வல்லமை மட்டுமே ஏற்புடையதாகாது!!

பெப்ரவரி 9, 2014

பெங்களூரு, இந்தியா

(ஆறாவது பன்னாட்டு மகளிர் மாநாட்டின் ஒரு பகுதியாக, கணினி மூலம் குருதேவுடன் நிகழ்ந்த  உரையாடல் தொகுப்பு கீழே தரப்பட்டுள்ளது. இது அதிர்ச்சி நிவாரணம், மகளிர் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நாகரீகம், திரைப்படத் தயாரிப்பு, ஆகியவை பற்றி அந்தந்த துறையில் ஈடுபட்டிருக்கும் மகளிருக்கும் உலகெங்கும் போற்றிப் பாராட்டப் பெரும் நமது ஆன்மீகத் தலைவருக்கும் இடையே நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றம் ஆகும். (மூன்று பகுதிகளில் இது முதலாவது பகுதி) 



மகளிருக்கெதிரான குற்றங்களை, முக்கியமாக இந்தியாவிலுள்ள பெரு நகரங்களில் எவ்வாறு நிறுத்துவது

(மேரி கோம் உலக குத்துச் சண்டை இந்திய வீராங்கனை: பத்மபூஷண் விருது பெற்றவர்).

குருதேவ்: நான் எண்ணிக்கொண்டிருந்ததை எவ்வாறு கண்டு பிடித்தீர்கள்?இந்தியாவிலுள்ள பெரு நகரங்களில் மகளிருக்கு எவ்வாறு உதவுவது என்று தான் நானும் சிந்தித்துக் கொண்டிருந்தேன். நான் ஏற்கனவே கூறியபடி, அதிக அளவில் உதவிக் குழுக்களையும், மகளிரைக் கண்காணிக்கும் பணியையும் உருவாக்க வேண்டும். இப்போது ஒன்று தான் செய்திருக்கின்றோம், அது மகிழ்ச்சி கணக்கெடுப்பு. இக்கணக்கெடுப்பில், தன்னார்வத் தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள பிரச்சினைகளுக்குக் காரணத்தைக் கண்டு பிடிக்கின்றார்கள். மக்கள் ஏன் மகிழ்ச்சியாக இல்லை? குடும்பங்கள், சமுதாயம் மகிழ்வுடன் இல்லையெனில், வன்முறைகள் அதிகரிக்கும். இத்தகைய சமுதாய தொடர்புகள் ஒரு வேளை உதவலாம்.

குற்றவாளிகளைத் தண்டிக்கும்  சட்டங்களும், நீதி மன்றங்களும் தேவை. ஆனால் அவை குற்றம் நிகழ்ந்த பின்னர் செயல்படுபவை ஆகும். அதற்கு முன்பு, மகளிருக்கெதிரான குற்றங்களைத் தடுக்கும் விழிப்புணர்வு அலையை எழுப்ப வேண்டும். இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று போதைப் பொருட்கள் ஆகும். போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்கள் சமுதாயத்தில் பிரச்சினைகளை உருவாக்குகின்றார்கள்.

மகிழ்ச்சியின்மையினாலேயே போதைக்கு அடிமை ஆகின்றார்கள். மகிழ்ச்சியான ஒருவன் போதைப் பொருட்களுக்கு அடிமை ஆகமாட்டான். மகிழ்ச்சியற்றவனே போதைக்கு அடிமை ஆகின்றான். மக்களுக்குத் தங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் ஆதரவும், அக்கறையும் ஏற்படுமாறு நாம் செய்ய வேண்டும். எவ்வாறு சமுதாய மாற்றத்தை ஏற்படுத்துவது, எவ்வாறு அதிக ஒற்றுமையுணர்வை ஏற்படுத்துவது, என்பவற்றுக்கான திட்டங்களை ஏராளமாக நாம் சிந்திக்கலாம். நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது, காந்தீயக் கொள்கைகளுடன் வளர்க்கப்பட்டோம். வகுப்பறையில் யாரவது ஒரு மாணவன் அடாவடியான சுபாவம் உள்ளவனாக காணப்பட்டால்," ஏய் நீ நிலை இழந்து கொண்டிருக்கின்றாய். உன் இயல்புக்கு திரும்பி வா" என்று அனைவரும் கூறுவோம். இதுதான் அக்கால இயல்பு. இன்று, நீங்கள் அடாவடித்தனமாக இருந்தால் ஒரு கதாநாயகனாக கருதப்படுகின்றீர்கள். அக்காலத்தில், கருணையுள்ளவன் கதாநாயகனாக கருதப்பட்டுப் போற்றப்பட்டான்.

