நிகழ்காலத்தின் பரந்த நிலை

ஆகஸ்ட் 9 – 2013 - பெங்களுரு, இந்தியா 

கே: குருதேவ், இந்த கணம் என்பது முடிவு இல்லாலது என்று கூறுகிறீர்கள். அது பரந்த மற்றும் ஆழமானது. இந்த கணத்தின் பரந்த மற்றும் ஆழ்ந்த தன்மை பற்றி விரிவாக கூறவும். ஒரே சமயத்தில் பல நிகழ்வுகள் நடப்பதை தான் இந்த கணத்தின் பரந்த தன்மை என்று எடுத்துக் கொள்ளலாமா?

குருதேவ்: ஆம் அதுவே தான். வானத்தை போலே.நாம் அடிக்கடி "வானமே எல்லை" என்று சொல்லுவோம். அதற்கு என்ன அர்த்தம். வானம்எல்லை இல்லாதது. கடலுக்கு அடி மட்டம் உண்டு.ஆனால் வானத்திற்கு எல்லை கிடையாது. அதற்கு முடிவு இல்லை. ஆரம்பமும், முடிவும் இல்லாதது.  நமது உணர்வும் இந்த கணமும் அதே போலேதான். நிகழ் காலத்தில் ஸ்திரமாகவும் நிலைத்தும் இருப்பதே முக்தி தரும் என்ற ஆழமான என்னத்தை தரும். அதனால் கடந்த காலத்தை மறந்தும் எதிர் காலத்தை பற்றி கவலை படாமலும் இருக்க வேண்டும். எதிர் காலத்தை பற்றிய நம்பிக்கை ஏற்பட்டுவிட்ட போது, அதை பற்றிய கவலை கொள்ள வேண்டாம்  


நீங்கள் ஏன் எதிர்காலத்தை பற்றி கவலைப்படுகிறீர்கள் என்று? உங்களுக்கு அதை பற்றி நம்பிக்கையோ விச்வாசமோ இல்லாதபொழுது தான். உங்கள் வாகனம் வெளியே வண்டி நிறுத்துமிடத்தில் பத்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால் கவலைபடாமல் உட்கார்ந்து கொண்டு இருக்கிறீர்கள் இல்லையா? ஆனால் யாராவது வண்டியை கொண்டு போய் விடுவார்களோ என்ற பயம் இருந்தால், நீங்கள் இங்கு உள்ளே அமர்ந்திருந்தாலும் உங்கள் மனம் வாகனம் பற்றியே நினைத்து கொண்டிருக்கும். நம்பிக்கை உங்களை எதிர்காலத்தை பற்றிய கவலையிலிருந்து விடுவிக்கிறது.கடந்த காலத்தில் நடந்தவைகளை மறப்பதும் பொறுத்துக் கொள்வதும் கடந்த காலத்தில் இருந்து உங்களை விடுவிக்கும். எப்பொழுது கடந்த காலம் நம்மை அதில் மூழ்கடிக்க செய்கிறது? எப்பொழுது நாம் கடந்த கால நிகழ்வுகளுக்கு நம்மையோ பிறரையோ மன்னிக்கவில்லையோ அப்பொழுது இறந்த காலம் நமக்கு பாரமாக ஆகிறது. அதனால் நாம் இறந்த காலத்தில் சிக்கிக் கொண்டு விடுகிறோம். நாம் நிகழ் காலத்தில் இருக்கும்போது மட்டுமே நம்மால் ஆழ்ந்து செல்ல முடியும். இதுவே தியானம் ஆகும். கடவுளும் உலகமும் இரண்டு தனித்தனி விஷயங்கள் இல்லை ; இரண்டும் ஒன்று தான் .நீங்கள் முப்பரிமான (3-D) படங்கள் பார்த்திருக்கிறீர்களா? அதில் ஒரு கோணத்தில் பார்த்தால் நேருவின் படமும், மறு கோணத்தில் பார்த்தால் காந்தியின் படமும் தெரியும் அதை போலத்தான். இந்த உலகமும் கடவுளும் ஒரு முப்பரிமான படம் போல்.

