ஒரு நல்ல வாழ்க்கைத் துணையாக இருப்பது.....

பிப்ரவரி 21, 2014

பெங்களுரு, இந்தியா


கேள்வி - பதில்கள்

கே: எது ஒருவரை நல்ல வாழ்க்கைத் துணையாக்குகிறது? ஒரு நல்ல வாழ்க்கைத் துணையிடம் எந்த நற்பண்புகளைப் பார்க்க வேண்டும்?

குருதேவ்: எனக்கு கருத்தோ அனுபவமோ இல்லை. நல்ல வாழ்க்கைத் துணையை அடைவதில் வெற்றி பெற்றவர்களிடம் நீங்கள் கேட்க வேண்டும். வேண்டுமென்றால் நீங்கள் யாரை உங்களுடைய வாழ்க்கைத் துணையாக் தேர்வு செய்கிறீர்களோ, அவரிடம் எந்த கோரிக்கையையும் வைக்காமல் அவருடைய வாழ்வில் பங்களிக்கலாம். அவரிடம் கோரிக்கையை வைக்க ஆரம்பிக்கும் போதே,  நீங்கள் பரிதாபமானவராகி விடுவீர்கள். நீங்கள் உங்கள் கணவரிடம் அல்லது மனைவியிடம் இருந்து அவர்கள் இதை செய்ய வேண்டும் என்று கோரினால், ஒரு நாள் நீங்கள் பரிதாபத்திற்கு உரியவர் ஆகிவிடுவீர்கள்.
இரண்டாவது மிகப்பெரிய பிரச்சினை உங்களுடைய புகுந்த வீட்டார். நீங்கள் என்ன செய்தாலும் அவர்களை திருப்திப்படுத்த இயலாது, ஏதாவது குறை கூறுவார்கள், உங்கள் மன அமைதியும் கெட்டுவிடும். இதை நீங்கள் நிறுத்த வேண்டும். உங்களுடைய சேவை மற்றும் அன்பினால் அவர்களை வெற்றி கொள்ள வேண்டும்.

புதிதாக மருமகள் வரும்போது, அவள் அன்பானவளாக இருந்தால், 6 மாதத்திற்குள்ளாகவே குடும்பத்தினரின் மனதை வென்று விடுவாள். எப்படி மக்களுடைய மனங்களை கவர்வது என்ற திறமையை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அந்த குடும்பத்திற்கு சேவை உணர்வுடன் முழுமையான தியாக உணர்வுடனும் செல்ல வேண்டும். இந்த மாதிரியாக செல்லும் சில மாதங்களிலேயே   புகுந்த வீட்டாரிடம் இருந்து நீங்கள் நன்மதிப்பை  பெற்று விடுவீர்கள். எனவே பெரிய மனத்துடனும் பெரிய இதயத்துடனும் நீங்கள் செல்லும் அந்த புதிய குடும்பத்தை வென்று விடலாம். அனைத்தும் நன்றாகவே அமையும். 

கே: அருள் என்பதன் பொருள் என்ன என்று தயவு செய்து விளக்க முடியுமா?

குருதேவ்: விளக்கி சொல்ல முடியாத ஒன்று. உங்களுடைய திறமைக்கு மிஞ்சியதாகவும், கொள்ளும் திறனுக்கு மேலும் எதாவது ஒன்று கிடைத்திருப்பதாக நீங்கள் நினைக்கும் போது, அது உங்களுக்கு ஒரு பரிசாகத் தெரியும். அருள் என்பது இந்த பரிசே. அதுவே மிக நெருங்கிய பொருள். பெறுவதற்கு தகுதி இல்லாத ஒரு பொருள் கிடைக்கும் போது அதை கடவுள் அருள் என்று கூறுகிறோம். அதனால் தான் அது அருள் எனப்படுகிறது.

