உங்கள் வாழ்வின் இறுதிச் செயலாக இது இருக்குமா?

24 ஜனவரி 2013 பெங்களூர், இந்தியா

கே: குருதேவ்நம் வாழ்வின் இறுதித் தருணத்தில் நாராயணனின் நாமத்தை உச்சரிப்பது ஒருவருக்கு முக்தியை அளிக்கும் என்று சொல்லப்படுகின்றது. நாம் மேற்கொண்டு செல்லவேண்டிய பாதையை நிர்ணயிப்பதில் நம் வாழ்வின் இறுதிச்செயல் தான் மிகவும் வலிமையானது என்பது உண்மையா?

குருதேவ்: ஆம்.உண்மை தான். இறக்கும் தருவாயில் தான் நம் மனம் உடலை விட்டுப் பிரிகின்றது. ஆகவே,அந்த நேரத்தில் மனதில் என்ன பதிவாகி உள்ளதோ அதுவே அடுத்த பிறவிக்கு காரணமாகின்றது. இது அறிவியல் பூர்வமான உண்மை. கவனித்துப் பார்த்தால், நீங்கள் காலையில் எழுந்தவுடன், உங்களது முதல் எண்ணம் நீங்கள் உறங்கப்போவதற்கு முன்னர் உங்களுக்கிருந்த அதே எண்ணமாக இருக்கும்.

பொதுவாகவே உங்கள் மனம் என்று ஏதேதோ எண்ணங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு விடுவதால் இறக்கும் தருணத்தில் நாராயணன் நாமத்தை உச்சரிக்க வேண்டும் என்ற நினைவு உண்டாவதில்லை. ஆகவே தான் நம் முன்னோர்கள் இறைவன் நாமத்தை எல்லா நேரமும் உச்சரிப்பதன் மூலம் இறைவனை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கின்றார்கள். 

ஒவ்வொரு இரவும் உறங்கப் போவதற்கு முன்னும், குளிக்கும் போதும், உணவு உண்ணும் போதும்,  எல்லா நேரங்களிகளிலும் இறைவனை நினைவு கொள்ளுங்கள். உணவிற்காக இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். புதிதாக எதைத் துவங்குவதற்கு முன்னரும் அது நல்ல ஆரம்பமாக இருக்க வேண்டுமென்று இறைவனை நினையுங்கள். நம் முன்னோர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக இதை ஒரு வழக்கமாக வைத்திருந்தனர். ஒரு கடை புதிதாக திறக்கும் போது இறைவன் நாமத்தை நினைவு கொள்வதையே முதல் வேலையாக வைத்திருந்தனர்.  புதியதாக ஏதாவது வாங்க வேண்டுமென்றாலும் முதலில் இறைவனை வணங்கிய பிறகே துவங்குவார்கள்.

இன்றும் நாம் இவ்வாறு செய்கிறோம் இல்லையாதேர்வு எழுதப் போவதென்றாலும் தேர்வில் கேள்விகள் எளிமையாக இருக்க வேண்டுமென்றும் நன்றாக விடை எழுத வேண்டுமென்றும் இறைவனை வேண்டுகின்றோம். குழந்தைள், இளைஞர்கள், முதியவர்கள் என்று அனைவரும் இறைவனை பிரார்த்தனை செய்கின்றனர்.உங்கள் பிரார்த்தனையை பயத்தினால் செய்யாதீர்கள். இறைவன் மீதுள்ள அன்பினாலும் மிக ஆழமான நன்றி உணர்வாலும் செய்யுங்கள். மிகுந்த அன்பினாலும் நம்பிக்கையுடனும்  நீங்கள் பிரார்த்தனை செய்யும் போது தான் நீங்கள் மலர்வீர்கள். 
ஏதாவது ஒரு புது வேலையை துவங்குவதற்கு முன் இறைவனை நினைப்பதில் என்ன கஷ்டம்?  


நீங்கள் உங்களுக்கு எது பிடித்திருக்கின்றதோ அந்த நாமத்தை சொல்லி இறைவனை பிரார்த்திக்கலாம். நாராயணா என்றோ, ஓம் நமசிவாய அல்லது ஜெய் குருதேவ் உங்களுக்கு எது பிடித்திருக்கின்றதோ அந்த நாமத்தை உச்சரித்து இறைவனை வணங்கலாம். அப்படி இல்லையென்றால், குளிக்கும் போது, உணவு உண்ணும் போது என்று எல்லா நேரங்களிலும் அர்த்தமற்ற பாடல்களை பாடிக்கொண்டிருப்பீர்கள். எனக்கு நேரம் இல்லாததனால் நான் இன்றைய நவீன பாடல்களை கேட்டதில்லை.ஆனால் புது பாடல்கள் பல அர்த்தமே இல்லாதவைகளாக இருக்கலாம். இப்பொழுது மிகவும் பிரபலமாகி இருக்கும் பாடல் "கொலை வெறிடி" என்பதன் பொருள் "யாரையாவது கொலை செய்ய வேண்டும் என்று ஆசை" என்பது. இது போன்று அர்த்தமுள்ள பாடல் ஒரு நல்ல பாடலாஇறைவன் நாமத்தை சொல்லுங்கள். ஓம் என்னும்  ஓங்காரத்தையோ, ஓம் நமசிவாய என்னும் நாமத்தையோ எது விருப்பமோ அதை பக்தியோடு சொல்லுங்கள்.

நான் எந்த பாடலையும் மட்டமாகச் சொல்லவில்லை. நீங்கள் விரும்பினால் "கொலைவெறி" பாடலும் பாடலாம். தவறில்லை. ஆனால் இது போன்ற சில பாடல்களின் கவர்ச்சிகரமான  இசை அந்த வரிகளை மீண்டும் மீண்டும் உங்கள் மனதில் ஓடவிட்டு உங்களை பாதிக்கலாம். நல்ல வேளையாக பலருக்கு இந்த பாடலின் பொருள் புரியவில்லை. அது வேறு மொழியில் உள்ளது. அவர்கள் இந்த வரிகளின் பொருள் புரிந்து  பாடினால் பிரச்சினைகள் உண்டாகலாம்.  

நீங்கள் ஒரு பஜனையின் பொருள் புரிந்து அதை நன்றியுணர்வோடும் பக்தியோடும் பாடும் போது அது உங்கள் வாழ்வில் அளவற்ற பலன்களைத் தருகின்றது. ஒவ்வொரு வார்த்தையும் அதற்கென தனி அதிர்வுகளைக் கொண்டுள்ளது. நீங்கள் நல்ல வார்த்தைகளை பேசும் போது அவற்றிலிருந்து வரும் அதிர்வுகள் மனதையும் வாழ்வையும் தூய்மைப்படுத்தும் சக்தியைப் பெற்றுள்ளன. நேர்மறை அதிர்வுள்ள வார்த்தைகளை பேசும் போதும் உச்சாடனம் செய்யும் போதும் மனம் உடல் இரண்டுமே சக்தி பெறுகின்றன. 

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இரண்டு முறை நாம உச்சாடனம் செய்யுங்கள். காலையில் உணவு உட்கொள்வதற்கு முன் இறைவன் நாமத்தை உச்சரியுங்கள். ஒவ்வொரு  வேளையும் உணவு உண்பதற்கு முன் "அன்னதாதா  சுக்ஹி பவ"(எனக்கு இந்த உணவை அளித்தவர் அமைதியும் வளமும் அருளப் பெறுவாராக) என்னும் மந்திரத்தை உச்சரிக்கும்படி நான் எல்லோருக்கும் சொல்லி வருகின்றேன். இந்த உணவை அளித்தவர் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டுமென்று உங்கள் இதயத்திலிருந்து வாழ்த்துங்கள். இதன் மூலம் நீங்கள் வீட்டில் இந்த உணவை சமைத்து பரிமாறுகின்ற பெண்மணி மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று பிரார்த்தனை செய்கின்றீர்கள். உணவு தானியங்களை கொள்முதல் செய்து உங்கள் வீட்டிற்கு வழங்கிய வியாபாரியை வாழ்த்துகின்றீர்கள். மேலும் இந்த உணவை அளித்த பயிர்களை வளர்த்து விவசாயம் செய்த விவசாயியை வாழ்த்துகின்றீர்கள், இவ்வாறு உணவை அளித்த அனைவரையும் வாழ்த்துவது எவ்வளவு நல்ல விஷயம்அதேபோல் நீங்கள் காலையில் கண் விழித்தவுடன் முதல் வேலையாக 'ஓம் நமோ நாராயணாஅல்லது 'ஓம் நமசிவாயஎன்ற மந்திரத்தை உச்சரியுங்கள். ஏதாவது தவறு நேர்ந்துவிட்டால், "ஹே ராம்" என்று சொல்லுங்கள்.

