மன்னிப்பதற்குரிய ஒரு நேரம்...

வியென்னா,  ஆஸ்திரேலியா

மார்ச் 25, 2014

வாழ்வில் மாற்றத்தை ஏற்க நாம் தயாராக இருக்க வேண்டும். நாம் மாற்றத்தை ஏற்க தயாராக இருந்தால், எப்போதுமே தீர்வுகளை காணலாம். வாழ்க்கை மிக விலைமதிப்புள்ளது. நாம் 84 லட்சம் உயிரினங்களாக பிறப்பு எடுத்த பிறகுதான், மனித உடல் கிடைக்கிறது என்று இந்தியாவில் ஒரு நம்பிக்கை உள்ளது. எனவே இந்த வாழ்க்கை ஒரு இணக்கத்துடன் இருக்க வேண்டும். இயற்கை நம்மை உருவாக்கியது போலவே, நாம் இதயத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும். இதயத்தின் தூய்மையை பராமரித்தால் மனதில் ஒரு தெளிவு வரும், செயல்களில் இணக்கமும், இனிமையும், ஆக்கபூர்வமும் உருவாகும். உங்களால் ஆனந்தத்தை பரப்ப முடியும்.

நம்மால் எவ்வாறு இணக்கத்தை உருவாக்க முடியும்? இன்றைய நடனத்தை பார்த்தீர்களா? உடலின் இசைவிணக்கமான இயக்கமே நடனம் ஆகும். ஒலியின் இசைவிணக்கமான இயக்கமே இசை ஆகும். அதை போலவே மனம், உடல், மூச்சு, அறிவு ஆகியவை ஒரு இணக்கத்துடன் இருப்பதே பேரின்பம். 


வாழ்வில் மீண்டும் மீண்டும் சவால்களை எதிர்கொள்ளுகிறோம். நம்மை சுற்றி பல சிக்கல்களை எதிர்கொள்ளுகிறோம். நாம் நம்முடைய வாழ்வில் சமநிலையை திரும்ப கொண்டு வரவேண்டிய தேவை உள்ளது. அதுவே வாழும்கலை என அழைக்கப்படுகிறது. 

வாழும் கலை என்பது என்ன?
1. இனிமையான மற்றும் கசப்பான சூழ்நிலைகளிலும் நம்முடைய மன நிலையை ஒரே மாதிரியாக வைத்துக்கொள்வது.  
2. மனிதர்களையும், சூழ்நிலைகளையும் உள்ளபடியே ஏற்றுக்கொண்டு அதன்பின் செயலாற்றுவது. வெறுமனே ஏற்றுக்கொண்டு செயலற்றுப்பது அல்ல. ஏற்றுக்கொள்ளுவது மற்றும் தகுந்த செயலை எடுப்பது.
3. மற்றவர்களின் தவறுகளுக்கு உள்நோக்கம் பார்க்கக்கூடாது. உங்கள் மூலமாக ஒரு தவறு ஏற்பட்டால் நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? நடந்து விட்டது. தவறு செய்வது மனித இயற்கை என்று சொல்லி நம்மை மன்னித்து கொள்ளுகிறோம். மற்றொருவர் தவறு, வேண்டுமென்றே செய்ததாக நீங்கள் நினைக்கிறீர்கள். வெறுமனே அவர்கள் மூலமாக நடந்தது என்றும்  அவர்களிடம் எண்ணம் இல்லை என்றும் நாம் பார்ப்பதில்லை.

மூன்று விதமான மக்கள் இருக்கிறார்கள்.

முதல் வகையானவர்கள் மற்றவர்களின் தவறுகளை பெரிதாகவும், தம்முடைய தவறுகளை சிறியதாகவும் நினைப்பவர்கள். இரண்டாம் வகையானவர்கள் தம்முடைய தவறுகளை பெரிதாகவும் மற்றவர்களுடைய தவறுகளை சிறியதாகவும் நினைப்பவர்கள். மற்றவர்களை தம்மை விட மேலானவர்களாக காண்பவர்கள். தவறுகளை தவறுகளாக மட்டுமே பார்ப்பவர்கள் உள்ளனர். தம்முடையது, மற்றவர்களுடையது என்று பார்ப்பதில்லை. இவர்கள் விவேகமுள்ளவர்கள்.  

