ஞானம் தேடுபவருக்கு. . . . . .


செப்டம்பர் 27, 2013 பெங்களுரு இந்தியா



இந்த இலக்கிய விழாவில் உங்களுடன் இருப்பது நன்றாக இருக்கிறது. இலக்கியமும் ஆன்மீகமும் நீண்ட காலமாக தொடர்புள்ளவை. ஆன்மீகம் இந்த கிரகத்தில் உயிருடன் இருக்க காரணம் இலக்கியமே. குறைந்த பட்சம் இந்த நாட்டில் மட்டுமாவது, பரவலாக படிக்கப்பட்டும்   நடைமுறையிலும் இருக்கின்ற பெரும்பாலான இலக்கியங்கள் ஆன்மீகத்துடன் சிறிது தொடர்பு கொண்டுள்ளன.

ஆன்மீகம் என்பது என்ன? அது வெளியே உள்ளதா அல்லது நடைமுறைக்கு சாத்தியமானதா. எது நம்முடைய ஆன்ம உணர்வை உயர்த்துகிறதோ அதுவே ஆன்மிகம் என நான் கூறுவேன்.எந்த இலக்கியம் உங்களை உயர்த்துகிறதோ, உங்கள் முகத்தில் புன்னகையை கொண்டு வருகிறதோ, தேவையான அளவு ஒய்வு கொடுக்கிறதோ அல்லது எடுத்த வேலைகள் தகர்ந்து போகும் போது ஒரு நம்பிக்கையை கொடுக்கிறதோ,அனைத்துமே ஆட்டம் காணும் போதும் குறைவுற்றிருக்கும் போதும் ஒரு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதையே நான் ஆன்மிகம் என கூறுவேன். 

உண்மையில், அனைத்து கவிதைகளும் வரும் இடத்தையே நான் ஆன்மீகம் என கூறுகின்றேன். இவை அனைத்துமே உள்ளிருக்கும் ஆன்மீக தளத்திலிருந்தோ அல்லது உள்விழுப்புணர்விலிருந்தோ தான் வருகின்றன.    

ஞானம் தேடுபவருக்கு என்ற புத்தகம், நான் ஏழு ஆண்டுகள் ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் இளைஞர் குழுக்களுடன் நடத்திய உரையாடல்களின் வெளிப்பாடு ஆகும். நாங்கள் ஒவ்வொருவரும் மற்றவரிடம் சில கேள்விகள் கேட்டும்,சில தலைப்புகளில் விவாதித்தும், அறிவு சார்ந்த விவாதத்தில் உரையாடியும்,அவற்றின் மூலம் கிடைக்கும் கருத்துக்களைக் கொண்டு அறிவுத்தாள் கொண்டு வருவோம். சமஸ்க்ருதத்தில் ஒவ்வொரு விவாதமும் கருத்துக்களை புரிந்துகொள்ளும் வழியை கொண்டு வருகிறது என்று சொல்லப்பட்டுள்ளது. நாம் நம்முடைய அனுபவத்தில் இருந்து விவாதங்கள் செய்யும் போது மிக அழகான ஒரு பொருள் அதிலிருந்து வெளிப்படும். எனவே, விவாதம் என்பது இலக்கியத்தின் மற்றும் ஆன்மீகத்தின் ஒரு பகுதியே.          

பூர்த்தி மற்றும் திருப்தி அடைந்த ஆழ்ந்த உணர்வே ஆன்மீக அனுபவத்தின் அடையாளம். வாழும் கலையில், மூச்சின் மூலமாக மனதிற்கும் உடலுக்கும் மிகவும் தேவைப்படும் தளர்ச்சியையும் ஓய்வையும் கொண்டு வருகின்றோம். இது எழுத்தாளர்களுக்கு ஏற்படும் தடையில் இருந்து அவர்கள் வெளிவர உதவியாக இருக்கின்றது. நீங்கள் ஒரு எழுத்தாளராக இருந்தால், எழுத உட்காரும் போது சில மூச்சு பயிற்சிகள் செய்து ஒய்வு எடுக்கவும். திடீரென்று உங்களுக்குள் இருக்கும், யோகிகளின் அறிவியல் (ஒரு குறிப்பிட்ட சக்தி வழி)என ஒரு ஞான நாடி வெளிப்படுவதை காணலாம். அதன் பின் உங்களில் உள்ள அந்த தடை நீங்கி, நன்றாக எழுத முடியும். அதனால், ஆன்மீகம் எழுத்தாளர்களுக்கு புதுமையாகவும், உள்ளுணர்வுடனும் படைப்பாக்கதுடனும் எழத மிகவும் உபயோகமாக இருக்கும். ஒரு சில நிமிட ஆழ்ந்த மௌனம் நம்மை சிறந்த முறையில் வெளிப்படுத்தக்கூடிய திறமைகளை மேம்படுத்தும்.     