யாராவது இறந்து விட்டால் "ராம நாம் சத்ய ஹை" (பகவான் ராமனின் நாமம் ஒன்றே  இறுதியான உண்மை) என்று  உச்சாடனம் செய்யுங்கள். இறைவன் நாமத்தை நினைவு கொள்வதில் என்ன சிரமம்எந்தவித சிரமும் இல்லை.

நீங்கள் காருக்குள் செல்லும்போது ' ஓம் நமோ நாராயணா' என்று சொல்லிவிட்டு காரில் உட்காருங்கள். அதே போல் காரை விட்டு இறங்கும் போதும் இறைவன் நாமத்தைச் சொல்லிவிட்டு பிறகு இறங்குங்கள். இவ்வாறாக இறைவன் நாமத்தை உச்சரித்தவண்ணம் இருப்பது உங்களுக்கு ஒரு வழக்கமாகி விடும்இல்லையாஅதனால் நீங்கள் இறக்கும் தருவாயிலும், உங்கள் உடலை விட்டு உயிர் பிரியும்  இறுதி நேரத்திலும் , நீங்கள் இறைவன் நாமத்தை உச்சரிப்பீர்கள் ஏனென்றால் அந்த நேரத்தில் அது தானாகவே இயல்பாகவே உங்களுக்கு ஏற்படும். இது உங்களை பெருமளவில் மேம்படுத்தும்.

கே:  ஆன்மீகப் பாதையில் நான் எவ்வளவு தூரம் முன்னேறி இருக்கின்றேன் என்று அறிய விரும்புகின்றேன். இப்பொழுதெல்லாம் நான் உங்கள் காரின் பின்னால் ஓடி வருவதில்லை.  இதற்கு நான் ஆன்மீகத்தில் முன்னேறி உள்ளேன் என்று அர்த்தமா அல்லது உங்களிடம் என் பக்தி குறைந்துவிட்டது என்று அர்த்தமா?

குருதேவ்: அது உங்களுக்குத்தான் தெரியும். நீங்கள் இந்த ஆன்மீகப் பாதைக்கு வந்து விட்டீர்களென்றால் உங்களிடம் முன்னேற்றம் மட்டுமே இருக்கும். நீங்கள் முன் நோக்கி மட்டுமே செல்வீர்கள். 

நீங்கள் என் காரின் பின்னால் ஓடி வருகின்றீர்களா இல்லையா என்பதைப் பொறுத்து உங்கள் முன்னேற்றத்தை அளவிடாதீர்கள். நீங்கள் பார்க்க வேண்டியதெல்லாம் நீங்கள் எவ்வளவு தூரம்  உங்களது மையத்தை அடைந்துள்ளீர்கள் என்பது தான். நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் அதே நிலையில் ஸ்திரமாக சலனமின்றி நில்லுங்கள். உங்கள் மனதை உங்களுக்குள் கொண்டு வாருங்கள். நீங்கள் எவ்வளவு நடுநிலையில் நிற்கின்றீர்களோ அவ்வளவு முன்னேறி இருக்கின்றீர்கள்.  

நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியதெல்லாம் உங்களிடம் பக்தியில் எந்தக் குறையும் இல்லை.  உங்களிடம் போதிய  அளவு பக்தி இல்லை என்ற எண்ணம் கூட உங்களுக்கு வேண்டாம்.  சில சமயங்களில் பக்தி மறைந்து காணப்படும்.  ஆனால் அது கொஞ்ச நேரத்திற்கு மட்டுமே.  விரைவில் அது வெளிப்படும்.