உலகம் என்பது என்ன? உங்கள் பார்வையில் வெறும் மாவுசத்தும்,புரதசத்தும்,அமிலமும் தான் இல்லையா? (சிரிப்பொலி) ஆம் இறுதியில் எல்லாமே இவ்வாறு ஆக்கப்பட்டவை தான் ஆனால் இவை எல்லாமே காலியாகவும் ஆழமில்லாமலும் இருக்கின்றவை ஆனால் இந்த மனம் சில சமயங்களில் அமைதி இல்லாமல் மேலும் கீழும் அலை மோதுகிறது.  ஒவ்வொரு மனிதன் உள்ளேயும் பல நிறங்கள் ஒளிர்கின்றன. சிலர் கோபத்தின் ஒளியிலும் மற்றும் சிலர் பொறாமையின் ஒளியிலும் மிளிர்கிறார்கள். இது தீபாவளி கிறிஸ்துமஸ் சமயங்களிலும், மாலை நேரத்தில் தோன்றும் விசாலாக்ஷி மண்டபத்திலும் ஒளிகள் தங்கள் வண்ணங்களை மாற்றுவது போன்றது. எல்லாமே அடிப்படையில் துகள்களால் உருவாக்கப்பட்டவை

சுவிட்சர்லாந்தின் "CERN" எனும் அமைப்பின் அழைப்பை ஏற்று அங்கு சென்றிருந்தேன். அவர்கள் சமீபத்திய ஆராய்ச்சியில் கடவுள் துகள் என்பதை கண்டு பிடித்துள்ளனர்.(ஹிக்ஸ் பாசன் என்பவர் கண்டு பிடித்த வகுக்கப்பட முடியாத நுண்ணியதுகள், பருப்பொருளின் கூறு). நான் அங்கிருந்த விஞ்ஞானிகளை சந்தித்தேன். மிகவும் ஆர்வமான விஷயம் என்னவென்றால் அவர்கள் முகங்களில் நிகழ் காலத்தில் இருப்பவர்களின் முகங்களை போன்ற ஒரு பிரகாசம் தெரிந்தது.

அவர்களில் ஒருவர், தான் பௌதிக துகள் பற்றி படித்துக் கொண்டிருக்கும் போது  அங்கு பயிற்சியாளராக வந்து சேர்ந்ததாகவும், 40 வருட ஆராய்ச்சிக்கு பின் எந்த துகள் குறித்து ஆராய்ச்சி செய்ய வந்தாரோ அந்த மாதிரி ஏதும் இல்லை என்று அறிந்து கொண்டதாகவும் கூறினார். பருப்பொருள் பல துகள்களை உள்ளடக்கியது என்ற கருத்தையே தான் அவர் அவ்வாறு கூறினார். நா ம் அங்கு இல்லை என்றால் அதுவும் அங்கு இருக்காது. நான் அவர்களுக்கு யோக வசிஷ்டம் பற்றிய புத்தகத்தையும் (முக்தி அடையும் வழி குறித்து மகரிஷி யோகா வசிச்டருக்கும் பகவான் ராமருக்கும் இடையே நடந்த கருத்துரையாடல்கள் கொண்ட புத்தகம்) மற்றும் பக்தர்களான டாக்டர் ஹரியும்  ஹேமா ஹரியும் எழதிய படைப்பு என்ற புத்தகத்தையும் கொடுத்தேன். இவை இரண்டும் ஒரே மாதிரியானவை. நான் அவர்களிடம் ஏன் அவர்களுடைய ஆராய்ச்சி கடவுள் துகள் என பெயரிடப்பட்டது எனக் கேட்டேன். அவர்கள் மிக அழகான ஒரு பதில் தந்தனர். நாங்கள் துவக்கத்தில் துகள்களை "துகள்களின் கடவுள்" என பெயரிடுவதாக எண்ணியிருந்தோம். ஆனால் செய்தி தொடர்பாளர்கள் அம்மாதிரியாக பெயரிடுவது பொருத்தமற்றதாக இருக்கும் எனவும் "கடவுள் துகள்" என மாற்றலாம் என்றும் கூறினர். அவ்வாறே அப்பெயர் சூட்டப்பட்டது. 