தற்போது உங்களுக்கு என்ன ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது என்று கவனிக்க முடியுமா. உங்களால் வார்த்தைகளுக்கு இடையில் படிக்க முடிகின்றதா? ஏதோ ஒன்று உங்கள் மனதிற்குள் குடியமர்ந்து கொண்டிருக்கிறது என்று உணர முடிகிறதா? நம்முடைய மனதிற்குள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற பந்தயங்களின் வேகம் குறையும் போது, நமக்குள்ளாக சில ஆச்சரியங்கள் ஏற்படத் துவங்குகின்றன.

வழக்கமாக எழுத்தாளர்கள் இயற்கையோடு இருக்க விரும்புவார்கள். நீங்கள் இயற்கையோடு இருக்கும்போது உண்மையில் என்ன ஏற்படுகின்றது என உங்களுக்குத் தெரியுமா? கடற்கரையோ, மலைதொடர்ச்சியோ அல்லது பூந்தோட்டமோ. நமக்குள் எதோ ஒன்று நிதனமடைகிறது. அதாவது உங்களுடைய வசனங்களின் பொய்மை கிழே சென்று விடுகிறது, உங்களுடைய படைப்பாற்றல் மேலே வருகிறது. இவ்வாறாக பல எழுத்தாளர்களுக்கு         அமைதியான இடத்திற்கும் செல்லும் போதோ அல்லது ஒதுங்கி செல்லும் போதோ அவர்களுக்குள் இருக்கும் தடைகள் வெளியேறுகின்றன

நீங்கள் அதிகாலையில் எழுந்து அமர்ந்து   எழுதும்போது  உங்களை சுற்றியுள்ள சுழலின் காரணமாக உங்களுக்கு ஒரு சிறந்த உணர்வு ஏற்படும். எங்கு இருந்தாலும்  நம் விருப்பபடி  நம்மால் இப்படி ஒரு சூழலை உருவாக்க இயலும் அதற்காக நாம் வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை. நம் மூச்சின் மேல் கவனம் செலுத்துவதன் மூலம் நாம் நம்முடைய இந்த மனதை அமைதிபடுத்த இயலும்.
 
1972 ஆம் ஆண்டு நான் எழத ஆரம்பிக்கும் போது எனக்கு வயது 16. என்னுடைய நெருங்கிய   நண்பர்களின் அப்பாக்களில் ஒருவரான கோபால கிருஷ்ண அடிகா என்பவருடன் அமர்ந்து நாங்கள் பல சமயங்களில் அரட்டை அடிப்பதுண்டு. பல மேம்பட்ட மக்கள் எங்களை சுற்றி இருந்து எங்களை ஏதாவது செய்ய ஊக்கமளித்தனர். என்ன எழதலாம் என நினைக்கின்றேனோ அதை அவர்கள் ஏற்கனவே எழுதியிருப்பர் என்றும் அவர்களுடைய புத்தகங்களை படித்த பின் என்னால் எதுவும் எழுத இயலவில்லை என்றும் நான் அவர்களிடம் கூறுவேன், 

அதனால் வளரும் இளம் எழுத்தாளர்கள் பெரிய பெரிய புத்தகங்களை படிப்பதற்கு பதிலாக நல்ல ஓவியங்களை பார்க்கலாம் என நான் ஆலோசனை கூறுவேன். ஓவியர்கள் மற்றவர்களூடைய ஓவியங்களை பார்க்கக்கூடாது. அவர்கள் புத்தகங்களை படிக்க வேண்டும். அப்போது தான் அவர்களால் நன்றாக வரைய முடியும்.