நம் உணர்வுகள் எப்போதும் ஒரே நிலையாக இருப்பதில்லை.அதே போல் நம் பற்றுதலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஏற்ற இறக்கங்கள் இருக்கத் தான் செய்யும். உணர்வுகள் கல் போன்றவை அல்ல. அவை நீர் போன்றவை. தண்ணீரில் சிற்றலைகள் எழும்பி மறைவதைப் போல் நம் உணர்வுகளும் மேலெழுந்து பின்னர் அடங்கி விடும். மீண்டும் எழும்பி மறையும். இதுவே இயற்கை. எனவே தான் அன்பும் ஏக்கமும் ஒன்றிணைந்து செல்கின்றன. சில நேரங்களில் நீங்கள் அளவுகடந்த ஏக்கமும் தவிப்பும் உணர்வீர்கள். சில நேரங்களில் அளவில்லா அன்பை உணர்வீர்கள். மீண்டும் நீங்கள் ஏக்கத்தையும் பிறகு மீண்டும் மிகுந்த அன்பையும் உணர்வீர்கள். இது வாழ்க்கையில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும். 
கே: குருதேவ்! தாங்கள் மூன்று வகையான பக்தர்களைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள். அது போன்று பல்வேறு சுவையுள்ள ஆசான்களும் உள்ளனரா?
குருதேவ்: ஆம். நிச்சயமாக.! வரலாற்றில் பல்வேறு விதமான குருமார்களைக் காண்கிறோம். உண்மையில், ஒவ்வொருவரும் தனித்துவம் வாய்ந்தவர்களாகவும், வேறுபட்டவர்களாகவும் உள்ளனர். சிலர் ரஜஸ்விக், சிலர் தமஸ்விக் வேறு சிலர் சத்விக் குணமுள்ளவர்களாகவும் திகழ்ந்திருக்கிறார்கள்.
1980களில், எனக்கு 23 அல்லது 24 வயதிற்கும் போது, நான் டெல்லியின் புறநகர் பகுதியில் ஒரு துறவியை சந்தித்தேன், அவர்,  24 காரட் பொன்னினால் ஆபரணம் செய்ய முடியாது. அத்துடன் சிறிது செம்பு கலந்தால் தான் ஆபரணம் செய்யமுடியும். அது போல, நீயும் உன்னிடத்தில் சிறிது உலோகம் கலந்து கொள்ள வேண்டும். நீ 24 காரட் தங்கமாக இருந்தால் மக்களுக்குப் பயன்பட முடியாது என்று கூறினார்.
நான்'' இல்லை பாபா ! நான் 24 காரட் தங்கமாகவே இருக்க விரும்புகிறேன். எது நடக்கிறதோ நடக்கட்டும்" என்றேன். அவர், “நீ சிறிது தந்திரம், மந்திர மாயம் கற்றுக்கொண்டால் அதன் மூலம் சில மாயா ஜாலங்கள் செய்து அதிகமான புகழடையலாம்" என்றார். நான் "எனக்கு இவற்றை செய்ய விருப்பம் இல்லை. இவைகள் உயர் நிலையடைய வழி வகுக்காது" என்றேன்.
ஆகவே, மாயஜால வித்தைகள் செய்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அது சிறிது காலமே நீடித்திருக்கும். பின்னர் எந்த ஆவிகள் மூலம் இவ்வித்தைகள் செய்யப்படுகிறதோ அவற்றாலேயே தீங்கு ஏற்படும். இந்த விதமான சக்தி நீடித்திருக்காது, அதனால் தான், ஒத்திசைந்த சத்விக் ஞானம் என்பது சிறந்ததுநீடித்திருக்கும். தமோகுணமும், ரஜோகுணமும், இதில் கிடையாது. இதன் தாக்கம் நீடித்தது, உயர்நிலைக்கு வழி வகுப்பது. நான் சந்தித்த இந்த துறவி அப்போது 70 வயதுகளில் உள்ள ஒரு நல்ல துறவி. என்னிடம் அவர் கூறியதும் ஒரு ஆலோசனை தான். நான் மறுத்ததும் அவர் அதைப் பாராட்டி " சரி! மிக்க நன்று" என்று கூறினார். ஒருவேளை, நான் இது போன்ற எதேனிலும் ஈடுபட  சபலப்படுகிறேனா என்றும் சோதித்திருக்கலாம்.
கே: நாம் ஒருவரை முதல் முறையாக சந்திக்கும் போது, ஒரு கருத்து மதிப்பீடு ஏற்படுகிறது. சிலரைப் பார்த்தவுடனேயே நமக்குப் பிடித்து விடுகிறது, சிலரை எந்தக் காரணமும் இன்றியே பிடிக்காமல் போகிறது. இது ஏன் குருதேவ்?
குருதேவ்: அது அப்படி தான். இந்த உலகமே அதிர்வுகளால் இயங்குகிறது. நாம் அனைவரும் அதிர்வுகளாலேயே இயங்குகிறோம். சிலரின் அதிர்வுகள் மனதிற்கு உகந்ததாக இருக்கின்றன, நமது  ஏற்புணர்வும் சுலபமாக இருக்கின்றது. ஆனால் சிலரின் அதிர்வலைகள் வெறுப்பூட்டுவதாக  அமைந்து விடுகிறது.
நீங்கள் மையம் கொண்ட மனதுடன் இருக்கும்போது யாரையும் வெறுப்புணர்வுடன் கூடிய அதிர்வலைகளில் பார்க்கத் தோன்றாது. உங்கள் மைய நிலையையும் யாராலும் அசைக்க முடியாது. அதுதான் மிகச் சிறந்த நிலை. ஆசைகள், வெறுப்பு, எதிர்ப்பு, கட்டாயம்,கவர்ச்சி இவை ஏதுமற்ற நிலை. அந்நிலையில் எல்லாமே இனிமையாக இருக்கும்.எல்லோருடனும், எல்லாவற்றிலும் ஒத்திசைந்து இயங்க முடியும். இதுவே உள்ளார்ந்த பேரின்பம்.
கே: குருதேவ்! உறக்கத்தைப் பற்றிய அறிவு, விடுதலையை அளிக்கும் என்று கூறியிருக்கிறீர்கள். இதன் பொருள் என்ன?
குருதேவ்: உறக்கத்தையும் கனவுகளையும் பற்றிய அறிவு நிலை உங்களை ஒரு  விதமான சமாதி நிலைக்கு அழைத்துச் செல்லும். பதஞ்சலியின் யோகசூத்ராவில் செயல் நுட்பமாகக்  கூறப்பட்டுள்ளது. மகரிஷி பதஞ்சலி "' ஸ்வப்னநித்ராஞ்சனாலம்பனம் வாஎன்கிறார். பல்வேறு விதமான சமாதி நிலைகளில், இது ஒரு வகையான சமாதி என்பதாகும். நீங்கள் உணர்ந்து பார்த்தால், உறக்கம் வருகின்ற நிலையில், விழிப்பும் உறக்கமும் இல்லாத நிலையில் ஒரு ஒளிர்முனை அளவு நேரம் மனம் நிச்சலனமாக இருக்கும்.அந்த ஒளிர்முனை அளவு என்பது மிகுந்த ஆற்றலும், உயிர்த்துடிப்பும் உள்ளது. அதைத் தான் பதஞ்சலி கூறுகிறார்.
மேலும், நீங்கள் கவனித்தீர்களானால், உறங்குவதற்கு சற்றே முன்னால் அல்லது விழித்தவுடன் - முழு உறக்கமும், முழு விழிப்பும் அற்ற நிலையில் உள்ள இடைவெளியில், மிக அழகான,இதமான,ஒரு வித அமைதி நிலை ஏற்படுவதை உணரலாம். அதைத்தான் இங்கு கூறப்பட்டிருக்கிறது.
கே: குருதேவ்! ஆசையினால் ஏக்கம் உருவாகும் போது  சிலசமயம், கோபம் மற்றும் விரக்தி ஏற்படுகிறதே? இதை எவ்வாறு கையாள்வது?
குருதேவ்: ஏக்கம் என்பதை உள்நிலைப்படுத்த ஆழ்ந்த தியானம் செய்ய வேண்டும்.அல்லது ஏதாவது ஆக்கபூர்வமான செயலில் ஈடுபடலாம்.கவிதைகள், கட்டுரைகள் எழுதலாம். எழுதுதல் என்பது மிகவும் உதவும். பல படைப்புகள் -  ஓவியங்கள், சங்கீதம்,நாடகங்கள் மற்றும் இலக்கியங்கள் ஆகியவை இந்த ஏக்க நிலையின் விளைவாகவே உருவானவை. எனவே, உங்கள் ஆழ்ந்த ஏக்கங்களை படைப்பாற்றலில் செலுத்துங்கள்அல்லது ஆழ்ந்த தியானம் செய்யுங்கள்.
கே: குருதேவ்! அதிகாரம் ஊழலுக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறதே? அதிகாரத்தைக்  கையாளும் வழி என்ன என்று கூற முடியுமா?
குருதேவ்: உங்கள் நோக்கம் சரியானதாக இல்லாதபோது அதிகாரம் சீர்கேடிற்கு வழி வகுக்கிறது. நோக்கங்கள் சரி இல்லாத போது சீர்கேடான முறையில் அதிகாரத்தை அடைய விரும்புவீர்கள்.
சிலர் அதிகாரம் விஷம் போன்றது என்கிறார்கள்.அதிகாரத்தை உங்கள் சுய நலனுக்கு பயன் படுத்திக்கொள்ளும் போது அது விஷம் என்று நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதிகாரத்தை தொண்டிற்காக பயன்படுத்தும் போது அது ஒரு கருவி ஆகிறது. மக்களுக்குத் தொண்டு செய்யும் நிலையில் அதிகாரம் ஒரு கருவியே.
கே: குருதேவ் ! எல்லாம் சுமுகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது நன்றி உணர்வுடன் இருக்க முடிகிறது. அவ்வாறு இல்லாமல் இருக்கும் போது எப்படி நன்றி உணர்வுடன் தங்கள் அருளை உணர்வது?
குருதேவ்: உங்கள் வாழ்கையில் முன்பு  எவ்வாறு சிரமமான காலங்கள் கடந்து சுலப நிலை ஏற்பட்டது என்று நினைவு படுத்திப்பாருங்கள். எத்தனையோ கஷ்டங்களைக் கடந்திருக்கிறீர்கள். அவை உங்களுக்கு தைரியத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும்.
கே: குருதேவ்! தொழில்நுட்ப இயல்வசதியை அளிக்கிறது. ஆனால் சூழலை மாசு படுத்துகிறதே? வசதியா மாசுக்கட்டுப்பாடா என்கிற நிலையில் வளர்ச்சிக்கு எதைச் சுட்டிக்காட்டுவது?
குருதேவ்: தொழில்நுட்பம் என்பது எப்போதும் சூழலை மாசுபடுத்துவதாக இருக்காது. தற்போது  பல தொழில்நுட்பங்கள் சுற்றுச்சூழலை காக்கும் வகையில் அமைந்துள்ளன. ஆகவே, தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தலாம், ஆனால் சுற்றுச்சூழலையும் காக்க வேண்டும். ஏனெனில் சுற்றுச்சூழல் என்பது மிக முக்கியமானது.
கே: குருதேவ்! எந்த ஒரு உறவிலும் ஒருவர் நம்மை வழங்கப்பட்டதாகக் கருதிக் கொள்ளாமல் இருக்குமாறு எவ்வாறு உறுதி செய்து கொள்வது?
குருதேவ்: கவலைப் படாதீர்கள். இது இயல்பானது தான். ஏனெனில், உங்களை தன்னை சார்ந்தவராக எண்ணுவதால், விருந்தினர் போன்ற மற்றவர்களைக்  கவனிப்பது என்பது நிகழ்கிறது. குடும்பத்தில் ஒருவரான உங்களிடம் '' காப்பிகுடித்தீர்களா ?இப்போது சாப்பிடுகிறீர்களா என்றெல்லாம் ஏன் கேட்க வேண்டும் ? அது இயல்பு நிலை அல்ல.
இதுபோன்ற கேள்விகளை அதிகமாகக் கேட்கும்போது உங்களுக்கே ஏன் இவ்வாறு ஏன் மீது தனிக்கவனம் செலுத்துகிறார்கள்?ஏதோ சரியில்லை' என்று சந்தேகப் பட ஆரம்பிப்பீர்கள்.
அன்று ஒருவர், "குருதேவ்! என் மனைவியிடம் சற்று அதிகக்கவனமும் அன்பும் காட்டினால் அவள் சந்தேகப்படுகிறாள். ஏதோ தவறு செய்திருக்கிறீர்கள். நீங்கள் உண்மையாக இல்லை என்கிறாள். சரியென்று சாதரணமாக இருந்தால், தன்னை அலட்சியப்படுத்துவதாக நினைக்கிறாள். என்ன செய்வது குருதேவ்" என்று கேட்டார். ஆக, ஒருவர் உங்களை சந்தேகிக்க வேண்டும் என்றால் எப்படி ஆனாலும் சந்தேகப்படலாம். மேலும் அவர், “ எனக்கு மிக சிரமமாக உள்ளது. அரை மணி நேரம் தாமதமாக வந்தாலும் ஒரு விசாரணைக்குழு போன்று கேள்விகள் கேட்க ஆரம்பிக்கிறாள். எங்கு போனாய்? அலுவலகத்தை விட்டு எத்தனை மணிக்கு கிளம்பினாய்? என்ன நடந்தது? என்றெல்லாம் கேள்விக்கணைகள்’’ என்றார்
அதனால் தான், நான் நமது மனதைக் கையாளத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறேன். உங்கள் மனம் உங்கள் மீது பல சூழ்ச்சிக் குறும்புகளைச் செய்யும். உங்கள் கட்டுக்குள் அடங்கி இருந்தால் உங்கள் மனமே உங்கள் நண்பன். நீங்கள் உங்கள் மனதின் கட்டுக்குள் இருந்தால் உங்கள் மனமே உங்கள் விரோதி.
கே: குருதேவ்! கிருஷ்ணபரமாத்மா எங்கெல்லாம் செல்கிறாரோ, அங்கெல்லாம் சண்டைகளும் சச்சரவுகளும் பெருகும். தாங்கள் எங்கெல்லாம் செல்கிறீர்களோ அங்கு, வேறுபாடுகள் மறைகின்றன.
குருதேவ்: ஆம்! ஒரு இடத்திற்கு நான் வரப்போகும் செய்தி தெரிந்தவுடனேயே அங்கு சண்டைகள் ஆரம்பித்து விடுகின்றன. ஒருவர் குருதேவ் என் காரில்தான் வருவார் என்பார்; மற்றொருவர் என் வீட்டில்தான் தங்குவார் என்பார்; வேறொருவர் என் வீட்டில் தான் உணவருந்துவார் என்பார். இவ்வாறு சண்டைகள் துவங்க ஆரம்பிக்கும். ஆயின், என் வருகைக்குப் பிறகு அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்கள் மனம் மகிழ்வதை நான் உறுதிப்படுத்தி கொள்வேன்.
கே : என் திருமண வாழ்கை பந்தத்தை வெறும் கணவன் மனைவி என்கிற நிலையிலிருந்து அடுத்த மேல் நிலைக்கு எவ்வாறு எடுத்துச் செல்வது?
குருதேவ்: இருவரும் இணைந்து செல்ல வேண்டும். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும். சில சமயம், ஒருவருக்கு திருமண வாழ்கையில் ஈடுபாடு குறையலாம்; மற்றவருக்கு ஈடுபாடு இருக்கலாம். அப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இவ்வாறு நடக்க சாத்தியக்கூறுகள் உள்ளன. அப்போதும், ஒருவருக்கொருவர் ஆதரவு அளித்து வாழ்வில் இணைந்தே செல்ல வேண்டும்.