இந்த விஞ்ஞானிகள் கூறியவை அனைத்தும் நமது பண்டைய வேதங்களில் கூறப்பட்டவையும், எழுதப்பட்டவையும் போலவே உள்ளன. இவ்வுலகம் 19 பில்லியன் ஆண்டுகளாக இருந்து வருவதாக நமது வேதங்கள் கூறுகின்றன. விஞ்ஞானிகளும் கிட்டத்தட்ட அதையே சொல்லுகின்றனர். இவ்வுலகப் படைப்பு 18 பில்லியன் ஆண்டுகளாக இருப்பதாகவும் மனித இனம் 12 பில்லியன் ஆண்டுகளாக இருந்து வருவதாகவும் கூறுகின்றனர். நமது வேத பஞ்சாங்கங்களும் இதையே ஏறக்குறைய உறுதி செய்கின்றன.  மக்கள் ஒவ்வொரு காலத்தின் போதும், ஞானத்தை தெரிந்து வைத்திருந்தார்கள். காலப் போக்கில் இந்த அறிவியல் ஞானம் தொலைந்தும் மறைந்தும் போய் விட்டன. மறுபடியும் இந்த அறிவியல் சொல்லித்தரப்பட்டு இந்திய பல்கலைகழகங்களில்  பேசப்படுகின்றன. 

தக்ஷஷீலா பல்கலைகழகம் போன்ற வேத பல்கலைக்கழகங்கள் இருந்தன (தற்போது பாகிஸ்தான் வசம் உள்ளது) உண்மையில் ஆயுர்வேத அறிவியல் தற்போதைய பாகிஸ்தானில் பிறந்தது தான். மூலிகைகள் மற்றும் மருத்துவ குணங்கள் உள்ள செடிகள் குறித்து மிகவும் ஆழ்ந்த ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வந்தன. காடுகளில் இருந்த அவ்வாறான பகுதிகள் நைமிஷரண்யா என அழைக்கப்பட்டன. நம் நாட்டில் உள்ள தற்போதைய மத்தியப் பிரதேசத்தில் அவ்வாறான பரப்புகள் இருந்ததாக நீண்ட நாட்களுக்கு முன் எழுதப்பட்டுள்ளது. தக்ஷஷீலா பல்கலைக்கழகத்தில் இது அறிவியல் பாடமாக கற்பிக்கப்பட்டது. ஒரு காலத்தில் பல சிறந்த ஆயுர்வத மருத்துவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் கலைஞர்கள் தக்ஷஷீலா பல்கலைக் கழகத்திற்கு வந்துள்ளனர். எனவே பாரம்பரியமான அணுகுமுறையும் நவீனமான அணுகுமுறையும் ஒன்றாகவே இருக்கின்றன. நாம் வாழ்வில் இரண்டையும் எடுத்துக் கொள்ள வேண்டும். நமது வாழ்க்கை ஒரு மரம் போன்றது. வேர்கள் பழையன. ஆனால் இலைகள் புதிதானவை. எனவே நமது பண்டைய அறிவியல் மற்றும் நவீன அறிவியல் இரண்டையும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

நமது இதயம் பழைய மற்றும் நன்கு அறியப்பட்டவைகளையே விரும்புகின்றது. ஆனால் மனம் சற்று புதிதானவைகளையே விரும்புகின்றது.  நமது மனம் புதிய விஷயங்களையும் புதுமையான போக்குகளையுமே விரும்புகின்றது. நாம் பழைய பாணி என்று எதையும் சொல்லுவதில்லை என்றாலும் சில பாணிகளை புதிது என்று கூறுகின்றோம் இல்லையா?   நண்பர்களிடம், நமது நட்பு நீண்டகால நட்பு என சொல்லி கொள்ளுகின்றோம்.  அதேபோல் காதலர்களும் அவர்களுடைய காதல் முந்தைய ஜென்மங்களின் தொடர்ச்சி என்று சொல்லிக் கொள்ளுகின்றனர்.ஒரு ஜென்மம் அல்ல பல ஜன்மங்கள் என்றும் சொல்கின்றனர். இது ஏன் என்றால் நமது இதயம் பழமைகளில் பெருமை கொள்ளுகின்றது. மனம் புதியவைகளிலேயே ஆர்வம் கொள்ளுகின்றது. வாழ்வில் இரண்டுமே நமக்கு தேவைப் படுகின்றது. 