பள்ளிக்கூடங்களில் நீங்கள் கருணை மதிப்பெண்கள் என்று கூறுவீர்கள் ஆசிரியர் நீங்கள் பெறத் தகுதியில்லாத போதும், உங்கள் மேல் ஏற்படும் அன்பினாலும், உங்களால் ஏற்படும் மகிழ்ச்சியினாலும் உங்களுக்கு மேற்கொண்டு மதிப்பெண்கள் தருவார். றத் தகுதி இல்லை என்றாலும், அன்பினாலும் நல்லுனர்ச்சியினாலும், தரப்படும் ஒன்றே அநேகமாக கருணை அல்லது அருள் என்று கூறப்படுகிறது.

நான் அதற்கு தகுதியானவன் என்று என்னும் போது, நான் அதை கோருகிறேன். பிறகு அதை எனக்கு கொடுப்பது கொடுப்பவருடைய கடமை ஆகும். அருள் எப்போதுமே நன்றி உணர்வோடு சேர்ந்து இருப்பது. உங்களுக்கு தகுதியுள்ள ஒன்றை நீங்கள் பெறும் போது அதற்காக நன்றியுணர்வோடு இருப்பதில்லை. ஆனால் பெறத் தகுதியில்லாத ஒன்றை பெறும் போது, அதிக நன்றியுள்ளவராக இருக்கிறீர்கள். அருளும் நன்றியுணர்வும் மிகவும் தொடர்புடையவை.

கே: விதியை மாற்ற முடியுமா? எனில், எப்படி? நான் என்னுடைய கெட்ட கர்ம வினை பலன்களை கழுவி விட விரும்புகிறேன்,

குருதேவ்: நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கிறீர்கள். சரியானதை தான் செய்கிறீர்கள். தியானம், மந்திரங்கள் உச்சரிப்பு,  சேவைகளில் அதிகள் ஈடுபடுதல் ஆகியவற்றின் மூலம் கர்ம வினை பலன்களை கழுவி விட முடியும். 

கே: நம்முடைய உணர்வு அவ்வளவு சக்தி வாய்ந்தது என்றால், ஏன் அதனால் நம் உடல் வியாதிகளை குணப்படுத்த இயலவில்லை. மேலும் எதற்காக நமக்கு மருத்துவர்களும், மருந்துகளும் தேவைப்படுகின்றன. நம் உடலில் ஆன்மாவின் பங்கு என்ன? 

குருதேவ்: உடல் குணமடைவது வெறும் மருந்தினால் அல்ல. நீங்கள் ஒருவருக்கு மருந்தை கொடுத்துவிட்டு, பின்னர் அவரை தூங்கவிடாதீர்கள். பின், உடல் குனமடைகிறதா என்று பாருங்கள். இயலாதது. ஆழ்ந்த ஒய்வு தேவைப்படுகிறது. தியானம் அந்த மாதிரியான ஒய்வு ஆகும். நமது உடல் முதலில் இருந்தே தியானத்திற்கு பழக்கமானதல்ல. சந்தர்ப்பம், சுற்றுப்புற சூழ்நிலை ஆகியவற்றால் நம்முடைய உடலுக்கு மருந்துகளின் பங்கும் தேவைப்படுகிறது. அதனால் தான் ஆயுர்வேதமும் வெறும் மந்திரமாகவும் யோக பயிற்சியாகவும் இல்லாமல் வேத அறிவிலும் ஒரு பகுதியாக உள்ளது. யோக பயிற்சியும் ஆயுர்வேதமும் உடல் நலத்தை பாதுகாப்பதில் சம பங்கு வகிக்கின்றன. 

கே: எப்படி ஒருவர் மற்றொருவரிடம், அவரை சார்ந்திருக்காமலும் அவரை தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று எண்ணாமலும், உறவுமுறையில் இருப்பது?