விமர்சனங்களுடன் போராடுகிறீர்களா?


23 - ஜனவரி 2013 - பெங்களூரு - இந்தியா

கே: குருதேவ், கலியுகத்தில் தவத்தின் முக்கியத்துவம் என்ன? அதை நாம் எப்படி புரிந்துகொள்வது?

குருதேவ்: தவம் நம் உள்ளுறுப்புகளை தூய்மைப்படுத்தி, அசுத்தங்களை வெளியேற்றுகிறது. முழு உடம்பும் தூய்மையடைந்து, நம் உணர்வுப் புலன்கள் பலம் பெறுகின்றன. தவம் செய்வது நாம் இறைவனின் தயவைப் பெறவோ, அல்லது சுய உணர்வைப் பெறவோ அல்ல, ஆனால் உடம்பையும் மனதையும் உறுதியாக்குவதற்காகத்தான் தவம்.

பல துறவிகள் கடுந்தவம் புரிவதை பார்த்திருக்கலாம், குறிப்பாக ஜைனத் துறவிகள். அந்த சீனத் துறவிகள் வெறும் காலுடன் நீண்ட தூரங்கள் நடக்க முடிகிறது. குளிர் காலத்தில் குளிரும் தெரிவதில்லை, கோடையில் வெப்பமும் தெரிவதில்லை. அவர்களால் கடுமையான தட்ப வெப்பத்தை தாங்க முடிகிறது. தவம் செய்வதில் உள்ள பயன்களில் இது ஒன்று. ஆனால், இதை நீங்கள் அளவுக்கதிகமாக செய்யவே கூடாது. மிக அதிகமாக தவம் செய்து உங்கள் உடம்பை தொந்திரவு செய்வது செய்யத் தகுந்ததல்ல. அப்படிச் செய்வது தவறு.

நான்கு புறமும் தீ வளர்த்து, தலைக்கு மேல் இன்னொன்று வைத்து தவம் செய்யும் சிலர் இருக்கிறார்கள். இதை பஞ்சாக்னி தவம் என்பார்கள். இவையெல்லாம் தேவையில்லை. உடம்பை கொடுமைப் படுத்துவது தவறு, அதைச் செய்யக்கூடாது. ஆனால் சிறிதளவு தவம் அவசியம்.
‘தபோவை த்வந்த்வ சஹானாம்’ என்று சொல்லப்படுகிறது, அதாவது எதிர்மறைகளை தாங்கிக் கொள்வது என்பதே இதன் பொருள். உதாரணமாக ஒரு பேருந்தில் 12 மணி நேரம் பயணம் செய்ய உட்கார வேண்டியிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம், அதுவும் ஒரு வித தவம் தான்.
ஒரு சமான நிலையிலிருந்து, எது வந்தாலும், அது வெப்பமோ அல்லது குளிரோ, நல்லதோ கெட்டதோ, புகழ்சியோ இகழ்ச்சியோ, அதைத் தாங்கி நிற்பதுதான் தவம்.

உங்களைப் புகழும்போது அமைதியாய் இருப்பது போல உங்களை இகழும்போதும் சமமாக இருக்க முடியுமா? அதுதான் தவம். உங்களை ஒருவர் புகழ்ந்தால் ஒரு புன்னகையுடன் கேட்டுக் கொள்கிறீர்கள். ஒருவர் உங்களை விமர்சனம் செய்யும்போது, அதே புன்னகையுடன் சமமாக கேட்கமுடியுமா, உங்களுக்குள் என்ன நடக்கிறது என்று கவனியுங்கள்? அதுதான் தவம். உங்களுக்கு ஒன்று பிடிக்கவில்லை என்றாலும் அதை ஏற்றுகொள்ள முடிந்தால் அதுதான் தவம்.
உங்களுக்கு ஒன்று பிடித்திருந்தாலும், அதை ஒரு சாட்சி பாவத்துடன் கவனித்துகொண்டு, அதன் மீது ஜுரவேகம் கொள்ளாமல் இருக்கமுடிந்தால், அதுதான் தவம்.

எதிர்மறைகளை தாங்கிக் கொள்வதுதான் தவம் என்று அழைக்கப்படுகிறது, மேலும் அது வாழ்க்கைக்கு அத்தியாவசியாமானதும் கூட. வாழ்க்கையில் எந்த அளவுக்கு தவத்தை கடை பிடிக்கிறோமோ, அந்த அளவுக்கு நாம் வலிமையையும் உறுதிநிலையும் அடைகிறோம்.

கே: குருதேவ், நீங்கள் ஞானத்தை ஒரு சோப்பைப் போல உபயோகிக்கவேண்டும் என்று அடிக்கடி கூறுகிறீர்கள். ஆனால் அதை கழுவிவிட வேண்டிய அவசியம் நேரிடுவதால் அதை எப்படி நம் உண்மையான இயல்புநிலைக்கு உதாரணமாக கூறமுடியும்? எனவே அப்படி என்றால் ஞானம் நம் உண்மையான இயல்புநிலை இல்லையா?

குருதேவ்: ஞானம் இரண்டு வகைப்படும். ஒன்று, நம்முடைய சுயத்தின் உண்மையான இயல்பைப் பற்றிய அறிவு. மற்றொன்று அதை சோப்பைப் போல உபயோகிக்க வேண்டியதற்கான  ஞானம்.
ஏன் ஞானத்தை சோப்பைப் போல உபயோகிக்க வேண்டும் எனப்படுகிறது? ஏனென்றால் அந்த ஞானம் இருப்பதினாலேயே நீங்கள் முரட்டுத்தனமாய் நடந்துகொள்ளக் கூடாது என்பதினால்தான். ‘எனக்கு அவ்வளவு தெரியும்; எனக்கு எல்லாம் தெரியும்.’ என்று நீங்கள் நினைக்கக் கூடாது. அந்த ஞானம் இருப்பதைப் பற்றி உங்களுக்கு ஒரு அகம்பாவம் வந்துவிடக் கூடாது. அப்படிப்பட்ட அகம்பாவம் வந்துவிடக் கூடாது என்பதாலேயே அதை சோப்பைப் போல உபயோகிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

இதுதான் உண்மையான அர்த்தம்.