கே: குருதேவ், இணையான பிரபஞ்சங்கள் பற்றி சற்று விளக்கமாகக் கூறவும். நாம் இப்பிரபஞ்சத்தில் இருப்பது போலவே இன்னொரு பிரபஞ்சத்திலும் இருக்கின்றோம் என்பது உண்மையா? இப்பிரபஞ்சத்தில் நாம் செய்யும் செயல்கள் அந்த பிரபஞ்சத்தில் உள்ள நம்மைப் போல் உள்ளவர்களை பாதிக்குமா? நாம் மற்ற பிரபஞ்சங்களுக்கு செல்ல இயலுமா? 

குருதேவ்: நாம் இப் பிரபஞ்சத்தில் செய்ய வேண்டிய வேலைகளுக்கு உண்டான ஏராளமான அணுகுமுறைகள் உள்ளன. எனவே நாம் இப்போதைக்கு இப் பிரபஞ்சத்தை பற்றி மட்டுமே அக்கறை கொள்ளலாம். நாம் இப் பிரபஞ்சத்தில் ஏதாவது நல்லதை செய்யலாம். நாம் "எனக்கு என்ன வேண்டும்" என்னும் சிந்தனையை மட்டும் கொள்ள வேண்டாம். இவ்வுலகம் பூசலிலும் வலியிலும் எரிந்து கொண்டிருக்கின்றது. அந்த நெருப்பை அணைக்க நீங்கள் தேவைப்படுகின்றீர்கள்.  தற்போது இவ்வுலகில் எந்த அளவிற்கு வன்முறைகள் ஏற்பட்டு கொண்டிருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? அது நம்ப முடியாத அளவில் நடக்கின்றது. எனவே நாம் அனைவரும் இந்த உலகிற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும். நீங்கள் கண்டிப்பாக அடுத்த உலகத்தை தவறவிட மாட்டீர்கள். நீங்கள் ஆழ்ந்த தியான நிலைக்கு செல்லும்போது வேறுபட்ட பரிமாணத்திற்குள் செல்லும் அணுகுமுறையை பெறுவீர்கள். அது மட்டுமல்லாது உங்களுக்கு நல்ல தகுதியை அடைய வேண்டிய தேவையும் உள்ளது.  அது உங்களுக்கு சேவையின் மூலமாகவே கிடைக்கும்.   சேவை, சாதனா, சத்சங்கம் ஆகிய மூன்றையும் செய்து வரவும். வேறு எது குறித்தும் கவலை வேண்டாம். பல பிரபஞ்சங்கள் உள்ளனவா என்று எனக்கும் தெரியாது.

கே: குருதேவ்! ஒவ்வொரு முறையும் தியானம் பற்றிய உங்களுடைய பேச்சுக்களில் நீங்கள் விழிப்புணர்வு குறித்து சொல்கிறீர்கள். இந்த விழிப்புணர்வு என்பது என்ன?

குருதேவ்: நீங்கள் எல்லோரும் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்களா? (கூட்டத்திலிருந்து ஆம் என்று பதில் வருகிறது). இது தான் விழிப்புணர்வு.

கே: தியானத்திற்கு பின் விழிப்புணர்வு வரும் என்று சொல்லுகிறீர்கள். போதுமான அளவு பயிற்சி செய்து முடித்த பின் தியானம் செய்ய வேண்டிய அவசியம் இல்லையா?

குருதேவ்: ஆமாம். போதுமான அளவு பயிற்சி செய்த பின் தியானம் தானாகவே ஏற்படும். அந்த நிலை அடைந்த பின் நடக்கும் போதும், அமர்ந்திருக்கும் போதும், பேசிக் கொண்டிருக்கும் போதும் மற்றும் ஏதேனும் செய்து கொண்டிருக்கும் போதும் கூட தொடர்ந்து தியானம் ஏற்படும்.