சில நேரங்களில்,வேறு ஒருவர் நம்மை விட நன்றாக எழுதியுள்ளார் என்ற எண்ணம்உங்களுக்கு தோன்றலாம். நீங்கள் சொல்ல நினைத்தவைகள் எல்லாம் ஏற்கனவே சொல்லப்பட்டு விட்டன என தோன்றும். கிருஷ்ண அடிகாவுடைய படைப்புகள் அல்லது டாக்டர் D V குண்டப்பாவுடைய   "மங்குதிம்மணகக்கா" ஆகியவற்றை படிக்கும் போது எனக்கும் இதே போல தோன்றும். அவர்கள் அனைவரும் நம்மை போல் பலர் அனுபவப்பட்டவற்றையே எழுதியுள்ளனர்.   

இலக்கியம் மக்களுக்கு பொது அறிவை உட்புகுத்துவதில் முக்கியமான பங்காற்றுகிறது. அதே நேரம் அது பாரபட்சத்தையும் தவறான எண்ணத்தையும் உருவாக்குவதோடு, குறுகிய மனப்பாங்கையும் ஏற்படுத்தும். சீனாவுக்கும் இவ்வுலகில் மற்ற சில பகுதிகளுக்கும் என்ன ஆனது என்று நாம் பார்த்திருக்கிறோம். இந்த இலக்கியத்தின் மூலமாகவே ஒரு சித்தாந்த தொகுப்பு திணிக்கப்பட்டு பெருவாரியான மக்கள் பாதிக்கப்பட்டனர். அந்த பகுதிகளை ஒட்டியிருந்த லட்சக்கணக்கான மக்கள் இறந்தும் போயினர்.

நான் இன்று செல்ல இருக்கின்ற சட்டிஸ்கர் என்ற இடம் நக்சலைட் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள பகுதி ஆகும். அந்த இடத்திற்கும் அதனுடைய இலக்கியம் உள்ளது. நக்சலைட்டுகள் நெப்போலியனை மேற்கோள் காட்டி வன்முறை ஒன்றே வழி என திடமாக நம்புகின்றனர்.

நான் அவர்களிடம் நெப்போலியன் யாரையும் அவருக்கு வோட்டளிக்குமாறு கூறவில்லை என்று சொல்லியிருக்கிறேன். அவர் அவருடைய பலத்தின் மூலமாகவே பல ராஜ்ஜியங்களை வென்றிருக்கிறார். அதனால் நாமும் நம்முடைய பலத்தை உபயோகித்தே வேலை செய்ய வேண்டும். இந்த கிரகத்தில் இம்மாதிரியான மூளை சலவை செய்வதும் வன்முறை சித்தாந்தத்தை கலப்பதும் ஏற்பட்டுள்ளன. அதற்கு மாறாக சமாதானத்திலும் இதுவே ஏற்பட்டுள்ளது. சமாதானம், பொறுமை, அன்பு ஆகியற்றையே அடிப்படையாக கொண்ட  மகாத்மா காந்தி, மார்டின் லூதர் கிங், மற்றும் பலருடைய எழுத்துக்கள் இன்று மிகவும் அத்தியாவசியமானவை.

இலக்கியம் மக்களை சமாதான வழியிலிருந்து தவறவும் செய்யும். சமாதானத்தை கொண்டு வரவும் செய்யும். அது கோபம் ஏமாற்றம் ஆகிய உணர்வுகளை உருவாக்கும் அல்லது அன்பு சொந்தம் ஆகிய உணர்வுகளை உருவாக்கும். நாம் அனைவரும் இதை அறிவோம். மிக  சிக்கலான நம் வாழ்க்கை எல்லா அம்சங்களும் நிறைந்திருந்தால் தான் முழுமை அடையும். எந்த ஒரு இலக்கியமும் அனைத்தையும் எளிதாக ஒரு தட்டில் வைத்து கொடுப்பதாக இல்லாமல்,கிண்டல், அவநம்பிக்கை, திகில் மற்றும் மக்களுக்கு சிந்திப்பதற்கான சில விஷயங்கள் ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டும்.     

மக்கள் அவர்களுடைய சொந்த கருத்துக்களை வெளியிட வேண்டும். தனித்தனியே இலக்கியத்தில் வளர வேண்டும். இலக்கியம் மக்களை தனித்தன்மைகளில் முன்னேறியவர்களாக மாற்ற வேண்டுமேயன்றி கூட்ட வெறி உள்ளவர்களாக்க கூடாது. இலக்கியம் மக்களை அவர்களாகவே சிந்திக்ககூடியவராகவும். படைப்பாற்றல் மிக்கவராகவும், சொந்த யோசனையுடன் உள்ளவராகவும் அனுமதிக்கக் கூடியதாக இருக்க வேண்டும், அதே   நேரம், உலகளாவிய மனிதநேயங்களை மதிப்பவராக மாற்ற வேண்டும்.