மற்றவர்களுடைய தவறுகளுக்குப் பின் உள்நோக்கம் பார்க்காமல் இருப்பது ஒரு நல்ல குணம். அது நல்ல படிப்பறிவுள்ள ஒரு மனிதனின் குணங்களில் ஒன்று. மனம் தெளிவாக இல்லாத போதும், இதயம் முழுவதும் வெறுப்பு உள்ள போதும் தான் நம்முடைய செயல்கள் நம்மை பேரழிவுக்கு கொண்டு செல்லும். நாம் தூய்மையான இதயத்துடன் இருக்க வேண்டும், அதுவே நம்முடைய இயற்கை.

தவறுகள் ஏற்படும் போது, அவைகள் ஏற்படுவதை மட்டுமே பார்க்க வேண்டும். யார் மூலமாக அது ஏற்பட்டது என்று பார்ப்பது இரண்டாம் பட்சமானது. இந்த அணுகுமுறையை பின் பற்றினால், உங்களை நடுநிலையில் வைத்திருக்கும். மற்றும் அனைவரும் உங்களோடு இணைந்திருப்பதை உணரலாம். மனம் கோபம் பொறாமை பேராசை போன்ற எதிர்மறையான   குறைபாடுகளில் இருந்து விடுபடும்.    

இதயத்தை எவ்வாறு சுத்தப்படுத்துவது ?

இதயசுத்தம் மூச்சு பயிற்சி மற்றும் தியானம் மூலமாக வருகிறது. இதன் மூலமாக, மன அழுத்தம் வெளியேறுகிறது. மேலும் நம்முடைய இதயம் உலகத்திற்கு வந்தபோது இருந்த மாதிரியே சுத்த நிலைக்கு திரும்பச் செல்லுகிறது. பிராணயாமா மற்றும் தியானம் செய்வதில் நம் மனமும் தெளிவடைகிறது. நம் அனைவருக்குமே பல நேரங்களில் நமக்கு என்ன தேவை அல்லது நாம் என்ன செய்ய வேண்டும் என்பவைகளை பற்றி ஒரு தெளிவான  எண்ணம் ஏற்படுகிறது, இல்லையா?   

இங்கேயும் இரண்டு வகையானவர்கள் உள்ளனர். மிகவும் உணர்ச்சி வயப்படுகிறவர்கள் ஒரு வகை. மிகவும் புத்திசாலித்தனமாக உள்ளவர்கள் மற்றொரு வகை.மிகவும் புத்திசாலித்தனமாகவும், தர்க்கம் புரிபவராகவும், மிக தெளிவான மனதுடனும் இருப்பவர்கள் குறைபாடுகளை தாங்கிக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் எளிதாக  கோபப்படுவார்கள். ஆனால் வாழ்க்கையில் புத்திசாலித்தனம் மட்டுமே போதாது. உணர்ச்சி உடையவராகவும் இருக்கவேண்டும்.

மிகவும் உணர்ச்சி வயப்படுகிரவர்களை சாதாரண நிகழ்ச்ச்சிகள் கூட அழ வைக்கும். அவர்கள் மிக வேகமாக காயப்பட்டு விடுவார்கள். அவர்களால் விமர்சனங்களையும் அவர்களுக்கு பிடிக்காத விஷயங்களையும் ஏற்றுகொள்ள முடியாமல் நிலைகுலைந்து விடுவார்கள். அவர்கள்  உணர்ச்சி அலங்கோலம் அடைவது மட்டுமன்றி மற்றவர்களுக்கும் ஒரு அலங்கோலத்தை உருவாக்கி விடுவார்கள். எனவே வாழ்க்கையில் இரண்டுமே தேவைப்படுகிறது. உணர்ச்சி வயப்படுதல் மற்றும் புத்திசாலித்தனம் இரண்டும் சம நிலையில் இருக்க வேண்டும். மனம் மற்றும் இதயம் இரண்டின் மதிப்பையும் தெரிந்துகொள்ள வேண்டும். வாழும் கலை இந்த சம நிலையை அடைய ஒரு சிறிய படிக்கல்.   

கேள்வி பதில்கள்:

கே: குருதேவ்! வாழ்க்கையின் அர்த்தம் என்ன?