குருதேவ்: அன்பு உங்கள் இயற்கை என அறியவும். இயற்கையிலேயே நீங்கள் அன்பு செலுத்துபவர். தளர்வாக இருக்கவும். நீங்கள் அன்பு செலுத்துபவருக்கு தேவைப்படும் சுதந்திரத்தையும் இடத்தையும் கொடுக்கவும். நீங்கள் ஒருவரிடம் அன்பு செலுத்தும் போது, ஏறக்குறைய அவர்களின் குரல்வளையை நெறிக்கிரீர்கள். காலை முதல் இரவு வரை அவர்களை ஒரு போலீஸ்காரர் போல் கண்காணிக்க விரும்புகிறீர்கள். அதை செய்யாமல் இருப்பது மிகவும் கடினமான  செயல் போல் தோன்றினாலும், அது தான் விவேகமான செயல் ஆகும். நீங்கள் அன்பு செலுத்துபவரை போலீஸ் போல பார்க்க வேண்டாம்.     

கே:  நாம் முன் ஜென்மங்களின் கர்ம வினைப் பலன்களின் விளைவுகளை தாங்கிக் கொள்ள வேண்டும். எனக்கு இப்போது இருக்கும் பிரச்னைகள் போர்வை ஜன்ம கர்ம வினை பலன்களா அல்லது இந்த ஜென்மத்தின் கர்ம வினைப் பலங்கள என்று எவ்வாறு தெரிந்து கொள்வது?

குருதேவ்: எதற்கு நீங்கள் இந்த சோதனையை செய்கிறீர்கள்? கர்மவினைப் பலன்களின் வழியை புரிந்து கொள்ள முடியாது என்று சொல்லப்படுகிறது. நல்லது ஏற்படுகிறது என்றால், நீங்கள் ஏதோ சில நல்லவைகளை செய்திருக்கிறீர்கள். ஏதோ கெட்டது நடக்கிறது என்றால், நீங்கள் எப்போதோ சில கேட்ட செயல்களை செய்திருக்கிறீர்கள். அது சென்ற வருடமாக இருக்கலாம், பத்து வருடம் முன்பாக இருக்கலாம் அல்லது பல வாழ்நாட்கள் முன்பாக இருக்கலாம். ஏன் அது குறித்து சங்கடப்படுகிறீர்கள்? அவை அனைத்தையும் தள்ளி வைக்கவும். தியானம் செய்யவும். ஞானத்தில் திளைக்கவும், சேவை செய்யவும். உங்களுக்கு ஒரு அற்புதமான வழி  கொடுக்கப்பட்டுள்ளது. எதற்காக நீங்கள் உட்கார்ந்து உங்கள் வினைப் பலன்களை கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.அறிந்த வழிமுறைகளை பின்பற்றுங்கன். உங்கள் கர்ம வினைப் பலன்கள் தானாகவே அடித்துச் செல்லப்பட்டுவிடும்.

நீங்கள் குப்பைகளை வெளியே கொட்டும் போது, உள்ளே புகுந்து அவை நேற்றைய குப்பையா அல்லது அதற்கு முன் தின குப்பையா என்று பிரித்து பார்ப்பது இல்லை.  குப்பை குப்பை தான். வெளியே கொட்டி விடுங்கள். அதே போல் உங்களுடைய பழைய கர்ம வினை பலன்களை அப்படியே விட்டு விடுங்கள். அவை தாமாகவே சாம்பலாகி விடும்.  

கே: நாரத பக்தி சூத்திரத்தில், உங்கள் மனதை இதயத்தால் அளக்கவும் என்றும் உங்கள் இதயத்தை மனதால் புரிந்து கொள்ளவும் என்றும் சொல்லியிருக்கிறீர்கள். என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தயவு செய்து விளக்கவும் குருஜி?


குருதேவ்: வாழ்க்கையில் அவைகளுக்கு சமமான முக்கியத்துவம் கொடுக்கவும். இரண்டையும் உங்களோடு கொண்டு செல்லவும். எதுவும் மற்றதை விட குறைந்தது   அல்ல என்பதை நினைவில் வைத்திருக்கவும்.