ஞானம் தேடுபவர்களுக்கு நான் ஒரு குறிப்பை கொடுக்கின்றேன்! மிக உயர்ந்ததையே  தேடுங்கள்! உங்கள் வாழ்க்கை எவ்வாறு தோன்றுகிறதோ அதைவிட உயர்ந்ததாக தேடுங்கள். உங்கள் ஐம்புலன்களும் உணர்வதற்கும் மேலாக தேடுங்கள். நம் எல்லோரிலும் அதிகமாக இருக்கின்ற இந்த வாழ்வின் மாய அம்சத்தை பாருங்கள், நீங்கள் வேறு எங்கும் செல்ல தேவை இல்லை, உங்கள் வாழ்க்கையை ஒரு பெரிய அளவில் பாருங்கள்.  

நான் யார்? நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? எனக்கு என்ன வேண்டும்? இந்த பிரபஞ்சம் எதைப் பற்றியது? இவை யாவும் எதைப் பற்றியது? என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். இந்த விசாரணைகள் உங்களை ஞானம் தேடுபவராக்கும். ஒவ்வொரு படித்த நபரும் ஞானம் தேடுபவராக இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.ஞானம் தேடுவது முடிந்துவிடக் கூடாது.

ஞானம் தேடுவது வாழ்வின் மிக ஆரம்பத்திலேயே தொடங்கி விடுகிறது. மூன்று வயது குழந்தை கேள்விகள் கேட்க தொடங்குகிறது. இது வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும். எங்கே என்று தெரிந்து கொள்ள விரும்புவது, உண்மை என்ன என்று பார்க்க ஆசைப்படுவது, வாழ்க்கை என்பது என்ன, மனித வாழ்க்கை என்கின்ற சிக்கலான விஷயத்தை புரிந்து கொள்வது, மற்றவர்களுடைய மனதை புரிந்து கொள்ளுவது, நம்முடைய மனதை நாம் புரிந்து கொள்ளுவது போன்றவை.

நமக்கு எண்ணங்களை கொடுக்கின்ற மனம், அறிவாற்றல், நினைவாற்றல், நான் என்கின்ற அகந்தை போன்ற மனத்திறமைகள் மீது கவனத்தை செலுத்துவது நம்முடைய வாழ்க்கையை மேலும் வளமுடையதாக்கும். தப்பான எண்ணத்தை ஒழித்து விட வேண்டும். எதையுமே ஒரு வெளிப்படையான மனதுடன் அணுகுவதே இயல்பான அறிவு.  

கே: எழதுவது என் தொழில். நான் வர்த்தக சந்தைக்காக எழுதுவதா அல்லது என்னுடைய கலை ஆர்வத்தில் நம்பிக்கையுடன் நின்று (ஒரு வேலை விற்கவே இயலாத ஒன்றை) நான் எதை ஆழ்ந்து நேசிக்கின்றேனோ அதை எழுதுவதா ?  

குருதேவ்: நீங்கள் இந்த இரண்டிற்குள் தேர்ந்தெடுக்க வேண்டியது ஏன்? நீங்கள் ஏன் இரண்டையும் செய்யக்கூடாது. வணிக நோக்கத்துக்காக எழுதுங்கள். மேலும் பல்லாண்டுகள் இருக்ககூடிய அமரத்துவம் மிக்கவற்றையும் எழதுங்கள்.( பதில்: ஆனால் குருதேவ்! எனக்கென்று ஒரு அடையாளம் உள்ளது. ஒன்று நான் என்னுடைய அடையாளத்துடன் நிற்க வேண்டும் அல்லது இரண்டு அடையாளங்கள் உள்ளவனாக வேண்டும்) நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட    அடையாளங்களுடன் இருக்கலாம். ஏன் நீங்கள் ஒரே ஒரு அடையாளத்துடன் சிக்கியிருக்க விரும்புகிறீர்கள். நீங்கள் ஏதாவது ஒன்றை செய்யலாம். இதில் முரண்பாடு எதுவும் இல்லை என நினைக்கிறன்.  