கே: அன்பு குருதேவ், சூக்ஷும மனதின் சக்தி என்ன? அதை எப்படி உபயோகிப்பது?

குருதேவ்: உங்கள் சூக்ஷும மனதின் சக்தியில் பத்தில் ஒரு பங்குதான் வெளி உணர்வு மனதிடம் உள்ளது. எனவே சூக்ஷும மனதிற்கு ஏராளமான சக்தி உள்ளது.

ஒரு விழா முடிந்து எட்டு பேர் ஒன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், யாராவது உங்கள் பெயர் சொல்லி அழைத்தால், நீங்கள் மட்டும் பதில் கொடுப்பீர்கள். மற்றவர்கள் தங்கள் ஆழ்ந்த உறக்கத்தை தொடர்ந்து கொண்டிருப்பார்கள். இல்லையா? இத கவனித்திருக்கிறீர்களா? உங்கள் பெயர் கூட உங்கள் சூக்ஷும மனதில் பொரிக்கப்பட்டிருப்பதை இது குறிக்கிறது. தியானமே அந்த சூக்ஷும மனதை உணர்வு கொள்ளச் செய்யும் வழி.

கே: குருதேவ், நம் திறமைகளை வளர்த்துக் கொள்வதால் நம் வேலைகளை நன்கு சாதித்துக் கொள்ள முடியும் என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். நம் திறமைகளை எப்படி வளர்ப்பது?

குருதேவ்: தியானமும், மௌனம் பயில்வதும் நம் திறமைகளை, வல்லமையை, கைத்தேர்வை வளர்க்க உதவும். நமக்கு வேண்டியதை சாதிக்க கைத்தேர்மை அவசியம். நீங்கள் தளர்ந்து, ஓய்வாய், மௌனத்தில் ஆழ்ந்து தியானம் செய்யும் போது இவை மூன்றும் அதிகரிக்கிறது.
செயல்பாடு மற்றும் ஓய்வில் ஒரு மிதமான அளவு முக்கியம்.

ஒருவர் ஓய்வே இல்லாமல் வேலை செய்துகொண்டிருந்தால், எதையும் செய்ய அவருக்கு சக்தி இருக்காது. அதே நேரத்தில், நாள் முழுதும் ஓய்வெடுப்பதும் உதவாது. நீங்கள் வேலை செய்ய வேண்டும், உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும், ஓய்வும் எடுக்க வேண்டும். தியானத்தில் உங்களுக்கு ஆழமான ஓய்வு கிடைக்கிறது, உங்கள் மனம் விழிப்புணர்வோடு இருக்கையில் உடம்புக்கு ஆழ்ந்த ஓய்வு கிடைக்கிறது. அந்த நிலையில் உங்களுக்கு திறமை அதிகரிக்கிறது, வல்லமையும் மலர்கிறது.

கே: அன்பு குருதேவ், புத்தியை விட்டுவிட்டு, கள்ளமில்லாத குழந்தைத்தனம் கொள்வது எப்படி? அப்படிச் செய்வது நடிப்பது போல ஆகாதா?

குருதேவ்: புத்தி முதிர்ச்சியடையும்போது, நீங்கள் தன்னால் கள்ளம கபடமற்ற நிலை அடைகிறீர்கள். மேலும் உணர்வு பொங்கி உங்களை ஆளுமை செய்யும்போதும் கள்ளம கபடமின்மை அடைகிறீர்கள். இது வாழ்கையின் ஒரு பரிமாணம், இது எல்லோருக்கும் உண்டு. இதன் வழியில் குறுக்கிடுவது என்னவென்றால், எடைபோடும் தன்மை போன்ற புத்தி சார்ந்த விஷயம், அல்லது ‘எனக்கு எல்லாம் தெரியும்’, என்ற எண்ணம், அல்லது ‘ எனக்கு அதிகம் தெரியும்’ என்ற எண்ணம். போன்றவை. இதுதான் புத்தியை முழுமையான முதிர்சியடையவிடாமல் தடுக்கிறது.

தியானமும் பிரணாயாமப் பயிற்சியும் இந்த பயணத்தை திசை திருப்பி புத்தியிலிருந்து குழந்தைத்தனத்துக்கு மாற்றுகிறது. மேலும், உங்களை விட அதிகம் தெரிந்தவர்கள் இருக்கும்போது, நீங்கள் உங்களுக்குத் தெரிந்தது எவ்வளவு குறைவு என்று நீங்கள் உணரும்போது, அப்போதும் குழந்தைத்தனம் எளிதாக உங்களிடம் மலர்கிறது. உங்களை நீங்களே தவறாக எடைபோடும்போது, உங்களுக்கு குழந்தைத்தனத்திலிருந்து விலகி விட்டது போலத் தோன்றும்.

கே: குருதேவ் பற்று வைப்பது பற்றியும் பற்றின்மைப் பற்றியும் பேசுங்களேன்.

குருதேவ்: பற்று வாழ்க்கைக்கு அத்தியாவசியம் ஆனால் அது மாறாமல் அப்படியே இருக்க வேண்டுமென்பதில்லை. அதில் எப்போதும் ஏற்ற இறக்கங்கள் உண்டு. பற்றின் தீவிரம் சில நேரம் ஏறியும் இறங்கியும் பின்னர் மறுபடியும் ஏறி காணப்படுவது ஆரோக்கியமானது. வழக்கமாக என்ன நடக்கும் என்றால் பற்று குறையும்போது நீங்கள் எதையோ இழந்தது போல சோகமாய் உணர்கிறீர்கள்.ஏதோ குறைவது போல உணர்ந்து என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறீர்கள். கவலை வேண்டாம் என்றே நான் சொல்வேன்.

பாருங்கள், பற்றிலும் கொஞ்சம் நிறைவு வேண்டும். சில நேரங்களில் நிறைவு கிடைக்கும்போது பற்று குறைகிறது. நிறைவிலும் லேசாக கொஞ்சம் பற்றின் வாசனை வேண்டும், இல்லையென்றால் நிறைவு நழவி ஆர்வமின்மையும் சோம்பலும் வந்துவிடும். எனவே நிறைவு நழுவி மந்த நிலை வராமலிருக்க கொஞ்சம் பற்று வேண்டும். அதேபோல பற்று அதிகமாகி சுர வேகம் வந்து உங்களை பதற்றமடையாமல் காக்க கொஞ்சம் நிறைவும் வேண்டும். இது உங்களுக்கு ஒரு சரியான சமானத்தை உண்டாக்கும்.

கே:குருதேவ், என் வாழ்வில் ஏராளமான மாற்றங்கள் நடக்கிறது. சில நல்லதாகவும் சில கெட்டதாகவும் இருக்கிறது. இந்த மாற்றத்தை நான் எப்படி கையாள்வது?

குருதேவ்: வாழ்க்கையில் மாற்றங்கள் தவிர்க்க முடியாதது, ஏன் பிரபஞ்சத்திலும் கூட. பிரபஞ்சம் என்றாலே மாற்றம்தான். அனால் உங்களுக்குள் ஆழமாக ஏதோ ஒன்று மாறாமலிருக்கிறது, நீங்கள் அதை நங்கூரமாக்கிவிட வேண்டும். அதுதான் பக்தி.

கே: குருதேவ், நீங்கள் உணவைப் பற்றியும் மூச்சைப் பற்றியும் நிறைய பேசியிருக்கிறீர்கள். உடையைப் பற்றி நீங்கள் ஏதேனும் கூற விரும்புகிறீர்களா? மரபு உடைகளை மட்டும் தான் அணிய வேண்டுமா?

குருதேவ்: நல்ல வசதியாக இருக்குமாறு உடைகள் அணியுங்கள், ஆனால் அதிகம் செலவு செய்து வாங்கும் கிழிந்த ஜீன்ஸ் போன்ற உடைகளுக்கு நான் சிபாரிசு செய்ய மாட்டேன். அது அலங்கோலமாக இருக்கிறது. ஜீன்ஸில் ஓட்டைகள் இருந்தால் அதிக விலை என்று கேள்விப் பட்டேன்! இதை நீங்கள் செய்யக் கூடாது. பருத்தி உடைதான் சிறந்தது. அதில் கொஞ்சம் பாலியெஸ்டர் கலந்திருந்தால் பரவாயில்லை. ஆனால் முழுமையாக பாலியெஸ்டரில் செய்யப் பட்ட உடைகளை தவிர்க்க வேண்டும்.