கே: எண்ணங்களும் உணர்ச்சிகளும் நம்முடைய கர்ம வினையை பாதிக்குமா? இது ஸ்ரீ ராமச்சரித்ரமானஸ்'ல் கூறப்பட்டுள்ள "ஒருவன் கடவுளை எந்த வடிவத்தில் பார்க்க வேண்டும் என தேர்ந்தெடுக்கிறானோ, அந்த வடிவத்திலேயே கடவுள் அவனுக்கு காட்சியளிக்கிறார்" என்பது போலவே.

குருதேவ்: ஆம். உண்மையில் சரியே. ஒருவருடைய எண்ணங்களும், உணர்வுகளும் அவருடைய கர்ம வினையை முடிவு செய்கின்றன. ஒருவர் அவரை சுற்றியுள்ள மக்களையும் பொருள்களையும் எவ்வாறு பார்கிராரோ, அவைகள் அவருக்கு அதே மாதிரியாக தான் காட்சி தரும். மக்களை நீங்கள் எவ்வாறு காண்கிறீர்களோ அவ்வாறே அவர்கள் உங்களுக்கு காட்சி தருவார்கள். நீங்கள் ஒருவரை நட்புடன் பார்த்தால் அவர் உங்களுக்கு நண்பராக உங்களிடம் வருவார்.நீங்கள் ஒருவரை எதிரி போல் கருதினால் அவரும் எதிரி போலவே நடந்து கொள்வார். அதன் பின் நீங்கள் அவர்களுக்கு ஏதும் செய்யவில்லை என்றாலும் அவர்கள் உங்களுக்கு எதிரிகளாகவே காட்சியளிப்பர். உங்களுடைய பார்வை எவ்வாறு உள்ளதோ அவ்வாறே உலகம் உங்களுக்கு காட்சி தரும் என்று சொல்லப்படுகிறது.

கே: கடவுளை நினைவில் வைத்திருப்பதே அவர் மேல் தியானம் செய்வதாகும் என உபநிடதங்களில் கூறப்படுகிறது. எவ்வித பிரயத்தனமும் இன்றி கடவுளை நினைவில் வைத்திருப்பது எப்படி சாத்தியமாகும்?

குருதேவ்: நீங்கள் ஒரு வேலையை செய்து முடிக்க வேண்டி இருக்குமானால், உங்கள் மனம் அதை விட்டு நகராது. காலை முதல் மாலை வரை அதிலேயே நிலைத்திருக்கும் இல்லையா? உதாரனமாக நீங்கள் ஒருவருக்கு ஒரு விஷயத்தை சொல்ல வேண்டி இருப்பின் நீங்கள் அவரிடம் சென்று அந்த விஷயத்தை சொல்லி முடிக்கும் வரை அந்த எண்ணம் உங்கள் மனதில் மீண்டும் மீண்டும் தோன்றும் இல்லையா!இது தான் சஹஜ் ஸ்மரன்எனப்படுவது. உங்கள் மனம் ஒரு விஷயத்தில் நிலைப்பட்டு விட்டால் அது குறித்த எண்ணங்கள் உங்கள் மனதில் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும். இது எந்த பிரயத்தனமும் இன்றி நடந்துகொண்டிருக்கும்,

பிரத்யஹாரா என்றால் மாற்று உணவு என்று பொருள். தினம் தினம் சாப்பிடும் உணவு வகைகளை வேண்டாம் என்று சொல்லி அதற்கு பதிலாக வேறு வகை உணவை தேர்ந்தெடுப்பது.(உணவு நமது உடலின் ஆன்மீகப் பயிற்சிகளுக்காக மிகவும்  உதவியானது என்று வெளிப்படுத்துவதற்காக )

நமது புலன்கள் வெளிப்புறமாக செல்லக்கூடிய பாங்கை உடையவை. அவைகளை உட்புறமாக எடுத்துச் செல்ல நமக்கு மாறுபட்ட உணவு விதிமுறைகளும், நிலை நிறுத்தப்பட்ட எண்ணங்களும் தேவை. இது தான் பிரத்யஹாரா. அழுகின்ற குழந்தைகளுக்கு அமைதி ஊட்டக்கூடியவைகளை தருவதை போல், அமைதியற்றும் படபடப்புடனும் இருக்கும் நமது மனதிற்கு மாறுபட்டவைகளை தருகின்றோம்.  அதுதான் பிரதியாஹாரா. உட்புறமாகச் செல்லுவதே முதல் படியாகும். 

