சிரமப்பட்டு அமைதியாக இருக்கும் போதும், இறுதியில் உங்களை கோபப்பட வைக்கும் செயல்களை செய்து விடுவார்கள். அந்த சூழ்நிலையில், எப்பாடுபட்டாகிலும் உங்கள் மனதை காப்பாற்றிக் கொள்ளவும், அவர்களுக்கு நல்லறிவு அல்லது தண்டனை தருமாறு இறைவனை பிரார்த்திக்கவும்.

குருதேவ்! நான் சாதனா சேவை சத்சங்கம் எதையும் செய்யவில்லை என்றாலும் நீங்கள் என்னுடன் இருப்பீர்களா?

ஸ்ரீ ஸ்ரீ: ஆம். நீங்கள் எப்படி இருந்தாலும் நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன். ஆனால் என்னுடைய உண்மையான கேள்வி என்னவென்றால், நீங்கள் எப்போதும் என்னுடன் இருப்பீர்களா?

நீங்கள் சாதனா செய்பவர் என்றால் நான் ஏற்கனவே உங்களுடன் இருக்கிறேன், நீங்கள் என்னுடன் இருப்பீர்கள். உங்களுக்கு என்னை பிடித்திருக்கிறது என்றால், நீங்கள் என்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்பினால், நீங்கள் என்னுடன் இருக்க கொஞ்சமாவது சாதனா செய்ய வேண்டும்.தினமும் சிறுது நேரம் அமைதியாக அமரவும், சற்று தியானம் செய்யவும்.

குருதேவ்! இளைஞர்கள் மற்றவைகளை விட்டுவிட்டு முழு நேர வாழும் கலை ஆசிரியர்களாக வருவது நல்லதா? அது குடும்ப பொறுப்புகளை புறக்கணித்து விட்டு வருவது போல ஆகாதா?

ஸ்ரீ ஸ்ரீ: இம்மாதிரி ஒவ்வொரு நிகழ்ச்சியையும் தனியாக பார்க்கவேண்டும்.ஒருவருடைய பெற்றோர் வியாபாரத்தில் இருந்தால், அவர்களுடைய குழந்தைகளை அந்த வியாபாரத்தில் சேரவும் அதை மேலும் வளரச் செய்யவும், நான் ஊக்குவிக்கிறேன். சிலர் சிறிய வேலையில் திருப்தியில்லாமல் இருக்கும் போதும் அவர்கள் பெரியதாக ஏதாவது செய்ய வேண்டும் என்னும் ஆர்வமும் வைராக்கியமும், கொண்டிருக்கும் போதும், நான் அவர்களிடம் உலகம் முழுவதும் பயணம் செய்து கற்பிப்பதன் மூலம் நல்ல தனிமனித ஆளுமையை பெற செய்கிறேன். மேலும் அவர்களுடைய தேவைகளை நான் பூர்த்தி செய்கிறேன்.

நான் யாரையும் அவ்வளவு சுலபமாக முழு நேர ஆசிரியராக ஊக்குவிப்பது இல்லை. நான் அவர்களுடைய பெற்றோர்களிடம் இருந்து அனுமதி பெற்றுவர சொல்லுகிறேன். பெற்றோர்களுக்கு சம்மதம் என்றால் மட்டுமே நல்லது. வாழும் கலை ஆசிரியராக இருப்பது சிரமமானதல்ல. கடுமையான தவம் அல்லது காடுகளின் இடையே நடந்து செல்லுவது அல்லது தலையை மழித்துக் கொள்ளுவது, மேலும் ஒரே ஒரு வேளை உணவு உண்பது போன்ற எதையும் மேற்கொள்ள வேண்டியதில்லை. வாழும் கலையில் ஆசியராக இருப்பது ஒரு மரியாதைக்குரிய ஒரு நிலை. உண்மையில் மற்ற அனைத்து தொழில்களையும் விட அதிகமாக மதிக்கப்படுகிறது. வாழும் கலை ஆசிரியர்கள் இந்த சமுதாயத்திற்கு நல்லவைகளை செய்கின்றனர் மேலும்  நிச்சயமாக அதற்கான வெகுமதி அளிக்கப்படுகிறது. 

குருதேவ்! மக்களை அவர்கள் உள்ளவாறே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறீர்கள்.  ஆனால் என்னுடைய கணவர் மிக அதிகமாக குடித்து விட்டு குடும்பத்திற்கு அதிக தொல்லைகள் கொடுக்கிறார். என்ன செய்வது?

ஸ்ரீ ஸ்ரீ: என்ன செய்வது என்று நானும் ஆச்சரியப்படுகிறேன். மது அருந்துவதனால் பெரிய இழப்புகள் ஏற்பகின்றன. லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை பாழாக்கியிருக்கின்றது. மது அருந்துவதனால் லட்சக்கணக்கான குடும்பங்கள் சிரமப்படுகின்றன. அவரை இங்கே அழைத்து வரவும். மாறுபட்ட விதத்தில் நாங்கள் அவருக்கு போதை உண்டாக்குகிறோம். அந்த போதை   ஏற்படும் போது அவருக்கு மற்ற போதைகள் அகன்று விடும்.