தோலினால் செய்யப்பட்ட உடைகளுக்கும் முன்னுரிமை தரக் கூடாது. அதன் தோலுக்காக மட்டும் ஏராளமான விலங்குகள் கொல்லப்படுகின்றன. இவற்றையெல்லாம் விலக்க வேண்டும். அஹிம்சா பரமோ தர்மா’ என்று சொல்லப்படுகிறது. (எல்லா செயல்களிலும் அஹிம்சையே ஆகச் சிறந்த கடமை அல்லது தர்மம்). எல்லோரும் வன்முறை தவிர்த்த வழியில் பயணித்து, சைவ உணவை பின்பற்ற வேண்டும். இது மிக அவசியம். அப்போதுதான் உங்களால் நன்கு தியானம் செய்ய முடியும்.

கே: இந்தக் கேள்விகளுக்கு மேலே இரண்டு கேள்விகள் உள்ளன. முதலாவதாக, பட்டுப் பூச்சிகளை கொன்று செய்யப் படுவதால் பட்டு சேலை கட்ட வேண்டுமா? அது பாவமா?

குருதேவ்: அந்த வகையில் பார்த்தால், வாழை மரத்தையோ இல்லை அதில் ஒரு பாகத்தையோ எடுத்து அதில் உடை செய்தால் கூட பாவமாகக் கருதப் படலாம், ஏனென்றால் அவையும் ஒரு உயிரினமே.

மற்ற உயிரினங்களுக்கு குறைந்தபட்ச அளவு வலிக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதை முற்றிலும் தவிர்க்க முடியாது. எனவே பட்டுசேலை பரவாயில்லை. பலவிதமான பட்டுக்கள் உள்ளன. பட்டுப்பூச்சிக்கு எந்த பாதகமும் செய்யாமல் செய்யும் ஒரு பட்டு வகை இருக்கிறது. அஹிம்சா பட்டு எனப்படும் பட்டு வகை இருக்கிறது. இதில் பட்டுப் பூச்சிகளை கொதிக்க வைப்பதில்லை, பட்டுப் பூச்சியைத் தொந்திரவு செய்யாமல் பட்டை மட்டும் எடுத்துக் கொள்கிறார்கள்.

இந்திய இராணுவம்


15 ஜனவரி 2013 பெங்களூர் - இந்தியா

கே: குருதேவ், இன்று தாங்கள் தயவு செய்து இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படை பற்றி சிறிது சொல்ல வேண்டும். 

ஸ்ரீ ஸ்ரீ: உலகிலுள்ள மிகச் சிறந்த இராணுவங்களில் ஒன்றாக இந்திய இராணுவம் இருந்து வருகின்றது. மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. அவர்களது ஒழுங்குமுறை, அர்ப்பணிப்பு. சமத்துவம், நீதி  ஆகியவை அனைவரும் பின்பற்றி  நடக்க சிறந்த  உதாரணமாக உள்ளன.

இந்த இராணுவத்தினர் மிகச் சிறந்த முறையில்  ஒழுங்குமுறையினை வளர்த்துக் கொண்டுள்ளனர். இந்நாட்டு இளைஞர்களும் அந்த ஒழுக்கத்தினை நன்றாக உள்வாங்கி வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று விரும்புகின்றேன். அவர்களிடம் நாம் நேர்மை, பொறுப்பு, வேகமான இயக்க நிலை ஆகியவற்றைக் காணலாம். அதிருஷ்டவசமாக ராணுவப் பயிற்சி அவர்களிடம் சகிப்புத்தன்மை,கண்ணியம், அர்ப்பணிப்பு போன்ற குணங்களை சிறிது சிறிதாக பதிய வைத்துள்ளது. அவர்கள் வேலை, ஒழுக்கம் ஆகிய இரண்டிற்கும் மிக உறுதியாக அர்ப்பணித்துக்கொண்டுள்ளனர். 

உலகின் பல நாடுகளில் இளைஞர்களுக்கு இராணுவப்பயிற்சி ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு  கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இளைஞர்களுக்கென அதுபோன்ற சில பயிற்சிகள் இருக்க வேண்டும். இளைஞர்கள் பெருமளவில் அவற்றில் பங்கு பெற வேண்டும். ஜவான்களும் (இந்திய இராணுவத்திலுள்ள இளைஞர்கள்) அவர்களது குடும்பங்களும் உண்மையாக பாராட்டப்பட வேண்டியவர்கள். இந்த நேரத்தில் நாம் சமீபத்தில் பாகிஸ்தானியர்களால் தலை துண்டிக்கப்பட்ட இரண்டு  ஜவான்களுக்காக நம் இரங்கலைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும். இந்த வீரர்கள் மிகவும் கேவலமான,கோழைத்தனமான முறையில் பாகிஸ்தான் இராணுவத்தினரால் தலை துண்டிக்கப் பட்டுள்ளனர். இவ்வாறு செய்ததற்காக அவர்கள் வெட்கப்பட வேண்டும். 

அந்த இரண்டு ஜவான்களின் குடும்பத்தினரும் வெட்டுண்ட தலைகளை திரும்பப் பெற வேண்டி இன்னமும் உண்ணா விரதம் இருக்கின்றனர். அந்தக் குடும்பங்களுக்காக நாம் பிரார்த்தனை செய்வோம்.

கே: மேலான கல்வியும் உடல்நலப் பாதுகாப்பும் கிடைக்குமென்றால் அதற்காக மதம் மாறுவதில் என்ன தவறு என்று கேட்பவர்களுக்கு நாம் என்ன பதில் சொல்வது?

ஸ்ரீ ஸ்ரீ: கல்வியும் பணமும் கொடுத்து மக்களை மதம் மாறச் செய்வதென்பது மிகப்பெரிய குற்றம் என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார். இந்த மாபெரும் குற்றத்தை நாம் செய்யக்கூடாது. தனிப்பட்ட ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்குத் தானே முடிவெடுக்கும் உரிமை இருக்கின்றது. நீங்கள் யாரையும் மதம் மாறும்படி வசியப்படுத்தக் கூடாது. மற்றவர்கள் மதம் மாற வேண்டுமென்று நீங்கள் ஏன் விரும்புகின்றீர்கள்? உங்கள் மதத்திலுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் அதன் மூலம் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்பதற்காகத்தான்.  அரசியலுக்காகவும் அதிகாரம் பெறுவதற்காகவும் மக்களை மதமாற்றம் செய்வதை கடவுள் மன்னிக்க மாட்டார். 

மதமாற்றம் செய்வதன் மூலம் நீங்கள் ஒரு கலாச்சாரத்தினை அழிக்கின்றீர்கள். ஒரு சமுதாயத்தின் மக்கள்தொகை அமைப்பை அழிக்கின்றீர்கள். இதற்கு நாம் ஒரு முடிவு கட்ட வேண்டும். என் கடவுள் உன் கடவுளைவிட உயர்ந்தவர் என்று சொல்வதும் ஒரு விதத்தில் தீவிரவாதம் தான். உண்மையில் இதுவே தீவிரவாதத்தின் விதை. ஆகவே, மக்களை மதமாற்றம் செய்ய முயற்சி செய்பவர்கள் எல்லோரும் தீவிரவாதிகள் செய்வதையே தான்  மறைமுகமாகச்  செய்கிறார்கள் என்று நான் சொல்வேன். 

கே: மதத் தலைவர்களும், மதம் சார்ந்த நிறுவனங்களும் தாங்கள் எங்களுக்கு அளித்திருப்பது போல், அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப் படுத்தக்கூடிய ஞானத்தினை அளித்தால்  மக்கள் எளிதில் புரிந்து கொண்டு அவர்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தினை உணர முடியும். இவ்வாறு  செய்ய முடிந்தால் சமுதாயம் இன்று எதிர் கொண்டிருக்கும் பல பிரச்சினைகள் மறைந்துவிடும் என்று நான் நினைக்கின்றேன். நான் சுதர்சன கிரியா பயிற்சி செய்கின்றேன். உங்களை பின்பற்றி நடக்கின்றேன். ஆதே சமயம் மற்ற மதங்களின்  குருக்களையும் பழக்க வழக்கங்களையும் மதிக்கின்றேன். நான் கோவிலுக்கும் அதே சமயம் மசூதிக்கும் செல்கின்றேன். 