எனவே, தான் என்னும் அகந்தையுடன் கூடிய பகைமைத் தாக்குதல், சமுதாயத்தில் வன்முறைகளுக்குக் காரணங்களில் ஒன்றாக அமைகின்றது. உலகெங்கிலும்,மற்றும் நமது நாட்டிலும், குழந்தைகள் பார்க்கும் வன்முறைத் திரைப்படங்கள் அவர்களை குற்றங்களுக்கு எதிரான உணர்வற்றவர்களாக ஆக்கி விடுகின்றன. வீடியோ விளையாட்டுக்களில் துப்பாக்கி எடுத்து, கப்பல்கள், விமானங்கள், மனிதர்கள் ஆகியவற்றைச் சுட்டுத் தள்ளுகின்றனர். பின்னர், உண்மையான துப்பாக்கியால் சுடும் போது, எந்த உணர்வும் அற்றவர்களாக ஆகி விடுகின்றனர். அது குற்றம் என்னும் உணர்வே ஏற்படுவதில்லை. மிகவும் மரத்துப் போனவர்கள் ஆகி விடுகின்றனர். இத்தகைய வன்முறை விளையாட்டுக்கள் மறுக்கப்பட வேண்டும் உங்களில் எத்தனை பேர் இதை ஏற்றுக் கொள்கின்றீர்கள்? வன்முறை விளையாட்டுக்கள் ஒழிக்கப்பட்டு நமது குழந்தைகளிடம்  பிராணிகள் மனிதர்கள் ஆகியோரிடம் கூருணர்வை ஏற்படுத்த வேண்டும். கல்வியும், விழிப்புணர்வு ஏற்படுத்துதலும் முக்கியப் பங்கினை வகிக்க முடியும். அரசாங்கத்தில், கண்டிப்பு மிகுந்த சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.அரசிடமே அத்தனை பளுவையும் ஏற்றாமல், சமுதாய அமைப்புக்களும் ஒன்று கூடி இதற்காக உழைக்க வேண்டும்.அப்போது பெரும் மாற்றம் ஏற்படும்.

உலகிலுள்ள பல பெண்மணிகளின் சார்பாக இக்கேள்வியைக் கேட்கின்றேன். மக்கள் தேவாலயங்களுக்குச் செல்கின்றார்கள், கடவுள் உண்டு என்று அறிகின்றார்கள். ஒரு உயர் அழைப்புக் காத்திருக்கின்றது என்று உணருகின்றார்கள் ஆயினும் அத்தகைய பெரு நிலையை அடைய முடிவதில்லை. இவ்வுலகில் மக்களுக்கு தேவையான அளவு செல்வம் இருந்தும் வறுமை காணப் படுகின்றது. அன்றாட வாழ்வியலில் நாம் எங்கு தவறிழைக்கின்றோம்(க்ரிசில்டா கனந்தா: தென் ஆப்பிரிக்க ரேடியோ ஜாக்கி)

குருதேவ்: உங்கள் கவனத்திற்கு ஒன்றினைக் கொண்டுவர விரும்புகின்றேன். பேராசையின் விளைவே பாதுகாப்பின்மை. இவ்வுலகில் உங்களுக்குப் போதுமான அளவு அன்போ, அக்கறையோ கிடைக்க வில்லையென்றால் நீங்கள் பேராசை கொண்டவராகி விடுகின்றீர்கள். ஏனெனில் பணம் மட்டுமே பாதுகாப்பைக் கொடுக்கும் என்று எண்ணுகின்றீர்கள். உங்கள் மீது யாரும் அக்கறை கொள்ளவில்லையெனில், அதிக செல்வம் அடைந்தல் உதவும் என்று எண்ணுகின்றீர்கள். இவ்வுலகில் சிலரின் பேராசையே பலரின் வறுமைக்குக் காரணமாகின்றது. உங்களில் பலர் என் கருத்தை ஏற்றுக் கொள்வீர்கள் என்று எண்ணுகின்றேன். இது ஆப்பிரிக்க கண்டத்திலும், பல ஆசிய நாடுகளிலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. எனக்கு ஐரோப்பிய நாடுகளைப் பற்றித் தெரியாது. அங்கு ஊழல் இருந்தாலும் இங்குள்ள அளவு இல்லையென்றே எண்ணுகின்றேன். ஊழல் என்பது பொது மக்களைப் பற்றி அக்கறை கொள்ளாத சிலரின் பேராசை ஆகும். அதுவே வறுமைக்கும் ஒரு காரணமாகின்றது.