கே: குருதேவ்! அறிவு ஞானம் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

குருதேவ்! அறிவு உங்கள் தலைக்குள் இருப்பது. ஞானம் உங்கள் வாழ்வில் இருப்பது. உங்களுக்கு அனுபவமாக ஏற்பட்டது ஞானம். அறிவு நீங்கள் காதால் கேட்டது, படிப்பதாலும் கேட்பதாலும் பெற்றுக்கொண்டது. அறிவு என்பது மெனுவை படிப்பது போன்றது, நாம் எதை உண்ணுகிறோமோ அதுவே ஞானம்.

கே: ஆன்மிகம் நமது நாட்டுக்குத் தேவையானது. ஆனால் அது பணக்காரர்களுக்கு மட்டுமே உரியதாகி, அவர்களுக்கு மட்டுமே  கட்டுப்படி ஆகக் கூடியதாக இருக்கின்றது.பொருளாதார வசதியற்ற ஒவ்வொரு சாதாரண மனிதனும் அனுபவிக்கக் கூடியதாக ஆக்க என்ன செய்யப்பட வேண்டும்?

குருதேவ்: ஆன்மீகத்திற்கும் பணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லவே இல்லை.பணக்காரர்கள் அளவுக்கு ஏழை மக்களும் பயனடைய முடியும். நமது பயிற்சிகள் நம் நாட்டிலுள்ள கிராமங்களில், ஏறக்குறைய 40,000 கிராமங்களிலும், குடிசைப் பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றன. ஏழை மக்கள் ஆன்மீகத்தை உளமார ஏற்றுக் கொள்ளுகிறார்கள்.மது அருந்துதல், போதைப் பொருட்களை உபயோகித்தல் ஆகிய பழக்கங்களிலிருந்து வெளி வருகின்றார்கள்.

சிறைச்சாலைகளிலும் பயிற்சிகள் நடத்தி இருக்கின்றோம். எனவே,ஆன்மிகம், பிரமுகர்களுக்கு மற்றும் பணக்காரர்களுக்கு என்னும் கருத்தை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அது அனைவருக்குமானது. எப்படியாகிலும், ஏதாவது இலவசம் என்றால் பணக்காரர்கள் அதை நெருங்க மாட்டார்கள்.பணம் செலுத்த வேண்டும் என்றாலே அவர்கள் அதை அணுகுவார்கள்.அப்போது தான் அதிலிருந்து ஏதேனும் பெறலாம் என்று அவர்கள் எண்ணுவார்கள்.அது தான் பணக்காரர்களின் உளவியல்.

கே: குருதேவ்! ஒரு கால கட்டத்தில்,சிறந்த இலக்கியங்களை வேதனை, ஏக்கம் போன்ற  பல்வேறு எதிர்மறை உணர்ச்சிகள் உருவாக்கியிருக்கின்றன; அவை பொருத்தமாக உணரப் படவில்லை.அதிக அளவு நேர்மறையில் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று நான் எண்ணுகின்றேன்.எவ்வாறு இரண்டையும் நான் பயன்படுத்துவது ?

குருதேவ்: மக்கள் வித்தியாசமானவர்கள் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.நாம் ஒரே இனமுள்ள சமுதாயத்தில் இல்லை. பல்வேறுதரப்பட்ட இனமுள்ள சமுதாயத்தில் இருக்கின்றோம். ஒரு தனி மனிதன் கூட ஒரே மாதிரி வாழ்நாள் முழுதும் இருப்பதில்லை, மனநிலை மாற்றங்களும், உணர்ச்சிகளின் மாற்றங்களும் ஏற்படுகின்றன. உதாரணமாக, இசையை அனுபவிக்கும் ஒருவன் சில சமயங்களில் கர்ணகடூரமான இசையும் சில சமயங்களில், ஏக்கமான அல்லது மயக்கமான இசையையும் கேட்கின்றான்.மக்களுடைய மனநிலை மாறிக் கொண்டே இருக்கின்றது; அவ்வாறு மாறும் போது,அவர்கள் தேர்ந்தெடுக்கும் இலக்கிய வகையும் மாறிக் கொண்டே இருக்கின்றது.தனி மனிதர் சிறப்பியல்புகள் வெவ்வேறு, அவர்கள்  வெவ்வேறு வகையான வற்றை அனுபவிக்கின்றார்கள்.