ஸ்ரீ ஸ்ரீ: ரொம்ப நல்லது. உண்மையில் அப்படித்தான் இருக்க வேண்டும். இனிமையான வழிகளில் மக்களை சம்மதிக்க வைத்து கோவில்களுக்கு செல்லவைத்தல், அல்லது நமாஸ் செய்யும்படி வற்புறுத்துதல் மற்றும்  தவறாக வழிநடத்துதல் எதுவும் பயன் தராது.  உண்மையில் மக்களின் தேவை என்னவென்றால், ஆன்மிகத்தை உணர்தல், இறைவன் ஒருவனே என்பதை உணர்ந்தறிதல். நாம் அனைவரும் ஒரே கடவுளின் குழந்தைகள்; நாம் நம்மிடம் இருக்கும் அன்பை எங்கும் பரப்ப வேண்டும். வெறுப்பை அல்ல. இதையே தான் நான் பாகிஸ்தான் மக்களுக்கும்  மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறேன்.  அங்குள்ள மக்கள் மிகவும் நல்லவர்கள்.  இன்றும் அவர்களுடன் பேசினேன். அங்கே நம் வாழும் கலை மையங்கள் மூன்று இடங்களில் செயல்படுகின்றன. சுதர்ஷன் கிரியா செய்த பின் அங்குள்ள மக்கள் பெரும் மகிழ்ச்சியை அனுபவித்துள்ளனர். அவர்களது துன்பம் துயரமெல்லாம் துடைக்கப்பட்டு விட்டன. அங்கே பலர் என்னை அவர்களது கனவில் சந்தித்ததாக சொல்கின்றனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானில் மட்டுமன்றி ஈரான் போன்ற நாடுகளிலும் மக்கள் இதே அனுபவம் பெற்றுள்ளனர்.

ஈரான் நாட்டில் 60 முதல் 65 வாழும் கலை ஆசிரியர்கள் உள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஈரானில்  சூழ்நிலை மிகவும் கடினமானது; கண்டிப்புகள் நிறைந்தது. அவர்கள் யோகப் பயிற்சிகளை அனுமதிப்பதில்லை. ஆனால் காவல் துறையினர் அங்கிருந்த இஸ்லாம் இனத்தைச் சேர்ந்த நம் வாழும் கலை பயிற்சி ஆசிரியர்களின் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த என் படங்களைப் பார்த்துவிட்டு "ஓ! குருதேவ் நமக்கு எல்லாவற்றையும் கற்றுத்தந்த நம் மூதாதையரைப் போலவே தெரிகின்றார். நமக்கு ஞானம் கற்பித்த நம் ஆன்மீகத் தலைவர்  போன்றே இருக்கின்றார்," என்று சொல்லியிருக்கின்றனர். எனவே, அவர்கள் அங்கே நாம் வேலை செய்வதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. எந்தத் தடையுமின்றி நடக்க அனுமதி அளித்துள்ளனர். பல இளைஞர்கள் நம் வாழும் கலை பயிற்சியில் பங்குபெற்று, பின்னர், "ஓ! உண்மையில் நாங்கள் எங்கள் வாழ்வில் மிகப் பெரிய ஒன்றை தவற விட்டு விட்டிருக்கின்றோம். எங்கள் வாழ்வின் ஆரம்ப காலங்களிலேயே இந்த அனுபவங்களைப் பெற்றிருந்தால், இன்று நாங்கள் இன்னும் அதிக வளமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்திருப்போம். அண்டை அயலாருடன் சண்டை சச்சரவுகள் முடிவுக்கு வந்திருக்கும்.  வெறுப்பும் விரோதமும் மறைந்து போயிருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இந்த மாற்றம் நிகழ்வதை அனுமதிக்க விரும்பாத சில மதத் தலைவர்களும் பண்டித்தர்களும் இஸ்லாம் மதத்தில் மட்டுமன்றி இந்து மதத்திலும் இருக்கின்றனர். மக்கள் இந்த ஆன்மிக  அனுபவங்களை எல்லாம் தேடிச் சென்றுவிட்டால் இந்த தலைவர்கள் தங்கள் தொழில்களை எல்லாம் இழுத்து மூடிவிட வேண்டி வரும் என்று பயப்படுகின்றனர். இந்துக்களிடையிலேயே  சில ஆன்மிகத் தலைவர்கள் சுதர்சனக் கிரியாவின் விளைவுகளை ஒபியம் போன்ற போதை மருந்துகளின் விளைவுகளுக்கு ஒப்பிட்டுக் குறை கூறி மக்களை தவறாக வழி நடத்துகின்றனர்.  மற்றவர்கள் வாழும் கலை பயிற்சிக்குச் செல்ல விடாமல் தடை செய்கின்றனர். அதே போல்  இமாம்கள் (இஸ்லாம் மதத் தலைவர்கள்) இஸ்லாமியர்களை வாழும் கலை பயிற்சி என்பது வேற்று மதத்தினர் செய்யும் பயிற்சி என்பதனால் அதனை கற்கவோ பயிற்சி செய்யவோ கூடாதென்று தடை செய்கின்றனர். வாழும் கலை பயிற்சியில் தவறாக வழி  நடத்தப்பட்டு ஏமாற்றப் படுவீர்கள்  என்று சொல்கிறார்கள்.

தனி மனிதர்களின் முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டினை தடை செய்யும்  இதுபோன்ற மக்களை நாம் சமாளித்து எதிர்த்துப் போராட வேண்டும். மக்களுக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் தரும் இந்த பயிற்சிகளையும் ஞானத்தையும் தடை செய்பவர்கள் சமாளிக்கப்பட வேண்டும். அவர்களது செயல்கள் நிறுத்தப்பட வேச்ண்டும். இஸ்லாம், கிறிஸ்துவம்  ஆகிய மதங்களில் மட்டுமின்றி இந்து மதத்தில் கூட சில தலைவர்கள் அறியாமையினால் இவ்வாறு செய்கிறார்கள். இவர்களுக்கு நல்லறிவை வழங்கும்படி நாம் இறைவனை பிரார்த்திப்போம்.  நாம் அனைவருக்கும் அளவற்ற அன்பை தாராளமாக வழங்குவோம்.
  
கே: குருதேவ், தேசப்பற்றும் , ஆன்மிகமும் ஒருங்கிணைந்து செல்ல முடியுமா? நாட்டின் மீதுள்ள பற்று நம் பரந்த மனப்பான்மையை வரையறுத்து விடுமா

ஸ்ரீ ஸ்ரீ:  இல்லவே இல்லை. இரண்டும் ஒருங்கிணைந்து செல்லலாம். இரண்டிற்கும் இடையில் எந்த முரண்பாடும் இல்லை. 

நீங்கள் இந்த ஜனநாயகத்தின் ஒரு அங்கம். ஒரு குறிப்பிட்ட நாடு மற்றும் அதன் ஜனநாயகத்தில் நீங்கள் ஒரு பங்குதாரர். இந்த நாட்டின் நடவடிக்கைகளில் உங்களுக்கு பங்குண்டு என்பதனை நீங்கள் தைரியமாக வெளிப்படுத்தலாம். இவ்வாறு நீங்கள் செய்வது  உங்கள் உலகளாவிய சகோதரத்துவத்திற்கோ அல்லது உலகளாவிய ஒருமைப்பாட்டிற்கோ எந்த விதத்திலும் தடை செய்யாது.

உதாரணத்திற்கு நீங்கள் ஒரு சமூக சேவகர்  என்று வைத்துக்கொள்வோம். இப்பொழுது உங்கள் வீட்டில் குப்பை இருந்தால் உங்கள் வீட்டை சுத்தம் செய்வதுதான் உங்கள் முதல் கடமை. நான் என் வீட்டை சுத்தம் செய்தால், அது தெருக்களையும் பொது இடங்களையும் சுத்தம் செய்வதோடு முரண்பாடு ஆகுமா என்று கேட்கிறீர்கள். வெளி உலகை சுத்தம் செய்யப் போவதென்றால்  முதலில் உங்கள் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். 