வறுமைக்கு இரண்டாவது காரணம் சோம்பல். உதாரணமாக எத்தியோப்பியாவில் என்ன நிகழ்கின்றது பாருங்கள். ஏழு ஆண்டுகளாக எத்தியோப்பியாவில் பஞ்சம் ஏற்பட்டு எல்லா உலக நாடுகளிடமிருந்தும் உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கின்றனர். ஏழாவது ஆண்டு அதிக மழை பெய்த போதும், ஒருவரும் உழைக்க விரும்பவில்லை.இலவசங்கள் வளமைக்கு வழி வகுக்காது. மக்களுக்கு சக்தியூட்ட வேண்டும். ஏழைகளுக்கு சக்தியூட்டி, தன்னம்பிக்கையை புகட்டுவதே அவர்களை வறுமையிலிருந்து விடுபடச் செய்யும். அது போன்று செல்வம் உள்ளவர்களிடம் கருணை பெருந்தன்மை ஆகியவற்றை ஏற்படுத்தி, அவர்கள் தொண்டாற்ற முன்வர  வேண்டும். இவ்வாறு நிகழ்ந்தால் அரசு, ஒவ்வொரு வணிக நிறுவனமும்கூட்டமைப்பு  சமுதாயப் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயச் சட்டம் இயற்ற வேண்டியதிருக்காது. நிறையப் பணிகள் காத்திருக்கின்றன. உலகெங்கிலும் பல சமய ஆன்மீக அமைப்புக்கள், தேவாலயங்கள்,நம்பிக்கை நிறுவனங்கள் எளியோருக்குப் பல நற்பணிகள் சிறந்த முறையில் செய்து வருகின்றன. ஆயினும் அவையெல்லாம் போதுமான அளவில் இல்லை என்றே கூறுவேன்.

குருதேவ்! பூமிக்கும், மக்களிடையேயும், மகளிருக்கெதிராகவும் வன்முறை ஏற்படுத்தும்  இயந்திரத்தனமான, சுருங்கிய, முறிந்த பிடிவாதமான மனதை மாற்ற நாம் என்ன செய்ய வேண்டும்? மகளிருக்கெதிரான குற்றங்கள் இத்தகைய பிரிவினை, தனி நிலை ஆகியவற்றுடன் நெருக்கமாக இணைந்துள்ளது.

(வந்தனா சிவா: நூலாசிரியர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்)

குருதேவ்: மக்கள் விஞ்ஞானிகளாகவோ, இயற்பியல் வல்லுநர்களாகவோ இருந்தால் வாழ்கையை ஒரு பரந்த நிலையில் காண முடியும். அப்போது வன்முறையில் ஒரு நாளும் ஈடுபடமாட்டார்கள். கல்வியறிவு, முக்கியமாக அறிவியல் ஆன்மீக கல்வி அற்ற நிலையிலேயே மக்கள் மிகவும் கடுமையானவர்களாக ஆகின்றார்கள். மேலும் மன அழுத்தமும் வன்முறைக்கு முக்கியக் காரணம். இதுதான் முதல் காரணம்.இரண்டாவது காரணம் மது அருந்துதல். இந்தியாவில் மகளிருக்கெதிரான வன்முறைகள் அனைத்தும் போதைக்கு அடிமையானதினாலேயே நிகழ்ந்திருக்கின்றன. நம் நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் பெரியதான திஹார் சிறைக்குச் சென்று, அங்குள்ளவர்களுடன் பேசி கொண்டிருந்த பொது நான் என்ன அறிந்து கொண்டேன் தெரியுமா? மகளிருக்கு எதிரான குற்றங்களில் 93%  மது மற்றும் போதைப் பொருட்களின் செயல் விளைவில் நிகழ்ந்தவை. ஆகவே வாழ்வு முறையில் மாற்றம் தேவை.