பண்டைய இந்தியாவில் ஒன்பது வகையான மனநிலைகளைக் குறிப்பிடும்  நவரசா என்றொரு கருத்துக் கோட்பாடு இருந்தது. வீரம், அச்சம், சோகம் ,வியப்பு, காமம், கருணை, ரௌத்திரம், நகைச்சுவை, காதல் ஆகிய நவரசங்கள் நிறைந்திருந்ததே இலக்கியம் என்று கொள்ளப்பட்டிருந்தது. இந்த ஒன்பது மனநிலைகளும் வெவ்வேறு காலங்களில் மக்களை கவர்ந்தன. .சிலர் நகைச்சுவையை விரும்பினார்கள். வேறு சிலர் எப்போதும் நகைச்சுவை நிரம்பியவற்றையே படிக்க விரும்பவில்லை.நீங்கள் கூறியது போல, இதயத்தைத் தொடும், அழ வைக்கும், உணர்ச்சிமயமான இலக்கியங்களைப் படிக்க விரும்பினார்கள். சமுதாயத்திலுள்ள பல்வேறு தரப்பினரின் விருப்பங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும், அதே சமயம், அந்த நேரத்தில், உங்கள் மனதில் உண்மையாகத் தோன்றுவதை வெளிப்படுத்த வேண்டும்.

நகைச்சுவையை உங்கள் மீது வற்புறுத்திக் கொள்ள முடியாது. அது போன்று நீங்கள் ஒரு காதல் கதையை அல்லது காதல் கவிதையை உங்களை வற்புறுத்திக் கொண்டு எழுத முடியாது. உங்கள் உள்ளிருந்து வரவில்லை என்றால் அவை சரியான பயனைத் தர முடியாது.

கே: ஒரு கலைப் பொருளையோ, இலக்கியத்தையோ போற்றுதல் என்பது ஒருவரை அசைக்குமேயானால் அது அறிவாற்றல் பூர்வமானது என்பதை  விட உணர்ச்சிமயமானது என்றாகிறது அல்லவா?

குருதேவ்: இலக்கியம் உணர்ச்சிமயமானது என்று கூற முடியாது. வழ வழ என்றிருந்தால் மக்கள் படிக்க விரும்ப மாட்டார்கள். படிப்பது என்பது அறிவார்ந்தது, அது ஒரு தொழில்நுட்ப நூலைப் போன்று வறண்டு இருந்தால் மிகவும் சலிப்பாக இருக்கும். இலக்கியத்தில்,சிறிதளவு உணர்ச்சிகள், சிறிதளவு அறிவுக் கூர்மை நிறைந்திருக்க வேண்டும். அதாவது தற்கால கவிதைகளில் அறிவுபூர்வமான அணுகுமுறை இருப்பது போன்று இருக்க வேண்டும். அவை உங்கள் அறிவை எழுச்சியூட்டி, உங்கள் உணர்ச்சிகளை தூண்டிப் பொறியூட்டுகின்றன.

வெற்றிகரமான இலக்கியங்கள் எல்லாம் இவையிரண்டையும் தம்முள் கொண்டிருக்கின்றன என்றே எண்ணுகிறேன்.

கே: குருதேவ்! தீமையின் மூல காரணம் ஆசையே என்று பல முறை படித்திருக்கின்றேன். என்னுடைய ஆசைகளை வெற்றி காண முயன்றிருக்கின்றேன். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை.

குருதேவ்: இது அடுத்த ஆசை! ஆசைகளை வெற்றி காண வேண்டும் என்பதே மற்றொரு ஆசை அல்லவா?

கே: எனக்கு ஒரு சில ஆசைகளே உள்ளன. ஆனால் ஆன்மிக பாதையில் அடுத்தது என்ன குருஜி.

குருதேவ்: ஆன்மிக பாதையில் அடுத்தது திருப்தி. நீங்கள் திருப்தியுடன் இருக்கும் போது அற்ப ஆசைகள் கொள்ளுவதில்லை. ஆப்படியே உங்களுக்கு ஆசை என்பது இருந்தால், எல்லோரும் ஆனந்தமாக இருக்க வேண்டும், உலகம் அமைதியாக இருக்க வேண்டும் என்ற மிகப்பெரிய ஆசையாகத் தான் இருக்கும். நீங்கள் இம்மாதிரியான ஆசைகள் தான் கொள்ள வேண்டும். உங்களுடைய சிறு சிறு ஆசைகள் பெரிய ஆசைகளாக மாற வேண்டும். பெரிய ஆசைகள் உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தாது. சிறிய ஆசைகள் மட்டுமே உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். மனம் எப்போதுமே மிகப்பெரியவைகளையே நாடும், மிகப்பெரும்   மகிழ்ச்சி,  பெரும் பேரானந்தம். இது இயற்கையே. இதை நாம் தவிர்க்க முடியாது. மனம் மிகப்பெரிய ஒன்றையே விரும்புகிறது. ஆன்மிகம் உங்களுக்கு அந்த பேரானந்தத்தையும் பெரு மகிழ்ச்சியையும் கொடுக்கும்.

