மந்திரம் ஏன் ரகசியமாக வைக்கப்படுகிறது


அக்டோபர்  - 17 -  2013 பெங்களுரு, இந்தியா.



கே: குருதேவ்! மந்திரம் ஏன் அவ்வளவு ரகசியமாக கொடுக்கப்படுகிறது? வெளிப்படையாக கொடுக்கப்பட்டால் மந்திரம் அதன்  சக்தியை  இழந்து விடுமா? 

குருதேவ்:  தெரியுமா, உங்கள் மனதிற்குள் உங்களை எதாவது தொந்தரவு செய்து கொண்டிருந்தால், அதை   நீங்கள் வெளிப்படுத்தி விட வேண்டும் என்று உளவியல் கூறுகின்றது. அதை நீங்கள் வெளிப்படக்கூடிய  நிலைக்கு கொண்டு வந்துவிட   வேண்டும்.  பிறகு நீங்கள் அதிலிருந்து விடுபட்டிருக்கலாம், 

மந்திரம் நமக்கு உள்ளேயே  இருக்க வேண்டும் என நாம் விரும்புகின்றோம். நாம் அதை வெளிப்படக்கூடிய   நிலையில் வைக்க விரும்புவதில்லை. நாம் அந்த மந்திரம் நம் மனதிலேயே இருக்க வேண்டும் என்றும் நம் மனம்  ஆழ்ந்து செல்ல வேண்டும் என்றும் விரும்புகின்றோம். எனவே உங்களுடைய  மனம் ஆழ்ந்து செல்லுவதற்காக, நீங்கள் அந்த மந்திரத்தை வெளிப்படக்கூடிய   நிலையில் அல்லாது   ரகசியமாக வைத்திருக்க வேண்டும். அதனால் தான் அது ரகசியமாக கொடுக்கப்படுகிறது. ஒரு ரகசியம் உங்கள் இதயத்திலும் மற்றும் உள்ளுணர்விலும்     மிக ஆழமாக தங்கி விடுகிறது.      

எனவே மந்திரம் என்பது நமது மனத்தை நம்முடைய உள்ளுணர்வுகளுக்குள் செலுத்தக் கூடிய ஒரு வாகனம் ஆகும். அதனால் தான் அது ரகசியமாக வழங்கப்படுகிறது.  அவ்வாறு எனக்கு  வழங்கப்படும்   மந்திரம் வெளிப்படையான பொதுவான மந்திரமாக   இருந்தாலும், அது என்னுடைய மந்திரம், நான் அழ்ந்த தியான நிலைக்கு செல்லுவதற்காக அதை ஒரு ரகசியமாக வைத்து கொள்ளுவேன். புராதன காலத்தில் இருந்து இதுவே இதன் பின் உள்ள கருத்து.  இது அந்த அளவு அறிவியலானது.

அனைவராலும் சப்தத்துடன் உச்சரிக்ககூடிய மகாமந்திரங்களும் உள்ளன. ஆனால் தனிப்பட்ட மந்திரம் என்பது ஒருவர் ரகசியமாக வைத்திருக்க வேண்டியது. அதைத்தான் நாங்கள் உங்களுக்கு சஹஜ் சமாதி தியானப் பயிற்சியில்  வழங்குகின்றோம். நீங்கள் அதை உங்களுக்கு மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும். அது   வெளிப்படக்கூடிய நிலையில்   வைத்துக் கொள்ளகூடாது.  ஆனால் "ஓம் நமசிவாயா" மற்றும்  "ஓம்"  போன்ற மந்திரங்ககளை சப்தமாக உச்சரிக்கலாம். அவை அதிர்வுகளை மேம்படுத்தும். 

கே: குருதேவ்! பகவத் கீதையில் கிருஷ்ண பகவான் ஸ்வதர்மா மற்றும் பரதர்மா பற்றி பேசுகிறார். ஆனால்  மகாபாரத காலத்தில் சனாதனதர்மம் தவிர வேறு மதம் ஏதும் இல்லையே. தயவு செய்து இது பற்றி விளக்க முடியுமா?        