சிறு கிராமங்களில் ஒவ்வொரு மாலை வேளையிலும், ஆண்கள் குடித்துவிட்டுப் பெண்களை அடிக்கின்றார்கள். காலை எழுந்தவுடன் அவர்கள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கின்றார்கள்.பெண்கள் இயல்பாகவே கருணையுள்ளவர்களாக இருப்பதால் மன்னிக்கின்றார்கள். ஆனால் மீண்டும் இக்கதை தொடர்கின்றது. ஓரிரு நாட்கள் சரியாக இருந்து பின்னர் மீண்டும் பெண்களுக்கு இத்தகைய வன்முறை நிகழ்கின்றது. போதைப் பொருட்கள் விற்பனை ஓராண்டில் மூன்று மடங்கு கூடியுள்ள நிலையில் இந்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது. எப்படி முடியும்? எனவே, நாம் இதற்கு ஒரு முடிவு ஏற்படுத்தி, மொத்த மனப்பான்மையையும் மாற்ற வேண்டும். அப்போது தான் ஒரு பாதுகாப்பான சமுதாயத்தை ஏற்படுத்த முடியும்.

மக்கள் ஒருங்கிணைந்து அமைதியாக வாழ வழி செய்ய, உலகத் தலைமைக்கு முக்கியமாக மத்தியக் கிழக்கு நாடுகளின் தலைமைக்கு உங்கள் செய்தி என்ன? நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள குர்திஷ் நாடு ஒருங்கிணைந்து அமைதியுடன் வாழ உங்களது தொலைநோக்கு என்ன?

முனைவர் ஆக்ராவி : குர்திச்தானிலிருந்து, யுனிசெப்புடன் இணைந்து செயல் படும் பெண்ணியக்கத்தின் முக்கிய உறுப்பினர்)

குருதேவ்: இந்தப் பிரச்சினை மிகப் பெரியது. பல நூற்றாண்டுகளாக உள்ளது. இதற்கு தீர்வு இல்லை. நாம் அனைவரும் கூட்டாகச் சிந்தித்து, எது எங்கு சரியானதாக காணப்படுகின்றதோ, அதை நாம் செயல்படுத்த வேண்டும். அடிப்படையில் மக்கள் தொடர்பு ஏற்படுத்துங்கள். இங்குள்ள நாம் அனைவரும் மக்கள் தொடர்பு ஏற்படுத்த முனைந்தால், எங்கு பதற்றம் ஏற்படுகின்றதோ, அதைக் குறைக்க முயற்சித்தால் அதுவே நாம் ஒரு சிறிது செயலாற்றியதாகும்.

எங்களது ஜெர்மன் ஆஸ்ரமத்திற்கு இஸ்ரேலில் இருந்தும், பாலஸ்தீனத்தில் இருந்தும் சில பெண்கள் ஒரு சமயம் வந்திருந்தது எனக்கு நினைவில் வருகின்றது. முதலில் அவர்கள் ஒருவருக்கருகில் ஒருவர் அமரவோ, ஒருவரையொருவர் பார்க்கவோ கூட மறுத்து விட்டார்கள். சில தினங்களுக்குப் பின்னர் சில விளையாட்டுக்களும், பஜனைப் பாடல்கள் பாடுதலும் நிகழ்ந்த பிறகு அவர்கள் நல்ல தோழியர் ஆயினர்.

மற்றொரு உதாரணம் தருகின்றேன்.இது 2007ல் நிகழ்ந்த கதை. பாக்தாத், இராக் பகுதிகளிலிருந்து 50 இளைஞர்களும், லெபனான் போன்ற பிற அரபு நாடுகளிலிருந்து 150 இளைஞர்களும் இங்கு வந்திருந்தனர். ஆனால் முன் ஏற்பாடு எதுவும் இன்றி, தற்செயலாக இஸ்ரேலிலிருந்து 22 பேர் அதே சமயத்தில் வந்திருந்தனர்.