கே: அன்புள்ள குருஜி, நான் எப்போதுமே மிகச் சிறந்த முறையில் பணியாற்றி வந்தாலும் எனக்கு எப்போதும் பணம் பற்றாக்குறை உள்ளது என்ற எண்ணம் ஏற்படுகின்றது. நான் என்ன செய்ய? 

குருதேவ்: யாருக்குத் தான் பணம் பற்றாக்குறை இல்லை? உலகத்திலுள்ள அனைத்து அரசாங்கங்களுக்கும் பணம் பற்றவில்லை என்ற எண்ணம் உள்ளது. அமெரிக்கா மிகப் பெரிய கடனில் உள்ளது. இந்த நாடும் கடனில் உள்ளது. பாகிஸ்தான் வங்கதேசம் மற்றும் பெரும்பாலான நாடுகள் கடனிலேயே உள்ளன. நீங்கள் அனைத்தையும் ஒரு மிகப்பெரிய தோற்றமாக பார்க்கும்போது உங்களுக்கு எவை தேவைப்படுகின்றதோ அவையெல்லாம் கிடைத்துக் கொண்டிருக்கின்றன என தெரிந்து கொள்ளலாம். அனைவருக்கும் தேவையானது உள்ளது. ஆனால் அனைவருடைய பேராசைக்கு போதுமான அளவு இல்லை. நீங்கள் தொந்திரவுகளுக்கு முடிவே இல்லை எனக் கருதக்கூடாது.  நீங்கள் "நான் எப்போதுமே சந்தோஷமாகவே இல்லை  "நான் எப்போதுமே நோயுடனிருக்கிறேன்" என்று சொல்லக்கூடாது.  யார் எப்போதுமே நோயுற்று இருப்பார்? யாராவது எப்போதுமே நோயுடன் இருக்க முடியுமா? இல்லை.  நாம் தொந்திரவுகளை பொதுவானது என்றும் நிரந்தரமானது என்றும் ஆக்கி விடுகின்றோம். இது கவனிக்கப்படவேண்டிய ஒரு பிரச்சினை. 

கே: குருதேவ், ஒரு இனிய சத்சங்கத்திற்குப்பின் என்னுடைய பிராண சக்தி அதிகரித்திருப்பதாக உணருகிறேன். அதே சமயம் எனக்குள் ஒரு அமைதியின்மையும் அதிக வலுவுற்ற நிலை ஏற்படுவதையும் உணருகின்றேன். தயவு செய்து விளக்கம் கூறவும்.

குருதேவ்: இது மனஅழுத்தத்தை வெளியேற்றும் ஒரு செயல் ஏற்படுவதையே குறிக்கும். சில சமயங்களில் மன அழுத்தம், தரைவிரிப்பின் அடியில் உள்ள தூசிகள் போல இவ்வாறு வெளிப்படும். இது குறித்து கவலை வேண்டாம். 

கே: குருதேவ், ஒருவர் அவருடைய வேலையிலிருந்து ஓய்வு பெறுவதற்குரிய சரியான வழி எது? அதன் பிறகு ஒருவர் என்ன செய்ய வேண்டும்?


குருதேவ்: தேர்ந்தெடுப்பது உங்கள் பணி. ஆசீர்வதிப்பது என் பணி. இந்த உலகத்தில் நீங்கள் செய்யக் கூடியது எவ்வளவோ உள்ளது. இந்தியாவின் மேம்பாட்டிற்காக தன்னார்வத் தொண்டராகலாம். பல்வேறு இடங்களுக்குச் சென்று நற்பணிகள் செய்யுங்கள். விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். நமது கிராமங்களில்  மிகபெரிய  பணிகள் செய்ய வேண்டி உள்ளது. சுகாதாரம், மனித நேயம் மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கவும். வாழும் கலை ஆசிரியராகி எல்லா இடங்களுக்கும் சென்று மக்களுக்கு பயிற்சி அளிக்கலாம்.