குருதேவ்: மதமும் சம்பிரதாயமும் வேறு. தர்மம் வேறு.  இவை இரண்டையும் குழப்பிக் கொள்ள வேண்டாம். சம்பிரதாயம்   என்றால் மரபுகள் அல்லது பாரம்பரியங்கள் ஆகும்.  தர்மம் வேறு எந்த மொழியிலும் மொழி பெயர்க்க இயலாதது. அது ஒரு தனி மனிதனின் இயற்கை. மொழி பெயர்க்க வேண்டியிருப்பின்,  ஒருவரின் நேர்மையான இயற்கை என மொழி பெயர்க்கலாம். எனவே தர்மம் என்பது உங்ககளின் உள்ளார்ந்த போக்குகள் மற்றும் உடன்பிறந்த குணங்கள் ஆகும். கிருஷ்ண பகவான் " ஸ்வதர்மேநிதனம்ஸ்ரேயாஹ்"  என்று சொல்லும்போது, நீங்கள் உங்களுடைய உள்ளார்ந்த போக்குகளுடனும் உடன்பிறந்த குணங்களுடனும் இருக்க வேண்டும் என்றும் மற்றவர்களை பின்பற்ற வேண்டாம் என்றும் சொலுகிறார். இயற்கையாக இருப்பதும், உங்களுடைய இயல்பாக இருப்பதும் தான்  ஸ்வதர்மா ஆகும்.       

கே: குருதேவ்! ஆத்மா மற்றும் பரமாத்மா என்பவை என்ன? இரண்டுக்கும் இடையே  உள்ள  உறவு   என்ன ? மேலும்  பிரம்மா, விஷ்ணு, சிவா  இவர்கள் யார்?    

குருதேவ்: ஆரம்பத்தில் வெறும் சக்தி மட்டுமே என்றார்கள்.  அந்த ஒரு சக்தி,  ஒரு  தெய்வீக ஒளி, " நான் தனியாக இருக்கிறேன், நான் பலமடங்காக பெருக வேண்டும்" என்று எண்ணியது. நான் ஒன்று, நான் பலவாக மாற வேண்டும்(எகோஹம்பஹுச்யம்) என்று பராசக்தியின் வடிவத்தை ஏற்றுக்கொண்டது. பிறகு அதில் இருந்து மூன்று சக்திகள் வெளி வந்தன. அவையே, பிரம்மா விஷ்ணு மற்றும் மஹேஷ். படைக்கும் உந்து சக்தி, பாதுகாப்பளிக்கும் உந்து சக்தி மற்றும் அழிக்கும் உந்து சக்தி. மூன்று விதமான சக்திகளே  பிரம்மா விஷ்ணு மற்றும் மஹேஷ். அதனால்   தான் ஆரம்பத்தில் "ஓம்கார்" என்னும் ஒரே ஒலி  இருந்ததாக கூறப்பட்டுள்ளது. ஓம்காரமே பிறகு 'ஆ'  ' ஊ '  'ம்'   என்றானது. 'ஆ'  'ஊ '  'ம்' ஆகிய மூன்றும் சேர்ந்ததே ஓம்காரம் என்று நாம் நினைத்துக் கொண்டிருகிறோம். இல்லை. ஓம் ஒரு ஆரம்பமே. மற்றும் இந்த ஒரு உந்து சக்தி தான் மூன்று வெவ்வேறான உந்து சக்திகளாக அல்லது தேவதைகளாக  விரிவாக்கப்பட்டது.       

ஆகையினால், பல்வேறு படைப்புகள் இருக்கவேண்டும் என்பதற்காக ஒரு பரமாத்மா அல்லது ஒரு தெய்வம் பலவாக பெருக்கப்பட்டது. தொடக்கத்தில் ஒரே ஒரு அமீபியாசிஸ் இருந்ததாகவே அனைத்து விஞ்ஞானிகளும் கூறுகின்றனர். ஒரு அமீபியாசிசில் இருந்து இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் உண்டாயின. 

கே: குருதேவ்! இந்த உலகில் எல்லாமே மாறுகின்றன என்று கூறி இருக்கிறீர்கள். அறிவும் அவ்வாறே நேரத்துக்கு நேரம் மாறுகின்றதா என நான் தெரிந்து கொள்ள விரும்புகின்றேன். நாம் பல ஆண்டுகளாக அதே பகவத் கீதையைத் தான் படித்துக் கொண்டு இருக்கின்றோம். அது இன்னமும் பொருத்தமானது தானா? 

குருதேவ்: அறிவு பலதரப்பட்ட நிலைகளில் புரிந்து கொள்ளக் கூடியது. பலதரப்பட்ட உணர்வு நிலைகளில் அறிவு பல தோற்றங்களை வெளிப்படுத்தும். அறிவு மாறுவது இல்லை, ஆனால் உங்களுடைய உள்ளுணர்வு வெளிப்படும் போதும் மற்றும்   மலரும் போதும் அது உயர்ந்த பொருளைக் கொடுக்கும்.