முதல் நாள் பெரும் வாண வேடிக்கை நிகழ்ந்தது. இராக்கியர்கள், தாம் ஏமாற்றப் பட்டு விட்டதாகவும், இஸ்ரேலியர்கள் அங்கிருப்பது தெரிந்திருந்தால் அவர்கள் அச்சமயம் வந்திருக்க மாட்டார்கள் என்றும் கத்தினார்கள். எதுவாயினும், அடுத்த விமானத்தை பிடித்துத் திரும்பி செலவது என்பது முடியவில்லை.ஏழாவது நாள் அவர்கள் பயிற்சி முடிந்து செல்லும் போது ஒவ்வொருவர் கண்ணிலும் கண்ணீர்! எனவே, அந்தந்த அரசினாலோ, அல்லது தன்னல அக்கறையினாலோ, ஒரு செயற்கையான பய மன நோய் அவர்களைப் பற்றியிருந்திருக்கின்றது.அதை உடைத்தெறிய வேண்டும். நாம் தெரிவிக்க வேண்டிய செய்தி என்னவென்றால், " விழித்தெழுங்கள்! அனைவரும் மனிதர்கள். நாம் அனைவரும் கை குலுக்கி ஒன்றிணைந்து ஏதேனும் செய்வோம்" என்பதே ஆகும். இது ஒரு பெரும் மாற்றத்தை உருவாக்கும்.

அன்னிகா டோப்பிங்: யோகிக் மூச்சுப் பயிற்சி அதாவது சுதர்சன்க்ரியா மரபணு நிலையில் நிகழ்த்தும் மாற்றத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் ஒஸ்லோ பலகலைக் கழகத்தைச் சேர்ந்த முனைவர் பஹ்ரி சாட்சயோக்லுவை அண்மையில் பேட்டி கண்டேன்.  அவர் அதிசயத்தக்க விஷயங்களைக் கண்டு பிடித்திருக்கின்றார்.  சுதர்சனக் க்ரியா உயிரணுவில் மாற்றம் ஏற்படுத்தக் கூடும் என்று கூறினார்.
முன்னர் மனித உயிர் திடமானது நெகிழக் கூடியவை அல்ல என்று எண்ணிக் கொண்டிருந்தோம். இது  உயிரணு மைய அளவில் நாம் பாதிப்பினை ஏற்படுத்துகின்றோம் என்பதை மிகவும் சந்தேகமும் எதிர்ப்பாற்றலும்  மிக்கவர்களை கூட நம்ப வைக்கும் என்று கூறுகின்றீர்களாஇது முற்றிலும் திறந்து, மக்களை அடையும் ஒரு வழியா ?

(அன்னிகா டோப்பிங் ஒரு சுவீடன் நாட்டு தொலைக்காட்சிப் படைப்பாளர் மற்றும் தொகுப்பாளர்

குருதேவ்: ஆம்.கடந்த 32 ஆண்டுகளாக இந்தப் பயிற்சியை செய்யும் லட்சக்கணக்கான மக்களிடம் உருமாற்றத்தைக் காண்கின்றேன். கண்கூடாகக் காண்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படுவது வரவேற்கத்தக்கதாகும்.  கண்கூடாக நிகழ்வதை முறையான தர்க்க ரீதியில் அறிவியல் பதிவு செய்து வருகின்றது.முனைவர் பாஹ்ரியின் ஆராய்ச்சி மிகவும் சுவாரஸ்யமானது ஆகும்.

பெங்களூருவில் உள்ள தேசீய மன நல மற்றும் நரம்பியல் நிறுவனம் மற்றும் புது டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ இயல் நிறுவனம் இரண்டும், இது போன்ற ஆய்வுப் பணிகளைச் செய்து கொண்டு வருகின்றன. தியானம், மூச்சுப் பயிற்ச்சிகள், ஆகியவை மக்களை மன அழுத்தம், மற்றும் பிற எதிர்மறை சிந்தனை போக்கு ஆகியவற்றிலிருந்து வெளிக் கொண்டு வர முடியும் என்று கண்டு பிடித்திருக்கின்றார்கள். மேலும் நேர்மறை ஆற்றல், மகிழ்ச்சி, உள்இளைப்பாறல் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றது. நிச்சயம் இவை நிகழ்கின்றன. அண்மைக் காலத்தில், உடல், மன இயக்கம்- அதாவது எண்ணங்கள் உடல்நலக் கூறுகளில் ஏற்படுத்தும் தாக்கம், உடல்நலக் கூறுகள் நடத்தையில் ஏற்படுத்தும் தாக்கம் இவையாவும் அறிவியல் சமூகத்தினால் ஐயம் திரிபற நிரூபிக்கப்பட்டு விட்டது.