குழந்தைகளாக இருந்த பொது ஏதாவது ஒன்றை பெற்றுக்கொள்வதிலேயே நாம் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றோம். அது ஒரு விதமான மகிழ்ச்சி. எனினும், வளர்ந்த ஒரு மனிதனாக கொடுப்பதிலேயே நாம் மகிழ்ச்சி கொள்ளுகிறோம், ஒரு தாயைப்போல. ஒரு தாய் அனைவருக்கும் சமைப்பதில் மகிழ்ச்சியை அனுபவிக்கிறாள். ஆனால் அவள் தனக்கு மட்டும் எனும்போது, பல விதமான உணவு வகைகளை சமைப்பதில்லை. அவள் ஒரு கோப்பை தேநீர்  அல்லது காபி குடிப்பாள் மற்றும் சிற்றுண்டி சாப்பிடுவாள். எனவே, கொடுப்பதிலேயே மகிழ்ச்சி இருக்கின்றது. நூலாசிரியர்கள் மற்றும் இலக்கிய ஜாம்பவான்கள் ஆகியோருக்கு நாம் இந்த சமுதாயத்திற்கு ஏதோ கொடுத்திருக்கின்றோம் நாம் ஏதோ எழுதியிருக்கின்றோம், என்ற மகிழ்ச்சி ஏற்படும். அதில் மகிழ்ச்சி இருக்கிறது.              
      
கே: பலரிடம் ஆன்மிகம் என்பது ஒரு பிரபலமான சொல்லாகி விட்டது. அனைவரும் நான் தியானம் செய்கிறேன் நாம் ஆன்மிகவாதி என்று சொல்ல விரும்புகின்றனர். ஆன்மிகம் என்பது என்ன?

நாம் அனைவருமே பொருள் மற்றும் ஆத்மாவால் உருவாக்கப்பட்டிருகிறோம், சரியா? நம்முடைய உடல் மாவுச்சத்து புரதச்சத்து, தாதுக்கள் ஆகியவற்றால் ஆக்கப்பட்டது. ஆத்மாவானது படைப்பாற்றல், அமைதி, அன்பு, மகிழ்ச்சி கோபம் மற்றும் இந்த அனைத்து உணர்வுகளாலும் ஆக்கப்பட்டது. ஆன்மிகம் என்பது ஆன்மாவை கவனிப்பது. நான் யார்? நாம் இந்த உடல் தானா? எண்ணங்கள் என்பவை என்ன? எண்ணங்களுடைய மூலம் என்ன? இந்த உணர்வுகள் என்பது என்ன? இந்த உணர்வுகளுடைய மூலம் என்ன? எண்ணங்கள் மற்றும் உணர்வுகளுடைய மூலங்களுக்கு செல்வது, உங்களுக்குள் இன்னும் வெற்றிடம் உள்ளது என்று கண்டுகொள்வது, இவையே ஆன்மிகம். பின்னர்,அனைத்தும் எதனால் ஆக்கப்பட்டது என்று கண்டுகொள்வீர்கள்.

நீங்கள் ஒரு முழுமையான இயற்பியல்வாதி என்றால், நீங்கள் ஒரு ஆன்மீகவாதியும் கூட என நான் கூறுகிறேன். இரண்டையும் உங்களால் பிரிக்க முடியாது. ஏனென்றால் முழுமையான இயற்பியல்வாதியும் இதையே கூறுகின்றார், இந்த முழு பிரபஞ்சமும் ஒரு பொருளால் தான் ஆக்கப்பட்டது. அவர் இதை புரிந்து கொள்ளுகிறார். ஆன்மீகவாதி இதை அனுபவத்தில் கூறுகிறார். ஆமாம்! நான் எதனால் ஆக்கப்பட்டவனோ, அனைவரும் அதனாலேயே ஆக்கப்பட்டவர். நாம் அனைவரும் ஒன்றே. முழு உலகமும் ஒரு உயிரி. இந்த புரிந்துணர்வு மிகப்பெரிய நம்பிக்கை, அமைதி மற்றும் நிபந்தனையற்ற அன்பு ஆகியவற்றை கொடுக்கிறது. அனைவருக்குள்ளும் சிறிதளவில் ஆன்மிகம் உள்ளது, ஆன்மிக உணர்வில்லாத யாரும் இந்த கிரகத்தில் இல்லை.