கே: குருதேவ்! தற்போதுள்ள உலக அரங்கில்,அமெரிக்கா பொருளாதார உயர்வெழுச்சியை அடைந்த நிலையானது, மற்ற உலக நாடுகளையும் பாதிக்கின்றது. எல்லா நாடுகளும் ஏதேனும் கர்மாவால் பாதிக்கப்பட்டுள்ளனவா?

குருதேவ்: அமேரிக்கா இராக்குடன் போர் செய்யப் போனதன் மூலம் ஒரு தவறான முடிவை எடுத்து விட்டது. ஒவ்வொரு நாளும் நூறு கோடி டாலர்கள் பல ஆண்டுகள் செலவு செய்தது. ஐந்தாறு ஆண்டுகள் ஒவ்வொரு நாளும் நூறு கோடி டாலர்கள் செலவு செய்து கொண்டே வந்தது. மக்களை மொத்தமாக அழிக்க வல்ல ஆயுதங்களை, அவை இல்லவே இல்லாத இராக்கில் தேடி, பத்தாயிரம் கோடி டாலர்களை இராக் போரில் செலவிட்டது என்றால் உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகின்றதா?

ஆனால் இந்த நெருக்கடி நிலையில் இருந்து அமெரிக்கா வெளியே வரும் என்று நான் உறுதி கூறு கின்றேன். அதைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் ஒரு விஷயம் என்னவென்றால் அமெரிக்கா வேறொரு போரில் ஈடுபடத் துவங்கக் கூடாது. பேச்சு வார்த்தை என்பதுதான் சரியான வழி.

இராக் கேடான நிலையிலிருந்து மிகக் கேடான நிலைக்குச் சென்று விட்டது. இன்று இராக் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஒவ்வொரு நாளும் குண்டுகள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. தினமும் மக்கள் கொல்லப்படுகின்றார்கள். இதுவா ஜனநாயகம்? இதுவா மக்கள் ஒவ்வொருவரும் விரும்பி வரவேற்கும் புதிய மாற்றம்? இவை தாம் பாடங்கள். நாம் கவனித்துப் பார்க்க வேண்டிய பல பெரிய கேள்விகள் உள்ளன.

அமெரிக்கா தனது படைவீரர்களைப் பெருமளவில் இழந்து விட்டது. போருக்குச் சென்ற வீரர்கள் பலர், உணர்வதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கின்றார்கள். இப்போரினால் யாருக்கும் லாபமில்லை.உலகிற்கு லாபமில்லை, அமெரிக்காவிற்கும் லாபமில்லை, இராக்கிற்கு நிச்சயமாக எந்த லாபமுமில்லை. இவ்வாறின்றி பேச்சு வார்த்தை நடந்திருந்தால், இந்தியா போன்ற நாடுகள் மத்தியஸ்தம் செய்யும் நிலையில் இருந்திருக்கும்.பல தவறான புரிதல்களை சரி செய்திருக்கும். எதுவானாலும், அது நடந்து முடிந்த விஷயம். கடந்த கால தவறில் இருந்து படிப்பினையை அறிய வேண்டும்.அமைதிக்கு விடை ஆயுதங்களோ அல்லது போரோ அல்ல. உண்மையில், அமைதியை ஏற்படுத்துவது தான் போரின் நோக்கம். ஆனால் அதற்கு முற்றிலும் மாறாகவே நடந்து வருகின்றது.

கே: குருதேவ்! சில சமயக் கோட்பாடுகள், ஆத்மாவையும், ஆவியையும் வேறுபடுத்தி காட்டுகின்றன. இறப்புடன் ஆத்மா அகற்றப்படுவதாகவும், ஆவி மறு உருவெடுப்பதாகவும், கூறப்படுகின்றது. அதிலும், அகந்தையுள்ள மனிதனுக்கே மறு பிறவி என்றும் கூறப்படுகின்றது. வேதங்களின் கருத்து விளக்கம் என்ன?

குருதேவ்: வேதக் கருத்து, அறிவியல் கோட்பாடான வெப்ப இயக்கியல் / தெர்மோடைனமிக்சை ஒட்டியது ஆகும். அதாவது சக்தி/ஆற்றல்  என்பதை ஆக்கவோ அழிக்கவோ முடியாது  என்பது ஆகும். உடல் ஐந்து மூலத் தத்துவங்களாக (பஞ்ச பூதங்கள்) இப்பூமிக்கே திரும்பச் செல்லுகின்றது. உயிர் அதாவது சக்தி / ஆற்றல் ஆன்மீக வடிவில் தங்கிவிடுகின்றது.உடலில் இருந்த போது ஏற்பட்ட எண்ணப் பதிவுகளுக்கு ஏற்ப அவ்வுயிர்  வேறொரு தகுந்த உடல் வழியாக மீண்டும் வருகின்றது.