நமஸ்தே குருதேவ்! அண்மைக் காலத்தில் ஐரோப்பிய யூனியன் பெண்களின் மீது அதிகமான சுமையை ஏற்றுகின்றது.  ஏனெனில் பெண் பணியாளர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர்.  பெண்கள் குடும்பத்தைக் கவனித்துக் கொண்டு, நல்ல மனைவியாகவும் இருந்து, பணியிலும் ஈடுபட வேண்டியதுள்ளது. இது மல்டாவின் பெண்களைப் பெரும் அழுத்தத்திற்கு ஆளாக்கியிருக்கின்றது. பல செயல் பங்குகளை ஏற்றிருக்கும் இப்பெண்களுக்கு அவர்களை மேம்படுத்தும், வகையில் ஒரு செய்தியை வழங்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கின்றேன்

(கிளைர் எஜியஸ்: மால்டாவிலுள்ள தொலைக்காட்சிப் படைப்பாளர்)

குருதேவ்: என்னுடைய பார்வையில் அழுத்தம் எனபது குறைந்த ஆற்றல் சக்தியுடன் 
குறைந்த காலத்தில் அதிக வேலைகள் செய்யும் நிலை என்பதாகும். ஒன்று, உங்கள் சக்தியைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் அல்லது வேலையை குறைத்துக் கொள்ள வேண்டும். இக்காலத்தில் வேலைகளைக் குறைத்துக் கொள்ளுவது எனபது சாத்தியம் இல்லை. எனவே உங்கள் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கையை ஒரு பரந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் தான் அது இயலும்.ஒவ்வொரு நாளும் பல அழுத்தமான நிகழ்வுகள் ஏற்படுகின்றன. இது புதியவை அல்ல. திரும்பிப் பாருங்கள். சென்ற ஆண்டு, ஆறு மாதங்களுக்கு முன்னர், இது போன்ற பதட்ட  நிலையை சந்தித்து அதைத் தாண்டி வரும் சக்தியைப் பெற்றிருந்தீர்கள். ஆகவே, தற்போதுள்ளது போன்று எந்த விதமான அழுத்தம் ஏற்பட்டாலும் அவற்றைத் தாண்டி வர முடியும் என்று உங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை அனுபவங்களையே திரும்பிப் பார்த்து தற்போதுள்ள அழுத்தத்தை கையாளும் சக்தியைப் பெறுங்கள்.

இரண்டாவது, சில மூச்சுப் பயிற்சிகள் செய்யுங்கள். சிறிது தியானம் செய்யுங்கள்.  நிலைமை நிச்சயம் மாறும் என்று உறுதி கொள்ளுங்கள். மூன்றாவது, சற்று வெளியில் நடந்து இயற்கையை ரசியுங்கள். இயற்கை உங்களுக்கு எந்தச் சிக்கலையும் சமாளிக்கும் பலம் மற்றும் தைரியம் அளிக்கும்.

நான் பஹ்ரைனில் இருந்து வருகின்றேன். கடந்த எட்டு ஆண்களாக வாழும் கலையில் இருக்கின்றேன். வாழும் கலையைப் பற்றி, வாழும் கலையில் இல்லாதவர்களிடம் பேசும் போது, அவர்கள் இது நமது சமயத்திற்கு புறம்பானது என்று கூறுகின்றார்கள். யோகா மற்றும் தியானம் என்னும் சொற்களைக் கேட்டாலே அவற்றை சமயத்துடன் இணைத்து எண்ணிக் கொள்ளுகின்றனர். இவர்களுக்குப் பதிலளிக்க என்ன ஆலோசனை தங்களால் எனக்குக் கூற முடியும்?

குருதேவ்: துரதிருஷ்டவசமாக இவ்வுலகில், சமயத்திற்கும் ஆன்மீகத்திற்கும் தனிச் சிறப்பியல்பு வித்தியாசங்கள் இல்லை.ஆன்மிகம் என்பது அனைத்து சமயத்தவரையும் ஒன்றிணைக்கும் உயர் தகவு ஒருங்கியம் ஆகும். கல்வியறிவு தான் இதைப் புரிந்து கொள்ள உதவும்.