தெரிந்தவர் சொல்ல மாட்டார், சொல்லுபவருக்கு தெரிந்திருக்காது. ஏனென்றால், இந்த கேள்வியே உங்களுக்கு பயணம் செய்வதற்கு ஏற்ற ஒரு வாகனம் போன்றது. வாழ்க்கை என்னும் பயணத்தை நீங்கள் கடந்து சென்று கொண்டிருக்கும் போது, ஒரு ஞானி உங்களிடம் இருந்து உங்களுடைய வாகனத்தை எடுத்துக் கொண்டு இப்போது நீங்கள் போகலாம் என்று சொல்லமாட்டார்.   

வாழ்க்கையின் அர்த்தம் என்ன எனும் இந்த கேள்வி மிக முக்கியமானதும், மதிப்புமிக்கதும் ஆகும். இதை நீங்கள் திரும்ப திரும்ப கேட்க வேண்டும். அதன் பின் தேவையற்ற பொருத்தமில்லாத அற்பமான அனைத்தும் உங்கள் வாழ்வில் மங்கிபோய் விடும்.

கே: குருதேவ்! நாம் உள்ளுக்குள் ஒரு மகிழ்ச்சி மற்றும் நிறைவுடன் இருக்கும் போது, எதனால் அந்த நிலையை இழந்துவிடுகிறோம்.

நீங்கள் இந்த உலகத்தில் இருக்கிறீர்கள் ஒரு தீவில் அல்ல. நீங்கள் மக்கள் பலருடைய சக்தியால் ஆன ஒரு குளத்தில் இருக்கிறீர்கள்.அதனால் நான் இந்த மாதிரி நினைக்கிறேனே! அந்த மாதிரி நினைக்கிறேனே என்றெல்லாம் கவலை கொள்ள வேண்டாம். நேரமும் காலமும் உங்களுடைய மனதில் பதிப்பை ஏற்படுத்தக் கூடியது. இதனால் தான் சுற்றியுள்ள சமுதாயத்தை முன்னேற்றவும் மற்றவர்களுக்கு உதவவும், நம்மால் முடிந்தவற்றை செய்ய வேண்டும். சமுதாயத்தில் ஒரு சந்தோஷ அலையை உருவாக்க வேண்டும் என்று என்று நீங்கள் நினைக்கவில்லையா? நாம் அவ்வாறான ஒரு அலையை கொண்டு செல்லும் போது, துன்பமும் துயரமும் குறைந்து வருவதை நீங்கள் பார்க்கலாம். 

கே: குருதேவ்! மோதல்களையும், வாதங்களையும் உடைய ஒரு உறவிடம் எப்படி அமைதியை கொண்டு வருவது?

இதை கையாள்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன. அந்த நேரத்தில் அந்த இடத்தில் இருந்து நகர்ந்து செல்லவும். ஏனென்றால் அனைவரும் கோபமாக இருக்கும் போது நிலைமை கொதிப்பாகி விடும் எவர் காதிலும் எதுவும் ஏறாது. கோபமாக இருப்பவர்கள் யார் சொல்லுவதையும் கேட்க மாட்டார்கள். அவ்விடத்தில் இருந்து நகர்ந்து செல்லுவதே சிறந்தது.


நிலைமை சரியாக காத்திருக்கவும். பொறுமையுடன் அங்கேயே இருக்கவும். முதலில் அவருடன் ஒத்து போகவும். நான் நீங்கள் சொல்வதை ஒத்துக் கொள்கிறேன் என்று சொல்லவும். உங்கள் கணவரோ அல்லது மனைவியோ உங்களுடன் விவாதம் செய்து கொண்டிருந்தால், இல்லை என்று சொல்லாமல் "நீ சொல்லுவது சரி, நான் ஒத்துக் கொள்ளுகிறேன் என்று சொல்லவும். நீங்கள் அவ்வாறு சொன்ன அடுத்த நொடியே நிலைமை குளிர்ந்து விடும். சிறிய இடைவெளிக்கு பிறகு, ஆனால் என்று ஆரம்பிக்கவும் இது தான் ரகசியம். சில சமயங்களில் மக்கள் என்னிடம் மிகப் பெரிய கருத்துக்களுடன் வருகிறார்கள்.  நான் அவர்களிடம் "உங்களுடைய கருத்துக்கள் மிகவும் புத்திசாலித்தனமானவை, நால்லவை. நடைமுறைக்கு சாத்தியமற்றவை" என்று கூறி விடுவேன். சூழ்நிலையை அமைதியாக்க உங்களுடைய திறமையை உபயோகிக்கவும். அதன் பின் மற்றவரிடம் இருந்து உங்களுக்கு என்ன தேவையோ அதில் இறங்கவும்.