உங்கள் வீட்டின் விரிவாக்கமே உங்கள் நாடு. அதன் விரிவாக்கமே இந்த உலகம். நீங்கள் ஒரு குறிப்பிட்ட  நாட்டைச் சேர்ந்தவராக இல்லையென்றால் நீங்கள் அந்த நாட்டில் நிலவும் ஊழல் பற்றி பேச முடியாது. அந்நாட்டு மக்கள் "இது எங்கள் உள்நாட்டு விவகாரம்.  எங்களை கேள்வி கேட்க நீங்கள் யார்?" என்று கேட்கலாம். நீங்கள் உங்கள் அடுத்த வீட்டுக்காரரிடம் "நான் உங்களைச் சேர்ந்தவன், உங்கள் வீட்டை சுத்தம் செய்யப் போகிறேன் " என்று சொல்ல  முடியாது. அப்படி சொன்னால், அவர்கள் உங்களிடம், "நன்றி, தயவு செய்து உங்கள் வீட்டில் செய்யுங்கள்; அதுதான் நல்லது" என்று சொல்வார்கள். உங்கள் வீட்டில் நீங்கள் விரும்பிய எதையும் செய்ய உங்களுக்கு உரிமை இருக்கின்றது. ஆனால் அதே உரிமையை நீங்கள் அடுத்த வீட்டில் பயன்படுத்த முடியாது. அடுத்த  வீட்டுக்காரர் ,"தயவு செய்து வாருங்கள்.  எங்கள் வீட்டை சுத்தம் செய்ய உங்கள் உதவி தேவைப்படுகிறது" என்று அழைத்தால் நீங்கள் தாரளமாக செய்யலாம். 

நீங்கள் ஒரு நாட்டில் குடியிருப்பவராக இல்லாமல், ஒரு சுற்றுலாப் பயணியாக இருந்தால், அந்நாட்டு  விவகாரங்களில் தலையிட முடியாது. அவ்வாறு  செய்வது சட்டப்படியும்  சரியாகாது.  இந்த இடத்தில் உருவ நிலையும் அருவ நிலையும் வேறுபடுகின்றன. அருவ நிலையில் நாம் உலகிலுள்ள அனைவருக்கும் சொந்தம் என்ற உணர்வுடன் இருக்கலாம்.  உணர்வுபூர்வமான நிலையில் நாம் "இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா என்று இடங்களில் என்ன வேறுபாடு இருக்கின்றது?எங்கு சென்றாலும் என் சொந்த ஊரில் இருப்பது போலவே உணர்கின்றேன். சொந்த வீட்டில் இருப்பது போலவே முழுமையாக  உணர்கின்றேன்" என்று சொல்லலாம். ஆனால்  அதே சமயம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி நடந்துகொள்ள முடியாது.  ஒவ்வொரு  இடமும் அதற்கென தனிப்பட்ட நடைமுறை விதிகளைக் கொண்டுள்ளன.  நாம் அவற்றைப் பின்பற்ற வேண்டும்.

கே: தேசப் பற்று என்பது என்ன? அது உலகளாவிய சகோதரத்துவத்திற்கு முரண்பாடானதாஉலகளாவிய சகோரத்துவத்தினை உள்ளடக்கும் வண்ணம் தேசப்பற்றினை விரிவுபடுத்துவது எப்படி?

ஸ்ரீ ஸ்ரீ: உலகளாவிய சகோதரத்துவம் என்கின்ற உணர்வுதான் முதலில் தோன்றுகின்றது. உலகளவில்  நீங்கள் பங்குதாரராக செயல்பட முடியாது. ஆனால் உங்கள் நாட்டில் நீங்கள் வாக்குரிமை பெற்றவர்.  அதற்கென சில கடமைகள் உடையவர். உங்கள் கருத்துக்களையும் தேவைகளையும் வெளிப்படுத்தவும் சில நடவடிக்கைகள் எடுக்கவும் உரிமை உள்ளவர்.  

உலகளவில் நீங்கள் மனித நேயத்தை பரப்பலாம். நட்புணர்வோடும் கருணையோடும் அனைவருக்கும் நல்லதையே விரும்பலாம்.  ஆனால் அநீதியை எதிர்த்துப் போராட வேண்டுமென்றால் உங்கள் நாட்டில் தான் செய்ய முடியும். எனவே இரண்டும் முரண்பாடானவை அல்ல.

கே: குருதேவ், ஆன்மிகத்திற்கும் மதத்திற்கும் இடைப்பட்ட கோட்டினை நான் எப்படி அறிந்துகொள்வது?

ஸ்ரீ ஸ்ரீ: நீங்கள் இந்தப் பாதையில் இருக்கும்போது ஏற்கெனவே ஆன்மிகம் உங்களுடன் இருக்கின்றது. நீங்கள் எந்த கோட்டையும் வரையவோ அழிக்கவோ அவசியமில்லை. இயல்பாக இருங்கள். வாழ்க்கை அப்படித்தான் இருக்க வேண்டும். உங்கள் பிறப்பினால் நீங்கள் ஒரு மதத்தைச் சேர்ந்தவர் ஆகின்றீர்கள். ஆனால் ஆன்மிகம் உங்களால் தேர்ந்தெடுக்கப்படுவது.

கே: குருதேவ், ஹிமாச்சலப் பிரதேசத்தில் இளைஞர்கள் போதை மருந்துப் பழக்கத்திற்கு அடிமையாகிக் கொண்டிருப்பது இன்றைய பெரும் பிரச்சினையாக உள்ளது. பொருள் வளம் என்பது கூடவே தீமைகளையும் அழைத்து வருவது ஏன் என்று தயவு செய்து விளக்குங்கள்.  மனித நேயத்தினை விலையாகக் கொடுத்து வளம் பெறுவது சரியா

ஸ்ரீ ஸ்ரீ:  நிச்சயமாக இல்லை. அத்தகைய வளம் ஒன்றிற்கும் உதவாது. மனித நேயம் இல்லையென்றால்  நீங்கள் வளமானவர் என்று சொல்வது அர்த்தமற்றது. உதாரணத்திற்கு, நீங்கள் தூக்கமில்லா வியாதியினால் அவதிப்படும் போது, உங்களிடம் எத்தனை அருமையான படுக்கை இருந்தாலும் பயனில்லை. அதே போல், உங்களுக்கு வயிற்றுப் புண் இருந்து நீங்கள் சாப்பிட முடியாத போது எத்தனை சுவையான உணவு உங்கள் முன் வைக்கப்பட்டாலும் பயனில்லை. மனித நேயம் இல்லாத வாழ்கை பயனற்றது. அதில் வளமை அர்த்தமற்றது.

கே: குருதேவ், உடல் பருமன் என்பது இறைவனால் அளிக்கப்பட ஒன்றா அல்லது ஒருவரின் செயல்களுக்கான விளைவா?

ஸ்ரீ ஸ்ரீ: கடவுள் உங்களுக்கு ஏதாவது ஒரு வேலையைக் கொடுக்கின்றார், உங்களுக்கு உடல் பருமனைக் கொடுத்தால், கூடவே உடல் எடையைக் குறைப்பதற்கான வேலைகளையும் கொடுப்பார். நீங்கள் மிக புத்திசாலித்தனமாக கேள்வி கேட்பதுபோல் தெரிகின்றது. உடல் பருமனாகவே இருந்தால், அது கடவுள் உங்களுக்குக் கொடுத்தது என்று சாமர்த்தியமாக சொல்லிக்கொள்ளலாம். கடவுள் கொடுத்ததாக நீங்கள் உண்மையிலேயே நினைத்தால், அவர் உங்கள் எடை குறைவதற்கான வழிகளையும் வகுத்துள்ளார். 

கே: குருதேவ், துன்பமும்  துயரமும் அனுபவிக்கும்போது ஒருவர் என்ன செய்ய வேண்டும்?

ஸ்ரீ ஸ்ரீ: பொறுமையாக இருங்கள். நீங்கள் இங்கே ஆசிரமத்திற்கு வரும்போது உங்கள்  கவலைகளை எல்லாம் விட்டுவிட்டு தொடர்ந்து செல்லுங்கள். விடுபட முடியாத துன்பம் துயரம் என்பது எதுவுமில்லை. நகராமல் ஒரே இடத்தில் நிரந்தரமாக இருக்கும் மேகத்தினை எப்போதாவது பார்த்திருக்கின்றீர்களா? பார்த்திருக்கவே முடியாது. துன்பமும் துயரமும் மேகக் கூட்டத்தினைப் போன்றவை. சில மேகங்கள் உடனே மறையலாம். சில மேகங்கள் நீண்ட தூரம் சென்று மறையலாம். ஆனால் அவை நிச்சயம் மறையும். அது தவிர்க்க முடியாதது.