யோகா என்பது எளிமையான உடல் பயிற்சி.  சமய நம்பிக்கைகளுடன் இது சம்பந்தப் பட்டதல்ல. ஆயினும் உலகின் பல பகுதிகளில் மக்கள் இதை உணரவில்லை.யோகா என்பது ஹிந்துக்களுடன் சம்பந்தப்பட்டது என்றே எண்ணுகின்றனர். சனாதன தர்மம் என்னும் ஹிந்து வழியில் அது வந்ததாயினும் உலக மக்கள் அனைவருக்கும் அதனால் பயன் உண்டு. ஆயுர்வேதா என்னும் மூலிகை மருத்துவம் போன்றது அது, உலகளாவியது. எனவே, உலகியல் பண்புக் கூறுகள் எங்கிருந்து வந்தாலும், எந்த சமயம், எந்த மரபு, ஆகியவற்றிலிருந்து வந்தாலும், மனித மேன்மைக்காக அவற்றை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவை நன்மை தருமானால் அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். காழ்ப்புணர்ச்சி இருப்பதை அறிவேன். ஆனால் அது மறைந்து கொண்டே வருவதையும் காண்கின்றேன்.

ஆரம்ப காலங்களில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் நான் இந்த மூச்சுப் பயிற்ச்சியை கற்றுக் கொடுக்கத் துவங்கிய போது நான் ஏராளமான எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. பின்னர் மக்கள் இதிலுள்ள பயனை அறிந்து கொள்ளத் துவங்கினார்கள். நன்மையானதாக இருந்தாலும், யாராவது எதற்காவது எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டு தான் ,இருப்பார்கள். ஒரே அறையில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து அமர்ந்து பேசிக்
கொள்வதைப் பலர் எதிர்த்தனர். இப்போது அவையெல்லாம் வழக்கொழிந்து போன கருத்துக்களாகி விட்டன. முற்போக்குச் சிந்தனையும், அறிவுத்திறனும் உள்ளவர்களாக நாம் இருக்க வேண்டும்.

பிரார்த்தனை இல்லாமல் முன்னேற்றம் இருக்குமா?

குருதேவ்: பிரார்த்தனை நிகழும் காலம் இரண்டு வகைப்படும். ஒன்று நீங்கள் மிகவும் நன்றியறிதலுடன் இருக்கும் போது, "கடவுளே நான் இதை அடைந்தேன் மிக்க நன்றிஇது பிரார்த்தனையின் ஒரு நிலை. நீங்கள் உதவியற்று இருக்கும் போது உங்களால் எதையும் சமாளிக்க இயலாத போது, உங்கள் கை மீறி நிகழ்வுகள் செல்லும் போது நீங்கள் விரக்தியடையலாம் அல்லது இறைமையிடம் பிரார்த்திக்கலாம். எனவே பிரார்த்தனை என்பது நமது மனதையும்அறிவையும் காத்துக் கொள்ள உதவும் கருவி. எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அறிந்தவர்கள் ஒருவேளை நரம்புத்தளர்ச்சி அடைந்து வீழ்ந்துவிட மாட்டார்கள். ஒருவேளை என்பதை இங்கு சேர்த்து

கொள்கின்றேன். எனவே முன்னேற்றம் என்பது பிரார்த்தனையால் மட்டும் வருவது அல்ல, உங்களது ஆற்றல் மிக்க செயல்த்திறன் மூலமே அது வரும்.

குருதேவ் ! என்னுடைய கேள்வி என்னவென்றால், ஒன்பது மாத கர்ப்ப காலத்தில், எந்த கட்டத்தில், ஆத்மா சிசுவின் உடலில் நுழைகின்றது?

(நைடா க்லவிஷ்:நியூசிலாந்திலிருந்து மாஒரி கட்சித் தலைவர்)

குருதேவ்: எனக்குத் தெரியாது. ஆனால் பழமையான சாஸ்த்திரங்களின் படி, கருத்தரிப்புக் காலத்திலோ, ஐந்தாவது மாதத்திலோ, அல்லது குழந்தை பிறக்கும் காலத்திலோ, ஆத்மா அவ்வுடலுக்குள் நுழைகின்றது. கற்றறிவாளர்களிடையே பல கருத்து வேற்றுமைகள் உள்ளன. சில சமயங்களில் பிறந்தவுடன் குழந்தை. மூச்சு விடத் துவங்கும் போது கூட ஆத்மா அவவுடலுக்குள் நுழையலாம்.