இன்று  மறு பிறவி என்பது எந்த சந்தேகத்துக்கும் இடமில்லாமல் நிலை நிறுத்தப் பட்டு விட்டது. உலகில் பல மருத்துவ மனைகளில், முற்பிறவி எண்ணப் பதிவுகளை சிகிச்சை முறையாக பயன்படுத்தி மக்களுக்கு நல்வாழ்வு அளிக்கின்றனர். எனவே, மறுபிறவி உள்ளதா இல்லையா என்னும் கேள்விக்கு விடை சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப் பட்டு விட்டது.எனவே நான் மறுபிறவி உண்டு என்று கூறுகின்றேன். எனக்கு அது தெரியும். எனவே நான் அதிகாரபூர்வமாகக் கூறுகின்றேன். ஆனால் அதை உங்களுக்கு நிரூபித்துக் காட்ட இயலாது.ஆனால் உறுதியாக பிறவிகள் உண்டு.

கே: குருதேவ்! மந்திரங்களை 108 முறை ஜபிப்பதன் காரணம் என்ன? அவசரமாக 108 முறை ஜபிப்பதை விட 10 முறை ஆழ்ந்த கவனத்துடன் மெதுவாக ஜபிப்பது மேலல்லவா?

குருதேவ்: ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்திருக்கின்றது.மெதுவாக ஆழ்ந்த கவனத்துடன் ஜபிப்பது மிக நல்லது. அவசரமாக என்றாலும் பரவாயில்லை. செய்கின்றீர்களே! கட்டாயம் செய்யுங்கள்.

ஏன் 108 தடவைகள்? ஏனெனில்,ஒன்பது கிரகங்கள் உள்ளன. பன்னிரண்டு விண்மீன் குழுக்கள் உள்ளன. இந்த ஒன்பது கிரகங்களும், பன்னிரண்டு விண்மீன் குழுக்களை சுற்றி வரும்போது 108 விதமான மாறுதல்கள் ஏற்படும். இந்த மாற்றங்களில் ஏதேனும் தவறு நிகழ்ந்தால் மந்திரங்களில் உள்ள நேர் மறை அதிர்வுகளால் அவற்றைச் சரியாக ஆக்க முடியும்.

கே: குருதேவ்! வாழ்வின் இறுதியில் இரண்டு கேள்விகள் கேட்கப் படும் என்று கூறி இருக்கின் றீர்கள். அவை எவ்வளவு அன்பைக் கொடுத்தீர்கள்? எவ்வளவு அறிவைப் பெற்றீர்கள் என்பன. நான் எப்போதுமே அன்பை பெற்று  அறிவை கொடுத்திருக்கின்றேன். என்னுடைய விதி என்னவாக இருக்கும்?

குருதேவ்: இவ்வளவாவது புரிந்து கொண்டீர்களே! இத்தனை காலம் அறிவினை அளிப்பதில் மகிழ்ந்திருக்கின்றீர்கள். இனிமேல் அன்பை அளித்து அறிவினைப் பெறுங்கள். இதுவரை எவ்வளவு அன்பைப் பெற்றீர்களோ அதை விட அதிகமாகப் பிறர் மீது இனி அன்பை பொழியுங்கள். அவ்வளவு தான். வாகனம் இப்போது ‘ U ’ வளைவை எடுத்து விட்டது. இதுவரை தவறாகச் சென்று கொண்டிருந்தது, ஓட்டுனர் அத் தவறை உணர்ந்து விட்டதால் செல்லும் திசையை மாற்றி விட்டார்.

நாம் ஞானத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று இதனால் பொருள் ஏற்படுகின்றதா என்ன? இல்லை. பகிர்வதை நிறுத்தாதீர்கள். தொடர்ந்து அறிவை பிறருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இது வரை எதை அடைந்தீர்களோ அதை   பிறருக்குக் கொடுத்து விடுங்கள்.அறிவினை அன்புடன் சேர்த்துப்  பிறருக்குக் கொடுங்கள் அறிவினைப் பகிரும்போது உங்கள் அகந்தை மேலோங்க வேண்டாம். இந்த அறிவு பிறருக்குத் தேவை என்பதை உணர்ந்து கொண்டு அந்நோக்கத்துடன் பிறருக்கு அளியுங்கள்.