கே: குருஜி! எப்படி ஒருவர் ஆன்மீக தலைவராக தகுதி பெறுகிறார்?  

குருதேவ்: ஆன்மீக குருவாவதற்கு எதாவது வழி இருக்கிறதா என்ன? நான் அவ்வாறு நினைக்கவில்ல. எனக்கு தெரியவில்லை. அப்படி ஒரு வழி உள்ளதாகவே எனக்கு தெரியவில்லை. நான் எப்படி ஆன்மீக வழிகாட்டி ஆனேன் என்று நீங்கள் என்னை கேட்கலாம். எனக்கு என்னவெல்லாம் தெரியுமோ அவைகளை நான் மற்றவர்களிடம் பகிர்ந்து  கொள்ளுகிகிறேன். அவ்வளவே! ஒரு விஷயம், நான் என்னுடைய அனுபவ வரம்பிற்குள் வராதவைகளை பற்றி பேசப்போவது இல்லை என்பதை மட்டும் கடைப்பிடித்துக் கொண்டு வருகிறேன்.

இதைப் போலவே தான், நீங்கள் ஒவ்வொருவருமே, அறிந்தோ அறியாமலோ ஒரு ஆன்மீக ஆசிரியரே! நீங்கள் அனைவருக்கும் கற்பிக்கிறீர்கள் நீங்கள் உங்கள் நல்ல செயல்களில் இருந்து கற்பிக்கிறீர்கள். உங்கள் தவறுகளின் மூலமாகவும் மற்றவர்களுக்கு கற்பிக்கிறீர்கள். எனவே இந்த கிரகத்தில் நீங்கள் ஒரு ஆன்மீக ஆசிரியராக இருப்பது தவிர்க்க முடியாதது. நீங்கள் உங்கள் ஆடைகளை மாற்றி வேட்டி குர்தாவோ அல்லது ஆன்மீக ஆடையோ அணிய வேண்டியதில்லை. அல்லது நீண்ட தலை முடி தேவை இல்லை. இவை அவசியமில்லை. உங்களால் உண்மையாக புன்னகைக்க முடிந்தால், உங்களால் மற்ற அனைவர் மீதும் அன்பை உணர முடிந்தால், நீங்கள் மட்டுமல்ல மற்ற அனைவருமே அதே மாதிரியான உணர்வையே உங்களிடமும் வெளிப்படுத்துவர். இது உங்கள் வாழ்க்கையை மிகவும் செழிப்பானதாக்கும். இது மற்றொரு பரிமாணத்திற்கான கதவை திறந்துவிடும். நீங்கள் தியானம் செய்பவராக இருந்தால், நீங்கள் இதை அறிவீர்கள். என்னோடு உடன்படவும் செய்வீர்கள்.

கே: குருதேவ்! விதி மன உறுதியை விட பெரியதா? உதாரணமாக, ஒருவர் விதிப்படி மேலாளர் ஆக வேண்டும் என்று இருந்தால், அவரால் ஒரு நடிகராக முடியுமா?

குருதேவ்: உங்கள் கனவுகளுடன் நிற்கவும். இது உண்மையாகலாம். நானும் அதே நகரத்தில் ஒரு மாணவனே. நான் உலகம் முழுவதும் பயணம் செய்து எல்லா நாட்டு மக்களையும் ஒரு குடும்பமாக இணைக்க வேண்டும் என்று நான் எண்ணினேன். மக்கள் என்னை பைத்தியம் என எண்ணினார்கள். உங்களுக்கு அந்த மாதிரியான ஒரு நோக்கம் இருக்கும்போது, கண்டிப்பாக மக்கள் நீங்கள் அதை அடையப்போவதில்லை என்றே நினைப்பார்கள். எனினும், உங்கள் கனவிலேயே நிலைத்து நின்றால், ஒரு நாள் அது நிறைவேறும்.